Home Blog Page 154

சன் டிவி ரூ.10 கோடி நிதியுதவி!

0

Sun TV Donation; சன் டிவி ரூ.10 கோடி நிதியுதவி! சன் டிவி குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இணைந்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 கோடி அறிவித்துள்ளன.

கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர்.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது சன் டிவி நிறுவனமும் கொரோனா பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.10 கோடி அறிவித்துள்ளது. இது குறித்து சன் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரொனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சன் குழுமத்தின் 6000க்கும் அதிகமான பணியாளர்கள், தங்களது ஒருநாள் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க முன் வந்துள்ளனர்.

சன் டிவி நிறுவனம் அறிவித்துள்ள ரூ.10 கோடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையில் பிரித்து வழங்கப்பட உள்ளது.

Sun TV Donation

மத்திய, மாநில அரசுகளின் நிவாரண திட்டங்களுக்கு நிதி…

வாழ்வாதாரம் இழந்த, புலம் பெயர்ந்த ஊழியர்களின் நலன் மற்றும் கொரோனா வைரஸ் நிவாரணர்த்திற்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடன் இணைந்து பணியாற்றுதல்

திரைத்துறை மற்றும் தொலைக்காட்சியில் தொடர்புடைய அன்றாட தினக்கூலி ஊழியர்களுக்கு நிதியுதவி…

என்று சன் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sun TV had Donate Rs 10 crore to Corona Relief Fund…

3

கொரோனா பீதியிலும் தைரியமாக அடுத்த பட தலைப்பை அறிவித்த விஷ்ணு விஷால்!

0
Vishnu Vishal Next Movie Title

Vishnu Vishal Next; கொரோனா பீதியிலும் அடுத்த பட தலைப்பை அறிவித்த விஷ்ணு விஷால்! நாடே கொரோனா பீதியில் இருக்கும் போது நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் தலைப்பு டீசரை வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால் தான் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பை இன்று அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, கதாநாயகன், ராட்சசன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதில், ராட்சசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது, காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர்., இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து இன்று ஏப்ரல் 11 ஆம் தேதி புதிய படத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடலாமா? வேண்டாமா? என்பது குறித்து ரசிகர்களுடன் அறிவுரை கேட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் அனுமதி அளிக்கவே இன்று புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, விஷ்ணு விஷால் Vishnu Vishal Next தான் நடிக்கும் புதிய படத்திற்கு மோகன் தாஸ் என்று டைட்டில் வைத்துள்ளார். இந்தப் படத்தை களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார்.

விஷ்ணு விஷாலே தனது விவி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

மேலும், மோகன் தாஸ் Mohan Das படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளார். அதில், கையில் சுத்தியுடன் யாரோ ஒருவரை கொலை செய்வது போன்று காட்டியுள்ளார்.

ஆக்‌ஷன், த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்திற்கு மோகன் தாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மோகன் தாஸ் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த Mohan Das Title Teaser டைட்டில் டீசரில் விஷ்ணு விஷால் ஆக்ரோஷமாக கையில் சுத்தி வைத்துக் கொண்டு யாரையோ கொலை செய்வது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், ரத்தக்கறையுடன் படிக்கட்டில் ஏறிச் செல்லும் அவர் வாஷிங் மெஷினில் தனது ரத்தைக் கறை டீசர்ட்டை கழற்றி போடுகிறார்.

மோகன் தாஸ் பட டீசர் இறுதியில், இது உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மோகன் தாஸ் பட டீசரை பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. படம் திரைக்கு வந்தால் சும்மா ரசிகர்களை அதிர வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் இருந்தபடியே தனது அடுத்தபடத்தின் அறிவிப்பை பட டீசரோடு வெளியிட்ட விஷ்ணு விஷாலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் படம் திரைக்கு வந்தது. அந்தப் படத்தில் அவரது கையில் துப்பாக்கி இருந்தது.

தற்போது மோகன் தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் கையில் சுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மோகன் தாஸ் டைட்டில் டீசர், #MOHANDAS #VishnuVishalsNEXT என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Vishnu Vishal announced his next movie title as Mohan Das…

3

முழுசா நடிகர் சந்திரபாபுவாக மாறிய மாகாபா ஆனந்தை பாருங்க!

