Home Blog Page 128

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தகவல்கள்

0
இந்தியாவில் கொரோனா,

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு : மாராட்டியத்தில் புதிதாக 552 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு.  டெல்லியில் புதிதாக மூன்று கொரோனா கட்டுப்பாடு மண்டலங்கள்(Containment Zones).

இந்தியாவில் புதிதாக 1,329 கொரோனா பாதிப்புகள் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டன, மேலும் 44 பேர் இந்த நோயால் இன்று இறந்துள்ளனர் என “சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்” தெரிவித்தது.

இந்தியாவில் கொரோனா

மேலும் இந்தியாவில் இதுவரை 18,985 பேர் இந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 15,122 பேர் பாதிக்கப்பட்டும் 3,259 பேர் குணமடைந்து வீடு திரும்பியும், ஒருவர் இடம்பெயர்ந்தும் மற்றும் 603 பேர் இறந்தும் உள்ளனர்.

டெல்லியில் மட்டும் 2,081 பேர் பாதிக்கப்பட்டும் 47 பேர் இறந்தும் உள்ளனர். முதல் இடத்தில் உள்ள மராட்டிய மாநிலம் இந்த நோயால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது இங்கு கொரோனா பாதிப்பு 4,666 ஆகவும் 250க்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர்.

குஜராத்தில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 71 பேர் இறந்துள்ளனர் இது மூன்றாம் இடத்தில் உள்ள மாநிலமாகும்.

கோவிட் இந்தியா சேவா(COVID India Seva) செயலி

இதற்கிடையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ‘கோவிட் இந்தியா சேவா’(COVID India Seva), எனும் மக்களுக்கும் சுகாதாரத்துறைக்கும் இடையே கருத்து பரிமாற்ற செயலியை திறந்து வைத்தார்.

இதில் மக்கள் கொரோனா சம்மந்தமான கேள்விகளை கேட்டு பயண்பெரும் வகையிலும், “பயிற்சி பெற்ற வல்லுநர்கள் இதில் சுகாதாரத் தகவல்களை மக்களுக்கு வழங்குவார்கள் எனவும், மக்களுடனான நேரடி தொடர்பில் இருக்க இந்த செயலி பயண்படும் “ எனவும் தெரிவித்தார்.

இந்தியா தற்போது கொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது.

 

3

22/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன்

0

22/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன்Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் பணவரவு சிறப்பாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப செய்திகள் தேடி வரும் நாளாக இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று மிகவும் சிக்கலான நாளாக இருக்கும். அன்றாட பணிகளை செய்வதில் கூட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற வம்புகள் வந்து சேர வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்று உங்களுக்கு சுபமான நாளாக அமையும். சுப காரியங்கள் துவங்கும் பேச்சுகளை எடுக்கலாம். அனைத்தும் சிறப்பாக முடியும். காதல் வசப்படும் நாளாக இருக்கிறது. தங்களின் காதலை வீட்டில் வெளிபடுத்த ஏதுவான நாளாக இருக்கிறது.

கடக ராசிபலன்

இன்றைய தினம் உங்களின் செயல்களுக்கு எதிர்ப்புகள் வர வாய்ப்புண்டு. பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். பணியிடத்தில் தொழிலாளர்கள் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். பணவரவு போதுமான அளவு இருக்காது.

சிம்ம ராசிபலன்

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக முடியும். தைரியமாக எதிர் கொள்ள வேண்டிய நாளாகும். அதனால் வாழ்வு மேன்மை அடையும்.

கன்னி ராசிபலன் 

இன்று அனைவரிடமும் நட்புறவு மேம்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களின் நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும். அவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க கூடுதலாக நன்மை கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும் நாளாகும்.

துலா ராசிபலன்

இன்றைய தினம் பலன்கள் சற்று தாமதமாக கிடைக்கும். உங்களின் மனநிலையை நீங்களே உற்சாகமாக வைத்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் சற்று பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையான அணுகுமுறை அவசியம் தேவையாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய தினம் பணிசுமை அதிகமாக இருக்கும். அதிக பணியால் சோர்வுடன் காணப்படுவீர்கள். தங்களின் சகோதரர்களுடன் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம். தொழிலில் பணவரவு பெரிதாக இருக்காது.

தனுசு ராசிபலன்

இன்று உங்களின் அச்ச உணர்வுகளை தவிர்க்கவும். மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும். தங்களுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வரலாம். பிரச்சனைகளை பொறுமையாக எதிர்கொள்ள வேண்டிய நாளாகும்.

