Home Blog Page 118

26/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

26/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று மன உளைச்சல் காணப்படும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு, கவனமாக செயல்படவேண்டிய நாள். புதிதான எந்த காரியங்களிலும் துவங்க வேண்டாம்.

ரிஷப ராசிபலன்

இன்று செல்வம் பெருகும் நாளாக இருக்கும். மகிழ்ச்சிகரமான நாளாக இருக்க போகிறது. உங்களின் புதிதான முயற்சிகளை தாராளமாக எடுக்கலாம். பணியில் பாராட்டுகள் வந்து சேரும் நாளாக இருக்கும். தங்களின் நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்க போகிறது.

மிதுன ராசிபலன்

இன்று மனதில் தேவையற்ற பயத்துடன் இருப்பீர்கள். அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் பேச்சு வார்த்தைகள் வேண்டாம். வருமானம் பெரியதாக ஒன்றும் இருக்காது. நேர்மையான அணுகுமுறை தேவையான நாளாகும்.

கடக ராசிபலன்

இன்று ஆரோக்கியம் நலமுடன் இருக்கும் நாளாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் எளிதாக முடிப்பீர்கள். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்க வேண்டும்.

சிம்மம் ராசிபலன்

இன்று அனைவரும் தங்களிடம் அன்புடன் இருப்பார்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். பணியிடத்தில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அருமையான நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று ஆக்கபூர்வமான நாளாக இருக்க போகிறது. பண வரவு தாராளமாக இருக்கும் நாளாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். நாாள் முழுதும் இன்பமான நாளாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்று உயர்வான நிலைக்கு செல்லக் கூடிய நாளாகும். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும். குடும்ப சண்டைகள் தீரும்.

விருச்சிக ராசிபலன்

இன்று எந்த நற்காரியத்தையும் துவங்க வேண்டாம். மிகவும் மோசமான பலன்களை தரும் நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அன்றாட பணிகளை கவனமாக கையாள வேண்டும்.

தனுசு ராசிபலன்

இன்று உறவினர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் நாளாக இருக்கும். சமூக நற்காரியங்களில் ஈடுபடுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. மற்றபடி சிறப்பாக இருக்கும் நாளாகும்.

மகரம் ராசிபலன் 

இன்று தன வரவு சிறப்பாக இருக்கும் நாளாகும். தன்னம்பிக்கையால் சாதனைகள் புரிவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று மேன்மை பெறக்கூடிய நாளாக இருக்கும். பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். பொருளாதாரம்  சிறப்பாக இருக்கும் நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்றைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தாங்கள் முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழுங்கள். பயணங்கள் சிறந்த பலன்களை தரும்.

26/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

இன்று அட்சய திருதியை..!

அட்சய திருதியை 2020: உப்பு வாங்குவதால் மங்களம் பெருகுமா?

3

‘ஆரோக்கியம்’ திட்டம் ‘கபசுரக் குடிநீர்’ மருந்து பொட்டலங்கள் விநியோகம்: முதல்வர்

0
ஆரோக்கியம் கபசுரக் குடிநீர்

சென்னை: ‘ஆரோக்கியம்’ திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘நிலவேம்பு கசாயம்’ மற்றும் ‘கபசுரக் குடிநீர்’ பொடிகள் அடங்கிய பொட்டலங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

பிறகு “ ஒரு இலட்சம் அளவிலான ‘கபசுரக் குடிநீர்’ பொட்டலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் (CONTAINMENT ZONES) வசிக்கும் சென்னை வாசிகளுக்கு ‘ஆரோக்கியம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும்,” என தெரிவித்தார்

கொரோனா பரவல் தீவிரம் அடைவது போல் இருந்ததால் , மாநில அரசு 11 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்தது,  இதில் அரசு மற்றும் அரசு சாரா அமைப்பினர் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களும் அடங்குவர். அவர்களிடத்தில் கொரோனா தடுக்க மாற்று வழிகளை கண்டுபிடித்து பரிந்துரை செய்யுமாறு கூறியது.

