Home Blog Page 123

2020 கிரிக்கெட்  உலகக் கோப்பை  கிரிக்கெட் போட்டி  2021 ஆண்டிற்கு தள்ளிப்போக வாய்ப்பு  – மெக்குலம் .

0

 

கிரிக்கெட் உலககோப்பைகள் மிகப்பிரபலம் , அதிலும்  இருபது ஓவர் போட்டிகள் என்றால் விறு விறு சுறு சுறு தான் . ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ( 2020 ) T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருந்தது . 16 நாடுகள் பங்கு பெற இருந்தது.

“ இந்த ஆண்டு நடைபெற இருந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அனேகமாக அடுத்த ஆண்டு தான் நடைபெறும் என்றே நினைக்கிறன் , ஏன் என்றால் உலகம் முழுவதும் கொரோனா நோய் பெரும் பயத்தையும் , பாதிப்பையும் ஏற்படுத்திவிட்டது . ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது மிகவும் கடினம் , அப்படி நான் நடத்த முடியாது என்று கூறவில்லை அவ்வாறு நடத்துவது நன்றாக இருக்காது.

நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ளது , 16 நாடுகளின் வீரர்களும் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்வது நாம் நினைக்கும் அளவிற்கு சுலபம் இல்லை . போட்டிகளை அவசரப்பட்டு நடத்திவிட்டு பின்னால் வருந்தவோ அல்லது போட்டிகள் இடையில் தடைப்பட்டு ரத்து ஆவதோ மேலும் சிக்கல் .

எனவே போட்டிகள் நன்றாக நடத்தப்பட வேண்டும் என்றால் சில காலம் தாமதமாவது ஒன்றும் தவறில்லை “ இவ்வாறு நியூசிலாந்து அணியின் பிரபல அதிரடி ஆட்டக்காரர் மெக்குலம் தெரிவித்தார் .

 

சா.ரா 

 

3

என் மீது உள்ள வாழ் நாள் தடையை நீக்க வேண்டும் – சலீம் மாலிக் 

0

சலீம் மாலிக் (Salim malik pakistan crickter) பாகிஸ்தான் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், பல போட்டிகளில் நின்று நிலைத்து விளையாடி வெற்றிகளை தேடி தந்துள்ளார். அவருடைய மணிக்கட்டு அடிகள் ( வ்ரிஸ்ட் ஷாட்ஸ் ) மிக லாவகமாக இருக்கும் .

1995 ஆம் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு லஞ்சம் அளித்து சூதாட முற்பட்டதாக அவர் மீது புகார் வந்தது , அதை விசாரித்த ஐசிசி வாழ் நாள் தடை விதித்தது . கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக வாழ் நாள் தடை அளிக்கப்பட முதல் வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.

“எனக்கு 2000 மாம் ஆண்டே நான் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற முடியாத அளவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது , இன்று அது நடந்து இரு தசாப்தங்கள் முடிந்து விட்டது . என்னுடைய மேல்முறையீடுகள் தோல்வி அடைந்து விட்டது. 

என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்கை முடிந்தே விட்டது. ஆனால் நான் பாகிஸ்தான் அணிக்காக கிட்டத்தட்ட 300 ஒரு போட்டிகள் விளையாடி உள்ளேன். 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி பெருமை தேடி தந்துள்ளேன். 

எனக்குள் இருக்கும் கிரிக்கெட் திறமையை பிறருக்கு குடுக்க நினைக்கிறன் , ஆம் நான் பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறேன்.

அதற்க்கு என் மீது சுமத்தப்பட்ட இந்த வாழ் நாள் தடை பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது , இனி அந்த தடையால் என்ன பயன் ?” இவ்வாறு தெரிவித்துள்ளார் சலீம் மாலிக்.

சா.ரா 

3

விஜய் மகன் சஞ்சய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி!

0
Vijay Sethupathi

Vijay Son Sanjay Tamil Debut; விஜய் மகன் சஞ்சய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி! விஜய்யின் மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மகனுக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படம் உப்பெனா. இந்தப் படத்தில், சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அதுவும், ஹீரோயினுக்கு தந்தையாகவும், வில்லன் ரோலிலும் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இப்படம் குறித்து மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யிடம், விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த கதை தனது மகனுக்கு கண்டிப்பாக பொருத்தமாக இருக்கும் என்று விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி கைப்பற்றி உள்ளார்.