மகர ராசிபலன் 

இன்றைய தினத்தில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணியிடத்தில் நன்மதிப்பு பெருகும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புண்டு. பயணங்கள் சாதகமாக அமையும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதனால் சிறந்த பலன்களை உடனடியாக பெற முடியும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் நாளாக இருக்கும். ஜெயமான பலன்களை வாரி வழங்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று பாராட்டுகளை பெற போகும் நாளாகும். பணியிடத்தில், வீட்டில் அனைத்து இடங்களிலும் நன்மதிப்பு கூடும். பேச்சு திறனால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும் நாளாகும்.

22/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

ஃபெப்சி, தலைவி படக்குழுவுக்கு கங்கனா ரணாவத் நிதியுதவி!

0
Kangana Ranaut

Kangana Ranaut Donation; ஃபெப்சி, தலைவி படக்குழுவுக்கு கங்கனா ரணாவத் நிதியுதவி! பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஃபெப்சி மற்றும் தலைவி படக்குழுவினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஃபெப்சி மற்றும் தலைவி படக்குழுவினருக்கு நடிகை கங்கனா ரணாவத் ரூ.10 லடச்ம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் ஜெயலலிதா ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.

Kangana Ranaut Donation

அந்த வகையில், கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை கங்கனா ரணாவத் நிதியுதவி அளித்துள்ளார்.

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சமும், தலைவி படத்தில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சமும் என மொத்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

3

விஜய் பிறந்தநாளை ஜூன் 22 தமிழன் திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள்!

0
Thalapathy Vijay Birthday

Thalapathy Vijay; விஜய் பிறந்தநாளை ஜூன் 22 தமிழன் திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள்! வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அன்றைய நாளை தமிழன் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.

ஜூன் 22 ஆம் தேதியை தமிழன் திருவிழாவாக விஜய் ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். இதுவரை 64 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள தளபதி64 படமான மாஸ்டர் கடந்த 14 ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வருங்கால முதல்வர், நாளைய தமிழகம், மக்களால் நீ, மக்களுக்காகவே நீ, நாளை நமதே தலைவா, நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, அரசியலுக்கு வராவிட்டால் பெரியார் என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த வருடம் இதை விட கொஞ்சம் அட்வான்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அண்மையில், விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இது அவருக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலிதான் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது ஒன்று திரண்ட மக்கள் கூட்டம். இதைப் பார்த்து தமிழக அரசியல் பிரபலங்கள் பலரும் ஆடிப்போன நிலை வந்தது.

எப்போது விஜய் பிறந்தநாள் வரும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். காரணம், மாஸ்டர் ரிலீஸ், வருமான வரித்துறை சோதனை எல்லாவற்றிற்கும் பதில் கொடுக்கத்தான்.

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால், முதல் முறையாக அன்றைய தினத்தை ரசிகர்கள் ஜூன்22தமிழன்திருவிழாவாக கொண்டாட இருக்கின்றனர்.

இதன் காரணமாக ஜூன்22தமிழன்திருவிழா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

Best First Look Poster? சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது?

0

Best First Look Poster; சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது? நீங்களும் பதில் சொல்லலாம்! தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் திரைக்கு வருகிறது.

அதில், சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது என்பது பற்றி பார்ப்போம். சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது என்பது பற்றி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்.

Best Tamil Movies 2020 | சிறந்த படங்கள் 2020

தமிழ் சினிமா என்று எடுத்துக் கொண்டால் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை சாதாரண ஹீரோ முதல் மாஸ் ஹீரோவின் படம் வரை எத்தனையோ படங்கள் திரைக்கு வருகிறது.

மாஸ் ஹீரோக்களின் படங்கள் வருத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டோ தான் திரைக்கு வரும். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், விக்ரம் என்று மாஸ் ஹீரோக்கள் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஹீரோவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர், இசை வெளியீட்டு விழா, படம் ரிலீஸ் என்று வரும் போது அவரை பிடிக்காத மற்ற நடிகர்களின் ரசிகர்கள் டுவிட்டரில் விதவிதமான மீம்ஸ் போட்டு கிண்டலடிப்பது வழக்கம்.

இது காலங்காலமாக நடந்து வருகிறது. அஜித் படம் வந்தால், விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், தனுஷ் படம் வந்தால் சூர்யா ரசிகர்கள் விமர்சிப்பதும் நடந்து வருகிறது.

தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படி ஒவ்வொரு ஹீரோவும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், தான் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்த ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுனில் பிரபலங்கல் பலரும் தங்களது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாஸ் ஹீரோக்களின் படங்களில் சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எது என்பது குறித்து இங்கு காண்போம். நீங்களும் உங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படங்கள்: பேட்ட, விஸ்வாசம், காஞ்சனா 3, நேர்கொண்ட பார்வை, காப்பான், கைதி, நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன், என்ஜிகே, கோமாளி, வந்தா ராஜாவாத்தான் வருவேன், சூப்பர் டீலக்ஸ், அயோக்யா, என்ஜிகே, கடாரம் கொண்டான், பிகில், ஆக்‌ஷன், சங்கத்தமிழன் என்று மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியானது.

பேட்ட

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பேட்ட. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

Petta First Look

விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வந்த படம் விஸ்வாசம். இந்தப் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

Viswasam First Look

நேர்கொண்ட பார்வை

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வந்த படம் நேர்கொண்ட பார்வை. பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார்.

Nerkonda Paarvai

பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்த படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்தது.

Bigil First Look Poster

காப்பான்

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த படம் காப்பான். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஓரளவு மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்தது.

இதே போன்று அரசியல் கதையை மையப்படுத்திய என்ஜிகே படமும் வசூல் ரீதியாக அப்படி ஒன்றும் வரவேற்பு பெறவில்லை.

அயோக்யா

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷாலை ஆரம்பத்தில் கெட்ட போலீசாகவும், பின் நல்ல போலீசாகவும் காட்டிய படம் அயோக்யா.

எதிர்மறை விமர்சனம் பெற்ற இப்படம் அந்தளவிற்கு வசூல் குவிக்கவில்லை. இதே போன்று சுந்தர் சி இயக்கத்தில் வந்த விஷாலின் ஆக்‌ஷன் படமும் அப்படியே அமைந்தது.

சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்த படம் சூப்பர் டீலக்ஸ்.

இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து வந்த சங்கத்தமிழன் படமும் நல்ல விமர்சனம் பெற்ற போதிலும் வசூல் பெறவில்லை.

அசுரன்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்த படம் அசுரன். ஆக்‌ஷன் டிராமா கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த படமாக அசுரன் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநராக வெற்றி மாறன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விருதைத் தொடந்து Behindwoods Gold Medal, Zee Cine Awards Tamil, Ananda Vikatan Cinema Awards ஆகிய விருதுகள் தனுஷ் மற்றும் வெற்றி மாறனுக்கு வழங்கப்பட்டது.

Asuran First Look Poster

டாக்டர்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் டாக்டர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

Doctor First Look Poster

கேஜிஎஃப் 2

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்‌ஷன் திரைப்படம் கேஜிஎஃப் 2. முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் உருவாகி வருகிறது.

KGF 2 First Look Poster

வலிமை

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் படம் வலிமை. போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை வெளியாகவில்லை.

மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Master First Look Poster

துப்பறிவாளன் 2

விஷால் இயக்கி, தயாரித்து நடிக்கும் புதிய படம் துப்பறிவாளன் 2. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது.

சூரரைப் போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஏர் டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று.

கடந்தாண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வரும் மே 1 ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Soorarai Pottru First Look

ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜகமே தந்திரம். வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

 Jagame Thandhiram First Look

கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா. இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Cobra First Look

அண்ணாத்த

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

இப்படி படங்களின் பட்டியலை அடிக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில், உங்களுக்கு பிடித்த நடிகரின் படங்களில் எது சிறந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று உங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

3

அமெரிக்காவிற்கு குடிபெயர்பவர்களை நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்

0
குடிபெயர்பவர்களை நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்:  வெள்ளிகிழமை, வெளிநாட்டிலிருந்து வேலை மற்றும் வாழ்வுக்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்பவர்களை நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையால் கொரோனா பாதிப்பிலிருந்த அமெரிக்கா மீண்டுவந்த பின்பு அமெரிக்காவில் உள்ள வேலைகளுக்கு வெளிநாட்டவர்களின் போட்டி இருக்காது எனவும், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு காப்பாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

 குடிபெயர்பவர்களை நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்

ட்விட்டரில் ட்ரம்ப் இதைபற்றி கூறும் பொழுது, “ கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் இருந்து மீளவும், அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும், வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்பவர்களை நிறுத்த ஆணை பிறப்பிக்கவுள்ளேன்” என தெரிவித்தார்.

