Home Blog Page 116

27/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

27/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே சண்டை வர வாய்ப்புண்டு. தேவையற்ற பிரச்சனைகளை எதிர்க் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசிபலன்

இன்றைய தினம் தொழில் சிறப்பாக நடைபெறும் நாளாக இருக்கும். தனவரவினால் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் சிறந்த பலன்கள் கிடைக்கும். சிறப்பான நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும்.  சிறந்த பலன்களை பெற வாய்ப்புகள் அதிகம். மாணவர்களின் கல்வி சிறப்பாக அமையும். தாயார் வழியில் இருந்த சொத்து பிரச்சனைகள் தீரும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் மனக்கவலையுடன் காணப்படுவீர்கள். சகோதரர்களால் பிரச்சனைகள் ஏற்படும். தனலாபம் சிறப்பாக இருக்காது. தியானம் செய்ய வேண்டிய நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்வீர்கள். மனநிறைவான நாளாக இருக்கும். தனலாபம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் தீரும். நல்ல நாளாக அமையும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் அதிக பணியால் சோர்வுடன் இருப்பீர்கள். ஓய்வு தேவையான நாளாகும். வெய்யிலில் சுற்றுவதை தவிர்க்கவும். வியாபார பயணங்களை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்றைய தினம் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். குழந்தைகளால் கூடுதல் பலன்களை பெறலாம் . அனைவரும் அன்புடன் இருப்பீர்கள். பொருளாதாரம் சிறந்த நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய தினம் தொழில் சிறப்பாக இருக்கும். நாளிறுதியில் பணவரவு அதிகமாக இருக்கும். பணத்தை சேமித்து வைக்க வேண்டியது அவசியம் ஆகும். வருங்கால கனவுகள் நினைவாகும் நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்று கடன் பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல அணுகுமுறை ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும் நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று நன்மைகளை வழங்க கூடிய நாளாக இருக்கும். உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். கணவன் மனைவியிடையே காதல் பெருகும். இன்று அற்புதமான நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் உழைப்பு அதிகமாக தேவையாகும். அதனால் நாள் முடிவில் நல்ல பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க கூடிய நாளாக இருக்கும். வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மீனம் ராசிபலன் 

இன்று கோபத்தை குறைக்க வேண்டிய நாளாக இருக்கும். அதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். மன அமைதி பெற தியானம் செய்ய வேண்டிய நாளாகும். பணவரவு அதிகமாக காணப்படும்.

27/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

வடகொரிய அதிபர் ‘கிம்’ இறந்துவிட்டாரா?

0
வடகொரிய அதிபர் 'கிம்' இறந்துவிட்டாரா?

வட கொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’ சமீபத்திய நாட்களில் பொது நிகழ்ச்சி, அலுவலக நிகழ்ச்சி மற்றும் ஊடகம் என எதிலும் தலையை காட்டாததால் வடகொரிய அதிபர் ‘கிம்’ இறந்துவிட்டாரா? உயிருடன் உள்ளாரா? என பல விதத்திலும் வதந்திகள் பரவி வருகின்றன.

வடகொரியாவிற்கு 3ஆம் தலைமுறை வாரிசாக கருதப்படும் கிம் அவருடைய தந்தை 2011ல் இறந்த பின்பு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார்.

இப்போது இவருக்கு பின் சரியான வாரிசு இல்லாத நிலையில் அனு ஆயுதம் வைத்திருக்கும் நாடான வடகொரியாவில் யார் அடுத்த ஆட்சியாளர் என தெரியாத நிலை உள்ளது.

அவரை பற்றிய சரியான உண்மைகள் தெரியவராத நிலையில் அவர், தீவிரமான உடல்நலகுறைவால் பாதிப்படைந்து உள்ளார் எனவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், என பலவாறு வதந்திகள் பரவியபடி உள்ளன.

அவர் இறந்துவிட்டார் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் #KIMJONGUNDEAD(கிம்ஜாங்உன் இறந்துவிட்டார்) எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பரவின.

கிம்மை கடைசியாக எப்போது பார்த்தனர் மக்கள்

வடகொரிய ஊடகங்கள் கிம்மை கடைசியாக ஏப்ரல் 11 இல் ஒரு பொது சந்திப்பில் பார்த்ததாக தெரிவிக்கின்றது.

