Home Blog Page 164

ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம் – சீனா அரசு அறிவிப்பு

0
உத்தரவு முழுமையாக நீக்கம்

முதல் முறையாக வைரசை கண்டுபிடித்த வுகான் மாகாணத்தில் முழுமையான 144 ஊரடங்கு உத்தரவை நீக்கியது சீனா. தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் தான் முதல் முறையாக வைரஸ் தொற்று இருந்த ஒருவரை கண்டுபிடிக்கப்பட்டது.

வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.

இந்த வைரஸ் காரணமாக உலகமெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாள் மட்டும் 1900 பேர் பலியாகி உள்ளனர்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு தலா 500 பேர்களுக்கு மேல் பலியாகி வருகிறார்கள்.

பிரான்சில் நேற்று ஒரு நாள் மட்டும் இந்த வைரசுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறையாகியுள்ளனர்.

இந்த வைரசு தடுக்க பல நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். தற்பொழுது 50 நாட்களாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்முறையாக சீனாவில் தோன்றிய வுகான் மாகாணத்தில் ஜனவரி மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. மக்கள் உடல் நலம் தேறி வருகிறார்கள்.

இதனால் படிப்படியாக சீன அரசு ஊரடங்கு உத்தரவை நீக்கியது. இன்று ஏப்ரல் 8ம்தேதி வுகான் மாகாணத்தில் முழுமையாக ஊரடங்கு உத்தரவை நீக்கியது.

மக்கள் வழக்கம் போல செயல்பட தொடங்கினார். அங்குள்ள தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

3

This Day in History April 08; வரலாற்றில் இன்று ஏப்ரல் 08

0

This Day in History April 08; வரலாற்றில் இன்று ஏப்ரல் 08, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

1232ஆம் ஆண்டு மங்கோலியப் பேரரசிற்கும் மஞ்சூரியா மற்றும் வட சீனாவை ஆண்ட சுரசன்கள் தலைமையிலான சின் அரசமரபிற்கும் இடையே போர் நடைபெற்ற நாள் இன்று.

1857ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டார்.

Today Birthdays in History

1911ஆம் ஆண்டு அமெரிக்க வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு வென்றவருமான மெல்வின் கால்வின் பிறந்த தினம் இன்று.

1917ஆம் ஆண்டு தமிழக கருநாடக வாய்ப்பாட்டு வீணை கலைஞர் எஸ் ராமநாதன் பிறந்த தினம் இன்று.

1938ஆம் கானா நாட்டு பொருளியலாளர் ஐக்கிய நாடுகளின் 7வது பொதுச்செயலாளருமான கோபி அன்னான் பிறந்த தினம் இன்று.

Today Deaths in History 

1461ஆம் ஆண்டு செருமானிய வானியலாளர் மற்றும் கணிதவியலார் ஜார்ச் வான் பியூயர்பக் இறந்த தினம் வரலாற்றின் இன்று.

1992ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற சுவிட்ஸர்லாந்து – இத்தாலிய மருந்தியலாளர் டேனியல் போவே இறந்த தினம் வரலாற்றில் இன்று.

2013ஆம் ஆண்டு ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் இறந்த தினம் இன்று.

3

ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை நிதியுதவி

0

இந்தியாவின் முன்னாள் ஹாக்கி ஜாம்பவானான தன்ராஜ் பிள்ளை கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கான பிரதமர் நிதிக்காக 5 லட்சம் வழங்கியுள்ளார்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்து வருகிறது.

தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதுவரை இந்தியாவில் 4700 மக்கள் பாதித்து உள்ளார்கள்

இந்தியாவின் பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார் அதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக உங்களால் முடிந்த உதவியை தாருங்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பல தொழிலதிபர்கள் , கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் போன்றவர்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.

தற்போது தன்ராஜ் பிள்ளை பிரதமர் நிதிக்காக 5 லட்ச ரூபாய் நிதியை வழங்கி உள்ளார்.

