Home Blog Page 131

கொரோனா பாதிப்பு: இயக்குநர் பாண்டிராஜ் நிதியுதவி!

0
Pandiraj Corona Donation

Pandiraj Donation; கொரோனா பாதிப்பு: இயக்குநர் பாண்டிராஜ் நிதியுதவி! கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இயக்குநர் பாண்டிராஜ் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் இயக்குநர் பாண்டிராஜ் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா பீதியில் அனைத்து உலக நாடுகளும் என்ன செய்வது என்று தவித்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் தாண்டி கொரோனா எப்படியோ இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியோ ஊரடங்கு உத்தரவு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் என்னவோ அவ்வளவு ஒன்றும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. எனினும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஏப்ரல் 14 ஆம் தேதி விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில், ஃபெப்சி அமைப்பின் தலைவர் நிதி திரட்டி வருகிறார். பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், ராகவா லாரன்ஸ், அஜித், ஜெயம் ரவி, சூர்யா, ஹரிஷ் கல்யாண், சூரி, பிரகாஷ் ராஜ், நயன்தாரா, யோகி பாபு, மனோபாலா என்று பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்துள்ளனர்.

இவர்களது பட்டியலில் தற்போது இயக்குநர் பாண்டிராஜூம் இணைந்துள்ளனர். ஆம், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமிழகத்தில் ஊரடங்கு மே 3 வரை நீடிக்கும்; தமிழக அரசு

0

சென்னை: தமிழக அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை மத்திய அரசு அறிவுறுத்தலின்படி மே 3 வரை நீடிக்க முடிவு செய்துள்ளது.

மே 3 வரை ஊரடங்கு நீடிப்பு 

“தமிழகத்தில், இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகளை பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் படி தொடர்ந்து நீடிக்கபடுவதாகவும்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது”, என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “வைரஸ் பரவல் குறித்து மீண்டும் ஆராய்ந்து, பரவல் குறைந்த பின்பு வல்லுநர்களை கொண்டு  நிலைமைக்கு தக்கபடி முடிவு எடுக்கப்படும்” என அரசு அறிவித்துள்ளது.

22 பேர் கொண்ட வல்லுநர் குழு

இந்த அறிவிப்பு,  நிதி செயலாளர் எஸ். கிருஷ்ணனை தலைமையாக கொண்டு இயங்கும்  22 வல்லுநல்களைக் கொண்ட குழு, முதல்வர் எடப்பாடியிடம் சமர்ப்பித்த இடைகால அறிக்கையை கொண்டு அறிவிக்கப்பட்டது.

முதல்வர் இந்த மதிப்பாய்வை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்தினார்.

3

BetheREALMAN சவாலை ஏற்று வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்த இயக்குநர் ராஜமௌலி!

0
SS Rajamouli be The Real Man Challenge

BetheREALMAN சவாலை ஏற்று கச்சிதமாக செய்து முடித்த இயக்குநர் ராஜமௌலி! ஒரு ஆணால், தனது மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்ய முடியும் என்ற சவாலை இயக்குநர் ராஜமௌலி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

இயக்குநர் ராஜமௌலி சவாலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா லாக்டவுனில் பிஸியாக இருக்கும் பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்கை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் இயக்குநர் ராஜமௌலியும் ஒரு டாஸ்க்கை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி #BetheREALMAN என்ற ஹேஷ்டேக்கில் புது டுவிட்டர் சவாலை அறிமுகம் செய்துள்ளார்.

அதில், ஒரு ஆணால், தனது மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து காட்ட முடியும். இது போன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை தனியாக வேலை செய்ய விடமாட்டார்.

தயவு செய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள் #BetheREALMAN. இதை ஊக்கப்படுத்தி இயக்குநர் ராஜமௌலியை ஒரு வீடியோ வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ராஜமௌலி, வீட்டை சுத்தம் செய்து, ஜன்னல், கதவு ஆகியவற்றை துடைத்து எடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அவர் இந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடித்ததுடன் ஆர்ஆர்ஆர் RRR படத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணுக்கு இந்த சவாலை கொடுத்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர் இயக்குநர் ராஜமௌலியின் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

எரித்தாலும், புதைத்தாலும் கொரோனா பரவாது: விவேக் உருக்கமான வீடியோ!

