Home Blog Page 156

ரசிகர்களிடம் கருத்து கேட்ட பிறகு அறிவிப்பு வெளியிட்ட விஷ்ணு விஷால்!

0
Vishnu Vishal

Vishnu Vishal Next; ரசிகர்களிடம் கருத்து கேட்ட பிறகு அறிவிப்பு வெளியிட்ட விஷ்ணு விஷால்! விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் டீசர் குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் டீசர் குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப்.ஐ.ஆர், இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அடுத்த படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தனது புதிய படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், வாழ்க்கை வேறு வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

அதே தினத்தில் சில நேர்மறை எண்ணத்துடன் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதற்கு முன்னதாக நான் இது போன்று பகிர்ந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து உங்களது ஆலோசனை வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பலரும், சினிமா விமர்சகர்கள் பலரும் ஓகே சொல்லியதைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு டைட்டில் அறிவிப்பு டீசரனை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்தப் போஸ்டரை பார்க்கும் பொழுது ஆக்‌ஷன், த்ரில்லர் படமாகவும், இதற்கு முன்னதாக வந்த ராட்சசன் படத்தை போன்றும் இந்தப் படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக #VishnuVishalsNEXT என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

அம்மாவின் பெயரையே மகளுக்கு மாடலாக வைத்த ராதிகா மகள்!

0
Rayanne Daughter Name

Rayanne Daughter Name Radhya Mithun; அம்மாவின் பெயரையே மகளுக்கு மாடலாக வைத்த ராதிகா மகள்! ராதிகா மகள் ரயன் தனது அம்மாவின் பெயரைப் போன்றே கொஞ்சம் மாடலா மாற்றி தனது மகளுக்கு ராத்யா என்று பெயர் சூட்டியுள்ளார்.

ராதிகாவின் பேத்திக்கு ராத்யா என்று ராதிகாவின் மகள் ரயன் பெயர் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பங்களில் ஒன்று ராதிகா – சரத்குமார் குடும்பம். இவரகளது குடுபம்பத்தில் பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்.

வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடித்து வருகிறார். ராதிகாவின் மகள் ரயன் கிரிக்கெட் வீரரான அபிமன்யு மிதுனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரயன் – அபிமன்யு மிதுன் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி  ரயனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது அந்த குழந்தைக்கு அம்மாவின் பெயரில் வரும் ராதிகாவின் முதல் இரு எழுத்துக்களை ஆரம்பமாக வைத்து ராத்யா மிதுன் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ தைரியமானவளாக வளர வேண்டும்.

அவளது பெயர் எனக்கு உயிர் கொடுத்தவர்களிடமிருந்து வந்தது. அவர்களைப் போன்று எனது மகள் ராத்யாவும் நிறைய சாதனைகள் புரிவாள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

3

ரீமேக் செய்த நிறுவனத்தை சூசகமாக விமர்சித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

0
Masakali Remake

Masakali Remake; ரீமேக் செய்த நிறுவனத்தை சூசகமாக விமர்சித்த ஏ.ஆர்.ரஹ்மான்! தனது பாடலை ரீமேக் செய்து ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளான நிறுவனத்தை ஏ.ஆர்.ரஹ்மான் சூசகமாக விமர்சனம் செய்துள்ளார்.

தனது பாடலை ரீமேக் Masakali Remake செய்த நிறுவனத்தை ஏ.ஆர்.ரஹ்மான் சூசகமாக விமர்சனம் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் இசையமைத்துள்ளார்.

பாலிவுட்டில் வெளியான டெல்லி 6 என்ற படத்திற்கு இவரே இசை. கடந்த 2006 ஆம் ஆண்டு அபிஷேக் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் வந்த இந்தப் படம் தோல்விப்படமாக அமைந்தது.

ஆனால், படத்திற்கு இசை கைகொடுத்தது. மசக்கலி என்ற பாடல் ஹிட்டோ ஹிட் கொடுத்தது.

டெல்லி 6 படத்தில் வந்த Genda Phool என்ற பாடலை பாட்ஷா என்ற இசையமைபபாளர் ரீமேக் செய்து டி சீரிஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதே போன்று, Masakali என்ற பாடலையும் ரீமேக் Masakali Remake செய்து நேற்று வெளியிட்டார். ஆனால், இதற்கு ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு வரவில்லை.

மோசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளனர். அதே போல டுவிட்டரில் #ARRahman, #masakali2 போல இரண்டு ஹேஷ்டேக்குகளும் டிரெண்டானது.

இந்த நிலையில், ரீமேக் செய்த நிறுவனத்தை விமர்சிக்கும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறுக்கு வழி கிடையாது 200 மேற்பட்ட இசையமைப்பாளர்கள் எழுதி 365 நாட்கள் ஒரு தலைமுறை நிலைக்கும் இசையை கொடுக்க மண்டையை குழப்பினோம்.

ஒரு குழு இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர்கள் நடன இயக்குனர்கள் மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பும் பிரார்த்தனையும் என்று பதிவிட்டுள்ளார்.

3

தமிழ் சொல்லித் தந்தது மனிதத்தை: நடிகர் சங்கத்திற்கு ஐசரி கணேஷ் பொருளுதவி!

0
Ishari Ganesh Donation

FEFSI Ishari Ganesh; தமிழ் சொல்லித் தந்தது மனிதத்தை: நடிகர் சங்கத்திற்கு ஐசரி கணேஷ் பொருளுதவி! கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 600 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்திற்கு அரிசி மூட்டைகளையும், பருப்பு மற்றும் இதர பொருட்களையும் வழங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 206 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஃபெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதியுதவி, அரிசி மூட்டைகளை தானமாகவும் கொடுத்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், அஜித், சூர்யா குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், யோகி பாபு என்று பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் இணைந்துள்ளார். ஆம், அவர், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் 600 அரிசி மூட்டைகளையும், பருப்பு மற்றும் இதர பொருட்களையும் வழங்கியுள்ளார்.

மேலும், இந்த போராட்ட காலத்தில் சுமூகமாக பயணிக்க ஏழைகளுக்கு உதவ தங்களால் முடிந்தவரை பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா அப்டேட்; உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் உயிரழப்பு

0
கொரோனா வைரஸ்

கொரோனா அப்டேட்; உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் உயிரழப்பு , Overall Corona toll reached one lakh. Coronavirus Outbreak. Corona cases & toll today.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளனர். இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இது வரை 206பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் இது வரை 6761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இது வரை 806பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 8 பேர் உயிரழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

3

This Day in History April 11; வரலாற்றில் இன்று ஏப்ரல் 11

0
This Day in History

This Day in History April 11; வரலாற்றில் இன்று ஏப்ரல் 11, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

1689ஆம் ஆண்டு மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1713ஆம் ஆண்டு எசுப்பானிய மரபுரிமை போரில் ஈடுபட்ட பெரும்பாலான ஐரோப்பிய அரசுகளுக்கிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

1829ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.

1241ஆம் ஆண்டு மோகி சமரில் அங்கேரியன் நான்காம் பேலா மன்னரை தோற்கடித்தார்.

1865ஆம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் தந்து கடைசி உரையை நிகழ்த்தினார்.

1909ஆம் ஆண்டு டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.

1079ஆம் ஆண்டு போலாந்து மன்னன் இரண்டாம் போலோஸ்லாவ் என்பவரின் கட்டளைக்கிணங்க கிரக்கோவோ ஆயர் இஸ்தானிஸ்லாசு தூக்கிலடப்பட்டார்.

1955ஆம் ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்சேசு என்ற விமானம் குண்டு வெடிப்பின் காரணமாக இந்தோனேஷியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

Today Birthdays in History

1862ஆம் ஆண்டு அமெரிக்க வானியலாளர் வில்லியம் வாலசு கேம்பல் பிறந்த தினம் இன்று.

1869ஆம் மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி பிறந்த தினம் இன்று.

1916ஆம் ஆண்டு உருசிய வானியலாளர் செர்கெய் அலெக்ஸாந்திரோச் ஷேவாக்கின் பிறந்த தினம் இன்று.

Today Deaths in History

1918ஆம் ஆண்டு ஆஸ்திரியா கட்டிடக்கலைஞர் ஓட்டோ வாக்னர் இறந்த தினம் இன்று.