0
Ma Ka Pa Anand Latest Picture

Ma Ka Pa Anand; முழுசா நடிகர் சந்திரபாபுவாக மாறிய மாகாபா ஆனந்தை பாருங்க! விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் மாகாபா ஆனந்த் தாடி, மீசையை எடுத்து முழுசா நடிகர் சந்திரபாபு மாதிரி மாறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் Ma Ka Pa Anand புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வேகமாகவே வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் நடிகர் VJ Ma Ka Pa Anand மாகாபா ஆனந்த்.

ஆர்.ஜே.வாக தனது பணியை தொடங்கிய மாகாபா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் திகழ்கிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வானராயன் வல்லவராயன் Vanavarayan Vallavarayan படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து நவரச திலகம், கடலை, அட்டி, மீசைய முறுக்கு, மாணிக், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறது. சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

பிரபலமானவர்கள் இன்னும் பிரபலமாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆம், தற்போது வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட வேலைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் பிரபலமடைந்து வருகின்றனர்.

ஆம், வீட்டு வேலை செய்வது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்வது, உடற்பயிற்சி, யோகா, ஓவியம் வரைதல், தோட்டத்தை பராமரித்தல் என்று எப்போதுமே பிஸியாக இருக்கின்றனர்.

இதில், மாகாபா ஆனந்த் மட்டும் என்ன விதிவிலக்கா. இவரும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறார்.

ஆம், இதுவரை மீசை, தாடியுடன் வலம் வந்த மாகாபா ஆனந்த் தற்போது மீசை, தாடியை எடுத்து அந்த காலத்து நடிகர் சந்திரபாபுவாக மாறியுள்ளார்.

Ma Ka Pa Anand Latest Picture

ஒரு கட்டத்தில் பென்சிலால் மீசை வரைந்து அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் மாகாபா ஆனந்தை சந்திரபாபு Actor Chandrababu உடன் ஒப்பிட்டு வருகின்றனர். பார்ப்பதற்கு அப்படியே சந்திரபாபு மாதிரியே இருப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகர் சந்திரபாபு Actor Chandrababu கடந்த 1940 முதல் 1970 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாகாபா ஆனந்தின் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகவே வைரலாகி வருகிறது.

VJ Ma Ka Pa Anand Who is look like actor Chandrababu picture goes viral in social media

3

தல அஜித்தைப் போன்றே உதவிய என்னை அறிந்தால் பார்வதி நாயர்!

0
Parvati Nair Donation

Parvati Nair Donation; தல அஜித்தைப் போன்றே உதவிய என்னை அறிந்தால் பார்வதி நாயர்! என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்த பார்வதி நாயர் அஜித்தைப் போன்றே கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

அஜித்தைப் போன்றே நடிகை பார்வதி நாயர் கொரோனா பாதிப்புக்கு உதவியுள்ளார்.

நடிகை பார்வதி நாயர் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் எப்படி உதவி செய்தாரோ அதே போன்று உதவி செய்துள்ளார்.

தல அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.

என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமான பார்வதி நாயர் தற்போது அஜித்தைப் போன்றே உதவிகளும் செய்து மேலும், பிரபலமடைந்துள்ளார்.

கொரோனா பாதித்தவர்களுக்கு திரை உலகில் இருந்து பல்வேறு நடிகர், நடிகையர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர்.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில், பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளார்.

50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

வெறுமனே என்று இல்லாமல் இந்தியா, தமிழகம், திரைக்கலைஞர்கள் வரை உதவி செய்து நெஞ்சை உருக வைத்துள்ளார் தல அஜித்.

இந்த நிலையில், அஜித்தைப் போன்றே என்னை அறிந்தால் படத்தில் நடித்த பார்வதி நாயரும் உதவி செய்துள்ளார்.

Parvati Nair Donation

பிரதமர் நிவாரண் நிதிக்கு ரூ.1 லட்சம், தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1500 அரிசி மூட்டைகள் மற்றும் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு 1000 அரிசி மூட்டைகள் வீதம் கொடுத்து உதவியுள்ளார்.

