Home Blog Page 159

சர்ச்சைக்குள்ளான வாடியம்மா ஜக்கம்மா கிரண் வீடியோ!

0

Kiran Rathod சர்ச்சைக்குள்ளான வாடியம்மா ஜக்கம்மா கிரண் வீடியோ! கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை கிரண் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கிரண் வெளியிட்டுள்ள வாடியம்மா ஜக்கம்மா பாடல் வீடியோ ஒன்று தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை கிரண் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Kiran Rathod Thirumalai Movie

ஆம், விஜய், ஜோதிகா நடிப்பில் வந்த திருமலை படத்தில் வரும் வாடி அம்மா ஜக்கம்மா பாடலுக்கு நடிகை கிரண், விஜய் உடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார்.

இந்தப் பாடலில் வரும் ஒரு சில காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ஒன்றில், உங்களது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சுட்டிக்காட்டுவது போன்று ஒரு காட்சியையும், எந்த தொடுதலும் கூடாது. சமூக இடைவெளி வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவது போன்ற ஒரு காட்சியையும் பதிவிட்டுள்ளார்.

Kiran Rathod Thirumalai

ஆனால், இது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதோடு, விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும், கிரண் உடன் வாக்குவாதத்தில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கிரண் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு பதிவிட்டு வீடியோவில், இங்கே வாங்க, நாங்களும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம் என்று சில ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.

3

முந்தானையை அந்தரத்தில் தொங்கவிட்டு செக்ஸியாக போஸ் கொடுத்த மீரா மிதுன்!

0
Meera Mithun

Meera Mithun; முந்தானையை அந்தரத்தில் தொங்கவிட்டு செக்ஸியாக போஸ் கொடுத்த மீரா மிதுன்! நடிகை மீரா மிதுன் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தனது சேலை முந்தானையை அந்தரத்தில் தொங்கவிட்டு செக்ஸியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் நடிகை மீரா மிதுன். ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமே அதிகளவில் பிரபலமானார்.

தொடர்ந்து மாடலிங் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். எப்போதும், தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி ஒரு கிளாமரான புகைப்படத்தைத் தான் தற்போது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சேலையை முந்தானையை அந்தரத்தில் தொங்கவிட்டபடி, கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அதில், உங்களை மட்டுமே விரும்பும் மற்றும் ஏங்குகிற ஒரு மனிதனை விட வேறு எதுவும் கவர்ச்சியாக இல்லை, வேறு யாரும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் கலாய்த்துள்ளனர். அதிலும் ஒரு ரசிகர் ஒரு படி மேலே சென்று ஆண்டி உங்க பசங்க என்ன பண்ணுறாங்க என்று கேட்டு கிண்டலடித்துள்ளார்.

3

Money Heist Review; A Unusual robbery which is full of suspense & Emotions

1

Money Heist Review; A Unusual robbery which is full of suspense & Emotions. Money Heist Created by Alex Pina. Money Heist Season Part 4 Review. Streaming Partner Netflix.

Money Heist story seems like simple Robbery takes place. Unlike other stories here they had given importance to each characters.

Professor gathered 8 peoples who are previously got into the robbery or other crime activities for rob 2.4 billion euros at Royal Mint in Spain.

The professor clearly explained we are going to rob without assault or kill anyone. There are 9 criminals including professor and one chief police officer and two peoples royal mint had personal stories in this series.

We can’t simply portray the robbery without even convey backstories of characters. Each characters had some interesting stories consists love, vengeance, sex, betrayal.

Money Heist Rewind

Money Heist Characters

The professor stayed at bed plenty of years heard tons of stories from his father who’s real robber. This might inspire him to robber without violence. Tokyo and Nairobi had emotional family issues which may fill ourselves.

There is father son sentiment moments between Moscow and Denver. We can witness brother bonds between the Oslo and helenski.

Tokyo and Rio had some extraordinary romantic drizzling at various scenarios. Inside the royal mint Arturito and Monica’s Affair lead to another affair.

Raquel who is a senior police officer who lead this robbery case who’s having problem with her ex husband and lives with her mother and daughter

We forget the professor who’s having more screen time than others build a relationship with Raquel as stranger. I don’t want to reveal the story much that’s why I’m telling some important moments.

