இறந்த பின் ஒரு ஊருக்கே கொரோனா தொற்றை பரப்பிய தமிழர். ராமநாதபுரம் கீழக்கரை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.
உடல் நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சென்றத ஒருவர் உயிரிழந்தார்.
அவர் எதனால் உயிரிழந்தார் என தெரிந்து கொள்ளும் முன்பே உறவினர்களிடம் பிரேதத்தை கொடுத்து அனுப்பிவிட்டனர்.
அவருக்கு செய்யப்பட்ட கொரோனாவைரஸ் பரிசோதனை முடிவுகள் வரும் முன் மருத்துவமனை அதிகாரிகள் உறவினர்களிடம் பிரேதத்தை ஒப்படைத்துவிட்டனர்.
உறவினர்கள் சென்னையில் இருந்து நேராக கீழக்கரைக்கு உடலை கொண்டு வந்து இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்து உள்ளனர்.
இதில் கீழக்கரையைச் சேர்ந்த அதிகமான மக்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த இறுதி சடங்கு முடிந்த சில மணி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என மருத்துவமனை கூறியுள்ளது.
தற்பொழுது கீழக்கரை பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று இருக்கும் நேரத்தில் எப்படி அலட்சியமாக மருத்துவமனை ஊழியர்கள் நடந்து கொண்டனர் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Alya Manasa Video அகோர பசி: ஒரு குண்டா சோற்றை லபக் என சாப்பிட்ட ஆலியா மானசா. தான் சாப்பிடும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மானசா.
Alya Manasa video
ஆலயா மானசா சின்னத்திரை சீரியலில் பிரபலம். ராஜா ராணி ஜோடி நிஜ வாழ்விலும் ஜோடியானது. ஒரு குழைந்தையும் பிறந்துவிட்டது.
தற்பொழுது ஆல்யா தான் சாப்பிடும் பழைய வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
தலை வாழை இலையில் வடை பாயாசத்துடன் சாப்பிடுகிறார். ஒரு குண்டா சோற்றை வேக வேக சாப்பிடுகிறார். ஆனால் சில நொடிகள் வீடியோவே உள்ளது.
இதை அவருடன் பணிபுரிந்த சீரியல் நடிகை ஒருவர் ஆல்யா சாப்பிடுவதில் படு சுட்டி. பசி என்றால் முரட்டு தனமாக சாப்பிடுவார் எனக் கூறியுள்ளார்.
Vidya Pradeep Video: பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் பிறந்த நாள் இன்று. அவருடைய பிறந்த நாளில் அவரின் பழைய வீடியோக்கள் வைரலாகி வருகிறது. வீடியோ லீக்.
என்ன தான் நடிப்பு என்றாலும் ஒரு தமிழ் படத்தில் இப்படியா பீச்சில் நடந்து கொள்வது? என ரசிகர்கள் சற்று அப்செட் ஆகி உள்ளனர்.
நடிகை வித்யா பிரதீப் களரி படத்தில் நடித்தபோது கிருஷ்ணாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து விட்டார்.
கிருஷ்ணாவின் கைகள் எல்லை மீறி தொடுவது கூட தெரியாமல் நடிப்பில் மும்முரமாக இருந்ததுவிட்டார். தற்பொழுது அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
வித்யா பிரதீப் நாயகி சீரியலின் கதாநாயகி. மேலும் அவர் ஒரு மருத்துவரும் கூட. இப்படி பொதுநல சேவை மட்டும் செய்தால் மட்டும் போதுமா?
தொடர்ந்து குடும்ப பாங்கான கேரக்டரில் நடிப்பதே அவருடைய எதிர்காலத்திற்கு சிறந்தது. இதையே அவருடைய ரசிகர்களும் விரும்பு கின்றனர்.
