ஐபிஎல் போட்டியின்போது கங்குலி என்னிடம் ‘ஒரே நாளில் உங்கள் வாழ்க்கை மாறிவிட்டது என்று கூறினார்’ என்று பிரண்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ ஐபிஎல் போட்டியை அறிமுகம் செய்தது.
இது இந்திய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் புதிதாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு முதல் போட்டியில் கல்கத்தா மற்றும் பெங்களூரு அணி மோதியது.
கொல்கத்தா அணிக்காக பிரன்டன் மெக்கல்லம் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்ஶ்ரீ அந்த ஆட்டத்தில் 77 பந்துகளில் 158 ரன்கள் குவித்து தான் ஒரு அதிரடி வீரர் என்பதை நிரூபித்தார்.
அப்போதெல்லாம் பிரண்டன் மெக்கல்லம் நியூசிலாந்து மிகப்பெரிய வீரர் கிடையாது. ஐபிஎல் போட்டிக்கு பிறகு மிகப்பெரிய ஜாம்பவானாக உருவெடுத்தார்.
இந்த 158 ரன்கள் ஐபிஎல் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு என்றுமே மறவாத ஒன்றாக இருக்கும். ஐபிஎல் முதல் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.
இதுகுறித்து பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது :
“என்னால் ஏராளமான ரியாக்ஷன் களை ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் கங்குலி அன்று இரவு வந்து சொன்னதை என்னால் ஞாபகப்படுத்த முடியும்.
கங்குலி அன்று இரவு என்னிடம் வந்து உங்கள் வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிட்டது என்று சொன்னவுடன் எனக்கு அதற்கு அன்று சரியான அர்த்தம் புரியவில்லை.
தற்போது அதை நினைத்து பார்க்கையில் 100% அதை ஒத்துக் கொள்கிறேன்.
அணி நிர்வாக தலைவர் ஷாருக்கான் என்னிடம் வந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் என்றும் இருப்பீர்கள் என்று கூறினார்.
நான் கொல்கத்தா அணியுடன் விளையாடிய காலத்திலும், வெளியேறி வேறு அணியில் விளையாடிய காலத்திலும், சிறந்த உறவோடு தான் இருந்தோம்.
நான் எப்போதுமே மிகவும் விசுவாசமாக தான் இருந்தேன். எனக்கு கல்கத்தா வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி சொல்லியாக வேண்டும்.
மீண்டும் பயிற்சியாளராக கொல்கத்தா எனக்கு வாய்ப்பு கொடுத்தபோது ஷாருக்கான் என்னிடம் வந்து கொல்கத்தா அணியுடன் என்றும் ஈடுபட்டு இருப்பீர்கள் என்று கூறியது நினைத்துப் பார்க்கிறேன்”
என்றார்
இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தனவரவு அதிகமாக இருக்கும். உற்றார் உறவினர்களினால் மகிழ்ச்சி ஏற்படும். மொத்ததில் பொன்னான நாளாகும்.
இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வு அவசியம் வேண்டிய நாள். இன்று பணம் வீணாக செலவாகும். சற்று கூடுதல் கவனமாக இருக்கவும்.
இன்று தாங்கள் விரும்பும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும். சமூக நற்காரியங்களில் ஈடுபடுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமை மேம்படும்.
இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுதலை குறைக்க வேண்டும். நம்பிக்கையான எண்ணங்கள் வேண்டிய நாளாகும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பதட்டத்தை குறைக்க தியானம் அவசியம் தேவையான நாள்.
இன்று அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும். அதனால் சாதகமான பலன்களை பெறலாம். குடும்பத்தில் சிறு பூசல்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவையாகும்.
இன்று உங்களுக்கு நற்பலன்கள் எதுவும் கிடைக்காது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொடக்கங்கள் எதுவும் வேண்டாம். வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
20/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
Yashika Aannand; கறுப்பு நிற பாவாடை ஜாக்கெட்டுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட யாஷிகா ஆனந்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த கறுப்பு நிற உடையில் பாவாடை ஜாக்கெட்டுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உததரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர். தொழில் துறை முற்றிலும் முடங்கியுள்ளது.
