Home Blog Page 173

கொரோனா வைரஸ்: தப்பிய அஜித் – மிரண்டுபோன படக்குழு

0

கொரோனா வைரஸ் (corona virus): தப்பிய அஜித் (actor ajith kumar) – மிரண்டுபோன படக்குழு.  வலிமை படப்பிடிப்பு ரத்து (valimai shooting postpend).

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் நுழைவாயிலை இருக்க அடைத்துக்கொண்டு லக்டவுனில் உள்ளனர்.

இதனால் பல துறைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. அதில் குறிப்பாக சினிமா துறை. அவர்களுக்கு இந்த கோடை விடுமுறை காலமே நல்ல அறுவடை காலம்.

படங்கள் எக்கச்சக்கமாக ரிலீஸ் ஆகும். வசூலையும் வாரிக்குவிக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து படங்களுமே ரிலீஸ் தள்ளிச்சென்று விட்டது.

பிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் என்ற படம் ஜோர்டானில் படமாக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் இருந்து 58 பேர் சென்றனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

இதனால் ஆடுஜீவிதம் படக்குழு இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. மத்திய அரசும் யாரையும் தற்போதைக்கு உள்ளே அழைத்து வரும் நிலையில் இல்லை.

இப்படிதான் கனிகா கபூர் என்ற பாலிவுட் பாடகி மற்றும் நடிகை கொரோனா தொற்றுடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் யாராக இருந்தாலும் தற்போதைக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அஜித் வலிமை (ajith valimai) படப்பிடிப்பு வெளிநாடுகளில் ஏற்கனவே நடைபெற்று வந்தது. மீண்டும் சில கட்சிகள் வெளிநாடுகளில் எடுக்க திட்டமிடப்பட்டது.

முதலில் ஸ்பெயினில் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். அங்கு கொரோனா தீவிரத்தை கண்டு ஜோர்டானுக்கு செல்ல முடிவு செய்தனர்.

அவர்கள் நல்ல நேரம் முன் கூடியே லக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் லாக்டவுன் முடிந்த பின்பு  ஜோர்டான் சென்று படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தனர்.

ஆனால், பிரித்விராஜ் போன்றவர்கள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தையை பார்த்து படப்பிடிப்பை சில மதங்கள் தள்ளி வைத்துள்ளனராம்.

வலிமை படப்பிடிப்பு ரத்து

அஜித் ஏற்கனவே படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதால் சில நாட்கள் ஓய்வில் இருந்தார். இதன் காரணமாகவே வெளிநாடு செல்ல தாமதம் ஆனது.

ஒருவேளை அஜித் படக்குழு திட்டமிட்டபடி ஸ்பெயின் சென்று இருந்தால் விபரீதத்தில் முடிந்து இருக்க வாய்ப்பு உண்டு. நேற்று மட்டுமே 1000 பேர் கொத்தாக பலியாகி உள்ளனர் அந்த நாட்டில்

“தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு” என படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சுடன் வீட்டில் ஒய்வு எடுத்து வருகின்றனர்.

3

தாஜ் ஹோட்டல் மருத்துவ ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது

0
தாஜ் ஹோட்டல்

தாஜ் ஹோட்டல் மருத்துவ பணியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது, மும்பையில் தாஜ் மற்றும் பிற ஹோட்டல்கள் மருத்துவ ஊழியர்கள் தங்குவதற்கு இலவசமாக இடமளிக்கவுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான சொகுசு ஹோட்டலான தாஜ் IHCLக்கு சொந்தமானது. இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட சொகுசு ஹோட்டலும் இது தான்.

கொரோனா இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்களை விட அதிகம் சிரமப்படுவது மருத்துவர்களும் காவலர்களும் தான்.

இதனால் வேலை செய்து விட்டு நீண்ட தூரம் பயணம் செய்து சொந்த வீடுகளுக்கு உகந்த நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.

நாடே ஊரடங்கில் இருப்பதால் போதிய போக்குவரத்து இல்லாத காரணத்தால் இயங்கும் ஓரிரு வாகனங்களும் மிகவும் கூட்டமாக செல்கிறது.

