Home Blog Page 157

தனி ஒருவன் 2வில் தல அஜித்? உண்மையா இருந்தா மகிழ்ச்சியடைவோம்!

0
Thala Ajith in Thani Oruvan 2

Thala Ajith Thani Oruvan 2; தனி ஒருவன் 2வில் தல அஜித்? உண்மையா இருந்தா மகிழ்ச்சியடைவோம்! ஜெயம் ரவி நடிப்பில் வந்த தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தனி ஒருவன்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ரூ.105 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

சமூகத்தில் குற்றம் செய்யும் பலரை தனது போலீஸ் புத்தியால் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்.

ஆனால், மறுநாளே அவர்கள் வெளியில் வர இதற்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் இறங்கிறார் ஜெயம் ரவி.

இறுதியில், மருந்துல மாஃபியாவாக வரும் பிஸினஸ் மேன், அரசியல் செல்வாக்கு மிக்கவராக உள்ள அரவிந்த் சாமி தான் இதற்கு எல்லாம் பெரும்புள்ளி என்று தெரிந்து கொள்கிறார். அவர் திறுந்துவதற்கு ஒரு வாய்ப்பும் கொடுக்கிறார்.

இல்லவே இல்லை…ஹீரோ – வில்லன் இடையில் நடக்கும் மோதலே கிளைமேக்ஸாக முடிகிறது. போலீஸ் அதிகாரி ஒருவரால் அரவிந்த் சாமி சுடப்படுகிறார்.

அதோடு தனி ஒருவன் சேப்டர் முடிகிறது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைக் கொண்டு தனி ஒருவன் 2 படத்தை எடுக்கும் தீவிர முயற்சியில் மோகன் ராஜா ஈடுபட்டு வருகிறார்.

தற்போது அந்தப் படத்தில் நம்ம தல அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தனி ஒருவன் 2 படம் ஜெயம் ரவியைவிட தல அஜித்திற்கு கச்சிதமாகவே இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதோடு, அஜித்துக்கு வில்லனாக அரவிந்த் சாமி சரியான ஒரு தேர்வாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தனி ஒருவன் 2 படத்தில் தல அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியடைவோம்.

தற்போது அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து போலீஸ் கதையை மையப்படுத்திய மங்காத்தா போன்ற வலிமை படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடக்க இருந்த சண்டைக் காட்சி படப்பிடிப்பு கொரோனா காரணமாக படப்பிடிப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரொனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

சூரி மனசு யாருக்கு வரும்: ஏழை, எளிய மக்களுக்காக அள்ளி அள்ளி கொடுத்த சூரி!

0
Soori Donates rice bags

Soori; ஏழை, எளிய மக்களுக்காக அள்ளி அள்ளி கொடுத்த சூரி! ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை கொடுத்ததோடு, நடிகர் சூரி, தனது சொந்த செலவில் 100 ஏழை, எளிய மக்களுக்கு இன்று உணவளித்துள்ளார்.

100 ஏழை, எளிய மக்களுக்கு தனது சொந்த செலவில் சூரி உணவளித்துள்ளார்.

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட 100 அரிசி மூட்டைகளை நடிகர் சூரி தானமாக கொடுத்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஃபெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதியுதவியாகவும், அரிசி மூட்டைகளை தானமாகவும் கொடுத்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், அஜித், சூர்யா குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், யோகி பாபு என்று பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது இவர்களது பட்டியலில் காமெடி நடிகர் சூரியும் இணைந்துள்ளார். ஆம், அவர், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட 100 அரிசி மூட்டைகளையும், துணை நடிகர்கள் சங்கத்திற்கு 20 அரிசி மூட்டைகளையும் தானமாக வழங்கியுள்ளார்.

மேலும், தனது சொந்த செலவில் 100 ஏழை எளிய மக்களுக்கு இன்று உணவளித்துள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சம், கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்துவிடலாம். ஆனால், ஒரு ஏழைக்கு வயிறார சாப்பாடு போடுவது யாருக்கும் வராது.

அந்த வகையில், 100 எளிய மக்களுக்கு உணவளித்து தான் ஒரு மனிதாபிமானம் உள்ளவன் என்பதை சூரி அடிக்கடி நிரூபித்து வருகிறார். சூரிக்கு பலரும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.

