Home Blog Page 182

ஏப்ரல் தின வரலாறு; April Fools’ Day 2020 History, Jokes, Pranks

1
ஏப்ரல் தின வரலாறு
920395234

ஏப்ரல் தின வரலாறு; April Fools’ Day 2020 History, Jokes, Pranks. முட்டாள்கள் தின ஜோக்குகள், காமெடிகள். ஏப்ரல் முட்டாள்கள் தின வரலாறு.

ஒவ்வொரு பிரபலமான நிகழ்வுகளின் வரலாறுகளை பற்றி பார்க்கும்பொழுது சில நிகழ்வுகளுக்கு மிகச் சரியான ஆதாரங்கள் இருப்பதில்லை. அதே போல தான் இந்த ஏப்ரல் தினத்தின் வரலாறும்.

ஏப்ரல் தின வரலாறு

1582ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு கிரகெரியன் காலாண்டரை பயன்படுத்த தொடங்கிய நாளில் நடந்த ஒரு சிறிய வேடிக்கை நிகழ்வே இதற்கு காரணம் என கருதப்படுகிறது.

இந்த காலாண்டரை பயன்படுத்த தொடங்காதோர் அல்லது வரும் வருடத்தில் ஜனவரி தன முதல் மாதம் என்று அரியதோர் முட்டாள்களாக கருதப்பட்டனர்.

ரோமானிய வரலாற்றில் மக்கள் வசந்தகாலத்தின் தொடக்கத்தில் வேடிக்கை செய்து விளையாடியதும் வரலாற்றுக்கு ஒரு கருதப்படுகிறது.

காகிதத்தால் ஒரு மீன் செய்து அவர்களின் முதுகுபுறத்தில் போட்டு விளையாடி வந்தனர். அவர்களை ஏப்ரல் பிஷ் என கேளிக்கை செய்தனர்.

இவ்வாறு தொடங்கியது இன்று அனைத்து விதமான இடங்களிலும் இவ்வாறு கேளிக்கை செய்து விளையாடி வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே.

The Great Spaghetti Harvest

இது வரை உலகத்தில் நடந்த கேளிக்கைகளில் மிகவும் பிரபலமான ஒன்று இதுவாகும். பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் பிபிசி ஏப்ரல் 01, 1957 ஆம் ஆண்டு அதன் வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தது.

ஸ்பாகெட்டி என்னும் பிரபலமற்ற ஒரு பயிரை திரையிட்டு அதை பயிரிட்டு வெயிலில் பறித்து வெயிலில் உலர்த்துவோருக்கு பரிசு போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இதை நம்பி அன்று மட்டும் பல்வேறு மக்கள் பிபிசி அலுவலகத்திற்கு கால் செய்து இதை எவ்வாறு பயிரிடுவது என விசாரித்தனராம்.

3

01/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

1/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று உங்களின் வரவு அதிகமாக இருக்கும் நாளாகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று பல நன்மைகள் வந்து சேரும் நாள்.

மிதுன ராசிபலன்

இன்று சாந்தமாக இருக்க வேண்டிய நாள்.

கடக ராசிபலன்

இன்று குழப்பமான சூழல் நிலவும்.

சிம்மம் ராசிபலன்

இன்று ஆரோக்கியம் சிறந்து விளங்கும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று கோபத்தை கட்டுபாட்டில் வைக்க வேண்டிய நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று லாபகரமான நாள் இருக்கும்

தனுசு ராசிபலன்

இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று மிகவும் பொறுமை இருக்க வேண்டும்.

கும்ப ராசிபலன்

இன்று அனைத்து காரியங்களிலும் ஜெயமாக முடியும்.

மீனம் ராசிபலன் 

இன்று அனைத்திலும் நல்ல தேர்ச்சியுடன் இருப்பீர்கள்.

1/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

படமே உறுதி ஆகல: அதுக்குள்ள ரிலீஸ் தேதியா? தளபதி 65 அப்டேட்!