இந்த நிலையில், உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் மகன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழிலும் உருவாகும் உப்பென்னா படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

அதோடு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் வெளியானதும், விஜய் – விஜய் சேதுபதி காம்பினேஷனுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து உப்பென்னா படத்தின் தமிழ் ரீமேக்கில் சஞ்சய் நடிப்பது குறித்தும், விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

3

தற்போதய  வீரர்களுடன் ராகுல் திராவிட்டை ஒப்பிடுவது தவறு – முஹமது யூசப் .

0

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  யூசப்  யுஹானா தற்போது  முஹமது யூசப்  ஒரு மிகச் சிறந்த வீரர் , டெஸ்ட் போட்டிகளில் அவரது விக்கட்டை எடுப்பதற்குள் பந்துவீச்சாளர்களுக்கு நா வறண்டு விடும் . அந்த அளவிற்கு நிலைத்தும் விளையாடுவார், தேவைக்கேற்ப  அதிரடியாகவும் விளையாடி வெறுப்பேற்றுவார்.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளில் அதிக முனைப்புடன் விளையாடி நம் நாடிகளை எகிற வைப்பார் . 

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது “ராகுல் டிராவிட் ஒரு சிறந்த வீரர், அவர் போல மினக்கட்டு விளையாடுவது மிகவும் சிரமம். அவர் விளையாடும் போது நாங்கள் சீண்டுவதை பெரிதாய் கண்டுகொள்ள மாட்டார் அவரின் காரியத்தில் கவனம் பிசகாமல் இருப்பார் .

இன்று ஒரு வீரர் அவரின் ரன்களைக் கடந்துவிட்டாலோ , அல்ல ஒரு இரு போட்டிகளில் சற்று நிலைத்து ஆடிவிட்டாலோ அவரை “அடுத்த டிராவிட்” அல்லது திராவிடின் மாற்று இவரே என்று கூறி விடுகின்றனர். அது மிகவும் தவறு. என்னைப்பொறுத்தவரை ராகுல் திராவிட் ஒரு தனித்துவம் வாய்ந்த வீரர் ,அவருக்கு மாற்று என்பது கடினம்”.

ஆம் சரிதானே, எல்லோரும் திராவிட் ஆகி விட முடியுமா என்ன ?

சா.ரா.

3

ரத்த கொதிப்பை ( B.P ) சரிபார்க்க சாம்சங் காலக்ஸி வாட்ச் போதும் !

0

இனிமே ரத்த கொதிப்பை ( B.P ) சரிபார்க்க சாம்சங் காலக்ஸி வாட்ச் ( Samsung Galaxy Watch ) காட்டினாலே  போதும் ! 

நம் வாழ்க்கையே மிகவும் ஸ்மார்ட் ஆகிவிட்டது ! போன், டிவி, ரேடியோ , வாட்ச் என அனைத்தும் படு ஸ்மார்ட். முதலில் தொலைபேசி அழைப்பு வந்தால் நாம் சாதாரண போனில் பேசினோம்.

பிறகு செல்லுலார் , ஸ்மார்ட் போன் என வளர்ந்து தற்போது கைக்கடிகாரத்திலே போன் பேசும் அளவு வளர்ந்து முன்னேறிக்கொண்டே செல்கிறோம்.

ஸ்மார்ட் வாட்ச்களில் இதுவரை இதயத்துடிப்பு, நடந்த தூரம், கலோரி அளவு, போன்ற சிலவிஷயங்களை மட்டுமே அறிய முடிந்தது! 

ஆனால் சாம்சங் காலக்ஸி வாட்சுகளில் இனி ரத்த கொதிப்பின் அளவுகளை அதி துல்லியமாக அறிய முடியும். கடந்த சில நாட்களாகவே இதற்கான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த சாம்சங், தற்போது அதை பரிசோதித்து விட்டதாகவும், மேலும் சில மாறுதல்களை செய்து சந்தைப் படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அநேகமாக இந்த அதிசிய கைக்கடிகாரம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சந்தைக்கு வரலாம்.

