Home Blog Page 179

02/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
02/04/2020 ராசிபலன்கள்

2/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று உங்களுக்கு மேன்மை தரக்கூடிய நாளாகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று  பாராட்டுகள் வந்து சேரும் நாள்.

மிதுன ராசிபலன்

இன்று குடும்பத்தில் நல்லாதரவு கிடைக்கும் நாள்.

கடக ராசிபலன்

இன்று புதிய நட்புறவு கிடைக்கும் நாளாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்று பல உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று பெருமைபட வேண்டிய விஷயங்கள் நடக்கும் நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்று ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று போட்டிகள் மிகுந்த நாளாக இருக்கும்

தனுசு ராசிபலன்

இன்று தெளிவாக செயல்களை செய்ய வேண்டிய நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று அனுகூலமான பலன்களை தரும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று கோபத்தை குறைத்து கொள்ள வேண்டிய நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்று அனைத்திலும் ஊக்கத்துடன் செயல்புரியும் திறனுடன் இருப்பீர்கள்.

2/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

She Netflix Series Review; She never expected how much she possess

1
She Netflix Series Review

She Netflix Series Review; She never expected how much she possess. She 2020 Review. She Netflix Web Series Review.

Netflix’s first Indian web series Sacred Games Directed by Anurag Kashyab and Vikramaditya got more attention in india. After this People started giving time for indian web series.

She Netflix is written directed by Imtiaz Ali. The director used to direct love films but not this time. He came out of the box & created the story revolves around narcotics gang.

Bhumika Pardesi (Aditi sudhir Phohankar) as protagonist was lady constable who went undercover operation as prostitute to catch narcotics gang head.

She Netflix 2020 review

Sasya (Vijay Varma) played one of the leading role as antagonist gave pure class acting.
The conversation and intimate scenes from sasya and burmi push further the audience. The director underused the vijay Varma. Imtiaz should have used Vijay more screening time.

We can see the character development in all Imtiaz Ali films. Here the lead role Bhumi Character transformation feels really good and interesting.

Before she went undercover she was less feminine and less physically attractive.
She is girl who used to get curse from his husband for not behaving like women in bed.

she is the one who seems having less interest in physical intimacy. She is halfway through divorce from his husband. she has three important things to care in her life.

One is her ailing mother and the second one is her sister who doesn’t care about what peoples talk care only about herself and third one is her job which feeds them.

Imtiaz ali's She Review

Once she started pretending as sex worker her body transition physically and mentally change. She started getting attention from men’s for her physique and attitude.

After this she started seducing mens to understand them. She feels more confident about her body. She made herself physically verbally strong to deal with narcotics boss.

After certain stage she started doing what she feels right never listen what her higher official said. this ensures her dominance over the undercover operation.

Writing could have been more intriguing and dialogues may not impress you the way protagonist Characterisation. We can witness some unnecessary obscenity in this series.

She web series review

Cinematography is absolutely brilliant the way director wants use the colors at varies scenes seems brilliant. the road she waited as whore, the hotel where sasya and bhumika make out every aspect of colors outstanding.

When it comes to web series, strong language and obscene will take place when there is no need. How Imtiaz ends the season is totally unexpected. If you have time, give it try you will not disappoint I guess.

3

இந்தியா 2011 உலககோப்பை வாங்கிய நாள் இன்று

1

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற நாள் இன்று.

1983 உலககோப்பை

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு நடந்த உலகக் கோப்பையில் இந்தியா பெரிதாக சோபிக்கவில்லை.

2003

2003 ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

2011 உலககோப்பை

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் உலக கோப்பை நடந்தது. இந்த உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கு பெற்றது.

குரூப் ஏ வில் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கென்யா, கனடா, ஜிம்பாப்வே அணிகளும் மோதின.

காலிறுதி போட்டிகள்

இதில் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

குரூப் பி வில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் பங்கு பெற்றன.

இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியுடன் தோல்வியும், இங்கிலாந்து அணியுடன் சமம் செய்து புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது.

இதில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும் அரை இறுதியில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது.

அரையிறுதி போட்டிகள்

முதல் அரையிறுதியில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதின இதில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த போட்டியை இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று 2013 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதுவரை உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றதில்லை. இந்த சாதனை 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை வரை தொடர்கின்றது.

இறுதி போட்டி

2011 ஏப்ரல் 2 ஆம் தேதி, 43000 மக்கள் கூடிய மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்கியது.

இந்தியாவும் இலங்கையும் தலா ஒரு முறை மட்டுமே உலக கோப்பையை வென்று இருந்தது.