பார்வதி நாயரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

Parvati Nair Donates Rs 2 Lakhs to Corona Relief Fund and 1500 Rice Bags to FEFSI and 1000 to Reporters Union…

3

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீண்டும் ஒளிப்பரப்பலாமா?

0

மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை மீண்டும் ஒளிபரப்பினால் அண்ணன் தம்பி ஒற்றுமையை புரிந்து கொள்ள நல்ல அரிய வாய்ப்பாக இருக்கும.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பல நாடுகள் பல்லாயிரம் மக்களை இழந்து உள்ளது.

பல லட்சம் மக்கள் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி அறிவித்துள்ள படி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவில் மக்கள் இருந்து வருகிறார்கள்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டார் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

பத்து வருடத்திற்கு முன்பு சீரியல்களைப் பற்றி கேட்டால் சன்டிவி மட்டும் தான் சொல்வார்கள்.

ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களும் அதிக சீரியலை ஒளிபரப்ப தொடங்கியுள்ளன.

தற்போது வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மட்டுமில்லாமல் வேலைக்குப் போகும் இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பார்க்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்.

அப்படி அந்த சீரியல்ல என்னதான் இருக்கு?

வீடு, வீடு விட்டா கடை.

கடை, கடை விட்டா வீடு,

இப்படி இந்த இரண்டு இடத்தை தவிர என்றாவது ஒருநாள் தான் வேறு இடங்களில் இந்த சீரியலில் நடக்கும் காட்சிகளை பார்க்கலாம்.

இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், சித்ரா, சாந்தி வில்லியம்ஸ், சரவன விக்ரம், கவிதா கவுடா நடித்து வருகிறார்கள்.

இவர்களது பெயரை இப்படி சொன்னால் மக்களுக்கு உடனே ஞாபகம் வராது.

மூர்த்தி, தனம், ஜீவா, கதிர், கண்ணன், முல்லை, மீனா இந்த பெயர்களைச் சொன்னால் உடனே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஞாபகத்துக்கு வரும்.

அண்ணன் தம்பி நான்கு பேர். இதில் முதல் மூன்று நபர்கள் தாங்கள் சொந்தமாக வைத்துள்ள பாண்டியன் ஸ்டோர் எனும் கடையை பார்த்துக் கொள்கிறார்கள்.

கடைக்குட்டி கண்ணன் காலேஜுக்கு செல்கிறார்.
மூர்த்தி மனைவியாக தனம் மற்றும் மூர்த்தியின் மூன்று தம்பிகளுக்கும் அண்ணியாக இல்லாமல் அம்மாவாக வருகிறார்.

அவர்களுக்காக இவர்கள் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே வாழ்கிறார்கள்.

பிறகு ஜீவா, மீனாவை திருமணம் செய்து கொள்ள, கதிர் முள்ளையை திருமணம் செய்து கொள்கிறார்.

ஒரே வீட்டில் 3 மருமகளுடன் நடக்கும் சந்தோஷங்கள், கஷ்டங்கள், சண்டைகள் போன்றவற்றை முழுமையாக காட்டுகிறது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரில் வரும் சண்டைகள் முக்கால்வாசி கடைக்குட்டி தம்பியாக வரும் கண்ணா என்பவரால் தான்.

ஜீவாவின் மனைவி மீனா இந்த குடும்பத்தை விட்டு தன் கணவனை தனிக்குடித்தனம் அழைத்துச் செல்ல நினைப்பதால் வரும் சிக்கல்கள் இந்த தொடர் ஆரம்பம் ஆனதிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தொடரில் மக்கள் மிகவும் எதிர்பார்ப்பது கதிர் முல்லையின் காதல் காட்சிகளையும், செல்லமாக போடும் சண்டைக் காட்சிகளில் தான்.

இவர்கள் தான் இந்த தொடர் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக முக்கிய காரணமாகிறார்கள்.

ஜீவா, மீனா பாதி நாட்களில் சண்டைகள் ஆகவும், கதிர் முல்லை பாதி நாட்கள் காதல் காட்சிகளிலும் இந்தத் தொடர் நகர்கிறது.