0
Vivek Request Video

Vivek Video; எரித்தாலும், புதைத்தாலும் கொரோனா பரவாது: விவேக் உருக்கமான வீடியோ! மருத்துவர் உயிரிழந்தால் கூட அவரது இறுதிச் சடங்கை போலீஸ் பாதுகாப்புடன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் விவேக் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் விவேக் மருத்துவருக்காக உருக்கமான வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பீதியில் அனைத்து உலக நாடுகளும் என்ன செய்வது என்று தவித்து வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் தாண்டி கொரோனா எப்படியோ இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியோ ஊரடங்கு உத்தரவு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் என்னவோ அவ்வளவு ஒன்றும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.

எனினும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது. கொரோனாவால் சென்னையில் நரம்பியல் மருத்துவ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எனினும், அவரது உடலை புதைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட போது, வேலப்பங்காட்டு பகுதியில் அவசர அவசரமாக காவல் துறையினர் மற்றும் மருத்துவர்களே உடலை புதைத்த சோகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காமெடி நடிகர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒரு மருத்துவர் உயிரிழந்தால் கூட அவரது உடலை போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சைமன் என்ற நரம்பியல் மருத்துவர் கொரோனாவால் பலியாகியுள்ளார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சிகிச்சை அளித்து, அவருக்கும் தொற்று ஏற்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கத்திலும் அடக்கம் செய்ய முடியவில்லை. அண்ணா நகரிலும் அடக்கம் செய்ய முடியவில்லை.

எங்கு பார்த்தாலும் மக்கள் தகராறு செய்கிறார்கள். கொரோனா தொற்று பரவி விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

சில மருத்துவ உண்மைகள் அவர்களுக்கு புரியவில்லை. உலக சுகாதார அமைப்பும், லாஜிக்கல் இந்தியா.காம் என்ற வெப்சைட்டிலும் சென்று பாருங்கள். கொரோனா வைரஸ் இறந்தவர்களின் உடலில் இருக்காது.

இறந்தவர் உடலில் இருந்து பரவாது. எரித்தாலும், புதைத்தாலும் யாருக்கும் எந்த ஆபத்தும் இருக்காது.

இதனை நான் சரியான தகவல்கள் மூலமாக தெரிந்து கொண்டு, மருத்துவர்களிடமும் கேட்ட பிறகு தான் உங்களிடம் இதனை நான் கூறுகிறேன்.

ஆதலால் யாரும் பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் தற்போது நடமாடும் தெய்வங்கள். அவர்களை நாம் மதிக்க வேண்டும்.

அவர் இருக்கும் போது கூட அவரை கொண்டாடா விட்டாலும், அவர் இறந்த பிறகும் கூட அவரை அவமானப்படுத்தாலம் இருந்தால் போதும். அவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.

குடும்பத்திற்கு இது பெரிய மன வருத்தத்தை அளித்திருக்கும். அவர்களுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்வோம். மனித நேயத்தைக் காப்போம். நன்றி…என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, ஹலோவில் விவேக் வேண்டுகோள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஊரடங்கு: மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் தோழியை திருமணம் கணவர்

0

இந்தியா: இந்தியாவில் கொரோனா காரணமாக, ஊரடங்கு மார்ச் 24 முதல் கடைபிடிக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு உள்ளது. இதனால், வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இச்சம்பவம் குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், பாட்னா நகரத்தில் பலிகாஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் தீரஜ்குமார் இவருக்கு குடியா தேவி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

சிறிது நாட்களுக்கு முன் 60கிமீ தொலைவில் உள்ள தன் மனைவியின் சொந்த ஊரான ஜெகனாபாத் என்ற பாட்னாவின் தெற்கு பகுதிக்கு அவரது கணவர் தீரஜ் அனுப்பிவைத்தார்.

