Home Blog Page 170

கொரோனா: வீட்டிலேயே இருந்தா போர் அடிக்குதா? நடிகை மீனா அறிவுரை!

0
Meena Corona Advice

Meena Corona Advice; கொரோனா: வீட்டிலேயே இருந்தா போர் அடிக்குதா? நடிகை மீனா அறிவுரை! கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே இருக்க முடியும்? போர் அடிக்கிறது என்று நினைப்பவர்களுக்கு மீனா புதுவிதமாக அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களுக்கு நடிகை மீனா புதுவிதமாக அறிவுரை வழங்கியுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளை கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மட்டும் இதுவரை 77 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், 3030 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை மீனா கொரோனா அறிவுரை (Meena Corona Advice) வழங்கியுள்ளார். இது குறித்து அவரது வீடியோவில் கூறியிருப்பதாவது:

இந்த உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கோவிட்19 கொரோனா வைரஸ். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தாலும், நிறைய பேர் இதனை விளையாட்டுத்தனமாகவே எடுத்துக் கொள்கின்றனர். அதோடு, வீட்டை விட்டு வெளியில் சென்று ஜாலியாக சுற்றி வருகிறார்கள்.

இது போன்று அரசு சொல்வதை எல்லாம் கேட்காததால் தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தற்போது நிலைமை மோசமாகிவிட்டது. தினமும் 1000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோ தினமும் இறக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இந்த கோவிட்19 வைரஸ் பாதித்துள்ளது. இதே நிலைமை நமக்கும் வேண்டுமா? வராமல் இருப்பதற்கு அரசு சொல்வதை கேட்க வேண்டும்.

எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே இருந்து டிவி பார்ப்பது…போர் அடிக்கிறது அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் விளையாடுங்கள்.

படிப்பு சொல்லிக்கொடுங்கள். வீட்டு வேலை பாருங்கள். கிச்சனில் உதவி செய்யுங்கள். யோகா, தியானம், பொழுதுபோக்கு என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது.

வீட்டிற்குள்ளே அமர்ந்து கொண்டு உலகத்தையே காப்பாற்றும் வாய்ப்பு நம் எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது. நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால்தான் உங்களது குடும்பம் ஜாக்கிரதையா, ஆரோக்கியமாக இருக்கும்.

தயவு செய்து பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஒரே நாளில் இத்தனை படங்களா? தொலைக்காட்சியை ஆளும் தளபதி விஜய்!

0
Thalapathy Vijay

Thalapathy Vijay; ஒரே நாளில் இத்தனை படங்களா? தொலைக்காட்சியை ஆளும் தளபதி விஜய்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் இன்று தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விஜய் நடித்த மெர்சல், தெறி மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்கள் இன்று மாலை சன் டிவி, சூர்யா டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். ரசிகர்களை, என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் என்று அழைக்ககூடிய நடிகர்.

குழந்தைகள், பெண்கள் என்று அனைவரையும், தனது நடிப்புத் திறமையால் கவர்ந்தவர். எப்போதும், குழந்தைகளிடம் அதிக அன்பு காட்டக்கூடியவர்.

இதுவரை ஏராளமான படங்களை ஹிட் கொடுத்துள்ளார். 64 படங்கள் வரை நடித்துள்ள விஜய்யின் தளபதி64 படமான மாஸ்டர் வரும் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படம் குறித்து தொடர்ந்து அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. தளபதி 65 படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதனை அவரது விக்கிப்பீடியா பக்கத்தின் இயக்குநர் பட்டியலில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் விஜய் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆம், மெர்சல், தெறி, திருப்பாச்சி ஆகிய படங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சி, சூர்யா டிவி மற்றும் சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் விஜய் நடித்த படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

காலை 8 மணிக்கு விஜய் டிவியில் துப்பாக்கி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே ஹலோ ஆப்பில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக, #VijayAlwaysNo1 என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

இந்தியாவின் முதல் டி20 வீரர் யார் தெரியுமா?

0

இந்தியா அணி இதுவரை 132 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. 82 வெற்றியும், 44 தோல்வியும் பெற்றுள்ளது.

இதுவரை இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 82 வீரர்கள் விளையாடி உள்ளனர்.

இந்திய அணி 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியது.

