Home Blog Page 181

சூரியின் கமகமக்கும் பிரியாணியை காரி துப்பிய அவரது மனைவி!

0
Soori Cook Biryani Video

Soori Biryani Video; சூரியின் பிரியாணியை காரி துப்பிய அவரது மனைவி! சூரி செய்த பிரியாணியில் அளவுக்கு அதிகமாக உப்பு இருந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி காரி துப்பியுள்ளார்.

சூரி செய்த கம கமக்கும் பிரியாணி…

சூரி பிரியாணி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாகவே உலகம் முழுவதும் அறியப்பட்டார். அதோடு, பரோட்டா சூரி என்றும் அழைக்கப்பட்டார்.

வெண்ணிலா கபடி குழு படத்திற்கு முன்பாக, மறு மலர்ச்சி, நினைவிருக்கும் வரை, சங்கமம், ஜேம்ஸ் பாண்டு, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, ரெட், வின்னர், வர்ணஜாலம் என்று ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.

ஆனால், எந்தப் படமும் அவரது கதாபாத்திரம் பற்றி பேசவில்லை. தற்போது உலகத்தையே தனது கதாபாத்திரம் மூலம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், சமுத்திரகனி என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், நடித்து வருகிறார்.

இவ்வளவு ஏன், ஒரு காமெடியனாக ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூரி ஒரு கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

காமெடியன்கள் ஹீரோ ரோலில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு ஆகியோர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள் தான்.

அவர்களது வரிசையில், தற்போது சூரியும் இணைந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது.

இந்த நிலையில், காமெடி நடிகர் சூரி தனது மனைவிக்கு ஆசை ஆசையாய் பிரியாணி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சூரிக்கு உதவியாக அவரது மகன் சர்வாண் மற்றும் மகள் வெண்ணிலா ஆகியோரும் இருந்தனர். அவர்கள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து தயார் செய்தனர்.

அப்போது அங்கு வந்த சூரியின் மனைவியை பிரியாணி ருசி பார்க்க சொல்லியிருக்கிறார். அவரோ, தனது கணவர் ஆசையோடு செய்தது என்றும் ருசி பார்த்திக்கிறார்.

அதன் பிறகுதான் தெரிந்திருக்கிறது பிரியாணியில் ஒரே உப்பு. உடனே காரி துப்பிவிட்டு, உப்பாக இருக்கிறது என்றிருக்கிறார்.

இதற்கு சூரி, கறிக்குப் பதிலாக ஏன் உப்பை எடுத்து வாயில் வச்ச என்று கமெண்ட்டும் கொடுத்துள்ளார். பிறகு அவரே ருசி பார்க்கும் போது தெரிந்தது. பிரியாணி நல்லாவே இல்லை என்று.

இதையடுத்து, தனது மகன், மகளைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதற்கு முன்னதாக தனது மகன், மகளுடன் இணைந்து சூரி கொரோனா வீடியோ பதிவிட்டிருந்தார்.

3

கொரோனா பரவ காரணம் முஸ்லீம்.. முஸ்லீம்.. – அரசே சொல்ல என்ன காரணம்?

0
நிஜாமுதீன் தர்கா

தமிழகத்தில் கொரோனா பரப்பியது முஸ்லீம்? – அரசே சொல்ல என்ன காரணம். ஈரோட்டில் கொரானா தீவிரமாக பரவ காரணம் என்ன? nizamuddin dargah delhi

நிஜாமுதீன் தர்கா nizamuddin dargah delhi

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்காவில் கடந்த மாதம் உலக அளவிலான முஸ்லீம்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் இருந்து மட்டும் 1000 மேற்பட்டவர்கள் பங்கு கொண்டுள்ளனர். இந்த மாநாட்டிற்கு தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த ஒரு குழு கொரோனா வைரசை பரப்பியுள்ளது.

அவர்கள் மூலம் இந்த வைரஸ் அங்கு இருந்த அனைவருக்கும் பரவி உள்ளது. மொத்தம் 8 நாட்கள் இந்த மாநாடு நடைபெற்று உள்ளது.

அரசு கவனக்குறைவு

சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு மாநாட்டிற்கு அரசு அனுமதி ஏன் வழங்கியது. அனுமதி வழங்கிய பின்பாவது அவர்களை அங்கேயே எச்சரிக்கை செய்து இருக்கலாம்.

