Home Blog Page 162

தயவு செய்து ஓய்வு பெறுங்கள் முன்னாள் பாகிஸ்தான் வீரர்

0

தயவுசெய்து நீங்களாக ஓய்வு அறிவித்து விடுங்கள் என்று கழுத்தை பிடித்து தள்ளும் விதமாக ஹபீஸ் மற்றும் மாலிக் இருவரையும் பற்றி அந்த அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருபவர்கள்தான் சோயப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ்.

இருவருமே ஆல்-ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். இருவருக்குமே சராசரி 40 வயதை எட்ட உள்ளது.

சோயப் மாலிக் 1999 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிக்கு அறிமுகமாகி இன்றுவரை 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் 432 சர்வதேச போட்டிகளில் விளையாடி 11753 ரன்கள் குவித்துள்ளார்.

பந்துவீச்சு 218 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ரியாத் எதிரான பல ஆட்டங்களில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் வெற்றி பெற வைத்துள்ளார்

இதேபோல்தான் முகமது ஹபீஸ் 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகி 17 வருடங்களாக பாகிஸ்தானில் விளையாடி வருகிறார்.

இதுவரை 364 சர்வதேச போட்டிகளில் விளையாடி 12258 ரன்கள் குவித்துள்ளார் பந்துவீச்சு 246 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆல்-ரவுண்டராக பாகிஸ்தானிற்கு சிறந்து விளங்கினார். ஆல்ரவுண்டர் ரேங்கிங்கில் முதல் 10 இடங்களுக்குள் பல காலங்களாக இருந்து வருகிறார்.

சில மாதங்களாகவே இருவரின் ஆட்டத்திலும் சோர்வுகள் அதிகம் தென்படுகிறது. பாகிஸ்தான் இளம் வீரர்கள் அதிகம் இருந்து வருகிறார்கள்.

இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசுவதுபோல் இவர்கள் இருவரையும் ஓய்வு பெறும்படி அறிவுறுத்தி உள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா. அவர் கூறியதாவது :

“முழுமனதாக இருவரும் சர்வதேச போட்டிகளிலிருந்து மரியாதையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் வெளியேறவேண்டும்.

பல ஆண்டுகளாக இருவருமே பாகிஸ்தான் அணிக்காக ஆடி விட்டனர். அந்த அணிக்கு பல வெற்றிகளை குவித்துள்ளனர். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆனால் தற்போது ஒருமனதாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இருவரும் ஓய்வு பெறவேண்டும்.

இவர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அது மிகவும் உதவும். அடுத்து வரும் இளம் வீரர்களை தயார் செய்யலாம்’ என்று கூறியுள்ளார்.

இதில் முகமது ஹபீஸ் வருகிற அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பையுடன் ஓய்வு பெற போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

3

9/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

9/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

உங்கள் பொறுமையை சோதிக்கும் படியாக பிரச்சனைகள் வரும். பணியிடத்தில் ஊழியர்களால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

வீட்டில் அமைதியான சூழல் நிலவாது. பொறுமையாக அனுசரணையோடு செல்ல வேண்டிய நாளாக இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று உங்களுக்கு பிரியமானவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். விருந்து போன்ற விழாக்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

குடும்பதோடு மகிழ்ச்சிகரமாக இருக்க போகின்ற நாளாக இருக்கும். பணவரவ சிறப்பாக இருக்கும் நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்றைய நாள் முழுவதும் வளர்ச்சிகரமாக இருக்கும். பாராட்டுகள் தானாக வந்து சேரப் போகிறது. மன அமைதியுடன் இருப்பீர்கள்.

நண்பர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். மொத்ததில் பொன்னான நாளாக இருக்க போகிறது.

கடக ராசிபலன்

இன்று அன்பான அணுகுமுறை தேவையான நாளாகும். பிறரின் மீது வரும் கோபத்தை குறைத்து கொள்ளவும்.

உறவினர்களால் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. செரிமானம் தொடர்பான நோய்கள் வரலாம். உணவில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

சிம்ம ராசிபலன்

இன்று உங்களின் வளர்ச்சிக்கு சிறு தடைகள் வரலாம். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

உங்கள் துணையால் இன்று இன்பமாக இருப்பீர்கள். தனலாபம் சுமாராக இருக்கின்ற நாளாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று தங்களின் உணர்ச்சிவசத்தை குறைக்க வேண்டும். உங்களுக்கான பணியை திறம்பட செய்வதற்கு வழியை உருவாக்கி கொள்ளவும்.