இதனை தொடர்ந்து அந்த குழுவிற்கு ஆயுஷ்(AYUSH) அமைச்சகம் சித்தா , ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரை செய்யுமாறு அறிவுறுத்தியதை அடுத்து அக்குழு, ‘கபசுரக் குடிநீர்’ கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மக்களுக்கு கொடுக்கலாம் என மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

வல்லுநர் குழுவின் அறிவுறுத்தலை கவனத்தில் ஏற்று, முதலமைச்சர் இந்த புதிய ‘கபசுரக் குடிநீர்’ வழங்கும் திட்டத்தினை மக்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்தார், என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘கபசுரக் குடிநீர்’ எனும் சித்த வைத்திய மருந்து கோவிட்-19 நோயை முழுவதுமாக குணமாக்காவிட்டாலும் மக்களின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தி மக்களை ஆரோக்கியமாக வைக்கும், இதன் மூலம் மக்களுக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்பாற்றலை மேம்படுத்தி பரவலை தடுக்கலாம் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

 

 

 

3

கர்நாடகா: கொரோனா நோயாளிகளுக்கு கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி சிகிச்சை

0
கர்நாடகா பிளாஸ்மா தெராபி

பெங்களூரூ: கர்நாடகா அரசு சனிக்கிழமை விரைவில் குணப்படுத்தக்கூடிய கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி(convalescent plasma therapy) எனும் சிகிச்சை முறையை கொரோனா திவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சோதனை முயற்சியாக செயல்படுத்த துவங்கியது.

விரைவில் குணம்

மருத்துவ கல்வி அமைச்சர் கே. சுதாகர் ட்விட்டரில் தெரிவிக்கையில் ” நாங்கள்
கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி(CPT) சிகிச்சைமுறையை கொரோனா தீவிரமாக பாதித்த நோயாளிகளுக்கு துவங்க இருக்கிறோம் இது கொரோனா பாதிப்புகளை விரைவில் குணமடைய உதவி புரியும் என நிச்சயமாக நம்புகிறோம்”

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த சிகிச்சை கொரோனாவால் தீவிரமாக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும், தீவிர கண்கானிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கும், வெண்டிலேடரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கு நன்கொடை வழங்குபவர்களும் முன் வந்து உள்ளனர்.

கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி

அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இதற்காக கொடை அளிக்க முன்வந்துள்ளனர், அவர்களின் உடலிருந்து எடுக்கப்படும் எதிர்ப்பாற்றல் புரதத்தை(ANTI-BODIES) கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த சிகிச்சைமுறையில் பயன்படுத்தப்படும்.

தற்போது 5 கொரோனா நோயாளிகள் தீவிர கண்கானிப்பு பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர்.

சுகாதாரதுறை அமைச்சர் ஸ்ரீராமலு மேலும் தெரிவிக்கையில் இந்த கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி(CPT) சிகிச்சை முறை கொரோனாவை ஒழிப்பதில் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என தெரிவித்தார்.

கர்நாடகம் முன் மாதிரி மாநிலம்

“இந்த கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெராபி(CPT) சிகிச்சை முறையை கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாலிகளின் சிகிச்சையில் அமல் படுத்துவதில் கர்நாடகம் முன் மாதிரி மாநிலமாக செயல்படுகிறது. பி.எம்.சி விக்டோரியா(BMC VICTORIA) மருத்துவமனை இதற்கான முதற்படியை எடுத்து வைத்துள்ளது, நாங்கள் இந்த மனித குலத்திற்கான எதிரியை ஒழிப்பதற்கு தீவிர முடிவெடுத்துள்ளோம்” என அவர் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

3

டிஜிட்டல் பிளாட்பார்மில் பொன்மகள் வந்தாள்: தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

1
Ponmagal Vandhal

Ponmagal Vandhal; டிஜிட்டல் பிளாட்பார்மில் பொன்மகள் வந்தாள்: தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு! சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படம் டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாக இருப்பதாக இன்று செய்திகள் வெளியான நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வந்த நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிரடி முடிவெடுத்துள்ளனர்.

இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிரயராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் மூடப்பட்டு, படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்தப் படம் மட்டுமல்ல, விஜய்யின் மாஸ்டர் படம் உள்பட நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக, திரையில் வெளியிடாமல், சிறிய பட்ஜெட் படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வரிசையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் படத்தின் வசூல் பட்ஜெட்டை விட இருமடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையில், இது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் இன்று அறிவிக்கை வெளியிட்டார்.

