Home Blog Page 165

சீனாக்காரன் சாப்டதுக்கு நாங்க கைய கழுவணுமா? சாண்டி பாடிய பாடல்!

0
Sandy Corona Song

Sandy Corona Song; சீனாக்காரன் சாப்டதுக்கு நாங்க கைய கழுவணுமா? சாண்டி பாடிய பாடல்! நடிகரும், பாடகரும், டான்ஸ் மாஸ்டருமான சாண்டி பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பற்றி சாண்டி பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவால் சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வந்துவிட்டது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எங்கிருந்து வந்ததோ, அங்கு சகஜ நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அப்பாவி ஜனங்கள் ஒருபக்கம், சகட்டுமேனிக்கு வீடியோ வெளியிட்டு வரும் பிரபலங்கள் ஒரு பக்கம்.

வேலையில்லாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர். இப்படியே காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர், டான்ஸ் மாஸ்டர், பாடகர், பிக் பாஸ் சாண்டி கொரோனா பற்றி பாடிய பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் (Ennanga Nadakkudhu Naatula).

அதில், பச்சக்கறிய பச்சையா தின்னா அதுக்கு பேரு கொரோனா…

கொச்ச கொச்சனு காலி பண்ண இந்தியா உள்ள வர்றானா..

நிலவேம்பு கசாயம்

அத குடிக்கணும் கட்டாயம்

நம்ம கையதான் கழுவணும்…

ஆல்டைம் ப்ரெஷாதான் இருக்கணும்..

ஹலோ ஹலோ என்னங்க நடக்குது நாட்டுல

அய்யோ அய்யோ ஆளே இல்ல ரோட்டுல

பிரச்சனையை பேஷ் பண்ணு, உன் கைய கால வாஷ் பண்ணு

சாண்டி பையன் சொல்லுறத கேளு கண்ணு

அந்த கொரோனாவா காலி பண்ணு

சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கைய கழுவனுமா?

நீங்க பண்ண பாவத்துக்கு நாங்க பயந்து நடுங்கணுமா?

கும்பலாக சுத்தாதீங்க..கூட்டத்துல நிக்காதீங்க..

அரசாங்கம் பேச்ச கேட்டு வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்க..

ப்ளீஸ் ஸ்டே ஹோம்…என்று சாண்டி பாடியுள்ளார்.

இந்த பாடல் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

விவேக்கின் இசை திறமை: ஆர்மோனியம் வாசித்து தனிமையில் இனிமை காணும் விவேக்!

0
Vivek Playing Harmonium

 Vivek; விவேக்கின் இசை திறமை: ஆர்மோனியம் வாசித்து தனிமையில் இனிமை காணும் விவேக்! நடிகர் விவேக் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

விவேக் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, டான்ஸ் ஆடுவது, ஓவியம் வரைவது, பாடல் பாடுவது, இசை சாதனங்களை வாசிப்பது என்று பிஸியாக இருக்கின்றனர்.

சிலர், தங்களது ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி என்ற பாடலுக்கு ஆர்மோனியம் வாசித்து அசத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக சைக்கோ படத்தில் வரும் உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா என்ற பாடலுக்கு ஆர்மோனியம் வாசித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், விவேக் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோவை சிலர் ஹலோவில் பதிவிட்டு விவேக்கின் இசை திறமை என்ற ஹேஷ்டேக்கில் வைரலாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே முடங்கி தனியாக இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. அந்த கொடுமையிலும் இசை சேர்ந்தால் அது இனிமையிலும் இனிமை என்று பலருக்கும் புரிய வைத்துள்ளார்.

விவேக்கின் ஆர்மோனியம் வாசிக்கும் வீடியோவை பதிவிட்ட கயல் தேவராஜின் டுவிட்டை ரீடுவீட் செய்த விவேக், அதில் உண்மைதான், எம்எஸ்வி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இவர்கள் இல்லாவிட்டால் நம் தனிமை, நம் பயணம்?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக பல்லடம் பகுதியில் குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு சிலர் பாத பூஜை செய்து, அவருக்கு பணமாலை போட்டு வரவேற்ற வீடியோவை விவேக் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

சமையல் வித்தைகளை கற்றுக்கொடுக்க ஆர்வம்: யூடியூப் சேனல் தொடங்கிய வனிதா!

