Home Blog Page 158

புதிய படங்களை ஓரங்கட்டி சாதனை படைத்த விஜய்யின் கில்லி: டிஆர்பியில் நம்பர் 1!

0
Ghilli On Sun TV TRP

புதிய சாதனை படைத்த விஜய்யின் கில்லி: டிஆர்பியில் நம்பர் 1! விஜய் நடிப்பில் உருவான கில்லி படம் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

கில்லி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு திரைக்குவந்த படம் கில்லி.

ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் திரைக்கு வந்து 200 நாட்களுக்கு மேல் ஓடியது. அதோடு, கில்லி விஜய்யின் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக அமைந்தது.

கபடி, காதல் இரண்டுக்கும் முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆக இன்னும் 7 நாட்கள் உள்ளது.

இந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தொலைக்காட்சி சேனல்கள் தங்களது சேனல்களில் விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் நடித்த படங்களை அடுத்தடுத்து ஒளிபரப்பு செய்கின்றன. இதனால், டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 29 ஆம் தேதி தளபதி விஜய் நடித்த கில்லி படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதோடு எத்தனையோ முறை கில்லி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுவிட்டது.

கில்லி படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் சன் தொலைக்காட்சியில் எத்தனையோ முறை ஒளிபரப்பு செய்யப்பட்டு விட்டது. இதனால், சன் தொலைக்காட்சி 17.78 டிஆர்பி ரேட்டிங் Ghilli TRP Sun TV 17.78 TRP Points பெற்றுள்ளது.

Ghilli TRP King

ஆனால், ஒவ்வொரு முறையும் ஒளிபரப்பு செய்யப்படும் போது தொலைக்காட்சியின் டிஆர்பி என்னவோ அதிகரித்து வருகிறது.

ஆம், 13 ஆவது வாரத்தில் கில்லி படம் 17.78 டிஆர்பி ரேட்டிங் கொடுத்து விஜய் தான் டிஆர்பி கிங் என்று நிரூபித்துள்ளது.

இந்த ரேட்டிங்க் ஒரு புதிய படத்திற்கு கிடைக்கும் ரேட்டிங். ஆனால், விஜய் படைத்திற்கு அதுவும் கில்லிக்கு கிடைத்துள்ளது என்பது அவர் தான் டிஆர்பி கிங் என்பதை சுட்டிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் புதிய படங்களை ஓரடங்கட்டி விஜய்யின் கில்லி படம் புதிய சாதனை படைத்துள்ளது.

3

தூய்மைப் பணியாளர்களின் காலை கழுவிய விஜய் ரசிகர் மன்ற தலைவர்!

0
Vijay Fan Club Activities

Vijay Fan Club Activities; நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜய் ரசிகர் மன்ற தலைவர் தூய்மைப் பணியாளர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு மரியாதை செலுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய விஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற தலைவர் தூய்மைப் பணியாளர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு மரியாதை செலுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் பலரும், வீட்டில் இருந்தபடியே ரசிகர்களுடன் உரையாடல், உடற்பயிற்சி செய்வது, யோகா, சமையல் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் பலரும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு உதவி வருகின்றனர்.

அந்த வகையில், விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற தலைவர் தூய்மைப் பணியாளர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு மரியாதை செலுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் விஜய் ரசிகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அரிசி, காய்கறி, தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை கொடுத்து உதவி வருகின்றனர்.

Vijay Fan Club Activities

Vijay Fan Club Activities

3

Corona Lockdown; மகனை காப்பாற்ற 1200km பைக் ஓட்டிய தாய்

0
Corona Lockdown
Rashiya Begum with her son after 1200km ride

Corona Lockdown; மகனை காப்பாற்ற 1200km பைக் ஓட்டிய தாய், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தபட்டு இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு போக முடியாமல் பெரும்பாலோனோர் சிக்கி தவிக்கின்றனர்.

தெலுங்கானாவில் இருந்து 1200km பயணம் செய்து ஆந்திராவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தனது மகனை மீட்க பைக்கில் சென்ற தாயார்.

ரஷியா பேகம் என்ற பெண்மணி தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகரத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை சென்று தன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இது போன்று பல்வேறு நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், தங்க இடம் கிடைக்காமல் இன்னும் பலர் தவித்து வருகின்றனர்.