There are lots obscenity and love making in this series. It’s not new for web series. What is driving more than any other things in this series is Suspence and Non linear story telling.

Money Heist Part 4 Review

Each episode contains at least three suspenseful scenes which drive our brain often. These suspense scenes had right mixture of each emotions made this series more successful.

Instead of going into robbery and some kind of action they built each and every characters so strong this is where the beauty lies.

They are pre-planned very well for the robbery. So They had the answer for each and every question might pop up in your mind. Despite these all you can find few loop holes.

I suggest it would be best entertainment for you if you invest your time. This review was written after I watched season one. Next season review will come stay tuned.

3

உலறிய ஒய் ஜி மகள், கண்டிப்பாரா ஒய்ஜி மகேந்திரன்?

0

30 ஆயிரம் கோடியில் 40% 20,000 கோடி என்றும் இந்திய மக்கள்  8000 கோடி என்றும் உலறிய ஒய் ஜி மகேந்திரன் மகளான மதுவந்தி.

டந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் தான் முதல் முறையாக வைரஸ் தொற்று இருந்த ஒருவரை கண்டுபிடிக்கப்பட்டது.

வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.

இந்த வைரஸ் காரணமாக உலகமெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுஶ்ரீ

அமெரிக்காவில் நேற்று ஒரு நாள் மட்டும் 1900 பேர் பலியாகி உள்ளனர்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு தலா 500 பேர்களுக்கு மேல் பலியாகி வருகிறார்கள்.

பிரான்சில் நேற்று ஒரு நாள் மட்டும் இந்த வைரசுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறையாகியுள்ளனர்.

இந்த வைரசு தடுக்க பல நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி மார்ச் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து மெழுகுவர்த்தி எண்ணெய் விளக்கு மற்றும் டார்ச்லைட் போன்றவற்றை மக்களை எரியவிட சொன்னார் .

மக்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கொரோனாவை கொன்று விட்டதாகவும் நினைத்துக்கொண்டு. பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன.

இந்த நிகழ்வு நடக்கும் முன்பு ஒய்ஜி மகேந்திரனின் மகளான மதுவந்தி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் “தனக்கு தெரிந்த சில விஞ்ஞானிகள் ஒன்பது கிரகங்களும் ஒரே கோட்டில் வருவதாகவும், அறிவியல் படி விளக்கேற்றினால் வைரஸ் இறந்துவிடும் என்பதாகவும் ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நெட்டிசன்கள் மதுவந்தியை வறுத்தெடுக்கும் அளவிற்கு கலாய்த்து எடுத்தார்கள்.

தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோவை வெளியிட்டார் மீண்டும் மதுவந்தி.

அந்த வீடியோவில் 30 ஆயிரம் கோடியில் 40% 20,000 கோடி என்றும், இந்திய மக்கள் 8,000 கோடி மக்கள் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி மோடி அளாத்தார் என்றும் அதிகாரப்பூர்வமான ஒரு புள்ளி விவரங்களை வெளியிடுகிறேன் என்று கூறியிருந்தார்.

முற்றிலும் தவறான கருத்தாகும். பள்ளிக்கூடம் சல்லாத குழந்தை சொல்லும் கணக்காக இருந்தது.

இதை அவர் சீரியஸாக வேற பேசினார் என்பதுதான் ஹைலைட் .அந்த வீடியோவை எடுத்தவுடன் மதுவந்தி மீண்டும் ஒருமுறை போட்டு பார்த்தாரா என்று கூட தெரியவில்லை.

ஆனால் வீடியோ அவரே எடிட்டிங் செய்யப்பட்டு வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற தவறான பதிவுகளை பதிவிடும் மதுவந்தியை அவரது தந்தையான ஒய்ஜி மகேந்திரன் கண்டிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் தவறான புள்ளி விவரங்களை வைத்து ஆதரவு தெரிவிப்பது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒன்று.

அதில் உள்ள தவறை மதுவந்தி உணர்ந்து இருப்பாரா என்பது அவர்தான் சொல்ல வேண்டும்.

