Home Blog Page 169

புலிக்கு கொரோனா பாதிப்பு; நியூ யார்க் ப்ரோங்க்ஸ் பூங்காவில்

0
புலிக்கு கொரோனா பாதிப்பு

புலிக்கு கொரோனா பாதிப்பு; நியூ யார்க் ப்ரோங்க்ஸ் பூங்காவில், New York’s Bronx Zoo Tiger Coronavirus. நியூ யார்க் புலிக்கு கொரோனா பாதிப்பு.

நடியா எனும் பெயருடைய நான்கு வயது மலேசியன் வகை புலி மற்றும் அதன் தங்கை அசுள், மேலும் இரண்டு அமூர் வகை புலி இவைகளுடன் மூன்று ஆப்ரிக்கா சிங்கங்களுக்கு வரட்டு இருமல் உள்ளது.

மேலும் இவை அனைத்தும் விரைவில் குணமடையும் வேண்டிய மருத்துவ சிகிச்சைகல அளித்து வருகிறோம் என அப்பூங்காவில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறு புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று கண்டறியும் பொழுது புலியை பராமரித்த பராமரிப்பாளருக்கு பின்னர் தொற்று இருப்பது தெரிய வந்தது.

பொதுவாக கொரோனா விலங்குகள் மூலம் பரவாது என உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. தற்போது புலிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெரிய வகை பூனை இனங்களில் ஒன்று தான் புலி அவைகளுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற வீட்டு வளர்ப்பு, பிற பிராணிகளுக்கு பரவுவதில்லை.

ஒவ்வொரு உயிரனங்களுக்கு ஒரு விதமாக கொரோனா பரவுவதாக தெரிகிறது. தற்போது இவைகளின் உடல்நிலையை நன்கு கண்காணிப்பதே எங்கள் நோக்கம்.

ஒவ்வொரு விலங்கும் தனிப்பிரிவில் வைத்து சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். விலங்குகள் கொரோனோவால் பாதிப்படைந்தது உலகத்திற்கு மேலும் ஒரு சவாலாக அமையும்.

3

கொரோனா பாதிப்பு; பிரிட்டன் பிரதமர் போரிஸ்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

0
கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு; பிரிட்டன் பிரதமர் போரிஸ்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை, ஏற்கனவே கொரோனா பாதிக்கப்ட்ட இவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ்க்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யபட்டது. இதனிடையில் மருத்துவர்களின் அறிவுரைப் படி அவர் தனிமையில் இருந்தார்.

இதனிடையில் அவருக்கு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது மற்றும் உடலிநிலையில் முன்னேற்றம் தெரிகிறது என அவர் வெளியிட்ட காணொளியில் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியாவில் நடந்தது போல அங்கும் கொரோனா தீவிரமாக பரவும் இந்த நிலையில் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் கை தட்டினார்.

அந்த நேரத்தில் அவரும் வீட்டின் பால்கணியில் இருந்து கை தட்டினார். இருந்தும் அவருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் இன்னும் போகவில்லையாம்.

அதனால் பிரதமருக்கு மருத்துவமனையில் தனிமை பிரிவில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

3

This Day in History April 06; வரலாற்றில் இன்று ஏப்ரல் 06

0

This Day in History; வரலாற்றில் இன்று, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

1865ஆம் ஆண்டு கூட்டமைப்பு ராணுவத்தினர் அமெரிக்க உள்நாட்டு போரின் தோல்விக்கு பின்னர் ராபர்ட் ஈ தலைமையிலான தமது கடைசி சமரை வடக்கு வர்ஜீனியாவில் நடத்தினர்.

1896ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசினால் முதல் தடவை கிரேக்க ஏதன்ஸ் நகரில் நடத்தப்பட்டது.

2010ஆம் ஆண்டு இந்தியாவில் சட்டிஸ்கர் மாநிலத்தில் 76 மாவோயிஸ்ட்கள் மத்திய சேமக் காவல்படை அதிகாரிகளை சுட்டுக்கொன்றனர்.

