இன்று ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.
3/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
CoronaVirus Movie Teaser; லிஃப்டுக்குள்ளே கொரோனா வைரஸ்: வைரலாகும் கொரோனா பட டீசர்! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை மையப்படுத்தி கொரோனா படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பட டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியது. 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டும் 1637 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், கொரோனா 38 பேரது உயிரை காவு வாங்கியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் என்ற டைட்டிலையும், வைரஸ் தொற்றையும் மையமாக வைத்து படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்தவர் இயக்குநர் முஸ்தபா கேஸ்வாரி. இவர், கடந்த ஜனவரியில், கொரோனா பீதியால் லிஃப்டில் தாக்கப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்தவரின் கதையை மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி கொரோனா டீசர் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விளக்குமாத்தால் அடிக்கணும்… அப்போதான் புத்தி வரும்: பிரதமருக்கு சூரி வேண்டுகோள்! வவ்வால், பாம்பையும் சாப்பிட்டவர்களை விளக்குமாத்தால் அடித்து விரட்ட வேண்டும் என்று சீன பிரதமருக்கு போன் போட்டு தெரியப்படுத்த வேண்டும் என்று சூரி இந்திய பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கொரோனாவுக்கு மாத்திர, மருந்து கண்டுபிடிச்சு விளக்குமாத்தால் அடிக்கணும் என்று சூரி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பீதியில் இருக்கிறது. இந்தியாவில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காமெடி நடிகர் சூரியும், தனது மகன், மகளுடன் சேர்ந்து கொரோனா வீடியோ வெளியிட்டார்.
அதன் பிறகு வீட்டில் பிரியாணி செய்யும் வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், பாத்ரூமில் தனது மகன் செய்யும் சேட்டைகளை எலலம் சகித்துக் கொண்டு அவனை குளிக்க வைக்கிறார். அப்போது, மோடி அய்யா உங்களைக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்.
வெளியில் போனால் கொரோனா கொன்றுவிடும் என்கிறீர்கள். வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கி பசங்க நம்மை கொன்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.
இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். எப்படியாவது கொரோனாவுக்கு மருந்து, மாத்திரை கண்டுபிடித்து விளக்குமாத்தால் அடித்து அதை விரட்டிவிடுங்கள் அய்யா.
அப்படியே சீன பிரதமருக்கு ஒரு போன் போட்டு இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருந்த அந்த வவ்வால், பாம்பை சாப்பிட்ட பக்கி பசங்களை விளக்குமாத்தால் அடிக்கச் சொல்லுங்கள்.
அப்போதான் புத்தி வரும் என்று கூறுகிறார். மேலும், கழிப்பறையைச் சுத்தம் செய்யத் தொடங்கும் சூரி, நான் ஒடம்புக்கு சோப்போட்டு குளிக்கமாட்டேன்.
இதுல இதெல்லாம் போட்டு தேய்க்கணுமா? என்று கூறுகிறார். தொடர்ந்து, நம்ம பசங்க போன கழிப்பறையை சுத்தம் செய்யும் போதே மூச்சு முட்டுகிறதே, நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அசுத்தத்திற்குள் இறங்கி, அதாவது பாதாள சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்கிறார்களே.
ஒவ்வொருவரது கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இப்போதுதான் புரிகிறது. மனதாலும், உடலாலும், உணமையாகவே சுத்தமானவர்கள் அவர்கள்தான். நீங்கள் எப்போதும் நல்லா இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ram Gopal Varma; ராம் கோபால் வர்மாவுக்கு கொரோனாவா? பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
என்னது ராம் கோபால் வர்மாவுக்கு கொரோனாவா?
தனக்கு கொரோனா என்று அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
உலக நாடுகளே கொரோனா பீதியில் இருக்கிறது. இவ்வளவு, ஏன் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாகத்தான் நாடே ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் கொரோனா பீதியில் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
யாருக்குமே கொரோனா பாதிப்பு வரக்கூடாது என்று தான் ஒவ்வொருவரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அப்படியிருக்கும் போது இந்த இயக்குநருக்கு கொஞ்சம் நக்கல் போல.
தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது உறுதி செய்யப்பட்டது என்று பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
அவரது டுவீட்டைப் பார்த்த பலரும், நீங்கள் இந்த கொரோனாவை விட பயங்கரமானவர் என்பதால், இந்த கொரோனா உங்களை ஒன்றும் செய்யாது என்றெல்லாம் கூறி கிண்டலடித்தனர்.
மேலும், சிலர் எங்களையெல்லாம் முட்டாளா ஆக்காதீங்க என்று குறிப்பிட்டனர். அவர்கள் குறிப்பிட்டது போலவே, ராம் கோபால் வர்மா, தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா இல்லை.
எனது டாக்டர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார். என்னை April Fool ஆக்கிவிட்டார். இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த பலரும் அவரை விமர்சனம் செய்துள்ளனர். நாடே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு விளையாடுவதற்கு வேறு ஒன்றும் இல்லையா? என்றெல்லாம் அவரை விமர்சித்துள்ளனர்.
இன்னும் சிலர், இந்த ஆளை புடுச்சு ஜெயிலில் போடுங்க சார் என்று போலீசாரிடம் ஆன்லைனில் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Keerthy Suresh; என்னது கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? க்ரீன் சிக்னல் கொடுத்தாச்சா? நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பாஜகவில் முக்கிய பங்கு வகிப்பதால், பாஜக தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், கீர்த்தி சுரேஷ் பாஜக தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்காகவே கீர்த்தி சுரேஷ் எந்த படத்திலும் கமிட்டாகவில்லையாம்.
கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் கதை கேட்டுள்ள அவர் நல்ல கதை வித்தியாசமாக இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்று அனுப்பிவிடுகிறாராம்.
தற்போது கீர்த்தி சுரேஷின் தந்தை பாஜகவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கீர்த்தி சுரேஷுக்கு முடித்து வைக்க முடிவு செய்துவிட்டாராம். இதற்கு கீர்த்தி சுரேஷும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம்.
விரைவில், கீர்த்தி சுரேஷ் – பாஜக தொழிலதிபர் திருமணம் உறுதி என்று அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார். ஆனால், அந்த பாஜக தொழிலதிபர் யார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
Ramya Pandian; சூர்யா படத்தில் ரம்யா பாண்டியன்! சூர்யா படத்தில் நடிக்க இருப்பதாக ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சூர்யா படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வந்த ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார்.
அதன் பிறகு போதுமான படவாய்ப்பு இல்லாததால், தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார்.
அப்போது தான், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெள்ளித்திரையை இந்நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் அன்பையும் வரவேற்பையும் பெற்றார்.
மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக வீட்டிலேயே இருக்கும் ரம்யா பாண்டியன் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது,
அப்போது அவர் நடிக்க இருக்கும் புதிய படங்கள் குறித்த கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சிவிகுமார் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டதும், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகக்கோப்பை பைனல் 2011 புல் மேட்ச் மீண்டும் இன்று ஒளிபரப்பு. இன்று இந்தியா உலகக்கோப்பை போட்டியை வென்ற நாள். world cup 2011 final full match live star sports.
இதனை கொண்டாடும் வகையில் மீண்டும் உலகக்கோப்பை போட்டியை தொலைக்காட்சியில் இன்று மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
உலகக்கோப்பையின் முழுப்போட்டியை பார்க்காதவர்கள் மீண்டும் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு. உலகக்கோப்பை பைனல் 2011
டிவி சேனல்கள் பெயர்கள் டிவி சேனல்கள் – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் ஆகிய சேனல்களில் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காணலாம்.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பாக உள்ளது. ஆன்லைன் மூலம் பார்க்க முடியாது. world cup 2011 final full match live star sports
2011 ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக தோனி தலைமையில் உலக கோப்பையை வென்றது.
ஏப்ரல் 2 ஆம் தேதி அதாவது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது.
இந்திய அணியின் இறுதியாட்டத்தில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் தோனி மற்றும் கம்பீர் என்று கூட சொல்லலாம். இருவரும் சேர்ந்து 91 மற்றும் 97 ரன்கள் எடுத்தார்கள்.
