Home Blog Page 130

Ponmagal Vandhal: கலைகிறதே கனவே லிரிக் வீடியோ வெளியீடு!

0
Kalaigiradhey Kanave Lyric Video

Kalaigiradhey Kanave Lyric Video; கலைகிறதே கனவே லிரிக் வீடியோ வெளியீடு! ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் கலைகிறதே கனவே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தின் கலைகிறதே கனவே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில், இவருடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.

த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள கலைகிறதே கனவே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உமா தேவி பாடல் வரிகள் அமைத்துள்ளார். கோவிந்த் வசந்த் கலைகிறதே கனவே பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடத்தில் கே பாக்யராஜின் மகளாக ஜோதிகா நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில், இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆசியாவில் கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை தொட்டது

0
ஆசியாவில் கொரோனா

ஆசியாவில் கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை தொட்டது. சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தான் அதிகம் பாதித்து வருகிறது.

இதில் அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் இதுவரை 3.95 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர்.

ஆசியாவில் புதிதாக 12,500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 319 பேர் பலியாகினர். இதனால் மொத்த பாதிப்பு 3,95,657 ஆகவும், மொத்த பலி 15,105 ஆகவும் அதிகரித்தது.

ஆசியாவில் அதிக பாதிப்புகளை துருக்கி (90,980), இரான் (83,505), சீனா(82,747) ஆகிய நாடுகள் சந்தித்துள்ளன. இந்தியாவில் பாதிப்பு 18,539 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் 8,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 592 பேர் மற்றும் பாகிஸ்தானில் 176 பேர் உயிரழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

வடகொரியா கொரோனா; உண்மையை மறைக்கிறாரா கிம் ஜாங்க் உன்

0
வடகொரியா கொரோனா
VLADIVOSTOK, RUSSIA - APRIL, 25 (RUSSIA OUT) North Korean Leader Kim Jong-un speaks during the Russia - North Korea Summit on April 25, 2019 in Vladivostok, Russia. North Korean Leader Kim Jong-un is visiting Russia for the first time. (Photo by Mikhail Svetlov/Getty Images)

வடகொரியா கொரோனா; உண்மையை மறைக்கிறாரா கிம் ஜாங்க் உன், வடகொரியா நாட்டில் கொரோனா பரவுவதை மறைக்கும் கிம் ஜாங்க் உன்.

வடகொரியாவில் கொரோனா பரவுவதை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்க் உன் மறைப்பதாக ஊடங்கங்கள் சந்தேகிக்கின்றன.

கொரோனா தொற்று வந்த ஒருவரையும் சுட்டு கொன்றதாக கூறப்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தொற்றினால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.

அந்த தருணங்களிலும் வேண்டிய மருத்துவ உதவிகளும் உபகரணங்களும் வழங்காமல் வெறும் தெர்மோமீட்டர் கொண்டு பரிசோதித்ததாக அந்நாட்டு மருத்துவர் சொய் ஜுங் ஹுன் தெரிவித்துள்ளார்.

தற்போது கூட, வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அதை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், மறைத்து வருவதாகவும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

வட கொரியாவில், 24 லட்சம் பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என, சர்வதேச மருத்துவ நிபுணர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

3

தல அஜித்தை பாலோ பண்ணும் மாளவிகா மோகனன்: வைரலாகும் பைக் ரேஸ் வீடியோ!

0
Malavika Mohanan Bike Race Video

Malavika Mohanan Bike Race Video; தல அஜித்தை பாலோ பண்ணும் மாளவிகா மோகனன்: வைரலாகும் பைக் ரேஸ் வீடியோ! அஜித் மாதிரி பைக் ரேஸ் செய்யாவிட்டாலும், ஏதோ அவரைப் போன்று வரவேண்டும் என்ற ஆசையில் பைக் ரேஸ் செய்த மாளவிகா மோகனனின் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன் பைக் ரேஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரம் தல அஜித். இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபர், சமையலில் வித்தகர், ஒரு மெக்கானிக், பைலட் லைசன்ஸ் பெற்றவர், துப்பாக்கி சுடும் திறமை கொண்டவர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார்.