இதனால் நோய் தொற்று ஏற்படும் பயமும் அவர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் இருக்கிறது. இந்த நேரத்தில் தானாக முன் வந்த சொகுசு ஹோட்டல்கள் இலவசமாக இடமளிக்கிறது.

மும்பையில் இருக்கும் பிரபலமான அனைத்து ஹோட்டல்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து மருத்துவ பணியாளர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

3

லொள்ளு சபா: இந்த காமெடிய மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

0

12 வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமான காமெடி ஷோ தான் லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியை மீண்டும் விஜய் டிவி ஒளிபரப்பு செய்ய உள்ளது

அன்று விஜய் டிவியை மக்கள் பார்ப்பதற்கு மர்மதேசம், மாயா மச்சீந்திரா, லொள்ளு சபா போன்ற தொடர் மற்றும் நிகழ்ச்சிகளை காரணம்.

அதிலும் ஒரு படத்தை எடுத்து அதிலுள்ள சீன்களையும் கலாய்த்து மக்களிடம் மிகவும் பிரபலம் பெற்றது.

ஈஸ்டர், லொள்ளு சபா மனோகர், சந்தான,ம் ஜீவா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.

பின்பு சந்தானம் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்தார். அதற்கு அடுத்து வந்த ஜீவாவும் சில படங்களில் காமெடியனாக நடித்தார்.

லொள்ளு சபா மனோகர் இன்றும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லொள்ளு சபா வீடியோக்கள் யூட்யூபில் அதிகம் பார்வையாளர்களைக் கடந்தது. இன்றுவரை மன உளைச்சலில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரித்துக் கொள்வார்கள்.

இதனாலேயே லொள்ளு சபாவின் யூடியூப் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை கடந்து உள்ளது.

இருந்தும் அதில் ஹை குவாலிட்டி வீடியோக்கள் கிடைப்பதில்லை. இது விஜய் டிவில் மட்டுமே உள்ளது.

90களில் பிறந்தவர்கள் லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப மாட்டார்களா? என்ற ஏக்கமும் இன்றளவும் இருந்துவருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு இந்திய மக்கள் இருந்து வருகிறார்கள்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல் மகாபாரதம் ,சக்திமான் போன்ற தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டார்கள்.

தற்போது விஜய் டிவியிலிருந்து ஒரு நல்ல செய்தி 90 கிட்ஸ்க்கு வந்து இருக்கு. லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.

2000 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை யூடியூபில் மட்டுமே பார்த்து கண்டு சிரித்து ரசித்து மகிழ்ந்தார்கள்.

தற்போது அவர்களும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்க்கப் போகிறார்கள். வருகிற சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.

இந்த செய்தி கேட்டவுடன் லொள்ளு சபா ரசிகர்கள் சனிக்கிழமை எதிர்நோக்கி உள்ளனர்.

3

Dhauladhar range; ஊரடங்கால் உயிர்பெறும் இயற்கை; இங்கே காணுங்கள் இயற்கை பேரழகை

0
Dhauladhar range
Concrete bitumen mountain road with white pillars against a scenic background of himalayan foothills and snow capped mountains

Dhauladhar range; ஊரடங்கால் உயிர்பெறும் இயற்கை; இங்கே காணுங்கள் இயற்கை பேரழகை , ஜம்மு காஷ்மீர் தவ்லதார் பகுதிகளில் இருக்கும் தொடர்ச்சியான பனி மலைகளை கண்டு வியக்கும் மக்கள்.

அளவுக்கு அதிகமான காற்று மாசுபாட்டால் தான் இருக்கும் இடத்தின் இயற்கை அழகை இது வரை கண்டிராத அவ்வூர் மக்கள் புதிதாகபார்த்ததும் புத்துணர்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.

பஞ்சாப் மாநிலத்தில் ஜாலந்தூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் 200 கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் உள்ள ஜம்மு காஷ்மீர் தவ்லதார் பகுதி மலைகளை கண்டு வியந்துள்ளனர்.

ஓட்டு மொத்த நாடே ஊரடங்கில் இருப்பதால் வெறும் 10 நாட்களில் காற்று மாசு மிக அதிகமாக குறைந்துள்ளது. இதனால் 200 கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் காட்சியளிக்கிறது.

