கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடியிடம் மருந்து கேட்ட அதிபர் டிரம்ப், கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமரிடம் ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கேட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தபடுகிறதாம்.மலேரியா எதிர்ப்பு மருந்து எனவும் இதை கூறலாம்.
அதிபர் டிரம்ப் அவர்களும் ஒரு மாத்திரை சாப்பிட்டு பார்த்தாராம். பிறகு பிரதமர் மோடியுடன் நடந்த உரையாடலில் இந்த மாத்திரைககளின் தேவை எடுத்துக்கூறினாராம்.
மேலும் அவர் இந்தியாவில் 100 கோடிக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிக அளவு மருந்து தேவைபடலாம். எங்களுக்கும் அனுப்பினால் மிகுந்த உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியா ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது. ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Darbar; குடும்பத்தோடு பார்க்க இதோ நல்ல நேரம் வந்திருச்சு: டிவியில் தர்பார்! ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்த தர்பார் படம் இன்று பிற்பகல 12 மணிக்கு ஸ்டார் கோல்டு இந்தியா சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தர்பார் படம் இன்று பிற்பகல் 12 மணிக்கு ஸ்டார் கோல்டு இந்தியா சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்த படம் தர்பார். ரஜினியின் 167 ஆவது படமாக கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக தர்பார் (Darbar) படத்தில் நடித்திருந்தார். இவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மும்பையில் போதைப் பொருள் கும்பலை என்கவுண்டர் மூலம் சுட்டுத்தள்ளும் ஒரு டான் போலீஸ் தான் ரஜினி.
லைகா புரோடக்ஷன் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
என்னதான் ரஜினியின் வயதான தோற்றம் தர்பார் (Darbar) படத்தில் தெரிந்திருந்தாலும், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
பாடல்களும் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு இருந்தது. அதுல சும்மா கிழி பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.
பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக விக்கிப்பீடியாக தகவல் தெரிவிக்கின்றது.
திரைக்கு வந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆன நிலையில், தர்பார் (Darbar) படம் டிவியில் வெளியாக இருக்கிறது.
ஆம், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி 21 நாட்களுக்கு வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் ஸ்டார் கோல்டு இந்தியா என்ற ஹிந்தி சேனல் தர்பார் (Darbar) படத்தை இன்று ஒளிபரப்பு செய்கிறது.
இன்று பிற்பகல் 12 மணிக்கு தர்பார் படம் ஸ்டார் கோல்டு இந்தியா (Star Gold India, Today at 12 PM) என்ற ஹிந்தி சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. குடும்பத்தோடு அமர்ந்து தர்பார் (Darbar) படத்தை ரசிக்க இதுதான் சரியான நேரம்.
ஹிந்தியில் இன்று ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், தெலுங்கில் வரும் 10 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெமினி டிவியில் (Gemini TV, 10th April at 6.30 PM) ஒளிபரப்பாகிறது.
அப்போ தமிழ் சேனலில் வருமா என்று கேட்டால் வெளியாகும் என்றுதான் பதில். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு தர்பார் படம் சன் டிவியில் (SunTV, 14th April at 6.30 PM) ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக டுவிட்டரில் தர்பார் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
Today Headlines – 05 Apr 2020 : தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இரண்டாவது உயிரிழப்பு. அவர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த 4 மாடி கட்டிடத்தை வழங்கிய ஷாருக்கான்.
வெளியில் செல்லும்போது முககவசங்களை கட்டாயமாக்கி அனுயுங்கள் என்று தமிழக அரசு அறிவுரை.
வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 12 பேர் பலி 607 பேர் பாதிப்பு.
அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக ஆயிரத்து 480 பேர் உயிரிழப்பு.
சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக தொழுகையை செய்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு.
