பறவைக்காய்ச்சலால் முட்டை மற்றும் கோழி இறக்குமதியை தடை செய்த மாநில அரசு, பறவைக்காய்ச்சல் இந்தியாவில் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது.
கொரோனா நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் கேரளாவில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு கோழிகள் அழிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சில இடங்களில் பறவை காய்ச்சல் பரவியது. தற்பொழுது கோவாவைச் சுற்றியும் சில மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறதாம்.
அதனால் முன் எச்சரிக்கையாக கோழி மற்றும் முட்டை இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்கிறோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கோவா முதல்வர்.
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் வாட்டி வதைக்கிறது. இந்த நேரத்தில் பறவைக்காய்ச்சல் மிகுந்த சிரமமாக அமையும் என தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளார் கோவா முதல்வர் பிரமோத்.
தமிழகத்தில் கோழி விலை சரிந்து, தற்பொழுது தான் மக்கள் மீண்டும் இறைச்சி பக்கம் திரும்பி உள்ளனர். தற்பொழுது மீண்டும் பறவை காய்ச்சல் பீதியால் கோழிகள் விற்பனை முற்றிலும் தடைபடும் என வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.