இதைகண்ட மக்கள் சந்தோஷத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

https://twitter.com/ParveenKaswan/status/1246025488264343554?s=20

இது போன்ற நிகழ்வுகள் மூலம் மனிதர்கள் நாம் இயற்கையை மறந்து அதை விட்டு விலகி வாழ்வதை உணர்வோம். கட்டாயம் இது மனித சமுதாயத்திற்கு ஒரு பாடமாக அமையும்.

3

ராஷ்மிகாவுக்கு பர்த்டே கிஃப்ட் கொடுக்கப்போகும் பிரபலம்.. என்ன கிஃப்ட் தெரியுமா?

0

HBD Rashmika Mandanna : கன்னட சினிமாவில் 2016-யில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படம் ரிலீஸானது. இதில் ஹீரோவாக ரக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இது தான் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக அறிமுகமான முதல் படமாம்.
இதனைத் தொடர்ந்து ‘அஞ்சனி புத்ரா, சமக்’ என 2 கன்னட திரைப்படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்தார்.

அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) என்ட்ரியானார். ‘சலோ, கீதா கோவிந்தம், தேவதாஸ்’ என அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்களில் நடித்தார்.

இதில் ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில்  விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இப்படத்தில் வந்த ‘இன்கேம் இன்கேம் காவாலே’ எனும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, அப்பாடல் ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது.

கடைசியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடிப்பில் ரிலீஸான தெலுங்கு படம் ‘பீஷ்மா’. இதில் ஹீரோவாக நித்தின் நடித்திருந்தார். தற்போது, ராஷ்மிகா மந்தனா கைவசம் மூன்று படங்கள் உள்ளது.

நாளை (ஏப்ரல் 5-ஆம் தேதி) ராஷ்மிகா மந்தனாவின் (Rashmika Mandanna) பிறந்த நாளாம். அவரின் Comman Dp-யை இன்று மாலை 6 மணிக்கு பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3

தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு கொரோனா இல்லை

0

இந்தியாவில் இருந்து பாதியிலேயே நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்து உள்ளது.

அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து வருகிறது.

இந்த கொரோனா வைரஸை தடுக்க பல நாட்டு அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இந்தியாவின் பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் மக்கள் யாரும் வெளியில் வராமல் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணி 12, 15, 18 தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது.

முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தர்மசாலாவில் கைவிடப்பட்டது.

அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆரம்பம் ஆனதால் அடுத்த இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பாதியிலேயே மார்ச் 18 ஆம் தேதி நாடு திரும்பி 14 நாட்கள் அந்த நாட்டில் தனிமைப் படுத்தப் பட்டார்கள்.

அவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்தார்கள். இதில் 14 நாள் அவர்களை சோதனை செய்ததில் அவர்களுக்கு எந்தவித தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அந்த அணியின் மருத்துவர் அதிகாரி டாக்டர்.சோயிப் மஞ்சாரா தெரிவித்துள்ளார்.

இதுவரை தென்னாப்பிரிக்காவில் 1400 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதுவரை 5 பேர் இறந்துள்ளனர்.

3

விஜய்யை 2ஆவது இடத்துக்கு தள்ளி நம்பர் 1ல் தல: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

0
Ajith Ruling Helo

Ajith Ruling Helo விஜய்யை 2ஆவது இடத்துக்கு தள்ளிய தல: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்! ஹலோ ஆப்பில், தல அஜித் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும், ரசிகர்கள் அடித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில், அஜித் படங்களை விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் படங்களை அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது.

அஜித், விஜய் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்களுக்கு அது புரிவதில்லை. மாறாக எதிரிகளாகவே இருக்கின்றனர்.

அஜித்தைப் பற்றி விஜய் புகழ்ந்து பேசுவதும், விஜய்யைப் பற்றி அஜித் புகழ்ந்து பேசுவம் நடந்து வருகிறது.

அப்படியிருக்கும் இந்த ரசிகர்கள் மட்டும் ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை.

விஜய்யைவிட அஜித் ரசிகர்கள் எப்போதும் ”தல” மட்டுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கேற்பவும் ரசிகர்கள் தீவிரமாக முயற்சியில் ஈடுபடுவார்கள்.

