World Health Day 2020 Theme; உலக உடல்நல தினம் 2020 தீம். World Health Day is celebrated each year April 07 for create awareness of health and make peoples lifestyle better.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக உடல்நலம் தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற அனைத்து விஷயங்களை விட உடல் நலம் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்துரைப்பதே இதன் முக்கியம்.
World Health Day 2020 Theme
உலக நலம் தினம் 2020ன் நோக்கம் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் ஆதரவு அளிப்பதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு வருடமும் மனிதர்களின் உடல்நலத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
ஆரோக்கியமான உணவு பழக்கமும் முறையான உடற்பயிற்சியும் சரியாக கடைபிடித்தாலே எந்த விட நோயும் வராது.
உலக உடல்நல தினம் மனிதரின் வாழக்கையில் தேவையான மாற்றங்களை கொண்டு வந்து நோயற்ற ஆரோக்கியமான வாழக்கையை உருவாக்குவதே ஆகும்.
தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லீம்களே நாட்டின் பல்வேறு பகுதியில் கொரோனாவை பரப்பிவிட்டனர் என்பது போல் நேரடியாக முஸ்லீம் மதத்தை குறிப்பிட்டது மத்திய அரசு.
இதன் விளைவாக குல்லா அணிந்து வெளியில் நடமாடுபவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி வருகிறது.
இரண்டு முஸ்லீம்கள் தப்லீக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், கொரோனாவை பரப்ப வந்தவர்கள் என நினைத்தும் வட இந்திய பொதுமக்கள் அவர்களை தாக்கியுள்ளனர்.
நீண்ட நேரம் கை கூப்பி எங்களை விட்டுவிடுங்கள் எனக் கூறும் அந்த இஸ்லாமியர்கள் பெரிய கம்பை கொண்டு மிரட்டுகின்றானர்.
அதுவரை உள்ள வீடியோ மட்டுமே வெளியாகியுள்ளது. அதன்பிறகு அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் என வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று யோசிக்காமல் யார் மீது பழி போடலாம் என நினைக்கும் அரசின் போக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹர்பஜன் சிங் தனது டிவிட்டரில் முட்டாள் தனத்திற்கும் எப்படி மருந்து கண்டுபிடிக்க போகிறோம் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 24 நாடுகளுக்கு மேல் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.
பல்லாயிரம் மக்களைக் கொன்று பல லட்சம் மக்களைப் பாதித்து இந்த வைரஸை பல நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளார். இதனால் மக்கள் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக வீட்டிலிருந்தபடியே கைதட்டி ஆதரிக்கும்படி சொன்னார்.
மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து ஊர்வலமாக வெளியில் வந்து சமூக விலகலை கடைபிடிக்காமல் பிரதமர் மோடியின் வார்த்தையை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மக்கள் ஊரடங்கை உதாசீனம் படுத்தினார்கள்.
நேற்று முன்தினம் அதாவது மார்ச் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து வைத்து மெழுகுவர்த்தி, தீப விளக்கு மற்றும் டார்ச் லைட்டுகளை எரிய விட பிரதமர் மோடி கூறினார்.
ஆனால் அவரது கட்சியினரும் தவறாக புரிந்து கொண்டு ஊர்வலமாகவும் பட்டாசு வெடித்தும் ஏதோ தீபாவளியைக் கொண்டாடுவது போல கொண்டாடினார்கள்.
வைரஸை விளக்கு வெளிச்சத்தில் இறந்துவிடுவதாக நினைத்துக்கொண்டு ஊர் முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள்.
இதனால் பல இடங்களில் தீப்பற்றிக் கொண்டதை நாம் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் தீயணைப்பு துறைக்கு இதுபோன்ற சம்பவங்கள் சந்திக்க நேரிட்டது.
இதனால் சமூக விலகலும் கைவிடப்பட்டது. 144 தடை உத்தரவை மறந்து மக்கள் வெளியில் ஊர்வலமாக சென்றார்கள்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
வைஷாலி நகர் என்ற ஏரியாவில் மாடியில் பட்டாசு வெடிக்கும் போது தீப்பற்றிக் கொண்டது.
