Home Blog Page 160

மனிதநேயம் உள்ள மனிதன்: ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!

0
Raghava Lawrence Rs 3 Crore Donation

Raghava Lawrence; மனிதநேயம் உள்ள மனிதன்: ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி! நடிகர் ராகவா லாரனஸ் ரூ. 3 கோடி கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

ராகவா லாரனஸ் (Raghava Lawrence) அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அவர்களுக்கு உதவும் வகையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியோ அல்லது அரிசி மூட்டைகளையோ வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர். இதுவரை ரூ.2 கோடியே 45 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர். 2 ஆயிரத்து 400 அரிசி மூட்டைகளும் கிடைத்துள்ளன என்று ஆர்.கே. செல்வணி விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால், இந்த  தொகையை வைத்து இதுவரை 15 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவியுள்ளோம். மேலும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், பின்னணி பாடகருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ராயபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு ரூ.75 லட்சம்

பிரதமர் நிவாரண நிதிக்கு PM Relief Fund ரூ.50 லட்சம்,

முதல்வர் நிவாரண நிதிக்கு CM Relief Fund ரூ.50 லட்சம்

நடன கலைஞர்கள் யூனியனுக்கு Dancer’s Union ரூ.50 லட்சம்

ஃபெப்சி FEFSI அமைப்புக்கு ரூ.50 லட்சம்

உடல் ஊனமுற்றோருக்கு Physical Abled ரூ.25 லட்சம்

என்று பிரித்து பிரித்து வழங்கியுள்ளார். இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒன்றை ராகவா லாரன்ஸ் செய்துள்ளார்.

ஆம், உடல் ஊனமுற்றோர் மற்றும் தின கூலி தொழிலாளர்கள் என்று யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. ஆனால், ராகவா லாரன்ஸ் அவர்களையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கும் உதவி செய்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற அட்வான்ஸ் தொகையில் இருந்து இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பங்குனி பொங்கல்: வேண்டிய வரம் தருவாள் விருதுநகர் பராசக்தி மாரியம்மன்

4

பராசக்தி மாரியம்மன் தல வரலாறு, உலக புகழ்பெற்ற பங்குனி பொங்கல் திருவிழா, கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் அதிசய நிகழ்வு.

அகில உலகையும் படைத்து அதனை ஆட்சிபுரிந்து வருகின்ற அன்னை ஆதி பராசக்தியின் மகிமைகள் பல உண்டு.

பல்வேறு ரூபங்களில் பல்வேறு திருநாமங்களில் கோவில் கொண்டு மக்களின் இடர்களை போக்கி வருகிறாள்.

தமிழகத்தின் உள்ள தென்மாவட்டங்களிலும் அவளின் அருளாட்சி மகிமைகள் நிறைந்த திருதலங்களில் பல உள்ளது.

அந்த வகையிலே விருதுநகர் மாநகரத்தை ஆட்சி புரிந்து வருகிறாள் அன்னை பராசக்தி மாரியம்மன் என்ற திருநாமத்தோடு.

பராசக்தி மாரியம்மன் தல வரலாறு

பலநூறு ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் விருதுப்பட்டியாக இருந்த போது இந்த கோவில் இருக்கும் இடத்தில் சந்தை ஒன்று இருந்தது.

அங்கு மாட்டு தீவனங்கள் விற்கும் கடையை ஒரு தம்பதியினர் நடத்தி வந்தனர். ஒரு நாள் யாரென்று அறியாத ஒரு சிறு பெண் குழந்தை தானாக அவர்களிடம் சென்று ஆதரவு கேட்டு தஞ்சம் புகுந்தது.

அவர்களும் தெய்வ கலை பொருந்திய அக்குழந்தைக்கு ஆதரவு அளித்து அங்கேயே தங்க வைத்தனர். பின் அன்று இரவே அக்குழந்தை இறந்து போனது. தாம் ஆதரவு அளித்த அக்குழந்தை இறந்ததை எண்ணி மனம் வருந்தினர்.

