Home Blog Page 153

மாஸ்டரை கைவிட்டுவிட்டு அடுத்த பட வேலைகளை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்!

0
Master Lokesh Kanagaraj Next Movie

Lokesh Kanagaraj Thalaivar 169; மாஸ்டரை கைவிட்டுவிட்டு அடுத்த பட வேலைகளை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்! கொரோனா காரணமாக மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிக்கப்பட முடியாத நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் Lokesh Kanagaraj அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.

இப்படம் கடந்த 9 ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையிலும், மாஸ்டர் படம் திரைக்கு வரவில்லை.

மேலும், மாஸ்டர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளும் முடக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இன்னும் மாஸ்டர் டிரைலர் வெளியாகவில்லை.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் வேலைகளை தற்போது தொடங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 Thalaivar 169 படத்தை இயக்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.

மேலும், இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

தலைவர் 169 Thalaivar 169 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் தலைவர்169 Thalaivar 169 Work Starts படத்திற்கான ஸ்கிரிப் வேலைகளை தொடங்கிவிட்டார் என்று தகவல் வந்துள்ளது.

இதற்கு முன்னதாக தான் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்று லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டார்.

மேலும், கமல் ஹாசனின் விருமாண்டி படத்தின் ஈர்ப்பால்தான் கைதி படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் வந்தது என்று சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம், கமல் ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது என்பது அவருக்கு உற்சாகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Master director Lokesh Kanagaraj starts his Thalaivar 169 movie Script work

3

இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் : ஏப்ரல் 12, 2020 Latest Tamil News

0
இன்றைய தலைப்புச் செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள் : april 12, 2020

இன்றைய தலைப்புச் செய்திகள்:- டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது: டெல்லியில் இன்று 166 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் 1069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுவதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் இன்று முதல் பேக்கரிகள் திறப்பதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் பகல் ஒரு மணிவரை பேக்கரிகள் இயக்கப்படும்.

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு வைரஸ் பாதிப்பு. மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 969 ஆக உயர்வு.

தமிழகத்தில் மொத்தம் எட்டு மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிக தேவை மற்றும் லாரி வாடகை விலை உயர்வால் பருப்பு வகைகளின் விலை அதிகரித்துள்ளது. மூட்டைக்கு ரூபாய் 3 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது, மளிகை பொருட்களும் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 தமிழகம் முழுவதும் 50,000 கட்டிட தொழில்கள் பாதிப்பு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிப்பு.

ஒரு தலைமுறையின்  சிறந்த வீரர் தோனி, அவரை உடனடியாக ஓய்வுபெற கட்டாயப்படுத்தினால் இப்போது விட்டு விட்டால் மீண்டும் கிடைக்கவே மாட்டார் என்று நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் உள்ளதாக தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால்  ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படும்.

உலகிற்கே இக்கட்டான தருணம்: இந்த நிலையில் நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார் பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

3

முழுசா அந்நியனாக மாறிய தொகுப்பாளினி அர்ச்சனா: கொரோனா செஞ்ச வேலை அப்படி!

0
Archana Chandhoke Anniyan

Archana Chandhoke Anniyan; அந்நியனாக மாறிய தொகுப்பாளினி அர்ச்சனா: கொரோனா செஞ்ச வேலை அப்படி! தொகுப்பாளினி அர்ச்சனா நடிகர் சியான் விக்ரம் போன்று அந்நியனாக மாறிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொகுப்பாளினி அர்ச்சனா அந்நியனாக Archana Chandhoke Anniyan மாறிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சித் துறையில் சிறந்த தொகுப்பாளினியாக திகழ்பவர் அர்ச்சனா. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார்.

அதன் பிறகு இளமை புதுமை, கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம், செலிபிரிட்டி கிச்சன், அதிர்ஷ்ட லக்‌ஷ்மி, சரிகமப லில் சாம்ஸ் (சீசன் 1 மற்றும் 2) என்று பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவ்வளவு ஏன், தனது மகள் சாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழில் தொகுத்து வழங்கினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போதிலும் என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், ஏண்டா தலையில எண்ண வெக்கல ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், அர்ச்சனா அந்நியன் விக்ரம் போன்று ஹேர்ஸ்டைலை முன்புறம் தொங்கவிட்டபடி போஸ் கொடுத்துள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், Quarant’anniyan’ed!! #Lockdown என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, பலரும் ஏற்கனவே கொரோனாவால் பயந்து போய்தான் இருக்கிறோம் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

இதன் மூலம் தொகுப்பாளினி அர்ச்சனா என்பதற்குப் பதிலாக அந்நியன் அர்ச்சனா என்று அழைக்கப்படுகிறார் என்று பலரும் கிண்டலடித்துள்ளனர்.

archana Chandhoke who turns like chiyaan vikram anniyan getup during quarantine

3

ஏன் அஜித் வீட்டிலேயே இருக்கிறார் தெரியுமா? காரணத்தை போட்டுடைத்த பைக் ரேசர்!

