Home Blog Page 126

Thala Ajith: நிதியுதவி செய்வதிலேயும் அஜித்தை பின் தொடரும் விஜய்!

0
Vijay Follows Thala Ajith

Thalapathy Vijay; நிதியுதவி செய்வதிலேயும் அஜித்தை காப்பியடித்த தளபதி விஜய்! நடிகர் விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்து அஜித்தை பின்பற்றியுள்ளார் என்று #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்து ரசிகர்கள் முன் #RealHeroThalapathyVIJAY ஆக தோற்றமளிக்கிறார்.

நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது விஜய்யும் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொண்டார்.

தளபதி விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தம் ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் கூறுவதற்கு முன்பிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அவரது ரசிகர்கள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். மேலும் பல நிதியுதவி செய்து வருகின்றனர்.

ஆனால், டுவிட்டரில், #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. காரணம், சமீபகாலமாக விஜய், அஜித்தின் வழியைத் தான் பின்பற்றி வருகிறார்.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தைப் போன்று செல்ல வேண்டும் என்பதற்காக கோட், சூட் அணிந்து வந்ததாக தெரிவித்தார்.

தற்போது கொரோனா நிதியுதவிலேயும் அப்படியே செய்துள்ளார். ஆம், அஜித் 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

மேலும், தொலைக்காட்சி தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரூ.2.5 லட்சம், தமிழ் சினிமா பிஆர்ஓ தொழிற்சங்கத்திற்கு ரூ.2.5 லட்சம் மற்றும் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு ரூ.2.5 லட்சம் என்று ஒட்டு மொத்தமாக ரூ.1.32,50,000 (தோராயமாக ரூ.1.33 கோடி) கோடி வரையில் வழங்கியுள்ளார்.

அஜித்தை பின்பற்றி தான் தற்போது விஜய் நிதியுதவி அளித்துள்ளார்.

அதுவும் ரூ.1.30 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ரூ.50 லட்சம் ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது விஜய் அளித்த மொத்த நிதியுதவியில் ரூ.1.80 கோடியாக எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நிதியுதவி அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில், #RealHeroThalapathyVIJAY, #Master, #அஜித்தைபின்தொடரும்விஜய் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3

 ஷார்ஜாவில்  சச்சின் என்னும் புயல் ! ஏப்ரல் 22 , 1998  ஷார்ஜா மணல் புயல் என்று வர்ணிக்கப் படும் ( Desert Strom ) மேட்ச் !

0

                        ஷார்ஜாவில்  சச்சின் என்னும் புயல் !

 

சச்சின் டெண்டுல்காரின் வியக்கத் தக்க ஆட்டங்களில் ஷார்ஜா மணல் புயல் என்று வர்ணிக்கப் படும் ( Desert Strom ) ஏப்ரல் 22 , 1998  மேட்ச் மிக மிக பிரசித்தம் !

 

இந்தியா , நியூஸிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபெற்ற கோகோ-கோலா கோப்பை துபாய் ஷார்ஜாவில் நடைப்பெற்றது 1998 ஆம் ஆண்டு .

 

அந்த தொடர் முழுவதிலும் சச்சின் மிக அருமையாகவே விளையாடி வந்தார் .

இந்திய அணி இறுதிப் போட்டியில் பங்குபெற ரன் ரேட் பெரிய தடையாக இருந்தது .

 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்கள் குவித்தது…

 

அந்த தொடரின் இறுதி லீக் போட்டியில் இந்திய அணி 46 ஓவர்களில்  237 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம்.

 

அநேகரும் நியூஸிலாந்து அணி தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் என்று எண்ணினர் , ஆனால்  நடந்ததோ வேறு ! 

 

சச்சின் தனது உச்சக்கட்ட அதிரடியை அன்று காமித்தார் ! 

ஆம் பிளெமிங் , காஸ்ப்ரோவிஸ் , மூடி , வார்னே என அனைவரின் பந்து வீச்சையும் ஒரு கைப்பார்த்து விட்டார்.