அப்பொழுது ஒரு அசரீரி ஒலித்தது தான் மாரியம்மன் எனவும் அவளுக்கு ஆதரவு அளித்ததால் அங்கேயே இருக்க போவதாகவும் அங்கு பீடம் அமைத்து தன்னை வழிபடுமாறு கூறியது. அவர்களும் அங்கே பீடம் அமைத்து மாரியம்மனை வழிபட துவங்கினர் என்பது கோவில் வரலாறு ஆகும்.

திருக்கோயிலின் அமைப்பு

1780-ஆம் ஆண்டு கோயில் இருக்கும் இடத்தில் பீடம் அமைத்து வழிபட துவங்கினர். 1859-ஆம் ஆண்டு பீடத்தில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

1918-ஆம் ஆண்டு முதன் முறையாக குடமுழுக்கு நடத்தப்பட்டது. 1923-ஆம் புதிய கட்டிடம் அமைப்பெற்று 1933 முதல் பங்குனி பொங்கல் விழாவானது வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகின்றது.

கோயிலின் முகப்பு கோபுரமானது வேறு எங்கும் இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பங்குனி பொங்கல்

விருதுநகரில் பிரசித்தமான திருவிழா என்றாலே அது பங்குனி மாதம் பராசக்தி மாரியம்மனுக்கு கொண்டாடப்படுகின்ற பங்குனி பொங்கல் திருவிழா ஆகும்.

பொங்கல் திருவிழாவிற்கான அறிவிப்பு திருவிழாவிற்கு 21 நாட்களுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமையில் சாட்டு முரசு கொட்டி திருவிழாவிற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

பின் அன்றிலிருந்து 21 நாட்கள் நேர்த்தி கடன்களை செலுத்தும் பக்தர்கள் வீட்டு வாசலில் வேப்பிலை தோரணம் மற்றும் கையில் காப்பு கட்டி விரதமிருக்க துவங்குவர்.

திருவிழா துவங்கி 21 நாட்களும் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அன்னையை தரிசிக்க வந்த வண்ணம் இருப்பர். 21 நாட்களும் கடுமையான விரதமிருந்து நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

அக்னி சட்டி எடுத்தல், கயிறு குத்து, வாய்ப்பூட்டு, கரகம் எடுத்தல், கரும்பு தொட்டில், தேர் இழுத்தல், வேடங்கள் போடுதல் முதலான நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

விரதமிருப்பவர்கள் 21 நாட்களும் உண்ணா நோன்பிருந்து. நேர்த்திக்கடன் செலுத்தும் முன்பு ஆக்கி வைத்தல் எனப்படும் படையல் அவரவர் வீட்டிலேயே செய்கின்றனர்.

பொங்கல், கொழுக்கட்டை, கருவாட்டு குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, முட்டை போன்றவற்றை புதிய மண் சட்டிகளில் சமைக்க செய்து படையல் இட்டு தாங்களும் உண்டப்பின் நேர்த்திக்கடன் செலுத்த செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுக்க திரண்டு வருகின்றனர்.

திருவிழாவின் போது பராசக்தி மாரியம்மனும், வெயிலுகந்த அம்மனும் மலர்கள் மற்றும் பழங்களால் ஆன வசந்த மாளிகையில் வந்து அமர்கின்றனர்.

கோவிலில் நடைபெறும் அதிசய நிகழ்வு

விழா துவங்கி கடைசி ஏழு நாட்கள் இருக்கும் போது கோவிலில் உட்கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.

அப்பொழுது கொடி துணியுடன் ஐந்து வகையான சாதங்கள் வைத்து துணியில் கட்டி ஏற்றுகின்றனர். திருவிழா முடிந்து கொடியை இறக்கும் போது அந்த சாத மூட்டையை திறக்கின்றனர்.

ஏழு நாட்களுக்கு பின்னும் அந்த ஐந்து வகை சாதமானது கெடாமல் இருக்கின்றது என்பது தற்பொழுதும் நிகழ்ந்து வரும் அதிசயமாகும். பராசக்தி மாரியம்மனின் சக்தியால் இந்நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை நடந்து வருகிறது.

