Home Blog Page 168

யுவராஜ் மனசு தோனிக்கு இல்லையே..! அள்ளிக்கொடுத்த சிக்சர் மன்னன்

0

கொரோனா வைரஸ் காரணமாக பிரதமர் மோடி அறிவித்த படி பல கிரிக்கெட் வீரர்கள் நிதி அளித்து வருகிறார்கள் தற்போது ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கும் நிதி அளித்துள்ளார்

உலகத்தையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பல லட்சம் மக்களை பாதிப்படையச் செய்கிறது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஸ்தம்பித்துள்ளது. பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பால் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டு இளவரசி (86 வயது) கொரோனா தொற்றால் காலமானார்.

பிரதமர் பிரிட்டன், பிரிட்டன் இளவரசர் போன்றவர்களின் இந்த கொரோனா  விட்டுவைக்கவில்லை.

மோடி  தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உங்களால் முடிந்த நிதியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு இருந்தார்.

அதற்கு டாடா குழுமம் 1500 கோடி ,நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி, சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், பிசிசிஐ 51 லட்சம், ரகானே 10 லட்சம், ரெய்னா 52 லட்சம்
என பலரும் தங்களது நிதியை நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் விளையாட்டு வீரர்களில் வருடத்திற்கு அதிகம் சம்பாதிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் தான் பிரதம மந்திரி நிதிக்குப் பணம் செலுத்தி விட்டேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் எவ்வளவு கொடுத்தேன் என்ற தொகையை அவர் அறிவிக்கவில்லை. ஆனால் வெளி வட்டாரங்களில் 3 கோடி அளவிற்கு கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

கௌதம் கம்பீர் மருத்துவ உபகரணங்கள் வாங்க 50 லட்சம் நிதி அளித்து இருந்தார்.

நேற்று மோடி அறிவித்த படி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கு அனைத்து வைத்து அகல் விளக்கு மற்றும் டார்ச்லைட் ஏற்றும்படி கூறியிருந்தார்.

இதை கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது வீட்டில் மின் விளக்கை அனைத்து அகல் விளக்குகளை ஏற்றினார்கள்.

இந்தியாவின் உலகக்கோப்பை நாயகன் ஆல்ரவுண்டர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது வீட்டில் அகல்விளக்கு ஏற்றி ஏற்றியதும் இல்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பிரதம மந்திரி நிதிக்கு 50 லட்சம் அளித்து விட்டேன் என்றும் பதிவிட்டிருந்தார்.


யுவராஜ் சிங் செய்த இந்த உதவியை  ட்விட்டரில் பலரும் பகிர்ந்து பாராட்டியும் வருகிறார்கள்.

ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க நினைத்த விளம்பரம் மூலமே பலநூறு கோடிகள் சம்பாதித்த தோனி முகத்தை கூட பார்க்க முடியவில்லை.

3

9 PM 9 Minutes: நம்பிக்கை ஒளி போராட்டத்தில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்!

0
9 PM 9 Minutes

9 PM 9 Minutes: விளக்கு ஏற்றிய சினிமா பிரபலங்கள்! கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த நம்பிக்கை போராட்டத்தில் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், சாதாரண ஜனங்கள் வரை அனைவரும் வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த நம்பிக்கை போராட்டத்தில் சினிமா பிரபலங்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

ரஜினிகாந்த், நயன்தாரா, மஞ்சிமா மோகன், நாகர்ஜூன், அமலா, சவுந்தர்யா ரஜினிகாந்த், ஆர்த்தி, பார்த்திபன் ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்து நம்பிக்கை போராட்டம் நடத்தினர்.

உலகத்தையே நடு நடுங்க வைத்தது கொரோனா வைரஸ். இந்தியாவில் மட்டும் 83 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 3219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஒரு புறம் ஏற்பட்டுள்ளது.

ஒரு புறம் இத்தனை நாட்கள் எப்படியோ வீட்டிற்குள்ளேயே இருந்து தாக்குப்பிடித்துவிட்டோம் என்று பெருமைப்படும் நிலையும் வந்துவிட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் வேலை இழந்துள்ளனர்.