ஒருபுறம் கங்குலி , மோங்கியா , அசார் , ஜடேஜா என விக்கெட்கள் சரிய சச்சினோ தனி ஆளாக அடித்து நொறுக்கினார். 

 

அனைவரும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுமா என்று நினைத்த நேரத்தில் போட்டியையே  வெல்ல வாய்ப்பு அமையும் வரை அடித்து நொறுக்கினார்.

 

குறிப்பாக 5 சிக்சார்கள்  9 போர்கள் குவித்து 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

 

“ இந்தியா போட்டியில் தோற்றது , சச்சின் பல உள்ளங்களை கவர்ந்தார் “ ! இந்த அருமையான சச்சினின் அதிரடி அரங்கேறியது இதே ஏப்ரல் 22 , 1998.

 

அந்த தொடரின் இறுதிப் போட்டியிலும் 132 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல  பெரிதும் முனைந்தார் சச்சின்.

 

சச்சின்  என்னும் புயல் ஷார்ஜாவை கலக்கி இன்றளவும் பல உள்ளங்களில் மையம் கொண்டுள்ளது.

 

சா.ரா

 

3

விஜய்யின் மாஸ்டர் பிளான்: 31 நாட்களுக்குப் பிறகு ரூ.1.30 கோடி நிதியுதவி!

1

Thalapathy Vijay Donation; 31 நாட்களுக்குப் பிறகு விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி! கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் விஜய் 31 நாட்களுக்குப் பிறகு ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி: அரசு வேண்டுகோள்

கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பாக கடந்த மார்ச் 27 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

மேலும், கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களும் நிதியுதவியோ அல்லது பொருளுதவியோ அளிக்க வேண்டும் என்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் (ஃபெப்சி) ஆர்.கே.செல்வமணியும் வேண்டுகோள் வைத்தார்.

இது தொடர்பாக, கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டார்.

பிரபலங்கள் நிதியுதவி:

இதையடுத்து, சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வந்தனர். அவர்களில் சூர்யா குடும்பத்தினர், அஜித், ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, கங்கனா ரணாவத், சூரி, யோகி பாபு, பாண்டிராஜ் என்று பலரும் நிதியுதவியும், பொருளுதவியும் அளித்துள்ளனர்.

31 நாட்கள்: ஒரு மாத காலத்திற்கு பிறகு விஜய் நிதியுதவி

ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டு இன்றுடன் 31 நாட்கள் ஆன நிலையில், தளபதி விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தமாக ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் கூறுவதற்கு முன்பிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அவரது ரசிகர்கள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். மேலும் பல நிதியுதவி செய்து வருகின்றனர்.

நிதியுதவி ஏன்?

இந்த நிலையில், இதுவரை நிதியுதவியோ அல்லது பொருளுதவியோ வழங்காத விஜய் தற்போது நிதியுதவி அளித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் 5 மொழிகளில் வெளியீடு:

விஜய் நிதியுதவி அளித்ததற்கு முக்கியமான காரணம் மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாக தகவல் வெளியானது.

ஆம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது.

இந்த 5 மொழி பேசும் மாநிலங்களை கவரும் வகையில் தான் விஜய் தற்போது நிதியுதவி அளித்துள்ளார்.

ஆம், பிரதமர் (ஹிந்தி), தமிழக முதல்வர் (தமிழ்), புதுச்சேரி (தமிழ்), கேரளா (மலையாளம்), தெலுங்கு (ஆந்திரா, தெலுங்கானா), கர்நாடகா (கன்னடம்) ஆகிய மாநிலங்களை விஜய் கவர் செய்துள்ளார்.

5 மாநில மக்களை கவர்ந்த விஜய்

விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே விஜய் ஓடி வந்து தனது ரசிகர்களுக்கு உதவி செய்திருக்கலாம்.

ஆனால், இன்று வரை அவர் மௌனம் காத்து வந்தார். இது தொடர்பாக விஜய் மீது விமர்சனமும் எழுந்தது.