இந்நிலையில் பெற்றோரை காண சென்ற மனைவியை ஊருக்கு திரும்ப வருமாறு தீரஜ்குமார் மனைவியிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அவரது மனைவி அன்று முதல் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சரியான போக்குவரத்து இல்லை எனவும் தன்னால் தீரஜ்குமார் இருக்கும் இடத்திற்கு வரமுடியாது என்றும் கூறினார்.

இதனை கேட்ட தீரஜ் தனது மனைவியை பழிவாங்கும் எண்ணத்தில் அருகாமையில் வசித்த தனது தோழியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார்.

இதனை உடனடியாக அறிந்த தீரஜ்ஜின் மனைவி தனது பெற்றொருடன் சென்று டல்ஹின் பஜார் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் செய்துள்ளார்.

இந்த வழக்கை பற்றி அசோக் குமார் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை இந்த புகாரை ஏற்றுக்கொண்டோம், தற்போது தீரஜ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளோம்” என கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் தெரிவித்தார்.

3

வேற வழியில்லாம கல்யாண வீடியோவ பாத்தேன்: அறந்தாங்கி நிஷாவின் கண்ணீர் வீடியோ!

0
Aranthangi Nisha Viral Video

Aranthangi Nisha Viral Video; வேற வழியில்லாமல் என்னோட கல்யாண வீடியோவ பாத்தேன்: அறந்தாங்கி நிஷாவின் கண்ணீர் வீடியோ! எப்போ பார்த்தாலும் அழுகைதான் வருகிறது என்று திருமண வீடியோவைப் பார்த்த அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.

எப்போது பார்த்தாலும் அழுகைதான் வருகிறது என்று தனது திருமண வீடியோவை வெளியிட்டு அறந்தாங்கி நிஷா உருக்கமாக பேசியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக்கொண்டார். ஸ்டாண்ட் அப் காமெடியைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் வலம் வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். மாரி 2, ஆண் தேவதை, கலகலப்பு 2, கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். அப்படியிருக்கும் போது அறந்தாங்கி நிஷாவும் வீட்டில் தான் இருக்கிறார்.

சரி, வீட்டில் தானே இருக்கிறோம் என்று வேறு வழியில்லாமல் அவரது திருமண வீடியோவை பார்த்துள்ளார். அதைப் பார்த்ததும் அவர் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

இது குறித்து திருமண வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அறந்தாங்கி நிஷா கூறுகையில், வேற வழியில்லாமல் என்னோட திருமண வீடியோவை பார்த்தேன். எப்போ பார்த்தாலும் அழுகைதான் வருகிறது. பொண்ணா பொறந்தா இதை கடந்து தான் போகணும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அறந்தாங்கி நிஷா வைரல் வீடியோ என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

13ஆவது ஆண்டின் திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்!

0
Aishwarya Rai Wedding Anniversary

Aishwarya Rai; 13ஆவது ஆண்டின் திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்! காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் இன்று தங்களது 13 ஆவது ஆண்டின் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் இன்று தங்களது 13 ஆவது ஆண்டின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில், இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் இன்று தனது 13 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறாள்.

தற்போது 13 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

லாக்டவுனில் மதுவிற்ற திரௌபதி பட நடிகர் ரிஷ்வான் கைது!

0
Draupathi Actor Rizwan Arrest

Draupathi Actor Rizwan Arrest; லாக்டவுனில் மதுவிற்ற திரௌபதி நடிகர் ரிஷ்வான் கைது! நாடே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில், திரௌபதி படத்தில் நடித்த நடிகர் ரிஷ்வான் மதுவிற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திரௌபதி பட நடிகர் ரிஷ்வான் மதுவிற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தற்போது வரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 543 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்த திரௌபதி பட நடிகர் ரிஷ்வான் என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்து 60க்கும் அதிகமான மதுபான பாட்டிகல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரிஷ்வான் இதற்கு முன்னதாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இது குறித்து திரௌபதி பட இயக்குனர் மோகன்.ஜி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அவர் என் நண்பர் தான். பெயர் Rizwan Rizu… நடிகர்… பலகுரல் மன்னன்… Sun music முன்னாள் Video jockey.. இது கண்டிக்கத்தக்க ஒரு செயல்..

