Home சினிமா கோலிவுட் புள்ளிங்கோ புள்ளிங்கோ அரசு சொல்லுரத கேளுங்கோ – கருணாஸ் விழிப்புணர்வு பாடல்!

புள்ளிங்கோ புள்ளிங்கோ அரசு சொல்லுரத கேளுங்கோ – கருணாஸ் விழிப்புணர்வு பாடல்!

407
0
Karunas Thanithiru Vizhithiru Corona Song

Karunas Thanithiru Vizhithiru Corona Song; புள்ளிங்கோ புள்ளிங்கோ அரசு சொல்லுரத கேளுங்கோ – கருணாஸ் விழிப்புணர்வு பாடல்! கொரொனா வைரஸ் குறித்து நடிகர் கருணாஸ் விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

கருணாஸ் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தனிச்சிருங்க விழிச்சிருங்க Thanithiru Vizhithiru Corona Song கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா குறித்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கொரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

தனிச்சிருங்க விழிச்சிருங்க விசிலடிச்சான் புள்ளிங்கோ

ஊரடங்கு உட்காருங்க வீட்டிலேயே புள்ளிங்கோ

கொள்ளை நோயி கொரோனா, குரல்வளையை கவ்வுது

கொத்துக்கொத்தா மக்கள் எல்லாம் மண்ணுக்குள்ள மடியுது

என்று தொடங்கும் பாடல் அது தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleதனி ஒருவன் 2வில் தல அஜித்? உண்மையா இருந்தா மகிழ்ச்சியடைவோம்!
Next articleBamfaad Movie Review; A Conflict Between Love and Betrayal leads to Series of Crime

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here