ஆனால், அதற்கெல்லாம் அசராமல், தற்போது மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், 5 மாநில மக்களையும் கவரும் வகையில் நிதியுதவி அளித்து வேஷம் போடுகிறார் என்று பலரும் விமர்சனம் வைக்கின்றனர்.

அஜித் நிதியுதவி

இதற்கு முன்னதாக அஜித் 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

ஒட்டுமொத்தமாக ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அஜித்தை பின்பற்றி தான் தற்போது விஜய்யும் நிதியுதவியும் அளித்துள்ளார்.

அதுவும் கூடுதலாக ரூ.5 லட்சம் சேர்த்து ரூ.1.30 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நிதியுதவி அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில், #RealHeroThalapathyVIJAY, #Master, #அஜித்தைபின்தொடரும்விஜய் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

Thalapathy Hs Donated 1.30cr To Corona relief Fund
25 lkhs to PM Relief Fund
50 lkhs To Tn CM Relief fund
10 Lkhs To Kerala cm relief fund
25 lkhs To Fefsi Company
5 Lkhs For Karnataka CM Fund
5 Lakhs To Andhra Cm Fund
5 Lakhs For Telangana Cm fund
5 Lakhs To Pondi

3

தமிழ்நாடு ஊரடங்கு இலவச ரேசன் டோக்கன் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் ,அரசு

0
இலவச ரேசன்

சென்னை: குடும்ப அட்டை தாரர்களுக்கு அவர் அவர் வீட்டிற்கே வந்து இலவச ரேசன் பொருட்களை பொது வினியோக திட்டத்தின் கீழ் பெறுவதற்கான டோக்கனை ஏப்ரல் 24 மற்றும் 25 இல் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.

ரேசன் கடையில் கூடும் கூட்டத்தினால் பரவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் அந்த டோக்கனில் இடம்பெற்றிருக்கும்”,  எனவும் “அதை வைத்து பொது வினியோக முறைப்படி இந்த ரேசன் பொருட்களை அது வழங்கப்படும் இடத்திற்க்கு சென்று பெற்றுக் கொள்ளலாம், இதை மக்கள் பயண்படுத்திக்கொள்ள வேண்டும்”, என அறிவிக்கப்பட்டது.

குடும்ப அட்டைதாரர்கள் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளி விட்டு இந்த இலவச பொருட்களை பெற்று கொள்ளலாம்.

மேலும் இந்த இலவச ரேசன் பொருட்கள் மே மாதம் பொது வினியோக முறையில் கிடைக்கும்  எனவும் இதில் 1கிலோ சக்கரை, 1கிலோ பருப்பு மற்றும் சமயல் எண்ணை ஆகியவை அரிசியுடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்ட இலவச பொருட்களால் 1.89 கோடி குடும்பங்கள் பயண்பெற்று உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

3

நயன்தாராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி!

0
Nayanthara Sri Reddy Issue

Nayanthara and Sri Reddy; நயன்தாராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி! நடிகை நயன்தாரா திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று அனைவரிடமும் பழகி வருகிறார் என்று ஸ்ரீரெட்டி கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நயன்தாரா திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று அனைவரிடமும் பழகியுள்ளார் என்று கூறி ஸ்ரீரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாரக திகழ்பவர் நடிகை நயன்தாரா. அஜித், விஜய், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ஆர்யா என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

முதலில் சிம்புவை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிருந்துவிட்டதாக தகவல் வந்தது. இ

தையடுத்து, நயன்தாரா – பிரபுதேவா இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அடிக்கடி இருவரும் வெளியில் உலா வந்தனர்.

அப்புறம், நான் பிரபுதேவாவை காதலிக்கவில்லை என்று நடிகை நயன்தாரா அறிவித்தார். தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். ஆனால், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், சர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நயன்தாரா கூட தான் திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று அனைவரிடமும் பழகியுள்ளார்.

அதை அவரிடம் யாராவது கேட்க முடியுமா? இதுதான் மாஸ் ஹீரோயினுக்கும், சினிமா வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் சாதாரண ஹீரோயினுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறியுள்ளார்.

