Home Blog Page 172

5/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

5/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று பதட்டமான சூழல் நிலவும். பொறுப்புகளை முடிக்க சிரமமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். பயணங்களை தவிர்க்கவும். பணவரவு போதுமான அளவு இருக்காது.

ரிஷப ராசிபலன்

ஆன்மீகத்தில் ஈடுபாடு அவசியம் தேவை. மன குழப்பமான சூழல் நிலவும். பணி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தியானம் செய்ய மன குழப்பம் தீரும். துணையிடம் அன்பாக இருக்க வேண்டும்.

மிதுன ராசிபலன்

இன்று உங்களுக்கு சாதகமான பலன்களை தரும் நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றங்கள் இருக்கும் நாள். குடும்ப ஒற்றுமை பெருகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்று உற்சாகத்துடன் இருப்பீர்கள். வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீட்டில் அனைவரிடமும் அன்பு பெருகும். தனலாபம் அதிகமாக இருக்கும் நாளாகும். மொத்ததில் பொன்னான நாளாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்று சோதனைகள் மிகுந்த நாளாக இருக்கும். நற்பலன்கள் குறைவாக கிடைக்கும் நாளாகும். குடும்ப சர்ச்சைகள் வர வாய்ப்புண்டு. பண இழப்பு ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் சூழல் நன்றாக இருக்காது. பேச்சில் கவனம் தேவை. தன வரவு இருக்க வாய்ப்பில்லை. கண் பிரச்சனைகள் வரலாம்.

துலாம் ராசிபலன்

இன்று அற்புதமான நாள் இருக்கும். எதிர்கால திட்டங்களை தீட்டுவீர்கள். வீட்டில் நல்லிணக்கம் ஏற்படும். நண்பர்கள் உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பயனுள்ள பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் லாபகரமாக இருக்கும். குழந்தைகள் நலன் மேம்படும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று மன உறுதி அவசியம் தேவை. வீண் செலவுகள் வர வாய்ப்புண்டு. குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதையும் எண்ணி குழம்ப வேண்டாம். புதிய பேச்சு வார்த்தைகள் வேண்டாம். மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள்.

மகரம் ராசிபலன் 

இன்று தங்களின் நம்பிக்கை இழக்க நேரிடலாம். சவாலான நாளாக இருக்கும். வம்புகள் வந்து சேர வாய்ப்புண்டு. துணையிடம் அமைதியான பேச்சுவார்த்தை அவசியம். செரிமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

கும்ப ராசிபலன்

இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். முன்னேற்றமான காரியங்கள் செய்வீர்கள். உங்கள் குடும்பத்தில் இன்பம் பெருகும்.  பணவரவு சிறப்பாக இருக்கும். அனைவரின் நல்லாதரவு கிடைக்கும் நாளாக இருக்கும்.

மீனம் ராசிபலன் 

உங்கள் இலக்குகள் அடைய வழிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் குறை எதுவும் இருக்காது.

5/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

பெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா நிதியுதவி!

0
Nayanthara Help FEFSI Workers

Nayanthara; பெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா நிதியுதவி! கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு இல்லாத நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நயன்தாரா (Nayanthara) பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் மட்டும் 75 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் 2,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவி செய்யுமாறு பெப்ஸி (FEFSI) அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பெப்ஸி மூலமாகவோ அல்லது திரைப்பட நல வாரியம் மூலமாகவோ அரசு உதவி செய்ய வேண்டும்.

எங்களது கோரிக்கையை ஏற்று, இதுவரை ரூபாய் 1,59,64,000 மற்றும் அரிசி மூட்டைகளும் வழங்கி உள்ளார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் சினிமா தொழிலாளர்களைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஜெகன் என்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களது பட்டியலில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார். ஆம், லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா பெப்ஸி தொழிலாளர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியாத போது சினிமா படப்பிடிப்பு எப்போது நடைபெறும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது சரியாகும் என்று ஏங்கி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு இந்த நிதியுதவிதான் தற்போது கஞ்சி ஊற்றிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

டிஸ்கவரி சேனலில் புதிய சாதனை படைத்த ரஜினிகாந்த்!