அதற்கு நான்கு நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 15இல் நடந்த கிம்மின் தாத்தா, கிம் இல் சுங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. அனைவரும் கிம் அந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

பத்திரிக்கைகள் செய்தி

திங்கட்கிழமை அன்று, டெய்லி என் கே(Daily NK) எனும் சியோலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வலைதளம் ஒன்று கிம்மிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், புகைப்பழக்கம் மற்றும் உடல் பருமன் காரணமாக இது செய்யப்பட்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் சீனாவிலிருந்து மருத்துவக்குழு ஒன்று வடகொரிய அதிபர் கிம்மைசந்தித்து அலோசனை வழங்கி சென்றுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடகொரிய அதிபர் கிம் உலக வல்லரசான அமெரிக்காவிற்கே சவால் விட்டு உலகை திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சன் தொலைக்காட்சியில் தலைவா: டுவிட்டரில் டிரெண்டாகும் தளபதி விஜய்!

0
Thalaivaa On Sun TV

Thalapathy Vijay On Sun TV; சன் தொலைக்காட்சியில் தலைவா: டுவிட்டரில் டிரெண்டாகும் தளபதி விஜய்! தளபதி விஜய் நடிப்பில் வெளியான தலைவா படம் இன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

தலைவா படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தளபதி விஜய், சத்யராஜ், அமலா பால், சந்தானம் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தலைவா.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படத்தில், விஷ்வா என்ற ரோலில் நடித்துள்ளார்.

அதோடு, டான்ஸரான விஜய், தண்ணீர் சப்ளை செய்யும் பிஸினஸ்மேனாக நடித்துள்ளார்.

சத்யராஜ் இவரது அப்பா. மும்பை டான். ஒரு கட்டத்தில் போலீஸ் அதான் ஏசிபி அதிகாரியான அமலா பால் சத்யராஜை கைது செய்கிறார்.

ஆனால், போலீஸ் வாகனத்தில் சத்யராஜ் ஏறியவுடன் பாம் வெடித்து அவர் பரிதாபமாக உயிரிழக்கிறார்.

இதையடுத்து விஜய் மும்பை டானாகிறார். அமலா பால், தனது வேலையை ராஜினாமா செய்து விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிறார். இது தான் கதை.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலை விஜய் மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது.

இப்படத்தின் மூலம் அமலா பால் மற்றும் இயக்குநர் ஏ.எல், விஜய் காதலர்களாக மாறியுள்ளனர். இந்த நிலையில், இந்தப் படம் திரைக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன நிலையில், பலமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில், தலைவா படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

3

விஜய்யோடு போட்டி போட்ட ஷில்பா ஷெட்டி: வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் சேலஞ்ச்!

0
Shilpa Shetty

Shilpa Shetty; விஜய்யோடு போட்டி போட்ட ஷில்பா ஷெட்டி: வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் சேலஞ்ச்! நடிகை ஷில்பா ஷெட்டி விஜ்ய நடித்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

ஷில்பா ஷெட்டி, விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தினந்தோறும் அறிவுறுத்தப்பட்ட வரப்படுகிறது.

எப்போதுமே பிஸியாக இருந்த பிரபலங்கள் இப்போதும் தங்களை பிஸியாகவே வைத்திருக்கின்றனர்.

ஆம், வீட்டில் சமையல் செய்வது, சுத்தம் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, விவசாயம் செய்வதற்கு உழுது போடுவது, துணி துவைப்பது, ரசிகர்களுடன் உரையாடுவது, ஒருவருக்கொருவர் சேலஞ்ச் டாஸ்க் கொடுப்பது என்று பிஸியாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை ஷில்பா ஷெட்டி டிக் டாக்கில் ஒரு டாஸ்க் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஷில்பா ஷெட்டி விஜய்யுடன் போட்டி போட்டுள்ளார் என்றும், மாஸ்டர் கம்மிங் பாடலுக்கு விஜய் நன்றாக ஆடுகிறாரா? இல்லை ஷில்பா ஷெட்டி நன்றாக ஆடுகிறாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னதாக பிரபலங்கள் பலரும் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கருப்பன் நடிகை தன்யா ரவிச்சந்திரன் பர்த்டே டுடே!

0
Tanya Ravichandran

கருப்பன் நடிகை தன்யா ரவிச்சந்திரன் பர்த்டே டுடே! பலே வெள்ளையத் தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தன்யா ரவிச்சந்திரன் இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தன்யா ரவிச்சந்திரன் பிறந்தநாள் இன்று.

சசிகுமார், கோவை சரளா நடிப்பில் வந்த பலே வெள்ளையத் தேவா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பலே வெள்ளையத்தேவா.

இப்படத்தைத் தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தாத்தா மலேசியன் நடிகர். அம்மா, லாவண்யா ஸ்ரீராம் ஒரு கிளாசிகல் டான்சர். ஆகையால், அவர் மூலமாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டார்.

இளங்கலை வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற இவர், மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருந்த புதிய படத்தின் ஆடிஷனுக்கு சென்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆடிஷனுக்கு சென்ற தன்யா படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது மிஷ்கின், அபிராமி என்ற அவரது பெயரை தன்யா என்று மாற்றிக்கொள்ளும்படி கூறினார்.

