Home Blog Page 175

ரூ.350 கோடி பட்ஜெட் படத்துக்கு ஸ்கெட்ச்.. போட்டது நம்ம அலியா பட்! 

0

Alia Bhatt : பாலிவுட்டில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அலியா பட் (Alia Bhatt). இதனைத் தொடர்ந்து ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், டியர் ஜிந்தகி’ போன்ற பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக அலியா பட் (Alia Bhatt) நடிப்பில் ரிலீஸான படம் ‘Kalank’. தற்போது, அலியா பட்டின் கால்ஷீட் டைரியில் நான்கு படங்கள் உள்ளது.

இதில் ‘RRR’ (இரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி கொண்டிருக்கிறார். இப்படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் ‘யங் டைகர்’ ஜூனியர் என்.டி.ஆர், ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் என இரண்டு முன்னணி ஹீரோக்கள் சேர்ந்து நடித்து வருகிறார்கள். ராம் சரணுக்கு ஜோடியாக அலியா பட் (Alia Bhatt) நடிக்கவுள்ளார்.
மேலும், கதையின் மிக முக்கிய ரோல்களில் அஜய் தேவ்கன், அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் 80% நிறைவடைந்து விட்டதாம். நடிகை அலியா பட் (Alia Bhatt) வருகிற மே மாதம் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் படப்பிடிப்பில் இணைந்ததும் முதலில் பாடல் காட்சியை படமாக்க படக்குழு ப்ளான் செய்துள்ளதாம்.

3

லைக்ஸ் அள்ளிய தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரி!

0

Master Kutti Story Lyric; லைக்ஸ் அள்ளிய தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரி! மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

பிகில் படத்திற்குப் பிறகு விஜய் நடித்துள்ள புதிய படம் மாஸ்டர். பொதுவாக விஜய் படம் என்றால் ரிலீஸ் ஆகும் போதுதான் பிரச்சனையில் சிக்கும்.

ஆனால், இங்கு படப்பிடிப்பின் போதே பல பிரச்சனைகளை சந்தித்தது மாஸ்டர். அதையும் தாண்டி ரசிகர்களின் பேராதரவுடன் திரைக்கு வர தயாராகியுள்ளது.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா காரணமாக மாஸ்டர் ரிலிஸ் தேதி குறித்து அறிவிப்பு வரவில்லை.

எனினும் மே 1 ஆம் தேதி மாஸ்டர் ரிலீஸ் என்று புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் மட்டும் 1.6 மில்லியன் லைக்ஸ் அள்ளியுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ யூடியூப்பில் 43 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. அதோடு ஒரு லட்சம் டிஸ்லைக்குகளையும் குட்டி ஸ்டோரி பாடல் லிரிக் வீடியோ பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் ஏற்கனவே 8 பாடல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இவ்வளவு ஏன், வாத்தி கம்மிங் பாடல், சினிமா பிரபலங்களிடையே டான்ஸ் சேலஞ்ச்சையே உருவாக்கியுள்ளது. ஒவ்வொருவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் சேலஞ்ச் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

3

Vijay: மாஸ்டர் நியூ ரிலீஸ் தேதியுடன் வைரலான புதிய போஸ்டர்!

0

Master New Release Date; மாஸ்டர் நியூ ரிலீஸ் தேதியுடன் வைரலான புதிய போஸ்டர்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் நியூ ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் நியூ ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த நிலையில், உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் மட்டும் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், வரும் ஏப்ரல் 14  ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்து படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் ஒன்று.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் 22 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அன்று ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது சமூக விலகல் எனப்படும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இதன் விளைவாக மாஸ்டர் படம் அறிவித்தபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாஸ்டர் படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Master New Release Date

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் கூடிய மாஸ்டர் புதிய ரிலீஸ் தேதியும் வைரலாகி வருகிறது. ஆம், வரும் மே 1 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்று அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா? இல்லை ரசிகர்கள் இது போன்று செய்துள்ளனரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எனினும், மாஸ்டர் புதிய ரிலீஸ் தேதி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதோடு, மே 1 என்பது தொழிலாளர்கள் தினம். அதோடு, தல அஜித்தின் 49ஆவது பிறந்தநாள். ஆகையால், அவரது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது.

