Home Blog Page 125

23/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

23/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் மிகவும் லாபகரமாக இருக்கும். பல்வேறு வகையில் ஆதாயங்கள் வந்து சேரும். தங்கள் பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்றைய நாளில் சாந்தமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். உணர்ச்சி வசப்படுதலை குறைக்க வேண்டும். நம்பிக்கையான எண்ணங்கள் வேண்டிய நாளாகும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.

மிதுன ராசிபலன்

இன்று பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். நாள் முழுதும்  அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.

கடக ராசிபலன்

இன்று மிகவும் ஆக்க பூர்வமாக செயலாற்றுவீர்கள். பணியிடத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தனவரவு அதிகமாக இருக்கும். மொத்ததில்  இந்த நாள் தங்களுக்கான நாளாகும்.

சிம்ம ராசிபலன்

இன்றைய தினம் அனைத்து காரியங்களும் ஆர்வமாக செய்வீர்கள். தங்களின் தன்னம்பிக்கையால் சாதனைகள் புரிவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று சிறிது ஓய்வு உங்களுக்கு தேவையாகும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். பயணங்கள தவிர்க்க வேண்டிய நாளாகும்.

துலா ராசிபலன்

இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும். நற்பலன்கள் எதுவும் கிடைக்காது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொடக்கங்கள் எதுவும் வேண்டாம். கடன் தருவதைை, பெறவதை தவிர்க்க வேண்டிய நாள்.

விருச்சிக ராசிபலன்

இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வு அவசியம் வேண்டிய நாள். சம்பாதித்த பணம் வீணாக செலவாகும். தேவையற்ற வீண் பேச்சை குறைக்கவும்.

தனுசு ராசிபலன்

இன்று பொறுமையாக அணுகுமுறை அவசியம் தேவையாகும். ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். அன்றாட பணிகளை கவனமாக கையாளவேண்டும். கால்களில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

மகர ராசிபலன் 

இன்றைய தினம் எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும்.  தங்களின் செல்வாக்கு உயருகின்ற நாளாக இருக்கும். கணவன் மனைவியாக வெளியில் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். நல்ல நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று கோபத்தை குறைக்க வேண்டிய நாளாகும். கடினமான நாளாக இருக்கும். வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவையாகும். குடும்பத்தில் சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தனலாபம் மிகவும் குறைவாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று மேன்மை அடையக் கூடிய நாளாக இருக்கும். வரும் பிரச்சனைகளை ஏதுவாக முடிப்பீர்கள். தங்கள் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. தேவையற்று வெளியே வெய்யிலில் சுற்றுவதை தவிர்க்கவும்.

23/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

Mamallapuram: மாமல்லபுரம் எனப் பெயர் வந்தது எப்படி?

0

Mamallapuram: மாமல்லபுரம் ஏன் இந்த இடத்திற்கு இப்படி ஒரு பெயர் வந்தது. இந்த இடத்தை ஆண்ட பல்லவ மன்னன் ஏன் மாமல்லன் என அழைக்கப்பட்டான்?

தமிழகத்தில் பல்லவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டனர். இதில் பல்லவர்கள் ஆட்சி காலமே தமிழக கட்டிடக் கலையின் திருப்பு முனையாக அமைந்தது.

இவர்களின் கட்டக்கலையை கண்டு வியந்த பலரும் இவர்களை பின்பற்றி கற்கோவில்களை தமிழகமெங்கும் கட்டினர். தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு பல்லவர்களின் காஞ்சி கைலாசநாதர் கோவிலின் கட்டிட சிறப்பே அடிதளமாக அமைந்தது என்று வரலாறு கூறுகின்றன. அப்படிப்பட்ட பல்லவ சிற்ப கலையின் அதிசயமே மாமல்லபுரம் கடற்கரை கோவிலாகும்.