அதில், ஊடகங்களில் வெளியான செய்தி இன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT Platformல் வெளிவரப்போவதாக செய்தி வெளிவந்தது.

கொரோனா காரணமாக மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1000 திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்ட போது எங்களது கோரிக்கையை ஏற்பதாய் இல்லை.

ஆதலால், இனிமேல், அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரைச் சார்ந்தோர் வெளியிடும் படங்களை OTT Platformல் மட்டுமே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக தற்போது தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.

3

கில்லட்டின் (Guillotine) கருவி பற்றி தெரியுமா?

0
கில்லட்டின் (Guillotine) கருவி பற்றி தெரியுமா?

கில்லட்டின் (Guillotine) கருவியால் முதல் மனிதன் நிக்கோலஸ் ஜாக்வெஸ் பெலடியர் (Nicolas Jaques Pelletier) கொல்லப்பட்ட நாள் இன்று.

கில்லட்டின் – ஒரு மரணதண்டனை கருவி

இடைக்கால ஐரோப்பாவின் பல நாடுகளில்  குற்றவாளிகளை தண்டிக்க கட்டி வைத்து  உயிருடன் எரித்துக் கொல்வது, கொதிக்கும் எண்ணெயில் மூழ்கடித்து கொலை செய்வது போன்ற கொடுமையான தண்டனைகள் பயன்படுத்த சிறு தவறு செய்தவர்கள் கூட பயங்கரமாக தண்டிக்கப்பட்டனர்.

அதுபோன்ற தண்டனைகளில் ஒன்றுதான் கில்லட்டின் என்னும் மரணதண்டனை. கில்லட்டின் என்பது குற்றவாளிகளின் தலையை வெட்டிக் கொல்லும் இயந்திரமாகும்.

ஜோசப் இக்னேஸ் கில்லட்டின்

இந்த கருவி, பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் (Louis XVI) தலையை வெட்டி பிரெஞ்சு அரசை முடிவுக்கு கொண்டு வந்த ஜோசப் இக்னேஸ் கில்லட்டின் (Joseph Igance Guillotine) என்ற மருத்துவரால் பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரிட்டனில் ஏற்கெனவே இதுபோன்ற தலை வெட்டும் கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாதிகளை தண்டிக்கவே இக்கருவி பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது

கில்லட்டின் கருவியின் பலகையில் குற்றவாளியின் தலையைக் கட்டி வைக்கப்பட்டு, ஒரு கூர்மையான கத்தியால் அவரது தலை துண்டிக்கப்படும். இது “National Razor Of France (பிரான்சின் தேசிய சவரக்கத்தி)” என்று அழைக்கப்பட்டது.

1790களில் கில்லட்டின் கருவியானது குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும் இருந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது அதிகமாக பயன்படுத்தப் பட்ட கில்லட்டினை கண்டுபிடித்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் அல்ல, அதனை கண்டுபிடித்தவர் டோபியஸ் ஷ்மிட் என்ற ஒரு ஜெர்மானியர்.

ஹிட்லர் நிறுவிய கில்லட்டின்

பிரான்சை போலவே ஜெர்மனியிலும் கில்லட்டின் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 1930-ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனி முழுவதிலும் இருபது கில்லட்டின் கருவிகளை நிறுவினார்.

ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கில்லட்டினால் கொல்லப்பட்டனர். இடைக்கால ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கில்லட்டின் பிரான்சில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

கில்லட்டினால் மாண்டவர்கள்

பதினாறாம் லூயி மன்னர், அரசி மேரி அண்ட்டோனட், வேதியியலாளர் அண்டோன் லவாய்ஸியர் போன்ற பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் கில்லட்டினால் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

கில்லட்டினால் கொல்லப்பட்ட கடைசி மனிதர் ஹமீதா ஜன்தோபி ஆவார். இவர் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 1981-ஆம் ஆண்டு கில்லட்டின் மரணதண்டனைக்கு மாநில அரசு தடைவிதிக்கப்பட்டது.

