ஸ்ரீ ராம நாமத்தின் சிறப்புகள். இன்று ஸ்ரீ இராம நவமி. இராம நாமம் குறித்து சித்தர்கள் வாக்கு. ஸ்ரீ இராமசந்திரனின் நாமம் sri rama navami. sri rama navami date 2020
நமது வேத இதிகாசங்களில் பல மந்திரங்கள் இறைவனை காண கூறப்பட்டிருந்தாளும் எளியவர்களும் எளிதாக கூற இயலும் இறை சக்தி அதிகம் மிக்க ஒரே மந்திரம் “இராம நாமம்” ஒன்று மட்டுமே ஆகும்.
இதை சன்மதம் என்று கூறப்படுகின்ற ஆறு மதங்களும் ஏற்கும். யாரும் மறுக்க இயலாத ஒரு திருநாமம் உண்டெனில் ஸ்ரீ இராமசந்திரனின் நாமமே ஆகும். திருடனாய் இருந்து வால்மீகியை ஞானம் பெற செய்தது இராம நாமம் ஆகும்.
இராமனை விட இராம நாமத்திற்கு சக்தி அதிகம் என்பது அனுமனின் வாக்கு. காரணம் இராமரே கல்லை தூக்கி சமுத்திரத்தில் போட்ட போதும் கல் கடலில் மூழ்கியது.
பின் ஆனுமன் ஸ்ரீராம் என்று கல்லின் மேல் எழுதிப் போட்ட பொழுது கல்லானது மிதந்தது.
ஒரு கோடி முறை இராம நாமம் ஜெபிப்போற்கு அனுமனின் தரிசனமும் பின்பு ஸ்ரீ இராமரின் தரிசனமும் நிச்சயம் கிடைக்கும்.
துளசிதாசருக்கு முதலில் இராம நாமத்தால் அனுமனின் தரிசனம் பெற்றார் எனவும். பின்பு இராமர் தரிசனம் அனுமனின் ஆசியால் கிடைத்தது.
காஞ்சி மகா பெரியவரும் இராம நாமத்தினால் அனைத்து இன்னல்களும் நீங்கி நற்கதி அடையாளம் என்று கூறியுள்ளார்.
இராம நாமம் குறித்து சித்தர்கள் வாக்கு
சிவவாக்கிய சித்தரும் தனது சிவ வாக்கியத்தில் இராம நாமத்திற்கு ஈடாக ஒரு மந்திரம் எங்குமில்லை என்று கூறியுள்ளார்.
Taapsee Pannu; கழுத்தில் டாட்டூ ரகசியம் வெளியிட்ட டாப்ஸி! முக்கியமான இடத்தில் டாட்டூ வரைந்ததன் ரகசியத்தை நடிகை டாப்ஸி வெளியிட்டுள்ளார்.
தனது டாட்டூ குறித்த ரகசியத்தை நடிகை டாபிஸ் வெளியிட்டுள்ளார்.
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை டாப்ஸி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் பிங்க் படம் வெளியானது. இதில், அமிதாப் பச்சன் வழக்கறிஞராக நடித்திருந்தார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படம் தா நேர்கொண்ட பார்வை. இதில், அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார்.
இந்த நிலையில், பிங்க் படத்தில் டாப்ஸி பறவைகள் வரிசையாக பறப்பது போன்று டாட்டூ வரைந்திருப்பார். இது குறித்து தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிங்க படத்தில் மினல் அரோரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில், வரிசையாக பறவைகள் பறப்பது போன்று டாட்டூ வரைந்திருந்தேன்.
எப்போதும் பறவைகள் சுதந்திரமாக பறக்கும். அதுபோன்று ஒரு கதாபாத்திரம் என்பதால், அந்த டாட்டூவை வரைந்திருந்தேன். படம் திரைக்கு வந்த பிறகு அது போன்று நிறைய பெண்கள் டாட்டூ வரைந்திருந்தனர்.
எனக்கு டாட்டூ வரைவது ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே 2 டாட்டூ வரைந்திருக்கிறேன். படத்தில் தற்காலிகமாக வரைந்திருந்த டாட்டூவை நான் தற்போது நிரந்தரமாகவே என் கழுத்தில் வரைந்திருக்கிறேன் என்றார்.
வாலையம்மன்: சித்தர்களின் ரகசிய பெண் தெய்வம் வழிபாடு. யார் அந்த வாலையம்மன்? வாலைப் பெண் தெய்வம் எனப்படும் பாலாவின் சிறப்பு என்ன? சித்தர்கள் எவ்வாறு பூஜித்தனர்?
அண்டமெல்லாம் விளங்கும் ஒப்பற்ற சக்தியாக இருக்கக் கூடிய அன்னை பராசக்தியின் பல்வேறு ரூபங்களை நாம் பூஜித்து வருகிறோம்.