முதல் போட்டியிலேயே தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த போட்டிகள் இந்தியாவின் ஜாம்பவானான டெண்டுல்கர் விளையாடி உள்ளார். அவர் விளையாடிய ஒரே ஒரு டி20 போட்டி இந்த போட்டி மட்டுமே. அவர் இந்த போட்டியில் 10 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணியின் முதல் டி20 கேப்டன் வீரேந்திர சேவாக். இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார்.

அதன்பிறகு 2007 ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்து வந்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை சேவாக், தோனி, ரெய்னா, ரகானே, ரோகித் சர்மா, கோலி போன்றவர்கள் கேப்டனாகவும் இருந்துள்ளனர்.

இந்தியாவின் முதல் டி20 வீரராக தொப்பி அணிந்தவர் அஜித் அகர்கர். இந்தியாவின் கடைசி டி20 வீரர் ஷிவம் டுபே.

இந்தியாவில் இதுவரை டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் விவரம் வருமாறு :

1. அஜித் அகர்கர்
2. எம்எஸ் தோனி
3. ஹர்பஜன்சிங்
4. தினேஷ் கார்த்திக்
5. ஜாகிர்கான்
6. தினேஷ் மோங்கியா
7. இர்பான் பதான்
8. சுரேஷ் ரெய்னா
9. வீரேந்திர சேவாக்
10. ஸ்ரீசாந்த்
11. டெண்டுல்கர்
12. காம்பீர்
13. ஆர் பி சிங்
14. ராபின் உத்தப்பா
15. யுவராஜ் சிங்
16. ஜோகிந்தர் சர்மா
17. ரோகித் சர்மா
18. யூசப் பதான்
19. முரளி கார்த்திக்
20. பிரவீன் குமார்
21. இசாந்த் சர்மா
22. ஜடேஜா
23. பிரக்யைன் ஓஜா
24. திண்டா
25. ஆஷிஸ் நெஹ்ரா
26. சுதீப் தியாகி
27. முரளி விஜய்
28. பியூஸ் சாவ்லா
29. வினய் குமார்
30. ரவிசந்திரன் அஸ்வின்
31. விராட் கோலி
32. நமன் ஓஜா
33. மிஸ்ரா
34. முனாஃப் படேல்
35. பத்ரிநாத்
36. தவான்
37. பார்த்தீவ் பட்டேல்
38. ராகுல் டிராவிட்
39. ரகானே
40. மனோஜ் திவாரி
41. ரோகித் சர்மா
42. உமேஷ் யாதவ்
43. லட்சுமிபதி பாலாஜி
44. அவனா
45. புவனேஸ்வர் குமார்
46. முகமது சமி
47. மோகித் சர்மா
48. அம்பத்தி ராயுடு
49. கரண் ஷர்மா
50. ஸ்டூவர்ட் பின்னி
51. கேதர் ஜாதவ்
52. மனிஷ் பாண்டே
53. அக்சர் படேல்
54. சந்தீப் சர்மா
55. சஞ்சு சாம்சன்
56. அரவிந்த்
57. ஜஸ்பிரித் பும்ரா
58. ஹர்திக் பாண்டியா
59. பவன் நெகி
60. சகால்
61. ரிஷி தவான்
62. மந்தீப் சிங்
63. கே எல் ராகுல்
64. உணன்கட்
65. தவல் குல்கர்னி
66. ஸ்ரன்
67. பர்வேஸ் ரசூல்
68. ரிஷப் பண்ட்
69. குல்தீப் யாதவ்
70. ஸ்ரேயாஸ் அய்யர்
71. சிராஜ்
72. வாஷிங்டன் சுந்தர்
73. தாகூர்
74. விஜய் சங்கர்
75. சித்தார்த் கவுல்
76. தீபக் சகார்
77. கலீல் அகமது
78. குர்னல் பாண்டியா
79. மார்க்கண்டே
80. சைனி
81. ராகுல் சகார்
82. ஷிவம் டுபே

3

திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா பர்த்டே டுடே!

0
Rashmika Mandanna Birthday

Rashmika Mandanna; திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பர்த்டே டுடே! கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 24ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் விராஜ்பேட்டில் பிறந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா, சைக்காலஜி, பத்திரிக்கை, ஆங்கில இலக்கியம் என்று பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.