3

சிம்பு விருப்பப்பட்டால் நான் ரெடி: திரௌபதி இயக்குநர் மோகன் ஜி!

0
Simbu

Simbu; சிம்பு விருப்பப்பட்டால் நான் ரெடி: திரௌபதி இயக்குநர் மோகன் ஜி! திரௌபதி படத்தில் நடிக்கும் போதே நடிகர் ரிச்சர்டு இந்த படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும். அடுத்த படமும் நாம் சேர்ந்து பண்றோம் என்று என்னிடம் சொல்லிவிட்டார் என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

திரௌபதி படம் ஹிட் கொடுக்கும். அடுத்த படமும் நாம் இருவரும் சேர்ந்து பண்றோம் என்று நடிகர் ரிச்சர்டு கூறியதாக திரௌபதி இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் சேனலுக்கு திரௌபதி இயக்குநர் மோகன் ஜி பேட்டியளித்தார். அப்போது, பேசிய அவர் கூறுகையில், திரௌபதி படம் நடிக்கும் போதே நடிகர் ரிச்சர்டு என்னிடம், இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்று சொல்லிவிட்டார்.

அடுத்த படம் நாம் பண்றோம். கதை ரெடி பண்ணிக்கோங்க என்றார். அவர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அவருடன் சேர்ந்து அடுத்த படம் செய்வ்து என்று உறுதியாக இருந்தேன்.

ஆனால், இடையில் ஒரு ஹீரோ என்னுடன் படம் பண்ணுவதில் உறுதியாக இருந்தார். ஆனால், நாங்கள் ரிச்சர்டுடன் படம் செய்ய இருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.

சிம்புவுடன் இணைந்து படம் செய்வீர்களா? என்று ரசிகர் என்னிடம் கேட்டார். என்னிடம் கதை கூட இருக்கிறது. அவர் ஓகே என்றால், கண்டிப்பாக பண்ணலாம் என்றேன்.

அப்படியிருக்கும் போது ஒரு தயாரிப்பாளர் போன் செய்து என்னிடம் சிம்புவின் கால்ஷீட் இருக்கிறது. நீங்க ஓகே என்றால் பண்ணிடலாம் என்றார். நான், எனது அடுத்த படம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனால், அடுத்த படம் சிம்புவுடன் எதிர்பார்க்கலாம் என்றேன்.

அது ஒரு கேங்க்ஸ்டர் படம். மீனவ மக்களின் வாழ்க்கையைப் பற்றிய படம். ஆம், அவர்களுக்கு பயனுள்ள ஒரு படமாகக் கூட இருக்கும்.

வட சென்னையை மையப்படுத்திய படம். ஆனால், அது கன்ஃபார்ம் கிடையாது. என்னுடைய விருப்பம். சிம்பு ஓகே என்றால் நானும் ரெடி என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சரித்திர நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ | Fidel Castro Life History

0
Fidel Castro Life History ஃபிடல் காஸ்ட்ரோ

சரித்திர நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ | Fidel Castro Life History in Tamil. செல்வந்தனின் மகனாக பிறந்த பிடல்காஸ்ட்ரோ  மாபெரும் தலைவனாக மாறிய கதை.

Fidel Castro Life History

உலக வரலாற்றில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு ஒரு நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த மாபெரும் தலைவர் பிடல் காஸ்ட்ரோ 1926-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் நாள் கியூபாவில் பிறந்தார்.

ஸ்பானியரான இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ, கியூபாவிற்கு வேலை தேடி வந்து பின்னாளில் மிகப்பெரும் பண்ணையாளர் ஆனார்.

25 ஆயிரம் ஏக்கர் கரும்பு தோட்டத்தில் 400 பேருக்கு வேலை தரும் அளவிற்கு மிகப்பெரும் செல்வந்தர் பிடல் காஸ்ட்ரோவின் தந்தை.

பிடல்காஸ்ட்ரோ கல்வி

1930-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஏஞ்சல் காஸ்ட்ரோவையும் பாதித்தது. இந்நிலையில் தனது பள்ளி படிப்பை முடித்த பிடல், மேல்படிப்பை ஹவானாவில் உள்ள பெலன் பள்ளியில் முடித்தார்.