Today Birthdays in History

1815ஆம் தேதி ஏப்ரல் 6ஆம் நாள் திருச்சியில் தமிழத்தின் சிறந்த தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. இவருடைய கல்விக்கும் இலக்கியப் பணிக்கும் மகா வித்வான் பட்டம் பெற்றார்.

1901ஆம் ஆண்டு இத்தாலிய செயற்பாட்டாளர் மற்றும் ரோமன் கத்தோலிக்க அருளாளர் ஆகிய பியர் ஜார்ஜியோ பிரசாதி பிறந்த தினம் இன்று.

1928ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் அமெரிக்க உயிரியலாளர் மற்றும் நோபல் பரிசு வென்றவருமான ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த தினம் இன்று.

Today Deaths in History 

1199ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ரிச்சர்ட் இறந்த தினம் இன்று. ஜூலை 6 1189 முதல் ஏப்ரல் 6 1199 வரை ஆட்சியில் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

1961ஆம் ஆண்டு பெல்ஜிய மருத்துவரும் நோபல் பரிசு வென்றவருமான ஜூல்ஸ் போர்டெட் இறந்த தினம் இன்று.

1974ஆம் ஆண்டு இந்தியாவின் காந்தி கொலைக்கான சதியாளரும் இந்துவாவாதியுமான விஷ்ணு ராமகிருஷ்ண கார்க்கரே இறந்த தினம் இன்று.

3

இந்தியாவை வீழ்த்தி இலங்கை டி20 சாம்பியன்

0

2016 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது இலங்கை அணி.

2016 டி20 உலககோப்பை

2016ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நான்காவது டி20 உலகக்கோப்பை நடைபெற்றது அதில் பங்குபெற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர்.

குரூப் ஏ பிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் பங்கு பெற்றது.

குரூப் பி யில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் பங்கு பெற்றது.

அரையிறுதி போட்டிகள்

குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

குரூப் பி ல் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் அரையிறுதி போட்டிகள் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

மழை குறுக்கிட்டதால் டிஎல் முறைப்படி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இலங்கை அணி வீழ்த்தியது.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

விராட் கோலி அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

இறுதி போட்டி

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி டாக்காவில் உள்ள ஷேர் இ பங்களா தேசிய மைதானத்தில் 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இறுதிப் போட்டி ஆரம்பமானது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் லசித் மலிங்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் மற்றும் ரகானே களம் இறங்கினார்கள்.

இந்தியா ஆமை ஆட்டம்

ரஹானே 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீராட் கோலியுடன் ரோகித் கூட்டணி அமைத்து விளையாடினார்.

ரோகித் சர்மா 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

யுவராஜ் சோதனைகள்

இது உடன் வீராட்கோலி கூட்டணி அமைத்தார். விராட் கோலி ஒருபுறம் ரன்களைச் சேர்க்க யுவராஜ் சிங் நிதானத்தை கடைப் பிடித்தார்.

யுவராஜ் சிங் டி20 விளையாடாமல் டெஸ்ட் போட்டி போல விளையாடி சோதித்தார்.

அடுத்ததாக களமிறங்க தோனி, ரெய்னா, ஜடேஜா போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும். யுவராஜ் தனது ஆட்டத்தில் எந்த ஒரு ஆக்ரோஷம் இல்லாமல் விளையாடினார். மிகவும் பொறுப்பற்ற ஆட்டமாக இருந்தது.

விராத் கோலிக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பும் தராமல் ரன்களும் சேர்க்காமல் விளையாடியது இந்திய ரசிகர்களை பொறுமையை சோதித்தது.

இறுதியில் யுவராஜ்சிங் 21 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அடுத்து வந்த தோனி 7 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா 130

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. விராத் கோலி அதிகபட்சமாக 77 ரன்கள் சேர்த்தார்.

இலங்கை அணி தரப்பில் குலசேகரா மேத்யூஸ் ஹேராத் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இது ஒரு இறுதி ஆட்டத்தில் வெற்றி எனக்கு இது போதுமானது அல்ல.

இலங்கை வெற்றி

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக சங்ககரா 52 ரன்கள், ஜெயவர்தனே 24 ரன்கள், திசாரா பெரேரா 23 ரன்கள், திலகரத்ன தில்ஷன் 18 ரன்கள் எடுத்தனர்.

