Home Blog Page 117

நாகர்கோவில் காசியை உச்சா போகும் அளவுக்கு துடிக்கதுடிக்க அடித்த போலீஸ்

0

100 பெண்களுக்கு மேல் காதலிப்பதாக ஏமாற்றிய காதல் கிருக்கன் நாகர்கோவில் காசி, வலுவான உடற்கட்டமைப்பு கொண்ட இளைஞர் பல பெண்களின் வாழக்கையில் செய்த வந்த லீலை வெளிவந்தது.

நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான காசி என்ற இளைஞர் பள்ளி மாணவிகள் முதல் பெண் டாக்டர் வரை நாடகக் காதல் செய்து ஏமாற்றியுள்ளார்.

பெண் மருத்துவர் ஒருவரிடம் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளான் இந்த காசி. அவரிடம் பழகி எடுத்த அந்தரங்க படங்களை வைத்து பெண் மருத்துவரை மிரட்டி வந்துள்ளான்.

அதில் பயந்த அவர் கேட்கும்போதெல்லாம் பணம் என 5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத அவர் போலீஸிடம் புகார் அளித்து விட்டார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல போலீஸ் வலையில் சிக்கி கொண்டான் காசி. இதன் பிறகே அவனுடைய மொபைல் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் பரிசோதிக்கப்பட்டது.

அதில் அவனிடம் பாதிக்காப்பட்ட பெண்கள் 120 வரை இருந்துள்ளனர். அதில் பள்ளி பருவ மாணவிகள், இளம் பருவத்தினர் மற்றும் நன்கு படித்து வெளி உலகம் தெரிந்த இந்த மருத்துவர் என பலர் இருந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தான் பெரிய பணக்காரன், பெரிய இடம் போன்றவாறு உருவகம் செய்து நல்ல உடற்கட்டான புகைப்படங்களுடன் பதிவு செய்து கணக்கு பயன்படுத்தி வந்துள்ளான்.

இவனிடம் சிக்கியவர்களில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களின் மூலம் தொடர்பு கொண்டவர்களே. அவர்களை காதலிப்பதாக திருமணம் செய்வதாக கூறி நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளான்.

பிறகு பழகிய பெண்களை நேரில் வரச்செய்து ஊர் சுற்றவும் அதை புகைப்படம் எடுக்கவும் செய்துள்ளான். மேலும் பல பெண்களுடன் தனிமையில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளான்.

ஒரு கட்டத்திற்கு பிறகு தான் வைத்திருக்கும் அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையை தொடங்கியுள்ளான்.

பணம் தர அவர்கள் மறுத்தால் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என பகிரங்கமாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான். இறுதியில் பொறியில் சிக்கிய எலியைப்போல போலீசின் பிடியில் மாட்டிக்கொண்டான்.

போலீஸ் இவன் லீலைகளை பார்த்து அதிர்ந்து, பெண்களை எப்படி டார்சர் செய்தானோ அதேபோல் டாச்சர் செய்து துடிக்க துடிக்க ஸ்டேசனுக்குள் வைத்து துவைத்துள்ளனர். இதில் இருந்த இடத்திலேயே காசி உச்சாபோய்விட்டான்.

அன்று பொள்ளாச்சி கும்பல், அதன் பிறகு காதல் மன்னன் கண்ணன் தற்போது நாகர்கோயில் காசி என இவனை போன்ற ஸ்லீப்பர் செல்ஸ் இன்னும் எத்தனை பேர் இருக்கிறாங்கனு தெரியவில்லை.

3

பேஸ்புக் வீடியோ கால் ஒரே நேரத்தில் 50 பேர் வரை பேசலாம் வேற லெவல்

0

பேஸ்புக் வீடியோ கால் ஒரே நேரத்தில் 50 பேர் வரை பேசலாம் வேற லெவல், பேஸ்புக் மேஸ்செஞ்சர் செயலில் புதிதாக அறிமுகப்படுத்திய ரூம் ஆப்ஷனில் 50 நபர்கள் வரை வீடியோ கால் பேசலாம்.