3

ரஜினிகாந்த் பாம்பு புத்துக்குள்ள கையவிட்டு 21 வருடம் ஆச்சு!

0

Padayappa; சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த படையப்பா படம் வெளியாகி 21 ஆண்டுகளை கடந்துவிட்டது.

படையப்பா Padayappa படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிவிட்டதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

90 ஆம் ஆண்டுகளில் கோடான கோடி இயக்குநர்களில் இவரைப் போன்று ஒரு இயக்குநர் யாருமில்லை என்றால் அவர்தான் கே எஸ் ரவிக்குமார் K S Ravikumar.

தன்னுடைய படங்களில் இறுதியிலோ அல்லது படத்தில் நடுவிலோ வந்து செல்லக்கூடிய ஒரு கதாபாத்திரம் யார் என்றால் அது கே எஸ் ரவிக்குமார்.

குடும்பக் கதையை மையப்படுத்தி படம் எடுப்பதில் இவரை மிஞ்ச வேறு ஆள் இல்லை. அந்தளவிற்கு படமும், காட்சியும் இருக்கும்.

உதாரணத்திற்கு, படையப்பா Padayappa, ஊர் மரியாதை, நாட்டாமை, முத்து, சேரன் பாண்டியன், பெரிய குடும்பம், பிஸ்தா, சமுத்திரம் என்று படங்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன், லட்சுமி, அப்பாஸ், செந்தில் என்று நட்சத்திரங்கள் ஏராளமானோர் நடித்திருந்த படம் படையப்பா.

ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தை கொடுத்த படம். வயசானாலும் அழகும், ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல என்ற டயலாக்கிற்கு பொருத்தமான பேர் ரஜினிகாந்த்.

குடும்ப கதையை மையப்படுத்தி படையப்பா கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வந்தது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை.

உலகம் முழுவதும் வெளியான படையப்பா 440 மில்லியன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்தது. 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றிக் கொடி நாட்டியது.

ரய்மா கிருஷ்ணனுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில விருது பெற்றுக் கொடுத்தது.

7 லட்சம் ஆடியோ கேசட்டுகள் உடன் உலகளவில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையை படையப்பா பெற்றுள்ளது.

இந்த நிலையில், படையப்பா படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் கடந்துள்ளது. இதையே ரஜினிகாந்த் பாம்பு புத்துக்குள்ள கையவிட்டு 21 வருடம் ஆச்சு என்று கூட கூறலாம். இதன் காரணமாக படத்தில் ஒரு காட்சிகளை பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

3

விஜய் பிறந்தநாளுக்கு இப்படியொரு பரிசா?

0
Master On June 22

Master On June 22; விஜய் பிறந்தநாளுக்கு இப்படியொரு பரிசா? விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பது மட்டுமே அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், உண்மையில், இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தனது சொந்த செலவில் தயாரிக்கவில்லையாம்.

மாஸ்டர் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆல் ஏரியாவுக்கு ரூ.200 கோடி வரையில் வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள்.

அந்தப் பணத்தை வைத்தே படத்தையும் முடித்துள்ளார்கள். ஆனால், செலவு மட்டும் ரூ.130 கோடி மட்டுமே.

அப்படி, இப்படி என்று எப்படியோ கஷ்டப்பட்டு மாஸ்டர் படத்தை உருவாக்கிவிட்டார்கள். ஆனால், என்ன வெளியிடமுடியவில்லை.

காரணம், கொரோனா என்ற ஒரு வைரஸ். நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாஸ்டர் படம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா இல்லையென்றால் நேற்று மாஸ்டருக்குரிய நாளாக இருந்திருக்கும்.

இந்த நிலையில், மாஸ்டர் மே மாதம் வெளியாகும் என்று தகவல் வந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்கும் போது மே மாதமும் வெளியாக வாய்ப்பில்லை.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மாதம் ஆகும். அப்படியிருக்கும் போது மாஸ்டர் படம் இப்போதைக்கு திரைக்கு வராது.