நான்காவது டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி சூடியது. இதற்கு முன்னால் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் வென்றிருந்தது.

இந்த உலக கோப்பையில் சங்கக்கார மற்றும் ஜெயவர்த்தனே இருவருக்கும் கடைசி டி20 போட்டி ஆகவே அமைந்தது.

இந்த உலக கோப்பையில் ஜெயவர்த்தனே 24 ரன்கள் சேர்த்தது மூலம் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் ஆவார்.

ஆட்டநாயகன் விருதை குமார் சங்கக்கார வென்றார். உலக கோப்பையை லசித் மலிங்கா பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டிக்கு பிறகு யுவராஜ் சிங் மேல் பல விமர்சனங்கள் எழுந்தன. அணியை விட்டு நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அணியில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சென்னையில் விஸ்வரூபம் எடுத்தது கொரோனா; 16000 பேர் கட்டுப்படுத்த முடியுமா?

0

தமிழகத்திற்குள் தாமதமாக வேலையைக் காட்டினாலும் தாறுமாறாக கட்டியுள்ளது. விஸ்வரூபம் எடுத்தது கொரோனா. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்து உள்ளது.

விஸ்வரூபம் எடுத்தது கொரோனா

கிடுகிடு என எண்ணிக்கை உயர்ந்ததால் சென்னையில் உள்ள சில பகுதிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. 16000 பேர் கொண்டு குழுவை அரசு உருவாக்க முடிவு செய்துள்ளது.

இந்த குழு வீடு வீடாக சென்று ஒருவரைக் கூட விடாமல் சல்லடை போட்டு சோதனை செய்ய உள்ளது. மொத்தம் 90 நாட்களுக்குள் சென்னையில் உள்ளவர்களை ஓட்டுமொத்தமாக சோதனை செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.

மடிப்பாக்கம், ராயபுரம், பனையூர், வியாசர்பாடி, போரூர், எண்ணூர், மணலி,  கோட்டூர்புரம், அம்பத்தூர், திருவான்மியூர், ஆலந்தூர், மாதவரம்,  இந்த பகுதிகளில் கொரோன தாக்கம் அதிகமாக உள்ளது.

முதலில் இந்த பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட உள்ளது. காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு உண்டா? போன்ற கேள்விகள் கேட்கப்படும்.

16000 பேர் மாநகராட்சி குழுவை ஈடுபடுத்த உள்ளனர். அவர்களை வைத்து 90 நாட்களில் சென்னையின் முக்கியப்பகுதிகள் முழுவதும் சோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

6/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

6/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று ஆன்மீகத்தில் ஈடுபாடு அவசியம் தேவை. பதட்டமான சூழல் நிலவும். பேச்சினால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நிதி தொடர்பான முடிகளை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷப ராசிபலன்

இன்று வெற்றிக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தன லாபம் இல்லாத நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று இன்பமான நாளாக இருக்க போகிறது. அனைத்து காரியங்களும் சித்தியாகும் நாளாக அமையும். வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் கொண்ட நாளாக அமையும். மொத்ததில் இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாகும்.

கடக ராசிபலன்

இன்று தினசரி வேலைகளுக்கே கவனமாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவுகின்ற நாளாகும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு எனவே கவனமாக இருக்கவும்.

சிம்ம ராசிபலன்

இன்று கவலைகள் மிகுந்த நாளாக அமையும். குடும்பத்தில் அதிக நேரத்தை செலவிட கவலைகள் குறையும். எதிர்மறையான எண்ணங்களை கைவிட வேண்டிய நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் தேவையாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று பெரிதாக வளர்ச்சிகளை எதிர் பார்க்க இயலாது. யதார்த்தமான சூழல் நிலவம் நாளாக இருக்கும். பணிகளில் சிறப்பான பலன்களை பெற இயலாது. சாதாரணமான நாளாக மட்டுமே இருக்கும் நாளாகும்.