இந்த வாட்ச் ஒரு சென்சாருடன் இணைந்து செயல்பட்டு இருதய துடிப்பை மூலமாக கொண்டு நமது ரத்த அழுத்தத்தை கணக்கிடும், இதனுடைய சிறந்த செயல்பாட்டிற்கு வாரம் ஒரு முறை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என சொல்ல படுகிறது.

இந்த கருவிக்கு கொரியா அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அது அவ்வளவு எளிது அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிலர் இந்த கருவியின் துல்லிய தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். விரைவில் அணைத்து நிலைகளையும் கடந்து ஸ்மார்ட் வாட்ச் வரும் என நம்புவோம்.

சா.ரா.

3

சமூக வலைதள யுத்தம் வெறுப்புணர்ச்சியை தூண்டும் பாகிஸ்தான்

1
சமூக வலைதள யுத்தம் இந்தியா மற்றும் மோடியை குறிவைத்து வெறுப்புனர்ச்சியை தூண்டும்
ID:251458357

சமூக வலைதளங்களில் இந்தியா மற்றும் மோடியையும் குறிவைத்து வெறுப்புனர்ச்சியை தூண்டும் வகையில் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது, இதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு சம்மந்தபட்டு உள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.

ஆய்வு அறிக்கை

புதன் கிழமை அரசிடம் தெரிவிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில், சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு எதிரான மனக் கிளர்ச்சியை தூண்டும் வகையில் பதிவுகள் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பரப்பப்பட்டு வருவதாகவும்,” இதில் இந்தியாவில் இஸ்லாமோஃபோபியா உள்ளது போல் சித்தரிக்க படுவதாகவும்”, கூறப்பட்டு இருந்தது.

மேலும் இதில், இந்தியா மற்றும் அதன் வளைகுடா நட்பு நாடுகளிக்கிடையே பகை உணர்வை தூண்டும் வகையில் பதிவுகள் உள்ளதெனவும், பிரதமர் மோடி தற்போது மத்திய கிழக்கு நாடுகளிக்கிடையே நெருக்கத்தை காட்டிவரும் வேலையில் பாகிஸ்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக கூறப்பட்டு இருந்தது.

கடந்த வருடமும் வதந்தி பரவியது

பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் பாராளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான சட்டம் நிறைவேற்றும் பொழுதும் இதைப்போன்றே அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வந்ததாகவும்

ஆனால் பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகள் தோல்வியில் தான் முடிந்தன என அரசு அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பு ISI தொடர்பு

“இத்தகைய செயல்களில் குறிப்பாக பார்க்க வேண்டியது, வளைகுடா நாடுகளில் இருக்கும் பிரபலமான நபர்களை இது போன்ற அவதூறுகளை சமூக வளைதளங்களில் பரப்ப பயன்படுத்தப்படுவதாகவும் இதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI தொடர்பு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும்”, மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் மோடிக்கு எதிரான ஹேஷ்டேக் 

செவ்வாய் கிழமை பாகிஸ்தானில் “ ShameOnModi” என்ற ஹேஷ்டேகும், அதற்கு முந்தய நாள் “ChaosInIndia”, என்ற ஹேஷ்டேகும் பரப்பப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த அறிக்கையில் இது போன்ற அவதூறுகள் பரப்புபவர்கள் பகரீன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற இடங்களில் இருந்து இத்தகைய அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3

2ஆவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய அமலா பால்!

0
Amala Paul Second Marriage

Amala Paul Second Marriage; 2ஆவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய அமலா பால்! நடிகை அமலா பால் தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் குறித்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால்.

கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு தெய்வ திருமகள் படத்தின் மூலம், அமலா பால் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

பின்னர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு அமலா பால் விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதையடுத்து 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னீந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அண்மையில் செய்தி வெளியானது.

மேலும், இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பாவ்னீந்தர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அப்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாவ்னீந்தர் சிங் அந்தப் புகைப்படங்களை எல்லாம் நீக்கிவிட்டார்.

இதையடுத்து, அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று அமலா பால் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது இரண்டாவது திருமணம் குறித்து தற்போது அமலா பால் கருத்து தெரிவித்துள்ளார். எனது திருமணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

நான் தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அவை முடிந்ததும், எனது திருமணத்தைப் பற்றி அறிவிப்பேன்.