அவ்வவ்போது கொரோனா பாப்பு குறித்து, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் (9 Minutes 9 PM) வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்துவிட்டு, மெழுதுவர்த்தி, விளக்கு ஏற்றுதல், செல்போன் டார்ச், டார்ச்லைட் ஒளிரச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாமானிய மக்கள் என்று நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்றி வைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையைப் போன்று, கார்த்திகை தீபத் திருநாள் போன்று தங்களது வீடுகளில் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி பிரபலங்கள் நம்பிக்கை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டு மெழுகுவர்த்தி என்னும் நம்பிக்கையை ஒளியை ஏற்றினார்.

அவரைப் போன்று அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தும் விளக்கு ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து நயன்தாரா தனது வீட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைத்தார். காமெடி நடிகை ஆர்த்தி தனது கணவருடன் இணைந்து குத்து விளக்கு ஏற்றி நம்பிக்கை ஒளியை ஒளிரச் செய்தார்.

மேலும், பின்னணி பாடகி சித்ரா, நடிகை மஞ்சிமா மோகன், பார்த்திபன், வில்லன் நடிகர் ராகுல் தேவ், நாகர்ஜூன், அமலா, பார்வதி நாயர், அமிதாப் பச்சன், அனில் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, சுனில் குரோவர், ஷ்ரேயா கோஷல், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அக்‌ஷய் குமார், வாணி கபூர், நேகா ஷர்மா, இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் விளக்கு ஏற்றி வைத்து 9 மணி 9 நிமிடம் நம்பிக்கை ஒளி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாக #9மணி9நிமிடம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. அதோடு, #9MinutesForIndia, #LightsOfHope, என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது.

3

ஆசிஷ் நெஹ்ரா கருத்து; இந்த இளம் வீரர் தோனியை நியாபக படுத்துகிறார்

0
ஆசிஷ் நெஹ்ரா கருத்து

ஆசிஷ் நெஹ்ரா கருத்து; இந்த இளம் வீரர் தோனியை நியாபக படுத்துகிறார், முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவிற்கு தோனியை நியாபகபடுத்தும் வீரர்.

இந்தியாவின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஆடி வரும் இளம் வீரர் ரிஷப் பண்ட் திறமையையும் தொடக்க கால திணறல்களையும் பார்க்கையில் தோனியை நினைவூட்டுகிறது.

2004ஆம் ஆண்டு தோனி இந்திய அணியில் தேர்வு செய்யும் பொழுது தொடக்க சில போட்டிகளில் ஆட முடியாமல் திணறி வந்தார். பின்னர் அவருடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

அதன் பிறகு ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் தோனியின் முழுமையான திறமை வெளிப்பட்டது. இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அந்த சமயத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் பார்திவ் பட்டேல் இருவரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர்.

இருவரும் நல்ல திறமையான வீரர்கள் ஆனால் தோனி தான் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். இதே நிலையில் தான் இளம் வீரர் ரிஷப் பண்ட் இருக்கிறார்.

ஓரிரு வாய்ப்புகளில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பெறுவார் என்பதை நம்புகிறேன் என்று ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

3

பங்குனி உத்திரம்: இத்தனை கடவுள்களுக்கும் இந்த ஒரு நாளில் நிகழ்ந்த அற்புதம்

1
பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் என்றால் என்ன? பங்குனி உத்திரத்தின் தொன்மை என்ன? கல்யாண வரம் வழங்கும் பங்குனி உத்திர விரதம் எப்படி இருப்பது?

தமிழர் பாரம்பரியத்தில் எண்ணற்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன.

அந்த வரிசையில் தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் கொண்டாடப்படுகின்ற விழாவே பங்குனி உத்திர விழாவாகும்.

பங்குனி உத்திரம்

தமிழ் மாதங்களில் 12-ஆம் மாதம் பங்குனியாகும் 12-ஆம் நட்சத்திரம் உத்திரம் ஆகும். இந்த இரண்டும் சேர்த்து வருகின்ற திருநாளே பங்குனி உத்திரம்.

பன்னிருக்கை வேலவனுக்கு உகந்த நாளாக இந்நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆறுபடை வீடுகளிலும் விழா எடுத்து இந்நாளை கொண்டாடுகின்றனர்.