2011 உலகக்கோப்பை என்று சொன்னவுடனே தோனி அடித்த கடைசி சிக்சர் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
தோனி பெஸ்ட் பினிஷேர் ஆக வெற்றியின் ரன்னை சிக்ஸராக அடிக்கும் போது இந்தியாவே கொண்டாடியது.
இந்தியா உலகக் கோப்பையை வாங்கி ஒன்பதாவது வருடத்தைக் கொண்டாடும் விதமாக “எஸ்பிஎன் கிரிசின்போ” தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி கடைசியாக அடித்த சிக்ஸர் புகைப்படத்தை பகிர்ந்து
“இந்த ஷாட், மில்லியன் இந்திய மக்களைக் கொண்டாட வைத்தது” என்றும் பதிவிட்டு இருந்தார்கள்
இதை கடுமையாக சாடும் விதமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் இந்த ட்விட்டை ரீட்விட் செய்து
“உலகக்கோப்பையை ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தியாவும் இந்திய அணியின் பயிற்சியாளர்களும் இணைந்து தான் வென்றார்கள்.
சிக்ஸர் மீதான உங்கள் ஆதித விருப்பத்தை கைவிட வேண்டும்” என்று தன் கோபத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்தன் கோபத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
இதை ஒரு சிலர் ஆதரித்தாலும் பெரும்பாலும் இந்த ட்விட்டை எதிர்த்தும் கம்பிரை சரமாரியாக விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
Amala Paul Emotional Feeling; ஊரடங்கு உத்தரவு மூலம் அனைவருமே பெற்றோருடன் இருக்கும் நிலையில், அமலா பால் தனது தந்தை இறந்த சோகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அமலா பால் தனது பெற்றோருடன் நேரத்தை செலவிட முடியாமல் இருக்கும் வருத்தத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவரது இழப்பு அமலா பாலை மிகவும் பாதித்தது. அதையும் கடந்து பல மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கொரோனா காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருமே அவர்களது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அப்படியிருக்கும் போது அமலா பால் மட்டும் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில் அவர கூறியிருப்பதாவது: இந்த உலகத்தை யாரும் நம்மை நேசிப்பதற்கு கற்றுத்தரவில்லை.
மற்றவர்களை நேசிப்பதற்கு கற்றுக்கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகத்தில் நல்லது, கெட்டது இரண்டும் சம விகிதத்தில்தான் இருக்கிறது.
அதில், கெட்டவைகள் நடக்கும் போது இதற்கு முன்னதாக நமக்கு நடந்த நல்லவற்றை நாம் மறந்துவிடக் கூடாது. அதனை இந்த தனிமைப்படுத்துதல் நமக்கு உணர்த்துகின்றது என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில், அமலா பால் இரண்டாவது முறையாக பிரபல பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் வெளியானது.
ஆனால், அதற்கு அமலா பாலின் மேனேஜர், அப்படி ஒன்று இல்லை. ஒரு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. அமலா பாலுக்கு திருமணம் ஆகவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prabhu Deva Bagheera Movie; பிரபு தேவா படத்தில் இத்தனை ஹீரோயின்களா? பிரபு தேவா நடிக்கும் பஹிரா என்ற படத்தில் 5 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹிரா படத்தில் 5 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் நடிகர் பிரபு தேவாவும் ஒருவர். நடிகர் மட்டுமல்லாமல், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என்று திகழ்கிறார்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல், யங் மங் சங் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இப்படங்களைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார்.
சைக்கோ த்ரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது.
மீதமுள்ள 30 சதவிகித படப்பிடிப்புக்கு படக்குழுவினர் கோவா, இலங்கை என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள்ளாக கொரோனா உலகம் முழுவதும் பரவ, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் கதைக்கு ஏற்பட பஹிராவில் 5 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி, அனேகன் படத்தில் நடித்த அமைரா ஆகியோர் ஏற்கனவே படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற 3 ஹீரோயினகள் புதுமுக நடிகைகள் என்று கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். அதில், ஹீரோயின்களின் போஷன் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.