Home Blog Page 124

sachin birthday: என்னுடைய பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை – சச்சின்!

0
sachin birthday

sachin birthday: சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின்  உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர், கடந்த 2013 ஆம் ஆண்டு அணைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றும் ரசிகர்களின் பேரன்பு அவரை சூழ்ந்தே உள்ளது.

வருகின்ற வெள்ளிக்கிழமை அவருக்கு 47 வயது பூர்த்தி ஆகிறது . ( No birthday celebrations on April 24 – Sachin) வருடா வருடம்  அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அவரின் ரசிகர்கள் பல நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர் ஆனால் சச்சினோ இந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட போவதில்லை என்று அறிவித்து விட்டார் .

sachin birthday தவிர்த்த காரணம்:

“உலகமே கொரோனாவால் தத்தளித்து வருகிறது, எண்ணற்ற மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இருப்பினும் இந்த நிலையை முன்நின்று போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர், காவல்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல நிஜ நாயகர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மிகப்பெரிய சேவை செய்து வருகின்றனர்!

எனவே நான் அத்தகைய கொரோனா போராளிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக என்னுடைய பிறந்தநாளை கொண்டாடாமல் அவர்களுக்காக மனமார இறைவனை துதிக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நல்ல மனமும், குணமும் தான் அவரை என்றும் உயரத்தில் வைத்துள்ளது.நாளை இந்நேரம் வலைத்தளம் முழுவதும் அவரின் புகைப்படங்கள் உலாவரும் குழந்தை சச்சின் முதல் தற்போது உள்ள சச்சின் வரை.

சச்சின் நீடூழி வாழ்க பல்லாண்டு! 

சா.ரா.

3

நாட்டு மக்களுக்காக அறிவும் அன்பும் பாடலை வெளியிட்ட கமல் ஹாசன்!

0

அறிவும் அன்பும் பாடலை வெளியிட்ட கமல் ஹாசன்! நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக அறிவும் அன்பும் என்ற பாடலை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.

அறிவும் அன்பும் என்ற கொரோனா விழிப்புணர்வு பாடலை கம ல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நாட்டையே உலுக்கிய கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும், வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது கமல் ஹாசனும் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிவும் அன்பும் என்று தொடங்கும் இந்தப் பாடலை கமல் ஹாசன் எழுதி, இயக்கி திரைப்பிரபலங்கள் பலருடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், சித்தார்த், முகென் ராவ், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெய ஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன் என்று பலரும் பாடியுள்ளனர்.

தற்போது இந்த பாடலை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். இன்று வெளியிட்ட இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

வாட்ஸ்அப் புதிய அப்டேட்; வீடியோ கால் ஒரே நேரத்தில் 8 பேருக்கு எப்படி செய்வது?

0
வாட்ஸ்அப் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் புதிய அப்டேட்; வீடியோ கால் ஒரே நேரத்தில் 8 பேருக்கு எப்படி செய்வது? வாட்ஸ்அப் குரூப் காலிங் 8 பேருக்கு செய்யும் வசதி பேட்டா வெர்ஷனில் வந்துள்ளது.

மக்கள் அனைவரும் ஊரடங்கில் இருப்பதால் குரூப் வீடியோ கால் செய்யும் தேவை அதிகரித்துள்ளது. மேலும் வீட்டில் வேலை செய்வோரும் குரூப் காலிங் அடிக்கடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவே எட்டு பேர் கொண்டு வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்த கரணமானது. மேலும் இதனுடன் சேர்த்து புதிய பல ஸ்டிக்கர்களையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Together at Home என்னும் புதிய ஸ்டிக்கர் பயனாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. உலக சுகாதாரத்தின் பரிந்துரையில் இந்த ஸ்டிக்கர் வெளியிடப்பட்டது.

மற்ற பிற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல், மாஸ்க் அணிதல், வீட்டில் இருத்தல் ஆகிய ஸ்டிக்கர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

3

அமர்நாத் புனித யாத்திரை 2020; நடைபெருமா சிவ பக்தர்கள் கவலை

0
அமர்நாத் புனித யாத்திரை

அமர்நாத் புனித யாத்திரை 2020; நடைபெருமா சிவ பக்தர்கள் கவலை, ஜம்மு காஷ்மீர் அமர்நாத் குகை கோயிலுக்கு பக்தர் செல்வது இந்த வருடம் சந்தேகம் தான்.