கொரோனா பாதிப்பால் உலகமே ஊரடங்கில் இருக்கும் வேலையில் வீடியோ கால் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக குரூப் வீடியோ கால் செய்வோரின் எண்ணிக்கை.

இதில் பெரும்பாலோனோர் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அவர்கள் குரூப் வீடியோ கால் செய்யும் தேவையும் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் ஜும் செயலியில் மட்டும் ஒரு நாளைக்கு 300 மில்லியன் தினசரி பயனாளர்கள் இருக்கின்றனர். இதுவே பேஸ்புக் திடீரெனே இந்த வசதி கொண்டு வார காரணமாக அமைந்தது.

இதில் பேஸ்புக்கில் இல்லாதவர்களும் அதன் நண்பர்கள் பகிரும் லிங்க்ஐ கிளிக் செய்து இணையலாம். மேலும் தற்போது இந்த சேவை பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் உலகத்தில் இருக்கும் அனைவரும் பயன்படுத்தாலம். இதன் சேவைகள் இன்னும் மேம்படுத்தபட்டு வருகின்றன. மேலும் பயனாளர்களின் அனைத்து தகவல்களும் பாதுகாக்கப்படும் என பேஸ்புக் உறுதி அளித்துள்ளது.

3

கல்லூரிகள் திறக்க செப்டம்பர் வரை ஆகலாம் யு‌ஜி‌சி ஆலோசனை

0

கல்லூரிகள் திறக்க செப்டம்பர் வரை ஆகலாம் யு‌ஜி‌சி ஆலோசனை, கல்லூரி 2020-21ஆம் கல்வி ஆண்டு தொடங்குவதை பற்றி யு‌ஜிசி ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளது. இதனால் செமெஸ்டெர் தேர்வுகள் கூட எழுத இயலாமல் மாணவர்கள் வீட்டிலையே தங்கிவிட்டனர்.

இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்ததும் மார்ச் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அடைக்கப்பட்டது. ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கபட்டது.

பின்னர் அது மே 3ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. தற்போது நோயின் தீவிரம் குறைந்த பாடக இல்லை அதனால் கல்லூரிகள் திறக்க செப்டெம்பர் மாதம் கூட ஆகலாம்.

கொரோனா பரவல் காரணமாக நுழைவுத் தேர்வுகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது.

3

நாகர்கோவில் சுஜி: பள்ளி மாணவி முதல் டாக்டர் வரை; 1TB Hard Disk நிறைய படம்

0

நாகர்கோவில் சுஜி பெள்ளாச்சி கும்பலுக்கும் ஒரு படி மேல்! ஒன் மேன் ஆர்மியாக பல பெண்களின் கற்புகளை சூறையாடி உள்ளான். ஆள் மட்டும் தான் ஒருவன் பெயர்கள் பல.

காசி, சுஜி, டெமோ, மேடி என நகர்கோவில் ப்ளே பாயாக வலம் வந்து உள்ளான். ஆடம்பர பைக், கட்டு மஸ்தான உடல், கொஞ்சும் பேச்சு இதை வைத்து பெண்களை வலையில் வீழ்த்தியுள்ளான்.

இவனிடம் ஏமாந்தவர்கள் ஏராளும். அதில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை படுக்கையறை கூட்டி சென்று ஒரு மினி படப்பிடிப்பே நடத்தி உள்ளான்.

தமிழகத்தின் ஜானி சின்ஸ் என்கிற அளவிற்கு 1TB ஹார்ட்டிஸ்க் முழுவதும் எக்கச்சக்க பெண்களின் ஆபாச வீடியோவை வைத்து இருந்ததை கண்டு போலீசாரே அதிர்ந்து உள்ளனர்.