இதற்கான தண்டனையை அனுபவிக்க போறார்.. நான் எதிர்பாராத ஒரு செய்தி இது..” என மோகன் தெரிவித்துள்ளார்.

3

கொரோனாவை பாத்து ஓடி ஒழிந்த ஸ்ரீகாந்த்: வைரலாகும் வீடியோ!

0
Srikanth Corona Advice

Srikanth Corona Advice; கொரோனாவை பாத்து ஓடி ஒழிந்த ஸ்ரீகாந்த்: வைரலாகும் வீடியோ! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரே வெளியில் வராமல் இருக்கும் போது ஸ்ரீகாந்த் மட்டும் ஜாலியாக பைக் சாவியை எடுத்து வெளியில் புறப்பட்ட நிலையில், கொரோனாவை பாத்து ஓடி ஒழிந்துள்ளார்.

கொரோனாவை பாத்து ஓடி ஒழிந்த ஸ்ரீகாந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக தற்போது வரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 543 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாரெல்லாம் வீட்டை விட்டு வெளியில் செல்கிறார்களோ அவர்களை எல்லாம் கொரோனா தாக்கும் என்று கூறி ஸ்ரீகாந்த் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வெளியில் புறப்படும் ஸ்ரீகாந்த் கதவை திறந்து வெளியில் எட்டிப் பார்க்கும் போது கொரோனா இருக்கிறது என்று கூறி கதவை சாத்திவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வருகிறார்.

எங்க வீட்டுக்கு வெளியே மட்டும் இல்ல, யார் வீட்டுக்கு வெளியேவும் கொரோனா நின்றுகொண்டிருக்கலாம்.

கொரோனா பாசிட்டிவ் இருக்கும் ஒரு ஆள் வெளியில் சுற்றினால் அந்த ஒரு ஆளிடமிருந்து ஒரு மாதத்திற்கு 406 பேருக்கு அது பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த 406 பேர் வெளியில் சுற்றினால் 406x406x406x…என போய்க்கொண்டே இருக்கும்.

சின்ன வயதில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் போது தொட்டால் அவுட் என்றபடி தான் கொரோனாவும்.

வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் மட்டுமே கொரோனாவிற்கு முடிவு கட்ட முடியும். சும்மா ஹாலிடே என்று வெளியில் சுற்றினால்…..என்று கூறுகிறார்.

இவரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அந்த வீடியோவில் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் காலமானார்!

0
Tom and Jerry Director Passed Away

Tom and Jerry Gene Deitch; டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் காலமானார்! புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி என்ற கார்ட்டூன் தொடரை இயக்கிய இயக்குனர் ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவு காரணமாக 95 ஆவது வயதில் காலமானார்.

டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டெய்ச் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழன்று காலமானார்.

குட்டி எலி, பூனையை வைத்து குழந்தைகளை கவரும் வகையில் வேடிக்கை நிறைந்த டான் அண்ட் ஜெர்ரி என்ற கார்ட்டூன் தொடரை வில்லியன் ஹன்னா, ஜோசப் பர்பெரா ஆகியோரால் கடந்த 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஹன்னா மற்றும் பர்பெரா இருவருமே இந்த கார்ட்டூன் தொடரை இயக்கி வந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து ஜீன் டெய்ச் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரை இயக்கினார்.

இந்த தொடரைத் தவிர பாப்பாய் எனும் கார்ட்டூ தொடரின் சில எபிசோடுகளையும் ஜீன் டெய்ச் இயக்கியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் விமானப்படையில் விமானியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அனிமேஷன் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி அந்தப் பணியை தொடங்கியுள்ளார்.

கடந்த 1960 ஆம் ஆண்டு மன்றோ என்ற கார்ட்டூன் குறும்படத்திற்காக ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கியதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு விண்ட்சர் மெக்காய் விருதும் பெற்றுள்ளார்.

டாம் அண்ட் ஜெர்ரி என்ற கார்ட்டூன் தொடரின் 13 எபிசோடுகள் வரை ஜீன் டெய்ச் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக 95 ஆவது வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு கடந்த வியாழன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3