இருப்பினும் நமது செந்தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வாழ்ந்து கொண்டும் இருக்கின்ற சித்த புருஷர்கள் இறை நிலையை அடைய யோக முறைகளையும், பூஜை முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
சிவ வழிபாடு அனைத்து சித்தர்களும் செய்து வந்தது நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும் அந்த சித்த நிலையை அடைய வேண்டிய சக்திகளை பெறுவதற்கு சில இரகசிய வழிபாட்டு முறைகளை செய்து வந்துள்ளனர்.
அப்படி அவர்களின் வழிபாட்டில் இருந்த ஒப்பற்ற சக்திகளை வழங்கிய வழிபாடே “வாலையம்மன்“ (பாலா) வழிபாடு ஆகும்.
நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள பிள்ளைத் தமிழ் பருவங்களில் “வாலை பருவம்” ஒரு பருவம் உண்டு. ஒன்பது வயது நிரம்பிய பெண் குழந்தையை வாலை என்று கூறுவர்.
இந்த வாலையம்மன் வழிபாடும் சிறு பெண் குழந்தை வழிபாடே ஆகும். பெண்மை என்றாலே சக்தி, வீரம், ஞானம், தாய்மை, கருணை என அனைத்து குணங்களும் நிரம்பியிருக்கும்.
பெண் குழந்தை என்றாலே அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை வழங்கும். இதனை தான் பாலாவும் செய்கிறாள்.
அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது தன் படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத் தளபதியாக மாதங்கி மற்றும் வாராகியை வைத்து யோகினி சேனைகளுடன் சென்று போர்ப்புரிந்தாள்.
முதலில் போருக்கு வந்த பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க லலிதா தன்னுள் இருந்து ஒரு சிறு பெண்ணை தோன்றச் செய்து அனுப்பி வைத்தாள்.
அக்குழந்தையும் அனைவரையும் மாய்து வெற்றியுடன் திரும்பியது. அச்சிறு குழந்தை தான் பாலாம்பிகை.
வாலையம்மன் (பாலா) சின்னஞ்சிறு குழந்தையாவாள். இவள் குணங்களும் குழந்தைத் தனமாகவே இருக்கும்.
குழந்தையை கொஞ்சி அழைத்தவுடன் ஓடி வருவது போல ஓடி வருபவள். இவளின் வடிவாமானது சொல்லுதற்கரிய பேரழகு பொருந்திய ஒன்பது வயது குழந்தையாகும்.
கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன் பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பவள். ஞானமே வடிவாக இருப்பவள் ஆவாள். ஸ்ரீ சக்ர வடிவமானவள், ஸ்ரீபுரத்தில் அன்னை லலிதாவுடன் எப்போதும் இருப்பவள்.
இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம், வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.
இவளைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் லலிதா மகாத்மியத்தில் 26-ஆம் அத்தியாத்தில் விரிவாகக் கூறியுள்ளனர்.
சித்தர்களின் வாலை வழிபாடு
இந்த வாலாம்பிகை வழிபாடானது சித்தர்களின் வழிபாட்டில் பெரிய ரகசியங்களை கொண்டதாகும். யோக முதிர்ச்சி, சித்துக்களில் கைதேர்ந்த சித்தர்கள் அனைவரும் வாலையின்றி அந்நிலையை அடைய இயலாது.
இதனை வாலை கொம்மி போன்ற பாடல்களில் சித்தர்களே உணர்த்தி உள்ளனர். கொங்கணவர் தனது வாலை கொம்மியில்,
“வீணாசை கொண்டு திரியாதே இது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே”
என்ற பாடலின் மூலம் வாலையை கண்டு வணங்கினால் ஆகாயத்தை கூட ஆளலாம் என்று எடுத்துரைக்கிறார். மேலும் கருவூராரும் வாலையை போலே ஒரு தெய்வம் இல்லையென கூறியுள்ளார்.
சித்தர்களின் முதல்வரான அகத்தியரும் லலிதா சகஸ்ரநாமத்தில் “பாலா லீலா வினோதினி” என்று இவளை குறிப்பட்டுள்ளார். திருமூலர், போகர் என அனைத்து சித்தர்களும் வாலையம்மனை வழிபட்டுள்ளனர்.
இந்தக் குழந்தையை வழிபட்டு தான் சித்தர்கள் சித்திகளை பெற்றனர் என்பது நமக்கு தெளிவாகிறது.
பாலா திரிபுரசுந்தரியை அக கண்ணினாலே கண்டு தான் சித்தர்கள் பூஜித்தனர். எனவே பாலாம்பிகை கோயில்கள் குறைவாகும்.