முல்லைக்கு அம்மாவாக வரும் சாந்தி வில்லியம்ஸ், அவரது அக்கா மகள் இருவரும் சேர்ந்து இந்த குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்பது எண்ணம்.

மீனாவின் தந்தைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அந்த குடும்பத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்பது எண்ணம்.

இந்த தடைகளை தாண்டி பல சோதனைகளைத் தாண்டி அண்ணன் தம்பிகள் நால்வரும் எந்த பிரச்சனையிலும் பிரியாமல் ஒற்றுமையாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது இந்த தொடர்.

இதில் மூத்த அண்ணனாக வரும் மூர்த்தி என்கிற ஸ்டாலின் அதில் நடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக மூத்த அண்ணன் தன் குடும்பத்தை எப்படி சுமக்கிறான் என்பதை இந்த தொடரில் அழகாக காட்டுகிறார் டைரக்டர் சிவசங்கர்.

ஒரே வீட்டில் தினமும் கதைகள் நகர்கிறது அந்த கதையை அழகாக நகர்த்த கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் பிரியா தம்பி என்பவர்.

இந்த தொடரில் எத்தனை சண்டைகள் வந்தாலும் பிறகு ஒன்றுகூடி அமர்ந்து சாப்பிடுவது பார்க்கும் பொழுது நம்முடைய பழைய வாழ்க்கைகள் நினைவுக்கு வந்து போகிறது.

அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகள், தம்பிகளை பிரிய மனம் வராத அண்ணன், நான்கு பேரையும் ஒன்றாக காத்துவரும் அண்ணி என பல நேரங்களில் இந்த தொடர் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

அண்ணன் தம்பி எப்படி ஒற்றுமையாக இருக்கலாம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டான தொடர்தான் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த நேரத்தில் விஜய் டிவி மீண்டும் ஒளிப்பரப்பு செய்தால் அண்ணன் தம்பிகள் பிரிவு இல்லாம்ல வாழ்வதை புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.

3

வெறித்தனமான ஆஸ்திரேலிய அணி இது 90 கிட்ஸ்

0

வேட்டைக்காரன் படத்தில் வில்லன் சொல்வது போல் பயம் வேதநாயகம் பயம்.

கிரிக்கெட்ல 10 வருசத்துக்கு முனனாடி 90ஸ் கிட்ஸக்கு பயம் ஆஸ்திரேலியா பயம்.

மிகப்பெரியஜாம்பவான் அணியாங கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலம் ஆஸ்திரேலியா அணி.

90 கிட்ஸ்க்கு மார்க் டெய்லர் கேப்டனா இருந்ததும் ஸ்டீவ் வாஹ் கேப்டன் என்று எல்லாம் தெரியாது.

ரிக்கி பாண்டிங் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீங்கா எதிரி ஆனார்.

அன்றைய ஆஸ்திரேலியாவில் ஓபனிங் பேட்ஸ்மேன் என்றாலே மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட்.

இவர்கள் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். இவர்களை விக்கெட் வீழ்த்துவதே மிகவும் கடினமான ஒன்று.

இவர்களில் எவராவது ஒருவரை விக்கெட் எடுத்தால் தான் அடுத்து வரும் ஆஸ்திரேலிய வீரரைபார்க்க முடியும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இவர்களில் யாராவது விக்கெட்டுகள் விழுந்தால் அடுத்து வருபவர் ரிக்கி பாண்டிங்.

அன்றைய அசுரபலம் படைத்த ஒரு பேட்ஸ்மேன் முழு திறமையுடன் தனது விக்கெட்டை விளையாட கூடியவர்.

அதிரடி ஆட்டத்தை எளிதாக விளையாட கூடிய திறமை கொண்டவர். தப்பித்தவறி இவர்களுக்கு தவறுகள் நடந்து விக்கெட் விழுந்தால்,

அடுத்தடுத்து டேமியன் மார்ட்டின், ஆன்ட்ரூ சைமன்,ஸ், தாரன் லிமன், மைக் ஹஸ்ஸி, மைக்கல் கிளார்க் ஷேன் வாட்சன் என நடுவரிசையில் நங்கூரம் போல் விளையாட கூடியவர்கள்.