மாமல்லபுரம் (Mamallapuram):

முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் ஏறக்குறைய 25 ஆண்டு காலம் பல்லவ அரசராக நல்லாட்சி புரிந்தார். சமண சமயத்தை தழுவிய அந்த அரசர், அப்பர் என்று அழைக்கப்பெற்ற சைவ நாயன்மார்களுள் ஒருவரான திரு நாவுக்கரசர் அவர்களின் முயற்சியால் மீண்டும் சைவ மார்கத்திற்கே திரும்பினார் .

அதன் பிறகே பல்வேறு திருப்பணிகளை செய்து வைத்தார் . பல்லவ அரசர்களுள் கலா ரசனை அதிகமாய்க் கொண்டவரும் இவரே . 

தமிழகத்தின் தலைச்சிறந்த சிற்பிகளைக் கொண்டு ஒரு சொப்பன நகரத்தை உருவாக்க எண்ணினார். பல்லவ ஆட்சிக்குட்பட்ட கடல் மல்லை என்கிற மலைகள் நிறைந்த பகுதிகளை சிற்ப கலைக்கூடமாக மாற்ற முடிவெடுத்தார். மேலும் அக்காலத்தில் மிகப்பெரிய துறைமுக பட்டினமாக இருந்த இடமே கடல் மல்லை ஆகும்.

கடல் மல்லையாக இருந்த இந்த இடத்திற்கு மாமல்லபுரம் என்று தனது மகனின் பெயரை சூட்டினார்.

மாமல்லபுரம் எனப் பெயர் வருவதற்கான காரணம்

முதலாம் மகேந்திரவர்மன் தனது பெயரை வைக்காமல் தனது மகனின் பெயரை கடல் மல்லை பட்டினதிற்கு வைக்க பலரும் அறியாத காரணம் உள்ளது. முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவர்.

ஒருமுறை மகேந்திரவர்மரும், நரசிம்மவர்மரும் இக்கடற்கரை பட்டினத்திற்கு வந்து போது  ஒரு பாறையிடத்தே இருவரும் நின்று உரையாடி கொண்டிருந்த வேலையில் ஒரு பெரிய மேகக்கூட்டம் வானில் யானை போல தோன்றியதாம்.

சித்திரம் வரைவதில் கைதேர்ந்த நரசிம்மவர்மன் அந்த யானையை அப்படியே அப்பெரிய பாறையில் தீட்டினார். இதனை கண்ட மகேந்திர வர்மன் மனமகிழ்ந்து புதிய யோசனை தோன்றி அந்த பாறையை அப்படியே யானையாக வடித்தால் உலகுள்ளவரை அழியாது. எனவே இங்குள்ள பெரும் பாறைகளை கோவில்களாகவும், சிறு பாறைகளை இறை வாகனங்களாகவும் மாற்றிவிடலாம் என்று கூறி சிற்ப பணியை துவக்கி வைத்தார்.

மேலும் தன் மகனால் தான் தனக்கு சிற்ப கோவில்கள் அமைக்கும் எண்ணம் தோன்றியதால் அவரின் பெயரே வைத்தார் என்கிறது வரலாறு. “புரம்” என்பது சமஸ்கிருதத்தில் நகரம் அல்லது பட்டினம் என்பதாகும்.

மல்லன் என்றால்  மல்யுத்த வீரன் என்று பொருள். அந்த காலகட்டத்தில் இருந்த தலைச் சிறந்த மல்யுத்த வீரர்களை வென்றதனால் நரசிம்மப் பல்லவருக்கு மாமல்லன் என்கிற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

நரசிம்மபுரம் என்று பெயர் வைத்தால் அவருக்கு பிறகு பல நரசிம்மவர்மர்கள் வருவார்கள் இவர்களில் யாரால் உருவாக்கப்பட்டது என்று குழப்பம் வரலாம் என்பதற்காக முதலாம் நரசிம்மவர்மரின் பட்டப்பெயரான  மாமல்லன் என்ற பெயரில் “மாமல்லபுரம்” என்று பெயர் சூட்டினார்.

