இந்தியா ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டம், இந்தியாவில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா அணி மிக ஆர்வமாக உள்ளது.
ஆஸ்திரேலியா பயணம் செய்யும் இந்தியா வருகிற அக்டோபர் மூன்று டி20 போட்டி, அதை தொடர்ந்து டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா இந்தியா பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டி விளையாடவுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலக கோப்பை தொடர் நடப்பது சந்தேகமாக உள்ளது. தவிர ரசிகர்கள் இல்லாமல் தொடரை நடத்த திட்டமிட்டுகின்றனர்.
நிதி நெருக்கடியால் திணறி வருகிறது தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள். இதனால் இந்தியாவுடன் நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் கூடுதலாக ஒரு போட்டி நடத்த முடிவு.
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச தொடர்கள் பாதிக்கப்பட்டால், எங்களது வருமானத்திலும் பிரச்னை வரும். வரும் இந்திய தொடருக்கு முன் எங்களுக்கு போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது உண்மையில் அதிர்ஷ்டம் தான்.
இத்தொடரை ஐந்து போட்டிகள் கொண்டதாக மாற்றுவது குறித்தும் யோசிக்கிறோம். இதற்கான வாய்ப்பையும் மறுக்க முடியாது என கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.
ராமதாஸ் எச்சரிக்கை; தமிழகத்தில் கொரோனா அதிகம் பரவுவதற்கு மக்களின் அலட்சியமே காரணம், ராணுவ பாதுகாப்பு இறங்கினால் ஊரடங்கு இன்னும் தீவிரமாக இருக்கும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததாகவே தெரியவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதற்கு மக்களின் அலட்சியமே காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிலைமையை துல்லியமாக வர்ணிக்க வேண்டுமென்றால், ‘சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது’ என்று தான் கூற வேண்டும்.
மேலும் இவர், மக்கள் ஊரடங்கு என்றால் என்னவென்பதை மறந்து வெளியில் இஷ்டத்துக்கு ஊர் சுற்றி வருகிறார்கள். யாருக்கும் எந்தவித அக்கறையும் இல்லை.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் தினம் ஓரிரு மணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் வெளியில் வர வேண்டாம் என எச்சரித்தும் மக்கள் அதை முறையாக கடைபிடிப்பது இல்லை.
ஒரு சிலரின் அலட்சியத்தினால் அவரை சுற்றி இருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது அதை அவர்கள் உணர்வதில்லை.
எடுத்துக்காட்டாக அவர் சிங்கப்பூரை கூறியுள்ளார். முதலில் மிகவும் மெதுவாக பரவிய கொரோனா வைரஸ் சிங்கப்பூர் ஊரடங்கை அமல்படுத்த தாமதித்ததால் இப்பொழுது 10000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே நிலைமைதான் நாளை தமிழகத்திற்கும் வரலாம். சென்னையை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட அதற்கே அந்த நிலைமை என்றால் தமிழகம் என்னவாகும் என்பது மக்கள் கையில் தான் இருக்கிறது.
தல தோனி மனைவி சாக்ஸியுடன் ரொமான்ஸ் கடலில் மூழ்கிவிட்டதை பாருங்கள், எம்.எஸ் தோனி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலகமே கொரோனாவை எதிர்த்து ஊரடங்கில் இருப்பதால் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் மூத்த வீரரான எம்எஸ் தோனி தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாக்ஸி.
இந்த புகைப்படத்தில் சாக்ஸி தோனி படுக்கையில் இருக்கும் எம்எஸ் தோனியின் கட்டை விரலை கடிப்பது போன்று புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது .
இது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆகி பல்வேறு விதமான வேடிக்கையான மீம்ஸ் குவிந்து வருகின்றன.
Simran Tik Tok Video; மாறி மாறி முத்தம் கொடுத்த சிம்ரன்: வைரலாகும் வீடியோ! நடிகை சிம்ரன் தனது மகனுக்கு முத்தம் கொடுத்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது அம்மாவிற்கு முத்தம் கொடுத்த சிம்ரனின் மகன் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். 1990 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் நடிக்க ஆரம்பித்தவர்.
அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
எல்லா நடிகைகளைப் போன்று திருமணத்திற்கு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அப்புறம் என்ன, ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.
ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை, தற்போது சினிமா வாய்ப்பில்லாமல், மேடைகளில் நடனம் ஆடும் நிலை ஏற்பட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.
அந்த வகையில், வீட்டில் இருக்கும் நடிகை சிம்ரன், தனது மகனுடன் இணைந்து டிக் டாக் வீடியோவில் நடித்துள்ளார்.
அதில், இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக நடிகை த்ரிஷா, தனது த்ரிஷா கிருஷ்ணன் என்ற டிக் டாக் அக்கவுண்டிலிருந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டான்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.
