Home சினிமா Jojo Rabbit – ஜோஜோ ராபிட்: ஆஸ்கார் வென்ற ஹிட்லர் மூவி

Jojo Rabbit – ஜோஜோ ராபிட்: ஆஸ்கார் வென்ற ஹிட்லர் மூவி

733
1
Jojo Rabbit - ஜோஜோ ராபிட்: ஆஸ்கார் வென்ற ஹிட்லர் மூவி

Jojo Rabbit: 2020 ஆஸ்கார் விருது வென்ற ஹிட்லர் மூவி. ஹிட்லர் வாழ்க்கை பற்றிய கற்பனை நகைச்சுவை திரைப்படம் ஜோஜோ ராபிட் திரைவிமர்சனம். movie review in tamil.

ஜோஜோ ராபிட் திரைவிமர்சனம் (movie review in tamil)

ஒரு படம் தான் சொல்ல வந்ததை வெறுமனே சொல்லிவிடுவதற்காக அல்ல. தான் சொல்லப்போவதையோ, சொல்லியிருப்பதையோ படம் பார்ப்பவர்களிடத்தில்  கவனத்தை தூண்ட வேண்டும்.

சொல்லிய கதையை, கருத்தை ஏற்கிறார்களோ? நிராகரிக்கிறார்களோ? என்பதெல்லாம் வேறு. கதையின் கருத்தை அக்கதையினூடே பிசறாமல் சொல்லிவிட வேண்டும்.

அதற்காக நீங்கள் எந்த வழியிலும் திரைக்கதையை முன்னெடுக்கலாம். ஆனால் அது அக்கதையின் கருவினூடே நிகழ வேண்டும். இப்படியான ஒன்றை தான் ஜோஜோ ராபிட்(Jojo rabbit) எனும் ஆங்கிலப்படம் செய்துள்ளது.

ஜோஜோ ராபிட் கதைக்கரு

2020 ஆஸ்கார் விருது ஹிட்லர் வாழ்க்கை

ஹிட்லர் வாழ்க்கை சமந்தப்பட்ட கதை என்றாலே சொல்வதற்கு கடினம், நேரடியாக நடந்ததை சொன்னால் முகச்சுளிப்பு ஏற்படும்.

கொடூரமான நிகழ்வுகளைக் காட்டவேண்டும். விண்ணை மிரட்டும் அளவிற்கு போர்க்காட்சிகள் இருக்கவேண்டும்.

எனவே, சவால்களும் உயரங்களும் இருக்கும்போது நகைச்சுவையுடன் ஹிட்லர் சமந்தப்பட்ட கதையை எளிமையாக சொல்லியிருக்கிறது ஜோஜோ ராபிட் திரைப்படம்.

ஹிட்லரின் கொள்கைகளை பெரிதும் விரும்பும், ஜெர்மனி ராணுவப்படையில் சேர்ந்து போருக்கு செல்ல முற்படுபடுபவன், யூதர்களை வெறுப்பவன் போன்ற உணர்வுகளை கொண்ட பத்து வயதே ஆன ஒரு சிறுவன் பார்வையிலிருந்து இக்கதையை காண்பித்திருக்கிறார்கள்.

தனது அப்பா போரில் இருக்கிறாரென்று சொல்லிக்கொண்டிருக்கும், அச்சிறுவன் அவன் அம்மாவோடுதான் வசிக்கிறான்.

அவன் அம்மா முடிந்தவரை அவனுக்கு போர் முட்டாள்தனம் என்பதையும் யூதர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள் என்றும்  கூறுகிறார்.

ஆனால், அவன் அதை ஏற்க மறுக்கிறான். பின்னொரு நாளில் இதையெல்லாம் அவன் எப்படி ஒப்புக்கொள்கிறான் என்பதை நகைச்சுவை காட்சிகளுடன் சில கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளுடனும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

காட்சியமைப்புகள்

படத்தில் சிறுவன் அவ்வபோது தனது கற்பனை ஹிட்லருடன் பேசுவதாக தோன்றும் காட்சிகள் அனைத்துமே காமெடி கலந்த யோசிக்கதூண்டும் உரையாடல்களை கொண்டது.