படித்துக் கொண்டிருந்த போதே மாடலிங்கில் இருந்த ஆர்வத்தால், ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாடலிங்கா தனது பணியைத் தொடங்கினார். கிளீன் அண்ட் கிளியர் விளம்பர நிகழ்ச்சியில் நடித்த ராஷ்மிகா மந்தனா, கிளீன் அண்ட் கிளியர் விளம்பரத்தின் புதுமுகத்திற்கான டைட்டில் வென்றார்.

அதே ஆண்டில் கிளீன் அண்ட் கிளியரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வந்த கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில், கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி ஹிரோவாக நடித்தார்.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு, ரூ.50 கோடி வரையில் வசூல் பெற்றது.

ரக்‌ஷித் ஷெட்டி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அன்பாக பழகியதைத் தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி ரக்‌ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகா மந்தனாவிற்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஆனால், ஒரு வருடம் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தினர்.

கிரிக் பார்ட்டி படத்தைத் தொடர்ந்து அஞ்சனி புத்ரா, சாமக், சலோ, கீதா கோவிந்தம், தேவதாஸ், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கீதா கோவிந்தம் படத்தில் இவரது நடிப்பு பலரிடம் பாராட்டு பெற்றதோடு, சிறந்த நடிகைக்கான கிரிட்டிக்ஸ் பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

அதே போன்று டியர் காம்ரேட் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தமிழில் சுல்தான் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் கார்த்தி, நெப்போலியன், ரோபோ சங்கர், ரவி மரியா, ரவி கலே ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பாக்யராஜ் கண்னன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் சார்பாக நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.

ஹேப்பி பர்த்டே ராஷ்மிகா மந்தனா மேடம்…

3

புரோடக்‌ஷன் டிசைனர், கலை இயக்குநரான கல்யாணி பிரியதர்ஷன் பர்த்டே டுடே!

0
Kalyani Priyadarshan Birthday

Kalyani Priyadarshan; நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (HBD Kalyani Priyadarshan) இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் லிஸ்ஸி தம்பதியினரின் மூத்த மகள். இவருக்கு சித்தார்த் என்ற ஒரு சகோதரன் இருக்கிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு உதவி புரோடக்‌ஷன் டிசைனராக பணியை தொடங்கியுள்ளார். அதுவும் பாலிவுட்டில் திரைக்கு வந்த கிரிஸ் 3 படம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வந்த இரு முகன் படத்திற்கு கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் விக்ரம் குமார் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு நடிகையாக அறிமுகமானார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான சைமா விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக ஹீரோயினுக்கான அப்சரா விருது என்று ஒரே வருடத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பெற்றார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை.

எனினும், தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்திலும், வான் படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) மேடம்…

3

ஜெயலலிதா இன்று நேரில் வந்து ஆணையிட்டார்? சட்டென எழுந்த பழனிசாமி

0

சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக இருக்கும் ரா.ரா.பிரபு அவர்கள் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா குரலில் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்கும் மாறும், கடினமாக உழைக்கும் மருத்துவ, காவலர் மற்றும் பிற பணியாளர்களை பாராட்டியும் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் குறிப்பாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகிய இருவரையும் பாராட்டியிருந்தார்.

மேலும் அதை கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாண்புமிகு அம்மா தான் முன்னே வந்து சொல்வது போல ஒரு கணம் உறைந்து போய் விட்டாராம். மறுகணம் எழுந்து தன்னை அறியாமல் எழுந்து மரியாதை செய்தாராம்.

அம்மா தான் முன்னே வந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்யுமாறு ஆணையிடுவது போன்ற தோன்றியதாம். அம்மாவிற்கு நிகழந்த துயர சம்பவமே மறந்து விட்டதாம்.

இது ஒரு விழிப்புணர்வுக்காக காமெடி நடிகர் ரா.ரா.பிரபு மிமிக்கிரி செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

3

தெலுங்கு வெர்ஷனை கேட்ட ரசிகர்கள்: டுவிட்டரில் டிரெண்டாகும் கத்தி!

0

கத்தி விஜய் படத்தின் தெலுங்கு வெர்ஷன் படம் இன்னும் வெளிவராததால், ரசிகர்கள் யூடியூப்பில் அல்லது டிஜிட்டல் இணையதளத்தில் வெளியிடும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கத்தி படத்தின் தெலுங்கு வெர்ஷனை வெளியிடக்கோரி ரசிகர்கள் கத்தி ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி திரைக்கு வந்த படம் கத்தி.

ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கினார். அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இது இரண்டாவது படம். விவசாயிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கத்தி படத்தில் விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என்று இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்ற இப்படம் தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற டைட்டிலிலும், ஹிந்தியில் காக்கி அவுர் கில்லாடி என்ற டைட்டிலிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் திரைக்கு வரயிருந்த கத்தி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. எனினும், 2017 ஆம் ஆண்டு கத்தி தெலுங்கு ரீமேக் திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தெலுங்கில் திரைக்கு வந்த கத்தி படத்தை யூடியூப்பில் அல்லது டிஜிட்டல் இணையதளத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இதற்காக கத்தி விஜய் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளருமான தாகூர் மதுவிற்கும் தெலுங்கு படத்தை டிஜிட்டல் இணையதளத்தில் வெளியிட வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தெலுங்கு கத்தி இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கத்தி ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

3

Ai Fen: சீனாவின் தில்லாலங்கடியை அம்பலப்படுத்திய மருத்துவர்

0

Ai Fen Video: கொரோனவை கண்டுபிடித்த நானே இத்தனை பலிக்கும் காரணம் என்று புலம்பும் சீன மருத்துவர். கொரோனாவை சீனா திட்டமிட்டு பரப்பியதா?

கொரோனா என்னும் கொடிய வைரஸ்

தற்போது உலகமே முடங்கி கிடைப்பதற்கு காரணம் இந்த கொரோனா எனும் கொடிய நோய்தான். எங்கிருந்து வந்தது?

எப்படி இது பரவுகிறது? என்றும் தெரிந்து கொள்வதற்கு முன்பே உலகில் இருக்கும் 50000-க்கும் மேற்பட்டோரை கொன்று விட்டது.

மருத்துவர் ஐஃபென்

பல நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவை கண்டுபிடித்த முதல் சீன மருத்துவரான ஐஃபென் (ai fen), ஒரு பரபரப்பு விடீயோவினை வெளியிட்டுள்ளார்.

கொரோனவைக் கண்டுபிடித்த நானே இத்தனை பேர் பலியாகக் காரணமாக அமைந்து விட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, முதல் முதலாக ஒரு நபர் காய்ச்சல் என்று என்னிடம் வந்தார். பின்னர் உடலில் பல பாகங்கள் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரின் ரத்த மாதிரிகளை நான் ஆய்வுக்கு அனுப்பினேன்.

அவர்கள் கூறியது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த சார்ஸ் எனும் வைரஸின் மாதிரியை போல் ஒரு புதிய வைரஸ் இவரை தாக்கியுள்ளது என்று கூறினார்.

உடனே நான் இதை என்னுடைய நெருங்கிய மருத்துவரிடம் கூறினேன், அவர் இதனை பற்றி வெளியில் சொல்லவேண்டாம் என்று கூறினார்.

இந்த செய்தி அரசின் காதுகளுக்குப்போய் அங்கிருந்தும் இதை பற்றி வெளியில் பேச வேண்டாம் என்று எனக்கு மிரட்டல்கள் வந்தது. நானும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

அந்த சமயத்தில்தான் வூஹானில் (Wuhan) பலர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது.

கொரோனா (Corona) என்று பெயர் வைப்பதற்கு முன்னால் மர்மக்காய்ச்சல் என்ற பெயரில் பலர் இறந்துள்ளனர்.

அதை எல்லாம் சீன அரசாங்கம் வெளியிடவில்லை. இந்த வைரஸ்தொற்று கடந்த வருடம் நவம்பர் மாதமே பரவத் தொடங்கியது.

இது தெரியாமல், அரசும் இதனை அரசியல்போக்கில் பார்த்ததனால் தற்போது இத்தனை பேருக்கு பரவியுள்ளது. இதற்கு நானும் ஒரு காரணம் என்று மிகவும் மனம் வருந்தி பேசினார்.

சீனாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நபர் பற்றி அரசுக்குத் தெரியும் ஆனால் உண்மையை மறைக்கிறது என்றும் கூறியுள்ளார்.

சீன அதிபர் முதலில் இது அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் இதை பரப்பியது எனக் கூறி அரசியல் செய்தார். ஆனால் இன்றோ அமெரிக்க நாடே கொரோனாவை தடுக்கமுடியாமல் விழிபிதுங்கி உள்ளது.