இன்றைய இளைஞர்களுக்கு அஜித் ஒரு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். அவரது தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றால் புகழின் உச்சிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அஜித் மாதிரி வரவில்லை என்றாலும், அவரது ஸ்டைலை மட்டும் பின்பற்றலாம் என்று அவரைப் போன்று மாளவிகா மோகனன் பைக் ரேஸ் செய்ய கற்றுக் கொண்டு வருகிறார்.

ஆம், அவர் பைக் ரேஸ் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிப்பது என்னவோ விஜய் படம். ஆனால், பாலோ பண்ணுவது தல அஜித்தின் பைக் ரேஸ் என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர்.

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக் ரேஸ் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதோடு, உள்ளுக்குள் புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தோடு நான் எடுத்த புதிய முயற்சி தான் இந்த பைக் ரேஸ்.

பைக் ரேஸ் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட நான் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் டிராக்கில் பைக் ரேஸ் செய்த வீடியோ காட்சி இது.

என்னால், வேகமாக பைக் ரேஸ் செய்யாவிட்டாலும் கூட, முழு வாழ்க்கையில் வழக்கமாக நான் ஓட்டும் பைக்குகளைப் போன்று ஓட்டினேன்.

இந்த நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாளவிகா மோகனனின் பைக் ரேஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரயிருக்கிறது.

3

21/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

21/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று அன்பாக அனைவரிடமும் இருப்பீர்கள். அதனால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் அதிகமாக இருக்கும் நாளாகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று பெருமைப்படும் அளவிற்கு நற்காரியங்கள் செய்வீர்கள். பணியிடத்தில் மேலதிகாரியிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தில் நன்மதிப்பு கிடைக்கும் நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் கோபத்தை குறைத்து கொள்ள வேண்டிய நாளாகும். தாங்கள் எதிர்பார்த்த அளவு நன்மைகள் எதுவும் கிடைக்காது. பொறுமையாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கடக ராசிபலன்

இன்று உங்களின் உடல்நிலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட சிக்கலான விடயங்கள் அனைத்தும் சரியாகிவிடும். தங்களின் உழைப்பிற்கான ஊக்கத்தொகை கிடைக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய தினம் சமூக சேவைகள் செய்வீர்கள். பலரது அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் நாளாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சேமிக்க பணம் கிடைக்கும் செலவினை குறைத்தால் போதும்.

கன்னி ராசிபலன் 

இன்று தங்களுக்கு தேவையான அனைத்தும் வந்து சேரும். சௌகரியமான நாளாக இருக்க போகிறது. காதல் வசப்படும் நாளாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்றைய தினம் தங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாராத வருகையால் நன்மைகள் கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்களுக்கு சிரமமான நாளாகும். அதிகப்படியான வேலை சுமை காணப்படும். அதனால் சோர்வுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் போட்டிகள் நிறைந்த தினமாக காணப்படும். உங்களின் புத்திசாலித்தனமான காரியத்தால் அதனில் வெற்றி காணலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்கள் பலன்களை தராது.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினத்தில் சோதனைகள் பல வந்து சேரும். அதனை சாதனையாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது. பணியிடத்தில் உழைப்பினை அதிகப்படுத்தவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாளாகும்.

கும்ப ராசிபலன்

இன்றைய நாள் நன்மைகளை கொடுக்கும் நாளாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். கடன் தொல்லைகள் தீரும் நாளாக இருக்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சிறந்த நாளாக இருக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். பலரும் வியக்கும் வண்ணம் நற்செயல்களை புரிவீர்கள். தடைகள் அனைத்தும் விலகி செல்லும். உத்தியோகத்தில் உயரும் நாளாக இருக்கும்.

21/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

மீரா மிதுன் கவர்ச்சி போட்டோஷூட்: வைரலாகும் புகைப்படம்!

0
Meera Mithun Photoshoot

Meera Mithun Photoshoot; மீரா மிதுன் கவர்ச்சி போட்டோஷூட்: வைரலாகும் புகைப்படம்! பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மீரா மிதுன் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபமானவர் நடிகை மீரா மிதுன். ஆம், ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

அதில் முக்கியமான படம் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தில் நடித்த நடிகர் கலையரசனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

சர்ச்சைக்கு பேர் போனவர் என்று மீரா மிதுனை பலரும் விமர்சிக்கின்றனர். ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதை விசாரிக்க போலீசார் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர். இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுனின் போல் ஆடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வளவு ஏன், தான் அரசியலுக்கு வருவதாகவும், நான் தான் 2021 ல் தமிழக முதல்வர் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த சர்ச்சையெல்லாம் போதாது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கோபத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார்.