1875ஆம் ஆண்டு சேருமானிய வானியலாளர் சாமுவேல் சுகுவபே இறந்த தினம் இன்று.

2007ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானேகேட் இறந்த தினம் இன்று.

3

National Pet Day 2020; தேசிய வீட்டு வளர்ப்பு பிராணிகள் தினம் 2020

0
National Pet Day

National Pet Day 2020; தேசிய வீட்டு வளர்ப்பு பிராணிகள் தினம் 2020, Here is how to celebrate Pets in Pets Day. வளர்ப்பு பிராணிகள் தினம் கொண்டாட்டம்

National Pet Day

நேஷனல் பெட் டே 2005ஆம் ஆண்டு கொளீன் பெய்க் (Colleen Paige) என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் தான் நேஷனல் நாய், பூனைகளுக்கு என தனி தனி சிறப்பு நாள் கொண்டு வந்தார்.

கொளீன் பெய்க் விலங்குகள் வாழ்வியல் மற்றும் உடல்நலத்துறை வல்லுனராக திகழ்ந்து வந்தார். முதன் முதலில் இந்த விழிப்புணர்வு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது.

How to Celebrate Pets

மனிதனுடைய இயந்திர வாழ்க்கையில் தனக்கெனவே நேரத்தை செலவிட மறுக்கிறான். இந்த நாளை வளர்ப்பு பிராணிகளுக்கென ஒதுக்க வேண்டும்.

அவைகளின் உடல் நலம் உணவுப் பழக்கம் என அனைத்தையம் கருத்தில் கொண்டு அவற்றை சிறப்பாக வளர்க்க வேண்டும்.

தெருவில் உணவின்றி வாழும் வளர்ப்பு விலங்குகளை மேலும் அக்கறை கொண்டு அவை வாழ்வாதாரத்திற்கு ஒரு வழி செய்து கொடுக்க வேண்டும் இவையே இந்த நாளின் நோக்கமாகும்.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்புthe day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

3

11/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

11/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று கடின உழைப்பு அவசியமான நாளாகும். சுய முன்னேற்றதிற்கான அடிதளத்தினை அமைத்து கொள்வது அவசியமாகும். பணம் எளிதாக கிடைக்கும் அதனை சேமித்து வைப்பது அவசியமான நாளாக இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று வெற்றி பெற உங்களின் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டிய நாளாகும். நன்மதிப்பு அனைவரிடமும் பெறுவீர்கள். குடும்பத்தில் துணையிடம் நல்ல புரிதல் இருக்க போகின்ற நாளாக அமையும்.

மிதுன ராசிபலன்

ஆன்மீகத்தில் இன்று அதிகமாக கவனத்தை செலுத்தவும். விரைவாக பலன்களை பெறக்கூடிய நாளாகும். பிறரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அன்பும், அரவணைப்பும் கலந்த நாளாக இருக்கப் போகிறது.

கடக ராசிபலன்

இன்று உங்களின் வெற்றியை கொண்டாட வேண்டிய நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலைகள் விரைவாக முடிந்து லாபம் பெற்று தரும். அற்புதமான நாளாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று சமோக சேவைகளில் ஈடுபடுவீர்கள். தொண்டுகள் புரிவதில் நாட்டம் அதிகமாக இருக்கும். இன்பமான சுற்றுச்சூழல் அமைய போகும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது.

கன்னி ராசிபலன் 

அதிக பொறுப்புகள் இருக்க போகின்ற நாளாக அமையும். தேவையான உரையாடல் மட்டும் பேசவும். வீணான வாக்குவாதங்கள் தேடி வர வாய்ப்புகள் அதிகம். அமைதியாக இருக்க வேண்டிய நாள்.