சென்னையில் வாகனங்களில் போலியாக மருத்துவர்கள், பிரஸ் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு உலாவரும் இளைஞர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக 58 ஆயிரத்து 480 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள திகார் சிறையில் உள்ள கைதிகள் சுமார் 75000 முக கவசங்களை தயாரித்து இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா சிறப்பு வார்டுகளில் உதவும் 3 சிறப்பு தானியங்கி ரோபோக்களை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
கொரோனா சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ரயில் சேவையை தொடங்குவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை இது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மளிகைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திறந்து ஒரு மணி வரை மட்டுமே இயங்கும்.
வேலையின்றி தவிக்கும் 25ஆயிரம் பாலிவுட் தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவினார்.
பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி செய்தார் நடிகை நயன்தாரா.
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூபாய் 34 ஆயிரத்தை தாண்டியது.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ தங்களுடைய ஸ்மார்ட்போனின் விலை அதிகரித்துள்ளது.
பிரபல கால்பந்து வீரர் நெய்மர் 7.60 கோடி நிதி உதவி வழங்கினார்.
கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக சச்சின் தோனி விராட் கோலி விஸ்வநாதன் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களுடன் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
யமுனா நதியா இது வியக்கும் டெல்லி மக்கள், கண்ணாடி போல் மின்னுகிறது. நியூ டெல்லி வழியாக செல்லும் யமுனா நதி மிக தூய்மையாக காட்சியளிப்பதை சமூக வலைதளத்தில் பகிரும் மக்கள்.
நாடே ஊரடங்கில் கடந்த 10 நாட்களில் இருப்பதால் இயற்கை வளங்கள் அனைத்தும் உயிர்பெற்று மீண்டும் தன்னுடைய பழைய திறனை பெற ஆரம்பிக்கின்றன.
நேற்று ஜம்மு காஷ்மீர் தவ்லதார் பகுதிகளில் இருக்கும் தொடர்ச்சியான பனி மலைகளை கண்டு வியந்த மக்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர்.
சில மாதங்களுக்கு முன் யமுனா நதி ஒரே மாசுபட்ட விஷ நுரையாக காட்சியளித்தது. இதனால் மிகவும் மக்கள் வருத்தம் அடைந்தனர். தற்போது வெறும் 10 நாள் ஊரடங்கில் தூய்மை அடைந்தவிட்டது நதி.
இந்த ஊரடங்கு மற்றும் கொரோனா பரவலின் மூலம் மனிதம் மற்றும் இயற்கையை விட்டு மனிதன் எந்த அளவிற்கு விலகி இருந்தான் என்பதை உணர்வான்.
Kaththi Telugu Version; கத்தி படத்தின் தெலுங்கு வெர்ஷன் படம் இன்னும் வெளிவராததால், ரசிகர்கள் யூடியூப்பில் அல்லது டிஜிட்டல் இணையதளத்தில் வெளியிடும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கத்தி படத்தின் தெலுங்கு வெர்ஷனை வெளியிடக்கோரி ரசிகர்கள் கத்தி ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி திரைக்கு வந்த படம் கத்தி.
ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கினார். அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இது இரண்டாவது படம். விவசாயிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கத்தி படத்தில் விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என்று இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்ற இப்படம் தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற டைட்டிலிலும், ஹிந்தியில் காக்கி அவுர் கில்லாடி என்ற டைட்டிலிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் திரைக்கு வரயிருந்த கத்தி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. எனினும், 2017 ஆம் ஆண்டு கத்தி தெலுங்கு ரீமேக் திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தெலுங்கில் திரைக்கு வந்த கத்தி படத்தை யூடியூப்பில் அல்லது டிஜிட்டல் இணையதளத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இதற்காக கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளருமான தாகூர் மதுவிற்கும் தெலுங்கு படத்தை டிஜிட்டல் இணையதளத்தில் வெளியிட வேண்டுகோள் வைத்துள்ளனர்.