தற்போது ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என்று குறிப்பிட்டு 3 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், 300 பேர், 400 பேர், 500 பேர், 1000 பேர் என்று மீரா மிதுன் அக்கவுண்டை ரிப்போர்ட் செய்தால் அக்கவுண்டே பயன்படுத்த முடியாது. அப்போ அதை செய்யுங்க என்று விமர்சித்துள்ளனர்.

3

அப்பாவான ஜிவி பிரகாஷ்: தாயும் சேயும் நலம்!

1
GV Prakash Blessed With Girl Baby

GV Prakash; அப்பாவான ஜிவி பிரகாஷ்: தாயும் சேயும் நலம்! ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜிவி இசையில் சைந்தவி பல பாடல்களை பாடியிருக்கிறார்.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜிவி தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷூக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் டுவிட்டர் மூலகாம வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடல் நேற்று 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக வந்த சூரரைப் போற்று மேக்கிங் வீடியோவும் 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது.

தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன், 4ஜி, ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர், காதலிக்க யாருமில்லை, காதலை தேடி நித்யா நந்தா, அடங்காதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

3

அம்மில அரச்சு ரசம் வைக்கும் இயக்குநர் சீனு ராமசாமி: வைரலாகும் வீடியோ!

0
Seenu Ramasamy Rasam Making Video

Seenu Ramasamy Rasam Making Video; அம்மில அரச்சு ரசம் வைக்கும் இயக்குநர் சீனு ராமசாமி: வைரலாகும் வீடியோ! இயக்குநர் சீனு ராமசாமி அம்மியில் அரைத்து ரசம் வைக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அம்மியில் அரைத்து ரசம் வைக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காலங்களில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களை பிஸியாகவே வைத்திருக்கின்றனர்.

சமையல், பாத்திரம் கழுவது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, உடற்பயிற்சி, யோகா, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாகவே இருக்கின்றனர்.

யாருமே வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியில் வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், அவர் அம்மியில் ரசம் வைப்பதற்கு தேவையான பொருட்களான மிளகு, பூண்டு, சீரகம், வத்தல் ஆகியவற்றை வைத்து அரைக்கிறார்.

அதன் பிறகு அரைத்தததை எடுத்து பாத்திரத்தில் போட்டு ரசம் தயார் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இரண்டிலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

3

அடுத்தடுத்து சாதனை படைக்கும் சூரரைப் போற்று: வெய்யோன் சில்லி 10 மில்லியன் வியூஸ்!

0
Veyyon Silli Song

Veyyon Silli Song; அடுத்தடுத்து சாதனை படைக்கும் சூரரைப் போற்று: வெய்யோன் சில்லி 10 மில்லியன் வியூஸ்! சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

வெய்யோன் சில்லி பாடல் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

வரும் மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெய்யோன் சில்லி பாடலுக்கு விவேக் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடலை பாடியுள்ளார்.

இதற்கு முன்னதாக சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ வெளியான 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா!

0
Nadhiya Family Photo

Nadhiya Family Photo; குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா! நடிகை நதியா குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை நடிகை நதியா வெளியிட்டுள்ளார்.

பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா. 1980 ஆம் ஆண்டுகளில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். ரேகா, ராதா, அம்பிகா ஆகியோர் வரிசையில் நதியாவும் இடம்பெற்றிருந்தார்.

சின்னதம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, நிலவே மலரே, சண்டை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் செட்டிலானார்.

இவர்களுக்கு சனம், ஜனா ஆகிய மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் களமிறங்கினார். ஆம், தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கி இருந்த நதியா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அதில் அவரது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஜப்பான் சென்று வந்த போது எடுத்த படம்.

முதல் முறையாக தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு நதியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, ஹலோவின் நதியா குடும்ப புகைப்படம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3