Home Blog Page 180

கே டிவி பாருங்க – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து வருகிறது.

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகள் குறைவான வைரஸ் ஸ்தம்பித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுபடுத்த முடியாமல் அந்த நாட்டு அரசாங்கங்கள் தவித்து வருகிறார்கள்.

சீனாவை விட உயிர் பலிகளின் இத்தாலி அதிகமாக உள்ளது. சீனாவை விட மக்கள் பாதிப்பில் அமெரிக்கா எண்ணிக்கையில் தாண்டியுள்ளது.

இந்தியாவின் பிரதமர் பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் சுய ஊரடங்கு இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

பல நாட்டு அரசாங்கங்கள் ஆறு மாதத்திற்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரவை மீறி இந்தியாவில் பல இடங்களில் மக்கள் வெளியில் வந்து இருசக்கர வாகனங்களில் சுற்றிதிரிகிறார்கள்.

இந்த வைரஸின் ஆபத்தை உணராமல் மக்கள் வெளியில் நடமாடுவதால் மற்றவர்களை பாதிப்படையச் செய்யும்.

வீட்டில் உள்ளேயே அமர்ந்திருப்பதால் சிலர் பொழுதுபோக்கிற்காக வாது வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி இதுகுறித்து பேசுகையில் ‘வீட்டில் பொழுது போகலையா? கேடிவி பாருங்கள்” என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்துள்ளார்.

அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர் பதவியை சில வாரங்களுக்கு முன்பு அதிமுக தலைமை பறித்தது.

தற்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் சொந்தக்காரரான கலாநிதி மாறனின் கே டிவி பார்க்க சொல்வது தான் வேடிக்கை.

3

வில்லன் விஜய் சேதுபதியின் பொலக்கட்டும் பற பற பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

0
Master Polakattum Para Para Lyric

Master Polakattum Para Para Lyric; வில்லன் விஜய் சேதுபதியின் பொலக்கட்டும் பற பற பாடல் லிரிக் வீடியோ வெளியீடு! மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொலக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொலக்கட்டும் பற பற பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் பொலக்கட்டும் பாடல் லிரிக் வீடியோ வெளி வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.

கல்வித்துறையில் நடக்கும் ஊழல் முறையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் இசை வெளியீடு அண்மையில் நடந்து முடிந்தது. இதையடுத்து, படத்தின் இடம்பெற்றுள்ள மொத்தம் 12 பாடல்களில் 8 பாடல்கள் மட்டுமே ஜூக்பாக்ஸில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, டிரைலர் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. மாறாக விஜய் நடித்த படங்கள் ஒவ்வொரு சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மாஸ்டர் அறிவித்தபடி ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாஸ்டர் படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது. எனினும், மாஸ்டர் குறித்து முறையான ரிலீஸ் தேதி விரைவில் வரும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொலக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேபதி, கோயிலுக்கு சாமி கும்பிட வந்தபோது இந்தப் பாடல் பாடுவது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பாடலுக்கு விஜய் சேதுபதி குத்தாட்டம் ஆடுவது போன்று தெரிகிறது. இன்று வெளியான பொலக்கட்டும் பற பற பாடலை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் டிரைலர் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அன்றுடன் ஊரடங்கு உத்தரவும் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

எந்த நாடுகளில் கொரோனா பரவவில்லை

1

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீனாவில் உருவானதாக சொல்லப்படும் இந்த கொரோனா வைரஸ் ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இறப்பு எண்ணிக்கையில் உலுக்கி வருகிறது.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் இந்த வைரஸால்.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளையும் இந்த வைரஸ் விட்டுவைக்கவில்லை. 150 நாடுகளுக்கு மேல் இந்த வைரஸ் பரவி உள்ளது.

ஆஸ்திரேலியா பிரிட்டன் போன்ற நாடுகள் ஆறு மாத காலம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை இந்தியாவில் தற்போது 1600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது. இந்தியா நாடு முழுவதும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை 144 சுய ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ் பாதிக்காத நாடுகளும் உண்டு. மொத்தம் 12 நாடுகளை இந்த வைரஸ் தாக்கவில்லை.

ஆப்பிரிக்காவில் உள்ள ஏழு நாடுகளும், ஆசியாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கும் இந்த வைரஸ் பாதிக்கவில்லை.

தெற்கு சூடான், கமோரோஸ், மாலாவி, போட்ஸ்வானா, புருண்டி, சியாரா லியோ, சவுவ் டோமே அன்ட் பிரின்ஸ்பி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும்,

ஆசிய கண்டத்தில் வடகொரியா, மியான்மர், தஜிகிஸ்தான், துர்கமேனிஸ்தான், ஏமன் போன்ற நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து தப்பியுள்ளனர்.

ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேநிலைதான் ஜப்பான் நாட்டிலும் நாளுக்கு நாள் இந்த தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 70 பேருக்கு இந்த தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலோரம் இருக்கும் சில தீவுகளிலும் இந்தத் தொற்று பாதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

3

கமலின் வேட்டையாடு விளையாடு 2 உறுதி: கௌதம் மேனன்!