3

அட்லீ கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி!

0
Atlee Corona Relief Fund

அட்லீ கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி! கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் இயக்குநர் அட்லீ ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் இயக்குநர் அட்லீ.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அவர்களுக்கு உதவும் வகையில், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியோ அல்லது அரிசி மூட்டைகளையோ வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர்.

இதுவரை ரூ.2 கோடியே 45 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர். 2 ஆயிரத்து 400 அரிசி மூட்டைகளும் கிடைத்துள்ளன என்று ஆர்.கே. செல்வணி விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால், இந்த தொகையை வைத்து இதுவரை 15 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவியுள்ளோம். மேலும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் அட்லீ கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அதில், ரூ.5 லட்சம் இயக்குநர்கள் சங்கத்திற்கும், ரூ.5 லட்சம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.

3

பிகில் படத்திலேயே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அட்லீ ஒரு தீர்க்க தரிசி!

0
Bigil Vijay Corona Awareness Video

Bigil Vijay Corona Awareness Video; விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்திலேயே விஜய் கொரோனா விழிப்புணர்வு பற்றி நடித்து காட்டியுள்ளார். அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிகில் படத்திலேயே விஜய் கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் நடித்துக் காட்டியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.

பிகில் படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று போஸ்டர் வெளியான போது அனைவரும் கூறி வந்தனர்.

ஆனால், படம் வெளியான பிறகுதான் ராயப்பன் மற்றும் மைக்கேல் ராயப்பன் (பிகில்) என்று இரு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அதுவும், அபபா, மகன் என்ற கதாபாத்திரம்.

இந்திய கால்பந்து அணிக்கு கேப்டனாக வரும் வாய்ப்பு கூட இருக்கும் விஜய்க்கு தேர்வுக்குழு அணியில் கூட அவரது பெயரை தேர்வு செய்யவில்லை.

அவர் பெயர் மட்டும் அல்ல, பிகில் அணியில் யாருடைய பெயரையும் தேர்வு செய்யவில்லை.

இதன் காரணமாக ராயப்பன் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பெடரேசன கவுன்சில் தலைவரான ஜாக்கி ஷெரஃபை சந்தித்து பேசவருவார்.

அப்போது, பிகிலுக்கு எல்லாமே சரியாகத்தான் இருந்தது. ஆனால், பின்னணியை பரிசோதித்து பார்க்கும் போது உங்களது கிரிமினல் ரெக்கார்டு காரணமாக அமைந்துவிட்டது.

ஆதலால், தான் அவரது பெயரை தேர்வு செய்யவில்லை என்று ஜாக்கி ஷெராஃப் பேசுவார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ராயப்பன், ஜாக்கி ஷெராஃப் கையை பிடித்துக் கொண்டு சார் என்னுடைய தொழிலுக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பார்.

அப்போ நான் சொன்ன காரணம் பத்தவில்லை என்று அங்கிருந்து சென்று ஜாக்கி ஷெராஃப் சானிடைசர் பயன்படுத்தி கையை சுத்தம் செய்வார்.

பின்னர், கால்பந்து என்பது உங்களைப் பொறுத்தவரை வெறும் விளையாட்டு ஆனால், என்னைப் பொறுத்தவை இது ஒரு பிஸினஸ்.

ஒருவன் ஒருமுறை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவன் தோற்றாலும், ஜெயித்தாலும் அவனுக்கு அரசு வேலை கண்டிப்பாக உண்டு என்று இருவரது உரையாடல் இருக்கும்.

இந்த நிலையில், ஜாக்கி ஷெராஃப் கையை பிடித்துக் கொண்டு ராயப்பன் பேசும் போது அவரிடம் இருந்து விலகிச் சென்ற ஜாக்கி ஷெராஃப் முதல் வேலையாக தனது கையை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்வார்.

இதைத்தான் தற்போது நாட்டு மக்கள் அனைவரும் செய்து வருகின்றனர். ஆம், அடிக்கடி தங்களது கைகளை சோப் போட்டோ அல்லது சானிடைசர் பயன்படுத்தியோ சுத்தம் செய்து வருகின்றனர்.