Kanika Kapoor; 5 முறை கொரோனா உறுதியாகியும், கனிகா எப்படி குணமானார்? கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிகா கபூர் குணமடைந்த நிலையில் மருத்துவனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் 9 ஆம் தேதி பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் லண்டனிலிருந்து மும்பை திரும்பினார். அங்கிருந்து லக்னோ சென்ற அவர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதே நிகழ்ச்சியில்தான் அரசியல் பிரலங்கள், நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், அவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், விருந்து நிகழ்ச்சியில், கனிகா கபூருடன் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவர் உடல்நிலை சமநிலையில் இருப்பதாகவும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனிகா கபூருக்கு 6ஆவது முறையாகவும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து கனிகா கபூர் முற்றிலும் குணமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். மேலும், அவரை வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் சிறப்புகள், பெரிய பிராட்டி திருநட்சத்திர வைபவம், கணவன் மனைவி சண்டைகளை நீக்கும் சேர்த்தி சேவை தரிசனம்.
வைணவத்தில் திருமாலிற்கு பல்வேறு மாதங்களில் விழாக்களும் பிரம்மோற்சவமும் கொண்டாடப்படுகிறது.
பிரம்மோற்சவம் என்பது ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவாகும். இது பிரம்ம தேவரால் புவியில் திருமாலிற்கு எடுக்கப்பட்ட விழா ஆதலால் “பிரம்மோற்சவம்” எனப்படுகிறது.
இதில் பங்குனி மாதம் பங்குனி உத்திர பிரமோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் பங்குனி பிரம்மோற்சவம் தான் முதன் முதலில் பிரம்ம தேவரால் ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்பட்ட விழா என்று ஸ்ரீரங்கம் தலபுராணம் கூறுகிறது.
எனவே இதை “ஆதி பிரம்மோற்சவம்” என்று கூறுகின்றனர்.
பங்குனி உத்திர பிரம்மோற்சவம்
திருச்சி காவிரி கரையில் அமைந்துள்ள பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவமானது வெகும் விமர்சியாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இதில் தினமும் நம்பெருமாள் பல்வேறு சேவைகளில் திருச்சுற்று மற்றும் மாட வீதிகளில் உலா வருவார்.
முக்கிய சேவையாக நம்பெருமாள் சோழர் திருமகளான உறையூர் கமலவல்லி நாச்சியாரை காணச் செல்வார்.
அன்று நம்பெருமாள் மணமகன் போன்று அலங்காரம் செய்து கொண்டு உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சிக்கு தான் அணிந்த மாலைகள், புத்தாடை, சந்தனம், திலகம் ஆகியவற்றை தருவார்.
கமலவல்லி சூடய மாலையை நம்பெருமாள் சூடிக்கொண்டு இருவரும் தம்பதி சமேதராக பக்தர்ளுக்கு காட்சி தருவார்கள்.
பெரிய பிராட்டி திருநட்சத்திர வைபவம்
ஸ்ரீரங்கத்தின் ராணி ரங்கநாதரின் மனைவியான பெரிய பிராட்டி என்று அழைக்கப்படும் ரங்க நாயகி தாயார் சமுத்திர ராஜனுக்கு காவிரிதாய்க்கும் மகளாக பங்குனி உத்திரத்தில் அவதாரம் செய்தார்.
எனவே இந்த பங்குனி உத்திரமானது இன்னும் சிறப்படைகிறது. ஸ்ரீரங்கத்தில் தனது சன்னதி மற்றும் பிரகாத்தை விட்டு ரங்கநாயகி தாயார் வெளியே சென்று உற்சவம் காணமாட்டார்.
அனைவருக்கும் தாயாக விளங்கும் பார்கவி ஆவாள். பங்குனி உத்திர அவதார திருநாளில் அன்னையை தரிசிப்பது மிக சிறந்த பலன்கள் தரும்.
நம்பெருமாள் பெரிய பிராட்டி சேர்த்தி சேவை
உறையூரில் கமலவல்லியை காண சென்றதால் பெரிய பிராட்டியான ரங்கநாயகிக்கு கோபம் வந்து நம்பெருமாளை தன் சன்னதிக்குள் அனுமதிக்காமல் கதவை சாற்றி கொள்ளும் ஊடல் சேவையானது ஒன்பதாம் நாள் நடைபெறும்.
அதன் பின் ஊடல் நீங்கி பங்குனி உத்திர தினத்தில் நம்பெருமாளும் பெரிய பிராட்டியும் ஒன்றிணைந்து தம்பதி சமேதாராக சேர்த்தி சேவையில் காட்சி அளிக்கிறார்கள். இந்த நிகழ்வு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாகும்.