இந்த பங்குனி உத்தர விழாவானது மிகவும் தொன்மையானது. திருமயிலையில் பூம்பாவையை உயிர்பிக்கும் பதிகத்தில் திருஞானசம்பந்தர் இந்த பங்குனி உத்திர விழாவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்”

என்ற பதிகத்தின் மூலம் இந்த விழாவின் தொன்மையை அறிய முடியும்.

பங்குனி உத்திர தெய்வ திருமணங்கள்

பங்குனி உத்திர விழாவானது முருகனுக்கு மட்டும் உகந்த நாள் இல்லை. இன்னும் பல தெய்வங்களுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

இராமர் சீதையை மணந்த நாள் பங்குனி உத்திரம் ஆகும். இமவான் மகள் பார்வதியை சிவ பெருமான் இந்நாளில் தான் மணம் புரிந்தார்.

மகாலட்சுமியை திருமால் தன் மார்பில் இந்நாளில் தான் இடமளித்தார். தெய்வானையை திருபரங்குன்றத்தில் முருகப்பெருமான் மணந்ததும் இந்நாளில் தான்.

காஞ்சி காமாட்சி மணலில் சிவனை வணங்கி சிவனோடு வாம பாகம் ஏறியதும் இந்த நன்னாளில் தான். மீனாட்சி சுந்தரேசரை கரம்பிடித்ததும் பங்குனி உத்திரத்தில் தான்.

சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்தது இந்த திருநாளில் தான். ஐயன் ஐயப்பன் அவதரித்த நாளும் இந்த நாளில் தான்.

இவ்வாறு பல தெய்வ திருமணங்கள் இந்த சிறப்பு மிக்க பங்குனி உத்திரத்தில் தான் நடைபெற்றது.

திருமண வரம் தரும் கல்யாண விரதம்

இந்த பங்குனி உத்திர நாளில் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் திருமண வரம் வேண்டி விரதமிருந்தால் கண்டிப்பாக திருமணம் நடைபெறும் என்பது கண்கூடான உண்மையாகும்.

ஆண், பெண் இருபாலரும் காலையில் எழுந்து நீராடி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

காலை முதல் உண்ணா நோன்பிருந்து மாலை திருக்கோயில் சென்று திருமண கோலத்தில் இறைவனை தரிசித்து வந்து விரதம் முடிக்க வேண்டும்.

அனைத்து சிவ, விஷ்ணு, அம்பாள், முருகன் ஆலயத்திலும் கல்யாண உற்சவம் இந்நாளில் நடத்தப்படுகின்றது.

இதனை தவறாமல் திருமண வரம் வேண்டுவோர் சென்று கண்டு வர விரைவில் திருமணம் கைகூடும். எனவே தான் பங்குனி உத்திர நாளை “கல்யாண விரத நாள்” என்று கூறுவர்.

முருகனுக்கு காவடி எடுத்தல்

முருகனுக்கு முதன் முறையாக இடும்பன் காவடி கட்டியது இந்த பங்குனி உத்திர நாளில் தான்.

எனவே தான் இன்றும் திருஆவிநன்குடி என்று சொல்லப்படுகின்ற பழனியில் இன்றும் இத்தினத்தில் காவடி எடுத்து சென்று நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

2020 இல் பங்குனி உத்திரம்

இந்த வருடம் பங்குனி உத்திர விழாவானது இன்று ஏப்ரல் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இன்னல்கள் நிறைந்த சூழலில் கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசிக்க இயலாத நிலையில் உள்ளோம்.

எனவே நாம் அனைவரும் வீட்டில் இருந்தப் படியே இறைவனை பிராத்தனை செய்து இச்சூழலை மாற்றி அமைத்து இயல்பு நிலைக்கு திரும்ப பிராத்திப்போம்.

3

FEFSI: ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி!