நாட்டு மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஆனால், விஜய் கொரோனா வைரஸ் குறித்து எந்த விழிப்புணர்வு வீடியோவும் வெளியிடவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், பிகில் படத்தில் இடம்பெற்று ஒரு சிறிய வீடியோ ஒன்றே அதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், பிகில் படத்திலேயே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அட்லீ ஒரு தீர்க்க தரிசியாக திகழ்கிறார்.

3

National Siblings Day 2020; தேசிய உடன் பிறந்தோர் தினம் 2020

0
National Siblings Day 2020

National Siblings Day 2020; தேசிய உடன் பிறந்தோர் தினம் 2020, Siblings day wishes, quotes and messages. Siblings day history.

1995ஆம் ஆண்டு கிலாடிய எவர்ட் என்ற பெண்மணி அமெரிக்காவில் முதல் முறையாக உடன் பிறந்தோர் தினத்தை கொண்டாட முடிவு செய்தார்.

காரணம் அவருடைய தமையன் மற்றும் தமக்கை ஆகிய இருவரையும் ஆரம்ப காலத்திலேயே இழந்து விட்டதே இவரின் இந்த செயலுக்கு காரணம்.

அவரின் இணைபிரியா தங்கை சிசேட்டேவின் நினைவாக அவர் பிறந்த தினமான ஏப்ரல் 10 இல் உடன் பிறந்தோர் தினம் Siblings Day கொண்டாடினார்.

உடன் பிறந்தவர்களுக்கிடையே இருக்க கூடிய பந்தம், உறவு மற்றும் நெருக்கம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தி ஒரு பலமான உறவை ஏற்படுத்துவதே ஆகும்.

இதற்காக அவர் தொடங்கிய அறக்கட்டளை மூலம் அமெரிக்காவில் இந்த நாளை பிரபல படுத்த முயன்றார். இந்த நாளை விடுமுறை நாளாகவும் அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

1998ஆம் ஆண்டு முதல் 49 அமெரிக்க மாநிலங்களும் விடுமுறையாக கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே கலாச்சாரத்தில் இந்தியாவில் ரக்ஷா பந்தன் என்னும் பண்டிகை உடன் பிறந்தோரின் உறவை சிறப்பிக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்புthe day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

3

அப்பா, மகன் கதைக்கு போட்டி: அவமானப்பட்ட சிவகார்த்திகேயன்!

0
Sivakarthikeyan

Sivakarthikeyan; அப்பா, மகன் கதைக்கு போட்டி: அவமானப்பட்ட சிவகார்த்திகேயன்! நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த அல வைகுந்தபுரமுலோ படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு சிவகார்த்திகேயன் போட்டி போட்டு கடைசில அவமானப்பட்டுள்ளார்.

அப்பா, மகன் கதையை மையப்படுத்திய அல வைகுந்தபுரமுலோ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்ற நினைத்த சிவகார்த்திகேயனுக்கு கடைசியில் அவமானம் தான் மிஞ்சியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் என்பது மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். விரைவில், இயக்குநர் அவதாரம் கூட எடுக்கலாம்.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வந்த படம் அல வைகுந்தபுரமுலோ.

அப்பா, மகன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

அதற்காக இந்தப் படத்தை கைப்பற்றும் முயற்சியில், மோகன் ராஜா, விஜய் சந்தர் ஆகியோர் இறங்கியுள்ளனர்.

படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி மோகன் ராஜா தனது தம்பியை வைத்து ஹிட் கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளாராம்.

இதே போன்று, வாலு படத்தை கொடுத்த விஜய் சந்தர் இந்தப் படத்தை அப்படியே ரீமேக் செய்து சிம்புவிற்கும், தனக்கும் ஒரு ஹிட் கொடுக்க ஆசைப்படுகிறாராம்.

இவர்களது வரிசையில், சிவகார்த்திகேயனும், இந்தப் படத்திற்காக போட்டி போட்டுள்ளார். ஆனால், அல்லு அர்ஜூன் தரப்பில் சிவகார்த்திகேயனை ரீமேக் பற்றி பேச கூட வரவேண்டாம் என்று தெரிவித்து விட்டார்களாம்.

