Home Blog Page 134

கொரோனாவிடமிருந்து நாங்கள் தப்பித்துவிட்டோம்! கேரளா !

0

சென்னை: தமிழ்நாட்டில் சனிக்கிழமை புதிதாக 49 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 1,372 ஆக உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்லனர்.

பல்வேறு மருந்துவமனைகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,884.

சென்னை, தொடர்ந்து 235 கொரோனா பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது அதை தொடர்ந்து கோயம்புத்தூர் 128 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் மற்றும் திருப்பூர் 108 பாதிப்புகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஈரோட்டில் 70 கொரோனா பாதிப்புகள் உள்ளன.

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடும் கேரளா!

அண்டை மாநிலமான கேரளா சரியான விதத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. 4 புதிய கொரோனா பாதிப்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மேலும் இதில் 3 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என தெரிகிறது. இதில் 3 பாதிப்புகள் கண்ணூர் மாவட்டத்திலும், ஒன்று கோழிக்கோடு மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 399 ஆகவும் இதில் 140 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் 7,190 பேர் கண்கானிக்கப்பட்டு வருவதாகவும்

இதில் 6,686 பேர் வீட்டில் வைத்து கண்கானிக்கபடுவதாகவும், 504 பேர் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிரது.

இந்த நிலையில்தான் திங்கள்கிழமை முதல் முதற்கட்டமாக  கேரளாவின் 7 மாவட்டங்களில் உணவகங்களை திறக்க மற்றும் குறைந்த அளவிலான வாகன போக்குவரத்தை துவங்களாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 21 நாட்களுக்கான தேசிய ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கும் நிலையில், கேரள மாநில அரசு, மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கும் உத்தேச திட்டத்தில் கேரளாவை சிகப்பு, ஆரஞ்ச் A,  ஆரஞ்ச் B மற்றும் பச்சை மண்டலங்களால பிரிக்க போவதாகவும் இதில் சிகப்பு மண்டலத்தை தவிர மற்ற இடங்களில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களில் கேரளத்தின் கொரோனா பாதிப்பு ஒருமையில் உள்ளதாலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை சீராக உள்ளதாலும்  மத்திய அரசு இந்த உத்தேச திட்டத்தை ஏற்றுள்ளது.

மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில் பொதுமக்களின் மகத்தான ஒத்துழைப்பே இத்தகைய மீட்சியை கேரளா சந்தித்திருப்பதாகவும் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.

3

1 ஆம் தேதி முதல் முழு விமான சேவையும் இயங்கும் – ஏர் இந்தியா தகவல்

0
1 ஆம் தேதி முதல் முழு விமான சேவையும் இயங்கும் - ஏர் இந்தியா தகவல்

Air India : நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா காரணமாக அனைத்து விமான சேவையையும் நிறுத்தி வைத்திருந்தது ஏர் இந்தியா.

வரும் மே 3ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவு பெறுவதால், ஏர் இந்தியா ( Air India ) விமான சேவைகள் எப்போது இயங்கும் என்ற தகவல்களை கூறியுள்ளது.

மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு சேவைகள் அனைத்தும் இயங்கும் எனவும், அதன்பின்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நகரங்களுக்கான சேவைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஜூன் 1 முதல் வெளிநாட்டு சேவைகள் அனைத்தும் தொடங்கும் என்று அந்நிறுவனத்தின் செயலாளர்கள் கூறியுள்ளனர்.

ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து மற்ற விமான சேவைகளும் எப்போது துவங்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

3

ஜிவி பிரகாஷ் பட நடிகை ஈஷா ரெப்பாவிற்கு இன்று பிறந்தநாள்!

0
Eesha Rebba Birthday Today

Eesha Rebba; ஜிவி பிரகாஷ் பட நடிகை ஈஷா ரெப்பாவிற்கு இன்று பிறந்தநாள்! ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ள ஈஷா ரெப்பா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை ஈஷா ரெப்பா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகை ஈஷா ரெப்பா.