அவர் கூறியதைத் தொடர்ந்து, அபிராமி தனது பெயரை தன்யா என்று மாற்றிக்கொண்டார்.

ஆனால், மிஷ்கின் இயக்கத்தில் தன்யா நடிக்க இருந்த படம் துப்பறிவாளன் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்குப் பிறகு தொடங்க இருந்தது.

மிஷ்கின் படத்தில் நடிக்க இருந்த தன்யா, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வந்த பிருந்தாவன் படத்தில் நடித்தார். இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

ஆனால், இதற்கு முன்னதாக சசிகுமார், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் வந்த பலே வெள்ளையத்தேவா படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில், இன்று தனது, 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

0
Thala Birth Day

Thala Ajith Birthday; பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்! வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

தனது ரசிகர்களுக்கு அஜித் கனிவான வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமே உச்சம் தொட்டவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவருக்கு மட்டுமல்ல, தல அஜித் என்ற பெயருக்கு கலங்கம் நேர்ந்தால் இவரது ரசிகர்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள். வேறு யாரேனும், அஜித் பெயரை தவறாக பயன்படுத்தவும் விடமாட்டார்கள்.

அஜித் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். எப்போதும், யாரைப் பற்றியும் தவறான கருத்துக்களை பதிவு செய்யவும் மாட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 20 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

இதன் காரணமாக தற்போதே அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், THALABDayCarnivalBegins என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக ஆதவ் கண்ணதாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள தல ரசிகர்களே… அஜித் சாரின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அவரது பிறந்தநாளுக்கு எந்த common DP புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வைக்க வேண்டாம் என்றும், கொரோனா காலத்தின் போது எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபட வேண்டும் என்றும் அஜித் விரும்புவதாக வேண்டுகோள் வைத்தார்கள்.

இதையடுத்து, ஒரு நடிகனாக, மனிதனாக, ரசிகனாக அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். இதை ரசிகர்களிடம் தெரியப்படுத்தலாமா என்று கேட்டதற்கு தயவு செய்து அவர்களிடம் கூறுங்கள் என்றார்.

அவரது வேண்டுகோளுக்கிணங்க இதை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். இந்த கடினமான காலகட்டத்தில் அனைவருக்கும் நலமான வாழ்வு கிடைக்கப் பிரார்த்தனை செய்வோம். அஜித்தின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்போம். உங்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

3

வாழ்க்கையில் ஏமாற்றங்களையே சந்தித்த சமுத்திரக்கனி பர்த்டே டுடே!

0
samuthirakani

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நடிகர் சமுத்திரக்கனி இன்று தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ராஜபாளையம் அருகிலுள்ள செய்தூர் என்ற பகுதியில் பிறந்தவர் நடிகர் சமுரக்கனி. கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பிறந்தவர்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுகள் உடன் வந்த சமுத்திரக்கனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், ஒரு நடிகனாக வருவதற்குரிய தகுதி இல்லை என்று கூறி மக்கள் இவரை உதாசினம் செய்துள்ளனர்.

அப்போதுதான் பாண்டிராஜன் நடிப்பில் வந்த படிக்கிற வயசுல படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆம், படிக்கிற வயசுல படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் விஜயன் என்பவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சமுத்திரக்கனி, 100 ஆவது படமான, கே பாலசந்தரின் பார்த்தாலே பரவசம்  படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இந்தப் படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். ஆனால், அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தொடர்ந்து நெறஞ்ச மனசு, பொய், பருத்துவீரன் ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சசிகுமார் இயக்கத்தில் வந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

சாட்டை படம் நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. இதே போன்று வேலையில்லா பட்டதாரி படமும் அப்படிதான் அமைந்தது. தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஏராளமான படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணி பாடகர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

பொள்ளாச்சி ரேப்பிஸ்ட் பற்றி காசி வெளியிட்ட வீடியோ: அப்படித்தான் செய்வோம் நாங்க

0
பொள்ளாச்சி ரேப்பிஸ்ட் kaasi video

பொள்ளாச்சி ரேப்பிஸ்ட் பற்றி காசி வெளியிட்ட வீடியோ(காசி வீடியோ (nagarcoil kaasi video): அப்படித்தான் செய்வோம் நாங்க, பொண்ணுங்க ரொம்ப யோக்கியமா என்கிற பாணியில் காசி வெளியிட்ட வீடியோ

நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான காசி என்ற இளைஞர் பள்ளி மாணவிகள் முதல் பெண் டாக்டர் வரை நாடகக் காதல் செய்து ஏமாற்றியுள்ளார்.