தெலுங்கு கத்தி இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கத்தி ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
கொரோனா வைரஸில் அமெரிக்கா அதிகம் பாதித்தாலும் WWE wrestlemania 36 அறிவித்தபடி நடைபெற்று வருகிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200 நாட்களுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.
இதனால் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உயிரிழப்பில் அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த அந்தந்த அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவில் தற்போது 21 நாள் பிரதமர் அறிவித்த படி ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடம் உலக ரசிகர்கள் எதிர்பார்த்த wwe wrestlemania 2020 கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
WWE நிர்வாகம் அறிவித்தபடி “PAY PER VIEW” என்ற முறையில் டிவியில் நேரலை செய்யப்படும் என்றும், ரசிகர்கள் யாரும் அனுமதி யில்லை என்றும், எங்களுக்கு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலம் தான் முக்கியம் என்றும் அறிவித்து இருந்தார்கள்.
தற்போது அறிவித்தபடி ரசிகர் இல்லாமல் www wrestlemania அமெரிக்காவில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்கள் (4&5 தேதி)நடைபெறுவதாகவும் அறிவித்திருந்தார்கள்.
அறிவித்தபடி முதல்நாள் 4 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒர்லன்டோ நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
செத் ரோலின்ஸ் மற்றும் கேவின் ஓவன்ஸ் ஆட்டங்கள், அன்டர்டேக்கர் மற்றும் ஏஜே ஸ்டையில்ஸ் ஆட்டங்கள், யுவமன் டேக் டீம் சாம்பியன் போன்ற ஆட்டங்கள் நிறைவடைந்து விட்டன
Vijay; ஒரே நாளில் அஜித்தை பின் தள்ளிய தளபதி: இப்போ மட்டுமல்ல எப்போவுமே விஜய் தான் நம்பர் 1! அஜித்தை பின்னுக்கு தள்ளி தளபதி விஜய் நம்பர் இடம் பிடித்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் #VijayAlwaysNo1 என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.
ஹலோ ஆப்பில் (Helo) அதிக ஓட்டுகள் வாங்கி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.
பொதுவாகவே அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கம். ஆனால், படத்தின் பாடல், டிரைலர், போஸ்டர் படம் இப்படி ஏதாவது ஒன்று வெளியாகும் போதுதான் அவர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள்.
தற்போது நீ பெரியவனா? நான் பெரியவனா என்பதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டுள்ளனர்.
ஆம், ஹலோ ஆப்பில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் யார் நம்பர் ஒன் என்பதில் கடும் போட்டி நிலவியது.
இதில், அதிக வாக்குகள் பெற்று விஜய் முதலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார் (AjithVsVijayInHelo). அதன் பிறகு அஜித் ரசிகர்கள் அஜித்தை வெற்றி பெறச் செய்து, காலையில் அஜித் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில், தற்போது 4,69000 வாக்குகள் பெற்று விஜய் நம்பர் மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார்.
இதன் காரணமாக ஹலோ டிரெண்டிங்கில் #VijayAlwaysNo1 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தல அஜித் 4,56000 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஆனால், எதற்காக சந்தானம் 3 ஆவது இடம் பிடித்துள்ளார் என்பது தெரியவில்லை. அவர் 1,67000 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் ஹலோ ஆப்பில் யார் முதலிடம் என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க விஜய்யைப் பற்றி ரசிகர்கள் வசனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில், The One and Only King Actor Vijay,
Powerful People…!!!
Come From Powerful Places..!!
Vijay Always No 1
என்றெல்லாம் பதிவிட்டு விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Palm Sunday; ‘சாத்தான்கள் நம்மை பிரிக்கிறது’ எனக்கூறும் மத போதகர்கள், பால்ம் சன்டே அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி ஜார்ஜ்களை திறந்த மதகுருக்கள்.