0
Thalapathy 65 Pongal Release

Thalapathy 65 Pongal Release; படமே உறுதி ஆகல: அதுக்கள்ள ரிலீஸ் தேதியா? பலே பலே! விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது தகவல் வெளியாகி வருகிறது.

பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி64 படமான மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தணு, சஞ்சீவ், ஆண்ட்ரியா, நாசர் என்று ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இவ்வளவு ஏன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்து மாஸ்டர் டிரைலருக்காகவும், மாஸ்டருக்காவும் உலகமே வெயிட்டிங்.

கடந்த 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆதலால், வெளிவரவில்லை. மறுபடியும், 2 நாட்கள் கழித்து வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏப்ரல் 9 ஆம் தேதி படம் அறிவித்தபடி வெளியாகாது என்றும், மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 65 ரிலீஸ் தேதி

இந்த நிலையில், தளபதி 65 படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அதாவது, தளபதி 65 படம் பொங்கல் ரிலீஸ் என்று கூறப்பட்டுள்ளது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தளபதி 65 படம் உருவாக இருப்பதாக அண்மையில், தகவல் வெளியானது.

இந்தப் படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. மேலும், காஜல் அகர்வால் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்தை தயாரிக்கிறது என்று தகவல் வந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் ஒருபுறம் இருக்க, சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா தளபதி 65 படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 65 இயக்குநர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், தளபதி 65 பொங்கல் ரிலீஸ் என்று முக்கிய தகவல் வந்துள்ளது. அதோடு ஹலோவில், தளபதி 65 பொங்கல் ரிலீஸ் என்று டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

லேட்டா கொடுத்தாலும் அள்ளி கொடுத்த சிவகார்த்திகேயன்!

0
Sivakarthikeyan Corona Donation

Sivakarthikeyan; லேட்டா கொடுத்தாலும் ரூ.25 லட்சம் கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா பாதிப்புக்காக ரூ.25 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் (#கொரோனாசிவகார்த்திகேயன்நிதியுதவி) அளித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதி மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிரிக்கெட் வீரர்கள், தெலுங்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் தங்களால் முடிந்தளவிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவின் இளவரசர் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது பங்களிப்பாக ரூ.25 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

ஆனால், முதல்வர் அறித்து பல நாட்கள் ஆன நிலையில், தற்போது அவர் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தங்களது சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், அரிசி, நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இதற்கு உடனடியாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டேவிட் வார்னர் ஏன் திடீரெனெ மொட்டை அடித்தார் என தெரியுமா? 

0
டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் ஏன் திடீரெனெ மொட்டை அடித்தார் என தெரியுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக வேலை செய்யும் மருத்துவர்கள், பரவாமல் தடுக்க போராடும் வீரர்களை ஊக்குவிக்க மொட்டை அடித்தார் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்.

இதே போல் இங்கிலாந்து அணி வீரர் சாம் பில்லிங்சும் மொட்டை அடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  மக்கள் மத்தியில் இது போன்ற செயல்கள் விழிப்புணர்வாக அமையும்.

தன் தலையை மொட்டை அடித்த காணொளியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கோலி, ஸ்மித் போன்ற மூத்த வீரர்களுக்கு டேக் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டில் இது வரை 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Poomaram: பூமரம் எனும் மலையாள திரைப்படத்தை பற்றிய தமிழ் பார்வை!

0
Poomaram பூமரம்

Poomaram: பூமரம் எனும் மலையாள திரைப்படத்தை பற்றியே இப்பதிவு. முழுக்க முழுக்க கல்லூரியில் நடைபெறும் கலை போட்டிகளை (cultural) கொண்டே படம் முழுவதும் நகரும். மேலும் இது கல்லூரி சார்ந்த படம்தான்.

அதற்காக நீங்கள் வழக்கமான கல்லூரி சார்ந்த படங்களின் பாணியை மூளைக்கும் மனதிற்கும் கொண்டு வந்துவிடாதீர்கள்.