பெண் மருத்துவர் ஒருவரிடம் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளான் இந்த காசி. அவரிடம் பழகி எடுத்த அந்தரங்க படங்களை வைத்து பெண் மருத்துவரை மிரட்டி வந்துள்ளான்.

அதில் பயந்த அவர் கேட்கும்போதெல்லாம் பணம் என 5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத அவர் போலீஸிடம் புகார் அளித்து விட்டார்.

இதனால் காசி தற்பொழுது லாக்கப்பில் லாடம் கட்டப்பட்டு ஸ்டேசனில் கம்பி எண்ணிக்கொண்டு உள்ளான்.

பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது அந்த கும்பலுக்கு ஆதரவாக காசி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளான். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொள்ளாச்சி கும்பல் அதிமுக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் காசி பாஜக கட்சியைச் சேர்ந்தவன் என்பது அவனது பேஸ்புக் பதிவு மூலம் உறுதியாகி உள்ளது.

காசியும், பாஜக கட்சியின் பவரை பயன்படுத்தி தவறாக நடந்துகொண்டாரா என்கிற பாணியிலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி ரேபிஸ்ட் பற்றி காசி பேசியதாவது,

“அப்பப்பா எங்க பாத்தாலும் பொள்ளாச்சி ரேப்பிஸ்ட்.. பொண்ணுங்க எல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிட்டு இருக்கீங்க, பெர்பெக்ட்டா இருக்குற மாதிரி.

வாய்ப்ப நீங்களே உருவாக்கி கொடுத்துட்டு அம்மா போச்சு.. அப்பா போசுனுன்னா எப்டி திரும்பி வரும்? வீட்டுல வளத்த கன்னுக்குட்டி ரோட்டுக்கு தான் போவேன்னா ரோட்டுல போற லாரி அடிபட்டு சாகத்தான் செய்யும்” என காசி அந்த வீடியோவில் பேசி உள்ளான்.

காசி வீடியோ (nagarcoil kaasi video)

காசிக்கு வந்த நல்ல நேரம் தமிழகத்தில் தற்பொழுது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இந்த பிரச்சனை அரசியலாகப்படவில்லை. போராட்டங்களும் பெரிய அளவில் வெடிக்கவில்லை.

இருப்பினும் காசியால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியாமாக வெளியில் வந்து சொன்னால் மட்டும் தான் முழு உண்மையும் வெளியில் தெரிய வரும்.

3

நாயகன் புகழ் சரண்யா பொன்வண்ணன் பர்த்டே டுடே!

0
Saranya Ponvannan

நாயகன் புகழ் சரண்யா பொன்வண்ணன் பர்த்டே டுடே! கமல் ஹாசன் நடிப்பில் வந்த நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சரண்யா பொன்வண்ணன் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் இன்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். கடந்த 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி ஆலப்புழாவில் பிறந்துள்ளார். இவரது இயற்பெயர் ஷீலா கிறிஸ்டினா ராஜ்.

கமல் ஹாசன் நடிப்பில் வந்த நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இயக்குநர் மணிரத்னம் தான் இவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோயின், காமெடி ரோல், குணச்சித்திர வேடங்களில் என்று எந்த ரோல் கொடுத்தாலும் கச்சிதமாக நடித்து கொடுக்ககூடியவர்.

கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 8 வருடங்கள் கழித்து மீண்டும் 2003 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்தார்.

ராம், தவமாய் தவமிருந்து, எம் மகன் ஆகிய படங்கள் முக்கியமான படங்களாக கருதப்படுகிறது.

நடிப்பைத் தொடர்ந்து, மாடல், பேஷன் டிசைனர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

தேசிய விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது, ஆனந்த விகடன், விஜய் விருது, எடிசன் விருது, நார்வே தமிழ் திரைப்பட விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்க, நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னா: வைரலாகும் புகைப்படம்!

0
Tamannaah Pillow Challenge

Tamannaah Pillow Challenge; ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னா: வைரலாகும் புகைப்படம்! லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் தமன்னா உடலில் ஆடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamannaah Pillow Challenge: ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த தமன்னாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் விதவிதமான சேலஞ்ச் செய்து வருகின்றனர்.

மேலும், வீட்டு வேலைகள் செய்வது, தோட்ட வேலை செய்வது, சமையல் செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில், தமன்னா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், #feelingfancybutnowheretogo #weekendvibes #quarantinePillowchallenge #Pillowchallenge என்ற ஹேஷ்டேக்குகள் பதிவிட்டு, உடலில் துணி இல்லாமல் தலையணை மட்டும் வைத்து அந்த புகைப்படம் எடுத்துள்ளார்.

தமன்னாவின் தலையணை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் தமன்னாவின் அந்தரங்க வீடியோ வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

3