சீனா இந்த வைரஸை அவர்களுடைய நாட்டில் மட்டும் கட்டுப்படுத்திவிட்டு உலக நாடுகளுக்கு பரப்பி விட்டுள்ளது ஐஃபென் மூலம் உறுதியாகியுள்ளது.

இப்படி அவர் பேசி வீடியோ (ai fen video) வெளியிட்ட பின்பு அவரைக் காணவில்லை. அவரின் நெருங்கிய நண்பர்கள்கூட அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

அரசின் கட்டளையை மீறி இந்த விஷயங்களை வெளியில் கூறியதால் பயந்து தலைமறைவாகிவிட்டாரா அல்லது இப்படி பேசியதற்கு அரசு அவரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதா என்று தெரியவில்லை.

3

MS Dhoni : தோனி அடித்த முதல் சதம் 148

0

தோனி இதே நாள் ஏப்ரல் 5 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 148 ரன்கள் எடுத்து தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

அன்று தோனி என்றால் யார் என்றே தெரியாது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான தோனி தனது முதல் ஆட்டத்தில் ரன் அவுட் மூலம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அந்தத் தொடர் அவருக்கு சற்று சோகமாகவே முடிந்தது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான 6 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் தோனியை தேர்வு செய்தனர்.

அந்த ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இந்தியரின் கீப்பராக இருந்தார்கள்.

இருந்தும் அன்றைய கேப்டன் கங்குலி தோனியை கீப்பராக தேர்வு செய்தார் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் இடம் கிடைக்கவில்லை.

முதல் ஆட்டத்தில் மூன்று ரன்களுடன் வெளியேறிய தோனி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

இரண்டாவது ஒருநாள் போட்டி ஏப்ரல் 5 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கங்குலி பேட்டிங்கை தேர்வு செய்தார். சச்சினும் சேவாக்கும் களமிறங்கினார்கள்.

சச்சின் டெண்டுல்கர் 2 ரன்களில் வெளியேற, இப்பொழுது 6 வது இடத்தில் இறங்கும் தோனி அன்று மூன்றாவது வீரராக இறங்க கங்குலி வாய்ப்பு வழங்கினார்.

இந்த வாய்ப்பை கண்டிப்பாக பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் தோனி.

சேவாக் உடன் கூட்டணி அமைத்த தோனி நிதானமாக ஆடினார். இருவரும் சேர்ந்து 96 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி 122 ரன்கள் இருந்தபோது சேவாக் வெளியேறினர். அடுத்து வந்த கங்குலியும் பெரிதாக சோபிக்கவில்லை.

இந்திய அணி 140 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்துள்ளது. அடுத்ததாக களமிறங்கினார் இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிட்.

தோனியும் ராகுல் டிராவிட் இணைந்து பாகிஸ்தானே சோதித்து எடுத்தார்கள்.

தோனி 88 பந்துகளில் தனது ஒருநாள் போட்டியின் முதல் சதத்தை எடுத்தார். இந்திய விக்கெட் கீப்பர் களில் சதம் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார்.

இதற்கு முன்னால் ராகுல் டிராவிட் எடுத்திருந்தார். அவருடன் கூட்டணி அமைத்து தோனியின் சதம் எடுத்தார்.

தனது ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் அதுவும் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் எடுத்து அசத்தினார் தோனி.

ராகுல் டிராவிட் தோனியும் இணைந்து 149 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 279 இருந்தபோது தோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தோனி 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்திருந்தார் 15 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் இதில் அடங்கும்.

இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது.

சேவாக் 74 ரன்களும், டிராவிட் 52 ரன்களும் எடுத்தனர் பாகிஸ்தான் தரப்பில் நவீட் உள் ஹாசன் 3 விக்கெட்டும் அர்ஷத் கான் மற்றும் ஹபீஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடி இந்திய அணி பந்துவீச்சை சோதித்தார்கள்.

இறுதியில் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 298 ரன்கள் எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.

பாகிஸ்தானில் அதிகபட்சமாக அப்துல் ரசாக் 88 ரன்களும், முகமது யூசப் 71 ரன்களும், கமரன் அக்மல் 41 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா 4 விக்கெட்டும் யுவராஜ்சிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

148 ரன்கள் எடுத்த மகேந்திர சிங் தோனி ஆட்டநாயகன் விருதை முதல் முறையாக வென்றார்.

