Home Blog Page 132

தவறான ஆய்வு முடிவுகள் இஸ்ரேல் ஆய்வகம் மூடல்

0

ஜெருசேலம்: இஸ்ரேல், தவறான முடிவு தந்த கொரோனா ஆய்வகத்தை மூடியது. இங்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 19 பேருக்கு தவறான முடிவுகளை இது கொடுத்திருக்கிறது.

இந்த ஆய்வகம் மத்திய இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மான் அறிவியல் நிறுவனம் (WIS)த்தில் நிறுவப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இது ஏப்ரல் 10 முதல் செயல்பாட்டுக்கு வந்த ஆய்வகம் என தெரிகிறது.

சோதனை முடிவு தவறு

இந்த ஆய்வத்தில் ஏப்ரல் 17இல் கொரோனா உறுதி என்று அறிவிக்கப்பட்டு  தெற்கு இஸ்ரேலில் இருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரும் ஆரோக்கியமானவர்கள் என பின்பு கண்டறியப்பட்டது.

இதே போன்று வேறு இரண்டு மருத்துவமனைகளிலும் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வகம் தெரிவிக்கையில் அரசு நியமித்த அதிகாரிகளால்  மீண்டும் ஆய்வு முடிவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே கொரோனா நோயாளிகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள் என விளக்கம் அளித்தது.

இதற்கு அரசும் பொறுப்பேற்கவேண்டும் என அந்த ஆய்வகம் தெரிவித்ததை அடுத்து அரசும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது

பிறகு அரசு தரப்பில் இந்த ஆய்வகம் தகுந்தமுறையில் சீர்அமைக்கப்பட்டவுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது வரை இஸ்ரேலில் 13,491 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 172 பேர் இந்த நோய் தாக்குதலில் இறந்துள்ளனர்.

3

கொரோனா வெறும் டிரைலர் தான் இன்னும் 1500 வைரஸ் மாதிரிகள் இருக்கிறதாம்

0
கொரோனா

கொரோனா வெறும் டிரைலர் தான் இன்னும் 1500 வைரஸ் மாதிரிகள் இருக்கிறதாம்; அதிர்ச்சி தகவல், சீனாவின் ஆய்வகங்களில் கொரோனா போன்று இன்னும் 1500 வைரஸ் மாதிரிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.

உலகையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரஸ் வவ்வாலில் இருந்து பரவவில்லை. சீனாவின் ஆய்வகங்களில் இருந்து தான் பரவி இருக்கிறது என்ற தகவல் பரவி வருகிறது.

சீனாவில் இருக்கும் வைராலஜி இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் வுஹான் தான் கொரோனா வைரசின் பிறப்பிடம் அங்கு இருந்து வைரஸ் வெளி வந்து இருக்கிறது என கூறி வருகின்றனர்.

ஆசியாவில் பாதுகாப்பு அதிகமுள்ள ஆய்வகம் இது. இது குறித்து விசாரிக்க அமெரிக்காவிலிருந்து புலானாய்வு துறை ஒன்று செல்ல தயாராக உள்ளது.

இவர்கள் அங்கு சென்றால் மட்டுமே உண்மை புலப்படும். இது குறித்து சீனா அரசு தெரிவிக்கையில், கொரொனா வைரஸ் எப்படி உருவாகி பரவியது என்பது தெரியவில்லை.

தங்களது ஆய்வகங்களில் இருந்து கொரோனா பரவிய குற்றச்சாட்டு மற்றும் 1500 வைரஸ் மாதிரிகள் குறித்த சர்ச்சைகளை முற்றிலும் மறுக்கிறது.

3

இப்போ மட்டுமல்ல எப்போதுமே மே 1 தல திருவிழா!

0
May 1st Thala Thiruvizha

Thala Ajith; இப்போ மட்டுமல்ல எப்போதுமே மே 1 தல திருவிழா! அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மே 1 தல திருவிழா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இப்போது மட்டுமல்ல தல அஜித்துக்கு எப்போதும் மே 1 தல திருவிழாதான்.

அஜித்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்திற்கு வளர்ந்துள்ளார்.

அவரை தூற்றியவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தனது முயற்சி, தன்னம்பிக்கை இதை மட்டுமே வைத்து சினிமாவில் சாதித்து வருகிறார்.