மேற்படிப்பிற்கு பின் ஹவானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தார். அரசியல் மற்றும் கம்யூனிசத்தில் மிகப்பெரும் ஈடுபாடு கொண்டவரானார்.

கியூபா விடுதலை போராட்டம்

இலக்கியவாதியும் ஸ்பெயினுக்கு எதிரான கியூபா விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த வருமான புரட்சியாளர் ஹோசே மார்த்தியை தனது அரசியல் தந்தையாக கொண்ட பிடெல், ஆர்தொடாக்ஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

கார்ல் மார்க்ஸ், லெனின், எங்கெல்ஸ் போன்றவர்களின் புத்தகங்களை ஒன்றுவிடாமல் படித்து முதலாளித்துவத்தினால் கியூபாவின் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிகளை அறிந்துகொண்டார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்த கியூப தேசத்தின் வறுமைக்கு நடுவே ஒரு செழிப்புமிக்க கரும்புத் தோட்டத்தில் செல்வந்தரின் மகனாக வாழ்ந்து வந்த ஃபிடெல் தன் சுகங்களை எல்லாம் உதறிவிட்டு, தேச விடுதலைக்காக துப்பாக்கி ஏந்திப் போராடத் தயாரானார்.

பாடிஸ்டாவின் வீழ்ச்சி

அமெரிக்காவின் பொம்மையாக இருந்த பாடிஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி, கியூபாவில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஒரு ஆட்சியை அமைக்கும் தனது சரித்திரப் பயணத்தை தொடர்ந்தார்.

முதற்கட்டமாக மான்கடா படைத்தளத்தை கைப்பற்றும் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. பாடிஸ்டாவினால் சிறையில் அடைக்கப்பட்ட போதும் துவண்டு விடவில்லை பிடல் காஸ்ட்ரோ.

அமெரிக்கா எனும் பூதத்திற்கு எதிரான தனது அடுத்தகட்ட தாக்குதலைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

விடுதலைக்குப் பின்னர் மெக்ஸிகோவிற்கு சென்று அங்கு ஒரு புரட்சிப் படையை உருவாக்கினார். இவ்வாறுதான் ஜூலை 26 இயக்கம் உருவானது.

சேகுவேரா சந்திப்பு

மெக்சிகோவில் தன்னைப்போலவே மார்க்சிய லெனினிய சித்தாந்தங்களில் பற்று கொண்ட இளைஞர் ஒருவரை சந்தித்தார், அவர்தான் சேகுவேரா!

சேவும் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்தார். இவர்களது புரட்சிப்படை கொரில்லா போர் முறையை பயன்படுத்தி 1959 ஆம் ஆண்டு பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தியது.

பிரமராக பொறுப்பு

ஃபிடல் கியூபாவின் பிரதமராக பொறுப்பேற்றார். இவரது ஆட்சியில் கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியது. தொழில்களும் வியாபாரங்களும் தேசியமயமாக்கப்பட்டன.

அமெரிக்காவிற்கு சொந்தமான யுனைட்டட் ஃப்ரூட் கம்பெனியின் கையிலிருந்த கியூப நிலங்கள் பிடுங்கப்பட்டு, நாட்டு மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இலவச கல்வி மற்றும் மருத்துவம்

கியூப மக்கள் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்க அரசு கியூபாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஆனால், அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை பிடல்.

பொருளாதாரத் தடையை சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் எதிர்கொண்டு கியூபாவை பாட்டாளி வர்க்கத்தினருக்கான நாடாக உருவாக்கிக் கொண்டிருந்தார்.

கல்வி மற்றும் மருத்துவத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அமெரிக்கா என்னும் அரக்கனுக்கு எதிராக சாட்டையை சுழற்றி, கியூபாவை உழைக்கும் வர்க்கத்தினரின் நாடாக வடிவமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்த ஃபிடல் காஸ்ட்ரோ 2016-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்து இன்றும் கியூப மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வருகிறார்.

3

அந்த விஷயத்தில் என் புருஷன் கிங்; வியந்த அனுஷ்கா ஷர்மா!

0
விராட் கோலி

Guess the gibberish என்ற போட்டி இன்ஸ்டாவில் பிரபலம். இந்த போட்டியில் விராட் கோலி திறமையை கட்டி உள்ளார். கோலி திறமையை பார்த்து அனுஷ்காவே வியந்து உள்ளார்.