எம்பிஏ பட்டதாரியான ஈஷா ரெப்பாவை இயக்குநர் மோகன் கிருஷ்ண இந்திரஹந்தி (Mohan Krishna Indraganti) தெலுங்கு சினிமாவில் அறிமுகம் செய்தார்.

ஈஷா ரெப்பா நடித்த முதல் படம் Anthaka Mundu Aa Tarvatha.

இப்படத்தைத் தொடர்ந்து ஓய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார்.

ஓய் படத்திற்குப் பிறகு அமி துமி என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்து வந்த ஈஷா ரெப்பா கன்னட சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில், வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஈஷா ரெப்பா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள், நண்பர்கள் வரை அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

டீ கேனில் கள்ளச்சாராயம் விற்கும் பாட்டி – கபசுர குடிநீர் என்று போலீசை ஏமாற்றிய சம்பவம்

0
டீ கேனில் கள்ளச்சாராயம் விற்கும் பாடி - கபாசுர குடிநீர் என்று போலீசை ஏமாற்றிய சம்பவம்

கள்ளச்சாராயம் : திருச்சியில் ஒரு வயதான பாட்டி, கபசுர குடிநீர் என்று கூறி போலீசாரை ஏமாத்தி, டீ கேனில் கள்ளச்சாராயத்தினை விற்ற சம்பவம் நடந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக நிலவிவரும் மது தட்டுப்பாட்டில், நாடு முழுவதும் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.

எப்படி காய்ச்சுவது என்று தெரியாத பலர், டிக்டொக்கில் வந்த வீடியோ பார்த்து காய்ச்ச தொடங்குகின்றனர்.

இப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கடுமையான முறையில் போலீசார் கண்டித்து வந்தாலும், போலீசார் கண்களிலேயே மண்ணைத்தூவும் சம்பவமும் நடக்கிறது.

அப்படி திருச்சியில் ஒரு வயதான பாட்டி, கபசுர குடிநீர் என்று கூறி டீ கேனில் கள்ளச்சாராயத்தினை விற்றுள்ளார்.

நூதன முறையில் போலீசாரை ஏமாத்திய அந்த பாட்டியினை கையும் களவுமாக போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த கள்ளச்சாராயம் எங்கு காய்ச்சியது என்று தேடி, அவர்களையும் கைது செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் இந்த ஊரடங்கில் நாடு முழுவதும் பல இடங்களில் இப்படியான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3

நாளை முதல் இவையெல்லாம் இயங்கும் – பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

1
நாளை முதல் இவையெல்லாம் இயங்கும் - பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

Coronavirus Lockdown Released : கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கினை தொடர்ந்து நாளை முதல் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டுள்ளன.

உலகத்தை அசச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.

இதன் பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட 21 நாள் ஊரடங்கினை மேலும் 19 நாட்கள் நீடித்தது மத்திய அரசு.

இந்நிலையில் நாளைமுதல் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டுள்ளன.

இதுபோக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் மேலும் சில தளர்வுகள் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

அப்படி ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு இந்த தொழிற்சாலைகள் எல்லாம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Coronavirus Lockdown Released : கீழ்வரும் தொழிற்சாலைகள் எல்லாம் இயங்க அனுமதி

  • ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவசேவை
  • விவசாயம்,
  • மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு,
  • ரப்பர், தேயிலை போன்ற வேலைகள்,
  • நீதித்துறை,
  • 100 நாள் வேலை,
  • மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு,
  • தொலைதூர கல்வி,
  • அத்தியாவசிய பொருள்களுக்கான அங்காடி,
  • கட்டிடத்தொழில் மற்றும் அரசு நிறுவனங்கள்.

இந்த தொழில்கள் எல்லாம் ஒரு சில விதிமுறைகளுடன் நடக்கலாம் என்று கூறியுள்ளது மத்திய அரசு.