0
Vettaiyaadu Vilaiyaadu 2

Vettaiyaadu Vilaiyaadu 2; கமலின் வேட்டையாடு விளையாடு 2 உறுதி: கௌதம் மேனன்! கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு 2 உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த படம் வேட்டையாடு விளையாடு.

ஜோதிகா, கமாலினி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இவரது இசையில், வந்த பார்த்த முதல் நாளே பாடல் இன்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு சிலரது மொபைல் காலர் டியூனாகவும் இருக்கிறது.

இந்த நிலையில், வேட்டையாடு விளையாடு 2 உருவாக இருப்பதாக தகவல் வந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

இந்த நிலையில், கமல் ஹாசன் சந்தித்து பேசிய கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு 2 குறித்து விவாதிக்கவும் செய்துள்ளாராம்.

ஏப்ரல் மாதம் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கௌதம் மேனன் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதோடு, முதல் பாகத்தில் கமலுக்கு எப்படி அறிமுக காட்சிக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே போன்று வேட்டையாடு விளையாடு 2 படத்திலும் ஒரு மாஸான காட்சி இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். இதன் மூலம் வேட்டையாடு விளையாடு 2 படம் உறுதியாகியுள்ளது.

தற்போது கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆதலால், வேட்டையாடு விளையாடு 2 உருவாக இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பிக் பாஸ் சீசன் 4 வேறு வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

கொரோனா : முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி

0

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஸ்தம்பித்துள்ளது. பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பால் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டு இளவரசி (86 வயது) கொரோனா தொற்றால் காலமானார்.

பிரதமர் பிரிட்டன், பிரிட்டன் இளவரசர் போன்றவர்களின் இந்த கொரோனா  விட்டுவைக்கவில்லை.

தற்போது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் பலி எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் பிரதமர் மோடி அறிவித்த படி 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இருந்து வருகிறது.

இதுவரை 1657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஹாட்ஜ் கிஸ் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.

1949 ஆம் ஆண்டு பிறந்து 21 வயதான டேவிட், லாங்ஸ்சேயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் க்கு தலைவராக 2017 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்துள்ளார்.

இவர் லாங்ஸ்சேயர் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆவார்.

3

3 வயசுலேயே நடிக்க வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீ திவ்யா பர்த்டே டுடே!

0
HBD Sri Divya

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் நடிகை ஸ்ரீ திவ்யா இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஸ்ரீ திவ்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை ஸ்ரீ திவ்யா இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஸ்ரீ திவ்யா பிறப்பு

கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

தனது 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் வந்த ஹனுமன் ஜங்சன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து யுவராஜு மற்றும் வீடே ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வந்த மனசாரா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், இந்தப் படம் அவருக்கு தோல்விப்படமாக அமைந்தது.

இப்படத்திற்குப் பிறகு வந்த பஸ் ஸ்டாப் படம் ஸ்ரீ திவ்யாவிற்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.

அப்போதுதான் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆம், கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார். அதுவும், பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ஸ்ரீ திவ்யாவிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடல் உள்பட படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது.

ஊதா காலர் ரிப்பன், இந்த பொண்ணுங்களே, பார்க்காத பார்க்காத, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய பாடல்கள் இன்றும் பேசப்படுகிறது.

ஸ்ரீ திவ்யா படங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து, வெள்ளைக்கார துரை, ஜீவா, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, ரெமோ, காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒத்தைக்கு ஒத்தை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஸ்ரீ திவ்யாவிற்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ திவ்யா…

3

திருநெல்வேலி, கொங்கு மண்டலம்: மரண வேகத்தில் பரவும் கொரோனா

0

திருநெல்வேலி, கொங்கு மண்டலம்: மரண வேகத்தில் பரவும் கொரோனா. ஈரோடு, சென்னையை அடுத்து கொங்கு மண்டலம், திருநெல்வேலி கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் நேற்று மற்றும் 57 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 127 என கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

நேற்று திருநெல்வேலியில் மட்டும் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நாமக்கல்லில் 18 பேருக்கு கொரோனா. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் சில தினங்களில் எதிர்பார்க்காத அளவு கொரோனா பதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

ஆமாங்க, கல்யாணம் பண்ணிக்க போறோம்: ஓபனாக பேசிய ஜுவாலா கட்டா!

0
Vishnu Vishal Second Marriage

Jwala Gutta ஆமாங்க, கல்யாணம் பண்ணிக்கப்போறோம்: ஓபனாக பேசிய ஜுவாலா கட்டா! நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

ஜுவாலா கட்டா விரைவில், திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் திருமணம் குறித்து மௌனமாக இருக்கும் நேரத்தில் ஜுவாலா கட்டா அவசரப்பட்டு விரைவில் திருமணம் செஞ்சுக்கப் போறோம் என்று தெரிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் திருமணம்

இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து கடந்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விஷ்ணு விஷால் காதல்

இதையடுத்து, விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நெருங்கி பழகினர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியானது.

நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், விஷ்ணு விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மிஸ்ஸிங் மை பூ என்று சோகமாக இருக்கும் எமோஜியை தனது டுவிட்டரில் ஜுவால கட்டா பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால் இட்ஸ் ஓகே. இப்போதைக்கு சமூக விலகல் மிகவும் முக்கியம். எல்லோருக்கும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷால் திருமணம்

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷாலை காதலிப்பது உண்மை தான். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜுவாலா கட்டா கூறுகையில், நாங்கள் காதலித்து வருகிறோம். இதில், மறைக்க வேண்டியது ஒன்றும் இல்லை. விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறோம். தேதி முடிவு செய்யப்பட்டதும், அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தனது இரண்டாவது திருமணம் குறித்து விஷ்ணு விஷால் இதுவரை மௌனம் காத்து வந்த நிலையில், ஜுவாலா கட்டா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஏப்ரல் 1 காலை 10 மணி முதல் ஊரடங்கு வாபஸ் – மோடி: பாலிமர் வீடியோ

0
ஏப்ரல் 1 பாலிமர் வீடியோ

ஏப்ரல் 1 காலை 10 மணி முதல் ஊரடங்கு வாபஸ் – மோடி: பாலிமர் வீடியோ பரபரப்பு. april fools pranks jokes polimer video. இப்படி ஒரு வீடியோ உலா வருகிறது.

மக்களை எப்படியாவது ஏப்ரல் 1 முட்டாள் ஆக்கியே தீருவேன் என சில முட்டாள்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமா?. இதை முட்டாள்கள் தினம் என நினைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்த தினத்தில் யாரையாவது ஏமாற்றினால் தான் நிம்மதியாகத் தூக்கம் வரும்.

அதே நேரத்தில் யாரிடமும் ஏமாறக்கூடாது என சிலர் விழிப்புடன் இருப்பார்கள். அதையும் மீறி அவர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதில் தான் இந்த தினமே உலக அளவில் சுவாரஸ்யம் அடைந்தது.

90’s ஏப்ரல் பூல்

அதோ பார் காக்கா, ஓட்டு மேல நரி இப்படி கூறியவுடன் டக்கென திரும்பி பார்பவர்கள் ஏமாறுவார்கள். அவர்கள் ஏப்ரல் பூல் செய்யப்படுவார்கள்.

தற்பொழுது உள்ள காலமோ மாறிவிட்டது. இன்று காலை முதலே என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஏகச்சக்க ஏப்ரல் பூல் வீடியோக்கள் வந்தது.

அதில் ஒரு பெண் தொடை வரை கட்டிக்கொண்டு தூங்குவது போல் வீடியோ பார்த்த உடனே, அது ஆண் எனக் கண்டுபிடித்துவிட்டேன். இறுதியில் நான் நினைத்தது போலவே ஏப்ரல் பூல் வீடியோ.

ஊரடங்கு உத்தரவு வாபஸ்

அடுத்து சில மணி நேரத்தில், ஏப்ரல் 1 காலை 10 முதல் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெற்று விட்டதாக மோடி அறிவித்தார் என பாலிமர் டிவி பிளாஸ் நியூஸ் வீடியோ ஒன்று வந்தது.

நான் செய்தியாளர் என்பதால் வீடியோவை முழுவதுமாகக் கூடப் பார்க்காமல் அதை பற்றிய செய்தியை இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.

அப்படி ஒன்று வெளியாகவில்லையே என உண்மையில் அது பாலிமர் வீடியோ தானா என மீண்டும் பார்த்தேன். வீடியோ இறுதியில் ஏப்ரல் பூல் சொல்கிறார் சார்லி.

இது முக்கியமா?

விளையாடுவதற்கும் ஒரு எல்லை உண்டு. என்னைப்போல் வீடியோவை இறுதிவரை பார்க்கமால் வெளியில் செல்லலாம் என நினைத்து மக்கள் கிளம்பி விட்டால் என்ன செய்வது?

போலீசாரிடம் அடி வாங்க வேண்டும். அதே கொரொனோ தொற்று உள்ளவர் உலா வந்தால் மீண்டும் கொரோனா சமூகப் பரவலாக மாறிவிடும்.

ஏப்ரல் பூல் செய்து மகிழுங்கள் அதற்கு என கொரோனாவை வைத்து ஏப்ரல் பூல் செய்வது நியாமற்ற ஒன்று. உங்களை முதலில் கொரோனா வைரசை வைத்து அழிக்க வேண்டும். அப்போது தான் வதந்திகள் பரவுவதை தடுக்கமுடியும்.

3

FEFSI தொழிலாளர்களுக்கு ஜெயம் ரவி நிதியுதவி!

0
Jayam Ravi Donated 5 Lakhs to FEFSI

FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு ஜெயம் ரவி நிதியுதவி! நடிகர் ஜெயம் ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

ஜெயம் ரவி FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

FEFSI தொழிலாளர்களுக்கு ஜெயம் ரவி நிதியுதவி…

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் விளைவாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வணி, சினிமா தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த நிதியுதவியோ அல்லது அரிசி மூட்டையோ வழங்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சூர்யா குடும்பத்தினர், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், ரஜினிகாந்த், மனோ பாலா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி ஆகியோர் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கினர்.

இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.5 லட்சத்தை FEFSIக்கு வழங்கியுள்ளார்.

தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன், ஜன கண மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3