பேட்ஸ்மேன் விக்கெட்டுகள் கூட அடுத்தடுத்து மைக்கேல் பெவன், மெக்ராத், பிரட் லீ, நாதன் பிராக்கன், கில்லப்ஸி, மிட்செல் ஜான்சன் போன்ற வீரர்கள் பந்துவீச்சில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக இருந்தார்கள்.

இருந்தாலும் கூட இவர்கள் சில சமயங்களில் அதிரடி பேட்ஸ்மேன்களாகவும் மாறக் கூடியவர்கள்.

அந்த அணி அந்த அளவுக்கு தங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு இருந்தது. இவர்களை சந்திக்கும் தைரியம் தென்னாப்பிரிக்கா அணிக்கு மட்டுமே உண்டு.

கங்குலி தலைமையில் பல போட்டிகள் மோதினாலும் முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே வெற்றி பெறும்.

இருநாட்டு ஒருநாள் தொடர், முத்தரப்பு தொடர் போன்றவற்றில் ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் தோற்றாலும், இறுதிப் போட்டி என்றவுடன் அசுர பலத்துடன் விளையாட ஆரம்பித்து விடும்.

இதற்கு சான்று 1999, 2003, 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையை வாங்கி அசத்தியது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டால் கூட இந்திய ரசிகர்கள் இந்தியா வெற்றி பெறும் என்று அதிக நம்பிக்கை வைத்து விடமாட்டார்கள் ஆஸ்திரேலியா என்பதால்.

இவர்களை வெற்றி பெறவேண்டுமென்றால் அன்றைய காலகட்டத்தில் அனைத்து நாட்டு ரசிகர்களும் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

அவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க அளவிற்கு வீரர்களை வைத்திருந்தார்கள்.

சுமித் தலைமையில் கிப்ஸ், ஹேரி கிருஷ்ணன், காலிஸ், டிவில்லியர்ஸ், ஷான் பொல்லாக், நித்தினி, லான்ஸ் குளூஸ்னர், ஜான்டி ரோட்ஸ் போன்ற வீரர்கள் இருந்தார்கள்.

2008 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடியது.

இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதில் கலந்து கொண்டது. இந்த தொடரில் மூன்று இறுதி ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது.

இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முதல் இரண்டு இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது இதுவே முதல்முறை ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்யத்தை உடைத்த மகேந்திர சிங் தோனி.

அந்த காலகட்டத்தில் பல ஆஸ்திரேலியா வீரர்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நாட்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் .

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்த இன்னொரு அணியும் இருக்கின்றது. அந்த அணிதான் இங்கிலாந்து.

ஆஷஸ் தொடர் என்றாலே அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய மண்ணில் மைக்கேல் வாகன் தலைமையில் கோப்பையை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. ஆஸ்திரேலியா அணி மிகவும் விமர்சனத்துக்கு உள்ளானது.

கங்குலி தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஒரு ஒருநாள் போட்டியில் மோதின. கடைசி பந்தில் பந்து வீச்சாளர் பிரெட் லீ சிக்சர் அடித்து இந்தியாவின் வெற்றிபெறும் கனவை தகர்த்தார்.

நமக்கே இந்த கதி என்றால் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற அணியை சொல்லவா வேண்டும்.

ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, ஆஸ்திரேலியா மத்த நாட்டிற்கு சென்றாலும் சரி எதிர் அணிக்கே உதை.

இது போன்ற ஜாம்பவான் ஆஸ்திரேலியா அணி தற்போது இல்லை. ஒருவருக்கொருவர் பலமான வீரராக இருந்தாலும், அணியாக வரும்போது ஒற்றுமை இல்லாதது அந்த அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

தற்போது அணையில் நீண்ட நாட்களாக விளையாட்டு வீரர் என்று சொல்லும்படி யாருமில்லை.

டெஸ்ட் போட்டிக்கு டிம் பைனே கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு ஆரோன் பின்ச் இருந்து வருகிறார்கள்.

ரிக்கி பாண்டிங் இரண்டு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்திருந்தாலும், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அரையிறுதிப் போட்டிகள் பழிதீர்த்துக் கொண்டது.