0
Vanitha You Tube Channel

Vanitha You Tube Channel: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில், வெறும் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் ரசிகர்கள் அவரது சேனலை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.

வனிதா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

விஜயகுமாரின் மகள் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அதோடு இல்லாமல், அந்த சேனலில் வரும் கலக்கப்போவது யாரு 9 நிகழ்ச்சிக்கு நடுவராகவும் வந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது வனிதா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கான பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வந்தார். மேலும், ரசிகர்களுடன் நேரலையில் வந்து சேனலுக்கு புரோமோஷனும் தேடிக்கொண்டார்.

யூடியூப் சேனல் தொடங்கி இதுவரை 3 வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் ரசிகர்கள் அவரது சேனலை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.

நேற்று அறிமுகம் செய்து வைத்த அந்த சேனலுக்கு தற்போது வரை 16 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் வந்துள்ளனர்.

யூடியூப் சேனல் மூலம் சமையலுக்கு தேவையான டிப்ஸ், விதவிதமான உணவு வகைகள் போன்றவற்றை கற்றுக்கொடுக்க இருக்கிறார்.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றிகள் மனமார்ந்த நன்றிகள்…. லவ் யூ தம்பிஸ் மற்றும் தங்கச்சீஸ். சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் மற்றும் மற்றவர்களுடன் பகிருங்கள். லவ் யூ ஆல் என பதிவிட்டிருந்தார்.

3

கொரோனா: ஒரு கோடி நிதி அளித்து நெஞ்சை உருக வைத்த அஜித்

0
கொரோனா அஜித்

அஜித்: கொரோனா வைரஸ் உலக அளவில் பல்வேறு மக்களை பாதித்து கொன்று குவித்து வருகிறது. உலக அளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.

கொரோனா பாதித்தவர்களுக்கு திரை உலகில் இருந்து பல்வேறு நடிகர், நடிகையர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள ஒரு கோடி ரூபாய் நிதி கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

வெறுமனே என்று இல்லாமல் இந்தியா, தமிழகம், திரைக்கலைஞர்கள் வரை உதவி செய்து நெஞ்சை உருக வைத்துள்ளார் தல அஜித்.

3

கமல் ஹாசனை சீண்டிப் பார்த்த காயத்ரி!

0
Kamal Haasan Gayathri Raghuram

பிரதமர் மோடிக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கமல் ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதை நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 3,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 111 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏப்ரல் 5 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் பிரதமர் மோடி நாட்டு மக்களை ஒற்றுமையுடன் விளக்கேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதற்கேற்ப நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை எனும் நம்பிக்கை ஒளியை ஏற்றினர்.

இந்த நிலையில், கமல் ஹாசன் விளக்கேற்றச் சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதினார். அதில் எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா? உங்களது தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது.

தலைலேல் கூரையே இல்லாத மக்களின் நிலை என்ன ஆவது? எப்போதும் போன்று நீங்கள் பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக இருக்கிறீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கடிதம் எழுதினார்.

கமல் ஹாசன் எழுதிய கடிதத்தை விமர்சித்து காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின் பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக் காட்டக்கூடாது?

எப்போதும் அரசின் உத்தரவை மதிக்காத கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பில்லாத குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள்.

தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்எல்ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டு மக்கள் அனைவரும் விளக்கு ஏற்றி தங்களது ஒற்றுமையை காட்டினார்கள். ஆனால், நீங்கள் அதில் பங்கேற்கவில்லை. இது உங்களுக்கு உறுத்தவில்லையா?

நாட்டு மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் உழைத்து வருகின்றன என்று அவர் பதிவிட்டுள்ளார்.

3

காரைக்குடி, திருவாரூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ புகழ் கோவை சரளா பர்த்டே டுடே!

0
Kovai Sarala Birthday

கோவை சரளா இன்று தனது 58 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோவை சரளாவின் 58ஆவது பிறந்தநாள் இன்று.