0
Rajinikanth Into The Wild With Bear Grylls

Rajinikanth; டிஸ்கவரி சேனலில் புதிய சாதனை படைத்த ரஜினிகாந்த்! ரஜினிகாந்த் நடித்த இண்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சி 1.2 கோடி மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த இண்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சி 1.2 கோடி மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதைத் தொடர்ந்து, தொலைக்காட்சியிலும் கால் பதித்துள்ளார். அண்மையில் பியர் கிரில்ஸூடன் இணைந்து இன்டு தி வைல்ட் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாலை 8.30 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இண்டு தி வைல்டு வித் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதுவரை 1.2 கோடி மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய எபிசோடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் விகிதம் 86 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த இந்நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் 5 மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

யார் இவர்கள் இணையத்தை கலக்கி வருகிறார்கள்

0

Pallbearers : சில நாட்களாகவே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள இவர்கள் மீம்ஸ் மற்றும் டிரோலர்களின் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் எவராவது ஒருவர் வீடியோவில் இறப்பது போல இருந்தால் அவர்களை இறுதியில் சவப்பெட்டிகள் தூக்கி கொண்டாடுவது போல் இவர்கள் வீடியோ இறுதியில் வந்து கலாய்ப்பது போல அமையும்.

முதலில் யார் இவர்கள் எதற்காக விதவிதமாக சவப் பெட்டிகளை தூக்கி கொண்டாடுகிறார்கள்?

இவர்கள் சினிமாவில் நடிப்பவர்களும் இல்லை. இவர்களது காட்சிகள் சினிமாவில் வருவதுமில்லை.

உண்மையில் இவர்கள் கானா நாட்டில் பாரம்பரியமாக சவப்பெட்டி தூக்குபவர்கள்.

நம்ம ஊர்களில் எவராவது இருந்தால் அவர்களை பாடைகட்டி தப்பு வைத்து மேளம் கொட்டி இறுதி சடங்கு செய்வார்கள்.

அதுபோல அந்த நாட்டில் எவரேனும் இருந்தால் இவர்கள் வந்து அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி அவர்களை சந்தோஷமாக வழியனுப்புவது இந்த நாட்டில் வழக்கமான ஒன்று.

இவர்களை அந்த நாட்டில் பால்பியரஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சிறிது காலமாகவே சமூக வலைதளங்களில் மற்றவர்களைக் கலாய்க்க இவர்களது வீடியோ பயன்பட்டு வருகிறது.

இவர்களது பல வீடியோக்கள் யூடியூபில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டு மீம்ஸ் வீடியோக்களில் வந்து கொண்டிருக்கிறது.

இவர்களது வீடியோவை யூடியூப்பில் பார்க்க கானா டெத் டான்ஸ் என்று சர்ச் செய்தாலே வந்து நிற்கும்.

தற்போது இவர்கள் வரும் வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களையும் சமுக வளைதள வாசிகளையும் ஈர்த்துள்ளது.

3

குஷியில் விஜய்க்கு நண்பனாக நடித்த ஷாம் பர்த்டே டுடே!

0
Shaam Birthday

Shaam Birthday; குஷி படத்தில் நடித்த ஷாம் பர்த்டே டுடே! விஜய் நடிப்பில் வந்த குஷி படத்தின் மூலம் அவரது நண்பராக நடித்த ஷாம் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் ஷாம் இன்று தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர் நடிகர் ஷாம். இவரது இயற்பெயர் ஷாம்சுதீன் இப்ராஹீம்.

பிகாம் படித்துள்ள ஷாம், பெங்களூரில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு நடிப்பில் இருந்த ஆர்வத்தால் கிட்டத்தட்ட 4 வருடம் சினிமா வாய்ப்பு தேடி அழைந்தார்.

ஷாமிற்கு மாடல் உதவியாளராக இருந்த பிஜூ ஜெயதேவன் உதவியுடன் ஒளிப்பதிவாளர் ஜீவாவை சந்தித்தார். இயக்குநராக அறிமுகமாக புதுமுக நடிகரை அவர் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் ஷாம் அவரிடம் வந்தார்.

