the World Bank at the main venue for the International Monetary Fund (IMF) and World Bank annual meeting in Tokyo October 10, 2012. Japan is scheduled to host the IMF and World Bank annual meetings for the first time in nearly half a century. About 20,000 people are expected to attend the event, making it one of the world's largest international conferences. REUTERS/Kim Kyung-Hoon (JAPAN - Tags: BUSINESS POLITICS LOGO) - RTR38Z7M
கொரோனா இந்தியா; போனது 4000 கோடி, வந்தது 7600 கோடி, கொரோனா பாதிப்பு மூன்றாம் கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் உதவிக்கரம் நீட்டி உதவி செய்தது உலக வங்கி.
கொரோனா இந்தியாவில் சமூக பரவல் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி மருத்துவ செலவுக்காக நிதி திரட்டி வருகிறார். இந்த நிலையில் உலக வாங்கி 100 பில்லியன் டாலர் கொடுத்துள்ளது.
இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7600 கோடி ஆகும். இது இந்தியாவில் தீவிரகமாக நடந்து வரும் மருத்துவ ஏற்பாடுகளுக்கும் உபகரணங்களுக்கும் உதவியாக அமையம்.
இது ஒரு பக்கம் இருக்க, ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனம் 4000 கோடி நட்டத்தை சந்திக்க உள்ளது. இதனால் இயற்கை எரிவாயுக்கள் விலை 26 சதவிகிதம் குறைந்ததே காரணம்.
இந்த அளவிற்கு விலை குறைந்தது எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இது குறித்து அரசாங்கத்திடம் பேசிக்கொண்டு வருகிறோம் என இந்நிறுவ இயக்குனர் சசி சங்கர் தெரிவித்துள்ளார்.
Super Star Tom Cruise : ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார்’ டாம் க்ரூஸ் (Super Star Tom Cruise). இவர் படங்களுக்கென உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
டாம் க்ரூஸ் நடித்து கடைசியாக ரிலீஸான படம் ‘மிஷன் இம்பாஸிபிள் : ஃபால் அவுட்’. தற்போது, ‘ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்’ டாம் க்ரூஸ் கைவசம் ‘டாப் கன் : மாவெரிக்’ மற்றும் ‘மிஷன் இம்பாஸிபிள் 7 & 8’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது.
இதில் ‘டாப் கன் : மாவெரிக்’ படத்தை பிரபல இயக்குநர் ஜோசப் கோசின்ஸ்கி இயக்கி கொண்டிருக்கிறார்.
இப்படம் 1986-ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான ‘டாப் கன்’ என்ற படத்தின் சீக்குவல் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில், படத்தை ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வருகிற ஜூன் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
தற்போது, கொரோனா வைரஸ் நோய் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால், இந்த படத்தின் ரிலீஸை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ டாம் க்ரூஸ் (Super Star Tom Cruise) தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
I know many of you have waited 34 years. Unfortunately, it will be a little longer. Top Gun: Maverick will fly this December. Stay safe, everyone.
கொரோனா தடுப்பூசியை எலியில் சோதனை செய்ததில் நல்ல முடிவு, கோவிட்-19 வைரசுக்கு கண்டறிந்த தடுப்பூசியை எலியை சோதனை செய்த அமெரிக்கர்கள்.
உலகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசி கண்டறிய போட்டி போட்டு உழைத்து வருகின்றனர். கண்டு பிடித்த மருந்துகளை பரிசோதனை செய்தும் வருகின்றனர்.
அமெரிக்கர்கள் தாங்கள் கண்டறிந்த தடுப்பூசியை எலி ஒன்றுக்கு சோதனை செய்தனர். இதன் விளைவாக எலியின் நோய் எதிர்ப்பு சக்தியில் நல்ல முன்னேற்றம் உள்ளதாம்.
ஓரிரு மாதங்களில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா பர்த்டே டுடே! நடிகர், பிரபு தேவா இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபு தேவா இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகர் பிரபு தேவா. இவரது தந்தை சுந்தரம் ஒரு நடன இயக்குநர்.