இந்த மாநாடு நடந்த நேரத்தில் டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் பல போராட்டம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படமால் இருந்து இருந்தால் கொரானா பரவலை பல்வேறு மாநிலங்களில் சமூக பரவலாக மாறாமல் தடுத்து இருக்கலாம்.

அதேநேரம் அனுமதி மறுக்கப்பட்டால் முஸ்லீம்களை பாஜக ஒடுக்க நினைக்கிறது என அதற்கும் ஒரு போராட்டம் வெடித்தாலும் வெடித்து இருக்கும்.

இப்படி கண்டும் காணமல் இருந்த அரசு இன்று முஸ்லீம்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் உள்ளது.

அவர்கள் தெரிந்தே இதை எப்படி செய்து இருக்க முடியும். தெரிந்தே இப்படி செய்தால் அவர்கள் ஏன் நேராக அவர்கள் வீட்டில் தங்கி அவர்களை சார்ந்தவர்களுக்கும் பரப்பிவிட வேண்டும்.

எனவே அரசு நேரடியாக முஸ்லீம்கள் என குறிப்பிடுவது மக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் என்றாலே கொரோனா பாதித்தவர்கள் என்பதுபோல் ஆகிவிடும்.

இங்கு இருதரப்பினர் மீதுமே தவறு உள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் கூட கொரோனா வந்தாலும் பரவாயில்லை போராடுவோம் எனக்கூறியதும் கண்டிக்கதக்க ஒன்றே.

இந்த கொரோனா பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஈரோடு மக்களே. இன்று அவர்கள் யாருக்கெல்லாம் கொரோனா பரவியது எனத் தெரியாமல் உயிர் பயத்தில் உள்ளனர்.

3

Today Breaking News Tamil | இன்றைய முக்கிய செய்திகள் 01.04.2020

0
today tamil news

Today Breaking tamil News | இன்றைய முக்கிய செய்திகள் 01.04.2020

தமிழகத்தில் மட்டுமின்றி 58 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Coronavirus சிகிச்சைக்காக தேவைப்படும் வென்டிலேட்டர் களைத் தயாரிக்கும் பணியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இறங்கி உள்ளது .

அஸ்ஸாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார் .

வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு உடற்பயிற்சி பனிஷ்மென்ட் : தமிழ்நாடு போலீஸ் .

பிரத்தியேக மாஸ்க், உடை இல்லாமல் பல மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரை பணையம் வைத்து வேலை .

தனியார் பள்ளிகள் குழந்தைகள் சேர்க்கைகள் அல்லது கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை கல்வித்துறை அதிரடி .

ராணுவ மருத்துவ முகாமில் 9 பேருக்கு ககொரோனா தோற்று உறுதி .

கடன்களுக்கான இஎம்ஐ கட்டும் வசதி மூன்று மாதத்திற்கு தள்ளிவைப்பு கோர்ட் தீர்ப்பு .

கரோனா வைரஸ் காரணமாக மொபைல் வேலிடிட்டி நீடித்தது பிஎஸ்என்எல் நிறுவனம்

80 லட்ச ரூபாய் நிதி அளித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா .

3

Mirzapur Season 2; மிர்சாபூர் சீசன் 2 ரிலீஸ் தேதி, அப்டேட்ஸ்

0
Mirzapur Season 2

Mirzapur Season 2; மிர்சாபூர் சீசன் 2 ரிலீஸ் தேதி, அப்டேட்ஸ். எப்பொழுது மிர்சாபூர் சீசன் 2 பிரீமியர் ஆகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மிர்சாபூர் முதல் சீசன் கதைக்களம் இருந்த விறுவிறுப்பே இதற்கு காரணம். அதிக சண்டைக்காட்சிகள், கிளாமர் காட்சிகள் சிறப்பான நடிப்பு இவையே முதல் சீசன் வெற்றி பெற காரணம்.

பொதுவாக அனைத்து கேங்ஸ்டர் கதையும் கடத்தலும் வன்முறையும் போதைப்பொருளுமே மையமாக வைத்தே கதை நகரும் அதே போல தான் இதுவும்.

ஆங்காங்கே கொஞ்சம் செண்டிமெண்ட், காதல் மற்றும் துரோகம் வைத்து கதையை மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருப்பர் இயக்குனர்.