துலா ராசிபலன்

இன்று உங்களின் இலட்சியங்கள் நிறைவேறும் நாளாக இருக்க போகிறது. அனைவரிடமும் நல்லாதரவு கிடைக்கும். லாபம் பெருகும் நாளாக அமையும். உடல் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய நாள் உங்களின் சாதகமான நாளாக இருக்கும். துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வேலைகள் சுலபமாக முடித்து அதன் மூலம் கூடுதல் தொகையும் வந்து சேருகின்ற நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று மன உளைச்சல் காணப்படும் சூழல் தோன்றுகின்றது. உத்தியோக ரீதியான இன்னல்கள் வந்து சேருகின்ற கிரக அமைப்புகள் உள்ளது. ஓய்வு என்பதே இருக்காது சற்று நிதானமாக இருக்க வேண்டிய நாளாக அமைந்துள்ளது.

மகர ராசிபலன் 

இன்று சில ஏமாற்றங்களை சந்திக்க போகும் நாளாக அமைந்துள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களை நம்பி எதுவும் செய்ய வேண்டாம். அவர்களால் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்புண்டு.

கும்ப ராசிபலன்

இன்று இனிமையான சூழல் நிலவுகின்றன நாளாக இருக்க போகிறது. வெளியூரில் இருந்து நற்செய்தி வர வாய்ப்புகள் அதிகம். உறவினர்களால் கூடுதல் மகிழ்ச்சி வரபோகும் நாளாக உள்ளது. எதிர்பாராத பணவரவு கிடைக்க போகிறது.

மீன ராசிபலன் 

இன்று நீங்கள் எதிர்பாராத நற்பலன்களும் தானே வந்து சேரப்போகும் நாளாகும். மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்ப சூழல் தங்களுக்க சாதகமான லாபத்தை பெற்று தரும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும்.

6/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி ஏந்திப் பிடித்த ரஜினிகாந்த்!

0
Rajinikanth

Rajinikanth; வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி ஏந்திப் பிடித்த ரஜினிகாந்த்! கொரோனா என்ற இருள் அகல நாடு முழுவதும் மக்கள் ஒளியேற்றியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி ஏத்தியபடி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது வீட்டு வாசலில் நடிகர் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏந்தி ஒளியேற்றி கொரோனாவுக்கு எதிராக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

உலகத்தையே நடு நடுங்க வைத்தது கொரோனா வைரஸ். இந்தியாவில் மட்டும் 77 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 3030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஒரு புறம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் இத்தனை நாட்கள் எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டோம் என்று பெருமைப்படும் நிலையும் வந்துவிட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் வேலை இழந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்துவிட்டு, மெழுதுவர்த்தி, விளக்கு ஏற்றுதல், செல்போன் டார்ச், டார்ச்லைட் ஒளிரச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாமானிய மக்கள் என்று நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்றி வைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டு மெழுகுவர்த்தி என்னும் நம்பிக்கையை ஒளியை ஏந்திப் பிடித்தவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது #LightsOfHope, #9MinutesForIndia ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3

டுவிட்டரில் டிரெண்டாகும் #விளக்கு_ஏற்ற_மாட்டோம் ஹேஷ்டேக்!

0
Lights For Life

Corona, Light For Life; டுவிட்டரில் டிரெண்டாகும் விளக்கு ஏற்ற மாட்டோம் ஹேஷ்டேக்! பிரதமர் மோடி அறிவுறுத்தியதற்கு எதிராக விளக்கு ஏற்ற மாட்டோம் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

#விளக்கு_ஏற்ற_மாட்டோம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

உலகத்தையே நடு நடுங்க வைத்தது கொரோனா வைரஸ். இந்தியாவில் மட்டும் 77 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 3030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஒரு புறம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் இத்தனை நாட்கள் எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டோம் என்று பெருமைப்படும் நிலையும் வந்துவிட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் வேலை இழந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்துவிட்டு (Lights For Life), மெழுதுவர்த்தி, விளக்கு ஏற்றுதல், செல்போன் டார்ச், டார்ச்லைட் ஒளிரச் செய்ய வேண்டும் (Rays Of Hope) என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த நிலையில், அதற்கான நேரமும் வந்துவிட்டது. அப்படியிருக்கும் போது டுவிட்டரில் #விளக்கு_ஏற்ற_மாட்டோம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதை வைத்து பலரும் மீம்ஸ் உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

மின் விளக்குகளை மட்டுமே அணைக்க வேண்டும். இதர மின்சார சாதனங்களை அணைக்க வேண்டாம் என்று மின்வாரியம் கேட்டுக்கொண்டிருந்தது.