சினிமா, டிவி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அதோடு, வீட்டில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது குறித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் லாக்டவுனில் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி குவித்து வருகிறார்.
தற்போது புதிய கிளாமர் போட்டோவை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
கறுப்பு நிற பாவாடையில் செல்ஃபி எடுத்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 290 கொரோனா பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது இன்னிலையில் இன்று நடைப்பெற்ற கொரோனா சோதனையில்
சென்னையை சேர்ந்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு இந்நோய்தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தமிழ் நாளிதழ் ஒன்றிலும் மற்றொருவர் தமிழ் செய்தி தொலைக்காட்சியிலும் பணிபுரிபவர்கள் என தெரிகிறது.
இன்று மேலும் 105 பேருக்கு தமிழகத்தில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது, சென்னையில் மட்டும் 50 பேருக்கு இந்த நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்து உள்ளது.
KGF 2 Trailer; யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் 2 படத்திற்கு டிரைலர் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் (KGF) படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் யாஷ். கன்னடத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிறக்கும் போது ஏழையாக பிறந்து, சாகும் போது பணக்காரனாகத்தான் சாகணும் என்று அம்மா சத்தியம் வாங்குகிறார்.
தன் அம்மாவின் சத்தியத்திற்காக பணக்காரனாக துடிக்கும் சிறுவன் ராக்கி கேங்க்ஸ்டராக மாறுகிறார். தங்கச்சுரங்கத்தை ஆட்டிப்படைக்கும் வில்லனை கொல்வதற்காக துணிச்சலோடு அவரது இடத்திற்கே செல்கிறார்.
அங்கிருக்கும் ஏழை கொத்தடிமை மக்களைக் கண்டு உணர்ச்சிவசப்படுகிறார். இறுதியில், வில்லனை கொன்று குவிக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படி இயக்கியிருந்தார் இயக்குநர்.
அந்தளவிற்கு படத்தின் காட்சிகள் கட்சிதமாக இருந்தது. ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமெண்ட் என்று எந்த இடத்திலும் குறையில்லாத படமாக கேஜிஎஃப் உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2-ஆம் (KGF 2 Release Date) பாகமும் உருவாகியுள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப் 2 (KGF 2 Release Date) படத்தில் யாஷிற்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும், யாஷிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து ரவீனா டாண்டன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இது குறித்து தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆகையால், கேஜிஎஃப் 2 நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும், அதற்கு முன்பாக டிரைலர் வெளியிடும் திட்டமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படக்குழுவினரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் டிரைலர் எல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்போது எல்லாம் படங்கள் நேரடியாக திரையரங்குகளில் தான் வெளியிடப்பட்டது.
அப்படி வெளியான படங்களை ரசிகர்கள் 100 நாட்களுக்கும் மேலாகவே ஓட வைத்தனர்.
ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலகட்டத்தில் டிரைலர், டீசர், சாங்ஸ், டைட்டில் டீசர் என்று அனைத்தையும் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.
அப்படி வெளியிடும் போதே அதிலுள்ள தவறை கண்டறிந்து சர்ச்சையை ஏற்படுத்திவிடுகின்றனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் நோக்கத்தில் படத்தின் டிரைலரை வெளியிடும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளது.
பழைய முறையை கேஜிஎஃப் 2 படக்குழுவினர் பின்பற்ற திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோல்: கடந்த இருமாதங்களை ஒப்பிடும் பொழுது இன்றய கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்க்கு வந்து உள்ளதாகவும் தற்போது இது 8 பேராக குறைந்து உள்ளதாகவும் கொரிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (KCDC) பிரிவு கூறியுள்ளது.
இந்த 8ட்டில் 5 பேர் வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது.