தங்களை தாங்களே உற்சாகமாக வைத்து கொள்ளுதல் அவசியமாகும். வரவு செலவு சமமாக இருக்க போகின்ற நாளாகும்.

துலா ராசிபலன்

உங்களின் முயற்சி இருந்தால் மட்டுமே இன்று வெற்றி காண இயலும். நாள் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டிய நாளாகும்.

வீட்டில் உறவுகளோடு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. மனதை குழப்பத்தில் இருந்து வெளி கொண்டு வர தியானம் செய்யுங்கள்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்கள் லட்சியத்தை அடைய தயக்கம் ஒன்றே தடையாக இருக்கும். தயக்கத்தை விடுத்து முயற்சிகள் செய்தால் வெற்றி பெறுவீர்கள்.

எதிர்பாராத பணவரவு உண்டு. ஆரோக்கியத்தில் ஒரு குறையும் வராது.

தனுசு ராசிபலன்

இன்று நட்பான அணுகுமுறை தேவையான நாளாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

கணவன் மனைவியிடையே புரிந்துணர்வு மேம்படும். தொழில் விருத்தி அடையும் நாளாக இருக்க போகிறது.

மகர ராசிபலன் 

இன்று தங்களின் எதிர்மறையான எண்ணங்களை நீக்குதல் வேண்டிய நாளாகும். பணியிடத்தில் கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

வீணான பேச்சுகளை தவிர்த்து விடுவது நல்லது. கண் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு.

கும்ப ராசிபலன்

இன்று குழப்பமான சூழல் நிலவுகின்ற நாளாக இருக்கும். தங்களை தாங்களே தைரியமாக வைத்து கொள்வது அவசியமாகும்.

துணையிடம் மனம் திறந்து பேசுங்கள் பிரச்சனைகள் தீர வழி பிறக்கும். சுமாரான பலன்களை தரும் நாளாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று மனம் உற்சாகமாக இருக்க கூடிய நாளாகும். பயணங்கள் லாபகரமான பலன்களை தரும்.

புதிய தொழில் துவங்க உகந்த நாளாக இருக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். வெற்றிகரமான நாளாக இருக்கும்.

9/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

டிசம்பர் 2020: உலகிற்கு பேரழிவா? இளைய ஜோதிடரின் புதிய கணிப்பு என்ன?

1

“உலகிற்கு ஆபத்து” என்று முன்கூட்டியே கணித்த இளைய ஜோதிடர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் எச்சரிக்கை தந்துள்ளார்.

உலகமே இன்று கொரோனா என்ற வைரஸின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. பெரிய வல்லரசு நாடுகள் கூட மருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகிறது.

இப்படி ஒரு புதிய வைரஸால் உலகிற்கே பாதிப்பு வரும் என ஆகஸ்ட் மாதம் 2019 இல் இளைய ஜோதிடரான அபி௧்ஞா ஆனந்த் கணித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன்படியே கொரோனா என்ற கொடிய வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தை உலுக்கி வருகின்றது.

அவரது கணிப்பில் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகிற்கு பேராபத்து என்று கூறியிருந்தார். மேலும் மே மாதம் 31-ஆம் தேதி வரை தீர்வு கிடைக்காது என்று கூறியிருந்தார்.

பின் மீண்டும் ஜூன் மாதம் 31-ஆம் தேதி வரை நல்ல செய்தி கிடைக்காது என மற்றொரு பதிவை போட்டிருந்தார்.

தற்பொழுது அபிக்ஞா ஜோதிடம் கணித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூற்றுப்படி “இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி உலகிற்கு பேரழிவு ஏற்பட போகிறது. அதுமட்டுமின்றி பேரழிவானது மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிக்கும்” என்று அவரது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அது கொரோனாவை விட கொடியதாக இருக்கும். நாம் அனைவரும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம்.

விலங்குகளை கொல்வதை நிறுத்த வேண்டும். இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டும். இயற்கை சமநிலையை அழித்து வீணாக இயற்கை அன்னையின் கோபத்தை தூண்டுவது போல எதுவும் செய்ய வேண்டாம்.

விலங்குகள் வதைப்பதால் நமது கர்ம வினைகளை அதிகரித்து கொண்டு வருகிறோம். தயவு செய்து இறைச்சி கடைக்காரர்கள் தியாகமாக நினைத்து தொழிலை விட வேண்டும் என்று தனது வீடியோவில் கூறியுள்ளார்.

3

கொரோனாவால் ஆளே மாறிப்போன கவின்: வைரலாகும் புகைப்படம்!