கொரோனா தாக்குதல் அமெரிக்காவில் உச்சத்தை எட்டிஉள்ளதை அடுத்து அமெரிக்கர்களையும் அவர்களது வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்கும் நோகத்தோடு, அமெரிக்காவை ஏனைய உலத்தொடர்பில் இருந்த பிரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அடுத்த சில நாட்களில் வெளிநாட்டினருக்கு  கிடைக்க இருந்த வேலை வாய்ப்பு விசாக்களையும்,  குடியுரிமைகளையும் இந்த அரசாணை தடுக்கும் என தெரிகிறது.

மிகவும் அத்தியாவசியமாக அமெரிக்காவிற்கு தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு 2016ல் வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கையை 617,752லிருந்து 25% குறைத்து 2019 ஆம் ஆண்டு 462,422 ஆக நிர்ணயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3

சார் நீங்க மொத்தமா ரூ.5 கோடியோ அல்லது ரூ.10 கோடியோ கொடுத்துருங்க!

0
Raghava Lawrence Amma Unavagam

Raghava Lawrence; சார் நீங்க மொத்தமா ரூ.5 கோடியோ அல்லது ரூ.10 கோடியோ கொடுத்துருங்க! நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக இலவசமாக உணவு வழங்குவதற்காக அம்மா உணவகங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இலவச உணவு வழங்குவதற்காக ராகவா லாரன்ஸ் அம்மா உணவகங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், டிவி சேனல்கள் ஆகியவற்றிற்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

அதில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது அரிசி மூட்டைகள் வழங்குதல் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஜெயம் ரவி, சூர்யா குடும்பத்தினர், அஜித், விஜய் சேதுபதி, விஜய் மக்கள் இயக்கம், விஷால், சூரி, யோகி பாபு, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஹரிஷ் கல்யாண் என்று பலரும் நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கியுள்ளனர்.

அந்த வகையில், ராகவா லாரன்ஸ் ரூ.3.65 கோடி வரையில் நிதியுதவி அளித்திருந்தார்.

ஃபெப்சிக்கு ரூ.50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.

மேலும், நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என்று முதலில் ரூ.3 கோடி வழங்கினார்.

இதையடுத்து துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் வகையில் அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

தொடர்ந்து, விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்தார்.

இந்த நிலையில், தற்போது கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களிலுள்ள அம்மா ஹோட்டல்களில் இலவச உணவு வழங்கும் வகையில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஒட்டு மொத்தமாக ரூ.4.15 கோடி வரையில் ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்குவதற்குப் பதிலாக ரூ.5 கோடியோ அல்லது ரூ.10 கோடியோ மொத்தமாக கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துவிடலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

3

பேத்தியை கொஞ்சி மகிழும் ராதிகா: வேடிக்கை பார்க்கும் சரத்குமார்!

0
Radhika Sarathkumar Grand Daughter

Raadhika Sarathkumar Grand Daughter Radhya Mithun; பேத்தியை கொஞ்சி மகிழும் ராதிகா: வேடிக்கை பார்க்கும் சரத்குமார்! தனது மகள் ரயனுக்கு பிறந்த பெண் குழந்தையை கொஞ்சி மகிழும் ராதிகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகளின் குழந்தையை கொஞ்சி மகிழும் ராதிகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பங்களில் ஒன்று ராதிகா – சரத்குமார் குடும்பம். இவரகளது குடுபம்பத்தில் பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்.

வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடித்து வருகிறார். ராதிகாவின் மகள் ரயன் கிரிக்கெட் வீரரான அபிமன்யு மிதுனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரயன் – அபிமன்யு மிதுன் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி ரயனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு அம்மாவின் பெயரில் வரும் ராதிகாவின் முதல் இரு எழுத்துக்களை ஆரம்பமாக வைத்து ராத்யா மிதுன் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது தனது மகள் வயிற்று பேத்தியை ராதிகா கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராதிகா தனது பேத்தியை கொஞ்சி மகிழ்வது போன்றும், அருகில் சரத்குமார் உட்கார்ந்து சிரித்தபடி வேடிக்கை பார்ப்பது போன்றும் அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.

மேலும், கிரிக்கெட் வீரன் அபிமன்யு மிதுனின் டீ சர்ட் அங்குள்ள சுவற்றில் வைக்கப்பட்டுள்ளது. இது அவரது வீடாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் குடும்பத்தோடு தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதில், ராதிகா தனது பேத்தியோடு நேரத்தை செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

படப்பிடிப்பு எப்போது தொடங்கலாம்? குஷ்பு முக்கிய தகவல்!