வேண்டிய வரமளிப்பாள் பராசக்தி மாரியம்மன்

விருதுநகரை ஆட்சி செய்யும் அன்னை பராசக்தி மாரியம்மன் மக்களின் பிணிகள் அனைத்தையும் போக்குகிறாள். நல்ல மழையும் தந்து, அம்மை, காலரா போன்ற நோய்களில் இருந்து காத்தும் வருகிறாள் அன்னை பராசக்தி மாரியம்மன்.

வேண்டிய வரங்களை வேண்டிய வண்ணம் அளிப்பதால் வருடா வருடம் நேர்த்திக்கடனாக வரும் அக்னி சட்டியின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.

ஊடரங்கு உத்தரவினால் இந்த 2020-ஆம் வருடம் பங்குனி திருவிழா நடைபெறாமல் போனது வருத்ததிற்குரியது.

உலகை காக்கும் அன்னை பராசக்தி மனது வைத்தால் இந்த நோய் பிணிகள் அனைத்தும் அகலும். எனவே எல்லோரும் வீட்டில் இருந்தபடியே விருதுநகர் பராசக்தி மாரியம்மனை பிராத்தனை செய்வோம்.

3

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: டிரெண்டாகும் #திகிலூட்டும்திரைப்படகாட்சிகள்!

0
Thriller Movies in Tamil

Thriller Movies in Tamil; Kanchana 3; திகிலூட்டும் திரைப்பட காட்சிகள் என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் தாங்கள் பார்த்து பயந்து போன படங்களில் இருந்து திகிலூட்டும் காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர்.

திகிலூட்டும் திரைப்பட காட்சிகள் (Thriller Movies in Tamil) என்ற டைட்டிலில் ரசிகர்கள் தாங்கள் பார்த்து பயந்த படங்களின் காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஹலோ சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழ்ந்து வருகிறது.

இது செல்போன் வாசிகள் அல்ல, சமூக வலைதள வாசிகள், டிக் டாக் நண்பர்கள், என்று பலருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு எப்படி போகும் என்றே தெரியாது.

அந்தளவிற்கு அவர்கள் செல்போன் வச்சிக்கிட்டு சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கின்றனர்.

அவர்களுகென்றே ஹலோ ஆப் செயல்படுவது போன்று அடிக்கடி பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதில் உங்களது பிடித்த படம், பாடல், நடிகர், நடிகைகள், திகிலூட்டும் காட்சி, ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு போன்றவற்றை என்று பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது.

இதன் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமானவற்றை செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஹலோவில் திகிலூட்டும் திரைபப்ட காட்சிகள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்த திகிலூட்டும் திரைப்பட காட்சிகள் ஆக்‌ஷன் த்ரில்லர், ஆகஷ்ன் காட்சிகளென்று எதுவானதாகவும் இருக்கலாம்.

ஆனால், திகிலூட்டும் காட்சியாக இருக்க வேண்டும். அப்படியென்றால் ரசிகர்கள் புகுந்துவிளையாடுவர்கள் அல்லவா.

திகிலூட்டும் காட்சிகள் என்று எத்தனையோ படங்கள் இருக்கிறதே? ஆம், சந்திரமுகி, காஞ்சனா, முனி, கான்ஜூரிங் (Conjuring), கான்ஜூரிங் 2 (Conjuring 2), மாசாணி, டிமாண்டி காலனி, ஜாம்பி என்று பல படங்களில் இருந்து திகில் காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது #திகிலூட்டும்திரைப்படகாட்சிகள் என்ற ஹேஷ்டேக் தான் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

3

கொரோனாவுக்கு மாஸ்டர் மைன்ட் மருந்து கண்டுபிடிக்கும்: மாஸ்டர் புதிய போஸ்டர் வெளியீடு!

0
Master Thalapathy Vijay

Master Poster; மாஸ்டர் படம் இன்று வெளியாகாத நிலையில், மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை (Master Poster) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால், யாருடைய கண்ணு பட்டுச்சோ தெரியல, ஊரெல்லாம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மாஸ்டர் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல சிக்கல்களை கடந்து வந்துள்ளது. ஆம், டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று போராட்டம் நடந்தது. இவ்வளவு ஏன், விஜய் வீட்டில் ஐடி ரெய்டும் நடந்தது.

