Pa Ranjith; மருத்துவர்களுக்கு ஆதரவு கொடுத்த பா. ரஞ்சித்! இயக்குநர் பா ரஞ்சித் மருத்துவர்களுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம் என்று பா. ரஞ்சித் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பீதியில் அனைத்து உலக நாடுகளும் என்ன செய்வது என்று தவித்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் தாண்டி கொரோனா எப்படியோ இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியோ ஊரடங்கு உத்தரவு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் என்னவோ அவ்வளவு ஒன்றும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. எனினும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.
கொரோனாவால் சென்னையில் நரம்பியல் மருத்துவ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எனினும், அவரது உடலை புதைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட போது, வேலப்பங்காட்டு பகுதியில் அவசர அவசரமாக காவல் துறையினர் மற்றும் மருத்துவர்களே உடலை புதைத்த சோகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றின் அச்சம் மக்களிடையே அதிமாகி கொண்டிருப்பதை, நோய்தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும். இச்சம்பவம் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் உள்ளத்தில் பெரூம் மன இறுக்கத்தையும் உண்டுபன்னிருக்கிறது.
மருத்துவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் வேதனையை போக்க துணை நிற்ப்போம்.
இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று காமெடி நடிகர் விவேக் மருத்துவர்களுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.