இதற்கு முன்னதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வரலாம் என்றுதான் நான் கோட் சூட் அணிந்து வந்தேன் என்று விஜய் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

3

பிரபல நடிகை சுனைனாவை தாக்கிய நாய்.. வைரலாகும் வீடியோ!

0

Sunaina : தமிழ் திரையுலகில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா (Sunaina). இதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் சுனைனா நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் சுனைனா நடித்திருக்கிறார். கடைசியாக சுனைனா (Sunaina) நடித்து கோலிவுட்டில் வெளியான படம் ‘சில்லுக் கருப்பட்டி’.

ஆந்தாலஜி படமான ‘சில்லுக் கருப்பட்டி’யை இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

‘சில்லுக் கருப்பட்டி’  படத்துக்கு பிறகு நடிகை சுனைனாவின் (Sunaina) கால்ஷீட் டைரியில் ‘ட்ரிப்’ மற்றும் ‘எரியும் கண்ணாடி’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘ட்ரிப்’ என்ற படத்தை அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் கதையின் மிக முக்கிய வேடங்களில் யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். வெகு விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று நடிகை சுனைனா (Sunaina) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘ட்ரிப்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுனைனாவை (Sunaina) நாய் ஒன்று ஓடி வந்து கடிப்பது போல் இடம்பெறும் காட்சியை படமாக்கும் போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

3

விஜய் படத்தின் சூப்பர் சீன்.. டிக் டாக் செய்து அசத்திய ‘மாஸ்டர்’ நடிகர்!  

0

Vijay Master : விஜய்யின் ‘மாஸ்டர்’ (Vijay Master) பட நடிகர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் கே.பாக்யராஜ். அவரின் மகன் சாந்தனு சில தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

சாந்தனு நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் தனா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

‘வானம் கொட்டட்டும்’ படத்துக்கு பிறகு நடிகர் சாந்தனு நடித்துள்ள படம் விஜய்யின் ‘மாஸ்டர்’
(Vijay Master). ‘தளபதி’ விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாந்தனுவிற்கு மிக முக்கிய வேடமாம்.

‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, விஜய்யின் ‘மாஸ்டர்’ (Vijay Master) படத்தில் நடித்திருக்கும் சாந்தனு, விஜய்யின் ‘போக்கிரி’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்கு  தனது மனைவி கீர்த்தியுடன் இணைந்து டிக் டாக் செய்துள்ள வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

3

ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்த ஹரிஹரன் பர்த்டே டுடே!

0

ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்த ஹரிஹரன் பர்த்டே டுடே! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பின்னணி பாடகர் ஹரிஹரன் இன்று தனது 65ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பின்னணி பாடகர் ஹரிஹரன் இன்று தனது 65ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்தவர் பின்னணி பாடகர் ஹரிஹரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரோஜா என்ற படத்தில் தமிழா தமிழா நாளை என்ற பாடல் பாடினார்.

ரோஜா படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கசல் பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சி பெற்ற ஹரிஹரன், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். கடந்த 2004 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

ஹரிஹரன் வென்னிலவே வென்னிலவே, முதல் மழை, பாடல், குறுக்கு சிறுத்தவலே, உதயா உதயா, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் என்று எத்தனையோ பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் பலரும் ஹரிஹரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் மூலம் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.

ஹேப்பி பர்த்டே ஹரிஹரன் சார்….

3

‘துப்பாக்கி’ சீக்குவல் தான் ‘தளபதி 65’.. விஜய்-க்கு ஜோடியாக 2 முன்னணி ஹீரோயின்ஸ்!

0

Thalapathy 65 : ‘தளபதி’ விஜய்யின் 65-வது படம் (Thalapathy 65) குறித்த சுவாரஸ்ய தகவல் கசிந்துள்ளது.  கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ‘தளபதி’ விஜய் (Thalapathy Vijay). இவர் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’.

‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யின் 65-வது படத்தை (Thalapathy 65) முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளாராம். இப்படம் 2012-ஆம் ஆண்டு விஜய் – முருகதாஸ் காம்போவில் வெளியாகி மெகா ஹிட்டான ‘துப்பாக்கி’ படத்தின் சீக்குவலாம்.

இன்னும் பெயரிடப்படாத இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கவிருக்கிறார். தற்போது, ‘தளபதி’ விஜய்யின் 65-வது படத்தில் (Thalapathy 65) அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

3

ரஜினி, கமல் உடன் ஜோடி சேர்ந்த நடிகை ஜெயபிரதா பர்த்டே டுடே!

0

Jaya Prada Birthday; ரஜினி, கமல் உடன் ஜோடி சேர்ந்த நடிகை ஜெயபிரதா பர்த்டே டுடே! ரஜினிகாந்த், கமல் ஹாசன் உடன் இணைந்து நடித்த நடிகை ஜெயபிரதா இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை ஜெயபிரதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் கடந்த 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி பிறந்தவர் நடிகை ஜெயபிரதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், கே பாலசந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த மன்மத லீலை படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மன்மத லீலை படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் டப் செய்யப்பட்டது.

இப்படத்தைத் தொடர்ந்து கமல் ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடித்தார். மேலும், 47 நாட்கள், சலங்கை ஒலி, ஏழை ஜாதி, தசவதாரம், கேணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இருந்த ஜெயபிரதா அந்தக் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். 2004 பொதுத் தேர்தலின்போது உத்திரப்பிரதேசத்தின் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில், இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பாக நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெயபிரதா மேடம்…

3

மனிதநேயம், ஆன்மீகம் ஆகியவற்றின் மகத்துவத்தை செயலில் காட்ட வேண்டிய நேரம்: ரஹ்மான்!

0

A R Rahman; வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையும் நேரமிது: ரஹ்மான்! கொரோனா வைரஸுக்கு எதிராக வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையும் நேரமிது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சுயநலமற்று தைரியமாக மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி. நம்மைக் காப்பாற்ற தங்களது உயிரையே பணயம் வைத்துள்ளனர்.

கொரோனாவுக்கு எதிராக வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையும் நேரமிது. மனிதநேயம், ஆன்மீகம் ஆகியவற்றின் மகத்துவத்தை செயலில் காட்ட வேண்டிய நேரம். உறவினர்கள், முதியவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்.

கடவுள் நம் மனதில் இருக்கிறார். மதத்தின் அடிப்படையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இது இல்லை. அரசின் அறிவுரைகளை கேட்டு மக்கள் அனைவரும் தனிமையில் இருக்க வேண்டும். வதந்திகளை பரப்பி மக்களிடையே அச்சத்தை உருவாக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

3

மிரட்டும் ஸோம்பி.. வெளியானது ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ டீசர்!

0

Train To Busan 2 : தென் கொரியாவில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ட்ரெயின் டு புசான்’ (Train To Busan). இந்த படத்தை பிரபல இயக்குநர் இயோன் சாங்-ஹோ இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் சீக்குவலாக ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ (Train To Busan 2 : Peninsula) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ஸோம்பி த்ரில்லர் ஜானர் படமான இதனையும் இயோன் சாங்-ஹோவே இயக்கி கொண்டிருக்கிறார். இதில் முக்கிய வேடங்களில் கேங் டோங்-வான், லீ ஜங்-ஹியூன், லீ ரீ, க்வோன் ஹே-ஹ்யோ, கிம் மின்-ஜெய், கூ கியோ-ஹ்வான், கிம் டு-யூன், லீ யே-வான் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ (Train To Busan 2 : Peninsula) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ (Train To Busan 2 : Peninsula) படத்தை இந்த ஆண்டு (2020) ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

3