இப்படி பல கட்ட சோதனைகளை கடந்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

Master Poster

ஆனால், அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

எனினும் படம் வெளியாகும் நாளான இன்று மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆம், தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அதோடு, உங்களை போன்று, நாங்களும் உங்கள் வரவை மிஸ் செய்கிறோம், ஒரு மாஸ்டர் மைன்ட் மருந்து கண்டுபிடித்து கொரோனாவுக்கு முற்றுப்புள்ளை வைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. இன்னும் வலிமையுடன் விரைவில் வருகிறோம் நண்பா’ என பதிவிட்டுள்ளனர்.

தளபதி விஜய்யின் இந்த புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு: ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு!

0
Online Pattukku Pattu

Online Pattukku Pattu ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு: ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு! ஹலோவில் ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு (Online Pattukku Pattu) என்ற ஹேஷ்டேக் மூலம் பாடல் நிகழ்ச்சி நடத்தப்ப்படுகிறது.

ஊரடங்கு நாட்களில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 166 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும், 5,095 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், இந்த 21 நாட்களுமே இணையவாசிகளுக்கு கொண்டாட்டம் தான். எப்போ பார்த்தாலும் செல்போனுடன் இருக்கும் சமூக வலைதளவாசிகளுக்கு இது என்ன சர்வசாதாரணம்.

ஆம், 21 நாட்கள் சும்மா வீட்டில் இருக்கும் செல்போன் வாசிகளுக்கு இந்த 21 நாட்களும் பொழுதுபோக்கு நாட்களாக இருக்கும் வகையில், My Favourite Songs, யுவனின் காதல் கானங்கள்,  Favourite Singer, Favourite Serial Actress ஆகிய ஹலோ ஹேஷ்டேக்குகளில் பிடித்த பாடல்கள், நடிகைகள், படங்கள் என்று பலவற்றையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதோடு, தற்போது ஹலோவில் Helo LOCKDOWN Fun ஆன்லைன் பாட்டுக்கு பாட்டு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, தங்களுக்கு பிடித்த பாடல்களை ஒவ்வொரு நாளும் கொடுக்கப்படும் தலைப்பிற்கு ஏற்றவாறு பாடல் பாட வேண்டும். அல்லது பாடல் வரிகள் எழுதி அனுப்ப வேண்டும்.

அதாவது, இன்றைய தலைப்பிற்கு ஏற்ற பாடலை பாடி #ஆன்லைன்பாட்டுக்குபாட்டு  (Online Pattukku Pattu) ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும்.

அப்படியில்லை என்றால், இன்றைய தலைப்பில் பாடல் வரிகள் எழுதி உங்களது இடுக்கையை #ஆன்லைன்பாட்டுக்குபாட்டு (Online Pattukku Pattu) என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதனை நிகழ்ச்சி தொகுப்பாளினி தொடங்கி வைத்துள்ளார். ஆம், அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தனக்குப் பிடித்த பாடலை பாடி #ஆன்லைன்பாட்டுக்குபாட்டு என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்னதாக பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என்ற டைட்டிலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை அப்துல் ஹமீது என்பவர் முதல் முதலாக வானொளி மூலமாக அறிமுகம் செய்தார். இத்தகைய நிகழ்ச்சிகள் கடல் கடந்து இந்தியாவிலும் வரவேற்பை பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

3

காச வாங்கிட்டு ஏமாத்திய விஜய் இப்போ தலைமறைவா? ஏன்? அதிர்ச்சி தகவல்!

0
Master Thalapathy Vijay

Vijay; மாஸ்டர் படத்தை விஜய்யையே எடுத்து முடிச்சியிருப்பதாகவும், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படம் எடுப்பதற்கு முன்னதாகவே படம் ரூ.200 கோடி வசூலித்ததாகவும், அந்தப் பணத்தை வைத்தே மாஸ்டர் படத்தை எடுத்து முடித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பது மட்டுமே அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், உண்மையில், இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தனது சொந்த செலவில் தயாரிக்கவில்லையாம்.

பிகில் படம் கொடுத்த ரூ.300 கோடி வசூல் காரணமாக, நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக ரூ.400 கோடிக்கும் அதிகமாகவே வசூல் செய்யலாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளார்.