0
Kavin LockDown

Kavin Corona LockDown; கொரோனாவால் ஆளே மாறிப்போன கவின்: வைரலாகும் புகைப்படம்! கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கவின் அதிகளவில் முடி வளர்ந்து தாடி மீசையுடன் ஆளே மாறிப்போகியுள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கவின் ஆளே மாறிப்போகியுள்ளார்.

கொரோனாவால் சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வந்துவிட்டது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எங்கிருந்து வந்ததோ, அங்கு சகஜ நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அப்பாவி ஜனங்கள் ஒருபக்கம், சகட்டுமேனிக்கு வீடியோ வெளியிட்டு வரும் பிரபலங்கள் ஒரு பக்கம்.

அந்த வகையில், நடிகர் கவின் வீட்டிலே தானிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில், நான் தனிமைப்படுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், அந்தப் புகைப்படத்தில் அதிக தலை முடியுடன் தாடி, மீசையும் அதிக அளவில் வளர்ந்து இருப்பது போன்று இருக்கிறது.

3

தற்கொலைக்கு முயன்ற ஆச்சி மனோரமா மகன்: காரணம் தெரிந்தால் ஷாக்காயிடுவீங்க!!

0
Bhupathi Suicide Attempt

Manorama Son Bhupathi; தற்கொலைக்கு முயன்ற ஆச்சி மனோரமா மகன்: காரணம் கேட்டால் ஷாக்காயிடுவீங்க! மது அருந்த முடியாத விரக்தியில் ஆச்சி மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி (Aachi Manorama Son Bhupathi) தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக் கொண்டவர் நடிகை ஆச்சி மனோரமா. அதோடு, தன்னை மிஞ்ச யாருமில்லை என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

அம்மா, நகைச்சுவை கதாபாத்திரம், குணச்சித்திர ரோல் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் இவர் போன்று நடிப்பதற்கு ஆளே இல்லை என்று காட்டியவர்.

கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு காலமானார்.

ஆச்சி மனோரமாவிற்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எனினும், பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை.

சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் மதுவிற்கு அடிமையானவராம்.

தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், மது பிரியர்களுக்கு மதுபானங்கள் கிடைப்பதில்லை. மது பிரியர்கள் பலரும் இதன் காரணமாகவே மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த பூபதி மது கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தெரிந்ததும், அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆச்சி மனோரமாவின் மகனுக்கே இந்த நிலையா என்று பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

3

மாங்கல்ய பலம் தரும் நித்திய சுமங்கலி மாரியம்மன்

4

நித்திய சுமங்கலி மாரியம்மன் தல வரலாறு என்ன? நித்திய சுமங்கலி மாரி என எப்படி பெயர் வந்தது? பெண்களின் தாலி பாக்கியம் சிறக்க எவ்வாறு இவளை பூஜிப்பது?

சக்தி வழிபாட்டிலே அக்னி ஸ்வரூபமாக விளங்குபவள் அகிலத்தை நோய் நொடியில் இருந்து காக்கும் அன்னை “மஹா மாரியம்மன்” ஆவாள்.

மாரி வழிபாடு தமிழர்களின் பழைமையான வழிபாடு ஆகும். மாரியம்மன் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரிலே கிராம தேவதையாக அருளாட்சி நடத்தி மக்களை வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து காத்து வருகிறாள்.

இந்த வகையிலே மாரியம்மன் கொங்கு மண்டலத்திலும் பல்வேறு திருநாமங்கள் கொண்டு விளங்குகிறாள்.

கொங்கு மண்டலமான நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் என்ற ஊரிலே நித்திய சுமங்கலி மாரியம்மன் என்ற பெயரிலே அருளாட்சி புரிந்து வருகிறாள். மற்ற கோவிலை விட இந்த கோவிலுக்கே உரிய தனிச் சிறப்புகள் உள்ளன.

நித்திய சுமங்கலி மாரியம்மன் வரலாறு

கடையெழு வள்ளல்களின் ஒருவரான “வல்வில் ஓரி” கொல்லி மலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த காலமது.

அந்த காலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது நிலத்தின் ஓரிடத்தில் கலப்பை மாட்டிக் கொண்டது. என்னவென்று தோண்டி பார்த்தபோது பீடம் ஒன்று கிடைத்தது.

வெளியே எடுத்தவுடன் தான் மாரியம்மன் எனவும் அவளுக்கு அங்கேயே கோயில் அமைத்து வழிபாடு நடத்த வேண்டும் எனவும் அசரீரி ஒலித்தது. அங்கேயே ஊர் மக்கள் சிறு குடில் அமைத்து வழிபட்டனர்.

