Home Blog Page 129

ரத்த வங்கியில் ரத்தம் பற்றாக்குறை: ரசிகர்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்!

0
Chiranjeevi Request

Chiranjeevi; ரத்த வங்கியில் ரத்தம் பற்றாக்குறை: ரசிகர்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்! கொரோனா லாக்டவுன் காரணமாக ரத்த வங்கிகளில் ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி ரத்த தானம் செய்துள்ளார். அதோடு, ரசிகர்களையும் ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ரத்த வங்கிகளில் ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி ரத்த தானம் வழங்கியதோடு ரசிகர்களையும் ரத்த தானம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து நடிகர் – நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா பிரபலங்களுக்கு உதவும் வகையில், நிதியுதவியும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக மற்ற நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நடிகர் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் ரத்த தானம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உயிர் காக்கும் ரத்தத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்களில் கவலை ஏற்படுத்தியுள்ளது.

இதய நோயாளிகள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், விபத்தி சிக்கியவர்கள், புற்று நோயாளிகள் ஆகியோருக்கு ரத்தம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

அவர்களை காப்பாற்றுவதற்காக பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் அருகிலுள்ள ரத்த வங்கிக்கு சென்று ரத்த தானம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிரஞ்சீவியைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தும் ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தங்கை வித்யா உடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் குடும்ப புகைப்படம்!

0
Vijay Sister Vidhya

தங்கை வித்யா உடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் குடும்ப புகைப்படம்! விஜய் அவரது தங்கை வித்யா உடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் மற்றும் அவரது தங்கை வித்யா ஆகியோரது சிறு வயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா காரணமாக ஜூன் 22 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

விஜய் தங்கையின் புகைப்படம்

கொரோனா காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பலரும் வெளியில் வருகின்றனர்.

கொரோனா லாக்டவுனில் சினிமா பிரபலங்கள் பலரும், சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, போட்டோஷூட் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், வீட்டிலேயே சும்மா இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல், பிரபலங்கள் தங்களது அன்றாட பணிகளை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதோடு குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், விஜய்யின் சிறு வயது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vidhya

அதில், விஜய், அவரது சகோதரி வித்யா மற்றும் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா சந்திரசேகர் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தங்கை பாசம் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும். 2 வயதில் உடல் நலக்குறைவால் அவரது தங்கை வித்யா பரிதாபமாக பலியானார்.

அவர் மீது அதிக பாசம் வைத்திருந்த நிலையில், வித்யா இறந்த துயர் தாங்க முடியாமல், அன்றிலிருந்து விஜய் அமைதி காத்து வருவதாக அம்மா ஷோபா கூட கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா ரணகளத்திலும் குதூகளம், தமிழகத்தில் சில இடங்களில் மழை

0
தமிழகத்தில் சில இடங்களில் மழை

தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது தமிழக மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

சென்னை: தமிழக நகரங்களில் வசிப்பவர்களை, கடும் வெய்யில் வாட்டி வரும் நிலையில், தேனி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இன்று (செவ்வாய்) மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் சில இடங்களில் மழை

இந்த வருடம் கோடை மழை அதிகம் பெய்திருக்காத நிலையில்,  இந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும்  மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டிய சில இடங்களில்

வெப்ப சலனத்தால் மழை பெய்து வருகிறது, இது மேலும் சில தினங்களுக்கு சில மாவட்டங்களில் தொடரும்”, எனவும்  ,

இன்று தமிழகத்தின் விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில்

லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரனமாக வரும் வாரங்களில்

வெய்யிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் எனவும் வாநிலை ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த செய்தி கொரோனாவல் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் தமிழக மக்களுக்கு சற்று ஆருதல் அளிப்பது போல் உள்ளது .

3

GV Prakash Baby Photo: ஜிவி பிரகாஷ் குழந்தையின் பெயர்?

0
GV Prakash Baby Photo

GV Prakash Baby Photo: ஜிவி பிரகாஷ் குழந்தையின் பெயர் என்ன? சைந்தவி-ஜிவி பிரகாஷ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. saindhavi baby photo.

ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார்.

கடந்த 2013-ல் பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜிவி இசையில் சைந்தவி பல பாடல்களை பாடியிருக்கிறார்.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜிவி தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷூக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவரின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஆனால் அது குறித்து ஜிவி எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை.