பல்லவ மன்னர்களின் திருப்பணிகள்

இப்படி சிற்பப்  பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்க, வாதாபியை தலைநகராகக் கொண்டு ஆட்சிப் புரிந்த சாளுக்கிய மன்னன் புலிக்கேசி காஞ்சி மாநகரை முற்றுகை இட்டான்.

காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்ற முடியாத விரக்தியில் பல்லவராஜ்யத்தின் பகுதிகளை தீக்கு இறையாக்கி திரும்பிச்சென்றான், அதன் பின்னர் சில நாட்களிலேயே மகேந்திரப் பல்லவர் இறந்துவிட்டார். சிலர் சாளுக்கியருடன் ஏற்பட்ட போரிலே அவர் இறந்ததாக கூறுவதும் உண்டு .

அதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் நரசிம்மர், பல்லவ ஆட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை களைய ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் படைகளை திரட்டி, போர்க்கலைகளை வளர்த்துக்கொண்டு தளபதி பரஞ்சோதியுடன் வாதாபியை நோக்கி படையெடுத்துச் சென்றார் .

வரலாறே வியக்கும்படி சாளுக்கியர்களை வென்று வாதாபியை கைப்பற்றினார். “வாதாபி கொண்ட சிம்மன் “ எனவும் பெயர் பெற்றார்.

அந்த மாபெரும் வெற்றிக்கு பெரும் பங்கு ஆற்றிய பரஞ்சோதி தான் வாதாபியில் இருந்து பிள்ளையார் சிலையை தமிழகத்தில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லுவார் சிலர் .

அந்த பரஞ்சோதி அவர்களே பின்னாளில் சிறந்த சிவனடியாராக பெயர்ப்பெற்று “சிறுத்தொண்டர் “ என்று அழைக்கப்பட்டார்.

அப்படி வெற்றி வாகை சூடி வந்து மீண்டும் மாமல்லபுரம் பணிகளை மீண்டும் தொடங்கச் செய்தார் நரசிம்மப் பல்லவர்.

மாமல்லபுரத்தில் முதலில் கட்டிய குடைவரை கோவில் ஆதி வராகர் குகையாகும்.  அதன் பின் மும்மூர்த்திகள் குகையுமாகும்  இது முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலும் மகிஷாசுரமர்த்தினி மண்டபம் முதலாம் நரசிம்மவர்மன் காலத்திலும் கட்டபட்டதாகும்.

யாழி மண்டபம், பஞ்ச பாண்டவர் ரதம், பாகீரதன் தபசு, கடற்கரையில் அமைந்துள்ள கோவில்களானது இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கட்டபட்டது. இவரே இராஜசிம்மர் என அழைக்கப்பட்டார். காஞ்சி கைலாசநாதர் கோவில் கட்ட துவங்கியதும் இவரே ஆவார்.

இப்படி இம்மாமல்லபுரமானது பல பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆயிர கணக்கான சிற்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்ப நகரமாகும்.

இன்று பலரும் வியக்கும் தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிற்ப நகரம் உருவாக்கப்பட்டது. இன்றளவும் பல இயற்கை சீற்றங்களை தாங்கி 1300 ஆண்டுகள் தாண்டி அதிசயிக்கும் வண்ணம் சிறந்து விளங்குகிறது.

இத்தகைய சிறப்புகள் பொருந்தியதால் தான் இவ்விடத்தை 1984-ஆம் ஆண்டு உலகப் பாரம்பரிய சின்னம் என UNESCO அறிவித்தது.

அத்தகைய மாமல்லபுரத்தில் தான் நமது பாரதப் பிரதமரும், சீன அதிபரும் சந்தித்து உரையாடினர். இது பல்லவர்களுக்கும், சீனர்களுக்கும் இருந்த தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் விதமாக இருந்தது.