அப்படி நீங்கள் நினைத்தவாறே இத்திரைப்படத்தை அனுகினால் நிச்சயம் சிலருக்கு ஏமாற்றமும், சிலருக்கு ஆச்சரியமும் கிடைக்க அநேக வாய்ப்பிருக்கிறது.

கதைக்கரு:

மலையாளப்படம் என்றதும் எதார்த்தம் நிறைந்தது, இயல்பானது என அடிப்படையாக உள்ள அத்தனை கட்டமைப்புக்குள்ளும் இத்திரைப்படம் அடங்கும்.

கேரளத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் கல்லூரிகளுக்கான புகழ்பெற்ற கலைப்போட்டியாக ஒரு போட்டியுள்ளது. அக்கலைபோட்டியை அக்கலைவிழாவை மஹாராஜாஸ் எனும் வரலாற்று சிறப்புமிக்க கல்லூரி  ஒன்று நடத்துகிறது.

அப்போட்டிகளில் வென்று overall championship பட்டத்தையும் கோப்பையையும் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு  பலகல்லூரிகள் களமிறங்கினாலும்,  மஹாராஜாஸ் மற்றும்  செயின்ட் தெரேசா என்ற இரு கல்லூரியையும் பிராதனப்படுத்தியே திரைப்படம் நகர்கிறது.

செயின்ட் தெரேசா கல்லூரி தொடர்ந்து அக்கோப்பையை வென்று வருகிறது. இம்முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் மஹாராஜாஸ் பல ஆண்டுகளுக்கு இம்முறை கோப்பையை வென்று விடலாம் என்றும் களத்தில் இறங்குகிறார்கள்.

திருவிழா:

சிறப்பு என்னவென்றால் இவ்விரு கல்லூரிகளையோ, இவ்விரு கல்லூரி சார்ந்த மாணவர்களையோ எதிருக்கு எதிர் நிற்பதை போல் காட்டாமல் மோதிக்கொள்வதைப்போல காட்டாமல் திரைப்படம் முழுக்க அவர்களை ஒரு நிகழ்வாகவே காண்பித்திருக்கிறார்கள்.

பூமரம் (Poomaram) திரைப்படம் முழுவதும் ஒருவித மென்மைத்தனம் வழிந்தோடுகிறது. இக்கலைப்போட்டியை ஒரு திருவிழாவை போல காண்பித்திருக்கிறார்கள்.

திருவிழாவில் நடைபெறும் அத்தனை நிகழ்வுகளும், கல்லூரிகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளிலும் நிகழும் என்பதை நாமறிவோம். அதை இயக்குனரும் நன்கு அறிந்துவைத்தாற்போல காட்சிபடுத்தியுள்ளார்.

அதேசமயம் அவற்றை மிகைப்படுத்தாமல் நிதானமாகவும் குறைந்த அளவுமே திரைப்படத்தில் காண்பித்துள்ளார்.

இசையெனும் பிரம்மிப்பு:

கதை, கதாப்பாத்திரங்களைக்கொண்டு அதற்கேற்ற நிலத்தில் அதற்கேற்ற காட்சியமைப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கதைக்கு துணையாக திரைப்படம் முழுவதும் இசை இரைச்சலாக அல்லாமல் இசையாகவே பயணித்திருக்கிறது.

திரைக்கதைக்கு நிகராக துணையாக பின்னனி இசையும் பாடலும் அமைந்திருக்கிறது என்று சொல்லுமளவிற்கு இசை திரைக்கதைக்கு பங்காற்றியுள்ளது.

பூமரத்தை விரும்பாமல் போககூட வாய்ப்பிருக்கிறது ஆனால் பூமரம் தந்திருக்கும் இசையை பாடலை நிச்சயம் விரும்பாமல் திரைப்படத்தை விட்டு நகர முடியாது.