பல்வேறு மாநிலங்கள் நாடுகளில் இருந்து குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் தொடங்கி 60 நாட்களுக்கு இந்த புனித யாத்திரை நடைபெரும்.

ஜம்மு காஷ்மிரில் பருவ நிலை மாற்றம், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களினால் யாத்திரை ரத்து செய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கொரொனா அச்சத்தின் காரணமாகவும் அமர்நாத் யாத்திரை தடைபெற அதிக வாய்ப்புள்ளது.

3

Pinarayi Vijayan; எம்‌எல்‌ஏ, அமைச்சர்கள் ஆகியோரின் சம்பளத்தில் 30% பிடிப்பு செய்யப்படும்

0
Pinarayi Vijayan

Pinarayi Vijayan; எம்‌எல்‌ஏ, அமைச்சர்கள் ஆகியோரின் சம்பளத்தில் 30% பிடிப்பு செய்யப்படும். கேரள முதல்வர் நிதி திரட்ட அதிரடி முடிவு.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்படைந்துள்ள நிலையில் நிதி நெருக்கடியை அனைத்து மாநிலங்களும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு முயற்சியில் கேரளா துரிதமாக செயல்பட்டு கொரோனா பரவலை குறைத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதித்த 437 பேரில் 127 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இந்த நிலையில் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தில் 6 நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

இது 5 மாதங்களுக்கு தொடரும். பிடித்தம் செய்யப்பட்ட பணம் சிறிது காலத்தில் திருப்பி தரப்படும். ஆனால் 20,000க்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு பொருந்தாது.

அதே நேரம் மந்திரிகள் எம்.எல்.ஏ., க்களின் சம்பளத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு 30 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் வரும் வருமானத்தை வைத்து கொரோனா நிதிக்கு பயனபடுத்த முடிவு செய்துள்ளனர்.

3

மருத்துவர்களுக்கு ஆதரவு கொடுத்த பா. ரஞ்சித்!

0
Pa Ranjith

Pa Ranjith; மருத்துவர்களுக்கு ஆதரவு கொடுத்த பா. ரஞ்சித்! இயக்குநர் பா ரஞ்சித் மருத்துவர்களுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம் என்று பா. ரஞ்சித் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பீதியில் அனைத்து உலக நாடுகளும் என்ன செய்வது என்று தவித்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் தாண்டி கொரோனா எப்படியோ இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியோ ஊரடங்கு உத்தரவு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் என்னவோ அவ்வளவு ஒன்றும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. எனினும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

கொரோனாவால் சென்னையில் நரம்பியல் மருத்துவ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எனினும், அவரது உடலை புதைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட போது, வேலப்பங்காட்டு பகுதியில் அவசர அவசரமாக காவல் துறையினர் மற்றும் மருத்துவர்களே உடலை புதைத்த சோகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றின் அச்சம் மக்களிடையே அதிமாகி கொண்டிருப்பதை,  நோய்தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும்.  இச்சம்பவம் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் உள்ளத்தில் பெரூம் மன இறுக்கத்தையும் உண்டுபன்னிருக்கிறது.

மருத்துவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் வேதனையை போக்க துணை நிற்ப்போம்.

இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று காமெடி நடிகர் விவேக் மருத்துவர்களுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

World Book Day 2020 Theme; உலக புத்தக தினம் 2020 தீம்

1
World Book Day 2020

World Book Day 2020 Theme; உலக புத்தக தினம் 2020 தீம், World Book and Copyright Day 2020. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் 2020. International Book Day, சர்வதேச புத்தக தினம்.

உலகத்தில் புத்தகம் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அவர்களின் காப்புரிமையை பாதுகாத்தல் ஆகியவை பற்றி முக்கியத்துவம் அளிக்கவே இந்த சிறப்பு நாள் கொண்டாடப்பாடுகிறது.

1995ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ தொடங்கி வைத்த இந்த சிறப்பு நாள் ஆண்டு தோறும் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

World Book Day History

1995ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் “அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும்,

புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்” என முடிவு செய்யப்பட்டது.