3

This Day in History April 10; வரலாற்றில் இன்று ஏப்ரல் 10

0
This Day in History

This Day in History April 10; வரலாற்றில் இன்று ஏப்ரல் 10, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

1656ஆம் ஆண்டு டச்சுத் தளபதி பீட்டர்சு அல்பட் கொழும்பு நகரில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்திற்கு பின்னர் கொழும்புவை டச்சு தோற்கடித்தது.

1868ஆம் ஆண்டு அபிசீனியவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய இந்தியா கூட்டு படைகள் தியோடர் மன்னனின் படைகளை வென்றது. இதில் 700 எத்தியோபிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

1998ஆம் ஆண்டு அயர்லாந்துக்கும் ஐக்கிய ராட்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்து வட அயர்லாந்து குறித்த உடன்பாடு நடைபெற்றது.

Today Birthdays in History

1829ஆம் ஆண்டு ரட்சனிய சேனையை உருவாகிய ஆங்கிலேயர் வில்லியம் பூத் பிறந்த தினம் இன்று.

1887ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற ஆர்ஜென்டீனா மருத்துவர் பெர்னார்டோ ஊசே பிறந்த தினம் இன்று.

1927ஆம் ஆண்டு இலங்கை அரசியல்வாதி ஏ.சி.எஸ். ஹமீட் பிறந்த தினம் இன்று.

Today Deaths in History 

1964ஆம் ஆண்டு தமிழ்நாட்டு தவில் கலைஞர் நாச்சியார்கோவில் என்.பி.ராகவப்பிள்ளை இறந்த தினம் இன்று.

1995ஆம் ஆண்டு இந்தியாவின் 6வது தேசிய பிரதமர் மொரார்ஜி தேசாய் இறந்த தினம் இன்று.

2013ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற ஆங்கிலேய மருத்துவர் ராபர்ட் எட்வர்சு இறந்த தினம் இன்று.

3

10 கோடி நிதி அளித்த சன்ரைசர்ஸ்

0

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி அளிக்கும் விதமாக ஐபிஎல்யின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் 10 கோடி ரூபாய் அளித்துள்ளது

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.

உலகெங்கும் 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் உயிர்களைக் கொன்று பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.

கனடா பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர், ஸ்பெயின் இளவரசி போன்றோரும் இந்தக் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார்கள்.

பல நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்   குறிப்பாக அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகள் பல பாதிப்புகளை அடைந்துள்ளது

இந்தியா பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தொலைக்காட்சிகளும் தோன்றிய பிரதமர் மோடி “மக்களிடம் உங்களால் முடிந்த தொகையை குருநாதருக்கு பணிகளுக்காக தாருங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருந்தார்”

இதற்கு பல தொழிலதிபர்கள் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நிதி அளித்து வந்தார்கள். பல முன்னணி தொழிலதிபர்களும் நிதி அளித்து வருகிறார்கள்.

கிரிக்கெட் வீரர்களில் கௌதம் கம்பீர் மருத்துவ உபகரணங்களுகாக 50 லட்சம், சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், ரோகித் 80 லட்சம், கங்குலி 50 லட்சம் பிசிசிஐ 50 லட்சம் யுவராஜ் சிங் 80 லட்சம் கோலி மற்றும் அனுஷ்கா 3 கோடி போன்ற தொகை அளித்தார்கள்.

தற்போது ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் கரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 10 கோடி ரூபாய் அளித்துள்ளது.

நிதி அளித்ததை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது

https://platform.twitter.com/widgets.js

கிரிக்கெட் சார்ந்த நிதியில் இதுவே அதிகம் பிசிசிஐ 50 லட்சம் மட்டுமே அளித்திருந்தது

மற்ற அணிகள் நிதி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

3

தமிழ் சினிமாவை விட்டு வெளியேறும் விக்ரம்

0

தன் மகனின் சினிமா வாழ்க்கையை குறித்து கவனம் செலுத்த உள்ளதால் நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் இருந்து வெளி பெற போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உடம்பை வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் சிலர். அதில் நடிகர் விக்ரம் முதலில் வருவார்.

அவர் நடித்த சேது, காசி, பிதாமகன், ஐ, தெய்வத்திருமகன் போன்ற படங்கள் இதற்கு சாட்சி.