கணவன் மனைவி பிரச்சனைகள் நீக்கும் சேர்த்தி சேவை
கணவன் மனைவியான பெருமாளும் தாயாருக்குமே பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சமாதானம் ஆகிய பின் சேர்த்தி சேவை காண்கின்றனர்.
சாதாரண மனிதர்களான நம் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனையால் பிரிந்து இருந்தால் அவர்கள் சென்று இந்த சேர்த்தி சேவையை கண்டு வேண்டினால் பிரச்சனைகள் நீங்கி மீண்டும் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை கலந்த உண்மையாகும்.
2020-இல் சேர்த்தி சேவை
இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பங்குனி உத்திரத்தில் நம்பெருமாள் மற்றும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெருமாள் கோவிலிலும் தாயாருடன் பெருமாளுக்கு சேர்த்தி சேவை நடைபெறும்.
ஸ்ரீரங்கம் செல்ல இயலவில்லை என்றாலும் அவரவர் ஊரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று சேர்த்தி சேவையை கண்டு பிராத்தனை செய்து கொண்டு குடும்ப பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வோம்.
முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு அரசுடன் இணைந்து உதவிட தன்னார்வத் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200 நாட்களுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.
இதனால் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உயிரிழப்பில் அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த அந்தந்த அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவில் தற்போது 21 நாள் பிரதமர் அறிவித்த படி ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நம் தமிழ்நாட்டு அரசின் சுகாதாரத்துறை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது அதிக மக்களை கொரோனா சோதனை செய்து வருகிறது.
கொரோனா பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகிறது. பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது.
நம்முடைய முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.
சிலர் வைக்கும் கோரிக்கைகளை அப்போது பதிலளித்து அந்த கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார்.
தற்போது அவர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில்
பல்வேறு மத தலைவர்கள் கேட்டுக் கொண்டதின்படி வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்களின் விவரங்கள் அறிந்து,
அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு அரசுடன் சேர்ந்து தன்னார்வ தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்
செர்னோபில் அணு உலையை சுற்றி காட்டுத் தீயால் கதிர்வீச்சு அதிகரிப்பு. உக்ரைன் செர்னோபில் விபத்து, சாதாரன அளவை விட 16 மடங்கு கதிர் வீச்சு அதிகரித்துள்ளதாம்.
உலகத்திலையே மோசமான அணுவுலை விபத்து ஏற்பட்ட இடம் உக்ரைனிலுள்ள செர்னோபில். அதை சுற்றிய தடை செய்யப்பட்ட காட்டு பகுதிகளில் சனிக்கிழமை தீ பிடித்தது.
நேற்று ஞாயிற்று கிழமை தீயின் வேகம் அதிகரித்து செர்னோபில் உலையை சுற்றியுள்ள காட்டில் 20 ஹெக்டர் வரை பரவியது. மாற்றொரு பக்கத்திலும் சிறிய தீ பிடித்துள்ளதாம்.
இதனால் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் சாதாரன அளவை விட 16 மடங்கு அதிகரித்து என சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஏகோர் பிர்ஸோ தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வீரர்கள் காட்டு தீயை அணைக்க ஹெலிகாப்டர் மற்றும் பிற உபகரணங்கள் மூலம் அணைக்க முயல்கின்றனர். ஆனால் தீ கட்டுபாட்டை மீறி சென்று கொண்டிருக்கிறதாம்.
1986ஆம் ஆண்டு செர்னோபில் உலை வெடித்தது. உலகில் அணு உலை வெடித்த விபத்துகளில் இது மோசமான ஒன்று.
இதனுடைய கதிர்வீச்சின் தாக்கம் இன்று வரை கூட இருக்கலாம். அதனால் அணு உலையை சுற்றி 30 கிமீ வரை மக்கள் வசிப்பதற்கு அனுமதி இல்லையாம்.
வீராட் கோலி சமூகவலைதளங்களில் தனக்கு பிடித்த வர்ணனையாளர் யாரென்று கெவின் பீட்டர்சன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்து உள்ளது.
அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து வருகிறது.