ஆனால் உயிர்சேதம் இல்லை என்றாலும் தீயணைப்புத்துறை வந்து தீயை அணைக்கும் அளவிற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இந்த வீடியோவை ஹர்பஜன்சிங் பகிர்ந்து காட்டமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
We Will find a cure for corona but how r we gonna find a cure for stupidity 😡😡 https://t.co/sZRQC3gY3Z
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 6, 2020
நாம் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கலாம் இதுபோன்ற முட்டாள் தனத்துக்கு எப்படி மருந்து கண்டுபிடிக்க போகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
Panchayat Review; An Exploration of Rural Area by A Metropolitan Guy, Panchayat web series review, TVF Panchayat Review.
Panchayat Series Created by The Viral Fever. Jithendra Kumar, Ragubhir Yadhav and Neena Gupta acted in lead role.
Abhishek Tripathi (Jithendra Kumar) who lives in a metropolitan city got a Panchayat Secretary job in village of Uttar Pradesh. Abhishek never experienced the life of rural area.
The entire story is about How Abhishek experiences the village life and face the village peoples. How hard it would be for a guy who is going to live his life at one place that he never experienced before.
The creators clearly portrayed the way rural peoples behave like superstition, creating rift or chaos for small things, the way they celebrate a function, at some point the unity between them, not understanding the govt schemes, Patriarchy etc
If you already saw any of the Tvf series you may know that they gave some importance for Humor and emotional moments. Here panchayat most of the scenes made in comedy manner and bit emotional.
Those who already watched previous TVF creations knows how engaging and how good their writing would be. They didn’t give much importance for love in this series if they did it might be too interesting.
Here Panchayat writing is somewhat good and the performance of the cast also good. The engagement of entire series Isn’t as good as I expected.
The Creators clearly told what they tried to do. You don’t become a product of your circumstances. You need to change your circumstances to your product that’s what Protagonist Did in this series.
In Rural areas Patriarchy isn’t a new thing. Husbands let their wives to stand election and make them win but never let them to go out do their job instead husbands took the charge keep their wives at home as usual.
It ensures that they never let womens voice to reach all over the society. They are using them the way they want. Like this bunch of other stuffs also talked in this series.
It would be great entertainment if you give a try.
இன்று உற்சாகத்துடன் இருக்க கூடிய நாளாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். பணியிடத்தில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.
இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. பணியிடத்தில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பணியில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
இன்று பல தடைகள் வந்து சேரும் நாளாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. உறவினர்களிடம் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.
இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்க போகிறது. பண வரவு தாராளமாக இருக்கும் நாளாகும். குடும்பத்தில் இன்பமான சூழல் நிலவும். மொத்ததில் இன்பமான நாளாக இருக்கும்.
இன்று மன அமைதி இழந்து காணப்படும். எதையும் எண்ணி குழம்ப வேண்டாம். தியான பயிற்சிகளை மேற்க் கொள்ளுங்கள். மன அமைதி பெற இறைவழிபாட்டில் கவனத்தை செலுத்த வேண்டிய நாளாக உள்ளது.
இன்று சற்று மந்தமான சூழல் நிலவுகின்ற நாளாக இருக்கும். பணியில் ஏமாற்றங்கள் வர வாய்ப்புண்டு. துணையுடன் அமைதியான அணுகுமுறை இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது.
இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்க போகிறது. உங்களின் புதிதான முயற்சிகளை தாராளமாக எடுக்கலாம். பணியில் பாராட்டுகள் வந்து சேரும் நாளாக இருக்கும். தங்களின் நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்க போகும் நாளாக இருக்கும்.
இன்று அனைத்து காரியங்களிலும் எளிதாக முடிப்பீர்கள். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.
மன உளைச்சல் காணப்படும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கவனமாக செயல்படவேண்டிய நாள். புதிதான எந்த காரியங்களிலும் துவங்க வேண்டாம்.
இன்று தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். மகிழ்ச்சிகரமான நாளாக இருக்க போகிறது. அதிக தன லாபம் கிடைக்கும் நாள். கணவன் மனைவியிடையே காதல் மேம்படும் நாளாக இருக்கும்.