சா .ரா

3

கொரோனா COVID19  நம்மை மிகவும் மென்மையாகவும், கருணையுடன் செயல்பட வைக்கிறது  – விராத் கோலி

0
கொரோனா COVID19
Royal Challengers Bangalore captain Virat Kohli fields during the VIVO IPL cricket T20 match against Delhi Daredevils' in New Delhi, India, Saturday, May 12, 2018. (AP Photo/Altaf Qadri)

கொரோனா வைரஸ் COVID19 கிருமி நம்மை மிகவும் மென்மையாகவும், கருணையுடன் செயல் பட வைக்கிறது  என விராத் கோலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி அவரது மனைவி நடிகை ஷர்மாவுடன் இனைந்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவி வருகிறார். தற்போது கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் தருணத்தில் அவர் கூறியது.

“இந்த COVID19 எனப்படும் கொரோனா வைரஸ் மக்களை மிகவும் வாட்டி வதைக்கிறது , அன்றாடப் பணிகளைத் தொடரவே பெரும் சவாலாக உள்ளது. பலர் வரும்காலங்கள் குறித்து மிகவும் கவலை அடைந்து கொண்டு  இருக்கின்றனர் .

எனினும் இந்த கொரோனா வைரஸ் நம் அனைவரையும் மிகுந்த கருணையானவர்களாக மாற்றி வருகிறது. இதற்கு முன்னரும் நாம் கருணையோடு தான் இருந்தோம் தற்போது அது மேலும் அதிகரித்து உள்ளது.

முன்பின் தெரியாதவர், முகம் தெரியாதவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

மருத்துவர்கள் தங்கள் உயிரையே துச்சமென தீவிர சேவை புரிகின்றனர், அவர்களுக்கு சற்றும் குறையாமல் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், அரசாங்க அதிகாரிகள் என பலரும் நம்முடைய நலனிற்காக அயராது உழைக்கின்றனர்.

நாம் அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும், அவர்களின் கடின முயற்சிகளை நாம் அலட்சியம் செய்து வீணடித்துவிட கூடாது.

இது மிக கடினமான தருணம் தான் என்றாலும் நமக்கு வேறு வழி இல்லை, எனவே பாதுகாப்புடன், விழிப்புடன் இருப்போம்“ என்று தெரிவித்தார்.

சா.ரா 

3

கபில் தேவின் புதிய தோற்றம் ! (Kapildev New look) “இந்திய தானோஸ்“

0
Kapildev New look

Kapildev New look: கபில் தேவின் புதிய தோற்றம். கபில் தேவ் பற்றி அறியாதவர் மிகவும் அரிது, இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை பெற்று தந்த கேப்டன்.

அதுமட்டும்  அல்லாமல் அவர் மிகவும்  வித்தியாசமாக சிந்தித்து செயல்படுபவர், போர்குணம் கொண்டவர்.

ஆடுகளத்தில் மட்டும் அல்லாமல், களத்திற்கு வெளியேவும் பல சாகசங்களை செய்ய வல்லவர். அதிலும் அவரின் நேர் காணல்கள் மிகவும் அருமையாக இருக்கும், அவரின் தன் நம்பிக்கை அதில் மிளிரும்.

அவர் கிரிக்கெட் ஆடும் காலகட்டத்தில் அவரின் “கர்லி“ ஹேர் ஸ்டைல் மிக பிரபலம். அவரின் கோட்டு சூட்டுகள் சில நேரங்களில் விமர்சனங்களையும், பல நேரங்களில் பாராட்டுகளையும் பெறும். 

Kapildev New look

தற்போது  61 வயதாகும்  கபில் தேவ், ஒரு புதிய தோற்றத்தில் தென்படுகிறார்.  சில தினங்களுக்கு முன்னர் அவரின் நண்பர் சேட்டன் ஷர்மா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மொட்டைத் தலையுடன், வெள்ளைத்தாடி வைத்து கருப்பு நிற கோட்டில் கெத்தாகக் காட்சி அளிக்கிறார் .

இதை நமது  நெட்டிசன்கள் பின்வருமாறு கொண்டாடி மகிழ்கின்றனர். “இந்திய தானோஸ்“, “விவின் ரிச்சர்ட்ஸ்  போல தோற்றம் அளிக்கிறீர்“, (சிவாஜி)  “கபில் ஜி  த பாஸ்”, கட்டப்பா கபில் தேவ் என புகழ, கபிலோ “இது எனது கொரோனா தனிமை கெட்டப்“ எனக் கூறியுள்ளார்.