Image of Earth planet in human hands. Protect planet.
Earth Day 2020 Theme, Quotes, Poster, Images & History; உலக புவி நாள் 2020. World Earth Day 2020. Earth Day Drawing, Images. Earth Day Histroy
உலக புவி நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை பாதுகாப்பதே இதன் முக்கியத்துவமாகும்.
1970ஆம் ஆண்டுகளில் இருந்து அனைத்து நாடுகளும் பூமி மாசடைவதை முழுவதுமாக தடுக்கும் வண்ணம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Earth Day History
1969ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டில் உலக அமைதிக்காக குரல் கொடுத்த வென்ற ஜான் மெக்கானல் புவியின் வளங்களை பாதுகாக்க ஒரு திட்டம் தீட்டினார்.
பூமியில் இருக்கும் அறிய வளங்களை மாசு படாமல் பாதுகாக்கவும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் வரும் தலைமுறையினருக்கு ஒரு நல்ல வாழுமிடத்தை அமைக்கவும் முடிவு செய்தார்.
இதனால் கொண்டு வரப்பட்ட விழிப்புணர்வு தினமே இந்த உலக புவி தினமாகும். ஏப்ரல் 22 1970ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 கோடி பேர் கலந்து கொண்டனர்.
முதலில் இரவும் பகலும் சமமான மார்ச் 20ஆம் நாள் கொண்டாடலாம் என கருத்துகள் வந்தது. ஆனால் மாணவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விடுமுறை நாட்களான ஏப்ரல் 22 தேர்வு செய்யப்பட்டது.
Sathish With His Father; முடி வெட்டி ஷேவ் செய்றேன் என்ற பேருல இப்படி சித்ரவதை செஞ்ச சதீஷ்? காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய அப்பாவுக்கு முடிவெட்டி ஷேவ் செய்து அழகு பார்த்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சதீஷ் தனது அப்பாவிற்கு முடிவெட்டி, ஷேவ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுனில் சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே பிஸியாக இருக்கின்றனர்.
ஆம், சமையல் செய்வது, உடற்பயிற்சி, யோகா, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, தோட்டவேலை பார்ப்பது, விவசாயம் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில் எல்லோரையும் கிண்டலடித்துக் கொண்டிருக்கும் காமெடி நடிகர் சதீஷ் தனது அப்பாவையும் விட்டு வைக்கவில்லை.
முடிவெட்டி ஷேவ் செய்யுறேன் என்ற பெயரில் அவரது கன்னத்தில் ரத்தக் கறையை ஏற்படுத்தியுள்ளார். அதன் பிறகு அதை துடைத்துவிட்டு அனைவருக்கும் வணக்கம் சொல்லியுள்ளார்.
ஆம், முடி திருத்தம் செய்யும் சலூன் கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ள நிலையில், சதீஷ், தனது அப்பாவிற்கு முடி வெட்டி, ஷேவ் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா முடி வெட்டி, ஷேவ் செய்து டை அடித்துவிட்டு நகம் கட் செய்த வீடியோவை விஜயகாந்த் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும், இயக்குநர் பேரரசுவுக்கு அவரது மகள் முடி வெட்டிவிடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
Soorarai Pottru Release; என்னது ஆகஸ்டில் சூரரைப் போற்று படமா? யார் சொன்னது? சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சூரரைப் போற்று படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.
வரும் மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில், சூரரைப் போற்று சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ வெளியானது. நேற்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி என்ற பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது என்ப்து குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து, சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
Theepetti Ganesan; பால் வாங்க கூட காசு இல்ல: அஜித்தை பார்க்க ஆசைப்பட்ட தீப்பெட்டி கணேசன்! ரேணிகுண்டா படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் தல அஜித்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார்.
தீப்பெட்டி கணேசன் அஜித்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக அண்மையில் ஒரு நேர்காணலில் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இப்படத்தைத் தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, ஆயுத போராட்டம், பில்லா 2, முத்து நகரம், என்றென்றும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டை மன்னன் என்ற படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
எப்போதுமே பிஸியாக போய்க்கொண்டிருந்த நிலையில், தனது மேனேஜரால் சினிமா வாய்ப்பு குறைந்தது. பணமும் நஷ்டம் ஏற்பட்டது.
மதுரையை சொந்த ஊராகக் கொண்ட எனக்கு 10 ஆயிரம் பணம் கூட பெரிய தொகை. அந்த 10 ஆயிரம் நான் சம்பாதித்தாலும், அது எனது கைக்கு வராத காலகட்டம் கூட இருந்தது.
இப்படி நான் சம்பாதித்த பணங்கள் எனது கைக்கே வராமல் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஒவ்வொரு படத்தின் வாய்ப்பு வரும் போதும் மேனேஜர் அதிக சம்பளம் கேட்டதால் பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் நிலை ஏற்பட்டது.