தமிழ் சினிமாவில் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கின்றனர்.
நடிகர், இயக்குநர், நடன இயக்குனர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.
மின்சார கனவு – தேசிய விருது
மின்சார கனவு படத்தின் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபு தேவா சிறந்த நடன இயக்குநருக்கான இந்திய தேசிய விருது பெற்றார்.
பிரபு தேவா திரைப்பயணம்
கடந்த 1988 ஆம் ஆண்டு வந்த அக்னி நட்சத்திரம் படத்தில் குரூப் டான்ஸராக சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் குரூப் டான்ஸராக இருந்த பிரபு தேவா, சூரியன் படத்தில் வரும் லாலக்கு டோல் டப்பிமா என்ற பாடலுக்கு முதன்மை ரோலில் டான்ஸ் ஆடி ரசிகர்களின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றார்.
சூரியன் படத்தைத் தொடர்ந்து பிரதாப், ரக்சனா, ஜென்டில்மேன், வால்டர் வெற்றிவேல் ஆகிய படங்களுக்கு முதன்மை ரோலில் டான்ஸ் ஆடியுள்ளார்.
இந்து படம் – ஹீரோ
இந்த நிலையில், ரோஜா நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்து படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து காதலன், ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர், லவ் ஸ்டோரி, காதலா காதலா, நினைவிருக்கும் வரை, சுயம்வரம், வானத்தைப் போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
ஹிந்தில் வெளியான ஏபிசிடி படத்தில், இவரது நடிப்பு மற்றும் டான்ஸைப் பார்த்த நடிகர் வருண் தவான், இவரை டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் என்று பாராட்டியுள்ளார்.
பிரபு தேவா திருமணம்
பிரபு தேவா ராம்லாத் (லதா) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு, 3 குழந்தைகள். ஆனால், 2008 ஆம் ஆண்டில் மூத்த ஆண் குழந்தை புற்றுநோய் காரணமாக இறந்து போனது.
இதையடுத்து, இருவருக்கும் இடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
பிரபு தேவா – நயன்தாரா காதல்
இந்த நிலையில், பிரபு தேவாவிற்கும், நயன்தாராவிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதகாவும் கூறப்பட்டது.
இருவருமே நெருங்கி பழகினர். இந்த நிலையில், பிரபு தேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார்.
பிரபு தேவா – நயன்தாரா காதல் முறிவு
ராம்லாத்திற்கு ஆதரவாக பல பெண்கள் அமைப்புகள் குரல் கொடுக்கவே, 2012 ஆம் ஆண்டில் நயன்தாரா, தாம் பிரபு தேவாவிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
பிரபு தேவா தற்போதைய படங்கள்
கடந்த 2003 ஆம் ஆண்டு கடைசியாக எங்கள் அண்ணா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 13 வருடங்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவில் களமிறங்கினார்.
தமன்னா உடன் இணைந்து த்ரில்லர் படமான தேவி படத்தில் நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து வரிசையாக படங்களில் பிஸியாக இருக்கிறார்.
களவாடிய பொழுதுகள், குலேபகாவலி, மெர்குறி, லக்ஷ்மி, சார்லி சாப்ளின் 2, தேவி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பொன் மாணிக்கவேல் படத்தின் மூலம் முதன் முறையாக போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார்.
இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. மேலும், தேள், ஊமை விழிகள், பஹதீரா ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இயக்குநர்
தமிழில் விஷால் நடிப்பில் வந்த வெடி மற்றும் எங்கேயும் காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களையும் இயக்கியுள்ளார்.
பிரபு தேவா பிறந்தநாள்
இந்த நிலையில், பிரபு தேவா இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என்றும் பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர். மிஸ்டர் புயல் சார்பாக நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.