அப்போது தான் ஜீவா இயக்கத்தில் ஷாம் நடிப்பில் 12பி படம் திரைக்கு வந்தது. இதுதான் ஷாமின் முதல் தமிழ் படம். ஆனால், இப்படத்திற்கு முன்னதாகவே விஜய் நடித்த குஷி படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

12பி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஷாமிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, பாலா, அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே, ஏபிசிடி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்தாண்டு காவியன் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தவிர, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

கல்லூரி தோழியான பஞ்சாபியைச் சேர்ந்த காஷிஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சமைரா மற்றும் கீரா என்று இரு மகள்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் காரணமாக நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷாம் சார்…

3

வலிமையுடன் இருக்க வேண்டும்: ஜாக்கி சான் வேண்டுகோள்!

0
Jackie Chan Awareness Video

Jackie Chan Corona Awareness Video; வலிமையுடன் இருக்க வேண்டும்: ஜாக்கி சான் வேண்டுகோள்! மக்களிடையே பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் ஜாக்கி சான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜாக்கி சான் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 100க்கும் அதிகமான உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனினும், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத போதிலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மக்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் ஹாக்கி சான் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்க்ம் நான் உங்கள் ஜாக்கிசான். இது அனைவருக்கும் கடினமான காலகட்டம்.

அனைவருமே ஒரே பிரச்சனையைத் தான் எதிர்கொண்டிருக்கிறோம். அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதே போன்று அனைவருமே வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வெளியில் செல்ல வேண்டுமென்றால், முகக் கவசங்களை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும்.

நீங்கள், உங்களை பாதுகாத்தால் அது உங்களது குடும்பத்தை பாதுகாப்பது போன்று. பாதுகாப்போடு, வலியாக இருங்கள். பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

3

விளக்கு வைப்போம்… அப்பவே சொன்னது: நீங்கள் என்ன புதுசா? கஸ்தூரி கிண்டல்!

0
Kasthuri Reply To PM Modi

விளக்கு வைப்போம்… அப்போவே சொன்னதுதான்: நீங்கள் என்ன புதுசா? கஸ்தூரி கிண்டல்! பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் எல்லாம் அப்பவே சொன்னது விளக்கு வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் விளக்கு வைப்போம் என்று வீடியோ பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி பிரதமர் மோடியை கிண்டலடித்து டுவிட்டரில் விளக்கு வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் ஊரடங்கை பின்பற்றி நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதித்த நாடுகளுக்கு இந்தியாவின் ஊரடங்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றது.

மேலும், வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிறன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து, மெழுகுவர்த்தி, அகல்விளக்கு, டார்ச்லைட், செல்போன் லைட் மூலமாக 9 நிமிடங்கள் ஒளியேற்றுங்கள். அப்போது நாட்டு மக்களைப் பற்றி யோசியுங்கள் என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கஸ்தூரி கிண்டல் டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், நாங்கல்லாம் அப்பவே சொன்னது… விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் என்று பதிவிட்டு ஒரு வீடியோவையும் அத்துடன் இணைத்திருந்தார்.

அந்த வீடியோ அவரது நடிப்பில் வந்த ஆத்மா படத்தில் இடம்பெற்றுள்ள விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம். குலம் விளங்க விளக்கு வைப்போம் என்ற அந்த பாடல் தான்.

தொடர்ந்து நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பிஸியாகவே இருக்கிறார். தற்போது மோடியை கிண்டலடிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டருக்கு பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

ஒரு சிலர் ஆரியத்தின் பரம்பரை தொழிலே அதுதான். இவ்வளவு ஏன், சதா, ரித்திகா நடிப்பில் வந்த படத்தின் டைட்டில் கூட டார்ச்லைட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக இது போன்று செல்போன் மூலம் ஒளி எழுப்புவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வேலைக்காரன் படத்தை மீண்டும் நினைவு கூர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஜாவேத் மியாண்டட்; சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை தூக்கிலிட வேண்டும்

0
ஜாவேத் மியாண்டட்
ஜாவேத் மியாண்டட்

ஜாவேத் மியாண்டட்; சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை தூக்கிலிட வேண்டும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆவேசம். கிரிக்கெட் சூதாட்டம் தூக்கு தண்டனை.

கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்காலிக மற்றும் நிரந்தர தடையில் செல்வதுண்டு. பிறகு சிறிது காலம் கழித்து அவர்களை மன்னித்து விளையாட அனுமதிப்பார்கள்.

இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் அவரது  யுட்யூப் தளத்தில்  இட்ட பதிவில், ஸ்பாட் பிக்ஸிங்க் கொலைக்கு சமம் அதை செய்தவர்களை தூக்கில் இட வேண்டும் என  கூறியுள்ளார்.

ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு கடுமையான தண்டனைகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அச்சம் ஏற்படும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களை மன்னித்து தவறு செய்கிறது. சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மன்னிபிற்கு தகுதி அற்றவர்கள் என கூறியுள்ளார்.

3

சச்சின் அக்தரா அல்லது சச்சின் மெக்ராத்தா எது சிறந்த போட்டி பிராட் ஹாக் கூறுவது யாரை?

0

சச்சின் அக்தரா இல்லை சச்சின் மெக்ராத்தா எது சிறந்த போட்டி பிராட் ஹாக் கூறுவது யாரை? Sachin-Akthar or Sachin-McGrath which is best rivalry said Brad Hogg.

கொரோனா உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் எந்த வித விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுகின்றனர் வீரர்கள்.

முன்னாள் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடல் செய்து வந்தார். அதில் ஒருவர் கேட்ட பதிலுக்கு சிறப்பாக பதிலளித்துள்ளார்.

அதில் அந்த ரசிகர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷோயப் அக்தர் இருவருக்கும் நடக்கும் யுத்தம் சிறந்ததா இல்லை சச்சின் மற்றும் கிளென் மெக்ராத் இருவருக்குமிடையே நடப்பது சிறந்ததா என கேட்டார்.

அதற்கு பிராட் ஹாக் கூறியதாவது,

சச்சினின் பொறுமையை சோதித்து நீண்ட விளையாட்டில் விவேகத்தை கொண்டு வருவார் மெக்ராத். ஷோயப் அக்தர் தன்னுடைய பலமான வேகத்தை சச்சினின் கூறிய திறமையை நோக்கி கூறி வைப்பார்.

சச்சின் அக்தர் விளையாடும் போட்டி சிறந்த ரைவல்ரியாக அமைய காரணம் இரு நாட்டிற்கும் இடையே இருக்கும் மிகுந்த ரசிக பெருமக்களே.

சச்சினைப் பற்றி மெக்ராத் மற்றும் அக்தர் கூறியது;

100 கோடி மக்களின் எதிர்பார்ப்புக்கும் சந்தோசத்திற்கும் இணங்க இருபது வருடங்களுக்கு மேல் உழைத்து பல சாதனைகளை படைத்தவர் சச்சின் – மெக்ராத்

நான் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு சச்சின் தான் காரணம். உலகத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் ஆவார். அவருக்கு நிகர் எவருமில்லை – அக்தர்

3

இதற்குத்தான் பாரீன் காதலரை திருமணம் செய்தேன்: ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ!

0
Shriya Saran Meditation

Shriya Saran Video; இதற்குத்தான் பாரீன் காதலரை திருமணம் செய்தேன்: ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ! நடிகை ஸ்ரேயா சரண் இதற்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

எனக்கு 20 உனக்கு 18, மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தோரணை, கந்தசாமி, குட்டி என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, நரகாசூரன், சண்டக்காரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகியுள்ளது.

தமிழைத் தவிர, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், பலரும் வீட்டில் தாங்கள் என்னெல்லாம் செய்கிறோம் என்பதை வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, பார்சிலோனாவில் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், நான் ஏன் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன் என்று வீட்டில் அவர் செய்யும் வேலையை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், அவரது கணவர் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கிறார். அதனை காண்பித்துவிட்டு, ஒவ்வொரு கணவரும் மனைவிக்கு இப்படி உதவுங்கள் என்று கூறி அவருக்கு முத்தம் கொடுக்கிறார். அந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

அதற்கு முன்னதாக, தியானம் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மன  ஆரோக்கியத்தை பாதுகாக்க, ஸ்ரேயா சரண், அவரது கணவர் ஆகியோர் மருத்துவர் உடன் தியானம் செய்தனர்.

நீங்களும் இந்த ஊரடங்கு நாட்களில் தியானம் செய்து உங்களது புகைப்படத்தை #MeditationWithShriya என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிடலாம்.

ஸ்ரேயா தியானம் செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

3