தன்ராஜ் பிள்ளை இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் என்று கூட சொல்லலாம் இது வரை இந்திய அணிக்காக 339 போட்டிகள் விளையாடி உள்ள தன்ராஜ் பிள்ளை 170 கோல்களை அடித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இவருக்கு 2000 ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கியது நான்கு ஒலிம்பிக் போட்டிகள், நான்கு உலகக் கோப்பைகள், நான்கு சாம்பியன் கோப்பைகள், நான்கு ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

3

Boris johnson: இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்?

0

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris johnson) கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 204 நாடுகளுக்கு மேல் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.

பல்லாயிரம் மக்களைக் கொன்று பல லட்சம் மக்களைப் பாதித்து இந்த வைரஸை பல நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளார். இதனால் மக்கள் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னட பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், ஸ்பெயின் இளவரசி, பிரிட்டன் பிரதமர், பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சர் போன்றவர்களை கூட இந்த தொற்று விட்டு வைக்கவில்லை.

கடந்த மாதம் பிரிட்டன் பிரதமருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு. தன்னைத்தானே தன் சொந்த வீட்டில் தனிமை படித்துக் கொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வைரஸ் தாக்கம் அதிகமானதால் இங்கிலாந்து பிரதமரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது என்று ரைட்டர்ஸ் செய்திகளில் வெளியாக உள்ளது.

சிறந்த அனுபவம் மிக்க மருத்துவ குழுவால் போரிஸ் ஜான்சனை கண்காணித்து வருகிறார்கள்.

போரிஸ் ஜான்சன் தற்போது வரை சுய நினைவுடன் இருக்கிறார் என்றும் ஒருவேளை மயக்கம் அடைந்தால் அவருக்கு பதிலாக வெளியுறவுதுறை செயலர் டோமினிக் ராப் பிரதமரின் அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று டோமினிக் ராப் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டம் நடந்தது.

போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், போரிஸ் ஜான்சனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு நிமோனியா காய்ச்சல் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

3

அச்சச்சோ! மிரண்டுபோன லோகேஷ் – அப்படி என்ன நடந்தது?

0

Lokesh Kanagaraj: அச்சச்சோ! எல்லாமே பேக் அக்கவுண்ட்: யாரும் நம்பாதீங்க: மாஸ்டர் இயக்குநர்! மாஸ்டர் ரிலீஸ் தேதி பத்தி நான் ஒன்னும் சொல்லலை.

மாஸ்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் படம் ரிலீஸ் தேதி குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) போலி கணக்கில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்துள்ளது.

எனக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அக்கவுண்ட் கிடையாது என்று மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை கொடுத்தார்.

கைதி படம் லோகேஷ் கனகராஜிற்கு தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, வசூலைத் தொடர்ந்து கைதி 2 ஆம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கைதி வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அன்று கொரோனா வைரஸ் காரணமாக அன்று ஒருநாள் முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, மார்ச் 25ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் டிரைலர், ரிலீஸ் தேதி வெளியாகாத நிலையில், லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கி அதன் மூலம் சிலர் மாஸ்டர் அப்டேட் கொடுத்து வந்துள்ளனர்.

தற்போது இது குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது;

நண்பர்களே நான் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் இல்லை. நான் டுவிட்டரில் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறேன். மற்ற எல்லா கணக்குகளும் போலி. ஜாக்கிரதை என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. இதனால், ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமடைந்துள்ளனர்.

3

Super Pink Moon “சூப்பர் பிங்க் நிலா” பற்றி தெரிந்து கொள்வோம்

0

Super Pink Moon: இந்திய மக்கள் இன்று காலை 8.05 மணிக்கு நிலாவை வெறும் கண்களிலேயே பார்க்கலாம் பூமிக்கு சுற்றுவட்டப்பாதையில் மிக அருகில் வரும் நிலாவை பெரிதாக காணலாம்.

வழக்கம்போல் உள்ள பௌர்ணமி விட ஏப்ரல் மாதம் வரும் பௌர்ணமி மிகவும் பெரியதாகவும், சற்று பிரகாசமாகவும் இருக்கும்.