நயன்தாரா குறித்து இப்படி சர்ச்சை கருத்து பதிவிட்டு ஸ்ரீ ரெட்டியால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Sri Reddy Nayanthara Issue

3

கொரோனா பரவலுக்கு மத்தியில் மாமூல் வாங்கிய பெண் போலீஸ் டிஐஜி அதிரடி

0

கொரோனா பரவலுக்கு மத்தியில் மாமூல் வாங்கிய பெண் போலீஸ் டிஐஜி அதிரடி, பெண் காவலர் ஸ்ரீ பிரியா தன் காவலர் கணவருடன் மாமுல் வாங்கி சிக்கினார்கள்.

நாடே ஊரடங்கில் இருப்பதால் பெரும்பாலோனோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க போதிய வருமானம் இல்லாமல் திணறி வருகின்றனர்.

இந்த நேரத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் காவலர்களின் மீது மக்களுக்கு ஒரு விட அன்பும் ஆதரவும் மதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆர்வாளர் ஸ்ரீ பிரியா கடைகளில் மாமூல் வசூலித்ததால் டி‌ஐ‌ஜி-யால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

3

ஜாலியா வீட்டு வேலை செய்யும் பிரபலங்கள்: வைரலாகும் வீடியோ!

0
Corona Lockdown

ஜாலியா வீட்டு வேலை செய்யும் பிரபலங்கள்: வைரலாகும் வீடியோ! கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கும் நிலையில், நடிகர்கள் வீட்டு வேலை செய்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள், வீட்டு வேலை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஆரம்பித்தது கொரோனா பாதிப்பு. நாளடைவில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மே 3 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், அப்பாவி ஜனங்கள் என்று அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

எனினும், நடிகர், நடிகைகள் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். ஆம், இதுவரை கிச்சன் பக்கமே போகாதவர்கள் தற்போது கிச்சனே கதி என்று இருக்கும் நிலை வந்துவிட்டதே.

சமையல் செய்வது, வீட்டு வேலை செய்வது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, உடற்பயிற்சி, யோகா என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில் வீட்டில் இருக்கும் நடிகர்கள் எப்படியெல்லாம் ஜாலியாக பொழுதை செலவிடுகிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.

இந்த வீடியோவில், அமித் பார்கவ், திரவியம், சாண்டி, ராம் சரண், நகுல் என்று பிரபலங்கள் பலரும் வீட்டு வேலை செய்கின்றனர்.

3

கல்யாணமான 10 ஆவது நாளில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றது ஏன்? விஜே ரம்யா விளக்கம்!

0
VJ Ramya Divorce Secret

VJ Ramya Divorce கல்யாணமான 10 ஆவது நாளில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றது ஏன்? விஜே ரம்யா விளக்கம்! திருமணமாகி 10 நாட்களில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றது ஏன் என்று நடிகை விஜெ ரம்யா விளக்கம் கொடுத்துள்ளார்.

கணவரை பிரிந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை நடிகை விஜே ரம்யா தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் நடிகை விஜே ரம்யா. பிஎஸ்சி விஸூவல் கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், பத்திரிக்கை மற்றும் மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் மேற்படிப்பு படித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நமம் வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ல்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அபர்ஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், திருமணம் நடந்து 10 ஆவது நாளிலேயே பிரிந்துவிட்டார்.

திருமணத்திற்குப் பிறகு ரம்யா நடிக்க வந்ததே அவரது பிரிவுக்கு காரணமாக கூறப்பட்டது. அதிலும் ஓ காதல் கண்மணி திரைப்படம் முக்கிய காரணமாக அப்போது பேசப்பட்டது.

கிட்டத்தட்ட 6 வருடங்கள் இது குறித்து விளக்கம் கொடுக்காமல் இருந்த ரம்யா தற்போது விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார்.