3

சுத்தியை கையிலெடுத்த விஷ்ணு விஷால்: ரத்தக்கறையுடன் வெளியான பட டைட்டில்!

0
Vishnu Vishal Next Mohan Das Title Teaser

Vishnu Vishal Next Mohan Das; சுத்தியை கையிலெடுத்த விஷ்ணு விஷால்: ரத்தக்கறையுடன் வெளியான பட டைட்டில்! விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருகாகி வரும் புதிய படத்தின் டைட்டில் டீசருடன் வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப்.ஐ.ஆர், இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முக்கியமான அப்டேட் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எஃப்.ஐ.ஆர், இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து தான் நடிக்க இருக்கும் புதிய படத்தை இன்று ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்க இருந்தார்.

ஆனால், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய படத்தின் அப்டேட்ட இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி,  Vishnu Vishal Next களவு படத்தை இயக்கிய இயக்குநர் முரளி கார்த்திக், விஷ்ணு விஷாலின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஆக்‌ஷன், த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்திற்கு மோகன் தாஸ் Mohan Das என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விவி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் மோகன் தாஸ் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.

மோகன் தாஸ் படத்தின் டைட்டில் டீசர் Mohan Das Title Teaser வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த டைட்டில் டீசரில் விஷ்ணு விஷால் ஆக்ரோஷமாக கையில் சுத்தி வைத்துக் கொண்டு யாரையோ கொலை செய்வது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், ரத்தக்கறையுடன் படிக்கட்டில் ஏறிச் செல்லும் அவர் வாஷிங் மெஷினில் தனது ரத்தைக் கறை டீசர்ட்டை கழற்றி போடுகிறார்.

மோகன் தாஸ் பட டீசர் Mohan Das Title Teaser இறுதியில், இது உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மோகன் தாஸ் பட டீசரை பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. படம் திரைக்கு வந்தால் சும்மா ரசிகர்களை அதிர வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் இருந்தபடியே தனது அடுத்தபடத்தின் அறிவிப்பை பட டீசரோடு வெளியிட்ட விஷ்ணு விஷாலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் படம் திரைக்கு வந்தது. அந்தப் படத்தில் அவரது கையில் துப்பாக்கி இருந்தது.

தற்போது மோகன் தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் கையில் சுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மோகன் தாஸ் டைட்டில் டீசர், #MOHANDAS #VishnuVishalsNEXT என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

சிம்புவின் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஃபெப்சிக்கு பொருளுதவி!

0
Suresh Kamatchi Rice Bag Donation

Suresh Kamatchi; சிம்புவின் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஃபெப்சிக்கு பொருளுதவி! மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சு ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 25 கிலோ எடைகொண்ட 50 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கனடா பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர், ஸ்பெயின் இளவரசி போன்றோரும் இந்தக் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார்கள்.

பல நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பல பாதிப்புகளை அடைந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் மட்டும் 206 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்கின்றனர். அதையும் மீறி வெளியில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொலைக்காட்சி சேனல் உரிமையாளர்கள் என்று அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூர்யா குடும்பத்தினர், ராகவா லாரன்ஸ், அஜித், நயன்தாரா, சூரி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என்று பலரும் உதவி செய்துள்ளனர்.

இவர்களது வரிசையில், தற்போது மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட அரிசி மூட்டை வீதம் 50 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா – வியட்நாம் வீடு 50 வருடம்!

0
50YrsOfVietnamVeedu

Vietnam Veedu; பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா – வியட்நாம் வீடு 50 வருடம்! சிவாஜி கணேசன் நடிப்பில் வந்த வியட்நாம் வீடு திரைக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது.

வியட்நாம் வீடு படம் திரைக்கு வந்து 50 வருடங்களை கடந்துள்ளது.

கடந்த 1970 ஆம் ஆண்டு ஆர் மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஸ்ரீகாந்த், ரமா பிரபா, நாகேஷ், வி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பலர் நடிப்பில் வெளிவந்த படம் தான் வியட்நாம் வீடு.

சிவாஜி புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சிவாஜியே இந்தப் படத்தை தயாரித்திருந்தார். கேவி மகாதேவன் இசை அமைந்திருந்தார். சிவாஜி நடித்து வெள்ளிவிழா கண்ட படங்களில் வியட்நாம் வீடு படமும் ஒன்று.

