Home Blog Page 163

சென்னையில் பிறந்த ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜூன் பர்த்டே டுடே!

0
HBD Allu Arjun

Allu Arjun Birthday Today; சென்னையில் பிறந்த நடிகர் அல்லு அர்ஜூன் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அல்லு அர்ஜூன் 38ஆவது பிறந்தநாள் (Happy Birthday Allu Arjun) இன்று.

சென்னையில் பிறந்தவர் நடிகர் அல்லு அர்ஜூன். கடந்த 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிறந்தார்.

என்னதான் சென்னையில் பிறந்திருந்தாலும், இவர் தெலுங்கு படங்களில் மட்டுமே அதிகளவில் நடித்துள்ளார். அதோடு, ஹைதராபாத்தைச் சேர்ந்த சினேகா ரெட்டி என்பவரை திருமண்ம செய்தார்.

இவர்களுக்கு அல்லு அயான் என்ற ஒரு மகனும், அல்லு ஆர்ஹா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.

இதுவரை நேரடியாக எந்த தமிழ் படத்திலும் அல்லு அர்ஜூன் நடிக்கவில்லை. மாறாக இவரது நடிப்பில் வந்த ஒரு சில படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அதில், அனுஷ்காவின் ருத்ரமாதேவி படமும் ஒன்று. இந்த படத்தைத் தவிர ஏவடு, பத்ரிநாத், அல வைகுந்தபுரம்லூ ஆகிய படங்களும் தமிழில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜூனுக்கு சிறந்த படமாக ஆர்யா, வேதம், ருத்ரமாதேவி, ஜூலாயி, சன் ஆப் சத்யமூர்த்தி, சர்ரைநோடு, ரேஸ் குர்ராம் ஆகிய படங்கள் அமைந்துள்ளது. இந்த படங்கள், அல்லு அர்ஜூனின் கதாபாத்திரங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிலையில், அல்லு அர்ஜூனின் 38ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, படத்திற்கு புஷ்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுகுமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். புஷ்பா படத்தில்,அல்லு அர்ஜூன் உடன் இணைந்து விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அல்லு அர்ஜூன் இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் சார்பில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே அல்லு அர்ஜூன் சார்…

3

ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் கொரோனாவை குணப்படுத்துமா? பிரதமர் மோடியை மிரட்டி டிரம்ப் கேட்க காரணம் என்ன?

0
Hydroxychloroquine

ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் Hydroxychloroquine கொரோனாவை குணப்படுத்துமா? பிரதமர் மோடியை ட்ரம்ப் மிரட்டி கேட்க காரணம் என்ன? ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் என்றால் என்ன?

சில நாட்களுக்கு முன் ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்து அமெரிக்காவிற்கு வேண்டுமென்று டிரம்ப், மோடியிடம் கேட்டிருந்தார்.

இந்தியாவில் இந்த வகை மருந்துகளை ஏற்றுமதி செய்வதை ஏற்கனவே தடை செய்து விட்டனர். இதனால் இந்தியாவிடம் இருந்து எந்த பதிலும் கூறப்படவில்லை.

நேற்று டிரம்ப் திடீரென்று இந்தியா மருந்து அனுப்பாவிட்டால் பரவில்லை. ஆனால் அதற்கு நாங்கள் பதிலடி கொடுக்கும் நாள் வரும் என கூறிவிட்டார்.

உண்மையில் அந்த ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்து என்பது என்ன? அதற்கு கொரோனாவை குணப்படுத்தும் சக்தி இருக்கிறதா?

ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் என்றால் என்ன?

இது மலேரியாவை குணப்படுத்தும் மருந்து ஆகும். குளோரோகுயின் மருந்தை விட வீரியம் குறைந்ததாகும் இது மற்றொரு மலேரியா மருந்து.

வெவ்வேறு விலை மற்றும் தரத்துடன் இது அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  எஃப்‌டி‌ஏ-வால் அனுமதிக்கப்பட்டாலும் கொரோனா சிகிச்சைக்கு உகந்த மருந்து இது இல்லை.

ஏன் டிரம்ப் ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் கேட்கிறார்

பிரான்ஸ் நாட்டில் 40 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் பாதிக்கு மேற்பட்டோருக்கு உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாம்.

மருத்துவ வல்லுனர்கள் இது தரம் குறைந்த ஒரு ஆய்வு என எச்சரித்துள்ளனர். பிரான்ஸ் ஹெல்த் மினிஸ்டர் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

இந்த மருந்து கோவிட் 19 வைரஸ்க்கு பின் செயல்படும் சார்ஸ் cov-2 வைரஸ் செயல்பாட்டை முழுவதும் தடை செய்யுமாம். இதனால் இந்த வைரஸ் உடல் பாகங்களின் அணுக்களில் செல்வதை தடை செய்யும்.