கடந்த 1992 ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களும் 100 சதவிகிதம் மின்மயமாக்கலை அடைந்த மாநிலமாக தமிழ்நாடு கருதப்படுகிறது.

கொரோனாவை எதிர்த்து போராட, சீன ஜனாதிபதி 10 நாட்களில் மருத்துவமனையை உருவாக்குகிறார். மன நல மருத்துவர் மக்களுக்கு உதவ வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் கேட்கிறார்.

ஆனால், இந்தியாவில்….பிரதமர் மோடி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்கிறார்.

3

வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்: மோடிக்கு நடிகர் ஜீவா ஆதரவு!

0

Jiiva Supports Modi; வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்: மோடிக்கு நடிகர் ஜீவா ஆதரவு! நடிகர் ஜீவா மோடிக்கு ஆதரவு தெரிவித்து வீட்டில் அனைவரும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஆதரவாக நடிகர் ஜீவா களமிறங்கியுள்ளார்.

ஊரெல்லாம் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயெ முடங்கியிருக்கும் நிலை வந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கும் அதிகமான உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மட்டும் இதுவரை 77 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 3030 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்துவிட்டு, மெழுதுவர்த்தி, விளக்கு ஏற்றுதல், செல்போன் டார்ச், டார்ச்லைட் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

அதற்கான பலரும் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நடிகர் ஜீவா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

உலகத்தையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா கொடிய வைரஸை ஒற்றுமையாக இருந்து துரத்தி அடிப்போம் என்று எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் வகையில், மக்கள் அனைவரும் தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் மோடி நம்மை அழைத்திருக்கிறார்.

கடந்த 22 ஆம் தேதி ஜனதா கர்பியூ அன்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல காட்டிய அதே ஒற்றுமை, இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் அனைவரும் அவரவர்  வீட்டில் தீபங்கள் ஏற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ, செல்போன் டார்ச்லைட் ஒளிரவைத்தோ, இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமது ஒற்றுமையை காட்டுவோம். சமூக விலகலை கடைபிடிப்போம். கொரோனாவை வீழ்த்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், டுவிட்டரில் #விளக்கு_ஏற்ற_மாட்டோம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

திருமணமா? எப்போ? கீர்த்தி சுரேஷ் விளக்கம்!

0
Keerthy Suresh Wedding

Keerthy Suresh Marriage Rumour; திருமணமா? எப்போ? கீர்த்தி சுரேஷ் விளக்கம்! தனக்கும் பாஜக தொழிலதிபருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தி குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தி குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது என்ன மாயம் படத்தின் மூலம் ஒரு சாதாரண நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி முருகன் படம் நல்ல வரவேற்பும், பேரும் கொடுத்தது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள உன் மேல ஒரு கண்ணு பாடல் இன்றும் யூடியூப்பில் 75 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் பெற்றுள்ளது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு அவரது அப்பா சுரேஷ்குமார் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பாஜகவில் முக்கிய பங்கு வகிப்பதால், பாஜக தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று கூறப்பட்டது.

இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த செய்தி எப்படி வந்தது என்றே எனக்கே தெரியவில்லை. என்க்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்று அவர் கூறியதாக தகவல் வந்துள்ளது.

30 வயதுக்கு மேல் இருக்கும் நடிகைகள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்படியிருக்கும் போது, பிரபலங்களின் திருமணம் வதந்தி குறித்து தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. அப்படியிருக்கும் போது, அவரது பெயர் திருமண வதந்தி பட்டியலில் இடம்பெற்று வருவது என்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3