சாத்தான் நம்மை எல்லாரையும் பிரிக்கிறான். நம்மை ஒன்று சேர்ந்து கர்த்தரிடம் மன்றாட விடமால் செய்கிறான். சாத்தானை நான் வெற்றி பெற விட கூடாது என போதகர் கெல்லி பர்டன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் 3 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7000க்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஞாயிற்று கிழமை ‘பால்ம் சன்டே’ புனித வாரத்தின் தொடக்க நாளான இன்று தேவாலயங்களை திறக்க முடிவு செய்துள்ளனர் அங்குள்ள மத போதகர்கள்.
சில போதகர்கள் இணையத்தில் வீடியோ கால் மூலம் போதிக்கலாம் என முடிவு செய்துள்ளக தெரிவித்தனர். ஆனால் சில அரசாங்க உத்தரவையும் மீறி ஜார்ஜுகளை திறக்கவுள்ளனர்.
மேலும் அவர்கள் நாங்கள் அரசாங்க உத்தரவை மீறுவது மக்களுக்கு கர்த்தரின் நற்செய்தியை கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். இது கர்த்தரின் ஆணை எனவும் கூறுகின்றனர்.
1000க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் திறக்க முடிவு செய்துள்ளதால் இது அரசாங்கத்திற்கு மிகுந்த சவாலாக அமையலாம். இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Kaká; யார் சிறந்த வீரர் மெஸ்சி அல்லது ரொனால்டோ? காகா தேர்வு செய்தது யாரை? அர்ஜெண்டினாவின் உலகப் புகழ் பெற்ற வீரரான லொயானல் மெஸ்சி தான் சிறந்த வீரர் என கூறிய முன்னாள் வீரர் காகா.
பிரேசில் லெஜெண்ட் வீரர்களில் ஒருவரான காகா கால்பந்தாட்டத்தில் அதிகம் பேசப்படும் ரொனால்டோ மெஸ்சி இடையேயான ஒப்பிடுகையை பற்றி கூறினார்.
இருவரையும் ஒப்பிடுகையில் மெஸ்சி தான் சிறந்த வீரர் என கூறியுள்ளார். நான் ரொனால்டோவுடன் விளையாடியுள்ளேன். அவர் மிகவும் வேகமாக விளையாடக்கூடியவர்.
மெஸ்சி ரொனால்டோவை விட மிகவும் நுணுக்கமாக விளையாடக்கூடியவர். அவர் இயற்கையாகவே நன்கு விளையாடும் திறன் படைத்தவர். கடந்த வருடம் மெஸ்சி 6 வது பல்லோன் டோர் விருது வென்றார்.
போர்ச்சுகள் லெஜெண்ட் கிறிஸ்டியனோ ரொனால்டோ இதுவரை 5 பல்லோன் டோர் விருதுகளை பெற்றுள்ளார். ரொனால்டோ மற்றும் காகா இருவரும் 2099-2013 வரை ஒன்றாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியுள்ளனர்.
பறவைக்காய்ச்சலால் முட்டை மற்றும் கோழி இறக்குமதியை தடை செய்த மாநில அரசு, பறவைக்காய்ச்சல் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது.
கொரோனா நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் கேரளாவில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு கோழிகள் அழிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சில இடங்களில் பறவை காய்ச்சல் பரவியது. தற்பொழுது கோவாவைச் சுற்றியும் சில மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறதாம்.
அதனால் முன் எச்சரிக்கையாக கோழி மற்றும் முட்டை இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்கிறோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கோவா முதல்வர்.
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் வாட்டி வதைக்கிறது. இந்த நேரத்தில் பறவைக்காய்ச்சல் மிகுந்த சிரமமாக அமையும் என தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளார் கோவா முதல்வர் பிரமோத்.
தமிழகத்தில் கோழி விலை சரிந்து, தற்பொழுது தான் மக்கள் மீண்டும் இறைச்சி பக்கம் திரும்பி உள்ளனர். தற்பொழுது மீண்டும் பறவை காய்ச்சல் பீதியால் கோழிகள் விற்பனை முற்றிலும் தடைபடும் என வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.