0

Thala Ajith; ஏன் அஜித் வீட்டிலேயே இருக்கிறார் தெரியுமா? காரணத்தை போட்டுடைத்த பைக் ரேசர்! பெரும்பாலும் அஜித் வெளியில் வருவதில்லை. இதற்கான காரணத்தை அவர் கூட கூறியது இல்லை. இது குறித்த முக்கியமான காரணம் ஒன்றை பைக் ரேசர் தெரிவித்துள்ளார்.

ஏன் அஜித் Ajith வெளியில் வருவதில்லை என்பதற்கான காரணத்தை பைக் ரேசர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் தல அஜித் Thala Ajith. தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே வைத்து தனது சொந்த முயற்சியில் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். அஜித்திற்கு மட்டுமலல், அவரது மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா மற்றும் ஷாலினி ஆகியோருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அஜித் அவர் உண்டு, அவரது வேலை உண்டு என்று இருப்பவர். யாருடைய விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிடவும் மாட்டார். படத்தில் நடிப்பதோடு சரி. பட புரோமோஷன் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா என்று எதிலும் கலந்து கொள்ளவும் மாட்டார்.

Thala Ajith

அவர் வெளியில் வருவதற்கான முக்கியமான சில காரணங்கள்: ஒன்று வாக்களிப்பதற்கு மற்றொன்று குழந்தைகளின் பள்ளிவிழா நிகழ்ச்சி. அவ்வளவு தான் மற்றபடி அஜித்தை வெளியில் எங்கும் காணமுடியாது.

அது ஏன் என்பதற்கான காரணத்தை சென்னை பைக் ரேசரான ஆலிசா அப்துல்லா தெளிவாக கூறியுள்ளார்.

அஜித் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் ஆலிசா அப்துல்லா. பலமுறை அஜித்துடன் உரையாடிக்கிறார். ஆலிசாவின் தந்தை ஆர்.ஏ.அப்துல்லா மற்றும் அஜித் இருவரும் இணைந்து பல பைக் ரேஸ் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆலிசா அப்துல்லா தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அஜித் வெளியில் வராததற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

ரசிகர்கள் அஜித்திற்கு தனி உரிமை கொடுக்கவில்லை. இது ரேஸ் டிராக்கில் நடந்த நிகழ்வுகளில் ஒன்று. அங்கு ரசிகர்கள் அவரை நடக்கக் கூட அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், அஜித் சாரால், ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியவில்லை.

இதுதான் அவர் கடைசியாக வெளியில் சென்றது. இனிமேல் வெளியில் வரக்கூடாது என்று அவர் அப்போதே முடிவு செய்துவிட்டார் என்று அவரது பதிவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் தன்னை பற்றி மட்டுமல்ல, இந்த சமூகத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர். எங்கு நாம் வெளியில் சென்றால் ரசிகர்கள் வந்து சூழ்ந்து கொள்வார்களோ? அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுமோ? ரசிகர்களு ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ என்று கவலைப்படக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ரொனால்டோ மட்டும் என்ன விதிவிலக்கா? கூறும் ரமோஸ்

0
ரொனால்டோ

ரொனால்டோ மட்டும் என்ன விதிவிலக்கா? கூறும் ரமோஸ், நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியில் ஈடுபட்டது சர்ச்சையை உள்ளாக்கியது.

உலகமே சமூக விலகளில் இருக்கும் நேரத்தில் போர்ச்சுகல் மற்றும் ஜூவேண்டஸ் அணியின் வீரர் ரொனால்டோ தனது சக வீரர்களுடன் மடியர மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அங்குள்ள நிர்வாகிகள், மக்கள் மற்றும் பிற மூத்த வீரர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரொனால்டோவிற்கு என தனி சலுகைகள் கிடையாது. மற்ற மக்களை போல் அரசாங்க விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மடியர மைதான இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்கும் ரொனால்டோ கண்டிப்பாக அரசாங்க உத்தரவை கடைபிடிப்பதே நல்லது. வீட்டில் இருந்து சமூக விலகலை ஊக்குவிக்க வேண்டுமென ரியல் மாட்ரிட் வீரர் செரிஜியோ ரமோஸ் கூறினார்.