கடந்த பிப்ரவரி 18 க்கு பிறகு இவ்வாறு ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்புகள் வருவது இதுதான் முதல் முறை எனக் கூறப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,661 ஆக உள்ளது.
தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் இன்று தெரிவிக்கையில் தெங்கொரியாவின் இந்த நிலைப்போல் மற்ற உலக நாடுகளிலும் இந்த வைரஸ் கட்டுக்குள் வர வாய்புள்ளதாகவும்,
இந்த ஆண்டின் துவக்கத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், பிறகு மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் வேகம் காட்ட ஆரம்பித்ததாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சனிக்கிழமை பேசுகையில் கொரோனா வைரஸ்ஸை கட்டுபடுத்துவதில் தென் கொரியா செய்த உதவிகளுக்கு ஊக்கம் தெரிவித்தார்.
Jersey: ஜெர்சி தெலுங்கு திரைப்படம் ஒரு பார்வை! Sports Movie Rewind. Tamil Movie Review For Before Watch Online Download. OTT Platform Movie Review.
ஸ்போர்ட்ஸும் வெற்றியும்:
ஸ்போர்ட்ஸ் என்ற ஒன்றை கதைக்களமாக கொண்டு வந்திருந்த பெறும்பாலான திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.
மேலும், ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் நிச்சயமாக மனதை உருகவைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவற்றுக்கு நாம் நம் கண்ணில் இருந்து கண்ணீரையும் சிந்தியிருப்போம்.
தோல்வியில் இருந்தோ, ஏமாற்றத்தில் இருந்தோ, துரோகத்தில் இருந்தோ கதை புறப்பட்டு வெற்றியில் சென்றடையும் பாணியில்தான் அநேக படங்கள் இருக்கின்றன. இப்போது நாம் காணவிருக்கும் பதிவும் அப்படியான ஒரு திரைப்படத்தை பற்றியதுதான்.
ஆனால் இத்திரைப்படத்தில் மனைவி-கணவன், அப்பா-மகன் என்ற பிணைப்புகளுக்கு இடையே கிரிக்கெட் என்ற விளையாட்டை நிறுத்தி எமொஷனலாக பார்த்த அனைவரையும் கலங்கடித்த படம்தான் ‘ஜெர்சி (Jersey)‘.
2019-ல் தெலுங்கில் வெளிவந்து மீப்பெறும் வெற்றியை தன்வசமாக்கிய ஒரு திரைப்படம்தான் ஜெர்சி(jersey).
தெலுங்கில் ‘natural star’ என்ற பட்டம் பெற்ற ‘நானி‘ அவர்கள் கதாநாயகனாகவும், விக்ரம் வேதா புகழ் சாரதா ஶ்ரீநாத் அவர்கள் கதாநாயகியாகவும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும், சத்யராஜ் அவர்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமில்லாது ஹரிஷ்கலாயாண் முக்கியமான கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
ரோஹித் கம்ரா என்ற சிறுவன் இத்திரைப்படத்தின் ஆதிக்கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதைக்களம்:
கிரிக்கெட்டில் சாதிக்கவேண்டும் என்றிருந்த அர்ஜுன்(நானி) பின்னாளில் கிரிக்கெட்டை விட்டு தன் காதல் மனைவியுடன் கல்யாணம் குடும்பம் என்ற வாழ்வில் ஈடுபடுகிறான்.
இலஞ்சம் வாங்கியதின் காரணத்தினால் அவனிடமிருந்த அரசாங்க வேலையும் பறிபோக மீண்டும் அந்த வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்வியுடன் வக்கீலை பார்க்க அவ்வப்போது அலைந்தவாறும் இருக்கிறான்.
காதல் மனைவி சாரதாவின் சம்பாத்தியத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்க, தன் நானியின் பிறந்தநாளுக்கு டீ-சர்ட் வாங்கித்தர பணம் வேண்டி கிரிக்கெட் மேட்ச் ஒன்றில் விளையாடுகிறான்.