0
FEFSI AGS Donation

FEFSI, AGS Entertainment; ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி! கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

பெப்சி தொழிலாளர்களுக்கு ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் மட்டும் 83 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.  மேலும், 3,219 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவி செய்யுமாறு பெப்ஸி (FEFSI) அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஜெகன் என்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பெப்சி சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஏஜிஎஸ் கல்பாத்தி சகோதரர்களான கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களது பட்டியலில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார். ஆம், லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா பெப்ஸி தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பெப்சி டிரஸ்ட் அக்கவுண்டில் ரூ.15 லட்சத்தை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இதற்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

3

நடிப்பின் நாயகன் சியான் விக்ரம் படங்கள்!

0
Vikram Movies

நடிப்பின் நாயகன் சியான் விக்ரம் படங்கள்! என் காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சியான் விக்ரம் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

உலக நாயகனுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் நடிப்பின் நாயனான சியான் விக்ரம் படங்கள்…

வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி விக்ரம் தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் முன் கூட்டியே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாதம் விக்ரன் பிறந்தநாள் வருவதால், அவரது நடிப்பில் வந்த படங்களை ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து அவருக்கு இப்போதிலிருந்தே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கதை பிடித்திருந்தால் எவ்வளவு கஷ்டங்களையும் சந்திக்க தயாராக இருக்கும் நடிகர் சியான் விக்ரம்…

திரையுலகில் பலருக்கும் இவர் தான் முன்னுதாரணம்….தன்னை வருத்தி இவர் நடிக்க மேற்கொண்ட ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அற்புதம்…

சியான் விக்ரம் உடல் ரீதியாக தன்னை வருத்தி நடித்த படங்கள் எத்தனையோ…அதில் ஐ படமும் ஒன்று…

கடந்த 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்த என் காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து வந்த புதிய மன்னர்கள் நல்ல ஒரு பெயரை பெற்றுக் கொடுத்தது.

1999 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படம் சொல்லவே வேணாம். விக்ரமிற்கு சியான் என்ற அடையாளத்தை கொடுத்த படம்.

விக்ரம் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்த படமாக கருதப்படுகிறது. படத்தில் உள்ள கானா கருங்குயிலே பாடலும் இன்றும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கிறது.

அப்புறம், தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, அருள், அந்நியன், கந்தசாமி, ராவணன், தாண்டவம் ஆகிய படங்கள் விக்ரமின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பிரமிக்க வைத்தது.

காசி படத்தில் கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். தற்போது தான் பிரபலங்கள் பலரும் கண்பார்வையற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

சாமுராய்.. தனது காதலிக்காக அட்டூழியங்களை அழிக்க போராடும் ஒரு வீரன் என்ற கதாபாத்திரம்.

அந்நியன்..அம்பியாகவும், ரெமோவாகவும் ஒரே நேரத்தில் மாறி மாறி இருவேறு ரோலில் வந்து சென்றார். இந்தப் படம் விக்ரமுக்கு சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தது.

காதலியிடம் காதலை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக அவரது பெற்றோரிடம் ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதினால் எப்படியிருக்குமோ அதே போன்று காதல் கடிதம் எழுதி அவரது பெற்றோரிடம் கொடுப்பார்.

அப்புறம் அந்நியன் ரெமோவாக மாறி காதல் புரோபோஷல் செய்யும் விக்ரம் கதாபாத்திரம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

இதைவிட ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த தெய்வ திருமகள் படம் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்தது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் கிரிட்டிக்ஸ் விருது பெற்றுக் கொடுத்தது இந்தப் படம்.

இதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையாகவே நடித்திருந்தார். இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகளும் இருக்கிறார். அவரை எப்படி படிக்க வச்சு, பாதுகாப்பாக வளர்க்கிறார் என்ற கதையை மையப்படுத்தி இப்படம் திரைக்கு வந்தது.

ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி ஒரு பெண் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க முடியும்? என்ற கருத்தை இப்படம் வெளிக்காட்டியுள்ளது.

ஐ படம் விக்ரமுக்கு பிலிம்பேர் விருது பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்திற்காக தனது உடலையும் வருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஒரு நடிகரோடு இல்லாமல், உதவி இயக்குநர், உதவி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில், அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், ஹலோவில் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த படங்கள், பாடல்கள் ஆகியவற்றை பகிர்ந்து தங்களது அன்பவை வெளிக்காட்டி வருகின்றனர்.