சா.ரா

3

அறிவும் அன்பும்: கமல் ஹாசன் வெளியிடும் கொரோனா விழிப்புணர்வு பாடல்!

0
Arivum Anbum Corona Awareness Song

Arivum Anbum Corona Song; அறிவும் அன்பும்: கமல் ஹாசன் வெளியிடும் கொரோனா விழிப்புணர்வு பாடல்! கமல் ஹாசன் எழுதி, இயக்கி, பிரபலங்கள் பலருடன் இணைந்து பாடும் அறிவும் அன்பும் என்ற பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது.

அறிவும் அன்பும் என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது.

நாட்டையே உலுக்கிய கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும், வீட்டிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது கமல் ஹாசனும் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறார்.

அறிவும் அன்பும் என்று தொடங்கும் இந்தப் பாடலை கமல் ஹாசன் எழுதி, இயக்கி திரைப்பிரபலங்கள் பலருடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், சித்தார்த், முகென் ராவ், தேவி ஸ்ரீ பிரசாத், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெய ஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, லிடியன் என்று பலரும் பாடியுள்ளனர்.

அறிவும் அன்பும் என்ற பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது.

 

3

நம்பர் ஒன் இடத்தில் தல: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

0
Ajith Helo No 1

Ajith Ruling Helo No 1; நம்பர் ஒன் இடத்தில் தல: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்! ஹலோ ஆப்பில், தல அஜித் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜித் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளதைத் தொடர்ந்து தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும், ரசிகர்கள் அடித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில், அஜித் படங்களை விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் படங்களை அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது.

அஜித், விஜய் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்களுக்கு அது புரிவதில்லை. மாறாக எதிரிகளாகவே இருக்கின்றனர்.

அஜித்தைப் பற்றி விஜய் புகழ்ந்து பேசுவதும், விஜய்யைப் பற்றி அஜித் புகழ்ந்து பேசுவம் நடந்து வருகிறது.

அப்படியிருக்கும் இந்த ரசிகர்கள் மட்டும் ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை.

விஜய்யைவிட அஜித் ரசிகர்கள் எப்போதும் தல மட்டுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கேற்பவும் ரசிகர்கள் தீவிரமாக முயற்சியில் ஈடுபடுவார்கள்.

விஜய் ரசிகர்கள் ஒன்றும் சலித்தவர்கள் அல்ல. இருவருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும். ஆனால், அஜித் ரசிகர்கள் அவரது ஒவ்வொரு படத்தையும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி டிரெண்டாக்கி அவரை நம்பர் ஒன் இடத்திலேயே வைக்கின்றனர்.

அந்த வகையில், தற்போது ஹலோ ஆப்பில் தல அஜித் நம்பர் ஒன் (Ajith Ruling Helo) இடத்தைப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து அஜித் ரசிகர்கள்,

இனி எமனே வந்து தடுத்தாலும் தலையை கீழே இறக்க முடியாது.. நாங்கதான் எப்போவுமே கெத்து,

அஜித்தை எங்கேயும் தோற்கவிடமாட்டோம் என்று இருப்பவர்கள் இங்கே ஓட்டு போடுங்கள்…

நமது உயிருக்கு மேலான தல அஜித்தை ஜெயிக்க வைப்போம் ஓட்டு போடுங்கள்…

என்றெல்லாம் தல அஜித் ரசிகர்கள் ஹலோவில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இன்று டுவிட்டரில், #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆம், அஜித் ஏற்கனவே கொரோனா பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.33 கோடி வரையில் நிதியுதவி அளித்திருந்தார்.

இதையடுத்து, தற்போது விஜய் ரூ.1.3 கோடி நிதியுதவி அளித்துள்ளதைத் தொடர்ந்து அஜித்தை விஜய் பின்பற்றுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது அஜித்தைப் போன்று உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக கோட் சூட்டில் வந்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

நிதியுதவி அளித்து ரியல் ஹீரோவான விஜய்!