வழக்காமான கொரோனா சிகிச்சைக்கும் உடலில் முன்னேற்றம் தெரிய எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏறத்தாழ ஒரே அளவு தான்.

மேலும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட ஒரு நோயாளிக்கு உடல்நிலை மிகவும் மோசமானதாக ஆனது. மீதம் நான்கு பேருக்கு சிறுநீரக செயல் இழப்பு, வயிற்று போக்கு ஆகியவை ஏற்பட்டுள்ளது.

இது மிகவும் விரைவான காலத்தில் நாம் இந்த மருந்தை கொரோனாவிற்காகன சரியான மருந்து என்று சொல்லி விட முடியாது.

ஐரோப்பா மருத்துவத்துறை ஆய்வை தவிர வேற எந்த கொரோனா நோயாளியும் இந்த மருந்தை உபயோகிக்க கூடாது என எச்சரித்துள்ளது.

3

தல என்ற சொல்லை பட்டை தீட்டியவர் யுவன் | Yuvan Special 1

1
யுவன் ஷங்கர் ராஜா Yuvan Special 1 தீனா

தீனா என்ற படம் மூவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம். யுவன் சங்கர் ராஜா, முருகதாஸ், தல அஜித். Ajith – Mrugadoss – Yuvan Shankar Raja | Yuvan Special 1.

தீனா – Dheena

Yuvan Special 1. அரவிந்தன் படத்தில் அறிமுகமாகி இருந்த யுவன் தன்னை நிருபிக்கத்துடித்த நேரம் அது. முருகதாஸ் என்ற சாதனை இயக்குனரின் முதல் படம் தீனா.

தீனாவின் மூலம் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் யுவன் சங்கர் ராஜா. இளையராஜா மகன் யுவன் என்ற அடையாளம் நீங்கி யுவன் அப்பா இளையராஜா என சொல்லும் அளவிற்கு இசையில் கை தேர்ந்து விளங்கினார்.

வத்திகுச்சி பத்திக்காதுடா (vathikuchi pathikathuda)

வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையிலே பட்டா இது அப்பப்பப்பா.. தல என்ற அடையாளம் உருவாகக்காரணம் யுவனின் இசையும் ஒன்று.

முருகதாஸ் என்ற இயக்குனர் முதல் படத்தில் மாஸ் ஹிட் கொடுத்தார் என்றால் அதற்கு இவனின் இசை ஒரு முக்கிய காரணம்.

பெரிய ராஜாவிற்கு சளைத்தவன் இல்லை இந்த சின்ன ராஜா என்கிற அளவில் இருந்தது யுவனின் இசை. எஸ்.பி.பி. ஹைபிச் பாடல் யுவனை உலகறியச் செய்தது.

ஹைபிச் என்ன ராஜாவை விட இனிமையாய் மேலோடி கூட எனக்கு போடத்தெரியும் என யுவனின் பாக்காவான வாத்தியம் கொடுத்தது சொல்லாமல் தொட்டும் செல்லும் தென்றல்.

sollamal thottu sellum thenral சோகத்தையும் இனிமையை ரசிக்க வைத்தது. காதல் என்ற வார்த்தை தேகம் முழுவதும் பரவியது இந்த பாடலால்.

நீ இல்லை என்றால் (nee ilai endral) பாடல் இன்னொரு சிறப்பு. அஜித்திக்கு கேங்ஸ்டர் பிம்பம் ஏற்படக்காரணமே யுவனின் இந்த இசை தான்.

முருகதாஸ் அஜித் மட்டும் இவனால் பட்டை தீட்டப்படவில்லை இன்று முன்னணியில் வெற்றிநடை போடும் ஒரு நாயகன் உருவெடுக்க காரணமே யுவனின் இசை தான்…

படமே வெளிவரவில்லை என்றாலும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு இயக்குனர் உருவாகக் காரணமே இந்த யுவன் தான்.

அது யார்? யுவன் அப்படி என்ன அவர்கள் படங்களில் கலந்து உறவாடினார் என்பதை அவர்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போம்

3

Allu Arjun Birthday: புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Pushpa First Look

Pushpa First Look; பிறந்தநாள் ஸ்பெஷல்: புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! அல்லு அர்ஜூன் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

புஷ்பா ஃபர்ஸ்ட் லுக் (Pushpa First Look) போஸ்டர் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜூன் (Allu Arjun Pushpa First Look) இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் கிப்ட் கொடுக்கும் வகையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புதிய படம் புஷ்பா. இந்தப் படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

ஆதலால், படத்திற்கு புஷ்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது சூரியின் புஷ்பா புருஷன் என்ற டயலாக்கை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

புஷ்பா படத்தில், அல்லு அர்ஜூன் உடன் இணைந்து விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாகிறது.