குழந்தையின் பெயர் பிறப்பதற்கு முன்பே முடிவு செய்துள்ளனர். இருப்பினும் பெயரை இன்னும் வெளியில் கூறவில்லை.

மேலும், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடல் நேற்று 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக வந்த சூரரைப் போற்று மேக்கிங் வீடியோவும் 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது.

தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன், 4ஜி, ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர், காதலிக்க யாருமில்லை, காதலை தேடி நித்யா நந்தா, அடங்காதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

3

ஹைதரபாத் டூ சென்னை: 600 கி.மீ. பைக்கிலேயே வந்த தல அஜித்!

0
Ajith Hyderabad To Chennai Bike Travel

Thala Ajith Bike Travel From Hyderabad; ஹைதரபாத் டூ சென்னை: 600 கி.மீ. பைக்கிலேயே வந்த தல அஜித்! ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கிட்டத்தட்ட 600 கி.மீ தூரம் பைக்கிலேயே அஜித் வந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

அஜித் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு 600 கிமீ தூரம் பைக்கிலேயே பயணம் செய்து வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரம் தல அஜித். இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபர், சமையலில் வித்தகர், ஒரு மெக்கானிக், பைலட் லைசன்ஸ் பெற்றவர், துப்பாக்கி சுடும் திறமை கொண்டவர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார்.

இன்றைய இளைஞர்களுக்கு அஜித் ஒரு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். அவரது தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றால் புகழின் உச்சிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அஜித் ஹைதராபாத்திலிந்து சென்னைக்கு கிட்டத்தட்ட 600 கிமீ தூரம் பைக்கிலேயே கடந்து வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

ஏன் அப்படி செய்தார்? எதற்காக என்று கேள்வியும் வரும் நிலையில், வலிமை படத்திற்காக அப்படி செய்துள்ளார்.

ஆம், இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 60ஆவது படம்.

போலீஸ் கதையை மையப்படுத்தி இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

அண்மையில், சென்னையில் நடந்த வலிமை படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பின் போது அஜித் பைக் ரேஸ் செய்த வீடியோ, புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அதற்கு முன்னதாக முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

அங்கு அஜித் பைக் ஓட்டும் காட்சியை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பின் கடைசி நாளில், காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்தவுடன் அஜித்துக்கு சென்னை திரும்ப விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதனை ரத்து செய்யும்படியும், தான் சென்னைக்கு பைக்கிலேயே செல்வதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது உதவியாளர்கள் கொஞ்சம் பயந்துள்ளனர்.

ஆனால், தல அஜித் பைக் ரேசர் என்பதால், சிட்டா பறந்து வந்துள்ளார். அதுவும், 600 கிமீ தூரம் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்துள்ளார்.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக ஆன நிலையில், தற்போது தான் அஜித்தின் பைக் ரேஸ் தகவல் வெளியாகி வருகிறது.

இது போன்று இன்னும் எத்தனையோ தகவல்கள் வெளியாகாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

3

விஜயகாந்த்; கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்

0
விஜயகாந்த்

விஜயகாந்த்; கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன். தானாக முன்வந்து உதவும் தே.மு.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனா பாதிப்பால் உயிரழந்தவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூர் பகுதியில் ஒரு மருத்துவர் இறந்த பொழுதும் இதே போன்று தான் நடந்தது.

இடையே மற்ற சில இடங்களிலும் கடைபிடித்து வருகின்றனர். சில ஊர்களில் கொரொனாவல் குணமடைந்தோரை ஊரில் சேர்க்கவும் மறுக்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை புதைக்க தான் இடம் தருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். கால்நடைகளை கூட முழுமனதோடு அடக்கம் செய்த நாம் இப்படி நடந்துகொள்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களை தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அடக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

3

செல்ல நாய்க்குட்டியுடன் செல்ஃபி எடுத்த கீர்த்தி சுரேஷ்!

0
Keerthy Suresh Selfie With Dog

Keerthy Suresh Selfie With Pet Dog; செல்ல நாய்க்குட்டியுடன் செல்ஃபி எடுத்த கீர்த்தி சுரேஷ்! நடிகை கீர்த்தி சுரேஷ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு நாய்க்குட்டியுடன் செல்ஃபி எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாய்க்குட்டியுடன் செல்ஃபி எடுத்த கீர்த்தி சுரேஷின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் சினிமா பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே பிஸியாக இருக்கின்றனர்.