நம் தமிழகத்தில் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோவில் பாலா பீடம் நெமிலி என்ற ஊரில் அமைந்துள்ளது. மேலும் சில இடங்களில். லலிதா திரிபுரசுந்தரி கோயிலில் பாலாவிற்கான சன்னதி அமையப்பெற்றுள்ளது.
கலியுகத்தின் ஒப்பற்ற சக்தி பாலாம்பிகை
நாம் வாழுகின்ற இக்கலியுகத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வருகிறோம். நற்கதிக்கான வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோம்.
இந்த நரக வாழ்வில் இருந்து விடுபட்டு நற்பேறு அடைய வழிக்காட்டுபவள் பாலாம்பிகையே ஆவாள். அவள் பாதம் பணிந்து சரணாகதி அடைந்து எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.
ஜோஸ் பட்லர் தனது உலகக்கோப்பை ஜெர்ஸியை ஏலத்தில் விட காரணம் என்ன? இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் உலகக்கோப்பை இறுதி போட்டியில் அணிந்திருந்த ஜெர்ஸியை ஏலமிட்டு நிதி திரட்ட முடிவு.
இங்கிலாந்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் அதற்கு நிதி திரட்ட தான் இந்த முடிவு எடுத்துள்ளதாக ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டி இறுதி போட்டியில் இங்கிலாந்து நியூ சிலாந்து அணிகள் மோதின. இன்று வரை பௌண்டரி விதிமுறை மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது சர்ச்சையாக உள்ளது.
I’m going to be auctioning my World Cup Final shirt to raise funds for the Royal Brompton and Harefield Hospitals charity. Last week they launched an emergency appeal to provide life saving equipment to help those affected during the Covid-19 outbreak. Link to auction in my bio. pic.twitter.com/ODN9JY4pk1
Ileana; இன்னொரு அப்பா மறைவு: துடி துடித்துப்போன இலியானா! இன்னொரு அப்பா போன்ற மாமா மறைவால் நடிகை இலியானா துடிதுடித்துப் போன சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலியானாவின் மாமா இறந்ததை தாங்க முடியாமல் இன்னும் நினைத்து வாடுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் கேடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படத்தைத் தொடர்ந்து நண்பன் என்ற ஒரே ஒரு படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தார்.
அதன் பிறகு தமிழில் எந்தப் படங்களிலும் இலியானா நடிக்கவில்லை. மாறாக ஹிந்தியில் கொடி கட்டிப் பறந்தார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அண்மையில், அவரது மாமா இறப்புக்கு இரங்கல் தெரிவித்த செய்தியை கண்ணீர் துளிகளாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அண்மையில், இலியானாவின் மாமா மரணமடைந்தார். அவரது இறப்பு ரொம்பவே இலியானாவை பாதித்துள்ளது.
இறந்த மாமாவை தன்னுடைய தந்தை போன்றவர் என்று குறிப்பிட்டு அவரது வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மன வேதனையை பதிவிட்டுள்ளார்.
நான் உங்கள்து வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்களை வைத்திருக்கிறேன். நீங்கள் மறைந்துவிட்டீர்கள் என்று எனது இதயம் நம்பவில்லை. எனக்கு எப்போதும் அற்புதமான, இனிமையான மனிதராகவே நீங்கள் இருந்தீர்கள்.
என்னைப் பொறுத்தவை உங்களது மறைவு வேதனையானது என்று பதிவிட்டுள்ளார்.
இன்று 234; நாளை 500-ஐ தொடும்: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் புல் டீட்டெயில். தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இரடிப்பாகி கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள்
நேற்று முன்தினம் ஒரே நாளில் 50 மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்தனர். நேற்று 110 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தனர்.
இந்த வேகத்தில் சென்றால் இன்று இரவுக்குள் 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இன்று எத்தனை பேர் பதிக்கப்பட உள்ளனர் என்பதை பொருத்து தான் கொரோனா வேகம் கணிக்க முடியும்.
ஒரு வேலை இன்று 200 க்கும் கீழ் அல்லது 100 கீழ் பதிக்கப்பட்டால் கொரோனா வேகம் படிப்படியாக குறைகிறது என்று அர்த்தம்.
அதை மீறி வேகம் எடுத்தால் இன்னும் தமிழகம் மோசமான கட்டத்தை எட்டிக்கொண்டு உள்ளது என்று அர்த்தம்.
நேற்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 884பேர் பலி, இத்தாலி, ஸ்பெயின் நாட்டை தொடர்ந்து அமெரிக்காவை அடித்து நொறுக்கும் கொரோனா வைரஸ்.
அமெரிக்காவில் கொரோனா பரவும் வேகத்தை பார்த்தால் இத்தாலியை விட அதிக பாதிப்பு ஏற்படும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா சந்தித்த பேரழிவுகளில் கொரோனா வைரஸ் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் போல் இருக்கிறது.