7/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு நாங்கள் கோபத்தில் இருக்கிறோம் இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம் என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த பதிவில் அவர் கூறியதாவது
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு
மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
23 மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் இந்திய தொழிலாளர்களின் உழைப்பு கொண்டாடாமல் போவது போல அவர்களின் வாழ்வாதார இறப்பும் கண்டுகொள்ளப்படாமல் சென்று விடக்கூடாது என்பதே வலியுறுத்துவதற்காக தான்.
நான் கடிதம் எழுதியதற்கு அடுத்த நாள் மக்களிடம் “லாக்டவுன்” என்கின்ற மிகக் கடுமையான ஒரு புதிய அறிவிப்பு செய்யப்பட்டது.
லாக்டவுன் என்றால் என்ன என்று புரிவதற்கான அவகாசம் கூட கொடுக்கப்படாமல், “டீமானிடைசேசன்” போன்றே இந்த புதிய அறிவிப்பையும் நாடு கேள்விப்பட்டது.
அந்த அறிவிப்பைக் கேட்ட பிறகு ஒரு நிமிடம் திகைப்பிற்குள்ளானாலும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்கின்ற முறையில் நீங்கள் சொல்வது சரியானதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் உங்களை நம்பலாம் என்கின்ற முடிவுக்கு வந்தேன்.
டீமானிடைசேசன் போதும் கூட நான் உங்களை நம்பலாம் என்று தான் முடிவு எடுத்தேன். ஆனால் காலம் எனது முடிவை தவறு என்று உணர்த்தியது.
உங்களது முடிவும் தவறு என்றே காலம் கட்டியம் கட்டி சொன்னது.
முதலாவதாக இந்தப் பெரும் தேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் நீங்கள்தான் என்று உங்களிடம் நான் உறுதி அளிக்கின்றேன். உங்கள் நானாகிய, நானும் பேரிடர் காலத்தில் உங்கள் வழிகாட்டுதலின் படி செல்வதற்கு தயாராக உள்ளேன்.
இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு அமைந்தது போல ஒரு பெரும் கூட்டம் வேறெந்த நாட்டின் தலைவருக்கும் அமையவில்லை.
நீங்கள் சொன்னாலே அக்கூட்டம் கேட்கின்றது
இன்றைய சூழலில் இந்த தேசமே நம்பிக்கையுடன் எழுந்து நின்று பிரதமர் அலுவலகம் சொல்வதைக் கேட்பதற்கு தயாராக உள்ளது.
இந்த நாட்டிற்காக தன்னலமின்றி சேவை செய்து கொண்டிருக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நாம் நமது நன்றியினை கைதட்டல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன உடன் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து கொண்டோர் கூட கைதட்டி உற்சாகம் ஊட்டினார் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
உங்களுடைய ஆணைக்கும் விருப்பத்திற்கு இணங்கி நடக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை, உங்களுக்கு அடி பணிகின்றோம் எனத் தாங்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.
என் மக்களின் தலைவனாக உங்களைக் கேள்வி கேட்பது எனது ஜனநாயக கடமை ஆகும். எனவே எனது கேள்விகளில் நெறிமுறைகள் ஏதும் இல்லாமல் இருப்பதாக நீங்கள் கருதினால் தயைகூர்ந்து மன்னிப்பீராக…
நான் மிகவும் அச்சப்படும் ஒரு விஷயம் என்னவெனில் டீமானிடைசேசன் நேரத்தில் நடந்தது போன்ற ஒரு பெரும் தவறை இம்முறை அதைவிட மிகப் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான்.
டீமானிடைசேசன் ஏழை, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பையும் வாழ்வாதாரத்தையும் அடித்து பிடுங்கியது. ஆனால் சரியாக திட்டமிடப்படாத இந்த லாக்டவுன் நம் அனைவரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் ஆபத்தை நோக்கி செல்கிறது.
ஏழை மக்களுக்கு உங்களைத் தவிர கேட்பதற்கு வேறு யாரும் இல்லை ஐயா.