மொழி புரியவில்லையெனினும் அந்த குரல்களில் உள்ள ரீங்காரம், அவைக்கு பலமேற்றும் காட்சிகள் என அத்தனை பாடல்கள் வரும் சூழலும் அழகாக அமைகிறது.

இசையின் பங்கில்லாமல் வெறும் குரல்கள் மட்டுமே பாடல்களை ஒலிக்கும் கணத்தில் கூட நாம் இசையை தேடாத அளவு பாடல் பாடுபவர்களின் குரல் அமைந்திருக்கிறது.

இறுதியும் அன்பும்:

கதாபாத்திரங்கள் எந்த இடத்திலும் ஹிரோயிசத்தை கையிலேடுக்கவில்லை. அவர்கள் அந்தந்த கல்லூரியின் மாணவர்களாகவுமே திரைப்படம் முழுக்க காட்சியளிக்கிறார்கள்.

எந்த கல்லூரி போட்டியை வென்றது? தோற்ற கல்லூரிகள் தோல்வியை எப்படி ஏற்றுக்கொண்டன? என்பதையெல்லாம் பூமரம் சற்று தொலைவில் வைத்துவிட்டு ஒரு அற்புதமான நிகழ்வை இறுதிக்காட்சிகளில் நிகழ்த்திருக்கிறார்கள். அவ்விறுதி காட்சியிலும் ஒலிஒளிப்பதிவுகள் அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பூமரம் (Poomaram) என்ற மென்மையான திரைப்படம் கவிதை, கதை, பாடல், இசை, நட்பு, தோல்வி, வெற்றி மாணவப்பருவம், தலைமை, பொறுமை என பெருவாரியான நற்பண்புகளை கதையில் நிகழ்த்தினாலும், படத்தின் இறுதிக்காட்சியில் பூமரம் நிகழ்த்திய அந்த அன்பின் காட்சிக்கு அற்புதம் என்றே அபூர்வம் என்றோ பெயர் வைக்காமல் படத்தை பற்றிய பதிவை முடிக்க முடியவில்லை. திரைப்படத்தை பார்த்த பின் அந்த இறுதிக்காட்சியின் அபூர்வம் புரியும்.

பூமரம்,  ஹாட்ஸ்டாரில் (hotstar)  இலவசமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

3

“அடுத்த 24 மணி நேரத்திற்கு” வானிலை ரமணன்

0

90 களில் பிறந்தவர்களுக்கு வானிலை மையத்தின் இயக்குனர் எஸ் ஆர் ரமணன் மிகவும் பரிச்சயமானவர். மழைக்காலங்களில் இவரை காணாத தமிழ் மக்களே இல்லை.

ரமணன் ஒரு இந்திய வானிலை ஆய்வாளர். இவர் சென்னையின் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக பணியாற்றியவர்.

இவருடைய தமிழுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு . துளியளவும் ஆங்கிலம் கலக்காத தமிழில் தெளிவாக பேசும் காந்த குரலுக்கு சொந்தக்காரர்.

“அடுத்த 24 மணி நேரத்திற்கு…” என சொல்லி அவர் விடும் இடைவெளி செம ஸ்டைல் வேற லெவல்.

“காற்றழுத்த தாழ்வு நிலையானது வடக்கு நோக்கி நகர்ந்து …” என்று சொல்கையில் அவர் கண்களும் வடக்கு செல்லும் .

சென்னை இவருக்கு எப்போதும் மேக மூட்டத்துடன் காணப்படும்.

‘அநேக’ ‘வெப்ப சலனம்’ ‘கன..மிக கனமழை..’ என உள்ளார்ந்த வார்த்தைகளால் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் .

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நவம்பர் , டிசம்பர்களின் செய்திகளில் தவறாது தலைக்காட்டும் நபர்.

90களின் மாணவர்களுக்கு பால்யத்தில் அங்கமாய் இருந்தவர். இனி டிவியில் வரமாட்டார் என 2016 இதே நாள் எண்ணுகையில் மனதின் ஓரம் ஒரு கனம்.