அதே போன்று, அந்த பெரிய தொகை யாரோ ஒருவருக்கு போவதை விட நமது குடும்பத்திற்கே வந்தால் என்ன என்று விஜய் கணக்கு போட்டுள்ளாராம்.

அந்த அடிப்படையில் தான் மாஸ்டர் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

மாஸ்டர் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆல் ஏரியாவுக்கு ரூ.200 கோடி வரையில் வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள்.

அந்தப் பணத்தை வைத்தே படத்தையும் முடித்துள்ளார்கள். ஆனால், செலவு மட்டும் ரூ.130 கோடி மட்டுமே.

ஆக மொத்தத்தில் கை காசு போடாமலேயே லாபம் பார்த்திருக்கிறார்கள். ஆனால், மாஸ்டர் படம் அடுத்தமாதம் திரைக்கு வந்துவிடும் என்று நம்பிதான் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

பிகில் ரூ.300 கோடி போச்சு, அதே போன்று இந்தப் படமும் கொஞ்சம் கூடுதலாக ரூ.400 கோடி வரை லாபம் பார்க்கலாம் என்று கணக்கு போட்ட விநியோகஸ்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஆம், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மேலும், நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அப்படியே ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உடனே திரையரங்குகளை திறப்பது என்பது சாத்தியமற்ற செயல். இதனால், மாஸ்டர் படம் எப்படியும் திரைக்கு வருவதற்கு குறைந்தது 3 மாத காலம் ஆகும்.

10 வட்டிக்கு கடன் வாங்கி மாஸ்டர் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தற்போது வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் விஜய்க்கு போன் செய்து 3, 4 மாதம் கழித்து படம் திரைக்கு வந்தால் ஒன்றும் கட்டுபடி ஆகாது.

400 அல்ல ரூ.500 கோடிக்கு மேல் படம் ஓடினாலும் லாபம் 10 பைசா கூட கிடைக்காது.

எல்லாமே வட்டி கட்டவே சரியாக போகும். ஆதலால், நாங்கள் வாங்கிய உரிமையை திரும்ப கொடுக்கிறோம். நீங்கள் பணத்தை திரும்ப கொடுங்கள் என்று விஜய்யிடம் கேட்டுள்ளார்கள்.

விநியோகஸ்தர்கள் கொடுத்த ரூ.200 கோடியை வைத்துதான் மாஸ்டர் படமே எடுத்திருக்கிறார்கள். இப்போது பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டால் எப்படி கொடுப்பார்கள்.

தனக்கு போன் செய்த விநியோகஸ்தர்களுக்கு விஜய் ஆறுதலாக நாளு வார்த்தை கூறி போனை ஆப் செய்துள்ளார். அதன் பிறகு விஜய்க்கு போன் செய்தால் அவர் போனை எடுப்பதில்லையாம்.

அதனால், விரக்தியடைந்த விநியோகஸ்தர்கள் வட்டி கட்ட முடியாமல், கொடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய்க்கு எதிரியான பாஜக பிரமுகரை அணுகியுள்ளார்களாம்.

எப்படியாவது பணத்தை வாங்கி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டுள்ளார்களாம். ஏற்கனவே விஜய், பாஜக இடையே பஞ்சாயத்து இருக்கும் நிலையில், தற்போது லண்டு போன்று வாய்ப்பு கிடைத்தால் விஜய்யை என்ன சும்மாவா விடுவார்கள்.

இதனால், பணத்தை வாங்கிக் கொடுக்க அந்த முக்கிய பாஜக பிரமுகர் விஜய்க்கு தொந்தரவு கொடுக்கிறாராம். இதனால், விஜய் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வருகிறது.

வட்டிக்கு பணம் வாங்கி படத்தின் உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்களை குறை கூற இயலாது. வட்டி அதிகமான அவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் நிலை கூட உருவாகலாம்.

இதனால், விஜய் அவர்கள் பணத்தை திருப்பி கொடுத்தால் நல்லது என்று கூறப்படுகிறது.

3

1250 கிலோ அரிசி மூட்டைகளை தானமாக கொடுத்த யோகி பாபு!