எங்கள் இருவருக்குமே வீட்டில் பார்த்து வைத்து தான் திருமணம் செய்து வைத்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு தான் எங்கள் இருவருக்கும் ஒத்துவராது என்று தெரிந்தது. ஆகையால், ஒருமனதாக பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.

ஒரே ஆண்டில் அதாவது 2014 ஆம் ஆண்டு தான் எனக்கு திருமணமும், விவாகரத்தும் நடந்தது. அப்படியிருக்கும் போது ஓ காதல் கண்மணி படம் தான் எங்களது பிரிவுக்கு காரணமாக கூறப்படுவது உண்மையில்லை.

ஏனென்றால், ஓ காதல் கண்மணி படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது 2015 ஆம் ஆண்டு. இந்தப் படம் ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது.

எங்களது இருவருக்கும் ஒத்து வரவில்லை. ஆகையால் ஒருமனதாக பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

பிகில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே ரம்யா, விஜய்யின் அடுத்த படத்திலேயே அவருடன் இணைந்து நடித்துள்ளார். ஆம், மாஸ்டர் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியின் போது ரம்யா தான் பிகில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.

இந்த நிகழ்ச்சியில் கீழே அமர்ந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 10% பங்குகளை வாங்க முடிவு செய்தது ஏன் தெரியுமா?

0
பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 10%

பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 10% பங்குகளை வாங்க முடிவு செய்தது ஏன் தெரியுமா? ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தில் 45 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் பேஸ்புக்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பேர் போன பேஸ்புக் நிறுவனம் இந்தியா தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.

ஜியோமார்ட் என்னும் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் வாட்ஸ்ஆஃப் பயனாளர்களையும் இணைத்து இந்தியாவில் ஒரு புதிய முயற்சி செய்ய பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

மேலும் வாட்ஸ்ஆஃப் தளத்தில் இந்தியாவில் மட்டும் 400 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். அதிலும் டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளோம்.

இதன் மூலம் அந்நிறுவனத்தின் குறைந்த அளவு பங்குதாரராக பேஸ்புக் மாறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

3

ரூ.30 முதல் ரூ.40 கோடி இருந்தால் போதும்: லோகேஷ் கனகராஜின் பட்ஜெட் பிளான்!

0
Master Movie Budget

Master Movie Budget; ரூ.30 முதல் ரூ.40 கோடி இருந்தால் போதும்: லோகேஷ் கனகராஜின் பட்ஜெட் பிளான்! மாஸ்டர் படத்திற்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி வரையில் மட்டுமே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பட்ஜெட் போட்டுள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு வெறும் ரூ.30 முதல் ரூ.40 கோடி வரையில் மட்டுமே லோகேஷ் கனகராஜ் பட்ஜெட் போட்டுள்ளார்.

கிட்டத்தட்ட ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட விஜய்யின் பிகில் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் கொடுத்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். பிகில் படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதால், மாஸ்டர் படத்திற்கும் அதிக பட்ஜெட் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்காக தயாரிப்பு நிறுவனம் இயக்குநர் லோகேஷ் கனகராஜை அணுகியுள்ளார். மேலும், படத்தின் பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று கேட்டுள்ளனர்.

இதற்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி ஆகும் என்று கூலாக பதில் கூறியுள்ளார். இது விஜய் படமாச்சே பாத்து பண்ணுங்க என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

எனக்கு என்ன தேவையோ அதைத் தான் நான் கேட்டேன் என்று கூறி அதே பட்ஜெட்டில் படத்தையும் முடித்துக் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

குறைந்த பட்ஜெட்டில் படம் முடிக்கப்பட்டுள்ளதால், மன மகிழ்ச்சியடைந்த தளபதி விஜய் ரூ.2 கோடியை சன்மானமாக கொடுத்துள்ளார்.

ஏற்கனவே படத்திற்காக ரூ.1.5 கோடி வரையில் சம்பளம் வாங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆக மொத்தம் மாஸ்டர் படத்தில் ரூ.3.5 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில், தளபதி விஜய்க்கு ரூ.80 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3