மிர்சாபூர் சீசன் 2 ரிலீஸ்

Mirzapur Season 2 release date

ஏப்ரல் மாதம் சீசன் 2 அமேசான் பிரைம் பக்கத்தில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. அனால் இது வரை அவர்களிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

மக்கள் அனைவரும் ஊரடங்கில் இருக்கும் நேரத்தில் இது வெளியிட்டால் ஸ்ட்ரீமிங் தளத்தில் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

3

விஜய்க்கு ஆதரவாக பேசிய குஷ்பு: டுவிட்டரில் அஜித் ரசிகர்களுடன் மோதல்?

0
Khushbu Sundar

Khushbu Sundar; டுவிட்டரில் குஷ்பு, அஜித் ரசிகர்கள் மோதல்! கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு குஷ்பு மற்றும் அவரது கணவர் இணைந்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

டுவிட்டரில் குஷ்பு மற்றும் அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டனர்.

குஷ்பு, விஜய்க்கு ஆதரவாகவும், அஜித் ரசிகர்களுக்கு எதிராகவும் டுவிட்டரில் வாக்குவாதம் செய்துள்ளார்.

உலகமே கொரோனா பீதியில் இருக்கிறது. இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கு கிடைக்குமா என்ன? சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 100 நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மட்டும் 1238 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 124 பேர் குணமடைந்த நிலையில், 35 பேர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதோடு பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், தான் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, விஜய் சேதுபதி, சூர்யா குடும்பத்தினர், ரஜினிகாந்த், பிரகாஷ் ராஜ், ஹரிஷ் கல்யாண், விஜய் மக்கள் இயக்கம் ஆகியோர் பலர் அரிசி மூட்டை, நிதியுதவி வழங்கினர்.

இந்த நிலையில், இவர்களது வரிசையில், குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சியும் இணைந்துள்ளனர். ஆம், சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

மேலும், நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இதற்கு விமர்சனம் செய்த அஜித் ரசிகர் ஒருவர் கூறுகையில், தமிழக மக்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். விஜய் கூட ஒரு தமிழன் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த குஷ்பு கூறுகையில், நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யுங்களேன், ஏன் கூத்தாடி கூத்தாடிகளுக்கு நிதியுதவி அளியுங்கள் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம், குஷ்பு, விஜய்க்கு ஆதரவாக பேசியதாகவும், அஜித்துக்கு எதிராக அவரது ரசிகர்களை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக, அஜித் ரசிகர்கள் விஜய் பற்றியும், விஜய் ரசிகர்கள் அஜித் பற்றியும் மாறி மாறி விமர்சித்துக் கொள்வது வழக்கம். ஆனால், பொதுமக்களை வைத்து ஒட்டுமொத்த சினிமா உலகையும் விமர்சிப்பது என்பது கொஞ்சம் கடினமானதுதான்.

ரசிகர்களின் இது போன்ற செயலுக்கு அஜித் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்று சிலர் குஷ்புவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Valimai Ajith Mankatha: வலிமை அஜித்தின் அடுத்த மங்காத்தா: ஹெச் வினோத்!

0
Valimai Ajith Mankatha

Valimai Ajith Mankatha வலிமை அஜித்தின் அடுத்த மங்காத்தா என்று இயக்குநர் ஹெச் வினோத் அவரது டுட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வலிமை அஜித்தின் அடுத்த மங்காத்தா இயக்குநர் ஹெச் வினோத் பதிவு.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

வலிமை

போலீஸ் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார் என்பது குறித்து இதுவரை படக்குழுவினர் அறிவிப்பு வெளியிடவில்லை.

ஆனால், பாலிவுட் நடிகை ஹூமா குரேசி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பெண்களை மையப்படுத்தி உருவான நேர்கொண்ட பார்வைக்கு கிடைத்த வரவேற்பை விட வலிமை படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றிலும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சி எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பெயினில் சண்டைக் காட்சிகள் எடுக்க படக்குழு ஸ்பெயின் செல்ல இருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மங்காத்தா

மங்காத்தா படம் கேடிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து #MankathaOnKTV டுவிட்டரில் தாறுமாறாக டிரெண்டானது.

தல ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். எத்தனையோ முறை யூடியூப்பிலும், டவுன்லோடு செய்தும் படத்தை பார்த்த போதிலும், கேடிவியில் தற்போது உலகமே வீட்டில் இருக்கும் போது ஒளிபரப்பு செய்யப்பட்டது இரட்டிப்பு மகிழ்ச்சியே.