ஒருபுறம் நீங்கள் செல்வந்தர்களை குடும்பத்தினருடன் இரவுநேர கேளிக்கைகளை காண அழைக்கின்றார்கள். மறுபுறம் ஏழைகளை அவமானமாக உணரும் ஒரு சூழலில் தள்ளுகிறீர்கள். உங்களுடைய உலகம் எண்ணெய் விளக்குகளை தங்கள் பால் கனிகளில் ஏந்திக் கொண்டு இருக்கின்ற பொழுது, ஏழைகள் தங்கள் வீட்டில் உணவு செய்வதுகூட எண்ணெய் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இறுதியாக நடந்த மக்களுடனான உங்கள் இரண்டு உரையாடல்களும் மக்களை அமைதிப் படுத்தும் நோக்கத்தில் அமைந்தது. அது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று கூட. ஆனால் அமைதியாக இருப்பதை விட மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற மனநிலை உத்திகள் வளர்ந்த நாடுகளில் வாழும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பால்கனியில் வந்து நின்று கைதட்டி தங்களுக்கு இருக்கும் கவலையை மறப்பதற்கு வேண்டுமானால் பயன்படும். ஆனால் தாங்கள் வசிப்பதற்கு ஒரு சிறு ஓலைக் குடிசை கூட இல்லாத ஏழை எந்த பால்கனியில் வந்து கைதட்டி விளக்கேற்ற முடியும்.
தனது உழைப்பினாலும் வியர்வையாலும் இரத்தத்தாலும் இந்த நாட்டையும் நாட்டு மக்கள் அனைவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக பெரும் அடித்தளமாக இருக்கும் அடித்தட்டு மக்களை ஒதுக்கி வைத்து வெறும் பால்கனி வாழ் மக்களின் பால்கனி அரசாக தாங்கள் தங்கள் அரசை நிர்வகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தினசரி செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வேண்டுமாயின் தினசரி கூலிகள் குறித்து செய்திகள் வராமல் இருக்கலாம். ஆனால் நம் அனைவரின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களின் பங்கு அளப்பரியது. இந்த நாட்டின் மிகப்பெரிய பெரும்பான்மையினர் அவர்கள்தான் இந்த நாட்டில் மிகப் பெரும் பங்கும் அவர்களுடைய தான்.
அடித்தளத்தை அசைத்துப்பார்த்தால் மேல்தட்டு சிதறிவிடும் என்பது தான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. அறிவியலும் அதை ஒத்துக் கொள்ளும்.
மேல்தட்டில் இருப்பவர்கள் அடித்தட்டில் இருப்பவர்கள் மீது திணித்த முதல் தொற்று நோயும் நெருக்கடியும் இதுதான்.
அய்யா அதிலும் மிக முக்கியமாக தாங்கள் அடித்தட்டு மக்களை காப்பாற்றுவதே தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துவது போலவே இருக்கின்றது.
கோடிக்கணக்கான தினக் கூலிகள், வீட்டுவேலை செய்பவர்கள், டாக்ஸி டிரைவர்கள், மிதிவண்டி ஓட்டுனர்கள், சாலையோர சிறு கடை வைத்திருப்பவர்கள் என அனைவரும் ஏதேனும் ஒரு சிறு வெளிச்சமாவது தங்கள் வாழ்வில் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் மேற்தட்டு, நடுத்தட்டு மக்களின் கோட்டைகளை காப்பாற்றுவதை மட்டும் நமது குறிக்கோளை வைத்திருக்கின்றோம்.
நடுத்தர மக்களையோ அல்லது மேல்தட்டு மக்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
நான் உங்களைக் கேட்டுக் கொள்வது எல்லாம் சமூகத்தில் எவரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவருக்கும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான்.
என்னை பொறுத்தவரை எந்த ஒரு மனிதனும் பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்பது தான் அதை தான் நீங்கள் செய்துவிட வேண்டும் என நான் உங்களிடம் பரிந்துரை செய்கின்றேன்.
கோவிட் 19 தொடர்ந்து பல பேரை தொற்றி பரவும் என்றாலும் நாம் பசி சோர்வு இறப்பு எனும் பெரும் பிணிகளை பெற்றெடுக்கும் கருவறையை உருவாக்கிக் கொண்டிருக் கின்றோம்.
பசி, சோர்வு, இழப்பு Hunger(H), Exhaustion (E), Deprivation(D) என்பதை சுருக்கி HED’20 எனும் பிணி இன்று பார்ப்பதற்கு சிறியதாக தெரிந்தாலும் கோவிட் 19 விட மிகக் கொடிய உயிர்க்கொல்லி ஆக இருக்கும்.