பின்பு அந்நாட்டு மன்னன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தான். இதனால் மனம் வருந்திய அரசி வேதனைப்பட்டாள்.

இக்கோயிலுக்கு வந்து அம்மனை அழுது மன்றாடி தன் கணவனின் உயிரை மீட்டு தருமாறு தன் தாலிக்கொடியை கையிலேந்தி வேண்டிக் கொண்டு அங்கேயே அழுது மயங்கினாள். இதனை கண்டு மனமிறங்கி இந்த மாரியம்மனும் அவள் கணவனின் உயிரை மீட்டருளினாள்.

இதனால் இன்புற்ற அரசி பெண்களுக்கு தாலி வரமருளும் நித்திய சுமங்கலி அம்மன் என போற்றினால் அதுவே அவளின் திருநாமம் ஆனது. வல்வில் ஓரி காலத்தில் இக்கோயில் கட்டபட்டது என தல வரலாறு கூறுகிறது.

திருக்கோவிலின் சிறப்பம்சம்

மற்ற மாரியம்மன் கோவிலுக்கும் இந்த கோவில் நடைமுறைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது.

கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாவின் போது மட்டும் வேப்ப மரத்தால் ஆன கம்பம் நடப்பட்டு அதனை சிவனாக பாவித்து திருகல்யாணம் நடத்தி திருவிழா நடத்துகின்றனர்.

பண்டிகை முடிந்ததும் கம்பம் அகற்றப்பட்டு நீர்நிலைகளில் சேர்க்கப்படும்.

ஆனால் இந்த திருகோயிலில் வருடம் முழுவதும் கம்பம் அப்படியே இருக்கும். கணவனை (சிவன்) விட்டு நீங்காத அம்பிகை அதனால் தான் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

அம்மனின் திருவிழாக்கள்

இந்த திருகோவிலில் ஐப்பசி மாதம் முதல் செவ்வாயன்று திருவிழா துவங்கி 15 நாட்கள் திருவிழா நடத்தப்படுகின்றது. திருவிழா துவங்கும் நாள் முதல் தினமும் அம்மன் திருவீதி உலா நடத்தப்படுகின்றது.

பூச்சாட்டுதல், கம்பம் மாற்றுதல், தீமிதித்தல், பொங்கல் வைத்தல், தேரோட்டம் என திருவிழா நடைபெறுகிறது வசந்த உற்சவத்துடன் திருவிழா முடிவடையும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான 3-ஆம் நாள் வேப்ப மர கம்பம் மாற்றப்படும். அன்றைய தினம் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு தயிர் சாத பிரசாதம் வழங்கப்படும். இதனை பெற்று உண்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்து வருகின்றது.

திருவிழாவில் அம்மனுக்கு நேர்த்திக் கடனாக அக்னி சட்டியெடுத்தல், அலகு குத்துதல், தீமிதித்தல், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல் போன்றவற்றை செய்கின்றனர் பக்தர்கள்.

மாங்கல்ய பலம் தருவாள் மாரி

கணவனின் ஆயுளில் கண்டம் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு அவதியில் இருந்தாலும் தாலி வரம் கேட்டு இங்கு வந்து அம்மனை வேண்டினால் தாயாக இருந்து மாங்கல்ய பலத்தை அளிப்பவாளக விளங்குகிறாள் இந்த நித்திய சுமங்கலி மாரியம்மன்.

அம்மை, அக்கி, காய்ச்சல் போன்ற வெப்பத்தால் ஏற்படுகின்ற நோய்களை போக்கி மக்களை காத்து அருளும் இந்த மாரியம்மனை நாமும் சென்று தரிசித்து நோய் பிணிகள் நீங்க பிராத்தனை செய்வோம்.

அமைவிடம் : இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில்

தரிசன நேரம் :  காலை 6 முதல் 1 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை.

3

மாமியார், மருமகன் யுத்தம்: மாப்பிள்ளை வந்து 9 வருசமாச்சு!

0
Mappillai Movie 9 Years

Mappillai; மாப்பிள்ளை வந்து 9 வருசமாச்சு! தனுஷ், ஹன்சிகா நடிப்பில் உருவான மாப்பிள்ளை படம் திரைக்கு வந்து இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.

மாப்பிள்ளை (Mappillai) படம் திரைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இயக்குந சூரஜ் இயக்கத்தில் தனுஷ், ஹன்சிகா மோத்வானி, மனீஷா கொய்ரா, விவேக் ஆகியோரது நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாப்பிள்ளை (Mappillai).

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த், அமலா ஆகியோரது நடிப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு மாப்பிள்ளை படம் திரைக்கு வந்தது.