இந்த நிலையில், அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை (Allu Arjun Birthday) முன்னிட்டு புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில், கருப்பு நிற தோற்றத்தில் கோபமாக பார்க்கும் விதமாக போஸ்டர் அமைந்துள்ளது.

3

சென்சேஷனல் ஹீரோ முகமூடிகளை பயன்படுத்துவதை விடுங்கள், கெர்ச்சீப்பைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்!

0

கொரோனா வைரஸ் தொற்று, பொருளாதாரம் மற்றும் மக்களின் சாதாரண வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கிலும் ஏராளமான இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அரசாங்கங்கள் மக்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவில், வைரஸ் தாக்கமும் மிக அதிகரித்துள்ளது, மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், நட்சத்திரங்கள் கூட விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர், இப்போது டோலிவுட் ஹீரோ விஜய் தேவரகொண்டா ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் ட்வீட் “என் அன்பானவர்களே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். துணியின்மூலம் முகம் மூடுவது மெதுவாக நோய் பரவாமலிருக்க உதவும். மருத்துவர்களுக்கான மருத்துவ முகமூடிகளை அவர்களுக்கு விட்டுவிட்டு, அதற்கு பதிலாக ஒரு கைக்குட்டையோ, ஒரு ஸ்கேர்ப் போன்ற துணிகளை பயன்படுத்தவும். உங்கள் முகத்தை மூடி,பாதுகாப்பாக தங்கவும். #MaskIndia ” என அவரின் டீவீட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

3

முடிவை மாற்றிய தாராள பிரபு படக்குழு: புதிய அறிவிப்பு வெளியீடு!

0
Dharala Prabhu Release in Amazon Prime

Dharala Prabhu; முடிவை மாற்றிய தாராள பிரபு படக்குழு: புதிய அறிவிப்பு வெளியீடு! ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தை அமேசான் பிரைமில் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தாராள பிரபு (Dharala Prabhu) படம் திரைக்கு வந்து சில நாட்கள் ஓடிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாலிவுட்டில் வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்காக தாராள பிரபு உருவாக்கப்பட்டது. இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இந்தப் படத்தை இயக்கினார்.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது. ஆனால், திரைக்கு வந்து சில நாட்கள் மட்டுமே ஓடிய நிலையில், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனால், தாராள பிரபு படத்தின் வசூல் பாதித்தது. ஹரிஷ் கல்யாண், விவேக், தான்யா ஹோப் ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ஆதலால், தாராள பிரபு படத்தை மறுவெளியீடு (Dharala Prabhu ReRelease) செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. இது குறித்து, படக்குழு அறிக்கையும் வெளியிட்டது.

அதில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற தாராள பிரபு படம் திரையரங்கம் திறக்கப்பட்டதும் மறுவெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மறுவெளியீட்டிற்கு முன்பாகவே தாராள பிரபு படத்தை படக்குழுவினர் அமேசான் பிரைமில் வரும் 9 ஆம் தேதி நாளை (Dharala Prabhu Release in Amazon Prime Video) வெளியிட இருக்கிறார்கள்.

இதனால், தாராள பிரபு மீண்டும் திரைக்கு வராது என்று கூறப்படுகிறது. இதே போன்று ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் வந்த ஜிப்ஸி படமும் மறுவெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3

எப்போதுமே சூரி கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான்! இப்படி செஞ்சிட்டாரே!

0
Soori Amman Hotel Leave

Soori; எப்போதுமே சூரி கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான்! இப்படி செஞ்சிட்டாரே! தனது ஹோட்டலில் பணிபுரியும் 350 ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு கொடுத்துள்ளார்.

தனது ஹோட்டலில் பணியாற்றி வரும் 350 ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு கொடுத்து அசத்தியுள்ளார் நடிகர் சூரி.

கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரையில் காமராஜ் சாலையில் அம்மன் என்ற ஹோட்டலை சூரி திறந்தார்.

இதையடுத்து, மதுரையின் மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளிலும் ஹோட்டல்களை திறந்து வைத்தார்.

தொடர்ந்து சைவ உணவகங்களை மட்டுமே திறந்து நடத்தி வந்த சூரி, மதுரை திருப்பரங்குன்றத்தில் அம்மன் உணவகம் என்ற அசைவ உணவகத்தை திறந்தார். இந்த உணவகத்தை நடிகரும், சூரியின் நண்பருமான சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார். இவ்வளவு ஏன், நடிகர் விஜய் சேதுபதி கூட சூரியின் ஹோட்டலுக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஹோட்டல்களில் பணியாற்றி வரும் 350 ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு கொடுத்து வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது ஹோட்டல்களில் மொத்தம் 350 பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் லீவு கொடுத்துவிட்டேன்.

அதோடு, அவர்களது சம்பளத்தில் எந்த பிடித்தவும் செய்யாமல், முழு சம்பளத்தையும் அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்.