Valimai Ajith Mangatha

இந்த நிலையில், வலிமை பட கதை குறித்து முக்கியமான தகவல் ஒன்றை ஹெச் வினோத் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இப்போது கேடிவியில் எனது ஆல்டைம் பேவரைட் படமான மங்காத்தா பார்க்கிறேன்.

தல ரசிகர்களே நீங்கள் அடுத்த மங்காத்தாவான வலிமை படத்தை பார்ப்பதற்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மங்காத்தா அஜித் பிரியாணி

இவரைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு, மங்காத்தா படப்பிடிப்பு நேரத்தில் தான் டுவிட்டரில் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மறுபடியும், பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: இன்று இன்டர்வெல் காட்சியை படப்பிடிப்பு செய்தோம். திரையரங்கில் இன்டர்வெல் காட்சி வரும் போது தல அஜித் எங்களுக்கு பிரியாணி சமைத்த காட்சி இது என்பதை நினைவில் கொள்க என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி அமரன், வைபவ், ஆண்ட்ரியா, அஞ்சலி, மகத் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா.

Ajith 50th Movie Mangaatha

விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் மும்பையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அசிஸ்டன்ட் கமிஷனர். அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்தது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பும் பெற்றது.

3

ஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரிவ் ஜாக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்

0
ஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரிவ் ஜாக்

ஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரிவ் ஜாக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். Star wars Andrew Jack died due to corona virus Infection. latest corona virus news

பிரபல ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகரும் டைலெக்ட்டுமான ஆண்ட்ரிவ் ஜாக் தன்னுடைய 76 ஆம் வயதில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

இவருடைய இறுதி காலங்களில் இவரின் மனைவியை காண இயலாமல் போனது. இவரின் மனைவி ஆஸ்திரேலியாவில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இவருடன் ஸ்டார் வார்ஸ் படத்தில் பணி புரிந்த கிரெக் கிரேன்பெர்க் இதை பற்றி கூறுகையில், ஜாக் மிகவும் திறமையான, வேடிக்கையான மற்றும் களிப்புடன் இருக்கும் ஒரு மனிதர்.

நான் சந்தித்ததில் மிகவும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகும் மனிதரில் இவரும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

தன்னுடைய வேலையில் எந்நேரமும் தீவிரமாக இருப்பார் கடைசியாக புதிய பேட்மேன் கதாப்பாத்திரத்திற்கு பயிற்சி கொடுத்தார் என அவரது ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.

3

கங்குலி போல் தோனி-கோலி இல்லை – யுவராஜ்

0

சவுரவ் கங்குலி போல் எனக்கு எம்எஸ் தோனி மற்றும் வீராத் கோலி கேப்டனாக உறுதுணையாக இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்

2000 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியின் மூலம் அறிமுகமானவர் தான் இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்.

கங்குலி தலைமையில் அறிமுகமான யுவராஜ் சிங் இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவனாக உருவெடுத்தார்.

இந்தியாவை பல ஆட்டங்களில் தோனியுடன் சேர்ந்து பல வெற்றிக்கு வித்திட்டவர் இந்த யுவராஜ் சிங்.

தோனியின் தலைமையில் விளையாடி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்ல முக்கிய வீரராக பங்காற்றினார். தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

பின்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். ஆனால் அணியில் அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை ஓரங்கட்டப்பட்டார் பின்பு தானாகவே ஓய்வையும் அறிவித்தார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அண்மையில் இவரது மனம் திறந்துள்ளார்

“சவுரவ் கங்குலி தலைமையில் விளையாடியது என்னால் மறக்கவே முடியாது அவர் எனக்கு என்றும் உறுதுணையாக இருந்தார்.

கங்குலி இடமிருந்து தோனிக்கு தலைமை சென்றது யாருடைய தலைமை சிறந்தது? என்று கேட்டால் சொல்வது மிகவும் சிரமம்.

சௌரவ் கங்குலி தலைமையில் நிறைய ஆட்டங்கள் விளையாடியதால் அவருடைய தலைமை நினைவுகள் பசுமையாக இருந்தது. ஏனென்றால் கங்குலி எனக்கு உறுதுணையாக இருந்தார்.