இதை பிங்க் நிலா என்று அழைப்பார்கள். பிங்க் நிலா என்றால் பிங்க் நிறத்தில் நிலா இருக்கும் என்று அர்த்தமில்லை.

“wild ground phlox” என்ற பூக்கள் இந்த வசந்த காலத்தில் முதன்முதலில் பூக்கத் தொடங்கும் காலம் என்பதால் இதை அமெரிக்க பழங்குடியினர் பிங்க் நிலா என்று அழைக்கின்றனர்.

பூமிக்கு மிக அருகில் தனது சுற்றுவட்டப் பாதைகள் நிலா வருவதால் இப்படி பெரிதாக தெரியும். Super Pink Moon எனவே இதற்கு சூப்பர் பிங்க் மூன் என்று பெயர்.

நம் பூமியின் வளிமண்டலத்தில் மாசு, தூசி எதுவும் இல்லாமலிருந்தால் நிலவின் நிறத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. இதை மக்கள் வெறும் கண்களிலேயே பார்க்கலாம்.

இந்திய நேரப்படி ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இன்றிலிருந்து நாம் சமூக வலைதளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் இந்த பிங்க் நிலா புகைப்படத்தை காணலாம்.

இதைத்தான் நாம் சித்ராபவுர்ணமி என்று அழைக்கின்றோம். இந்தியாவில் உள்ள மக்களின் இந்திய நேரப்படி ஏப்ரல் 8ம் தேதி காலை 8.05 மணியிலிருந்து இந்த பிங்க் நிலாவை பார்க்க முடியும்.

சூப்பர் பிளாட் ஊல்ப் மூன் பற்றி தெரியுமா?……… சூப்பர் வோர்ம் மூன் பற்றி தெரியுமா?

3

பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸி. வீரர்கள் – மைக்கேல் கிளார்க்

0

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஆக்ரோஷம் காணாமல் போனதற்கு தற்போதுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தான் காரணம் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட்டின் ஜாம்பவான் யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் அது ஆஸ்திரேலியா அணி என்று.

அதே சின்ன குழந்தையிடம் ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி பெறும் அணி யாரென்று கேட்டால் அதுவும் ஆஸ்திரேலிய அணி தான்.

ஆஸ்திரேலிய அணி தோல்வி அடையப் போகிற நிலைமைக்கு வந்தால் அவர்கள் கையில் எடுக்கும் யுக்தி ஸ்லெட்ஜிங் முறை.

மற்ற அணி வீரர்களை களத்திலும், மைதானத்துக்கு வெளிகளும் ஸ்லெட்ஜிங் செய்வதிலும் வல்லவர்கள்.
ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன்களும் இதே போல்தான்.

ரிக்கி பாண்டிங், டேமியன் மார்ட்டின், மேத்யூ ஹைடன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கல் கிளார்க், கில்லஸ்பி மிட்செல் ஜான்சன் போன்ற முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள்.

மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் தற்போது இந்த முறையை கையில் எடுக்கிறார்கள்.

ஐசிசி ஸ்லெட்ஜிங் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மீறி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இன்று புதிய விதிமுறையும் கொண்டு வந்தது.

இதனால் தற்போது கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் குறைவு.

இதனால் ஆஸ்திரேலியாவில் ஆக்ரோஷமாக விளையாடுவதை விட்டுவிட்டு இயல்பான ஆட்டத்தை விளையாடி வருகிறார்கள். இதனால் பல தோல்விகளையும் பெற்று வருகிறார்கள்.

தற்போது இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பை வென்று கொடுத்தவருமான மைக்கேல் கிளார்க் கூறியதாவது :

உலக கிரிக்கெட்டில் இந்திய அணி மிகப் பெரிய பலம் பொருந்தியது என நாம் அறிவோம். சர்வதேச கிரிக்கெட் ஆக இருந்தாலும் சரி, உள்நாட்டு தொடர் ஐபிஎல் யாக இருந்தாலும் சரி.