கோவை சரளா

கடந்த 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி கோவையில் பிறந்தார். இவரது இயற்பெயர் என்னவோ சரளா தான்.

ஆனால், தான் பிறந்த கொங்கு நாடான கோவை என்ற சொல்லை தனது பெயருக்கு முன் அடைமொழியாக சேர்த்து கோவை சரளா என்று அழைக்கப்படுகிறார்.

எம் ஜி ஆரும், கோவை சரளாவும்

நல்ல பேச்சாளராக திகழ்ந்த கோவை சரளாவுக்கு கோவை வந்த எம்ஜிஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோவை சரளாவின் திறமையறிந்த எம்ஜிஆர், உனக்கு நிறைய திறமை இருக்கு… நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார்.

அவரது உதவித் தொகையில் படித்து வளர்ந்த கோவை சரளா, அவரைப் போன்று தானும் பிறருக்கு படிப்பற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.

பள்ளிப்படிப்பை முடித்த கையோடு திரையுலகில் கால்பதித்துள்ளார்.

கோவை சரளா திரைப்பயணம்

கோவையிலிருந்து சென்னை வந்த கோவை சரளா நடிகர் பாக்யராஜை சந்தித்து பேசியுள்ளார்.

அவரது பேச்சில் மயங்கிய பாக்யராஜ் திரைக்கதை எழுதி, நடித்த முந்தானை முடிச்சு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அறிமுக படமே வரவேற்பு கொடுத்ததால், வைதேகி காத்திருந்தாள், தம்பிக்கு எந்த ஊரு, மகளிர்க்காக, சின்னவர், எங்களுக்கும் காலம் வரும், கந்தா கடம்பா கதிர்வேலா, பூவெல்லாம் உன் வாசம், கோவை பிரதர்ஸ், காஞ்சனா, தில்லு முல்லு, உளியின் ஓசை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

30 ஆண்டுகால சினிமா வாழ்க்கை

தமிழில் மட்டும் இதுவரை 154 படங்களில் நடித்துள்ளார். அதோடு, தெலுங்கில் 57 படங்களிலும், மலையாளத்தில் 5 படங்களிலும், கன்னட மொழியில் 3 மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும், தனது 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதுவரை 750க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழக மாநில திரைப்பட விருது

சதி லீலாவதி, பூவெல்லாம் உன் வாசம் மற்றும் உளியின் ஓசை ஆகிய படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்கான தமிழக மாநில திரைப்பட விருது பெற்றார்.

கோவை சரளா பேசிய பேமஸ் டயலாக்ஸ்

கரகாட்டக்காரன் – என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம், என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, திருவாரூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்

ஷாஜகான் – தொறை இங்கிலீஸ் எல்லாம் பேசுது, சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்

தொலைக்காட்சி வாழ்க்கை

முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை கோவை சரளா 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு சினிமா வாய்ப்பு இல்லை.

அப்போதுதான் தொலைக்காட்சி பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். சன் டிவியில் சுந்தரி சௌந்தரி, கலைஞர் டிவியில் வந்தனா தந்தனா மற்றும் ஜெயா டிவியில் சபாஷ் மீரா போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.

அதுவும் இந்த மூன்றும் முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யார் என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்துள்ளார்.

தற்போது கலைஞர் டிவியில் வரும் பாசப் பறவைகள் என்ற குடும்ப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கோவை சரளா அவர்கள், இதுவரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. இரக்க குணம், பரந்த உள்ளம் படைத்த நடிகை கோவை சரளா தனது உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளை தனது பிள்ளைகளாக பாவித்து அவர்களை கண்டிப்போடு வளர்த்து வருகிறார்.

அதோடு, எம்ஜிஆரது தீவிர ரசிகையான கோவை சரளா அவரைப் போன்று பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் உதவிகள் செய்து வருகிறார்.

ஆச்சி மனோரமா

பொதுவாக நகைச்சுவை திறன் என்பது எல்லோருக்குமே அமைந்துவிடாது. அதுவும், பெண்கள் நகைச்சுவை உணர்வோடு இருப்பது என்னவோ அதிசயம்தான்.

