Home சினிமா கோலிவுட் ஒரே நாளில் இத்தனை படங்களா? தொலைக்காட்சியை ஆளும் தளபதி விஜய்!

ஒரே நாளில் இத்தனை படங்களா? தொலைக்காட்சியை ஆளும் தளபதி விஜய்!

798
0
Thalapathy Vijay

Thalapathy Vijay; ஒரே நாளில் இத்தனை படங்களா? தொலைக்காட்சியை ஆளும் தளபதி விஜய்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் இன்று தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விஜய் நடித்த மெர்சல், தெறி மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்கள் இன்று மாலை சன் டிவி, சூர்யா டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். ரசிகர்களை, என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் என்று அழைக்ககூடிய நடிகர்.

குழந்தைகள், பெண்கள் என்று அனைவரையும், தனது நடிப்புத் திறமையால் கவர்ந்தவர். எப்போதும், குழந்தைகளிடம் அதிக அன்பு காட்டக்கூடியவர்.

இதுவரை ஏராளமான படங்களை ஹிட் கொடுத்துள்ளார். 64 படங்கள் வரை நடித்துள்ள விஜய்யின் தளபதி64 படமான மாஸ்டர் வரும் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படம் குறித்து தொடர்ந்து அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. தளபதி 65 படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதனை அவரது விக்கிப்பீடியா பக்கத்தின் இயக்குநர் பட்டியலில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் விஜய் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆம், மெர்சல், தெறி, திருப்பாச்சி ஆகிய படங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சி, சூர்யா டிவி மற்றும் சன் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் விஜய் நடித்த படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

காலை 8 மணிக்கு விஜய் டிவியில் துப்பாக்கி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே ஹலோ ஆப்பில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக, #VijayAlwaysNo1 என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇந்தியாவின் முதல் டி20 வீரர் யார் தெரியுமா?
Next articleகொரோனா: வீட்டிலேயே இருந்தா போர் அடிக்குதா? நடிகை மீனா அறிவுரை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here