3

பாகிஸ்தான் ராணுவம்; எல்லை கடந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு தள்ளியது

0
பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம்; எல்லை கடந்த இந்தியா உளவு விமானத்தை சுட்டு தள்ளியது. பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்தியா ட்ரோன் தாக்கப்பட்டது.

இந்தியாவின் உளவு பார்க்கும் ட்ரோன் ஒன்று பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி 600 மீட்டர் உள்நுழைந்து சென்ற பொழுது அதை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் இதுபோன்ற தேவையற்ற செயல்கள், ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும், இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும்.

2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் அவமரியாதை செய்வதை இந்த ஊடுருவல் உணர்த்துகிறது எனக் கூறுகின்றனர்.

3

குட்டை பாவாடையில் காருக்குள் அமர்ந்திருக்கும் நயன்தாரா வைரலாகும் புகைப்படம்!

0
Nayanthara Hot Picture

Nayanthara; குட்டை பாவாடையில் காருக்குள் அமர்ந்திருக்கும் நயன்தாரா வைரலாகும் புகைப்படம்! காருக்குள் குட்டை பாவாடை உடை அணிந்திருக்கும் நயன்தாராவின் சைலண்டான லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா குட்டை பாவாடை உடை அணிந்து காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. காதல் சர்ச்சைகளையும் தாண்டி முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

இவருக்கு இன்னமும் மார்க்கெட் குறையவே இல்லை. தொடர்ந்து மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி, குசேலன், சிவாஜி ஆகிய படங்களில் நடித்திருந்தார். அண்மையில், திரைக்கு வந்த தர்பார் படத்திலும் நடித்திருந்தார்.

இந்தப் படங்களை எல்லாம் தொடர்ந்து தற்போது சிவா – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வளவு ஏன், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக நடிகை ரோஜா, கே ஆர் விஜயா, விஜயசாந்தி, பானுப்ரியா, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Nayanthara Inside The Car

இவர்களது வர்சையில் நயன் தாராவும் களமிறங்கியுள்ளார். இதுவரை நயன்தாரா த்ரில்லர் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காருக்குள் குட்டையான பாவாடையில் தொடை தெரியும்படியான உடை அணிந்து அமர்ந்திருக்கும் நயன்தாராவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல நேரங்களில் நயன்தாரா குட்டை பாவாடை மட்டுமே அணிந்துள்ளார். அவருக்கு குட்டை பாவாடை அணிவது என்பது ரொம்ப பிடிக்கும் போல.

3

முதல் முறையாக தனித்தனியாக இருக்கிறோம்: தனுஷின் சகோதரி கார்த்திகா வருத்தம்!

0
Dhanush Family Photo

Dhanush Family Photo; முதல் முறையாக தனி தனியாக இருக்கிறோம்: தனுஷின் சகோதரி கார்த்திகா வருத்தம்! குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்த தனுஷ் அங்கு குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகள் மூடப்பட்டதோடு, சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது.

மேலும், சினிமா பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. எனினும், அவர்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டு வந்தனர்.

மேலும், ரசிகர்களுடன் உரையாடுவது, உடற்பயிற்சி செய்வது, யோகா, சமையல், வீட்டைச் சுத்தம் செய்வது என்று தங்களை பிஸியாக வைத்துக் கொண்டனர்.

தனுஷும் தனது டுவிட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தனுஷின் சகோதரி கார்த்திகா குடும்பத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அனைவரையும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து, எனது வாழ்வில் குறைந்தது 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது நாங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் இருந்ததில்லை. எங்களது வாழ்க்கையில், ஒரே நகரத்திலிருந்தும் முதல் முறையாக பிரிந்திருக்கிறோம்.

இது போன்று இதற்கு முன்னதாக பிரிந்திருந்தது இல்லை. மிஸ் பண்ணுனதும் இல்லை. உண்மையான அன்பு மற்றும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் ஆகியவற்றிற்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. உங்களை நேசிக்கிறேன். மிக அதிகாமக மிஸ் பண்ணுகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், குடும்பத்தோடு தேனியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்ற தனுஷ், அங்கு குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செல்வராகவன், தனுஷின் சகோதரிகள் விமலகீதா, கார்த்திகா ஆகியோரும் தங்களது குழந்தைகளுடன் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3