பள்ளி மாணவி, கல்லூரி பெண்கள், ஆசிரியை, டாக்டர், என லிஸ்ட் பெரிதாக உடனே போலீசார்  ஜானி என்கிற காசியை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காசி சிக்கியது எப்படி?

நாகர்கோவில் கணேசாபுரம் பகுதியைச் சேர்ந்த காசி பி.ஏ. படித்து முடித்துவிட்டு அவன் அப்பா நடத்தி வந்த கறிக்கடையில்  வேலை செய்துள்ளான்.

கல்லூரி படிப்பின்போதே கால் பாயாக வலம் வந்துள்ளான். இவன் செயல்பாடு பெண் டாக்டருக்கு பிடித்துப்போக இவனுடன் நெருக்கமாக பழகி உள்ளார்.

அந்த டாக்டரில் ஆரம்பித்த காசி தானிடம் சிக்கும் அனைத்து பெண்களின் வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு டார்சர் செய்து உள்ளான்.

பணம் கேட்டு மிரட்டுவது மட்டும் இல்லாமல், பாலியல் படங்களில் வருவது போன்று செய்ய சொல்லி கொடுமை செய்து உள்ளார்.

பேஸ்புக் மூலம் பெண்களை பற்றி உயர்வாக பேசுவது, ஜிம் பாடி புகைப்படங்களை பதிவு செய்வது எனப் பெண்களை கவரந்து வலையில் வீழ்த்தியுள்ளான்.

இவனிடம் முதலில் சிக்கிய பெண் டாக்டர் விஷயம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என ஏராளமான பணத்தை அள்ளிக்கொடுத்து உள்ளார்.

ஆனாலும் காசி அடங்கவில்லை, பொன் முட்டையிடும் வாத்தை ஒரே அடியாக அறுத்து தங்கத்தை அள்ளலாம் என நினைத்து டாக்டரை மிரட்டி உள்ளனர்.

இந்தமுறை டாக்டர் இதற்கு மேல் பணம் கொடுக்க முடியாது எனக் கறாராகக் கூற கடுப்பான காசி, டாக்டரின் வீடியோவைபோலி ஐடி மூலம் பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளான்.

இதற்கு மேல் வெளியில் தெரிய என்ன உள்ளது என டாக்டர் நேராக போலீசில் புகார் செய்ய கையும் களவுமாக காசி சிக்கிக்கொண்டார்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல காசியே தனுக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டு தற்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு உள்ளான்.

காசி தனி ஆளா?

சமீபத்தில் தான் பொள்ளாச்சியில் கூட்டு பாலியல் கும்பல் சிக்கியது. அதுபோல் காசி மட்டும் இதை செய்தானா அல்லது கேங் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்தனர்.

காசி ஒரு ஆள் தான் ஆனால் பல பெயர்களில் பல பெண்களின் வாழ்கையை சீரழித்து உள்ளனர். பணம் உள்ளவர்களிடம் பணமும், பணம் இல்லாதவர்களிடம் இஸ்டப்படி நட என கஷ்டப்படுத்தியுள்ளான். போகப்போகத்தான் தெரியும் காசியிடம் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று.

3

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது

0
வானிலை அறிக்கை

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது, தமிழகத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பேரன்ஹிட்டை வரை வெயில் அடித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை கொதிக்கும் அளவிற்கு வெப்பத்தை சூரியன் காக்கி வருகிறது.

அந்த நேரங்களில் வெளியில் செல்வதற்கே அச்சத்தை உண்டு பண்ணுகிறது. தமிழகத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானது.

அதிகபட்சமாக, திருத்தணியில் 106 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரியும், கரூா் பரமத்தி, சேலம், வேலூரில் தலா 104 டிகிரியும் அடித்துள்ளது.

