Home Blog Page 161

என்ன நண்பா ரெடியா? வி ஆர் வெயிட்டிங் Master FDFS!

0
Master FDFS

Master Trailer, Master FDFS மாஸ்டர் திரைக்கு வரயிருந்த இன்று படத்தின் முன்னோட்டம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.

மாஸ்டர் டிரைலர் வேண்டும் ஹேஷ்டேக் உருவாக்கி சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

பிகில் படத்திற்குப் பிறகு விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இன்று ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருந்தது. கொரோனாவால் வெளியாகவில்லை. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்யின் மாமா, சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் டிரைலர் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாஸ்டர் டிரைலர் MasterTrailer தற்போது டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் மாஸ்டர் டிரைலர் வேண்டும் என்பது போன்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

அதோடு MasterFDFS ஹேஷ்டேக்கும் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சிகளில் விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதோடு, விஜய்தான் டிஆர்பி கிங் என்றும் அழைக்கப்படுகிறார்.

மாஸ்டர் படம் இன்று வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

இதையடுத்து ஊரடங்கு உத்தரவு மேலும், நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்றும், அப்படியில்லை என்றால் விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் என்றும் தகவல் பரவி வருகிறது.

3

மேனேஜர் மூலம் சாவின் விளிம்பில் இருந்தவர்களை காத்த அஜித்

0
அஜித்

அஜித் வெளியில் தெரிந்து செய்த உதவி 1 கோடியே 25 லட்சம். தெரியாமல் வேறு அநேக தொழிளார்களுக்கு உதவி செய்து உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பெப்சி ஊழியர்கள் சினிமா படப்பிடிப்பு நடைபெறாததால் வறுமையில் வாடி வந்தனர். இந்நிலையில் பெப்சி ஊழியர்களுக்கு 25 லட்சம் நிதி உதவி செய்து உள்ளார்.

நடிகர் அஜித்குமார் இந்தியா, தமிழகம் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள ஒரு கோடி 25 லட்சம் ரூபாய் நிதியை அளித்துள்ளார்.

50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

வெறுமனே என்று இல்லாமல் இந்தியா, தமிழகம், திரைக்கலைஞர்கள் வரை உதவி செய்து நெஞ்சை உருக வைத்துள்ளார் தல அஜித்.

இதுபோக திரைத்துறை தொழிலாளர் சிலரின் குடும்பம் வறுமையில் வாடுவதை தெரிந்துகொண்ட அஜித்குமார், உடனடியாக தன்னுடைய மேனஜர் மூலம் பணம் கொடுத்து அனுப்பு உதவி செய்துள்ளார்.

அஜித்துக்கு அவர்களின் குடும்பம் நன்றியைத் தெரிவித்து உள்ளது. இரண்டு நாட்களாக சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்த அவர்களுக்கு அஜித் தக்க சமயத்தில் உதவி செய்து உள்ளாராம்.

3

வில்லன் நடிகர் ரியாஷ்கானுக்கு அடி உதை: காவல் நிலையத்தில் புகார்!

0

Riyaz Khan; வில்லன் நடிகர் ரியாஷ்கானுக்கு அடி உதை: காவல் நிலையத்தில் புகார்! ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் வெளியில் சென்ற கும்பலை தட்டிக் கேட்ட நடிகர் ரியாஷ்கானை அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் அடித்து உதைத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சென்றவர்களை தட்டிக்கேட்ட நடிகர் ரியாஷ்கானை அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரை அருகிலுள்ள பனையூரில் வசித்து வரும் ரியாஷ்கான் (47), நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ஒரு பெண் உள்பட 5 பேர் கூட்டமாக வெளியில் வந்துள்ளனர். அவர்களை ஏன் ஊர்டங்கு உத்தரவு இருக்கும் போது கூட்டமா வெளியில் செல்லலாமா? என்று தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாக, அந்த கும்பலில் இருந்த ஒருவர் ரியாஷ்கானை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரியாஷ்கான் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

3

ஸ்டீவென் ஸ்மித்; இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிக்க எனக்கு ஆசை

0

ஸ்டீவென் ஸ்மித்; இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிக்க எனக்கு ஆசை, கடைசியாக ஆஸ்திரேலியா இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என வென்றுள்ளது.

ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா அபாரமாக டெஸ்ட் விளையாடி வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைபற்றியது.

என்னதான் இந்தியா சிறப்பாக விளையாடினாலும் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூத்த வீரர்கள் இல்லாததால் தான் இந்தியா வென்றது என பலரும் கூறி வருகின்றனர்.

தடைகாலம் முடிந்து ஆஷஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பதே எனக்கு ஆசை என கூறியுள்ளார்.

மேலும் அவர் உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் போட்டிக்குபிறகு டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை தோற்கடிப்பதே என் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

3

ஜடேஜாவை காப்பி அடித்து டேவிட் வார்னர் செய்வதை பாருங்க

0

ஜடேஜாவை காப்பி அடித்து டேவிட் வார்னர் செய்வதை பாருங்க. டேவிட் வார்னர் ரவீந்திர ஜடேஜாவை போல் பேட் சுழற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐ‌பி‌எல் போட்டிகள் நடைபெறாத நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக சில உரையாடல்கள் வேடிக்கை நிகழ்வுகள் என பல செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா & சன் ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், ரவீந்திர ஜடேஜாவை போல பேட்டை சுழற்றிய பழைய வீடியோவை பதிவிட்டு எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார்.

இந்த காணொளியை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலவிதமாக பதில் கொடுத்து வருகின்றனர்.

3

குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு: அரசுக்கு கடிதம் அனுப்பிய சத்யராஜ் மகள்!

0
Divya Sathyaraj

Divya Sathyaraj; குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதால் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அரசுக்கு கடிதம் எழுதிய நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா Divya Sathyaraj.

கொரோனா வைரஸ் காலத்தில் பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது, அரசுக்கு நிதியுதவி வழங்குவது என்று தங்களால் முடிந்த உதவிகளை அரசுக்கு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

அவர் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 40 சதவிகிதம் பெண் குழந்தைகள் மற்றும் 38 சதவிகித ஆண் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இரும்புச் சத்துமிக்க உணவுகளை கொடுக்க இயலாது.

ஆதலால், பள்ளிகளுக்குச் செல்லும் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இரும்புச் சத்துமிக்க உணவுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், இரும்புச்சத்து குறைபாடு ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதால், மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதையும் ஒன்றாக எடுக்குமாறு திவ்யா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

3

Corona India;’மாஸ்க போடலேன கேஸ போடு’ அதிரடி முடிவு

0
corona india

Corona India;’மாஸ்க போடலேன கேஸ போடு’ அதிரடி முடிவு. மக்களை கட்டுக்கொள் கொண்டு வர மும்பையில் முககவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது அம்மாநில அரசு.

கொரோனா பரவுவதை குறைக்க மக்கள் அனைவரும் கட்டடாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவிதிருந்தது. இந்நிலையில் மும்பையில் சட்டங்கள் கடுமையாக்கபட்டது.

மும்பையில் இருக்கும் ஆசியாவிலையே மிகப்பெரிய சேரி ஆனா தாராவியில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரழந்துள்ளார்.

அங்கே மிகவும் எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அங்கு பொது கழிப்பறை தான் அனைவரும் உபயோகிப்பார்கள் மேலும் மிகவும் நெருக்கமாக வீடுகள் அமைந்திருக்கும்.

இதனால் கட்டாயம் மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அரசாங்கம் வழியிறுத்தியுள்ளது.  இதுவரை 328 நபர்கள் மீது எஃப்‌ஐ‌ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3

தமிழகத்தில் மழை பெய்தால் கொர்ரோன்னா தீவிரமாக பரவுமாமே?

0

தமிழகத்தில் வானிலை மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மழைப்பொழிவும் காணப்பட்டு வருகிறது என வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கனமழை பொழியும். இதை சாக்காக கொண்டு புதிய வதந்தி ஒன்றை உருவாக்கி உள்ளனர். வாட்ஸ்ஆப் இன்று அது தான் ட்ரெண்டிங். அதை வதந்தி எனத் தெரியாமல் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பொழியும். இதனால் கொர்ரோன்னா வேகமாகப் பரவும் எனவே, பொதுமக்கள் உஷாராக இருந்துகொள்ளுங்கள்.

தூங்கும் போது கூட மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். ஜன்னலை கூட திறந்து வெளியில் வர வேண்டாம் என who வலியுறித்தி உள்ளது என ஒரு வதந்தி பரவி வருகிறது.