இந்த கொரோனா வைரஸை தடுக்க பல நாட்டு அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவின் பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் மக்கள் யாரும் வெளியில் வராமல் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதனால் கிரிக்கெட் வீரர்கள் இந்த 21 நாளை தங்கள் குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
இருந்தும் அவர்கள் பொழுது போகவில்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கும் பல கிரிக்கெட் வீரர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு ரோகித் சர்மா நாங்கள் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
கெவின் பீட்டர்சன் பல கிரிக்கெட் வீரர்களுக்கு சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார். இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும் பதில் அளித்து வருகிறார்கள்.
தற்போது விராட் கோலியிடம் கெவின் பீட்டர்சன் உங்களுக்கு பிடித்த வர்ணனையாளர் யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு வீராட் கோலி தனக்கு பிடித்த வர்ணனையாளர் இங்கிலாந்தின் நாசிர் ஹூசைன் என்றும் பதிலளித்திருந்தார். இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது ரசிகர்களுக்கு.
ஹர்ஷா போக்லே, ரவிசாஸ்திரி போன்றவர்கள் இருந்தும் இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய வர்ணனையாளர் நாசிர் ஹூசைன் சொல்லியது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசிர் ஹுசைன் அடிக்கடி இந்திய வீரர்களை மட்டம் தட்டி பேசும் பழக்கம் கொண்டவர். இதனால் பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
நாசிர் ஹூசைன் தமிழகத்தில் பிறந்தவர். பின்பு இங்கிலாந்தில் குடியேறி இங்கிலாந்து அணிக்காக பல போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jai Birthday; பகவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஜெய் இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகர் ஜெய் இன்று தனது பிறந்தநாளை (Jai Birthday) கொண்டாடுகிறார்.
ஜெய் ஒரு இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இசையமைப்பாளர் தேவா, நடிகர் ஜெயிக்கு மாமா முறை.
தான் யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகர் என்று கூறிக் கொள்கிறார்.
தளபதி விஜய் நடிப்பில் வந்த பகவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அப்போது அவருக்கு 16 வயது. ஆனால், இந்தப் படத்தில் விஜய்யின் சகோதரனாக குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதற்கு காரணமாக, ஜெய், விஜய்யைப் போன்று உருவதோற்றத்தில் இருப்பதால், அவருக்கு சகோதரனாக நடிக்க இயக்குநர் வெங்கடேஷ் ஜெய்யை தேர்வு செய்துள்ளார்.
6 டீன்ஸ் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க இருந்தார். ஆனால், இந்தப் படம் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு அலை, தேவதையை கண்டேன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
இசை மீது இருந்த ஆர்வத்தில், இசையமைப்பாளர் தேவாவின் படங்களில், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் போபோ சஷி ஆகியோருடன் இணைந்து கீபோர்டு வாசிப்பவராக பணியாற்றியுள்ளார்.
ஜெய்யின் நண்பர் யுகேந்திரனின் சிபாரிசின் பேரில் வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான சென்னை 600028 படத்தின் ஆடிஷனுக்கு சென்றார்.
இந்தப் படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 7 பேரில் ஜெய்யும் ஒருவர். அப்படித்தான் இந்தப் படத்தில் கிரிக்கெட் விளையாடும் விளையாட்டு வீரனாக நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ஒவ்வொரு படத்திலும் ஜெய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
நடிகர் ஜெய்க்கு எங்கேயும் எப்போதும் மற்றும் ராஜா ராணி ஆகிய படங்களில் நல்ல வரவேற்பும், சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தது.
அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவை காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் அஞ்சலி, ஜெய் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக செய்தி வெளியானது. இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. அஞ்சலி பிறந்தநாளுக்கு ஜெய் வாழ்த்துவதும், ஜெய் பிறந்தநாளுக்கு காதலனுக்கு வாழ்த்து சொல்வதும் போன்று வாழ்த்துவமாக இவர்களது காதல் கதை ஓடியது.
அதன் பிறகு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில், பிரேக்கிங் நியூஸ், எண்ணி துணிக, பார்ட்டி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே ஜெய் சார்…