3

Gantumoote is Beautiful Romantic Drama of a School Girl

0

Gantumoote is Beautiful Romantic Drama of a School Girl. Gantumoote (Baggage) Movie directed by Roopa rao. Gantumoote (Baggage) Movie Review.

Each and everyone of us had a crush in school days most of us admit some of us don’t. Gantumoote (Baggage) is a beautiful love story evolves around in the teenage.

Meera (Teju Belawaadi) is a movie goer started watching lots of movies and relating those things happening in real life with movie. she started creating her own world with the things she learned from movies.

Meera had crush on the Madhu because she thought his hairstyle resembles salman khan. She really liked an actor Salman Khan much so she trying to hang out with madhu.

Movie gets more interesting when both started loving each other seriously. The beauty is when things turned good or bad in their relationship she related to it in a movie sequences.

one particular scene one of her mate called her as slut. actually she don’t know the meaning later she realized and started wondering why people abuse sex workers? they also working and earn. It’s one kind of the job like rest there is nothing wrong with it.

It ensures that she is mature enough because she learned lot through watching cinema. Entire film the decision she took and the situation she handled ensures her maturity.

Gantumoote is women lead role film. Beginning Meera started narrating story through voice over from her childhood to the end of the film. The entire film is about the films she watched and the things she encountered.

Writing is really too good in the movie. Meera talked lot whereas Madhu had few dialogues. Song lyrics also too good with utmost poetry and most of the dialogues make us question ourselves.

It’s kind of feeling you can only get these type love movies. Like these Lootera, Mayaanadhi and La La Land movies gave me the same kind of feelings to me.

3

வந்துவிட்டது BSNL ன் 96 ரூபாய் வசந்தம் கோல்டு : 90 நாட்கள் வரை Validity நீட்டிக்கப்பட்டுள்ளது 

0
BSNL PLAN

BSNL ன்(பிஎஸ்என்எல்) 96 ரூபாய் வசந்தம் கோல்டு 90 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

BSNL latest PLAN :- பிஎஸ்என்எல் ன் 96 ரூபாய் வசந்தம் கோல்ட் வவுச்சர் பிளான் 90 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பிளான் ஜூன் 30 2020 வரை உங்களுக்கு கிடைக்கும் .

இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்த பிறகு எந்த ஒரு நெட்வொர்க்கும் தினமும் 250 நிமிடம் CALLS வசதி நீங்கள் பெறலாம். இருப்பினும் இந்த நேரத்தில் நீங்கள் டெல்லி மற்றும் மும்பை ஆகிய ஊர்களுக்கு அழைக்க முடியாது.

பயனர்கள் இந்த பிளான் ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் இதில் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் 21 நாட்களுக்கு செல்லுபடியாகும் .

250 நிமிட கால் வரம்பு முடிந்ததும் பயனர்களுக்கு அடிப்படை கட்டணத்தின் படி பணம் வசூலிக்கப்படும். இந்த பிளான் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதுதவிர இந்த 96 வசந்தம் கோல்டு திட்டம் புதிய பயனர்களுக்கும் கிடைக்கிறது.

ஏற்கனவே BSNL வாடிக்கையாளராக இருக்கும் பயனர்களுக்கு இந்த திட்டம் இல்லை. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி பெறுவார்கள். இந்த செயல்பாடுகள் அனைத்து திட்டத்தை செயல்படுத்திய முதல் 21 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இருப்பினும் 90 நாட்களுக்கு INCOMING அழைப்பு வசதி உங்களுக்கு கிடைக்கும். 90 நாட்களுக்கு பிறகு பயனர்களுக்கு இரண்டு சலுகைகள் வழங்கப்படும் முதல் சலுகை காலம் 7 நாட்களாகவும், இரண்டாவது சலுகைக் காலம் 165 நாட்களாகவும் இருக்கும்.

இந்த நேரத்தில் பயனர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால் அவர்களின் சிம்கார்டு காலாவதி ஆகிவிடும் .

96 ரூபாய் வசந்தம் கோல்ட் திட்டம் ஆரம்பத்தில் 180 நாட்கள் செல்லுபடி ஆகும். ஆனால் நிறுவனம் அதன் செல்லக்கூடிய 90 நாட்களாக குறைத்துள்ளது, முதல் 28 நாட்களுக்கு அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைத்தன, இது இப்போது இரு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது .

3

9 Minutes: வீட்டை கொளுத்தி விளையாடிய மோடியின் செல்ல பிள்ளைகள் – வீடியோ

0

9 Minutes: 9 மணிக்கு 9 நிமிடம் மோடி விளக்கு ஏற்றச்சொன்னார். ஆனால் அவரின் செல்ல பிள்ளைகள் வீட்டை கொளுத்தி தீபாவளி கொண்டாடி விட்டனர்.

மோடி இந்தியாவில் கொரோனா வந்ததில் இருந்து வீட்டுக்குள் இருந்துகொண்டு கான்பிரன்ஸ் மூலம் பலருடன் பேசி வருகிறார்.

ஒரு ஒப்புக்குக்கூட பிரதமர் மாளிகையை விட்டு வெளியில் வந்து மக்களை சந்திக்கவில்லை. அவருடைய வலது கை அமித்ஷா இருக்கும் இடம் தெரியாமல் பதுங்கிவிட்டார்.

கொரோனாவை கட்டுப்படுத்த சொன்னால் மோடி மக்களை திசை திருப்பும் விதமாக எதாவது ஒன்றை அறிவித்து விடுகிறார்.

அவருடைய செல்லப்பிள்ளைகளுக்கு சுத்தமாக படிப்பறிவு என்பது இல்லை போலும், 9 மணிக்கு விளக்கு ஏற்றுவதால் புவியின் வெப்பம் அதிகரித்து கொரோனா செத்தும் விடும் என ஒரு வதந்தியை கிளப்பிவிட்டனர்.

இதை உண்மை என நம்பி இந்தியா முழுவதும் தீபந்தங்களுடன் கோ கொரோனா என முழக்கம் இட்டபடி வீதியில் உலா வந்தனர்.

இதுநாள் வரை தடியடி நடத்தி வந்த போலீஸ் நேற்று ஒன்பது மணிக்கு எங்கு சென்றனர் எனத் தெரியவில்லை. இவர்கள் இப்படி தீ கொளுத்தி விளையாடுவது மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும்.

மோடி இதற்கு தான் ஆசைப்பட்டாரா? தன்னுடைய செல்லப்பிள்ளைகள் முட்டாள்கள்.. நாம் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்வார்கள் என மோடிக்குத் தெரியாதா?

தீப்பந்தங்கள் கொளுத்துவது, வாயில் எண்ணை ஊற்றி அதை ஒருவர் ஊத, வாயில் தீப்பற்றிக்கொண்டது.

மேலும் சிலர் சேர்ந்து ஒரு வீட்டையே கொளுத்தி தீயணைப்பு வீரர்களை இரவு முழுவதும் கண் விழிக்க செய்து விட்டனர்.

மோடியின் ஒன்பது மணி ஒன்பது நிமிடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு கூட இப்படி பட்டாசுகள் வெடித்து இருக்காது.

இந்த ஊரடங்கு நேரத்தில் இவர்களுக்கு எப்படி பட்டாசு கிடைத்தது என்பது கூட கேள்வி குறியாகத்தான் உள்ளது. இந்த முட்டாள் தனமான காரியம் அதிக அளவில் கர்நாடகாவில் தன் நிகழ்ந்துள்ளது.

அதிக அளவில் முதலில் கொரோனா பரவியதும் இந்த கர்நாடகாவில் தான். இங்கு இருந்து தன் ஒரு முட்டாள் பெண் கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து டெல்லி வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

இந்த lockdown ல் நீங்கள் விளையாடுவதற்கு அருமையான கேம்கள்

0
lockdown games

இந்த lockdown ல் நீங்கள் விளையாடுவதற்கு அருமையான கேம்கள்.

Lockdown games :- கரோனா வைரஸ் காரணமாக இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நேரத்துல நாம வீட்டில் பல வேலைகள் செய்து கொண்டிருப்போம். ஆனால் அதையெல்லாம் செய்து போர் எடுத்துவிட்டால் நமக்கு மொபைல் கேம் தவிர வேறு எந்த ஒரு வழியும் இல்லை. அதனால் மக்கள் தங்களது நேரத்தை சந்தோஷமாக கழிப்பதற்கு பல மொபைல் கேம் இருக்கின்றன .