சினிமாவில் நகைச்சுவை உணர்வோடு இருப்பவர்கள் என்னவோ குறைவுதான். தமிழ் சினிமாவில் இன்று வரை ஆச்சி மனோரமாவின் நகைச்சுவைக்கு ஈடு இணை யாரும் இல்லை.

ஆனால், அவருக்கு அடுத்த வரிசையில் இருப்பவர்கள் பட்டியலில் கோவை சரளா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் நடிகை தேவர்தர்ஷினி இருக்கிறார்.

கோவை சரளா, தேவதர்ஷினி காம்பினேஷன்தான் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது.

பின்னணி பாடகி, தயாரிப்பாளர்

சிறையில் பூத்த சின்ன மலர், வில்லு ஆகிய படங்களில் பாடல் பாடியுள்ளார். உழைத்து வாழ வேண்டும் என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கோவை சரளா இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் கோவை சரளாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே கோவை சரளா மேடம்…

3

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கீபோர்டு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம்!

0
MK Arjunan Passed Away

MK Arjunan Passed Away; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் மரணம்! மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் நேற்று காலமானார்.

கேரளாவில் பிறந்து பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா விடுதியில் வளர்ந்தவர் இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன். இசை மீது இருந்த ஆர்வத்தால், அங்கேயே இசையும் கற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் ஜி தேவராஜிடம் உதவியாளராக பணியில் சேர்ந்தார். தேவராஜ் இசையமைத்த பல படங்களுக்கு அர்ஜூனன் தான் ஹார்மோனியம் வாசித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 1968 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கறுத்த பொர்ணமி (Karutha Pournami) என்ற மலையாள படத்தின் மூலம் அர்ஜூனன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் 218 மலையாள படங்களில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பயானகம் (Bhayanakam) என்ற படத்துக்காக கேரள அரசு வழங்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான 48ஆவது கேரள மாநில திரைப்பட விருது பெற்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.ஷேகர், அர்ஜூனன் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதன் முதலில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பையும் இவரே வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எம்.கே.அர்ஜூனன் (84) உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அர்ஜூனன் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

என் குழந்தை பருவத்தில் எனக்கு அளித்த அன்பையும், ஊக்கத்தையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். உங்களது எண்ணிலடங்கா மெல்லிசை பாடல்கள் உங்களது நித்திய மரபுக்கு ஒரு சான்று.

எம்.கே.அர்ஜூனன் மாஸ்டர் நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டீ சர்ட்டில் ஹேண்ட்பேக் தயாரிக்கும் நடிகை கனிகா: வைரலாகும் வீடியோ!

0

Kanika; டீ சர்ட்டில் ஹேண்ட்பேக் தயாரிக்கும் நடிகை கனிகா: வைரலாகும் வீடியோ! பழைய டீசர்ட்டில் எப்படி ஹேண்ட்பேக் தயாரிக்கலாம் என்று நடிகை கனிகா தனது வீடியோ மூலமாக கற்றுக்கொடுத்துள்ளார்.

டீ சர்ட்டில் ஹேண்ட்பேக் தயாரிக்கும் நடிகை கனிகாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டியில் முடங்கியிருக்கின்றனர்.

ஆனால், எப்போதும் பிஸியாக காட்டிக்கொள்ளும் சினிமா பிரபலங்களுக்கு வீட்டில் இருப்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான். இந்த நிலையில், தான் அவர்கள் தங்களை பிஸியாகவே வைத்துக் கொள்கின்றனர்.

எப்படியென்றால், இதுவரை வீட்டு வேலை செய்யாதவர்கள், வீட்டு வேலையிலும், ஓவியம் வரைதல், உடற்பயிற்சி செய்தல், சமையல் செய்தல், துணி துவைத்தல் போன்றவற்றில் தங்களை பிஸியாக வைத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில், நடிகை கனிகா தனது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டு வருகிறார்.