விஜய் ரசிகர்கள் ஒன்றும் சலித்தவர்கள் அல்ல. இருவருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும். ஆனால், அஜித் ரசிகர்கள் அவரது ஒவ்வொரு படத்தையும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி டிரெண்டாக்கி அவரை நம்பர் ஒன் இடத்திலேயே வைக்கின்றனர்.

அந்த வகையில், தற்போது ஹலோ ஆப்பில் தல அஜித் நம்பர் ஒன் (Ajith Ruling Helo) இடத்தைப் பிடித்துள்ளார். ஆம், இதற்கு முன்னதாக முதலிடத்தில் இருந்த விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தில் காமெடி நடிகர் சந்தானம் இருக்கிறார்.

தொடர்ந்து அஜித் ரசிகர்கள்,

இனி எமனே வந்து தடுத்தாலும் தலையை கீழே இறக்க முடியாது.. நாங்கதான் எப்போவுமே கெத்து,

இனிமேல் ஹலோ ஆப்பில் தலையை தவிர வேறு யாரும் வர முடியாது,

நமது அஜித் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார், அதை நீட்டிக்க ஓட்டு போடுங்கள்,

ஆட்டம் வேணாம்னு தான் இருந்தோம்..

ஆட கூடாதுன்னு இல்லை…

நம்பர் ஒன் ..நாங்கதான்

போட்றா வெடிய

அஜித்தை எங்கேயும் தோற்கவிடமாட்டோம் என்று இருப்பவர்கள் இங்கே ஓட்டு போடுங்கள்…

எங்க கூட மோதுறதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசிக்க வேண்டும். யோசிக்காமல் மோதினால், மரண அடி வாங்குவீங்க…

தல இருக்கும் போது வால் ஆடக் கூடாது..

நமது உயிருக்கு மேலான தல அஜித்தை ஜெயிக்க வைப்போம் ஓட்டு போடுங்கள்…

என்றெல்லாம் தல அஜித் ரசிகர்கள் ஹலோவில் பதிவிட்டு வருகின்றனர்.

3

கொரோனாவால் அமெரிக்க நாடே அழியும் விழிம்பிற்கு சென்றுவிட்டது

0

கொரோனா வைரஸ் அமெரிக்காவிற்குள் நுழைந்த உடனேயே ட்ரம்ப் தக்க நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவு இன்று அமெரிக்க நாடே அழியும் விழிம்பிற்கு சென்றுவிட்டது.

கொரோனா பரவல்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் ஆரம்பநிலையில் இருந்தபோது, ட்ரம்ப் அமெரிக்காவை கொரோனா ஒன்று செய்யவில்லை என மீடியா முன்பு தோன்றி கூறினார்.

இது சீன வைரஸ் எல்லாம் எங்களை ஒன்று செய்யது என்கிற அளவில் அவர்களை நக்கல் அடிக்கும் நோக்கில் கூறினார்.

நாள் செல்ல செல்ல ட்ரம்ப் கொரோனா பதிப்பை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. இன்று வரை அமெரிக்க முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட வில்லை.

கொரோனா பாதிப்பு

நேற்றைய நிலவரப்படி அமெரிக்காநாட்டில்  கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,77,161 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,480 பேர் கொரோனா வைரஸ் கிருமியால் இறந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்ததடுத்த நாட்களில் அதிகரிக்க கூடும்.

ஆனால் இதுவரை அமெரிக்காவில் முற்றிலுமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. இதுவும் அதிர்ச்சி தரும் விசயமாக உள்ளது.

ட்ரம்ப் மூக்க குணம்

ட்ரம்ப் உலக நாடுகளுடன் சண்டையிடுவது, அமெரிக்காவிற்கு சுவர் கட்டுவதில் மட்டுமே மும்முரமாக உள்ளார். வைரஸ் பற்றிய எந்த ஒரு தெளிவும் அவரிடம் இல்லை.

அதிகாரிகள் கூறுவதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை. அமெரிக்க பெருமைகளை மட்டுமே மேடையில் பேசுகிறார். தோல்விகளை ஒப்புக்கொள்வது கூட கிடைத்து.