கோவிட் 19 நம்மிடமிருந்து மறைந்த பின்னரும் இந்த HeD’20 என்னும் பிணி நம்மிடம் இருக்கும் சரிவுகளை சரி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்று புரிந்து கொள்வதை விட்டு, தாங்கள் எப்போதும் கையில் எடுக்கும் தேர்தல் நேரத்து பிரச்சார யுக்திகளிலேயே இருக்க விரும்புவதை நாம் காண்கின்றோம்.
பொறுப்புள்ள நடவடிக்கைகளை மக்கள் கையிலும் வெளிப்படைத் தன்மையை மாநில அரசுகளின் கைகளிலும் கொடுத்துவிட்டு நீங்கள் உங்களுக்கு வசதியான ஒரு நிலையிலிருந்து கொள்கிறீர்கள்.
இந்திய நாட்டிற்காக அல்லும் பகலும் அயராமல் தங்கள் நேரத்தையும் அறிவையும் பயன்படுத்தும் பல்வேறு அறிவாளிகளுக்கு தாங்கள் இதையே உணர்த்துகிறீர்கள்.
அறிவாளிகள் என்று சொல்லியது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஏனெனில் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் அது பிடிக்காத வார்த்தை என்பது எனக்கு தெரியும். ஆனால் நாம் பெரியாரையும் காந்தியையும் பின் தொடர்பவன் அவர்கள் அறிவாளிகள் என்பதும் எனக்கு தெரியும்.
நீதியையும் சமநிலையையும் வளர்ச்சியையும் நோக்கி நம் அனைவரையும் வழிகாட்டுவது அறிவு மட்டுமே
பிரச்சார யுக்திகளின் மூலமாக மக்களை உற்சாகத்தில் மட்டுமே வைத்திருக்க முயலும் உங்கள் நிறுவனத்தின் கவனமும் நோக்கமும் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் புறம் தள்ளுகிறது.
இது போன்ற ஒரு தொற்று நோய் பரவி இருக்கின்ற காலத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை முதன்மையாக இருக்க வேண்டிய ஒரு நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு மத ரீதியான கூட்டங்களை தடுத்திருக்க வேண்டிய உங்கள் அரசு செய்யவில்லை. இதுபோன்ற இடங்களை சமூக தொட்டிகளை அதிகம் பரவ செய்தது இதுபோன்ற அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட உயிர் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது.
உலக சுகாதார அமைப்பிற்கு சீன அரசு, டிசம்பர் 8-ம் தேதி தான் கரோனா பாதித்த முதல் நோயாளி குறித்த தகவலை தெரிவித்து, கரரோனாவின் தீவிரத்தையும், வீரியத்தையும் மக்களும் அரசாங்கங்களும் புரிந்து கொள்ள ஓரளவு காலம் தேவைப்பட்டது என்பதை கருத்தில் கொண்டாலும், பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த உலகம் இதுவரை கண்டிராத அளவு சேதம் விளைவிக்க போகும் அபாயத்தை உணர்ந்து.
ஜனவரி 30, இந்தியா தனது முதல் கரோனா நோயாளி குறித்த விவரங்களை வெளியிட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதை கண்கூடாக பார்த்த பின்பும் நாம் பாடம் கற்கவில்லை. திடீரென அறியாமை உறக்கத்திலிருந்து கண்விழித்தபோது நிலைமையின் தீவிரம் உணர்ந்து 4 மணிநேர கால அவகாசம் கொடுத்தது.
1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தை முடக்கினோம்.
நான்கு மாதங்கள் யோசிக்கவும் செயல்படவும் இருந்தபோதிலும், அந்த நான்கு மாதங்கள் கடந்து திடீரென தீவிரம் புரிந்து 1.4 பில்லியன் மக்களுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே கால அவகாசம் கொடுத்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
பிரச்சனைகள் தீவிரம் அடையும் முன்பே தீர்வுகளை தயார்நிலையில் வைப்பவர்கள் தான் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் மன்னிக்கவும், ஆனால் இந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது.