அதோடு கோடிக்கணக்கான ரசிகர்களை தனது பாதுகாப்பாக வைத்திருக்கிறார். அஜித்துக்கு ஏதாவது ஒன்றால் துடித்துப் போகும் ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட இருக்கிறார். இதன் காரணமாக தற்போது மே 1 தல திருவிழா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அதோடு டுவிட்டர் அக்கவுண்ட் இல்லாத அஜித் ரசிகர்கள் உடனடியாக டுவிட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரு சாதாரண டுவிட்டர் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 1,17,000 வரை டுவீட் செய்துள்ளனர். அதோடு வலிமை ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

வரும் 24 ஆம் தேதி அஜித் தனது 20 ஆவது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் வலிமை. போலீஸ் கதையை மையப்படுத்தி இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வலிமை திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

3

சினிமாவில் சிறந்த ஜோடி யார்? உங்களது கருத்துக்களையும் பதிவிடலாம்!

0
Vijay Samantha Best On Screen Pair

சினிமா என்று எடுத்துக் கொண்டால் மாஸ் ஹீரோக்கள் ஒரு சிலரே இருப்பார்கள். முன்னணி நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள், புதுமுக நடிகர்கள் என்று ஏராளமானோர் இருப்பார்கள்.

மாஸ் ஹீரோக்களில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் இவர்களை கூறலாம். முன்னணி நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோரை குறிப்பிடலாம்.

இதே போன்று நம்பர் ஒன் நடிகை லேடி சூப்பர் ஸ்டார். முன்னணி நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், த்ரிஷா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது பெயரை குறிப்பிடலாம்.

படங்களில் மாஸ் ஹீரோக்களுக்கு நம்பர் ஒன் நடிகை, முன்னணி நடிகைகள் ஜோடியாக நடிப்பது வழக்கம்.

அது படத்தின் கதைக்கு ஏற்ப மாறுபடும். அதோடு, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களின் கையில் தான் ஹீரோயின் தேர்வு இருக்கிறது.

குடும்பக் கதை, கிளாமர் கதை, ரொமாண்டிக் கதை என்று படத்தின் கதைக்கு ஏற்பவும் ஹீரோயின் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது போன்ற கதையில் சமந்தா, தமன்னா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, த்ரிஷால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து விட்டனர்.

தற்போது ஹலோவில் BestOnScreenPair என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில், அஜித் – நயன்தாரா, அஜித் – த்ரிஷா, அஜித் – காஜல் அகர்வால், அஜித் – தமன்னா ஆகியோரது கூட்டணி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இவர்களது பட்டியலை குறிப்பிட்டு இதில் சிறந்த ஜோடி யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதே போன்று விஜய் – சமந்தா, விஜய் – த்ரிஷா, விஜய் – அசின், விஜய் – காஜல் அகர்வால், விஜய் – தமன்னா, விஜய் – நயன்தாரா ஆகியோரது கூட்டணி பட்டியலும் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளது.

பொதுவாக விஜய்க்கு சிறந்த ஜோடியாக இருப்பது முதலில் சமந்தா. அதன் பிறகு காஜல் அகர்வால்.

விஜய் மற்றும் சமந்தா ஆகியோரது கூட்டணியில் தெறி, கத்தி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. 3 படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதே போன்று காஜல் அகர்வால் – விஜய் கூட்டணியில் ஜில்லா, துப்பாக்கி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கனடாவில் துப்பாக்கிச்சூடு குறைந்தது 16 பேர் உயிரழப்பு

0
கனடாவில் துப்பாக்கிச்சூடு

கனடாவில் துப்பாக்கிச்சூடு குறைந்தது 16 பேர் உயிரழப்பு, போலீஸ் வேடத்தில் வந்து கனடாவின் கிராமப்புற பகுதியில் துப்பாக்கி சூடு பெண் போலீஸ் உட்பட 16பேர் உயிரழப்பு.

கனடாவின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் என்பீல்ட் என்ற பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளது.

காவலர் சீருடையில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகியனர்.

23 வருடம் காவல்துறையில் பணியாற்றிய பெண் போலீஸ் ஒருவரும் சுட்டு கொல்லப்பட்டார். போலீஸ் வாகனத்தில் பயணித்த அந்த மர்ம நபரை போலீஸ் சுட்டு பிடித்தனர்.

3

தமிழக ஊரடங்கு குறித்த முக்கிய முடிவுகள்; அமைச்சர்கள், முதலமைச்சர் ஆலோசனை இன்று

0

தமிழக ஊரடங்கு குறித்த முக்கிய முடிவுகள்; அமைச்சர்கள், முதலமைச்சர் ஆலோசனை இன்று, ஊரடங்கு நீட்டிப்பு, தகர்ப்பு பற்றி முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

தற்போது கேரளா அரசு ஊரடங்கை தகர்த்தி சில கட்டுப்பாடுகளுடன் கேரளா மாநிலத்தை செயலாபடுத்தி வருகிறது.

அதே போல் தமிழக அரசும் சில கட்டுப்பாடுகளுடன் இயல்பு நிலைக்கு மாற்றலாம் என யோசித்து வருகிறது.

