Home Blog Page 135

இரவில் சர்ச்சில் கூட்டுப்பிரார்தனையில் ஈடுபட்ட மக்கள் – போலீஸ் கண்காணிப்போடு சமூக இடைவெளியுடன் வழிபாடு

0
இரவில் சர்ச்சில் கூட்டுப்பிரார்தனையில் ஈடுபட்ட மக்கள் - போலீஸ் கண்காணிப்போடு சமூக இடைவெளியுடன் வழிபாடு

Georgian Peoples praying at church while Lockdown

உலகம் முழுவதுமே தற்போது கொரோனாவினால் ஊரடங்கில் உள்ள நிலையில், பல இடங்களில் தங்களது மத வழிபாட்டினை செய்ய மக்கள் முயற்சித்துத்தான் வருகின்றனர்.

இந்தியாவில் அரசிற்கு தெரியாமல் மறைமுகமாக கூடும் மக்களை, காவல்துறையினர் கண்டித்தும் சிலரை அடித்தும் கூட்டத்தினை கலைத்துவருகின்றனர்.

இப்படியிருக்கையில் கொரோனா இருந்தாலும் பரவாயில்லையென்று இரவில் மத வழிபாட்டில் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஜார்ஜியா நாட்டில் புனித வெள்ளிக்கு மதவழிபாடு செய்வது வழக்கம், அதேபோல் அம்மாத இறுதியில் மெழுகுவர்த்திக்கு பதில், நெருப்பின் மூலம் இறைவழிபாடு செய்வதும் உண்டு.

கொரோனவால் அது விட்டுப்போய்விட கூடாது என்று சமூக இடைவெளியுடன் நேற்று இரவு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவரும் முகக்கவசம் மற்றும் சரியான விதிமுறைகளை கடைபிடித்ததால், கூட்டுப்பிரார்தனைக்கு அரசே அவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

3

மூத்த ராணுவ அதிகாரியே தீவிரவாதியாக மாறிய சம்பவம் – 168 பேர் பலியான கொடூரம்

0
மூத்த ராணுவ அதிகாரியே தீவிரவாதியாக மாறிய சம்பவம் - 168 பேர் பலியான கொடூரம்

oklahoma bomb blast : உலகெங்கிலும் பல இடங்களில் கொடூரமான தீவிரவாத சம்பவங்கள் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

இப்படி நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு பல நாட்டு மக்கள் ரகசியமாக உதவினாலும், வரலாற்றில் ராணுவ அதிகாரியே உதவிய சம்பவம் இன்றுதான் நடந்துள்ளது.

1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி, அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம்தான் அது.

இந்த சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆனாலும் அமெரிக்காவின் பல மக்களுக்கு இன்றும் இது மீளமுடியாத சம்பவமாகவே உள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரியான ஒருவர், பயங்கரமான வெடிப்பொருள்கள் நிரம்பிய ஒரு காரினை எடுத்துக்கொண்டு ஒக்லஹோமாவின் பெடரல் கட்டிடம் முன்பு வெடிக்க செய்தார்.

இந்த சம்பவத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பல கொடூரமான காயங்களுடனும், 168 பேர் இறந்தும் போயுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட பலருக்கு பல வித்தியாசமான கதைகள் இருந்தாலும், தற்போது இதிலிருந்து மீண்டு பலரது வாழ்க்கை மாறியுள்ளது.

வரலாற்றில் கொடிய நாளான இன்று, பல அமெரிக்க மக்கள் மெழுகுவர்த்தி மூலம் தங்கள் இரங்கல்களை தெரிவிப்பது வழக்கமான ஒன்று.

3

இந்திய கப்பற்படையினை தாக்கிய கொரோனா – 21 வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

0
இந்திய கப்பற்படையினை தாக்கிய கொரோனா - 21 வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

Corona in Indian Navy : இந்திய ராணுவத்துறையின் ஒரு பகுதியான கப்பற்படையில் கொரோனா தாக்கம் இருப்பதாக உறுதிசெய்துள்ளனர்.

மும்பையில் இயங்கிவந்த கப்பற்படையில் 21 பேருக்கு கொரோனாதொற்று இருப்பதாக கடற்படை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

இவர்களை தவிர வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை என்றும், இந்த தொற்று மேலும் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாவும் கூறினார்.

இந்திய சுகாதாரஅமைப்பு வெளியிட்டுள்ள நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 11906 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 480 பேர் இறந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதுபற்றி கடற்படை தலைமை அதிகாரி கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியில் கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததால் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் அந்த 21 பெரும் ஒரே குடியிருப்பில் தங்கியிருந்ததால் அந்த குடியிருப்பு தற்போது முற்றிலுமாக மூடப்பட்டு CONTAINMENT ZONE ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

3

பெண் காவலர்கள்தான் ரியல் ஹீரோஸ்: சசிகுமார் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

0
Sasikumar Corona Awareness

Sasikumar Corona Awareness; பெண் காவலர்கள்தான் ரியல் ஹீரோஸ்: சசிகுமார் கொரோனா விழிப்புணர்வு வீடியோ! கொரோனா பாதிப்பு காரணமாக இரவு, பகலாக நமது பாதுகாப்பிற்காக பணியாற்றி வரும் பெண் காவலர்கள் தான் ரியல் ஹீரோஸ் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் மதுரையில் சிட்டி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கின்றனர்.

சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிரபலங்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் முதல் மருத்துவர்கள், அரசியல் பிரபலங்கள், காவல் துறையினர் என்று பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநரும், நடிகருமான சசிகுமார் கொரோனா விழிப்புணர்வு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மதுரை சிட்டி போலீஸ் ஸ்டேஷனில் காவல் துறையினர் எந்தளவிற்கு கஷடப்படும் என்பதையும், மக்களின் பாதுகாப்பிற்காக தங்களது குடும்பங்களையும் மறந்து இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், குறிப்பாக பெண் காவலர்கள்தான் ரியல் ஹீரோஸ் என்று குறிப்பிட்ட சசிகுமார், யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

பிரித்து பார்த்த தமன்னா: தெலுங்கு சினிமாவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

0
Tamannaah Donation

Tamannaah Donation: பிரித்து பார்த்த தமன்னா: தெலுங்கு சினிமாவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி! நடிகை தமன்னா தெலுங்கு சினிமாவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

தமன்னா தெலுங்கு சினிமாவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கின்றனர்.

சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிரபலங்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அன்றாடம் ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு ஃபெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நிதி திரட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவைப் போன்று தெலுங்கிலும் சினிமா தொழிலாளர்களுக்காக புதிய அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கேரளாவிலும் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி திரட்டி வருகின்றனர். இதற்கு நடிகர்கள் மட்டும் நிதியுதவி அளித்த வருவதாகவும், நடிகைகள் உதவவில்லை என்றும் விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

அண்மையில், காஜல் அகர்வால், ஃபெப்சிக்கு ரூ.2 லட்சம், தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.2 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம்,  மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு ரூ.1 லட்சம் என்று மொத்தம் ரூ.6 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது தமன்னாவும் தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள தமன்னா வெறும் தெலுங்கு சினிமாவிற்கு மட்டும் உதவியுள்ளது தமிழ் ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.

3

SmartCop App; ஊரடங்கை மீறி வெளியில் சுத்துனா இனிமே சம்பவம் தான்

0
SmartCop App
Police captured accuser for illegal entry

SmartCop App; ஊரடங்கை மீறி வெளியில் சுத்துனா இனிமே சம்பவம் தான், ஸ்மார்ட் காப் ஆஃப் மூலம் ஊரடங்கை கடைபிடிக்காமல் சுத்துவோரை போலீஸ் எளிதாக பிடிக்க இயலும்.

கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை கடைபிடிக்காமல் மக்கள் வெளியே செல்கின்றனர்.

அவர்களை கட்டுபடுத்த இயலாமல் போலீஸ் திணறி வருகின்றனர். இதற்கு போலீஸ்க்கு உதவுவதற்காக ஸ்மார்ட் காப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

SmartCop App

ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், இந்தச் செயலிமூலம் தேவையில்லால் வெளியில் சுற்றுபவர்களின் விவரங்களை சேகரிக்க முடியும்.

பின்னர் ஊரடங்கை மீறுவோரின் பெயர், கைப்பேசி எண், வாகனப் பதிவெண், ஓட்டுநர் உரிம எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்டவற்றை இந்தச் செயலியில் பதிவுசெய்ய முடியும்.

ஜிபிஎஸ் மூலம் அவர்கள் இருக்கும் நிகழ்விடத்தை கண்டறிவதுடன் சம்பந்தபட்டவரின் புகைப்படம், வாகனத்தின் புகைப்படத்தை செயலி மூலமே எடுத்து கொள்ளலாம்.

சிக்குவோரின் ஃபோன் நம்பர் அல்லது பைக் நம்பர் ஆகியவை பயன்படுத்தி அவர்களின் முந்தைய தவறுகள் குற்றங்களை கண்டறிய இயலும்.

இந்த செயலியை நெல்லை மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வெளியில் வருவோரை குறைக்க இயலும் காவல்துறை நம்புகிறது.

3

கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் கிட் கருவிகளின் விலையை கேட்கும் மு.க. ஸ்டாலின்

0
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் கிட் கருவிகளின் விலையை கேட்கும் மு.க. ஸ்டாலின், இது குறித்த உண்மையை மக்களுக்கு தெரிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்.

கொரோனா பாதிப்பை வெறும் 10 நிமிடத்தில் கண்டறியும் 24000 ரேபிட் கிட் கருவிகள் தமிழக அரசு வாங்கியுள்ளது. இனி இந்த கருவியின் மூலம் பரிசோதனை நடத்தவுள்ளனர்.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த கருவிகள் தற்போது புழக்கத்தில் உள்ளது. கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டன?

என்ன விலைக்கு வாங்கப்பட்டன? எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது? என்பதை சத்தீஸ்கார் மாநில மந்திரி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதே போல் தமிழக அரசும் உண்மைத்தன்மையாக செயல்பட்டு மக்களிடம் தகவலகலை தெரிவிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3

This Day in History April 19; வரலாற்றில் இன்று ஏப்ரல் 19

0
This Day in History

This Day in History April 19; வரலாற்றில் இன்று ஏப்ரல் 19 ஆரியப்பட்டா விண்ணுக்கு ஏவப்பட்ட நாள், Today Birthdays in History, Today Deaths in History.