தோனி, கபில்தேவ் போல் கோப்பையை வெல்வாரா? இல்லை சங்ககரா, அர்ஜுனா ரணதுங்கா போல் கோப்பையை வெல்வாரா? என்ற ஆவல் இருநாட்டு ரசிகர்கள் மத்தியில்.

இலங்கை 274

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக மகிளா ஜெயவர்தனே சதமடித்து 103 ரன்கள் எடுத்தார்.

குமார் சங்ககரா 48 ரன்கள், தில்சன் 33 ரன்கள், குலசேகரா 32 இருந்து எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஜாகிர் கான் மற்றும் யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

சேவாக் டக் அவுட்

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோப்பையை வெல்ல சச்சின், சேவாக் களம் இறங்கினார்கள்.

மலிங்கா வீசிய முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் சேவாக் தனது விக்கெட்டை பறிகொடுத்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களில் வெளியேற இந்திய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

கெளதம் 97

கௌதம் கம்பீர் உடன் இன்றையை இந்திய நட்சத்திர வீரர் கேப்டன் விராட் கோலி கூட்டணி அமைத்தார்.

இந்திய அணி 117 ரன்கள் இருந்தபொழுது விராட் கோலி 35 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

எப்பொழுதும் ஆறாவது வீரராக களமிறங்கும் தோனி அன்று ஐந்தாவது வீரராக களமிறங்கினார். கௌதம் கம்பீரும் தோனியும் ஆட்டத்தை இந்திய பக்கம் திருப்பினார்கள்.

மூன்றே ரன்னில் சதத்தை தவறவிட்ட கௌதம் கம்பீர் 97 ரன்னில் பெரரா வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார்.

தோனி சிக்ஸ், இந்தியா வெற்றி

டோனியின் யுவராஜ் சிங்கும் கூட்டணி அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்கள்.

இந்தியாவின் பெஸ்ட் பினிஷேர் எம்எஸ் தோனி வெற்றிக்கு 3 ரன்கள் தேவை இருந்த பொழுது, குலசேகரா வீசிய 49.2 வது ஓவரில் சிக்ஸர் தூக்கி இந்தியா இரண்டாவது முறை கோப்பையை வென்று கொடுத்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக கௌதம் கம்பீர் 97, எம்எஸ் தோனி 91, வீராத் கோலி 35 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் தில்சன் மற்றும் திசாரா பெரேரா தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்கள்.

தோனி அடித்த கடைசி அந்த சிக்சருக்கு, ரவி சாஸ்திரியின் வர்ணனையும் இன்றுவரை இந்திய ரசிகர்கள் கேட்டால் புல்லரித்துப் போகும்.

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை தோனியின் தலைமையில் வென்றது.

ஆனந்த கண்ணீர்

தோனியின் கண்களிலும், சச்சினின் கண்களிலும், மற்ற வீரர்களின் கண்களிலும் ரசிகர்கள் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் ஆறாக ஓடியது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தார்கள் இது ஒன்றுக்காக மட்டுமே.

1992 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரை சச்சின் டெண்டுல்கரின் நிறைவேறாத உலக கோப்பை கனவை எம்எஸ் தோனி வாங்கி கொடுத்தார்..

இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிருஷ்ணனை இந்திய வீரர்கள் தோளில் சுமந்தார்கள்.

இறுதி உலக கோப்பை ஆடிய சச்சின் டெண்டுல்கரை இந்திய வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தை சுற்றி வந்தார்கள்.

ஆட்டநாயகன்

ஆட்ட நாயகன் விருதை மகேந்திர சிங் தோனியும், தொடர் நாயகன் விருதை யுவராஜ் சிங்கும் பெற்றனர்.

இந்த உலகக் கோப்பையை வாங்கிய பிறகு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும், மத்திய அரசும், பல மாநில அரசும் வீரர்களுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்தனர்.

இந்த போட்டியை 135 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் பார்த்தார்கள் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பல இடங்களில் டிவி தெருக்களிலும் வீடுகளிலும் வெளியில் வைத்து ரசிகர்கள் நின்றும் நின்றபடியே பார்த்தார்கள்.

இந்தியா விழா கோலம்

இந்தியா முழுவதும் விழாக்கோலம் பூண்டது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

2007 ஆம் ஆண்டு உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா வெளியேறிய போது ரசிகர்கள், வீரர்களின் வீட்டை உடைத்தார்கள்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வாங்கியவுடன் பலரின் கனவு நாயகனாக மகேந்திர சிங் தோனி மாறினார்.

3

குழந்தைக்கு இப்படியொரு பேர வச்சு எல்லோரையும் அசத்திய ஆல்யா மானசா!