அதற்குப்பின் மகன் நானிக்கு அர்ஜுன் விளையாடுவது பிடித்துப்போக நானிக்காக கிரிக்கெட்டை விளையாடி, தன்னை மீண்டும் இவ்வுலகத்திற்கு நிறுபீக்க போராடும் ஒரு தந்தையின் கதைதான், ஜெர்சி.
மேலும், அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது? அர்ஜுன் சாதித்தரா இல்லையா? போன்றவைதான் மீதிக்கதை.
மிக எளிமையாக கதையை கூறிவிட்டாலும் காட்சியாக திரைப்படம் முழுவதும் அவ்வளவு திருப்திகளை காணமுடிகிறது.
முப்பது வயதுகளில் உள்ளவர் விளையாடும்போது ஏற்படும் சங்கடங்களும் நிராகரிப்புகளையுமே இப்படம் பதிவு செய்தியிருக்கிறது.
மகனும்-தந்தையும்:
அர்ஜுனும் மகன் நானியும் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்ச்சிகள் மெல்ல மெல்ல பெருக்கெடுக்கின்றன.
திரைப்படம் பார்த்த பலருக்கு இப்படியான காட்சிகளில், ‘தனக்கும்-அப்பாவுக்குமான நினைவுகளையும், நிகழ்வுகளையும், தனக்கும்-மகனுக்குமான நிகழ்வுகளையும், நினைவுகளையும்’ நிச்சயம் நியாபகப்படுத்தி சென்றிருக்கும்.
காதல் காட்சிகள் திரைப்படத்தில் அதிகமாக இல்லையென்றாலும், சாரதா செய்யும் செயல்களுக்கு பின்னாலிருக்கும் அன்பை, படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக புரியும்.
சாரதா-அர்ஜீன்-நானி போன்றோருக்கு இடையேயான உரையாடல்கள் பரிமாறல்கள் என அனைத்திலும் எமொஷனல் கணெக்டை நாம் உணரலாம். ஆனால் அந்த எமொஷனல்கள் தீணிக்கப்பட்டிருக்காது அதுவாகவே நிகழ்ந்திருக்கும்.
நானி எனும் நடிகன்:
அர்ஜீனாக நடிகர் நானியின் நடிப்பில் அவ்வளவு தெளிவு. நானியின் ஃபிலிமோகிராபில் நிச்சயம் ஜெர்சி திரைப்படம் மீப்பெறும் மைல்கல்லாக என்றைக்கும் இருக்கும்.
பல காட்சிகளில் தன் மெளனங்களாலும், நடிப்பாலும் திரைப்படத்தை உயர்த்தியிருக்கிறார்.
ஒரு முக்கியமான காட்சியில் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று தனது சந்தோஷத்தை ஒரு சாதிப்பு வெறியை கத்துதல் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
அந்தக்காட்சியை கண்டு பலர் நெகிழ்ந்திருப்பதாக பல சமூகவலைதளங்களில் இன்றளவும் பதிவிட்டு வருகின்றனர்.
இசையமைப்பு:
அனிருத் அவர்கள்தான் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர். மிகவும் பொறுப்புடனும் அதே சமயம் எல்லையை மீறிப்போகாமலும் படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்தியிருக்கிறார். காட்சிகள் பெறும்பாலும் நம்முடன் கணெக்ட் செய்வதற்கு இசை மீப்பெறும் பங்காற்றியிருக்கிறது.
இத்திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்க்கலாம். நிச்சயம் ஏமாற்றம் நிகழ வாய்ப்பிருக்காது. மேலும் இன்றுடன் இத்திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடக்கிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.
Vijayakanth Hair Cut Video; ;விஜயகாந்துக்கு முடி வெட்டி, ஷேவ் செய்த பிரேமலதா: வைரலாகும் வீடியோ! விஜயகாந்துக்கு முடி வெட்டி, ஷேவ் செய்ததோடு, டை அடித்தும், நகமும் வெட்டிவிட்டுள்ளார் அவரது மனைவி பிரேமலதா.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகாந்துக்கு முடி வெட்டி, ஷேவ் செய்த பிரேமலதாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இந்தியா வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் தற்போது 26 நாட்கள் ஆன நிலையில் எல்லாமே பழகிவிட்டது.
இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்போம் என்ற மன நிலைக்கு அனைவரும் வந்துவிட்டனர்.
கொரோனா காரணமாக சாதாரண பெட்டி கடை முதல் பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், நகைக்கடைகள் என்று அனைத்துமே மூடப்பட்டுள்ளது. மு
டி திருத்தம் செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், வீடுகளில் ஒருவருக்கொருவர் முடி திருத்தம் செய்து கொள்கொள்கிறனர்.
அந்த வகையில், தற்போது நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முடி வெட்டி, ஷேவ் செய்து, டை அடித்து, நகமும் வெட்டி விட்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஜயகாந்த் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Suriya; இன்று ஒருநாள் தொலைக்காட்சியை ஆண்ட சூர்யா! நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பழைய படங்கள் இன்று ஒருநாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் இன்றைய டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் மே 1 ஆம் தேதி சூரரைப் போற்று படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.
ஆனால், கொரோனா ஊரடங்கு உத்தரவால், சூரரைப் போற்று ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லாக்டவுனில் பிரபலங்கள், பொதுமக்கள் என்று அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில், இன்று தொலைக்காட்சியில் சூர்யா நடிப்பில் வந்த படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோரது நடிப்பில் வந்த வைரஸ் தொடர்பான படம் 7 ஆம் அறிவு.
இந்தப் படம் ஜெமினி டிவியில் இன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
7 ஆம் அறிவு படம் தெலுங்கு 7th Sense என்ற டைட்டிலில் டப் செய்யப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று தானா சேர்ந்த கூட்டம் தெலுங்கில் கேங் என்ற டைட்டிலில் வெளியானது. இந்தப் படம் ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
சிங்கம் 2 மலையாள தொலைக்காட்சியான கைராலி டிவி பிறபகல் 3 மணிக்கும், சன் டிவியில் இன்று மாலை 6.30 மணிக்கும், பசங்க 2 படம் ஜெயா டிவியில் மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மீண்டும் கைராலி தொலைக்காட்சியில் இரவு 11.30 மணிக்கு சிங்கம் 2 ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக சூர்யா நடிப்பில் வந்த 7th Sense, கேங், பசங்க 2, சிங்கம் 2 ஆகிய 4 படங்கள் இன்றைய டிவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சன் டிவியில் சிங்கம் ஒளிபரப்பு செய்யப்படுவதை முன்னிட்டு #Singam2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
Swathi Reddy Birthday; சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி ரெட்டி பர்த்டே டுடே! ஜெய், சசிகுமார் நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகை சுவாதி ரெட்டி இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை சுவாதி ரெட்டி பிறந்தநாள் இன்று.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ரஷியாவில் பிறந்தவர் நடிகை சுவாதி ரெட்டி.
அவரது இயற்பெயர் ஸ்வெட்லானா. ஆரம்பத்தில் மும்பைக்கு வந்த சுவாதியினர் குடும்பத்தினர் அதன் பிறகு விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
படித்தது எல்லாமே விசாகப்பட்டினம். தனது 17 ஆவது வயதில் கலர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை 150 எபிசோடுகள் வரை தொகுத்து வழங்கியுள்ளார். முதல் வருட கல்லூரி வாழ்க்கையை முடித்த போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
டேஞ்சர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சுவாதிக்கு தமிழில் சுப்ரமணியபுரம் நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.
இப்படத்தில் கண்ணாலேயே காதல் செய்தார். அதுவும், கண்கள் இரண்டால் வரும் பாடல் இன்றும் ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யாக்கை, திரி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள சுவாதி ரெட்டி பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். ஒருசில பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி மலையாள பைலட்டான விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இந்த நிலையில், இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.