0
Master Thalapathy Vijay

Vijay Master Movie; நிதியுதவி அளித்து ரியல் ஹீரோவான தளபதி விஜய்! கொரோனா பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளதைத் தொடர்ந்து டுவிட்டரில், #RealHeroThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

நிதியுதவி அளித்து ரசிகர்கள் மத்தியில், விஜய் ரியல் ஹீரோவாக காட்சியளித்துள்ளார். இதன் காரணமாக #RealHeroThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது விஜய்யும் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொண்டார்.

தளபதி விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தம் ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் கூறுவதற்கு முன்பிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அவரது ரசிகர்கள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். மேலும் பல நிதியுதவி செய்து வருகின்றனர்.

ஆனால், டுவிட்டரில், #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. காரணம், சமீபகாலமாக விஜய், அஜித்தின் வழியைத் தான் பின்பற்றி வருகிறார்.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தைப் போன்று செல்ல வேண்டும் என்பதற்காக கோட், சூட் அணிந்து வந்ததாக தெரிவித்தார்.

தற்போது கொரோனா நிதியுதவிலேயும் அப்படியே செய்துள்ளார். ஆம், அஜித் 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

மேலும், தொலைக்காட்சி தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரூ.2.5 லட்சம், தமிழ் சினிமா பிஆர்ஓ தொழிற்சங்கத்திற்கு ரூ.2.5 லட்சம் மற்றும் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு ரூ.2.5 லட்சம் என்று ஒட்டு மொத்தமாக ரூ.1.32,50,000 (தோராயமாக ரூ.1.33 கோடி) கோடி வரையில் வழங்கியுள்ளார்.

அஜித்தை பின்பற்றி தான் தற்போது விஜய்யும் நிதியுதவியும் அளித்துள்ளார்.

அதுவும் ரூ.1.30 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ரூ.50 லட்சம் ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது விஜய் அளித்த மொத்த நிதியுதவியில் ரூ.1.80 கோடியாக எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், அஜித்தை விட விஜய் குறைவாக நிதியுதவி செய்துள்ளதாக டுவிட்டரில் ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர். இதற்காகவும் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

விஜய் நிதியுதவி அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில், #RealHeroThalapathyVIJAY, #Master, #அஜித்தைபின்தொடரும்விஜய் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3

கொரோனா உள்ளே காற்று மாசு வெளியே

0
கொரோனா காற்று மாசு குறைவு

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு உலக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருப்பதால், உலகத்தின் பல பெருநகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்று மாசு வெகுவாக குறைந்து இருப்பதை காண முடிகிறது.

உலகின் அதிக காற்று மாசு உடைய நகரங்களில் ஒன்றாக கருதப்பட்ட புதுடெல்லியில் காற்று மாசு பெரிதும் குறைந்து பல வருடங்களாக காணக்கிடைக்காத காட்சிகள் பல  காண முடிகிறது.

யுனைட்டட் ஸ்டேட்ஸின்(US) வடகிழக்கு பகுதியில்  காற்றில் இருந்த நைட்ரோஜன் டை-ஆக்சைடின் மாசு அளவு 30% குறைந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நகரங்களில் காற்று மாசு கணிசமாக குறைந்தது

ரோம் நகரின் காற்று மாசு 49% வரை குறைந்துள்ளது. அங்கு இரவில் நட்சத்திரங்களை நன்றாக இரசிக்க முடிகிறது.

மேலும் மக்கள் வீதிகளில் இல்லாத இந்த நேரத்தில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றுவதை காணமுடிகிறது, உலகம் சுத்தமாகவும்  காடு வளம் பெருகுவதை போலவும் உணர முடிகிறது.

இந்த மாற்றத்தை காணும் பொழுது, “ மனிதர்கள் நாம் இந்த சுற்று சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்”  என்பதை கண்கூடாக பார்க முடிவதாத டியூக் பல்கலைகழகத்தின் சூழலியல் பாதுகாப்பு விஞ்ஞானி ஸ்டுவார்ட் பிம் தெரிவித்தார்.

கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் பொழுது, மார்ச் மாதத்தில் பாரீஸ் நகரத்தில் 46%, பெங்களூரு நகரத்தில் 35%, சிட்னி நகரத்தில் 38%, லாஸ் ஏஞ்சல்ஸில் 29%, ரியோ டி ஜெனெய்ரோவில் 26%, டர்பன் நகரில் 9% மாசு அளவில் பெரிய அளவு மாற்றத்தை நாசாவின் அளவீடுகள் தெரிவிகின்றன.

இமயமலை காட்சி

இந்தியாவிலும் சீனாவிலும் இந்த சூழலியல் மாற்றத்தை நன்றாக பார்க்க முடிகிறது. ஏப்ரல் 3இல் பஞ்சாப் வடக்கில் இருக்கும் ஜலந்தர் நகர வாசிகள் அன்று அதிகாலையில் ,பலவருடங்களாக பார்க்க இயலாத அந்த அரிய காட்சியான 100 மைல் தொலைவில் இருக்கும் பனிமூடிய இமயமலை சிகரத்தை இரசித்திருக்கிறார்கள்.

இதுபோல் ஒளி மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்ததனால் இந்தியாவிலிருந்து , கோஸ்டா ரிகா மற்றும் ப்லோரிடாவில் முட்டையிடும் ஆமைகளையும் இந்த ஆண்டு கணிசமான அளவு பார்க்க முடிந்ததாக நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் உறவை நாம் சுமூகமாக பாதுகாத்தால் மட்டுமே நம் அடுத்த தலைமுறைக்கு இந்த பூமியை வாழத்தகுந்த இடமாக விட்டு செல்ல இயலும் என்பது தெரிகிறது.

3

கம்மியா நிதியுதவி கொடுத்த விஜய்: மோதிக்கொண்ட ரசிகர்கள்!

0
Thalapathy Vijay Master Movie

Vijay Donation Rs 1.3 Crore; கம்மியா நிதியுதவி கொடுத்த விஜய்: மோதிக்கொண்ட ரசிகர்கள்! ஏற்கனவே கொரோனா நிதியாக அஜித் ரூ.1.33 கோடி வரையில் கொடுத்திருந்த நிலையில், விஜய் தற்போது ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

விஜய், அஜித்தைவிட குறைவாக நிதியுதவி அளித்துள்ளதால், ரசிகர்கள் டுவிட்டரில் மோதிக் கொண்டுள்ளனர்.

விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்து ரசிகர்கள் முன் #RealHeroThalapathyVIJAY ஆக தோற்றமளிக்கிறார்.

நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது விஜய்யும் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொண்டார்.

தளபதி விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தம் ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் கூறுவதற்கு முன்பிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அவரது ரசிகர்கள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். மேலும் பல நிதியுதவி செய்து வருகின்றனர்.

Ajith Donation

ஆனால், டுவிட்டரில், #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. காரணம், சமீபகாலமாக விஜய், அஜித்தின் வழியைத் தான் பின்பற்றி வருகிறார்.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தைப் போன்று செல்ல வேண்டும் என்பதற்காக கோட், சூட் அணிந்து வந்ததாக தெரிவித்தார்.

தற்போது கொரோனா நிதியுதவிலேயும் அப்படியே செய்துள்ளார். ஆம், அஜித் 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

Vijay Donate Rs.1.3 Crore

மேலும், தொலைக்காட்சி தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரூ.2.5 லட்சம், தமிழ் சினிமா பிஆர்ஓ தொழிற்சங்கத்திற்கு ரூ.2.5 லட்சம் மற்றும் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு ரூ.2.5 லட்சம் என்று ஒட்டு மொத்தமாக ரூ.1.32,50,000 (தோராயமாக ரூ.1.33 கோடி) கோடி வரையில் வழங்கியுள்ளார்.

அஜித்தை பின்பற்றி தான் தற்போது விஜய்யும் நிதியுதவியும் அளித்துள்ளார்.