நடிகர் விக்ரம் இந்த வளர்ச்சிக்கு அவ்வளவு எளிதாக வரவில்லை. இவரது ஆரம்ப காலங்களில் நிறைய தோல்விகளை சந்தித்தார். சேது படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

தன் உடலை வருத்திக்கொண்டு நடித்தாலும் கதை தேர்வு செய்வதில் தற்போது சொதப்பி வருகிறார். இவர் ஒரு மிகப் பெரிய வெற்றியை கொடுக்க நீண்டகாலமாக போராடி வருகிறார்.

தற்போது விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் 20 வேடங்களில் வருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கில் 7 வேடங்களில் நடிகர் விக்ரம் தோன்றி இருந்தார்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு வேடங்கள் கொடுத்தாலும் தன் உடம்பை வருத்திக் கொண்டு, அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பவர் நடிகர் விக்ரம்.

இவரின் நடிப்பால் இவருக்கு தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது போன்ற விருதுகள் கிடைத்துள்ளது.

இவருக்கு விஜய், அஜித் போல் தனித்தனியாக ரசிகர்கள் இல்லை. தமிழ்நாட்டில் விக்ரமை பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்களை கையை விட்டு கூட எண்ணிவிடலாம் இவருக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

 

இவரை செல்லமாக தமிழ் ரசிகர்கள் சீயான் விக்ரம் என்று தான் அழைப்பார்கள். சீயான் என்பது சேது படத்தில் வரும் விக்ரமின் கதாபாத்திரம்.

தற்போது நடிகர் விக்ரம் குறித்து செய்திகள் கசிந்துள்ளது விக்ரமின் மகன் துருவ் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற படத்தில் நடித்தார். படம் தயாரிப்பாளருக்கும் மற்றும் நடிகர் விக்ரமுக்கும் திருப்திகரமாக இல்லாததால் வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்ற படத்தை எடுத்தார்கள். படம் மக்களிடம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

நடிகர் விக்ரம் இனி தனது மகன் துருவ் விக்ரமின் திரை வாழ்க்கை எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்த செய்தி குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது

நடிகர் விக்ரம் கோப்ரா படம் மட்டுமில்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இந்த படம் படப்பிடிப்பு தாமதமாகவே நடந்து வருகிறது.

  • தற்போது போன வைரஸ் காரணமாக அனைத்துவித படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது
3

10/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

10/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று தங்களின் முன்னேற்றத்திற்கு உகந்த நாளாகும். தனலாபம் சிறப்பாக இருக்க போகிறது. வீட்டிலும் வெளியிலும் நன்மதிப்பு பெற போகின்ற நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசிபலன்

நீங்கள் இன்று மன உளைச்சலுடன் காணப்படும் நாளாக இருக்கும். மனதை அமைதியாக வைத்து கொள்ளவும். அனைவரிடமும் நம்பிக்கை வைத்து ஏமாற வேண்டாம். கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்று இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். துணையிடம் அன்பான வார்த்தைகள் பேசவும். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டிய நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

உங்கள் செயல்களில் நீங்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பீர்கள். தங்களின் செயல்களுக்கான ஊதியம் தானாக கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாக இருக்க போகும் நாளாக இருக்க போகிறது.

சிம்ம ராசிபலன்

இன்றைய செயல்களில் சாதகமாக இருக்க தங்களின் புத்திசாலித்தனத்தை உபயோகிக்க வேண்டும். அதிக வேலையால் நாளிறுதியில் சோர்வாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புகள் அதிகம். புதிய நபர்களிடம் கவனமாக இருக்கவும். வாகனங்கள் ஓட்டும் போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

துலா ராசிபலன்

இன்று ஆன்மீக ஈடுபாடு அவசியம் தேவையாகும். அதன் மூலம் உடனடி பலன்கள் கிடைக்க போகிறது. அருகில் இருக்கும் கோவிலுக்கு துணையுடன் சென்று வாருங்கள். உடல்நிலை சுமாராக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று நற்பலன்கள் அதிகமாக இருக்கும் நாளாகும். பணியிடத்தில் மேலதிகாரிகள் பாராட்டுகள் பெற வாய்ப்புகள் அதிகம். தங்களுக்கு தரப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டிய நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று ஏற்படக்கூடிய தடைகள் கஷ்டங்களை சமாளிக்க மன தைரியத்தை வளர்த்து கொள்ளவும். சில தவறுகள் நடைபெற வாய்ப்புண்டு. குடும்ப உறவுகளில் பிரச்சனைகள் வரலாம். பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