0
Yogi Babu 1250 KG Rice Donation

Yogi Babu Donation: 1250 கிலோ அரிசி மூட்டைகளை தானமாக கொடுத்த யோகி பாபு! தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கு நடிகர் யோகி பாபு 1250 கிலோ அரிசி மூட்டைகளை தானமாக கொடுத்துள்ளார்.

1250 கிலோ அரிசி மூட்டைகளை நடிகர் யோகி பாபு (Yogi Babu) தானமாக கொடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது மேலும், நீட்டிக்கப்படும் என்று பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளும் மூடப்பட்டன. இதனால், சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனாவால் சினிமா தொழிலாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், காமெடி நடிகர் யோகி பாபு 1250 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளை தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளார்.

ஆம், வீடு வீடாக சென்று அவர்களுக்கு நேரடியாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக பெப்சி தொழிலாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி, அரிசி மூட்டைகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்களை சுட்டிக்காட்டிய இயக்குநர்!

0
Master Thalapathy Vijay

Master: மாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்களை சுட்டிக்காட்டிய இயக்குநர்! மாஸ்டர் படம் தொடங்கியதிலிருந்து என்ன என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தது என்று பிரபல இயக்குநர் ரத்னகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்களை ஆடை பட இயக்குநர் ரத்னகுமார்  சுட்டிக்காட்டியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, நாசர், சஞ்சீவ், ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆடை பட இயக்குநரும், மாஸ்டர் பட வசனகர்த்தாவுமான ரத்னகுமார் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா மட்டும் வரவில்லை என்றால் இந்த நேரம் மாஸ்டர் படம் வெளியாகியிருக்கும்.

முதலில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

அதன் பின்னர் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு, நெய்வேலி படப்பிடிப்பின் போது போராட்டம், தற்போது கொரோனா. இது ஒரு ரசிகனாக வருத்தமாக உள்ளது என்று என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி பல சிக்கல்களை கடந்த மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, எந்த ஆண்டும் இல்லாமல், இந்த ஆண்டில் மாஸ்டர் படப்பின் போது விஜய்யை நேரில் பார்ப்பதற்கு குடும்பத்தோடு சென்று ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

இதன் காரணமாக எந்த படமும் செய்யாத சாதனையை மாஸ்டர் படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

வீட்டிற்குள் வன்முறை நடக்குமா? மும்தாஜ்!

0
Mumtaz Domestic Violence

Mumtaz Video; வீட்டிற்குள் நடக்கும் வன்முறை: மும்தாஜ் வைரல் வீடியோ! ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் வீட்டிற்குள் நடக்கும் வன்முறை குறித்து நடிகை மும்தாஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீட்டிற்குள் நடக்கும் வன்முறை குறித்து நடிகை மும்தாஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழ்நிலை.

இந்த சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே வன்முறை நடக்காது என்று சொல்ல முடியாது. வீட்டிற்க்குள்ளேயும் வன்முறை நடக்கும். இது குறித்து நடிகை மும்தாஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்தாஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். இது வீட்டில் நடக்கும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோ.

இது யாரால் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள்.

யாரும் அவர்களுக்கு உதவிக்கு வரமாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த ஊரடங்கு உத்தரவின் போது கூட தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. உங்களுக்கு உதவி செய்வதற்கு என்று பலரும் தயாராக இருக்கிறார்கள்.

உதவி தேவைப்பட்டால், 1800 102 7282 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இந்த நம்பரை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

3

இது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய ஹன்சிகா!

0
Hansika Motwani You Tube Channel

Hansika Motwani; இது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய ஹன்சிகா! தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவில் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது, ஓவியம் வரைதல், ரசிகர்களுடன் உரையாடல் என்று பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி முதல் முறையாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இது குறித்து ஹன்சிகா கூறுகையில், உற்சாகமாகவும், படபடப்பாகவும் இருக்கிறது.

என்னுடன் இணைந்து என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று எனது உண்மையான பக்கத்தை அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலுக்காக நடந்த படப்பிடிப்பை சேனலில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக பிக் பாஸ் புகழ் வனிதாவும் யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். அதில், தனக்கு பிடித்த சமையல் குறிப்புகள் குறித்து பதிவிட்டு வருகிறார்.

3