மேலும் தருமபுரி, நாமக்கல், மதுரை விமானநிலையத்தில் தலா 102 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

இன்று லேசான மழை மற்றும் 96 டிகிரி வரை வெப்பநிலை பதிவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

3

செர்னோபில் விபத்து நினைவு நாள் வரலாற்றில் இன்று

0

செர்னோபில் விபத்து நினைவு நாள் வரலாற்றில் இன்று, Chernobyl Disaster Explanation or Chernobyl Nuclear Accident History. செர்னோபில் அணு உலை விபத்து.

1986ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் உலையில் நடந்த விபத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகள் மிகுந்த சேதம் அடைந்தன.

1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி அந்த உலையிலுள்ள குளிர் சாதன உறை வேலை செய்யவில்லை. இதனால் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு தீ பிடிக்க ஆரம்பித்தது.

அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின.

இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது. உலகிலயே மிக மோசமான அணு உலை விபத்து இதுவாகும்.

செர்னோபில் விபத்து விளைவுகள்

விபத்து ஏற்படும் பொழும் இதன் ஆபத்துக்கு ஏற்பாற்போல் உயிர்ழப்புகள் ஏற்படவில்லை. முதலில் 30 பேர் உயிரழந்தனர். பின்னர் படிப்படியாக 2000 பேர் வரை இறந்தனர்.

உடனடி விளைவை விட வருங்கால சந்ததிகளை அதிகம் பாதிக்கும் வண்ணம் காற்று, நிலம், நீர் ஆகியைவைகளில் இதன் கதிர்வீச்சு கலந்துள்ளது. அதனால் அணு உலையை சுற்றி 30 கிமீ வரை மக்கள் வசிப்பதற்கு அனுமதி இல்லையாம்.

இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை,

இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின.

3

டுவிட்டரில் டிரெண்டான அன்புள்ள சூர்யா!

0
Anbulla Suriya

டுவிட்டரில் டிரெண்டான அன்புள்ள சூர்யா! கடந்த சில தினங்களாக சூர்யா பற்றிய செய்தி வந்து கொண்டே இருக்கும் நிலையில், டுவிட்டரில் அன்புள்ள சூர்யா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அன்புள்ள சூர்யா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிப்பதைத்த் தொடர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி கொடுத்து வருகிறார்.

அதோடு, உதவி என்று வந்தால் ஓடோடி உதவி செய்யக்கூடியவர். தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படம் மே மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சூர்யா பற்றிய செய்தி வந்து கொண்டே இருக்கிறது. ஒன்று, சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ.

இந்தப் படத்தின் வெய்யோன் சில்லி யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதையடுத்து, சூர்யா தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த தகவலைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இனிமே, பொன்மகள் வந்தாள் படத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் படமோ வெளியானால் அது நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் தான் வெளியாகும்.

திரையரங்கில் வெளியிடப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. இது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தான் டுவிட்டரில் அன்புள்ள சூர்யா என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் நேற்று முதல் டிரெண்டானது.

ஏன் என்று பார்த்த போதுதான் சூர்யாவைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்ததைத் தொடர்ந்து இது போன்று அன்புள்ள சூர்யா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.

அதோடு, சூரரைப் போற்று படத்தின் மூலமாக சூர்யா 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் என்பதையும் ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை பகிர்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சூரரைப் போற்று அடுத்த பாடலை அறிவித்த ஜிவி பிரகாஷ்!

0
Soorarai Pottru

சூரரைப் போற்று அடுத்த பாடலை அறிவித்த ஜிவி பிரகாஷ்! சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் டைட்டிலை ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டைட்டிலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

வரும் மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா என்று அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

அதன்படி அந்தப் பாடலுக்கு காட்டுப்பயலே என்று டைட்டில் வைத்துள்ளார். இந்தப் பாடலை ரௌடி பேபி பாடலை பாடிய தீ பாடியுள்ளார்.

சினேகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். குத்தாட்டம் போட வைக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு எனர்ஜெடிக் டிராக். டான்ஸ் டிராக். மேலும், இந்தப் பாடல் எப்போது வெளியாகும் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மே 1 ஆம் தேதி காட்டுப் பயலே டைட்டில் டிராக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

THALABDayCarnivalBegins: தொடங்கியது தல அஜித்தின் பர்த்டே கார்னிவல்!

0
thala birthday

THALABDayCarnivalBegins: தொடங்கியது தல அஜித்தின் பர்த்டே கார்னிவல்! தல அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், THALABDayCarnivalBegins என்ற ஹேஷ்டேக் மூலம் தல ரசிகர்கள் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.

அஜித் பிறந்தநாளுக்கு முன்னதாகவே தல ரசிகர்கள் THALABDayCarnivalBegins என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் மூலம் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமே உச்சம் தொட்டவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவருக்கு மட்டுமல்ல, தல அஜித் என்ற பெயருக்கு கலங்கம் நேர்ந்தால் இவரது ரசிகர்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள். வேறு யாரேனும், அஜித் பெயரை தவறாக பயன்படுத்தவும் விடமாட்டார்கள்.

அஜித் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

எப்போதும், யாரைப் பற்றியும் தவறான கருத்துக்களை பதிவு செய்யவும் மாட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 20 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

இதன் காரணமாக தற்போதே அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், THALABDayCarnivalBegins என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும், அஜித் நடித்த ஹிட் படங்கள், அவரது பாடல்கள், அவரது நடிப்பில் வந்த முக்கியமான காட்சிகள், காதல் காட்சிகள் என்று பலவற்றையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இப்போதிலிருந்தே அஜித் பிறந்தநாளை வருகின்றனர்.

3

மராட்டியத்தில் 96 காவலர்களுக்கு தொற்றியது கொரோனா

0
96 காவலர்களை தாக்கியது கொரோனா வைரஸ்

மும்பை: மராட்டியத்தில் இதுவரை 96 காவலர்களுக்கு தொற்றியது கொரோனா வைரஸ் , இதில் 15 அதிகாரிகளும் அடங்குவார்கள். சனிக்கிழமை வரையிலான ஊரடங்கில் பணியாற்றியவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“மராட்டியத்தில் இதுவரை 96 காவலர்கள், 15 காவல் அதிகாரிகள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது”, என அவர் தெரிவித்தார்.

அந்த பாதிக்கப்பட்ட காவலர்களில் 3 அதிகாரிகள் மற்றும் 4 காவலர்கள் ஆகியோர் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டனர் மற்றுமல்லாது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர், என்று அவர் தெரிவித்தார்.

14,955 மக்கள் கைது

மேலும அந்த அதிகாரி 69,374 விதிமீறல்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 188 இன் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும் மற்றும் 14,955 பேர் இந்த ஊரடங்கு சமயத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்

“இதில் 147 முறை காவலர்கள் மேல் தாக்குதல்கள் நடத்தபட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் 477 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும் நடந்துள்ளது. மொத்தம் 602 பேர் ஊரடங்கை மீறியது தொடர்பாக கண்கானிக்கப்பட்டு மீண்டும் தனிமை படுத்தப்பட்டனர்”, என அவர் தெரிவித்தார்.

47,168 வாகனங்கள் பறிமுதல்

மேலும் அவர் 1,084 வழக்குகள் சட்டத்தை மீறி போக்குவரத்தில் ஈடு பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் 47,168 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மற்றும் ரூ. 2.63 கோடி மதிப்பிலான அபராதங்கள் விதிக்கப்பட்டது, என அவர் தெரிவித்தார்.

கொரோனா சம்மந்தமாக மொத்தம் 77,670 சந்தேகங்கள் கேள்விகளாக கட்டுப்பாட்டு மையங்களில் கேட்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

3 வார நீண்ட நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 24 இரவு முதல் கடைபிடிக்கப்பட்டு, பிறகு மே 3 வரை அது நீடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

3