ஆஸ்திரேலிய அணியும் ஆஸ்திரேலியா வீரர்களும் சமீப காலமாக இந்திய வீரர்களை குறிப்பாக விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களிடம் ஸ்லெட்ஜிங் செய்வதை நிறுத்திவிட்டனர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் சுயநலத்துக்காக இந்தியாவிடம் பணிந்து நடந்து கொள்கிறார்கள்.

வருட வருடம் ஏப்ரல் மாதம் இந்தியா வந்து ஐபிஎல் விளையாட வேண்டும்.

இதனால் இந்திய வீரர்களையும் மற்றும் மற்ற அணி வீரர்களையும் ஸ்லெட்ஜிங் செய்ய பயந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் வழக்கமான ஆஸ்திரேலியாவில் ஆக்ரோஷ போக்கே காணாமல் போனது என்று மைக்கேல் கிளார்க் குற்றம்சாட்டியுள்ளார்.

இவர் சொல்லும் குற்றம் நியாயமற்றது. ஐசிசி கடுமையான விதிகளை விதித்துள்ளதால் விராட் கோலி போன்ற வீரர்கள் கூட ஸ்லெட்ஜிங் செய்வதை நிறுத்திவிட்டனர்.

3

8/4/2020 ராசிபலன் : இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

8/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்க போகிறது. உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்று திட்டங்கள் புத்தியை பயன்படுத்தி தீட்டினால் வெற்றி காணலாம். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. அதனால் கவலையுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் நல்லாதரவு கிடைப்பதால் மன ஆறுதல் கிடைக்கும் நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று தங்களின் இலக்கை அடைய அதிகமான முயற்சிகள் தேவை. மனதை உறுதியாக வைப்பது அவசியமாகும். பணிசுமையால் சோர்வடைய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது.

கடக ராசிபலன்

இன்று அதிக வேலைகள் இருக்கும். ஆனால் அதை நீங்கள் சுலபமாக முடித்து விடுவீர்கள். வீட்டில் நன்மதிப்பு அதிகமாகும். நாள் முழுவதும் லாபகரமான நாளாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும் நாள் அமையப்போகிறது.

சிம்ம ராசிபலன்

இன்று தங்களின் பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். யதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. வீணான கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்காது.

கன்னி ராசிபலன் 

இன்று நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாளாகும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். பிறரிடம் ஏமாற வாய்ப்புகள் உள்ளது. எனவே கவனமாக செயலாற்ற வேண்டிய நாளாகும்.

துலா ராசிபலன்

இன்று தங்களின் வளர்ச்சி குறைவாக இருக்கும். கவன சிதறல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நண்பர்களினால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விவாதங்களை கைவிடவும். கால் வலி பிரச்சனைகள் வரும்.

விருச்சிக ராசிபலன்

இன்று மிகவும் தைரியமாக காணப்படுவீர்கள். உங்களின் மனவலிமையால் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடையும். பணிக்கு ஏற்ற சன்மானம் பெறுவீர்கள். பாராட்டுகள் வந்து சேரும் நாளாக இருக்க போகிறது.

தனுசு ராசிபலன்

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பொது சேவைகளில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம். அனைவரிடமும் நன்மதிப்பு பெறுவீர்கள். துணையுடன் வெளியே சென்று நேரம் செலவிடுவீர்கள்.

மகர ராசிபலன் 

இன்று உங்களுக்கான நாளாக இருக்காது. சோதனைகள் மிகுந்து காணப்படும். அனைத்தையும் தங்களின் முயற்சியால் எதிர் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கும். தனவரவு பெரிதாக இருக்காது.

கும்ப ராசிபலன்

இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. இல்லையெனில் தேவையற்ற சிக்கல்களில் மாட்டி கொள்வீர்கள். சக பணியாளர்களிடம் கவனமாக பேசவும். புத பகவானை பிராத்தனை செய்து கொள்ள பிரச்சனைகள் குறையும்.