Artificial Intelligence; மனதில் நினைப்பதை எழுத்துக்களாக மாற்றும் டெக்னாலஜி, System that read human brains. செயற்கை அறிவுத்திறன்
மிக வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
செயற்கை அறிவுத்திறன் மூலம் நம் மூளையில் நினைப்பதை அப்படியே வார்த்தைகளாக மாற்றும் தொழிலநுட்பம் வந்துவிட்டது.
மிகவும் நுணுக்கமாக இன்னும் டெவெலப் செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக இதை அடைவது நீண்ட தூரத்தில் மட்டும் இல்லை.
இந்த தொழில்நுட்பம் டெவெலப் செய்வதன் மூலம் வாய் பேச இயலாதோர் மற்றும் டைப் செய்ய இயலாதோர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுத்தாக மாற்ற இயலும்.
இந்த தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஜோசப் மேகன் அவருடன் வேலை செய்யும் நான்கு நபரை பரிசோதனை செய்தார். அவர்களுக்கு 50 வாக்கியங்கள் கொடுத்து வாசிக்க செய்தனர்.
அவர்கள் வாசிக்கும் ஒவ்வொரு வாக்கியமும் ஒருவித ஸ்ட்ரிங் நம்பர்களாக மாற்றப்பட்டு பிறகு எழுத்துகளாக மாற்றப்பட்டது.
எதிர்பார்த்த அளவிற்கு இதன் முடிவுகள் துல்லியமாக வந்தது என கூறலாம். இதில் பங்கேற்ற ஒருவரின் முடிவில் வெறும் 3 சதவிகிதம் மட்டும் தவறாக வந்ததாம்.
மாவட்டம் முழுவதும் காய்கறிகளை வீடுகளுக்கு டெலிவெரி செய்ய முடிவு செய்த கலெக்டர், கொரோனா பரவலை தடுக்க காய்கறிகளை டோர் டெலிவெரி செய்ய முடிவு செய்த திருப்பூர் கலெக்டர்.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாள் ஊரடங்கை அரசாங்கம் அறிவித்தது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மல்லிகை மற்றும் பால் வாங்க காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திருப்பூர் அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் காய்கறி வீடு தேடி வர சிறப்பு வசதி செய்ய உள்ளது.
வீடு தேடிவரும் காய்கறிகள் என்னும் இந்தத் திட்டத்தின்படி, 30 ரூபாய்,, 50 ரூபாய், 100 ரூபாய் என மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மக்களின் வீடுகளுக்கு செல்லும்.
தாய்மார்களின் செல்லப்பிள்ளை தளபதி விஜய்: நடிகை ஆர்த்தி பாராட்டு! விஜய்தான் தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை என்று நடிகை ஆர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை விஜய்தான் என்று காமெடி நடிகை ஆர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனது கடின உழைப்பாலும், விடா முயற்சி, தன்னப்பிக்கையாலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.
தொடர்ந்து என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் என்று ரசிகர்களை அழைத்து வருகிறார். ஒவ்வொரு படமும் வெளியாகும் போது இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தவமாய் தவமிருக்கின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்களும் ஆர்வமாகவே இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அண்மையில், கூட மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
விஜய் குட்டி ஸ்டோரி: எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.. நீ நதிபோல ஓடிக்கொண்டிரு…வாழ்க்கையும் ஒரு நதி போலத்தான். நதி அதுபாதையில் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.
சிலர் அதில் விளக்குகளை விட்டு வணங்குவார்கள். சிலர், பூக்களை தூவி வழிபடுவார்கள். இன்னும் சிலர், அதில் கல்லை எறிந்து வழிபடுவார்கள்.
ஆனாலும், நதி அதுபாட்டுக்கு அதுபாதையில் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதுபோல நாமும் ஓடிக்கொண்டே இருப்போம். வாழ்க்கையில், வணங்குபவர்களும், வரவேற்பவர்களும், எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.