இந்தப் படத்தில் அமைந்துள்ள பாக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா, உன் கண்ணில் நீர் வழிந்தால், மை லேடி காட் பாடி, உலகத்தில் ஒருவனென ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாக பாடல்களாக அமைந்தன.

இன்றும் பாலக்காட்டு பக்கத்திலே என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு பெற்றோரின் கதை. சுந்தரம் எழுதிய நாடகமே வியட்நாம் வீடு திரைப்படமாக உருவானது.

இப்படத்திற்கு பிறகு சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என்றே அழைக்கப்பட்டார். இந்த நிலையில், இந்தப் படம் திரைக்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதன் காரணமாக, ஹலோ ஆப்பில் டிரெண்டிங் பட்டியலில் 50YrsOfVietnamVeedu படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

5 மணிக்கு என்ன செய்யப்போகிறார் ராகவா லாரன்ஸ்

0

நடிகர் ராகவா லாரன்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பாக மூன்று கோடி ரூபாய் நிதி அளித்திருந்தார். தற்போது இன்று மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பு அறிவிக்க உள்ளதாக சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

அவர் பதிவிட்ட விபரம் வருமாறு

அனைவருக்கும் வணக்கம்
நிவாரணநிதிக்கு நான் அளித்த பங்களிப்பிற்கு எனக்கு வாழ்த்துக்களைக் கூறிய நண்பர்கள், ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரும் நன்றி.

உங்கள் அனைவரின் அன்பு என்னை மூழ்கடித்துவிட்டது. இந்த நன்கொடைக்குப் பிறகு ஸ்டன்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பலர் இன்னும் உதவிகள் செய்யுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். பொதுமக்களிடம் இருந்தும் எனக்கு கடிதங்கள், வீடியோக்கள் வந்துள்ளன. அவற்றையெல்லாம் பார்க்கம் போது எனக்கு இதயமே நொறுங்கிவிடுவது போல் இருந்தது.

அவை அனைத்திற்கும் நான் தந்த 3 கோடி ரூபாய் போதாது. எனவே, நியாயமாக என்னுடைய உதவியாளர்களிடம், என்னால் இதற்கு மேல் தர இயலாது எனவே நான் பிஸியாக இருப்பதாகச் சொல்லிவிடுங்கள் என்றேன்.

என்னுடைய அறைக்குச் சென்று இது பற்றி யோசித்துப் பார்த்தேன். நான் செய்தது பற்றி உண்மையில் வருத்தப்பட்டேன். நேற்று இரவு என்னால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. பொதுமக்கள் அழுவது பற்றிய வீடியோக்கள் என்னை மிகவும் பாதித்தது.

அதைப் பற்றி ஆழமாக யோசித்தபோது, இந்த உலகத்திற்குள் வரும் போது நாம் எதையும் கொண்டு வரவில்லை, போகும் போதும் எதுவும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை.

அனைத்து கோயில்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பசியில் கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில், கடவுளிடம் கொடுக்கும் போது அது மக்களுக்குப் போய்ச் சேராது. ஆனால், மக்களுக்குக் கொடுக்கும் போது அது கடவுளிடம் போய்ச் சேரும். ஏனென்றால் கடவுள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

கடவுள் என்னை வீட்டில் உட்கார வைத்திருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் என்னை சேவை செய்வதற்கான வேலையைக் கொடுத்திருக்கிறார்.

இது அனைவருக்கும் ஒரு கடினமான காலகட்டம். எனவே, சேவை செய்வதற்கு இதுதான் சரியான தருணம். எனவே, மக்களுக்கும், அரசுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

இப்போது நான் கொடுத்த 3 கோடி இல்லாமல் மேலும் எனது ஆடிட்டர் மற்றும் என் நலம்விரும்பிகளுடனும், உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் நான் என்ன செய்ய போகிறேன் என்று கலந்து பேச உள்ளேன். அது என்னவென்று இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறேன்.
அன்புடன்
ராகவா லாரன்ஸ்

https://platform.twitter.com/widgets.js

3