இதை யாரும் நம்பி அதிகமாக சேர் செய்து அடுத்தவரை பயமுறுத்த வேண்டாம். இது போலியான நபர்கள் ஆதாரமில்லாமல் வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர்.

3

புஜாரா சஸ்பென்ஸாக நிதி அளித்துள்ளார்

0

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி அளிக்கும் விதமாக குஜராத்தின் முதல்வர் நிதிக்கு சட்டிஸ்வர் புஜாரா தொகையை வெளியில் சொல்லாமல் நிதி அளித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.

உலகெங்கும் 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் உயிர்களைக் கொன்று பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.

கனடா பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர், ஸ்பெயின் இளவரசி போன்றோரும் இந்தக் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார்கள்.

பல நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்   குறிப்பாக அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகள் பல பாதிப்புகளை அடைந்துள்ளது

இந்தியா பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தொலைக்காட்சிகளும் தோன்றிய பிரதமர் மோடி “மக்களிடம் உங்களால் முடிந்த தொகையை குருநாதருக்கு பணிகளுக்காக தாருங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருந்தார்”

இதற்கு பல தொழிலதிபர்கள் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நிதி அளித்து வந்தார்கள். பல முன்னணி தொழிலதிபர்களும் நிதி அளித்து வருகிறார்கள்.

கிரிக்கெட் வீரர்களில் கௌதம் கம்பீர் மருத்துவ உபகரணங்களுகாக 50 லட்சம், சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், ரோகித் 80 லட்சம், கோலி மற்றும் அனுஷ்கா 3 கோடி போன்ற தொகை அளித்தார்கள்.

தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா குஜராத் முதல்வர் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி அளித்துள்ளார் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்

 

https://platform.twitter.com/widgets.js

“குஜராத் முதல்வர் நிவாரண நிதிக்காக நானும் எனது குடும்பத்தினரும் எங்களின் பங்களிப்பை அளித்துவிட்டோம். நீங்களும் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது”

என்ற வாசகத்துடன் கூடிய ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

3

This Day in History April 09; வரலாற்றில் இன்று ஏப்ரல் 09

0

This Day in History April 09; வரலாற்றில் இன்று ஏப்ரல் 09, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

1865ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நாள் இன்று. தளபதி ராபர்ட் ஈ. லீ தனது 26765 போர் வீரர்களுடன் வர்ஜீனியாவில், யுலிசீஸ் கிராண்டிடம் சரணைடந்தார்.

1984ஆம் ஆண்டு இலங்கை ராணுவ வாகனத்தின் மீது யாழ்ப்பானை மருத்துவமனை வீதியில் விடுதலைபுலிகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு குருத்து ஞாயிறு தேவாலையக் குண்டுவெடிப்பு நடைபெற்ற நாள் இன்று. எகிப்தில் டண்டா, அலெக்சாந்திரிய நகரங்களில் உள்ள கோப்திக்கு தேவாலயங்களில் நடதப்பட்ட குண்டு வெடிப்பில் 47 பேர் இறந்தனர்.

Today Birthdays in History

1285ஆம் ஆண்டு சீனா மாங்கோலிய பேரரசர் புயந்து கான் பிறந்த நாள் வரலாற்றில் இன்று.

1917ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் ரோமன் கத்தோலிக்க ஆயர் பஸ்தியாம் பிள்ளை தியோகுப்பிள்ளை பிறந்த தினம் இன்று.

1918ஆம் ஆண்டு சிட்னி ஒப்பேரோ மாளிகையை வடிவமைத்த டென்மார்க்கு கட்டிட கலைஞர் ஜோர்ன் உட்சன் பிறந்த தினம் இன்று.

Today Deaths in History 

1626ஆம் ஆண்டு ஆங்கிலையே அரசியல்வாதி மெய்யியலாளர் பிரான்சிஸ் பேக்கன் இறந்த தினம் இன்று.

1882ஆம் ஆண்டு ஆங்கிலையே கவிஞர், ஓவியர் டெண்டி கெய்பிரியல் ரோசட்டி இறந்த தினம் இன்று.

1959ஆம் ஆண்டு அமெரிக்க கட்டிட கலைஞர் பிராங்க் லாய்டு ரைட் இறந்த தினம் இன்று.

3