3

அம்மா உணவகங்களில் இனி சாப்பாடு இலவசம் – எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிவிப்பு

0
அம்மா உணவகங்களில் இனி சாப்பாடு இலவசம் - எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிவிப்பு

அம்மா உணவகம் : கொரோனாவினால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாட்டினை சரிசெய்ய இனி அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மத்திய அரசினால் போடப்பட்ட ஊரடங்கினால் நாடு முழுவதும் பல இடங்களில் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டினை போக்கவே ரேஷனில் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களின் அளவுகளை கூட்டியதோடு மட்டுமல்லாமல் அதனை இலவசமாகவும் வழங்கிவருகிறது.

தமிழ்நாடெங்கும் இருக்கும் அம்மா உணவகங்கள் இந்த மாதிரியான இக்கட்டான காலகட்டங்களிலும் சேவைபுரியும் என்றும் கூறியுள்ளது.

அதன்படி பலர் அம்மா உணவகங்களிலும், ரேஷன் பொருள்கள் மூலமும் பயனடைந்து வந்தனர்.

தற்போது சேலம் மக்களுக்கு உதவும் விதமாக மேலும் ஒரு அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இனி உணவு இலவசம் என்றும், அதற்கான செலவை சேலம் மாநகர் மற்றும் புறநகர் அதிமுக ஏற்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அதிரடி அறிவிப்பினை பலர் பாராட்டி வருகின்றனர்.

3

ஏற்கனவே கதை திருட்டு: இதுல நஷ்டம் வேறயா? ஹீரோவுக்கு வந்த சிக்கல்!

0
Hero Movie

Hero; ஏற்கனவே கதை திருட்டு: இதுல நஷ்டம் வேறயா? ஹீரோவுக்கு வந்த சிக்கல்! சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கிய நிலையில் உண்மை என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

ஹீரோ கதை திருட்டு சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் திருட்டுக் கதை விவகாரம் காலம் காலமாக நடந்து வருகிறது. இதில், பிரபல இயக்குநர்கள் முதல் அறிமுக இயக்குநர்கள் வரை பலரும் சிக்கித் தவிக்கின்றனர்.

அந்த வகையில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் திருட்டு கதை விவகாரத்தில் சிக்கியது.

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று அட்லியிடம் உதவியாளராக இருந்த போஸ்கோ பிரபு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

அதன் பின்னர் கதை திருட்டு என்று நிரூபனமானது. எனினும், மித்ரன் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதனை சட்டரீதியாக சந்திக்கும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கேயும், போஸ்கோ பிரபுவின் கதைதான் ஹீரோ என்று நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தினால், ரூ.33 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சன் டிவி மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றில் ஹீரோ படத்தை ஒளிபரப்பகூடாது என்று தடை விதிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் சன் டிவியில் ஹீரோ படம் வெளியிடுவதாக இருந்தது. அமேசன் பிரைம் லிஸ்டிலும் ஹீரோ படம் இருந்துள்ளது.

அந்த லிஸ்டில் இருந்து ஹீரோ படத்தையும் தூக்கி விட்டார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு தான் பல பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் மூலம் மொத்தம் ரூ. 33 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றிற்கு பெறப்பட்ட பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தயாரிப்பு நிறுவனமான கேஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

3

வாழைத்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் – போலீஸை பார்த்ததும் தெறித்து ஓட்டம்

0
வாழைத்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் - போலீஸை பார்த்ததும் தெறித்து ஓட்டம்

கள்ளச்சாராயம் : தமிழகத்தில் பலர் தற்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சத்தொடங்கியுள்ளனர். 

நாடு முழுவதும் ஊரடங்கினால் மக்கள் வீட்டிலேயே இருப்பதனால் மனதளவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த மனமாற்றம் மக்களை தவறான வழியில் வழிநடத்திச்செல்வது மட்டுமல்லாமல், நாட்டின் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்கின்றது.

இந்திய அரசிற்கு பெரிதும் வருவாய் ஈட்டும் துறையாக இருந்து வருவது மது விற்பனைதான். தற்போதைய ஊரடங்கினால் பல மதுபிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கள்ளச்சாராயமும் காய்ச்ச தொடங்கிவிட்டனர்.

அப்படி ராஜபாளையம் அருகே வனப்பகுதியினை ஒட்டி அமைந்த ஒரு வாழைத்தோப்பில் அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்ச தொடங்கியுள்ளனர்.