கொரோனா லாக்டவுனில் சினிமா பிரபலங்கள் பலரும், சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, போட்டோஷூட் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஜிம்மில் இருக்கும் போது நாய்க்குட்டியுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், எனது பையனுக்கு போர் அடிக்கும்போது, நான் அதை பார்த்து சந்தோஷப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் பையன் என்று குறிப்பிட்டது செல்லமாக வளர்த்து வரும் நாய்க்குட்டி. அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

அதர்வாவின் த்ரோபேக் பிக்சர்: வைரலாகும் விஜய் அண்ட் அதர்வா புகைப்படம்!

0
Atharva Throwback Picture

Atharvaa Throwback Picture; அதர்வாவின் த்ரோபேக் பிக்சர்: வைரலாகும் புகைப்படம்! அதர்வா, தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அனைத்து புன்னகைகள் என்று பதிவிட்டுள்ளார்.

அதர்வாவின் த்ரோபேக் பிக்சர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் அதர்வாவும் ஒருவர். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பாலாவின் பரதேசி படம் அதர்வாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.

ஹீரோவை வளர்த்துவிடுவதில் பாலா முக்கிய பங்கு வகிக்கிறார். ஆம், விக்ரமுக்கு சேது படத்தை கொடுத்ததும் அவரே.

ஆனால், இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Atharvaa Throwback Picture

பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதர்வா, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, கணிதன், 100, இமைக்கா நொடிகள், இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, பூமராங் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குருதி ஆட்டம், தள்ளி போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பத்திரிக்கையாளர் ரிங்கு குப்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு பிடித்த புகைப்படம் என்று அதர்வாவின் த்ரோபேக் பிக்சரை பகிர்ந்துள்ளார்.

இதனை ரீடுவிட் செய்த அதர்வா, எனக்கு பிடித்த புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு டுவிட்டில் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அனைத்தும் புன்னகைகள் என்று பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் விஜய் மாஸ்டர் படத்தில் என்ன கெட்டப்பில் இருக்கிறாரோ அதே கெட்டப் கொண்ட ஹேர்ஸ்டைலுடனும், தாடியுடனும் இருக்கிறார்.

இதை வைத்து பார்க்கும் போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இரு குழந்தைகள் ஒரே புகைப்படத்தில் இருக்கிறார்கள் என்று பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பசிக்காக கரு நாக பாம்பை வேட்டையாடிய இளைஞர்கள்; தீர்ந்த பசி; வந்தது வினை

0
பசிக்காக கரு நாக பாம்பை

பசிக்காக கரு நாக பாம்பை வேட்டையாடிய இளைஞர்கள்; தீர்ந்த பசி; வந்தது வினை , சாப்பாடு இல்லாததால் பாம்பை வேட்டையாடி தின்ற அருணாச்சல் பிரதேச இளைஞர்கள் கைது.

அருணாச்சல் பிரதேச இளைஞர்கள் காட்டிற்குள் சென்று கரு நாகப் பாம்பை வேட்டையாடி அதை போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

நாடே ஊரடங்கில் இருக்கும் நேரத்தில் இது போன்ற சேட்டை செயல்கள் பெரும்பாலானோர் செய்து வருகின்றனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் தவளை மற்றும் பூச்சிகளை உண்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது அருணாசலப் பிரதேசத்தில் மூன்று இளைஞர்கள் பாம்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயன்றுள்ளனர்.

அவர்கள் கருநாகத்துடன் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனதால் போலீஸ் வலையில் சிக்கினார்கள். இவர்களை போலீஸ் கைது செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாகப் பேசிய அந்த இளைஞர்கள், `சாப்பாட்டுக்கு அரிசி இல்லாத காரணத்தால் காடுகளில் உணவுக்காகத் தேடி அலைந்ததாகவும், அதன்பிறகு இந்தப் பாம்பை உணவுக்காக வேட்டையாடியதாகவும்’ கூறியுள்ளனர்.

அனைத்து மாநிலங்களுமே மக்களுக்கு வேண்டிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக கொடுத்து வரும் நிலையில் அதையே தான் அருணாச்சல பிரதேச மாநிலமும் கூறியுள்ளது.

3