கங்குலியை போல தோனியும் கோலியும் எனக்கு உறுதுணையாக இல்லை. இருவரிடம் சாதகமும் பாதகமும் நிறையவே இருந்தது.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து பேசிய யுவராஜ் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் இறந்து வருவது இதயம் உடைகிறது. மிகவும் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா குறித்து மக்கள் தேவையில்லாமல் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்.

கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

தேவையற்ற வதந்திகளையும் அச்சத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

3

சல்மான்கான் நேபியூ அப்துல்லா கான் எவ்வாறு உயிரிழந்தார்?

0
சல்மான் கான் நேபியூ அப்துல்லா கான்

Salman Khan ‘s nephew Abdullah எவ்வாறு உயிரிழந்தார்? பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேபியு 38 வயதான அப்துல்லா கான் நேற்று மாலை இருதய கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

Salman Khan ‘s nephew Abdullah dies

திங்கட்கிழமை மாலை லில்வாடி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவருடைய மாமா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சல்மான் கானுக்கு அப்துல்லா தந்தை வழி உறவினர் மகன் ஆவர்.

இவர் சல்மான் கானுக்கு மிக நெருங்கியவரும் ஒரு சிறந்த உடல் கட்டமைப்பை கொண்டவரும் ஆவர். இவருடைய இழப்புக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தபாங் 3 படத்தில் அவருடன்வரும் புகைப்படத்துடன் வில் ஆல்வேஸ் லவ் யூ பதிவிட்டுள்ளார்.

3

சன் டிவி ரன் சீரியல் முடிவுக்கு வந்ததா?

0

கரோனா வைரஸ் காரணமாக சன் டிவி யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ரன் சீரியல் முடிவுக்கு வந்தது. இதை ரன் ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகையே உலுக்கி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 500 பேருக்கு மேல் உலகம் உலகம் முழுவதும் இறந்து வருகிறார்கள்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாட்டு அரசங்கள் திணறி வருகிறது இந்தியா.

முன்னெச்சரிக்கையாக இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் காவலர்கள் மட்டுமே தங்கள் பணியை தொடரவேண்டும் மற்ற அனைத்து கொள்கைகளும் மூட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறு மற்றும் குறு தொழிலாளர்கள், சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் தினக்கூலி வருமானங்கள் சினிமா வட்டாரங்களில் குறைந்துள்ளது.

இதுவரை படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் செய்யப்பட்டிருந்த எபிசோடுகளை மட்டும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் தற்போது தங்களுடைய பழைய படங்கள் பழைய சீரியல் பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கிவிட்டன.

காரணம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களின் எபிசோடுகள் சூட்டிங் நடைபெறாததால் கைவசம் தொடர்களின் புதிதான எபிசோடுகள் இல்லை.

ரன் தொடர்

சன் டிவியில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கிய ரன் தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

இதில் கிருஷ்ணா, சாயாசிங், அஸ்வந்த் திலக், நிழல்கள் ரவி சத்யபிரியா போன்றவர்கள் நடித்து வந்தார்கள்.

நேற்று மார்ச் 31ம் தேதி இந்த தொடரை பார்த்தவர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள்.

மக்களிடையே குறுகிய காலத்தில் நல்ல அபிப்பிராயத்தை பெற்ற இந்த தொடர், விருவிருப்பு மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்து இருக்கும், கொஞ்சமும் சலிக்காமல் சென்றது இந்த தொடர்.

திடீரென்று நேற்று எபிசோடு முடிந்தவுடன் இறுதியில் நடிகர் கிருஷ்ணா திரையில் தோன்றினார்.

அடுத்து நடக்கப் போகும் சில காட்சிகளை சொல்லுயடி எதிரிகள் ஜெயிலுக்கு போனதாகவும் எல்லோருக்கும் உண்மை தெரிந்து, நடிகரும் நடிகையும் சேர்ந்து விட்டதாகவும் கூறி தொடரை நன்றி சொல்லி முடித்து வைத்தார்.

இதனால் இந்த தொடர் மீண்டும் ஒளிபரப்பு ஆகாது என்று இது பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நாளை எபிசோடை கிருஷ்ணா நேற்றே சொல்லி முடிவுக்குக் கொண்டுவந்தது மிகப்பெரிய ஏமாற்றமே.

ரசிகர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இந்த தொடர் தொடரும் என்று எதிர்பார்த்தார்கள்.

நேற்று நன்றி சொல்லி முடித்தவுடன் இந்த தொடர் தொடராது என்பது அர்த்தம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

3