50 சதவீத ஊழியர்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள், கொரியர் சேவைகள் நடைபெறலாம்.

தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் கடைகள், நெடுஞ்சாலை ஓட்டல்கள்,

தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி வழங்க உள்ளது.

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றாலும், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தமிழக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த குழு எடுக்கும் முடிவின் பேரில் தான் தமிழகத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். தமிழகத்தில் இது வரை கொரோனோவால் 1395பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 15 பேர் உயிரழந்துள்ளனர்.

3

டிராக்டரில் உழவு ஓட்டும் பிரபல நடிகரின் மகள் கீர்த்தி பாண்டியன்!

0
Keerthi Pandian

Keerthi Pandian; டிராக்டரில் உழவு ஓட்டும் பிரபல நடிகரின் மகள் கீர்த்தி பாண்டியன்! லாக்டவுனில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இளம் நடிகை கீர்த்தி பாண்டியன் விவசாயம் செய்து வருகிறார்.

டிராக்டரில் உழவு ஓட்டும் நடிகை கீர்த்தி பாண்டியனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், தும்பா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஹெலன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகும், இந்தப் படத்தில் அருண் பாண்டியனும் நடிக்கிறார். அப்பா, மகள் பாச உறவை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலையில் நிலையில், கீர்த்தி பாண்டியன் மட்டும் விவசாயம் செய்து வருகிறார்.

ஆம், டிராக்டரை வைத்து உழவு ஓட்டும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு, கொரோனா விடுமுறை என்பதால், சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது தனிமைப்படுத்தப்பட்ட இடம்.

சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று ஆகாது. நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா

0
கொரோனாவை கட்டுப்படுத்தி

கொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா, இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுக்கொள் கொண்டுவந்த முதல் மாநிலம் கேரளா தான்.

இந்தியாவில் முதலில் கேரளா பரவியதும் கேரளா தான். தற்போது வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் இயல்நிலைக்கு கொண்டு வார அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்ட கேரளா மாநிலம், நான்கு மாநிலங்களை தவிர அனைத்து இடங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப இருக்கிறது.

நான்கு மண்டலங்களில், ஆரஞ்சு – ஏ, ஆரஞ்சு- பி, ஆகிய மண்டலங்களில் பத்தானந்திட்டை, எர்னாகுளம், கொல்லம், ஆழப்புல, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு மற்றும் திருச்சூர் மாவட்டங்கள் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

ஒற்றை இலக்க பேருந்துகள் இயங்கலாம் எனவும் பிற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கதைகளும் இரவு 7 மணி வரை இயங்கலாம். மேலும் சலூன் கடைகள் சனி, ஞாயிறு நாட்களில் இயங்க அனுமதி அளித்துள்ளது கேரள அரசு.

3

விதவிதமா சமைச்சு கொடுத்த பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய ஆர்யா!

0
Sayyeshaa Cake Cooking

Sayyeshaa Cooking; விதவிதமா சமைச்சு கொடுத்த பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய ஆர்யா! நடிகை சாயிஷா தனது கணவர் ஆர்யாவுக்கு விதவிதமாக சமைத்துக் கொடுக்க பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஆர்யா முத்தம் கொடுத்துள்ளார்.

விதவிதமாக சமைத்துக் கொடுத்த மனைவி சாயிஷாவிற்கு நடிகர் ஆர்யா பரிசாக முத்தம் கொடுத்துள்ளார்.

லாக்டவுனில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் உரையாடுவது, சமையல் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, உடற்பயிற்சி செய்வது, யோகா என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில், திருமணமாகி ஓராண்டு ஒரு மாதம் நிலையில், தனது கணவர் ஆர்யாவிற்கு விதவிதமாக சமையல் செய்து கொடுத்து நடிகை சாயிஷா அசத்தியுள்ளார்.

ஆம், சிக்கன், சீஸ் கேக், பிரியாணி, கப் கேக், சோக்ஸ் பேஸ்ட்ரி என்று விதவிதமாக சமையல் செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

தன் அம்மாவிடம் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் சாயிஷா தற்போது லாக்டவுன் நேரத்தில் கணவரிடம் காண்பித்து முத்தம் பெற்று வருகிறார்.

இந்தப் புகைப்படங்களை எல்லாம் சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3

இந்தியாவை எப்படி மீட்டெடுப்பது-கமலஹாசன்

0

கொரோனா வைரஸ்க்கு பிறகு இந்தியாவை புனரமைப்பது  எப்படி என்று நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமலஹாசன் ட்விட் செய்துள்ளார்.

https://platform.twitter.com/widgets.js

 

3