மாறாக விஜய் வரும் ஜூன் 22 ஆம் தேதி தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அன்றைய தினத்தில் விஜய்க்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் படத்தை எடுத்தது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதால், கண்டிப்பாக மாஸ்டர் படம் விஜய் பிறந்தநாளுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இதனால்தான் என்னவோ MasterOnJune22 என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இன்னும் சிலர் மாஸ்டர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!

0
RMM Relief Work

RMM Relief Work; கபசுரக்குடிநீர் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்! கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் திருப்பூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 குழந்தைகளுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 குழந்தைகளுக்கு முகக்கவசமும் மற்றும் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக்குடிநீரும் வழங்கப்பட்டது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும், வீட்டில் இருந்தபடியே ரசிகர்களுடன் உரையாடல், உடற்பயிற்சி செய்வது, யோகா, சமையல் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் பலரும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு உதவி வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 குழந்தைகளுக்கு முகக்கவசமும் மற்றும் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

இதே போன்று சந்தானம் ரசிகர்கள் 144 தடையை முன்னிட்டு அன்றாட அவதிப்படும் 100 ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தமன்னாவின் டிஜிட்டல் ஒர்க் அவுட் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ!

0
Tamannaah Digital Work Out Video

Tamannaah Challenge; தமன்னாவின் டிஜிட்டல் ஒர்க் அவுட் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ! வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஒர்க் அவுட் செய்யும் தமன்னாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமன்னா டிஜிட்டல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக அப்பாவி ஜனங்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கிறார்கள்.

ஆனால், சினிமா பிரபலங்கள் பலரும் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலகள் செய்வது, சமையல் கற்றுக் கொள்வது, துணி துவைப்பது, யோகா, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.

அதோடு, தங்களது அன்றாட வேலைகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகை தமன்னா தான் ஜிம்மிற்கு செல்ல முடியாது என்பதால், உடற்பயிற்சியாளர் கற்றுக்கொடுப்பதை வீட்டில் இருந்தபடியே தமன்னா செய்து வருகிறார்.

ஜிம் டிரெயினர் உதவியோடு வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், எனது பயிற்சியாளருடன் டிஜிட்டல் ஒர்க் செய்யும் போது எனக்கு பெரிய சவாலாக இருந்தது எனது செல்போனை எப்படி சரியான நிலையில் வைப்பதுதான். உடற்பயிற்சி கூட எனக்கு சவாலாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் பிறந்தநாள் இன்று!

0
Raiza Wilson Birthday Today

Raiza Wilson; பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா வில்சன் இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரைசா வில்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தவர் நடிகை ரைசா வில்சன். இவர் ஒரு மாடல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டிருந்த போது தனுஷ், அமலா பால், கஜோல் நடிப்பில் வந்த வேலையிலலா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வந்தது.

இந்தப் படத்தில் கஜோலுக்கு அதுவும் பெர்சனல் பிஏவாக நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரைசா வில்சனுக்கு பியார் பிரேமா காதல் படம் நல்ல வரவேர்பு கிடைத்தது.

காதல், ரொமாண்டிக் கலந்த இந்தப் படம் காதலர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே படத்தில் நடித்தார்.

தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர்., ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், நண்பர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் சார்பாக நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரைசா வில்சன்…

3

நண்பன் சக்சஸ் பார்ட்டியில் போக்கிரி பொங்கல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விஜய்: வைரலாகும் வீடியோ!

0
Vijay Atlee Dance Video

Nanban Vijay Atlee Dance Video; பார்ட்டியில் போக்கிரி பொங்கல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விஜய்: வைரலாகும் வீடியோ! நண்பன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் விஜய், தனது போக்கிரி பொங்கல் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பார்ட்டியில் போக்கிரி பொங்கல் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட Vijay Atlee Dance Video விஜய்யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த படம் நண்பன் Nanban. பாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் வந்த 3 இடியட்ஸ் (2009) படத்தின் தமிழ் ரீமேக்காக நண்பன் படம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நண்பன் படம் திரைக்கு வந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

நண்பன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அதே ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது.

கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும் மையப்படுத்தி திரைக்கு வந்த நண்பன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து, நண்பன் படத்தின் வெற்றி விழா Nanban Success Party கொண்டாட்டப்பட்டது. இதில், விஜய், அட்லீ, ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது விஜய் நடித்த போக்கிரி படத்தில் இடம்பெற்ற போக்கிரி பொங்கல் Pokkiri Pongal பாடல் ஒலிக்கப்பட்டது. இதற்கு விஜய், அட்லி ஆகியோர் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.

தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து இது ஒரு அரிய காட்சி என்று மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் – அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இந்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

நான் எவ்வளவு பெரிய ஆளுனு தெரியுமா? துப்பாக்கி பட நடிகை!

0
Akshara Gowda

Akshara Gowda; நான் எவ்வளவு பெரிய ஆளுனு தெரியுமா? துப்பாக்கி பட நடிகை! துப்பாக்கி படத்தில் நடித்த நடிகை அக்‌ஷரா கவுடா நான் யாருன்னு தெரியுமா என்று கேள்வி எழுப்பி தனது கிளாமர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை அக்‌ஷரா கவுடான் தான் யாருன்னு தெரியுமா என்று கேள்வி எழுப்பி தனது கிளாமர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த படம் துப்பாக்கி. கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த துப்பாக்கி படத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், அக்‌ஷரா கவுடா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

துப்பாக்கி படத்தின் ஒரு காட்சியில் விஜய்க்கு, அக்‌ஷரா கவுடாவை பெண் பார்க்கும் படலம் நடக்கும். இதற்கு ஜெயராம் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் தலைமை தாங்குவர்.

இந்த காட்சியில், ஜெயராம் மற்றும் காஜல் அகர்வால் இவரும் காதலர்களாகவும் இருந்து விஜய்க்கு பெண் பார்ப்பார்கள். அப்படி அவர்கள் பார்த்த பெண் தான் அக்‌ஷரா கவுடா. படத்தில் ஸ்வேதாவாக வருவார். அதுவும், பாலியல் காட்சியில் நடித்துள்ள பெண் என்று நடிகை காஜல் அகர்வால் விஜய்யிடம் கூறுவார்.

எதுவாக இருந்தாலும் தனக்கு ஓகே என்று விஜய் கூறுவது போன்று அந்த காட்சி.

இந்த காட்சியில் வந்து சென்ற நடிகை அக்‌ஷ்ரா கவுடாதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், நான் அதிர்ஷ்டசாலி இல்லை. நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? நான் ஸ்மார்ட், நான் திறமையானவள், என்னை தேடி வரும் வாய்ப்புகளை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Akshara Gowda

3

விஜய் நிதியுதவி கொடுப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0

Will Vijay Donate; விஜய் நிதியுதவி கொடுப்பாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு! கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், விஜய் கொரோனா நிவாரண நிதியுதவி அளிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் நிதியுதவி கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், மேற்கொண்டு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கேள்வி எழுகிறது. அதோடு, படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதும் சந்தேகம் தான்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் நிதியுதவி, அரிசி மூட்டைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவரது வேண்டுகோளுக்கிணங்க, ரஜினிகாந்த், அஜித், பிரகாஷ் ராஜ், சூர்யா குடும்பத்தார், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், ஐசரி கணேஷ், யோகி பாபு, ஹரிஷ் கல்யாண், ஜெகன், விஜய் மக்கள் இயக்கம் என்று அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இந்தப் பட்டியலில் விஜய் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. விஜய் ரசிகர்கள் என்னதான் உதவி செய்தாலும், அது ரசிகர்களின் சமூக சேவை பட்டியிலில் இடம்பெறும்.

ஆனால், ஒரு நடிகராக விஜய் இதுவரை நிதியுதவி அளிக்கவில்லை. இவ்வளவு ஏன் கொரோனா விழிப்புணர்வு வீடியோ கூட வெளியிடவில்லை.

இந்த நிலையில்தான் பிகில் படத்தில் இடம்பெற்று ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

அதை வைத்து ஏற்கனவே பிகில் படத்திலேயே விஜய் கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் நடித்துவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், விஜய் இதுவரை மௌனம் காப்பது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதன் காரணமாக விஜய் நிதியுதவி வழங்குவார் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் கொரோனா நிதியுதவி வழங்குவார் என்ற நம்பிக்கையில் Vijay Donation Expectation, Will Vijay Donate ஆகிய ஹலோ ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3