பல ஸ்மார்ட் போன்களில் மல்டி பிளேயர் இருக்கின்றது. மேலும் ஆன்லைனில் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது போன்ற கேம்களும் இருக்கின்றன. மேலும் நீங்கள் தனியாக விளையாடும் கேம்களும் இருக்கின்றன.

ப்ளே ஸ்டோரில் பல லட்சக்கணக்கான மொபைல் கேம்கள் இருக்கின்றன. அவை எல்லாம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஆகவே நான் உங்களுக்கு சில சுவாரசியமான கேம் கொண்டு வந்து இருக்கிறேன் இதை நீங்கள் விளையாடி பார்க்கலாம் .

Best lockdown games during lockdown period:

Ludo king

இந்த விளையாட்டு நீங்கள் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது நிறைய கேள்விப்பட்டு இருப்பீர்கள், நிறைய விளையாடி இருப்பீர்கள். இப்போது இது லுடோ வின் ஆன்லைன் பதிப்பாகும்.

இந்த விளையாட்டு க்கு லுடோ கிங் என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் உங்கள் நான்கு நண்பர்களும் ஒன்றாக விளையாடலாம். இது மட்டுமில்லாமல் குறைந்த ROM மற்றும் RAM ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட தொலைபேசிகளும் இந்த விளையாட்டை விளையாட முடியும். இது மட்டுமல்லாமல் இந்த விளையாட்டில் பாம்பு ஏணி விளையாடுவதற்கான விருப்பமும் உள்ளது .

 Call of duty mobile

PUBG விளையாட்டு விளையாடும் மக்கள் ஆர்வத்தைப் பார்த்து இந்த கேம் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் வந்தது. இந்த விளையாட்டில் 5vs5 mode லும் விளையாடலாம் .இதுதான் பிளேயர் மிகவும் விரும்புவார்கள். வெவ்வேறு மேப் மற்றும் லொகேஷன் இதுபோன்ற ஐந்து பிளேயர்ஸ் ஒரு டீம் க்கு எதிராக விளையாட வேண்டும் .

Asphalt 9

asphalt 9 ஒரு பிரபலமான கார் பந்தய விளையாட்டு. உங்களுக்கு பந்தயம் மிகவும் பிடிக்கும் என்றால் இந்த விளையாட்டை நீங்கள் தாராளமாக தேர்வு செய்யலாம். குறைந்த கிராபிக்ஸ் முதல் உயர்ந்த கிராபிக்ஸ் சாதனங்கள் வரை இந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம். புதிய கார்கள், ரோடுகள் விளையாட்டில் தேர்ந்தெடுக்கலாம் இது மிகவும் அருமையாக இருக்கும் .

Rules of survival

இந்த விளையாட்டு மல்டி பிளேயர் ஆன்லைன் பேட்டில் ராயல் கேம் ஆகும். இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த விளையாட்டு கிட்டத்தட்ட PUBG போலவே இருக்கும். இதிலும் நீங்கள் உங்களுடைய நண்பர்களுடன் குழு அமைத்து வேறு குழுவை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். இதிலும் PUBG போன்றே கடைசிவரை நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Mud runner

மட் ரன்னர் ஒரு ஆப் ரோடு கார் வீடியோ கேம் ஆகும். இந்த வீடியோ கேமை நீங்கள் தனிப்பட்ட கணினி மற்றும் பிளேஸ்டேஷன் 4 விளையாடலாம். இந்த விளையாட்டில் நீங்கள் மோசமான கற்கள் நிறைந்த பாதைகளில் வாகனங்களை ஓட்ட வேண்டும். அப்படி ஓட்டுவதன் மூலம் நீங்கள் நிஜமாகவே ஒரு காரை ஓட்டுவது போன்று ஒரு சிலிர்ப்பை நீங்கள் உணர்வீர்கள்.

மேலும் தெரிந்து கொள்ள :- சிறந்த ஆன்லைன் கேம்கள் விளையாட

3