மீன ராசிபலன் 

இன்றைய நாள் முடிவில் நற்பலன்கள் பெறுவீர்கள். ஆரம்பத்தில் சில கடுமையான சோதனைகள் வரலாம். அவை அனைத்தும் தங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் நல்ல லாபகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

8/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தமிழ் சினிமாவின் தளபதி, விஜய்: புரிந்து கொண்ட வர்ஷா பொல்லம்மா!

0
Varsha Bollamma

Varsha Bollamma; தமிழ் சினிமாவின் தளபதி, விஜய்: புரிந்து கொண்ட வர்ஷா பொல்லம்மா! விஜய்யை ஏன் தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கிறார்கள் என்பதை நடிகை வர்ஷா பொல்லம்மா தற்போது புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தளபதி, விஜய் என்பதை தற்போது புரிந்து கொண்டதாக நடிகை வர்ஷா பொல்லம்மா தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வந்த 96 படத்தின் பிரபா என்ற ரோலில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. அதற்கு முன்னதாக சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தில் பிரபுவிற்கு மகளாக நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இவ்வளவு ஏன், தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்ற காயத்ரி என்ற ரோலில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகியுள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், பிகில் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தது பற்றியும், 96 படத்தில் விஜய் சேதுபதி கற்றுக் கொடுத்த விஷயங்கள் பற்றியும் வர்ஷா ரசிகர்களிடையே உரையாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வீட்டிலே முடங்கியிருக்கும் சூழல் வந்துவிட்டது.

வீட்டில் இருக்கும் பிரபலங்கள் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், வர்ஷாவும் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது, அவரிடம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த வர்ஷா கூறுகையில், விஜய் உடன் நடிப்பது என்பது எனக்கு கனவு. ஏன் அவரை தளபதி என்று அழைக்கிறார்கள் என்பது அவருடன் நடித்த பிறகுதான் எனக்கு புரிந்தது என்றார்.

மேலும் விஜய் சேதுபதி மிகவும் நல்ல மனிதர். அவர், 96 படத்தின் போது எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

பிகில் படத்தைத் தொடர்ந்து வர்ஷா தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

3

2ஆவது முறையாக நடிகை த்ரிஷா கொரோனா அறிவுரை!

0
Trisha Corona Advice

Trisha Corona Advice நடிகை த்ரிஷா கொரோனா வைரஸ் தீவிரம் குறித்தும், ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டில் இருப்பதின் அவசியம் குறித்தும் இரண்டாவது முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா மீண்டும் கொரோனா வைரஸ் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனாவால் சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வந்துவிட்டது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எங்கிருந்து வந்ததோ, அங்கு சகஜ நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அப்பாவி ஜனங்கள் ஒருபக்கம், சகட்டுமேனிக்கு வீடியோ வெளியிட்டு வரும் பிரபலங்கள் ஒரு பக்கம்.

வேலையில்லாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர். இப்படியே காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா மீண்டும் கொரோனா வைரஸ் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்த கொரோனா வைரஸ் அல்லது கோவிட்19 வைரஸ் சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வகை வைரஸ்.

வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சமீபத்தில் வந்தவர்கள் தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது உங்களை அவமதிப்பு செய்வதற்கோ அல்லது சித்திரவதை செய்வதற்கோ இல்லை. இது உங்களது பாதுகாப்பிற்காக மட்டும்தான்.

உங்களது குடும்பம், குடும்பத்தில் உள்ள சிறியவர்கள், வயதானவர்கள் ஆகியோரது பாதுகாப்பிற்காக மட்டும்தான்.

அரசின் விதிகளை யாரும் மீறாதீர்கள். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். அனைவருமே வீட்டில் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த வைரஸுக்கு எதிராக போராட முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

இது அரசு விளம்பரம் மாதிரி தெரிகிறது. ஆம், த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோவை அரசு தங்களது விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்டதாக இறுதியில் தமிழகத்தின் முத்திரையோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவம் தெரிகிறது.

3