மக்களிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான எதிர்மறை விமர்சனங்களை கையாள்வதிலும் ,அத்தகைய விமர்சனங்களுக்கு பதில் விமர்சனம் அளிப்பதிலும் உங்கள் அரசும், அரசு அதிகாரிகளும் செலவிட்ட நேரத்தையும், பலத்தையும் சற்று திசைதிருப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் செலவழித்து இருக்கலாம்.
தேசத்தின் நலனை முன்னிறுத்தி சில நல் உள்ளங்களின் தன்னலமற்ற குரல்களை தேடி கண்டுபிடித்து அவற்றை செவிமடுக்காமல் அக்குரல்களை மாற்று குரல்களாலும் நையாண்டிகளாலும் புதைத்து இக்குறளுக்கு சொந்தமானவர்களை தேசத்திற்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தும் பணியில் அயராது ஈடுபட்டுவருகின்றனர் உங்கள் சேனை படையினர்.
தைரியம் இருந்தால் என்னை இந்த தேசத்திற்கு எதிரானவன் என்று வேண்டுமானால் அழைத்துப் பாருங்கள்.
இவ்வளவு பெரிய தீவிரமான ஒரு தேசிய இக்கட்டிற்கு சரியான முறையில் தயாராகவில்லை என்று மக்களை குறை சொல்ல முடியாது.
ஆனால் உங்களை குறை சொல்லலாம், சொல்லுவோம்.
மக்களின் அடிப்படை வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்காக தானே இந்த அரசும் அரசு அதிகாரிகளும்.
இதுபோன்ற பேரிடர்கள் இரண்டு காரணங்களுக்காக வரலாற்றின் பக்கங்களில் பதிவிடப்படுகின்றன.
ஒன்று, இதன் விளைவால் ஏற்படும் உயிர் சேதமும் நோயின் வழிகளும். இரண்டாவது, இதன் தாக்கம் ஏற்படுத்தும் சமூக கலாச்சார மாற்றங்கள் மக்களுக்கு கற்றுதரும் பாடம் நீண்ட காலத்திற்கு மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த கொரோனா நம்மை தீண்டியது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
இதுவரை இதுபோன்ற இயற்கை நம்மிடம் சீரியது இல்லை
உண்மையான அக்கறையுடன் இருக்கும் குரல்களை கேட்க வேண்டிய காலமிது அனைத்து பிரிவினை கோடுகளையும் அளித்து சங்கநாதமிட்டு, அனைவரையும் உங்கள் பக்கத்தில் வைத்திருந்து உதவிகளை பெற வேண்டிய நேரம் இது.
மக்கள் பலமே நாட்டின் பலம். எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு அவற்றை ஒன்றாகக் கடந்து உள்ளோம், இனியும் கடப்போம் ஒன்றாக, சிதறி பிரிந்தல்ல..
இப்பேரிடர் நம் அனைவரையும் இணைக்க வேண்டுமே தவிர எந்தப் பக்கத்தில் யாரும் பிரிந்து நிற்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான நேரமல்ல.
நாங்கள் கடும் கோபத்தில் இருக்கின்றோம். இருந்தாலும், உங்களுடன் இருக்கின்றோம்.
Kajal Aggarwal; ஹோட்டலில் சாப்பிடுங்க, செப்பல், காய்கறி பழம் வாங்குங்க: காஜல் அகர்வால் புதிய யோசனை! கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹோட்டலில் சாப்பிடுங்க, செப்பல், காய்கறி பழம் வாங்குங்க என்று நடிகை காஜல் அகர்வால் புதிதாக யோசனை கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் (COVID19) பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதும் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லவொரு யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 111 பேர் லியாகியுள்ளனர். மேலும், 3,851 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? இல்லை வேறு தீர்வு ஏதும் கிடைக்குமா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து காஜல் அகர்வால் புதிதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நம் விடுமுறையை உள்நாட்டில் களிக்கலாம். உள்ளூர் ஹோட்டல்களிலேயே சாப்பிடலாம்.
நமது நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கலாம். அதோடு, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடை மற்றும் காலணிகளை வாங்கி அணியலாம்.
அப்படி செய்வதன் மூலம் நம் நாட்டு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் நாடு மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bindhu Madhavi; இப்போதுமே சிங்கிள்தான்: காதலா எனக்கா? பிந்து மாதவி கூல் பதில்! கொரோனா ஊரடங்கு உத்தரவில் வீட்டிலேயே இருக்கும் நடிகை பிந்து மாதவி தனது காதல் அனுபவம் பற்றி ரசிகர்களிடையே உரையாடியுள்ளார்.