அவர்கள் அவங்கபாட்டுக்கு இருந்துட்டு போகட்டும். நாம், நம்ம வேலையை, கடமையை செம்மையாக செய்துகொண்டே நதிபோன்று போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
உண்மையாக இருக்க வேண்டுமென்றால், ஊமையாக இருக்க வேண்டியிருக்கிறது…போதும் ஆளவிடுங்கப்பா என்றெல்லாம் கூறி இருப்பார்.
இது போன்று ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு எத்தனையோ பேர் ஆவலுடன் இருக்கிறார்கள், இருப்பார்கள்…
மாஸ்டர்
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படம் அறிவித்தபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆதலால், மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, சினிமா பிரபலங்கள், ஓவியம் வரைவது, சமையல் செய்வது, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது என்று எப்போதும் பிஸியாக இருக்கின்றனர்.
தாய்மார்களின் செல்லப்பிள்ளை
அந்த வகையில், நடிகை ஆர்த்தியிடம் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த ஆர்த்தி கூறியிருப்பதாவது: தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை என்றும், தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார்.
Bharathiraja; கொரோனா வைரஸ் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா மாஸ்க் வழங்கியுள்ளார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு மாஸ்க் வழங்கி இயக்குநர் பாரதிராஜா உதவி செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என்று அனைவருமே களத்தில் இறங்கி மக்களுக்காக போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையில், மாஸ்க், உணவு ஆகியவற்றை பலரும் உதவி வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜாவும் அவர்களுக்கு மாஸ்க்குகள் வழங்கியுள்ளார்.
இது குறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது.
நன்றி உணர்வின் சிறிய அடையாளமாக காவல்துறையினர், துப்புரவு பணியாளகர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மாஸ்க்குகள், குளோஸ் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை வழங்கியுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Producer J Sathish Kumar; நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் கைவைக்க முடிவு? கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏராளமான படங்களும் முடங்கியுள்ளன.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால், நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் கைவைக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர், நடிகைகளின் சம்பளத்தில் கை வைக்க தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் (JSK – J Sathish Kumar) வற்புறுத்தியுள்ளார்.
தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகெட்ட நடிகர், நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் ஜேஎஸ்கே வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் காரணமாக சினிமா உலகம் முடங்கியுள்ளது. பணிகளும் முடங்கியுள்ளது.
தற்போது தயாரிப்பில் இருக்கும் படங்கள், திரைக்கு வரயிருக்கும் படங்களில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர், இசையமைப்பாளர்கள், முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளத்திலிருந்து குறைந்தபட்சமாக 30 சதவிகிதம் சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
அப்படி செய்தால் அது தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். அதோடு, திரைத்துறை பைனான்சியர்களும் 2 மாதம் அல்லது 3,4 மாதங்களோ வட்டி தொகையினை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு வழக்கம் போல் திரையரங்குகள் செயல்பட்டால், சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை மாறி மாறி வெளியாகும் வகையில் சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இதற்கு திரையரங்கு திரையரங்கு சங்கமும், திரைப்பட விநியோகஸ்தர் சங்கமும் துணை நிற்கவேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டம் முழுவதும் காய்கறிகளை வீடுகளுக்கு டெலிவெரி செய்ய முடிவு செய்த கலெக்டர், கொரோனா பரவலை தடுக்க காய்கறிகளை டோர் டெலிவெரி செய்ய முடிவு செய்த திருப்பூர் கலெக்டர்.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாள் ஊரடங்கை அரசாங்கம் அறிவித்தது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மல்லிகை மற்றும் பால் வாங்க காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திருப்பூர் அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் காய்கறி வீடு தேடி வர சிறப்பு வசதி செய்ய உள்ளது.
வீடு தேடிவரும் காய்கறிகள் என்னும் இந்தத் திட்டத்தின்படி, 30 ரூபாய்,, 50 ரூபாய், 100 ரூபாய் என மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மக்களின் வீடுகளுக்கு செல்லும்.