இதே போன்று வறுமையில் வாடும் நாடக நடிககர்களுக்கு நடிகர் சங்கம் மூலமாக ரூ.1 லட்சம் கொடுத்திருக்கிறேன். நாட்டில் மூன்றாம் உலகப்போர் வந்தது போன்ற ஒரு அச்சத்தை கொரோனா ஏற்படுத்திவிட்டது.

ஆதலால், யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

உயிர்க்கு போராடும்போது, குழாயடி சண்டையிடும் ஸ்டாலின் எடப்பாடி

0

உயிர்க்கு போராடும்போது, குழாயடி சண்டையிடும் ஸ்டாலின் எடப்பாடி. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லிக்கொண்டே அரசியல் செய்யாதீர்கள் எனக் கூறுகிறார்கள்.

கொரோனாவால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தாமதமாக பரவ ஆரம்பித்த கொரோனா திடீரென அசுர வேகம் எடுத்துவிட்டது.

கரூர் மருத்துவமனைக்கு அரவக்குறிச்சி எம்.பி. செந்தில் பாலாஜி, மருத்துவ உபகரணங்கள் வாங்கிக்கொள்ள ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கி இருந்தார்.

முதலில் இதை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், பிறகு எம்.பி.நிதி அந்த அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே செலவிட முடியும் எனத் தெரிவித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த முக ஸ்டாலின் டிவிட்டரில் இது பற்றி கூறி இருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் உடனே பதில் கூறியிருந்தார்.

இந்திய சட்ட விதிகளை பின்பற்றி தான் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது இது தெரியாமல் முக ஸ்டாலின் இதை அரசியல் ஆக்குகிறார் எனத் தெரிவித்து இருந்தார்.

ஆக மொத்தத்தில் மக்கள் செத்தால் கவலை இல்லை என இருவருமே இந்த நேரத்திலும் டிவிட்டரில் குழாயடி சண்டை நடத்தி வருகின்றனர் .

3

21 நாட்கள் ஓடவும், ஒளியவும் முடியாது: பிக் பாஸ் இல்ல: நடிகர் அப்பாஸ்!

0
Actor Abbas

Abbas; 21 நாட்கள் ஓடவும், ஒளியவும் முடியாது: பிக் பாஸ் இல்ல: நடிகர் அப்பாஸ்! கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில், இது பிக் பாஸ் நிகழ்ச்சி இல்ல, பிக் வேர்ல்டு ரியாலிட்டி ஷோ என்று நடிகர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் அல்ல…பிக் பிரதர் அல்ல… பிக் வேர்ல்டு ரியாலிட்டி ஷோ என்று நடிகர் அப்பாஸ் (Actor Abbas) தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலே இருப்பது பற்றி நடிகர் அப்பாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வந்துவிட்டது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எங்கிருந்து வந்ததோ, அங்கு சகஜ நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அப்பாவி ஜனங்கள் ஒருபக்கம், சகட்டுமேனிக்கு வீடியோ வெளியிட்டு வரும் பிரபலங்கள் ஒரு பக்கம்.

இந்த நிலையில், நியூசிலாந்தில் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நடிகர் அப்பாஸ் (Actor Abbas) தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

அனைவருமே அவரவர் வீட்டில் முடங்கியிருக்கும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ இதுதான். பிக் பாஸ் அல்ல, பிக் பிரதர் அல்ல, பிக் வேர்ல்டு ரியாலிட்டி ஷோ. வீட்டிலேயே இருங்கள்.

இது ஒன்றும் நாடகம் இல்லை. இது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.

3

அசுரனாக மாறிய ட்ரம்ப்; அலறி துடிக்கும் WHO

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பிற்கு (WHO) அளித்து வரும் நிதியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் பரவிய நேரத்தில், அமெரிக்க விமான சேவையை நிறுத்தியது.  உலக சுகாதார அமைப்பு இதை முட்டாள் தனமான காரியம் என அப்போது கூறியது.

ஆனால், அதன்பிறகு தான் கொரோனா தொற்றின் வீரியத்தை உலக நாடுகள் புரிந்துகொண்டன.

தற்பொழுது ட்ரம்ப் இதை சுட்டிக்காட்டி கூ சீனவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது எனவே இனிமேல் அந்த அமைப்புக்கு அளிக்கும் நிதியை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளார்.

WHO அதிக அளவில் நிதி அளித்து வரும் நாடு அமேரிக்கா. அந்த நிதியைக் கொண்டே உலக நடுக்களுக்கு மருத்துவ உதவியை செய்தி வருகிறது who.

தற்பொழுது ட்ரம்ப் முடிவால் கூ அதிர்ச்சி அடைந்து உள்ளது. நிதியை காரணம் கட்டி உலகின் பல்வேறு நாடுகளை அமெரிக்க மிரட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

3