இதே வேகத்தில் கொரோனா பரவினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்பு அதிகம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் தொடர்ந்து அமெரிக்கா மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
Ajith Valimai Movie; அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லை என்ற தகவல் வெளியாகி வருகிறது.
வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லை என்கிறது தகவல்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு மீண்டும் அஜித் – ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.
அண்மையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பைக் ரேஸ் காட்சியை படப்பிடிப்பும் செய்யும் புகைப்படம் வெளியானது.
இதையடுத்து, பிரமாண்ட சண்டைக் காட்சிக்கு படக்குழு ஸ்பெயின் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்பெயின் திட்டம் கைவிடப்பட்டு படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார் என்பது குறித்து இதுவரை படக்குழுவினர் அறிவிப்பு வெளியிடவில்லை.
ஆனால், பாலிவுட் நடிகை ஹூமா குரேசி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வலிமை படம் குறித்து பேசிய இயக்குநர் ஹெச் வினோத் கூறுகையில், தல ரசிகர்களே நீங்கள் அடுத்த மங்காத்தாவான வலிமை படத்தை பார்ப்பதற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை வைத்து பார்க்கும் பொழுது, வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லை என்று தெரிகிறது. ஏனென்றால், மங்காத்தா படத்தில் அஜித்துக்கு ஜோடி என்று பார்த்தால் யாரும் இல்லை. ஆனால், த்ரிஷா படத்தில் நடித்திருந்தார்.
அவருக்கு அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான ரோல் இல்லை. ஆக்ஷன் த்ரில்லரை மையப்படுத்தி உருவான இப்படத்தின் கிளைமேக்ஸில் பணத்தை எடுத்துச் செல்வதுதான்.
இந்தப் படத்தில் அஜித் போலீஸ். அதுவும் அசிஸ்டண்ட் கமிஷனர். அதே போன்றுதான் வலிமை படத்திலும் அஜித் போலீஸ். அசிஸ்டண்ட் கமிஷனராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதலால், இந்தப் படத்தில், அவருக்கு ஜோடி இல்லை. படமும் ஆக்ஷன் த்ரில்லரை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வலிமை படத்தில் இதுவரை ஹீரோயின் எண்ட்ரி ஆகவில்லை. ஆனால், ஹூமா குரேஸி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படியே நடித்தாலும், அஜித்துக்கு ஜோடியா? இல்லை படத்தில் மட்டும் நடிக்கிறாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியவரும். அதுவரையில் அஜித்துக்கு ஜோடி இல்லாமல் வலிமை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமை படத்தில் வி1 படத்தின் இயக்குநர் பவல் நவகீதன் நடித்து வருகிறார்.
விம்பிள்டன் தொடர் ரத்து; இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக
கொரோனா உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் கை விடும் நிலை ஏற்பட்டது. பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
வருகிற ஜூன் 29ஆம் தொடங்கி ஜூலை 12ஆம் தேதி நடக்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடத்தாமல் கை விடுவதாக இங்கிலாந்து அறிவித்தது.
இது குறித்து இங்கிலாந்து டென்னிஸ் போர்டு ட்விட்டர் பதிவில் ‘ கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் 134ஆம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை ரத்து செய்கிறோம், இதற்காக வருந்துகிறோம் என பதிவிட்டனர்.
Today Breaking News Tamil | இன்றைய முக்கிய செய்திகள் 01.04.2020
tamil latest breaking news : கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியுள்ளது
கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அதிகரித்து உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொளி மூலம் கலந்துரையாடுகிறார் .
விழுப்புரத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தெரு முழுவதும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்காக தயாரிக்கும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்தார் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம்.
மருத்துவ வார்டுஆக மாறியது ஊட்டி நகராட்சி பள்ளி.
இலவச ரேஷன் அரிசி மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நேற்று மட்டும் சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு.
முதல்வர் நிவாரண நிதிக்கு 24 லட்சம் நன்கொடை அளித்தார் எடியூரப்பா.
மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.
கொரோனா நோய் தொற்றால் starwars நடிகர் ஆண்டிரு ஜாக் உயிரிழந்தார்.
ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பு படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்ற மலையாள நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் படக்குழுவினர் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு.
90 கிட்ஸ் களின் ஹீரோ என அழைக்கப்படும் சக்திமான் தொடர் தினமும் இரவு 8 மணிக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும்.
நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகள் நான்காக இணைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு 104 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்திய வீரர்கள் மட்டும் பங்கு பெறும் வகையில் இந்த ஆண்டு ஐபில் நடத்த திட்டம்?
கொரோனா நோய் தொற்று காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து.
கொரோனா நோய்தொற்று தடுப்பு பணிகளுக்காக ஹாக்கி இந்தியா மற்றும் இந்திய ஃபுட்பால் கவுன்செல் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி அளித்தது.