அதுவும் ரூ.1.30 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ரூ.50 லட்சம் ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது விஜய் அளித்த மொத்த நிதியுதவியில் ரூ.1.80 கோடியாக எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay And Ajith Donation

எனினும், அஜித்தை விட விஜய் குறைவாக நிதியுதவி செய்துள்ளதாக டுவிட்டரில் ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர். இதற்காகவும் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

விஜய் நிதியுதவி அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில், #RealHeroThalapathyVIJAY, #Master, #அஜித்தைபின்தொடரும்விஜய் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3

 இது ஷேவாக்கின் காதல் கதை !  கிரிக்கெட்  என்றாலே  வீரேந்தர் ஷேவாக்கை நினைவு படுத்திக் கொள்ளாமல்  இருக்கவே முடியாது . அந்த அளவிற்கு அதிரடி ஆட்டக்காரர் அவர் !

0

                                      இது ஷேவாக்கின் காதல் கதை ! 

 

அதிரடி சேவாக்

 

 கிரிக்கெட்  என்றாலே  வீரேந்தர் ஷேவாக்கை நினைவு படுத்திக் கொள்ளாமல்  இருக்கவே முடியாது . அந்த அளவிற்கு அதிரடி ஆட்டக்காரர் அவர் ! இன்று ( ஏப்ரல் 22 , 2004 ) அவர் திருமண  நாள் .

 

ஒருமுறை அவரிடம்  ஒரு நாள் கிரிக்கெட்  போட்டிக்கும் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுப்பினர் !

அவரோ ஒரு நாள் போட்டி  என்றால் வண்ண நிற ஆடையில் விளையாடுவேன் , டெஸ்ட் போட்டி என்றால் வெள்ளை நிறம் . என்னுடைய உடையின் நிறங்கள் மாறும் ஆனால் என்னுடைய ஆட்டத்தின் பாணி அறவே மாறாது என்று கூறிவிட்டார் .

 

அவர் பேட்டிங் செய்யும்போது இந்திய அணிக்கு இருக்கும் நெருக்கடிகளை , சவால்களை அப்படியே எதிர் அணிக்கு மாற்றி விடுவார் ! என்னுடைய விக்கட்டை  நீங்கள் பெரிய பொருட்டாக கருதக்கூடாது , ஏன் என்றால் நான் தாக்குதல் ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறேன் என்று வெளிப்படையாகவே பேசுவார் .

 

காதலோ காதல் !

 

இதே ஏப்ரல் 22 , 2004 ஆம் ஆண்டு சேவாக் – ஆர்த்தி இருவருக்கும் திருமணம் ஆனது.

 

ஆனால் ஷேவாக்கிற்கு அவரது  ஆர்த்தியை 7 வயது முதலே தெரியும் , அப்போது ஆர்த்திக்கு 5 வயது தான்.

 

ஷேவாக்கின் குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம் , அவர்களின் சிறு வயதில் நடந்த ஒரு திருமணத்தில் தான் சந்தித்துக் கொண்டனர்., அது ஒரு ஆழமான நட்பாக வளர்ந்தது.

 

கிரிக்கெட் தான் தனது முழு மூச்சு என்று முடிவு செய்த அதே நேரத்தில் ஆர்த்திதான் தமது வாழ்க்கைத்துணை என்று முடிவு செய்து விட்டார் ஷேவாக் .

 

தனது  21 வது  வயதில்  ஆர்த்தியிடம்  தனது  காதலை மிக எளிமையாக , அதே நேரத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்தி விட்டார் .

 

அதன் பிறகு  மூன்று  வருடங்கள்  காதலோ காதல் ! 

 

இவர்கள்  காதலிற்கு அவர்கள் இருவர் வீட்டிலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் , அவர்களின் உறுதியான காதல் எல்லாவற்றையும் சரி செய்தது .

 

இதே ஏப்ரல் 22 , 2004 ஆம் ஆண்டு டும் டும் டும் .

 

சா.ரா 

 

3