காதல் திருமணம் செய்து கொண்ட எனக்கு தற்போது 2 மகன்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் எனக்கு கால்கள் நடக்க முடியாமல் போனது.
இடையில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை கூட வந்தது. எனக்கு நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள்.
ஆனால், தற்போது கொரோனா லாக்டவுனில் இருக்கும் நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் குடும்பத்தோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
பால் வாங்க கூட காசு இல்லை. என்னால் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட போதும் எனது மனைவி தான் என்னையும், குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
தற்போது எனக்கு அஜித் சார் உதவி செய்ய வேண்டும் என்று அண்மையில் அளித்த பேட்டியில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அஜித்தை சந்திக்க எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல் போய்விட்டது.
எனது உண்மையான பெயர் கார்த்திக். ஷூட்டிங் ஸ்பாட்டில் தீப்பெட்டி கணேசன் என்றுதான் பலரும் கூப்பிடுவார்கள்.
படப்பிடிப்பின் போது என்னை கார்த்திக் என்று அழைத்த ஒரே கடவுள் அஜித் சார்.
பல முறை அவரிடம் உதவி கேட்பதற்காக முயற்சித்தேன். ஆனால், ஒருமுறை கூட அவரை சந்திக்க முடியவில்லை.
அஜித் சார் உதவி செய்தால், என் குழந்தைகளுக்கு நல்லவொரு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், எனக்கு உதவி செய்ய விரும்புவோர் முத்து: 9841303021 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
Master Release In 5 Languages; அயலானுக்கு போட்டியாக வரும் தளபதி விஜய்யின் மாஸ்டர்! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் தமிழ் படம் அயலான் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருந்த நிலையில் போட்டியாக விஜய்யின் மாஸ்டர் படமும் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
விஜய் நடித்த மாஸ்டர் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படம் தள்ளிப்போனாலும் நல்ல செய்தியோடு தான் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் மாஸ்டர்.
இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஸ்ரீமன், சாந்தணு, ஆண்ட்ரியா, நாசர், அர்ஜூன் தாஸ் என்று நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கல்வி முறையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல்.
கடந்த 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டன. அதோடு படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.
கொரோனா லாக்டவுன் காரணமாக நிறைய படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 22 ஆம் வெளியாகும் என்றுகூறப்படுகிறது.
அன்று விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இது விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கும் டபுள் கொண்டாட்டம் தான்.
இந்த நிலையில், மாஸ்டர் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் மாஸ்டர் வெளியாகிறது.
மாஸ்டர் படக்குழுவினரின் மாஸ்டர் பிளான் இது என்றாலும், விஜய்யின் முதல் படம் தொடர்ந்து தமிழ், மலையாளாம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் என்ற முதல் தமிழ் படம் தான் 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்திற்கு போட்டியாக விஜய்யின் மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
விஜய், சிவகார்த்திகேயனுக்கு எல்லாம் போட்டியா? என்று கேட்டால் இல்லவே இல்லை. அப்புறம். இது தானாகவே அமைந்துவிட்டது.
ரஜினியைத் தொடர்ந்து விஜய்க்கு தான் பேன் இந்திய நடிகராக (Vijay Become Pan India Star) வரும் திறமை இருக்கிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படம் பேன் இந்திய படமாக (Master is Pan India Movie) பார்க்கப்படுகிறது.
இதற்கான வேலைகளை படக்குழுவினர் மே 3 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
America corona virus: அமெரிக்காவில் கரோனா வைரஸ் காரணமாக நேற்று மட்டும் 2800 மக்கள் இறந்துள்ளனர் இதனால் அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. பல லட்சம் மக்கள் இதுவரை இறந்துள்ளனர்.
உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்தியாவையும் கரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. நாளுக்குநாள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சீனா, இத்தாலி போன்ற நாடுகள் பயங்கர இழப்புகளை சந்தித்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா நாளுக்கு நாள் சராசரியாக 2000 மக்களை இழந்து வருகிறது.
நேற்று ஒரு நாள் மட்டும் 2800 மக்கள் இறந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா வைரஸ் காரணமாக அதிக இழப்புகளை சந்தித்த நாடு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார் அதிபர் டிரம்ப். இதுவரை உலகமெங்கும் கருணா வைரசால் 2556554 பாதிக்கப்பட்டுள்ளனர். உலகமெங்கும் இதுவரை 177613 இறந்துள்ளனர்.
அமெரிக்கா 45318, ஸ்பெயின் 21282, இத்தாலி 24648, பிரான்ஸ் 20796, ஜெர்மனி 5086 இறந்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இந்த நாடுகள் உள்ளன.