எனது காதல் பற்றி பேசினேன். எனவே எனது திருமணத்தைப் பற்றியும் பேசுவேன். அதுவரை எனது திருமணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.

நேரம் வரும் வரை திருமணம் குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

3

மாஸ்டர் படம் பார்க்க உடனே இந்த ஆப் டவுன்லோட் பண்ணுங்க

0

Master Digital Rights; மாஸ்டர் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்! விஜய்யின் மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ இன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Watch Master Movie Online

மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை (Master Digital Rights) அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஸ்ரீமன், சாந்தணு, ஆண்ட்ரியா, நாசர், அர்ஜூன் தாஸ் என்று நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கல்வி முறையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல்.

கடந்த 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டன. அதோடு படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.

கொரோனா லாக்டவுன் காரணமாக நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 22 ஆம் தேதி மாஸ்டர் படம்  வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அன்று விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இது விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கும் டபுள் கொண்டாட்டம் தான்.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ இன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதுவும், அதிகப்படியான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக பிகில் மற்றும் தெறி ஆகிய இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளையும் அமேசான் பிரைம் வீடியோ இன் நிறுவனமே கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Master Amazon Prime Video In

3

லெனின் பிறந்தநாள்: ஊரடங்கை மீறி ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மரியாதை

0
லெனின் பிறந்தநாள் ரஷ்ய கம்யூனிஸ்டுகள்

லெனின் பிறந்தநாள் நேற்று உலகம் முழுவதும் கொரோனாவால் வெளியில் சென்று கொண்டாடமுடியவில்லை. இருப்பினும்  ஊரடங்கை மீறி ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மரியாதை செலுத்தி உள்ளனர்.

ரஷ்ய கம்யூனிஸ்ட்கள் மரியாதை

சோவியத் யூனியனை நிர்மாணித்தவர், விளாடிமிர் லெனினின் 150-ஆவது பிறந்தநாளை கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு முன் நேற்று கொண்டாடினர்.

ரஷ்யாவில் கோரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ரஷ்யாவில் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் உணவு மற்றும் மருந்து வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லெனின் பிறந்தநாள்

இந்நிலையில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி ஸ்யோகனோவ் தலைமையில் கம்யூனிஸ்டுகள் விளாடிமிர் லெனினனின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக செஞ்சதுக்கத்தில் அணிவகுத்து சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்யோகனோவ், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ரஷ்ய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், 1960-ஆம் ஆண்டு மாஸ்கோவில் ஏற்பட்ட சின்னம்மை நோயை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சோவியத்தின் சிறந்த நடவடிக்கைகளுக்கு ஈடாகவில்லை என்றும்; மூன்று மாதங்களில் தற்போதைய ரஷ்ய அதிகாரிகளால் முகமூடிகளை கூட தயாரிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

சோவியத் யூனியன் பிளவுபட்டு, 20 ஆண்டுகள் கடந்த பின்பும் விலாடிமிர் லெனின்னும் அவரது நினைவிடமும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகின்றன

3

தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்த பிக் பாஸ் சினேகன்!

0
Theepetti Ganesan

Theepetti Ganesan; தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்த பிக் பாஸ் சினேகன்! தனக்கு உதவி செய்யுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட ரேணிகுண்டா புகழ் தீப்பெட்டி கணேசனை பிக் பாஸ் சினேகன் சந்தித்து பேசியுள்ளார்.

தீப்பெட்டி கணேசனுக்கு பிக் பாஸ் புகழ் சினேகன் உதவி செய்துள்ளார்.

ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இப்படத்தைத் தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, ஆயுத போராட்டம், பில்லா 2, முத்து நகரம், என்றென்றும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டை மன்னன் என்ற படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தீப்பெட்டி கணேசன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சினிமா பட வாய்ப்பு குறைந்துள்ளது.

தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கஷ்ப்படுகிறேன். குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லை. இது அஜித் சாருக்கு தெரியவந்தால் கண்டிப்பாக உதவி செய்வார் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, பிக் பாஸ் பிரபலம் பாடலாசிரியரான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். மேலும், சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில் தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு 2 வாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

அதோடு, இந்த ஆண்டு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதே போன்று கஷ்டப்படும் நடிகர்களுக்கு உதவ பலரும் முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3