Pinarayi Vijayan; எம்எல்ஏ, அமைச்சர்கள் ஆகியோரின் சம்பளத்தில் 30% பிடிப்பு செய்யப்படும். கேரள முதல்வர் நிதி திரட்ட அதிரடி முடிவு.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்படைந்துள்ள நிலையில் நிதி நெருக்கடியை அனைத்து மாநிலங்களும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு முயற்சியில் கேரளா துரிதமாக செயல்பட்டு கொரோனா பரவலை குறைத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதித்த 437 பேரில் 127 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இந்த நிலையில் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தில் 6 நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
இது 5 மாதங்களுக்கு தொடரும். பிடித்தம் செய்யப்பட்ட பணம் சிறிது காலத்தில் திருப்பி தரப்படும். ஆனால் 20,000க்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு பொருந்தாது.
அதே நேரம் மந்திரிகள் எம்.எல்.ஏ., க்களின் சம்பளத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு 30 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் வரும் வருமானத்தை வைத்து கொரோனா நிதிக்கு பயனபடுத்த முடிவு செய்துள்ளனர்.