துலா ராசிபலன்

இன்று பல சவால்களை சந்திக்க நேரிடும். முயற்சிகள் இருந்தால் நாள் முடிவில் நல்ல பலன்களை பெறலாம். வீட்டில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காக்கைக்கு எள் அன்னம் வைக்க பிரச்சனைகள் தீரும்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்களிடம்  எதிர்பாராத அனைத்து நன்மைகளும் வந்து சேரும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படக்கூடிய நாளக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு. உறவுகளால் நன்மைகள் வந்து சேரும். குடும்ப பொருளாதாரம் மேம்பாடு அடையக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகர ராசிபலன் 

இன்றைய தினம் சுமாரான பலன்களை மட்டுமே வழங்க கூடிய நாளாகும். தேவைகளை நிறைவு செய்ய மிகவும் கஷ்டப்பட வேண்டிய நாளாக இருக்கும். பண சிக்கல் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. பலர் உங்களை பொறுமையை சோதித்து பார்க்கும் நிலை ஏற்படும். மனம் தளராமல் இருக்க வேண்டிய நாளாகும். தியானம் அவசியம் தேவையாகும்.

மீன ராசிபலன் 

இன்று மனதை வலிமையுடன் வைத்திருக்க வேண்டிய நாள். பணியிடத்தில் குழப்பமான சூழல் நிலவும். குடும்ப பிரச்சனைகள் ஏற்படக்கூடிய நாளாக அமையும். தொழிலில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

11/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

Bamfaad Movie Review; A Conflict Between Love and Betrayal leads to Series of Crime

0

Bamfaad Movie Review; A Conflict Between Love and Betrayal leads to Series of Crime. Bamfaad Movie Review Download. Bamfaad directed by Ranjan Chandel.

This entire story takes place Allahabad city. Nasir Jamal (Aditya Rawal) who is a freak accidentally fall in love with Neela (Shalini Pandey). Neela was taken care by Jigar Fareed (Vijay Varma) who is a local Gangster.

There is no deep relationship between Jigar and Neela. He is just using her for his physical needs by providing everything where neela is desperate about her life.

When Nasir fall for Neela Where the problem arises between jigar and nasir. Already They crossed each other for small college incident.

After the betrayal of his close friend Zahid (Jatin Sharma) Things lead to series of chaos in his life. How he face Jigar and Conquer Neela from him will be the rest of the story.

Bamfaad Film Review

When Neela Puts her hand on thighs of Nasir, asked him how do you feel? He couldn’t express anything he might feel nervous. The very next scene he took a shawl and cover her upper body goes out without speaking single word.

Bamfaad film review

This intrigues Neela more into relationship. The violence scenes didn’t the way romantic scenes drive the movie. When violence and Romance bond together at least one of it could have been more strong.

If director Ranjan Chandel gave more importance either one of it this made the narration more interesting. Director Ranjan Chandel already worked with Anurag Kashyab for the films of Mukkabaaz, Manmarziyan and Raman Raghav 2.0.

We can easily witness the storytelling style of this director resembles how anurag did in his films placing songs without disturbing the narration, sensuousness crimes scenes and etc.

Background scores didn’t give any grip for the scenes whereas I feel the cinematography is somewhat good where we can see few beautiful frames.

When it comes to performance the protagonist isn’t convincing who shared most the screen time. As usual Shalini Pandey as Neela did well. Jatin Sharma got popular after he played bunty in sacred games.

In this Jatin didn’t get a strong role. I expect more from Vijay Varma as Jigar after imtiaz ali’s She Where He played excellently but unfortunately he was underused here even though he did really well.

3

புள்ளிங்கோ புள்ளிங்கோ அரசு சொல்லுரத கேளுங்கோ – கருணாஸ் விழிப்புணர்வு பாடல்!

0
Karunas Thanithiru Vizhithiru Corona Song

Karunas Thanithiru Vizhithiru Corona Song; புள்ளிங்கோ புள்ளிங்கோ அரசு சொல்லுரத கேளுங்கோ – கருணாஸ் விழிப்புணர்வு பாடல்! கொரொனா வைரஸ் குறித்து நடிகர் கருணாஸ் விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

கருணாஸ் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தனிச்சிருங்க விழிச்சிருங்க Thanithiru Vizhithiru Corona Song கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா குறித்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கொரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

தனிச்சிருங்க விழிச்சிருங்க விசிலடிச்சான் புள்ளிங்கோ

ஊரடங்கு உட்காருங்க வீட்டிலேயே புள்ளிங்கோ

கொள்ளை நோயி கொரோனா, குரல்வளையை கவ்வுது

கொத்துக்கொத்தா மக்கள் எல்லாம் மண்ணுக்குள்ள மடியுது

என்று தொடங்கும் பாடல் அது தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3