மகர ராசிபலன் 

இன்று அன்றாட வேலைகளை முடிக்கவே சிரமமாக இருக்கும். தங்களின் வீட்டில்  உள்ள பெரியோர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். பணவரவு போதுமான அளவிற்கு இருக்காது. கண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்ப ராசிபலன்

இன்று குழப்பமான சூழல் நிலவும். அதனால் தாங்கள் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு.

மீன ராசிபலன் 

இன்று அனுகூலமான பலன்களை பெறுகின்ற நாளாக இருக்கும் பணிகளில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். எதிர்பாராத தன லாபம் நிச்சயம் வரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

10/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் ரெடியான ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 கன்பார்ம்!

0
Chandramukhi 2

Chandramukhi 2; தலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் ரெடியான ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 கன்பார்ம்! ரஜினிகாந்தின் ஆசியுடனும், அனுமதியுடனும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளதாக ராகவா லாரனஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன் தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு ஆகியோர் பலர் நடித்த படம் சந்திரமுகி. இந்தப் படத்தை சிவாஜி புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் ராம்குமார் கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை அனைவருமே கொண்டாடினர். சந்திரமுகி 800 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது.

இந்த நிலையில், சந்திரமுகி 2 படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.

சந்திரமுகி 2 படத்தையும் பி வாசு இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தலைவரின் ஆசியுடனும், அனுமதியுடனும் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்கள் அனைவருக்கும் நான் ஒரு சந்தோஷமான செய்தியை பகிர்கிறேன்.

எனது அடுத்த படங்களில் ஒன்று தலைவரின் படமான சந்திரமுகி 2. தலைவரின் அனுமதியுடனும், ஆசியுடனும் இந்தப் படத்தில் நடிப்பது என்பது எனது அதிர்ஷ்டம்.

இயக்குநர் பி வாசு இந்தப் படத்தை இயக்குகிறார். எனது அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

மேலும், இந்தப் படத்திற்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையான ரூ.3 கோடியை கொரோனா நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ராயபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு ரூ.75 லட்சம்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்

நடன கலைஞர்கள் யூனியனுக்கு ரூ.50 லட்சம்

ஃபெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம்

உடல் ஊனமுற்றோருக்கு ரூ.25 லட்சம்

என்று பிரித்து பிரித்து வழங்கியுள்ளார். இறுதியில் சேவையே கடவுள் என்று சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஃபேமிலி குறும்படம்: வீட்டில் இருந்தபடியே படப்பிடிப்பா? இதுவும் நல்லாதான் இருக்கு!

0
Family ShortFilm

Family ShortFilm; வீட்டில் இருந்தபடியே படப்பிடிப்பா? இதுவும் நல்லாதான் இருக்கு! சினிமா பிரபலங்கள் பலரும் ஃபேமிலி குறும்படம் என்ற தலைப்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பேமிலி என்ற குறும்படம் மூலம் பிரபலங்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடித்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக சாதாரண நடுத்தர மக்கள் முதல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தபடி பிரபலங்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது ஃபேமிலி குறும்படம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் முன்வந்துள்ளனர்.

இதில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மம்முட்டி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

Family ShortFilm

இந்த ஃபேமிலி குறும்படத்தை இயக்குநர் ப்ரசூன் பாண்டே இயக்கியுள்ளார். இந்த நிலையில், இந்த ஃபேமிலி குறும்படத்தில் மம்மூட்டி நடித்த காட்சியை அவரது மகன் துல்கர் சல்மானே படமாக்கியுள்ளாராம்.

ஏற்கனவே துல்கர் சல்மானுக்கு தனது அப்பாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதனை தற்போது இந்த ஃபேமிலி குறும்படம் மூலம் நிறைவேற்றிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3