ஆம், பயன்படுத்தபடாத பழைய டீ சர்ட்டுகளை வைத்து ஹேண்ட் பேக் தயாரிக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இதுவரை 10 ஹேண்ட் பேக்குகள் தயாரித்துள்ளதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு, நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு தான் பயன்படுத்திய ஹேண்ட்பேக்குகளை கொடுக்க இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் அளவுக்கு அதிகமான ஹேண்ட்பேக்குகளை தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஊடரங்கு உத்தரவை மீறி வெளியில் சென்ற நடிகையை கடித்த வைரஸ் நாய்

0
Aanchal Khurana

Aanchal Khurana: ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சென்ற நடிகை ஆஞ்சல் குரானாவை தெரு நாய்கள் சுற்றி வளைத்து குதறிய சம்பவம் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஆஞ்சல் குரானாவை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியில் சென்ற ஆஞ்சல் குரானாவுக்கு இப்படியொரு சம்பவமா என்று பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 3,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 111 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகை ஆஞ்சல் குரானா தனது நாய்க்குட்டியுடன் ஊரடங்கு உத்தரவு போட்டும் வெளியில் ஜாக்கிங் சென்றுள்ளார்.

மேலும், சிறிது தூரம் சென்ற அவரை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் சுற்றி வளைத்த குரைத்துள்ளன. ஆஞ்சல் குரானாவின் குட்டி நாயை பார்த்தே குறைத்து உள்ளது.

Aanchal Khurana Dog Byte

திடீரென்று அந்த நாய்கள் இதனால் அந்த தெரு நாய்களை விரட்ட முயற்றுள்ளார் நடிகை. இதனால்  அவர் மீது பாய்ந்து அவரது இடது பக்க இடுப்பு, வலது கால் முட்டியில் மற்றும் கழுத்து பகுதியில் கடித்துள்ளது.

இதனால், வலியால் துடித்த அவரை அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரை கடித்த நாய்களில் ஒரு நாய்க்கு ரேபிஸ் வைரஸ் தாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு ரேபிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஜாக்கிங் சென்றேன். அப்போது ஊரடங்கு உத்தரவு என்பதால், சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் என்னை கடித்து விட்டன என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

புலிக்கு கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. எனவே ஊரடங்கை எல்லோரும் பின்பற்றுவதே சிறந்தது.

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து தான் பரவும் என்பதில்லை. மனிதரிடம் இருந்து விலங்குகளுக்கு சென்றும் மீண்டும் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பும் உள்ளது.

3

This Day in History April 07; வரலாற்றில் இன்று ஏப்ரல் 07

0

This Day in History April 07; வரலாற்றில் இன்று ஏப்ரல் 07, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

உருவண்டா இனப்படுகொலை என்பது 1994-ஆம் ஆண்டு உருவண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும் ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.

இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் இந்த நிகழ்வு நடந்தது.

2015-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக்கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு ஆந்திரப்பிரதேச கடத்தல் தடுப்பு படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா? கிரேட் கன்ஜெக்சன் என்றால் என்ன?

Today Birthdays in History

1506-ஆம் ஆண்டு ஏப்ரல் 07ஆம் நாள் இயேசு சபையைத் தோற்றுவித்த எசுப்பானியப் புனிதர் பிரான்சிஸ் சவேரியார் பிறந்த தினம் இன்று

1889ஆம் ஆண்டு கேப்ரியெலா மிஸ்தெரில் பிறந்த தினம் இன்று. இவர் சிலி கவிஞரும் பெண்ணியவாதியும் நோபல் பரிசு வென்றவரும் ஆவார்.

1944ஆம் ஆண்டு மகொடோ கோபயாஷி பிறந்த தினம் இன்று. இவர் ஜப்பானிய இயற்பியலாளர் ஆவார். அதற்கு நோபல் பரிசும் வென்றுள்ளார்.

Today Deaths in History 

கி.பி 30 நாசரேத்தின் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாள் இன்று.

2004ஆம் ஆண்டு கேளுச்சரண மாகோபாத்திரா இறந்த தினம் இன்று. இவர் இந்தியா செவ்வியல் நடனக் கலைஞர் ஆவார்.

2014ஆம் ஆண்டு வி.கே. மூர்த்தி இறந்த தினம் இன்று. இவர் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.

3