1782- அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் ஐக்கிய அமெரிக்கா தனி நாடு என்னும் அங்கீகாரத்தை இடச்சுக் குடியரசிடம் இருந்து பெற்றார்.

நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் உள்ள அவரது வீடு அமெரிக்க தூதரகமாக மாற்றப்பட்டது.

1775- பிரித்தானிய அரசுக்கு எதிராக அமெரிக்க புரட்சிப் போர் ஆரம்பித்தது.

1954- உருது மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1975- இந்தியாவின் முதலாவது செயற்கை கொள் ஆரியப்பட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

1995- அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானத்தில் 168பேர் கொல்லப்பட்டனர்.

Today Birthdays in History

1864- இந்தியா ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவர் கல்வியாளர் மகாத்மா அன்சுராசு பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1957- இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம் இன்று.

1987- உருசிய டென்னிஸ் வீராங்கனை மரியா சரப்போவா பிறந்த தினம் இன்று.

1801- செருமானிய கவிஞர் உளவியலார் குஸ்டவ் பெச்னர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

Today Deaths in History

1719- முகாலயப் பேரரசர் பருக்சியார் இறந்த தினம் வரலாற்றில் இன்று.

1813- அமெரிக்கா மருத்துவர் பெஞ்சமின் ரசு இறந்த தினம்.

1882- ஆங்கிலேய உயிரியலாளர் சார்லஸ் டார்வின் இறந்த தினம் இன்று.

1944- இந்தியா அரசியல்வாதி சேலம் சி. விஜயவாகச்சாரியார் இறந்த தினம் இன்று.

3

நான்கு வார தனிமைப்படுத்துதலை கடந்தவருக்கு கொரோனா பாதிப்பு, அதிர்ச்சியில் கேரளா மருத்துவர்கள்

0
நான்கு வார தனிமைப்படுத்துதலை

நான்கு வார தனிமைப்படுத்துதலை கடந்தவருக்கு கொரோனா பாதிப்பு, அதிர்ச்சியில் கேரளா மருத்துவர்கள். நான்கு வாரங்களுக்கு பிறகு வெளி வந்த அறிகுறி மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு.

துபாயில் இருந்து கேரளா கோழிக்கூடுக்கு வந்த ஒருவர் முதலில் 14 நாட்கள் தனிமையில் இருந்த பிறகு, வீட்டிலும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டார்.

அது வரை அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. வழக்கம் போல் மருத்துவமனை சென்ற 67 வயதான இவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் பிறகு அவரது குடும்பத்தில் இருந்த அனைவரையும் சோதித்த பொழுது அனைவருக்குமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது உலக மருத்துவ குழுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. எப்படி இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று பரிசோதித்து வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லாவிட்டால் நேரடியாக தங்கள் வீட்டிலேயே 28 நாள்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்

இந்த தனிமைப்படுத்துதல் கால அளவு முடிந்தபின் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுதான்.

3

ஊரடங்கால் அதிகரித்து வரும் குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, கலங்கும் பெண்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்

0
குடும்ப வன்முறை

ஊரடங்கால் அதிகரித்து வரும் குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, கலங்கும் பெண்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட், 7 நாட்களில் பதிவான 300 குடும்ப வன்முறை கேஸ்.

கடந்த 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைய, மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பால் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் பலர் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த ஊரடங்கு நேரத்தில் குடும்ப உறவில் இருக்கும் பெண்களுக்கு, குடும்ப வன்முறை உலகம் முழுக்க கூடியிருப்பதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்கள் தனித்திருக்கும் நேரத்தில் மனைவிகளுடன் வெறுப்பை காட்டுவது, சண்டை பிடிப்பது, விருப்பமில்லாமல் பாலியல் தொந்தரவை ஏற்படுத்துவது என பல பிரச்சனைகள் நடந்து வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமே, கடந்த மார்ச் 23 முதல் மார்ச் 30 வரையிலான 7 நாட்களில், 291 பெண்கள் குடும்ப வன்முறையில் பாதித்துள்ளதாக, தேசிய பெண்கள் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

தேசிய பெண்கள் ஆணைய கணக்குப்படி, கடந்த ஜனவரியில் 270, பிப்ரவரியில் 302 புகார்கள் வந்துள்ளன. ஆனால், மார்ச் 23 துவங்கி 7 நாட்களில் 291 புகார்கள் வந்துள்ளன.

இதன் மூலம் ஊரடங்கு காலத்தின் குடும்ப வன்முறை தீவிரத்தை அறியலாம். குடும்ப வன்முறையில் பாதிக்கும் பெண்கள், அவசரபோலீஸ் எண் 100க்கு தகவல் தரவும்.

மகளிர்ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு வாட்ஸ்அப் சேவையை ‘7217735372’ பயன்படுத்தி புகார் அளிக்காலம்.

3