மேலும் உலக இலக்கியத்துக்கான ஒரு தினமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால்  மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள்.

இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இது ஏப்ரல் 23ஆம் தேதியை இலக்கியங்களுக்கு உகந்த நாளாக மாற்ற ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.

3

ஓகே ஆன சிம்பு – மிஷ்கின் கூட்டணி: லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு!

0
Simbu Join with Mysskin

Simbu Next Movie; ஓகே ஆன சிம்பு – மிஷ்கின் கூட்டணி: லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு! விஷாலுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மிஷ்கின் தற்போது சிம்பு உடன் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் லாக்டவுன் முடிந்த பிறகு புதிய படம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சிம்பு – மிஷ்கின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் மே 4 ஆம் தேதிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவது பற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகினார்.

இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு மிஷ்கின் என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு சிம்பு விடை கொடுத்துவிட்டார். ஆம், சிம்பு – மிஷ்கின் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சிம்பு – மிஷ்கின் கூட்டணி இணைவதாக கூறப்பட்டது. தற்போது இப்போது தான் அதற்கு நேரம் வந்திருக்கு.

சிம்புவிடம் கதை சொல்லியிருக்கிறாராம் மிஷ்கின். இந்த கதை சிம்புவிற்கு பிடித்துப் போக அவரும் ஓகே சொல்லியிருக்கிறார்.

அதனால், புதிய படம் ஓகே ஆகியிருக்கிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம்.

இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வந்த யுத்தம் செய் என்ற படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரொனா லாக்டவுன் முடிவுக்கு வந்ததும், படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறதாம்.

தற்போது சிம்பு மாநாடு படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மிஷ்கின் படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

ரூ.43,574 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோவின் 9.9% பங்குகளை பேஸ்புக் வாங்கியது

0
பேஸ்புக் ஜியோ

அமெரிக்காவை சார்ந்த பிரபலமான சமூக வலைதமான பேஸ்புக் (முகப்புத்தகம்)  ரூ.43,574 கோடிகளை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின்  ஜியோ பிளேட்பார்ம் லிமிடட்ட இல், முதலீடு செய்து 9.9% பங்குகளை வாங்கியது.

இந்த இரண்டு நிறுவங்களும் தனித்தனியாக கூறியிருப்பதாவது, சில முக்கிய திட்டங்களில் இரு நிறுவனமும் இனைந்து செயலாற்ற இருப்பதாகவும், இதனால் இந்திய மக்கள் வர்த்தக ரீதியில் புதிய வாய்புகளை பெறுவார்கள் எனவும் அறிவித்து உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட், ஜியோ பிளேட்பார்ம் லிமிடட் மற்றும் பேஸ்புக் நிறுவனம், இன்று அறிவிக்கையில் “ரூ.43,574 கோடியை பேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்மில் முதலீடு செய்ய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டடு உள்ளது”, என புதன்கிழமை ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ரிலையன்ஸ் ஜியோவில் மொத்தம் 38.8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொந்த  துணை நிறுவனங்களில் ஒன்றாகவே இருக்கும்.

புதன் கிழமை காலையில் ரிலையன்ஸ் பங்கு 6.8% உயர்ந்து ரூ.1,320.55 BSE ஆக இருந்தது.

பேஸ்புக் நிறுவனம் இந்த ஒப்பந்தம் குறித்து கூறுகையில் , “ இந்தியா தங்களுக்கு 32.8 கோடி மாத பயணாளிகள் உள்ள மிகப்பெரிய சந்தை எனவும் தங்களது இனொரு தகவல் தொடர்பு செயலியான வாட்சப்பிற்கு(whatsapp) 40கோடி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவித்தது.

மேலும் இந்த ஒப்பந்தம் 6 கோடி ஆக உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள், 12கோடி உழவர்கள் மற்றும் 3கொடி சிறு வியாபாரிகள் மற்றும் லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களுக்கு மின்னனு அடிப்படியிலான தீர்வுகளை வழங்குவதில் கவனத்தை செலுத்தும் என குறிப்பிட்டது.

3