0
kushboo

Kushboo; படப்பிடிப்பு எப்போது தொடங்கலாம்: குஷ்பு முக்கிய தகவல்! படப்பிடிப்புக்கு எப்போது செல்லலாம் என்பது குறித்து வரும் 25 ஆம் தேதி தான் சொல்ல முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

வரும் 25 ஆம் தேதிக்குப் பிறகு தான் படப்பிடிப்பு தொடங்குவது பற்றி அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி நிறுவனங்கள், ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர்களைத் தான் மறுபடியும் ஒளிபரப்பி வருகின்றன.

இந்த நிலையில், டிவி சீரியல்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து நடிகை குஷ்பு பேசியுள்ளார். அதன்படி, வரும் மே 5 ஆம் தேதியிலிருந்து டிவி நிறுவனங்கள் படப்பிடிப்புகள் தொடங்கும்.

ஆனால், மே 11 ஆம் தேதி தொடர்கள் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் இது குறித்து பேசியிருக்கிறே. அவர் யோசித்து சொல்வதாக கூறியிருக்கிறார்.

இதே போன்று சுகாதாரத்துறை அமைச்சரிடமும் பேசினேன். அவரோ தற்போதுதான் ரேபிட் டெஸ்ட் பணிகள் தொடங்கியுள்ளன.

ஆதலால், வரும் 26, 27-ம் தேதியில் தான் எப்போது உங்களுடைய வேலைகளை ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து சொல்ல முடியும்.

ஆனால், படப்பிடிப்புக்கு அதிக ஆட்களை பயன்படுத்துவது கூடாது. வெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.

படப்பிடிப்பின் போது அனைவருமே மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

படப்பிடிப்பு எப்போது என்பதை தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்துவிட்டு தான் சொல்ல முடியும்.

இதைத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடமும், ஆர்.கே.செல்வமணியிடமும் சொல்லியிருக்கிறார்.

மே 11 ஆம் தேதிக்குப் பதிலாக இன்னும் ஒரு வாரம் தள்ளி வைத்தால் கொஞ்சம் தெளிவான கண்ணோட்டத்துக்கு வர முடியும்.

டிவி சீரியல் தயாரிப்பாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்றரை எபிசோடுகள் வரை படப்பிடிப்பு செய்யுங்கள்.

அதிகப்படியான எபிசோடுகளை எடுத்து வைத்துக் கொள்வது உங்களுக்குத்தான் நல்லது. கொரோனா ஒரு பாடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

3

அஜித் – பாலா சர்ச்சை: அந்த ரூமுக்குள் என்ன நடந்தது? தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை!

0
Thala And Bala Issue

Ajith Bala Issue; அஜித் – பாலா சர்ச்சை: அந்த ரூமுக்குள் என்ன நடந்தது? தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை! நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்த நிலையில், பாலா – அஜித் இடையிலான மோதல் காரணமாக அந்தப் படத்தில் ஆர்யா நடித்தார்.

அஜித்துக்கும், பாலாவுக்கும் இடையிலான மோதல் குறித்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வந்த படம் நான் கடவுள். ஆனால், இந்தப் படத்தில் நடிக்க இருந்தது எனன்வோ அஜித். இவர் தான் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே அஜித்துக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த பஞ்சாயத்தின் போது அஜித்தை பாலா அடித்துவிட்டதாகவும் வதந்தி பரவியது.

இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு அதற்கான விளக்கம் கிடைத்துள்ளது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கூறுகையில், பாலாவுக்கும், அஜித்துக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்தது உண்மை.

அதற்காக வைக்கப்பட்ட பஞ்சாயத்தின் போது, அஜித்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை மற்றும் அதற்குரிய வட்டியை பாலா கேட்டுள்ளார்.

ஆனால், இதற்கு அட்வான்ஸ் தொகையை மட்டுமே தருவதாக அஜித் கூறியதாகவும் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அஜித் வட்டி பணத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகு அங்கிருந்து அஜித் புறப்பட்டுச் சென்றார் என்று அவர் கூறியுள்ளார். தற்போது தயாரிப்பாளர் கூறியதைத் தொடர்ந்து அஜித்தை, இயக்குநர் பாலா அடிக்கவே இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அப்போது வந்த செய்தி வெறும் வதந்தியாகவே பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3