கிறிஸ்டியனோ ரொனால்டோ கடைசியாக மார்ச் 8ஆம் தேதி சர்வதேச போட்டி ஜூவெந்த்ஸ அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

International Day of Human Space Flight 2020; International Day for Street Children 2020

0
International Day of Human Space Flight

International Day of Human Space Flight 2020; International Day for Street Children 2020, மனித விண்வெளி பயணத்துக்கான & வீதியோர் சிறுவருக்கான சர்வதேச நாள் 2020.

International Day of Human Space Flight 2020

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் ஆண்டு தோறும் ஏப்ரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி காகரின் நினைவாக இந்நாள் கொண்டாட்டபாடுகிறது.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள் கூடிய  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இதை முடிவு செய்தது. உருசியானாவில் ஐ.நா. பொதுச் சபையால் இந்நாள் கொண்டுவரப்பட்டது.

International Day for Street Children 2020

வீதியோர் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ஆண்டு தோறும் ஏப்ரல் 12ஆம் நாள் உலகமெங்கும் இருக்கும் வீதியோர சிறுவர்களின் நல்வாழ்வுக்காக கொண்டாடப்படுகிறது.

 International Day for Street Children

வீதியோர சிறுவர்களின் உரிமை, நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும் விதமாக பல விழிப்புணர்வு முகாம்களும் உதவிதொகைகளும் பெற்று அவர்களை வாழ்வில் முன்னேற்றம் பெற செய்வதே இதன் நோக்கம்.

3

This Day in History April 12; வரலாற்றில் இன்று ஏப்ரல் 12

0
This Day in History

This Day in History April 12; வரலாற்றில் இன்று ஏப்ரல் 12, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

1204ஆம் ஆண்டு நான்காவது சிலுவைபோர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர்.

240ஆம் ஆண்டு முதலாம் சப்பூர் சாசானிய இனைபேரரசராக அவரது தந்தை முதலாம் அர்தாசீருடன் நியமிக்கப்பட்டார்.

1606ஆம் ஆண்டு ஆங்கிலேய இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய ராச்சியத்தின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

1832ஆம் ஆண்டு இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.

1927ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ரோக்சுஸ்பிரிங்க்சு என்ற இடத்தில் சூறாவளி தாக்கியத்தில் நகரின் கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

1965ஆம் ஆண்டு யோனாசு சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்ட நாள்.

1980ஆம் ஆண்டு பிரேசிலில் போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் பயணம் செய்த 58பேரில் 55பேர் உயிரழந்தனர்.

Today Birthdays in History

1484ஆம் ஆண்டு ராஜபுத்திர சுதோசிய வம்ச மன்னர் மாகரான சங்கிரம் சிங் பிறந்த நாள் இன்று.

1851ஆம் ஆண்டு ஆங்கிலேய வானியலாளர் வால்டேர் மவுண்டர் பிறந்த நாள் இன்று.

1852ஆம் ஆண்டு செருமானிய கணிதவியலாளர் லிண்ட்மென் பிறந்த நாள் இன்று.

1854ஆம் ஆண்டு தமிழக தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளரும் ஆகிய சே.ப. நரசிம்ம நாயுடு பிறந்த நாள் இன்று.

1904ஆம் ஆண்டு திராவிட எழுத்தாளர் அண்ணல் தாங்கோ பிறந்த நாள் இன்று.

1934ஆம் ஆண்டு இந்தியா தேசிய காங்கிரஸின் தமிழக அரசியல்வாதி என்.எஸ்.வி. சித்தன் பிறந்த நாள் வரலாற்றில் இன்று.

Today Deaths in History

1945ஆம் ஆண்டு அமெரிக்காவின் 32ஆம் அரசுத்தலைவரான பிராங்க்லின் ரூசவெல்ட் இறந்த தினம் வரலாற்றில் இன்று.

1946ஆம் ஆண்டு இந்தியாவின் அரசியல்வாதி, நிர்வாகி மற்றும் கல்வியாளர் ஆனா வலங்கைமான் சங்கரநாராயன ஸ்ரீநிவாஸ் இறந்த தினம் இன்று.