அமெரிக்க நாட்டில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அதை அமெரிக்க அரசு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

பணம் இருந்து பயனில்லை

பணம் இருந்தால் உலகத்தில் எதையும் விலைக்கு வாங்க முடியும் என ட்ரம்ப் நினைத்துக்கொண்டு உள்ளார். கொரோனாவுக்கு மருந்து என்ற உடன் முதல் ஆளாக பணத்தை அள்ளிக்கொடுத்து வாங்க முயன்றார்.

ஒரு மருந்து உபயோகத்திற்கு வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியாமலே அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை அவசரப்படுத்துகிறார்.

இப்படி ட்ரம்ப் தொடர்ந்து ஆபத்தான வழியில் பயணித்தால் ஒரே மாதத்தில் அமெரிக்காவின் மக்கள் தொகை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு வந்துவிடும்.

3

Baaram Movie Review; Will hit you hard If you’re in the same phase

0
Baaram Movie Review

Baaram Movie Review; Will hit you hard If you’re in the same phase. Baaram is written & directed by Priya Krishnaswamy.

Karuppasamy is a senior citizen who is living with his sister despite having a son. He lost his wife so early after his son marriage he gave all assets to his son including house. Like we see so many films his niece isn’t ready to preaching her father in law.

So he started working on his own for expenses and food. Veera is his sister’s son who’s doing some social activities learned many things from his uncle karuppaiah.

One fine day Karuppaiah met with accident this is where story took a turn. The doctor clearly said surgery only could make him walk but his son Senthil isn’t ready to spend single penny for him.

So Senthil took his father to his house let him paralyzed with illness. Senthil wife again started yelling for preaching his Father in law. Within few days Karuppaiah died.

Karuppaiah sister family came to funeral Veera find out the mystery in the murder. Veera started finding how his beloved uncle died. This could lead him to find a tradition followed by village peoples.

The Thalaikoothal tradition is used for whoever suffering long term pain, paralyzed to make mercy killing for redemption. This story reminds us how people like us feel when our parents are sick in their last times.

We  already see the  glance of this Thalaikoothal tradition showed already in KD engira Karuppu Durai movie.

We thought them as a burden in our life we didn’t spend time with them or didn’t give attention to their feelings. They (parents) spending their entire life for make our life better. Work hard for us. Spend most of time for us when we are sick.

But we aren’t ready take care for our parents when they’re ill or paralyzed. When we see the acting of the film, the Inexperienced cast performed really well.

I really like the performance of Veera and Senthil. When Senthil behave like adament & sadistic way which make everyone angry obviously whoever watching the film.

The director wants us to experience the art of the film. The screenplay seems really good. Some of the dialogues as well.

When Karuppaiah met with accident title Card Baaram (Burden) appears in the screen. Which I really loved. This meant who is going to take the burden after this accident.

This film won National Award for best feature tamil film. I think it deserved for it’s theme.

will you feel thalaikoothal tradition justify for those whoever suffering in bed long time? Let us know in the comments.

3

பத்திரிக்கையாளர், பாடலாசிரியர் நெல்லை பாரதி மறைவு: விஜய் சேதுபதி அஞ்சலி!

0
Nellai Bharathi Died

Nellai Bharathi Passed Away: பத்திரிக்கையாளர், பாடலாசிரியர் நெல்லை பாரதி மறைவு: விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி! மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி மறைவுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி (Nellai Bharathi) நேற்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

எழுத்தாளர், சினிமா பாடலாசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் என்று பல திறமைகளைக் கொண்டவர் நெல்லை பாரதி.

முதலில் மாணவ பத்திரிக்கையாளராக பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் பின், இயக்குநரும், நடிகருமான டி ராஜேந்தர் நடத்திய உஷா பத்திரிக்கையில் பணியாற்றினார்.

தொடர்ந்து தனது முயற்சியால் பல முன்னணி இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றிய நெல்லை பாரதி, சினிமாவில் பல படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நெல்லை பாரதி நேற்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நெல்லை பாரதி தனது கடைசி காலத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை பாரதியின் மறைவு செய்தி அறிந்த விஜய் சேதுபதி அவரது வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் (Vijay Sethupathi visit Nellai Bharathi House) என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒருசிலர் மட்டுமே நெல்லை பாரதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

3