நடிகை பிந்து மாதவி தனது காதல் அனுபவம் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
கழுகு படத்தின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை பிந்து மாதவி. ஆனால், பொக்கிஷம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கழுகு படத்தில் உள்ள காதல் இன்றும் ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கழுகு படத்தைத் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பதோடு, மாடலிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். தற்போது, மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், சினிமாவில் அறிமுகமானது என்னவோ Avakai Biryani என்ற தெலுங்கு படம்தான். ஆனால், அந்த படத்தைத் தவிர ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துள்ளார். ஆனால், அதை தமிழ் படங்களில் அதிகளவில் நடித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த பிந்து மாதவிக்கு தமிழ் சினிமா நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவில் வீட்டிலேயே இருக்கும் பிந்து மாதவி ரசிகர்களிடையே உரையாடினார்.
அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். அதில், காதலில் விழுந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு எந்த கோபமும் இல்லாமல் கூலாக பதிலளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், ஒருவர் மீது எனக்கு கிரஷ் இருந்தது. ஆனால், அதை யாரிடமும் சொன்னது கிடையாது. இதற்கு காதல் என்று அர்த்தம் இல்லை.
நான் காதலிக்கிறேன் என்றும் கூறிவிட முடியாது. நான் யாரிடமும் காதலிக்கிறேன் என்று சொன்னது கூட கிடையாது.
அதே போல் திருமண கமிட்மெண்டுக்கும் ஆளாகவில்லை. இப்போது வரை சிங்கிளாகவே இருக்கிறேன் என்று பெருமையாக கூறியுள்ளார்.
தற்போது 33 வயதாகும் பிந்து மாதவி திருமணம் குறித்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Bullet prakash : கன்னட நடிகர் புல்லட் பிரகாஷ் இன்று கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் மருத்துவமனையில் காலமானார்.
1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி பெங்களூரில் பிறந்தவர் பிரகாஷ்.
இவர் ஒரு கன்னட நடிகர் 325 படங்கள் மேல் நடித்துள்ளார் கர்நாடகாவில் மிகவும் பிரபலமான காமெடி மற்றும் குணசித்திர நடிகரும் ஆவார்
ராயல் என்ஃபீல்டு புல்லடில் அதிகம் பயணம் செய்வதால் இவரை புல்லட் பிரகாஷ் என்று அழைத்து வந்தனர்.
இவர் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டு அந்த கட்சியின் நற்பணிகளில் பணியாற்றினார்.
மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
கன்னட நடிகர்கள் இவருக்கு சமூகவலைதளத்தில் அஞ்சலி செலுத்தும் விதமாக பதிவிட்டு வருகிறார்கள்
நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் தனது தேமுதிக தலைமை அலுவலகத்தையும் மற்றும் அவருடைய கல்லூரியும் கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200 நாட்களுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.
இதனால் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உயிரிழப்பில் அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த அந்தந்த அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவில் தற்போது 21 நாள் பிரதமர் அறிவித்த படி ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் கமலஹாசன் மற்றும் பார்த்திபன் போன்றவர்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகத்தை கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
தற்போது தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தாமாக முன்வந்து தனது சமூக வலைதளத்தில் தேமுதிக கட்சி அலுவலகத்தையும் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரியையும் கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
தேமுதிகவின் லெட்டர் பேட் மூலம் தனது கையொப்பத்துடன் பகிர்ந்துள்ளார். இதை பலரும் பகிர்ந்தும் பாராட்டியும் வருகிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க , காஞ்சிபுரம் மாவட்டம் – ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, சென்னை – தேமுதிக தலைமை கழகத்தை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.@CMOTamilNadu | #CODVID19pic.twitter.com/dif9N1q7Fa
அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள விஜயகாந்த் தனது உடல்நிலை சரியில்லாத போதிலும் மக்களுக்கு நல்லது செய்யும் என்னத்தை மறக்கவில்லை.
மக்களுக்காக வாழும் தலைவர்களில் இவரும் ஒருவர் என்றே கூறலாம்