ஹிட்லரின் நாசிக் கட்சி, யூதர்களை பார்த்த விதத்தையும் ஜெர்மனியில் அரங்கேறிய சில விஷயங்களையும் கூட எளிமையாக சொல்லியிருக்கிறார்கள்.

யூத இனத்தை சார்ந்த ஒரு பெண் வீட்டில் இருப்பதை கண்டறிந்த பிறகு சிறுவன் செய்யும் செயல்கள் ஹிட்லரின் கொள்கைகளில் சிலதை
எளிமையாக புரியவைக்கின்றன.

அதேசமயம் ஒரு சிறுவன் தன் எண்ணங்களில் எவ்வளவு தூய்மையாக இருப்பான் என்பதையும் உணர்த்தியிருக்கிறார்கள்.

முயலை கொல்ல சொல்லும்போதும், பெண் வருந்துகிறாள் என்பதற்காக கடிதத்தை மாற்றி மாற்றி எழுதும்போதும் சிறுவர்களின் நல்லெண்ணம் இப்படியானதுதான் என்ற கூற்றை படரவைக்கிறது கதை.

காதல் பற்றி அம்மா கதாப்பத்திரம் சொல்லும்போதும், வீட்டில் உள்ள அப்பெண் கதாபாத்திரம் சொல்லும்போதும் மனம் தெளிவாகிறது.

அம்மாவுக்கும் வீட்டில் உள்ள யூதப்பெண்ணுக்குமான உரையாடல்கள் இறுதியில் நம்பிக்கையை விதைக்கும் படியாகவே இருக்கிறது.

படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் சிறுவன் வீட்டை சோதனைச்செய்ய வரும் அனைத்து அதிகாரிகளும் “heil Hitler” என்ற கோஷத்தை அத்தனை முறை சொல்வது வேடிக்கையாய் தோன்றும் அதேசமயம் அதன் பின்னுள்ள சர்வாதிகாரமும் மடமைத்தனமும் அப்பட்டமாய் தெரியும்.

பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்

சிறுவனின் நடிப்பு அட்டகாசம். அவனின் தேர்வும் அவனிடமிருந்து இந்தளவு நடிப்பை வாங்கியதும் பிரம்மிக்கிறது. மற்றவர்கள் நடிப்பும் சற்றும் குறைந்ததல்ல.

இசையும் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி பிடித்திருக்கின்றன. குறிப்பாக படத்தின் இறுதி காட்சிகளில் இசை மென்மையாக சென்று விழாவாக முடிவதெல்லாம் சிறப்பாய் அமைந்திருந்தது.

மெனக்கெடல்கள் எதுவுமே இல்லாதது போல் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டக்குறியது.

படத்தின் இறுதி பத்து நிமிடங்கள் காட்சி, இசை, நடிப்பு, உரையாடல் என அனைத்திலும் ஒரு புன்னகையை விதைக்கச்செய்கிறது.

இனிமையை, சிலிர்ப்பை, நம்பிக்கையை, அன்பை, படம் பார்ப்பவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது ஜோஜோ ராபிட்!

மேலும் ஜோஜோ ராபிட் (Jojo rabbit) திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு best adapted screenplay-விற்கான ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Let everything happen to you
Beauty and terror
Just keep going
No feeling is final.
                – rainer maria rilke.

என்ற வரிகளை மேற்கொள்காட்டி படம் நிறைவடைகிறது.

நகைச்சுவையுடன் மற்ற உணர்வுகளையும் உணர விருப்பமிருப்போர் நிச்சயம் இப்படத்தை நம்பிக்கையுடன் பார்க்கலாம்.

படத்தின் நேர அளவு இரண்டு மணி நேரத்திற்கு குறைவானதே என்பதால் நேரம் கிடைக்கும்போது இப்படத்தை பார்த்துவிடுங்கள்.

திரைப்படம் உங்களுக்கு உங்கள் வாழ்வின் மீது நம்பிக்கையை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் ஒரு முறை பாருங்கள்!

jojo rabbit 2020 ஆஸ்கார் விருது வென்ற ஹிட்லர் மூவி. சென்னையில் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

Previous article20/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleV Unbeatable: அமெரிக்காவின் “காட் டேலண்டை” வென்ற இந்திய நடன குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here