2008ஆம் ஆண்டு இலங்கை தமிழ் கத்தோலிக்க மதகுரு மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் மாரியம் மருதம் சேவியர் கருணாத்திரம் இறந்த தினம் இன்று.

3

12/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

12/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய நாள் அமைதியாக செல்லும். நாள் முழுவதும் சுமூகமான சூழ்நிலை இருக்கும். துணையிடம் நட்பான அணுகுமுறை அவசியம் தேவையாகும். மற்றபடி சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று கடின உழைப்பால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்களின் உறுதி மற்றும் நேர்மைக்கு தகுந்த பாராட்டுகள் கிடைக்க போகிறது. தொழிலில் நல்ல லாபகரமான நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமாக இருக்க போகும் நாளாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாக முடியும் நாளாகும். பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் குறையேதும் இருக்காது.

கடக ராசிபலன்

இன்று நற்பலன்கள் எதுவும் பெரிதாக கிடைக்காது. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு எனவே கூடுதல் கவனம் அவசியமாகும்.

சிம்ம ராசிபலன்

இன்று தாங்கள் அறிவினை பயன்படுத்தி செயலாற்றவும். இல்லையெனில் தேவையற்ற வம்புகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையாக கையாள வேண்டிய நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். உங்களின் பணிகள் அனைத்தும் விரைந்து முடியும். கணவன் மனைவியிடையே காதல் அதிகரிக்கும். நல்ல வருமானம் கிடைக்கும் நாளாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்று மன உறுதி அவசியம் தேவையான நாளாகும். நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் பூசல்கள் ஏற்படலாம்.

விருச்சிக ராசிபலன்

இன்று மிதமான பலன்களை தரும் நாளாக இருக்கும். வாகனங்கள் பயணிக்கும் போது கவனமாக இருக்கவும். துணையிடம் நட்பாக நடந்து கொள்ள வேண்டிய நாளக இருக்கிறது.

தனுசு ராசிபலன்

இன்று உங்களின் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய நட்பினால் பயன் பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகர ராசிபலன் 

இன்று நீங்கள் அதிக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களின் காதலில் வெற்றி காணும் நாளாக இருக்கிறது. தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் சேமிப்பு அவசியம்.

கும்ப ராசிபலன்

உங்களிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை அவசியம் இன்று வேண்டும். பணியில் சற்று கவனம் செலுத்தாமல் இருப்பீர்கள். அதனால் சில பிரச்சனைகள் வரும். வீட்டில் அமைதியின்மை நிலவும். வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

மீன ராசிபலன் 

இன்று ஆன்மீக ஈடுபாட்டில் கவனம் செலுத்தவும். அதனால் நற்பலன்கள் அடைவீர்கள். தொழில் திருப்தியாக இருக்க வாய்ப்புகள் குறைவு. வீட்டில் கடன் பிரச்சனைகள் ஏற்படலாம். கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

12/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

சன் டிவியில் ரகுவரன் நடிப்பில் கடைசியாக வந்த யாரடி நீ மோகினி!

0
YNM On Sun TV Today

Dhanush Yaaradi Nee Mohini; ரகுவரன் நடிப்பில் கடைசியாக வந்த யாரடி நீ மோகினி! நடிகர் ரகுவரன் நடிப்பில் கடைசியாக வந்த யாரடி நீ மோகினி திரைப்படம் சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.

யாரடி நீ மோகினி Yaaradi Nee Mohini திரைப்படம் சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் Dhanush தனுஷ், ரகுவரன், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி திரைக்கு வந்த படம் யாரடி நீ மோகினி.

தமிழ் ரொமாண்டிக் காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதில், குறிப்பாக வென்மேகம் என்ற பாடல் துள்ளல் நடனம் போட வைக்கிறது.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ரகுவரன் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்தார். யாரடி நீ மோகினி அவரது கடைசி படமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில், இந்த படம் வெள்யாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று யாரடி நீ மோகினி திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனை தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். இதன் காரணமாக ஹலோ டிரெண்டிங்கில் #YNMOnSunTV என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Sun TV Movies

மேலும், ப்ரியமானவளே, காஞ்சனா 3, ஸ்கெட்ச் ஆகிய படங்கள் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு தூள், 2.30 மணிக்கு உனக்கும் எனக்கும், 6.30 மணிக்கு வீரம், 9.30 மணிக்கு நானும் ரௌடி தான் ஆகிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வீரம் படம் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், தல அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush Yaaradi Nee Mohini movie telecasted on Sun TV Today…

3