இதே டைட்டிலில், தனுஷ் நடித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் மாப்பிள்ளை. கிட்டத்தட்ட இரு படங்களுமே ஒரு கான்செப்ட்தான்.

ஆனால், எடுக்கப்பட்ட விதம், காட்சியமைப்பு என்று எல்லாமே வேறு வேறு. பொதுவாக குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் மாமியார், மருமகள் சண்டை சச்சரவு இருக்கும்.

ஆனால், மாப்பிள்ளை என்று எடுத்துக் கொண்டால் மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம். அப்படி வந்த படம் தான் மாப்பிள்ளை. ஆனால், காமெடி கலாட்டாவாக திரைக்கு வந்தது.

கிட்டத்தட்ட ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.25 கோடி வசூல் கொடுத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், தெலுங்கு சினிமாவில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாப்பிள்ளை திரைக்கு வந்து இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் காரணமாக ஹலோ டிரெண்டிங்கில் 9YearsofMappillai என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, இப்படத்தின் ஒரு சில காட்சிகளை பதிவிட்டு தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

3

தமிழகத்தில் கனமழை; 20 கிமீ கொரோனாவும் பரவும்: மக்களை கலங்கடித்த சொல்

0
கனமழை பொழியும்

தமிழகத்தில் வானிலை மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மழைப்பொழிவும் காணப்பட்டு வருகிறது என வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கனமழை பொழியும். இதை சாக்காக கொண்டு புதிய வதந்தி ஒன்றை உருவாக்கி உள்ளனர். வாட்ஸ்ஆப் இன்று அது தான் ட்ரெண்டிங். அதை வதந்தி எனத் தெரியாமல் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பொழியும். இதனால் குளிர் காற்று வீசும். கொரோனா நோயாளி 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் கொரோனா பரவும்.

எனவே, பொதுமக்கள் உஷாராக இருந்துகொள்ளுங்கள். தூங்கும் போது கூட மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். ஜன்னலை கூட திறந்து வெளியில் வர வேண்டாம் என ஒரு வதந்தி உலா வந்துகொண்டு இருக்கிறது.

இதை யாரும் நம்பி அதிகமாக சேர் செய்து அடுத்தவரை பயமுறுத்த வேண்டாம். இது போலியான நபர்கள் ஆதாரமில்லாமல் வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர்.

3

இப்போ தான் புரியுது ஏன் நாட்டாமை மேல டீச்சருக்கு லவ் வந்துச்சுன்னு

0

நாட்டாமை சரத்குமாரின் கேரியரை மாற்றியமைத்த படம். இந்த படத்தின்  மூலம் கிராமத்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார் நடிகர் சரத்குமார்.

நாட்டாமை படத்தின் சரத்குமாரை ஒரு டீச்சர் காதல் வலையில் வீழ்த்த முயற்சிப்பார். அப்போது சரத்குமார் எப்படி இருந்தாரோ அதேபோல் தான் இப்போதும் உள்ளார்.

சில வருடங்கள் முன்பு கட்சி துவங்கினார். நடிகர் சங்க தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் அமையவில்லை.

தற்பொழுது கொரோனா விழிப்புணர்வுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் இன்னும் அதே பழைய கட்டுடல் மேனியுடன் உள்ளார்.

இப்படி இருந்தால் டீச்சர் என்ன டீனேச்சர் கூட லவ் பண்ண தான் செய்வார்கள். அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் பாஸ்..

3

பிருத்விராஜின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் மனைவியின் உருக்கமான பதிவு!

0
Supriya Menon Instagram

Prithviraj Wife Supriya Menon; பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிருத்விராஜின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் மனைவியின் உருக்கமான பதிவு! ஜோர்டான் நாட்டிற்கு படப்பிடிப்பிற்கு சென்ற நடிகர் பிருத்விராஜ் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிக்கித்தவிக்கும் சூழலில் அவரது மனைவி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் Supriya Menon இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உலகமே கொரோனா பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்னவோ அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது.

எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டு பாலைவனத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், ஆடுஜீவிதம் படக்குழுவினர் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து பிருத்விராஜ் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதோடு, உணவும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவு ரசிகர்களை கலங்க வைத்தது.

இந்த நிலையில், பிருத்விராஜின் மனைவி சுப்ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிகவும் கடினமான இந்த சூழலில் மரணமும் கொடிய நோயும் பரவி வரும் வேளையில், இந்த இரட்டை வானவில் எனது கணவர் வருவதற்கான அறிகுறியா? என்று வருத்தத்துடன் கேட்டு பதிவிட்டுள்ளார்.

3