Guess the gibberish என்றால் என்ன?

ஜம்ப்ள்ட் சென்டன்ஸ் என்று சொல்லும் விளையாட்டு தான் இது. ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் மாறி இருக்கும். அதை சரியாக சொல்ல வேண்டும்.

இந்த விளையாட்டு தான் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளது. இதில் விராட் கோலி சரியாக வார்த்தைகளை கண்டு பிடித்து அசத்தி உள்ளார்.

அதுவும் குறிப்பாக அனுஷ்கா ஷர்மா எந்த வார்த்தைகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகிறாரோ அந்த வார்த்தையை ஈசியாக கண்டு பிடித்து அசத்தி வருகிறார்.

லாக்டவுனில் கணவனும் மனைவியும் குடியும் குடித்தனும் என வீட்டிற்குள் இருந்தாலும் இன்ஸ்டாவில் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர்.

விராட் கோலி எல்லாத்திலுமே கிங் தான் என அனுஷ்கா புகழ்ந்து தள்ளியுள்ளார். மனைவியே சொன்ன பின்ன என்ன வேணும் புகுந்து விளையாடுங்க கோலி.

3

வள்ளல் தளபதி விஜய்: பெருமையோடு போற்றும் ரசிகர்கள்!

0
Vallal Thalapathy Vijay

Thalapathy Vijay; வள்ளல் தளபதி விஜய்: பெருமையோடு போற்றும் ரசிகர்கள்! தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் விஜய்யை ரசிகர்கள் வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்கில் தளபதி விஜய்யை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், ரசிகர்கள் வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி, பொருளுதவி என்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தளபதி விஜய், கொரோனா பாதித்தவர்களுக்கு ரூ.1.3 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தம் ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதோடு, கொரோனா லாக்டவுன் காரணமாக வறுமையில் கஷ்டப்படும் ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.5000 அனுப்பி வைத்துள்ளார். Vijay Charitable Trust மூலமாக இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தோடு, வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் கொரோனா பாதிப்பு மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்குமாறி அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில், விஜய் ரசிகர்களுக்கு உதவியுள்ளார்.

அதோடு, இவ்வளவு லேட்டாக நிதியுதவி அளித்தாலும், அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆரம்பம் முதலே பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வந்த நிலையில், விஜய் போன்று முன்னணி நடிகர்கள் வழங்காதது அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் முன் வைத்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக் உருவாகும் அளவிற்கு அவர் ரசிகர்களுக்கும், கொரோனா பாதிப்பு மக்களுக்கும் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சிம்ரனின் நம்பர் கவுண்டிங்: வைரலாகும் வீடியோ!

0
Simran Tik Tok Video

Simran Tik Tok Video; சிம்ரன் தனது மகனுடன் இணைந்து 5,4,3,2,1 என்று நம்பர் கவுண்டிங் சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்ரன் டிக் டாக் செய்வது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். 1990 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் நடிக்க ஆரம்பித்தவர்.

அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

எல்லா நடிகைகளைப் போன்று திருமணத்திற்கு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அப்புறம் என்ன, ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை, தற்போது சினிமா வாய்ப்பில்லாமல், மேடைகளில் நடனம் ஆடும் நிலை ஏற்பட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.

அந்த வகையில், வீட்டில் இருக்கும் நடிகை சிம்ரன், தனது மகனுடன் இணைந்து டிக் டாக் வீடியோவில் நடித்துள்ளார்.

அதில், 5,4,3,2,1 என்று நம்பர் கவுண்டிங் சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆம், சிம்ரன் நம்பர் கவுண்டிங்கிற்கு ஏற்ப கை அசைப்பதும், இறுதியாக அவரது மகன் தம்ஸ் அப் செய்வது போன்றும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, இருவரும் மாறி மாறி முத்தம் கொடுப்பது போன்று டிக் டாக் செய்வது போன்று நடித்திருந்தனர். அந்த வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக மகனை ரசிகர்களிடையே அறிமுகம் செய்வது வருகிறார். விரைவில், மகனை சினிமாவில் நடிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3