2005 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் தொடரில் 6 போட்டிகளில் 4 – 2 என்ற கணக்கில் பாகிஸ்தான் இந்திய மண்ணில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

3

Rashmika Mandanna: ரஜினிக்கும் ராஷ்மிகாவுக்கும் உள்ள தொடர்பு – வெளிவராத ரகசியம்

0
Rashmika Mandanna rajini geetha govidam

Rashmika Mandanna Birthday: ராஷ்மிகா மந்தனா யாருப்பா அது எனக் கேட்பவர் கூட உண்டு. கீதா கோவிந்தம் (Geetha Govindam) தெரியுமா எனக் கேட்டால் சட்டென சொல்லிவிடும் தமிழக இளைஞர் படை.

தெலுங்கு நடிகை?

ராஷ்மிகா தெலுங்கு நடிகையாக பிரபலம் அடைந்து இருக்கலாம்! ஆனால், அவர் தெலுங்கு நடிகை கிடையாது. அவர் முதலில் நடித்த படம் கன்னட மொழி படம். அவர் பிறந்த மாநிலமும் கர்நாடகா.

நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினி (rajini) எப்படி கர்நாடகாவில் கண்டெக்ட்டராக வேலை செய்து, தமிழகத்தில் நுழைந்து சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தாரோ? அதேபோல் ராஷ்மிகாவுக்கும் ஒரு பிளாஷ் பேக் உள்ளது.

ரஷ்மிகா முதலில் நடிகையாக அறிமுகமான படம் ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட மொழி திரைப்படம். அஞ்சனி புத்ரா, சமக் என மூன்று படங்கள் நடித்தும் பெரிய அளவில் புகழ் கிடைக்கவில்லை.

தெலுங்கு திரை உலகம்

அதன் பிறகு தெலுங்கு திரை உலகு இவரின் அழகை எப்படியோ கண்டு பிடித்து ஆந்திரா பக்கம் தூக்கிச் சென்றனர். சாலோ என்ற படத்தில் அறிமுகமானார்.

இதில் ஓரளவு தன்னுடைய அழகால் தெலுங்கு ரசிர்கர்களை கவர்ந்தார். இரண்டாவது படம் தான் அவரே எதிர்பாராத திருப்பு முனை.

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்தார். கீதா கோவிந்தம் (Geetha Govindam) படம். பேருக்கு ஏற்றார் போல் கோவக்காரா பொண்ணு.

அதில் இருக்குதே ஒரு பாட்டு தக்கச்சிமி.. தக்கச்சிமி.. என பரத நாட்டியம் ஸ்டைலில் துவங்கும் இன்கேம் இன்கேம் காவாலே! பாடல்.

பட்டிதொட்டி எங்கு பரவி ரசிகர்களை கிறங்கடித்தது. விஜய் தேவரகொண்டாவை மறந்து ரஷ்மிகா இதய ராணியாக மாறினார் பலருக்கு.

Rashmika Mandanna Photos  கீத கோவிந்தம் படம் zee5 ல இருக்கு பாருங்க

பிறகு இதைவிட ஒரு நடிகைக்கு என்ன வேண்டும். ஓவர் நைட்டில் ஒபாமா ஆனா கதை தான். தெனிந்தியா முழுவதும் ரஷ்மிகாவின் கொடி பறக்கத்துவங்கி விட்டது.

 

தமிழில் எப்போது நேரடி படத்தில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் கொஞ்சம் கிறங்கித்தான் உள்ளனர். ப்ரேமம் வந்த போது சாய் பல்லவி மேல் இருந்த அதே கிறக்கம் ரஷ்மிகா பக்கம் வந்துள்ளது.

அம்மணி கொஞ்சம் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு பக்கம் வந்துட்டு போங்க.. ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.

Rashmika Mandanna Birthday Date (5 April 1996) (Age 23)

இனிக்கி என்ன ராஷ்மிகாவ பத்தி புகழ்ந்து எழுதிட்டு இருக்கன்னு கேக்குறீங்களா இன்னிக்கு அவங்களுக்கு பிறந்த நாள். முதல்ல டிவிட்டர்ல ஒரு விஷ் பண்ணிட்டு வாங்க.

HBD Rashmika Mandanna கொஞ்சம் தமிழ் சினிமா பக்கம் வந்துட்டு போங்க…

3