0

Alya Manasa Daughter Name; குழந்தைக்கு இப்படியொரு பேர வச்சு எல்லோரையும் அசர வச்ச ஆல்யா மானசா! தனது குழந்தைக்கு ஆல்யா மானசா அய்லா சையத் என்று பெயர் சூட்டியுள்ளார்.

ஆல்யா மானசா தனது மகளுக்கு அய்லா சையத் என்று பெயர் சூட்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்து 9 நாட்கள் ஆன தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா (Alya Manasa) மற்றும் சஞ்சீவ் கார்த்திக்(Sanjeev Karthick).

இந்த சீரியலில் சின்னையா என்ற ரோலில் சஞ்சீவும், செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும் நடித்து சின்னத்திரை ரசிகர்களை தங்களது கதாபாத்திரங்கள் மூலம் கவர்ந்துள்ளனர்.

வெள்ளித்திரையை விட மக்களோடு மக்களாக ஒன்றிய சின்னத்திரைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. அதுவும் குடும்ப பெண்களுக்கு சொல்லவே வேணாம்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ஜொலித்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். சீரியல்களில் ஒன்றாக நடித்து இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அழகான குட்டி தேவதை பிறந்துள்ளதாக சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 20 ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அதற்குரிய பொருட்களையும் வாங்கி வைத்திருந்தார். குழந்தை பிறந்து 9 நாட்கள் ஆன நிலையில், குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆல்யா மானசா தனது மகளுக்கு இன்று பெயர் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த நாட்களில் ஒரு தாய்மையை முழுவதுமாக மகிழ்ச்சியாக அனுபவித்தேன்.

எங்களது மகளின் பெயரை அய்லா சையத் என்று அறிவிப்பதில் நாங்கள் இப்போது மகிழ்ச்சி அடைகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, ஆல்யா மானசா மற்றும் அவரது மகள் அய்லா சையத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய் என் படத்திலா? மௌனம் கலைத்த ராஜமௌலி!

0

Vijay RRR Movie; விஜய் என் படத்திலா? மௌனம் கலைத்த ராஜமௌலி! ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய் நடிப்பது குறித்து வெளியான தகவலுக்கு தற்போது ராஜமௌலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறித்து வெளியான தகவலுக்கு இயக்குநர் ராஜமௌலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

ராம் சரண் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று அண்மையில் செய்தி வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜமௌலி விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விஜய் தனது படத்தில் நடிக்கவில்லை. இது வெறும் வதந்திதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் (RRR) டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததால், அதன்படி வெளியிடப்பட்டது.

உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் போது போஸ்டர் வெளியிட்டது கொஞ்சம் வருத்தம்தான் என்றார். இதையடுத்து, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

3

விஜய் என் படத்திலா? மௌனம் கலைத்த ராஜமௌலி!

0
Vijay Not in RRR Movie

Vijay RRR Movie; விஜய் என் படத்திலா? மௌனம் கலைத்த ராஜமௌலி! ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய் நடிப்பது குறித்து வெளியான தகவலுக்கு தற்போது ராஜமௌலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறித்து வெளியான தகவலுக்கு இயக்குநர் ராஜமௌலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

ராம் சரண் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று அண்மையில் செய்தி வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜமௌலி விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விஜய் தனது படத்தில் நடிக்கவில்லை. இது வெறும் வதந்திதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் (RRR) டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததால், அதன்படி வெளியிடப்பட்டது.

உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் போது போஸ்டர் வெளியிட்டது கொஞ்சம் வருத்தம்தான் என்றார். இதையடுத்து, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

3

கால்மேல் கால் போட்டு கெத்தா போஸ் கொடுத்த விஜய் சேதுபதி: உப்பெனா அப்டேட்!

0
Vijay Sethupathi Uppena Movie

Vijay Sethupathi Uppena Poster; விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் உப்பெனா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உப்பெனா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தொடர்ந்து எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக நடிக்கக் கூடியவர். மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். ஹீரோ, சிறப்புத் தோற்றம், வில்லன், திருநங்கை, வயதான தோற்றம் என்று கலக்கி வருகிறார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது.

சீதக்காதி படத்தில் வயதான ஒரு ரோலில் நடித்தார். இதே போன்று விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லனாக நடித்தார்.

தொடர்ந்து இந்தப் படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு வில்லன் பட வாய்ப்பு குவிந்து வருகிறது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இதே போன்று தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் உப்பெனா என்ற படத்தில் வில்லனாகவே நடித்துள்ளார்.

பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படம் உப்பெனா. இந்தப் படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த நிலையில், உப்பெனா படத்தில் ஹீரோயினான கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதுவும், ரயனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

ஏற்கனவே உப்பெனா படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதியின் தோற்றம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வில்லனுக்கே உரிய கம்பீரமான, கெத்தான, மாஸான தோற்றம் கொண்ட புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில், சிகரெட் பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால்மேல் கால்போட்டு இருப்பது போன்று இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி படம் என்பதால், தமிழிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

3

வாத்தி கம்மிங் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்!

0

Vaathi Coming Song; வாத்தி கம்மிங் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்! மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ரோபோ சங்கர் தனது மகளுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு ரோபோ சங்கர் தனது மகளுடன் இணைந்து டான்ஸ் ஆடியுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தல், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மாஸ்டர் 2020 ஆம் ஆண்டின் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படமாக கருதப்படுகிறது.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவேண்டிய படம் கொரோனா வைரஸால் தள்ளிப்போயுள்ளது. ஆம், மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு சினிமா பிரபலங்கல் பலரும் டான்ஸ் ஆடிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு வந்தனர். அவர்களில் தற்போது ரோபோ சங்கரும் இணைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண நடுத்தர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா உடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் ஹினா கான்!

0
Hina Khan Wash Doormat

கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் ஹினா கான்! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ஹினா கான் கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் நிலை வந்துவிட்டது.

கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் நிலை வந்துவிட்டது என்று நடிகை ஹினா கான் புலம்புகிறார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் மட்டும் 35 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், எப்போதுமே பிஸியாக இருந்த சினிமா பிரபலங்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கிச்சன் பக்கமே சென்றிருக்கமாட்டார்கள். வீட்டில் எந்த வேலையும் செய்திருக்கவும் மாட்டார்கள்.

ஆம், அதற்காக வேலையாட்கள் வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் இருந்த பிரபலங்களின் நிலைமை தற்போது தலைகீழாகவே மாறிவிட்டது.

வீடு பெருக்குவது, துணி துவைப்பது, கால் மிதி துவைப்பது, சமையல் செய்வது என்று அவர்களின் நிலை இப்படியெல்லாம் மாறும் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்கள்.

அவர்களில் பாலிவுட் நடிகை ஹினா கானுக்கு என்ன விதிவிலக்கா? இல்லவே இல்லை. அவருக்கும் இதே நிலை தான். ஸ்மார்ட்போன் என்ற குறும்படத்தின் மூலம் நடிகையான ஹினா கான், ஹேக்டு படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாகவே நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

எப்போதும் சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஹினா கானுக்கு 21 நாட்கள் ரொம்பவே கடினமான நாளாகவே அமைந்துவிட்டது.

ஆம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நடிகை ஹினா கானை அவரது அம்மா வீட்டு வேலைகளை குறிப்பாக கால் மிதிக்கு சோப் போடுமாறு கட்டளையிட்டுள்ளார்.

அம்மாவின் கட்டளை என்பதால் செய்ய மனமின்றி அழுதுகொண்டே கால் மிதிக்கு சோப் போட்டு அலசியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கால் மிதிக்கு சோப் போடுவது மட்டுமல்லாமல், வீட்டை சுத்தம் செய்வது, இந்தியாவின் தற்போதைய நிலையை சித்தரிக்கும் ஓவியம், உடற்பயிற்சி என்று பிஸியாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

வாட்ஸ்ஆப் வதந்தி: சென்னை ரோட்டில் ஒன்று கூடிய மக்கள் வெள்ளம்

0

வாட்ஸ்ஆப் வதந்தி: சென்னை ரோட்டில் ட்ராபிக், மக்கள் வெள்ளம். இன்று ஏப்ரல் பூல் செய்ய கொரோனா ஊரடங்கு உத்தரவு வாபஸ் என வீடியோ வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டது.

போலி பாலிமர் செய்தி

பாலிமர் நியூஸ் சேனலில் பிரேக்கிங் நியூஸ் செய்தி போன்றே போலியான வீடியோ ஒன்றை தயார் செய்து மோடி ஊரடங்கு உத்தரவை பெற்றுக்கொண்டார் என வீடியோ வெளியானது.

இதனையடுத்து சென்னையில் மக்கள் வெளியில் வரத்துவங்கினர். சென்னை மேம்பாலம் ஒன்றில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும் அளவிற்கு திரண்டனர்.

பின்பு போலீசார் வந்து ட்ராபிக்கை கிளியர் செய்து மக்களை வெளியில் வரவேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

3