இந்த செய்தி அறிந்த காவல்துறையினர் உடனே அங்கு விரைந்ததும், காலவர்களை பார்த்த அவர்கள் தலைதெறிக்க காட்டுக்குள் ஓடி ஒழிந்ததாக கூறுகின்றனர்.

மேலும் அதிக அளவில் அவர்கள் காய்ச்ச வைத்திருந்த சரக்குகளை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலே இந்த மாதிரியான சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணம் என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3

சீனா மீது மறைமுக போர் தொடுத்துள்ள இந்தியா – கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள்

0

Blanket Ban : தற்போதைய இந்தியா பொருளாதார சிக்கல்களை சீனா அதற்கு சாதகமாக பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக Blanket Ban போட்டுள்ளது இந்தியா.

கொரோனாவால் நாடு முழுவதும் அனைத்து வர்த்தகம் மற்றும் வணிகமும் முடங்கி கிடக்கிறது.

உலகில் முதன்முதலாக சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவினாலும், சீனா இந்த நிலையினை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

அதன்பின் கொரோனா உலகநாடுகளின் வர்த்தகத்தை பாதிக்கத்தொடங்கியதை பார்த்த சீனா, இந்த சூழ்நிலையை சாதகமாக்க தொடங்கியது.

பொருளாதார இழப்பால் பல நிறுவனங்கள் போராடும் நிலையில், சீனா பல நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.

இதன்மூலம் பல நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்துமே சீனாவிற்கு சொந்தமாக வாய்ப்புள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கையினை நேரடியாக ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்த்தாலும், சீனா தொடர்ந்து இந்த செயலை செய்துகொண்டே இருக்கிறது.

இதனை பார்த்த இந்தியா, சீனாவை இந்தியாவில் நுழையவிடக்கூடாது என ஒரு சூசகமான ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.

FDI எனப்படும் Foreign Direct Invesment எனும் வெளிநாட்டு முதலீட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

Blanket Ban எனப்படும் தடையினை இந்திய பொருளாதாரத்தில் போட்டுள்ளதால், வெளிநாட்டவர் யாரும் இந்திய கம்பெனியில் முதலீடு செய்ய இயலாது.

இதன்மூலம் இந்தியா சீனா மீது மறைமுக போர் புரிய தயாராகியதாக பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

3

நாளை முதல் அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்பும் – கேரள முதலமைச்சர் அதிரடி

0
நாளை முதல் அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்பும் - கேரள முதலமைச்சர் அதிரடி

coronavirus in kerala : நாளை முதல் கேரளாவின் பல மாவட்டங்கள் இயல்புநிலைக்கு திரும்புமென அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட 21 நாள் ஊரடங்கினை மேலும் 19 நாட்கள் நீடித்தது மத்திய அரசு.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று முற்றிலுமாக குறைந்துள்ளதால், அந்த மாநிலத்தை திறக்கப்போவதாக அம்மாநில முதலைச்சர் தெரிவித்துள்ளார்.

coronavirus in kerala : ஆரம்பத்தில் இந்தியாவில் அதிக தொற்று எண்ணிக்கை கொண்டிருந்த கேரளா, பல கட்டுப்பாடுகள் விதித்து தொற்று பரவலை வேகமாக கட்டுக்குள் கொண்டுவந்தது.

கேரளாவில் உள்ள மாநிலங்களை சிகப்பு, ஆரஞ்சு A, ஆரஞ்சு B, பச்சை போன்ற வண்ணங்கள் வாரியாக பிரித்து, பல கடுமையான நடவடிக்கைகளின் உதவியால் எளிதில் கொரோனாவினை வென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கொரோனாவினை குணப்படுத்த பலவிதமான புதிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் இந்தியாவிலே கேரளாதான் முதலிடம்.

கேரளா அரசின் இந்த துரித நடவடிக்கையினை பலர் பாராட்டியும், கேரளா இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம், அதன் வழிகளையே பின்பற்றுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

3