90களில் பிறந்த மாணவர்களுக்கு இவரால் அதிக விடுமுறை நாட்கள் கிடைத்தது உண்டு.

36 ஆண்டு காலமாக வானிலை மையத்தில் பணியாற்றி 2016 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

3

எப்போதும் ஹேர்ஸ்டைலை மாற்றாத ஒரே நடிகர் ராம்கி பர்த்டே டுடே!

0
Ramki Birthday Today

எப்போதும் ஹேர்ஸ்டைலை மாற்றாத ஒரே நடிகர் ராம்கி பர்த்டே டுடே! சாத்தூரில் பிறந்து வளர்ந்த நடிகர் ராம்கி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

நடிகர் ராம்கி இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராம்கி பிறந்தநாள்

கடந்த 1962 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிறந்தவர் நடிகர் ராம்கி. இவரது இயற்பெயர் ராமகிருஷ்ணன்.

சின்னபூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராம்கி.

இந்தப் படத்தில் ராம்கி, பிரபு, நர்மதா, சுதா சந்திரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

1987 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சின்ன பூவே மெல்ல பேசு சிறந்த படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.

தொடர்ந்து, தங்கச்சி, இரண்டில் ஒன்று, இது எங்கள் நீதி, சிகப்பு தாலி, செந்தூர பூவே, பூவிழி ராஜா, பறவைகள், அம்மா பிள்ளை பலவிதம் ஆகிய படங்களில் நடித்தார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மருது பாண்டி படம் ராம்கிக்கு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்கு பிறகு திரைக்கு வந்த இணைந்த கைகள் படமும் அப்படியே அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், கச்சிதமாக நடிக்கும் திறமை கொண்ட ராம்கி, தங்க பாப்பா, வனஜா கிரிஜா, தொட்டில் குழந்தை என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் 10 படங்களில் நடிக்கும் அளவிற்கு ரொம்பவே பிஸியான நடிகராக வலம் வந்தார்.

1987 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சினிமாவில் காலூன்றி வருகிறார்.

எப்போதும் தனது ஹேர்ஸ்டைலை மட்டும் எந்த காரணத்திற்காகவும் மாற்றாத ஒரே நடிகர் ராம்கி மட்டுமே.

ராம்கி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகை நிரோஷாவை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், 3 வருடங்களுக்குப் பிறகுதான் மீடியா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குற்றப்பத்திரிக்கை படத்திற்குப் பிறகு சினிமாவில் இடைவெளி எடுத்துக் கொண்ட ராம்கி மீண்டும் மாசாணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார்.

அண்மையில், விஷால் நடிப்பில் வந்த ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார் ராம்கி. தற்போது தெலுங்கில் உருவாகி வரும் டிஸ்கோ ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ராம்கிக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் ராம்கி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… ஹேப்பி பர்த்டே ராம்கி சார்…

3

லொள்ளு சபா மீண்டும் ஒளிபரப்பு செய்கிறதா விஜய் டிவி?

0

12 வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமான காமெடி ஷோ தான் லொள்ளு சபா

அன்று விஜய் டிவியை மக்கள் பார்ப்பதற்கு மர்மதேசம், மாயா மச்சீந்திரா, லொள்ளு சபா போன்ற தொடர் மற்றும் நிகழ்ச்சிகளை காரணம்.

அதிலும் ஒரு படத்தை எடுத்து அதிலுள்ள சீன்களையும் கலாய்த்து மக்களிடம் மிகவும் பிரபலம் பெற்றது.

ஈஸ்டர், லொள்ளு சபா மனோகர், சந்தான,ம் ஜீவா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.

பின்பு சந்தானம் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்தார். அதற்கு அடுத்து வந்த ஜீவாவும் சில படங்களில் காமெடியனாக நடித்தார்.

லொள்ளு சபா மனோகர் இன்றும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லொள்ளு சபா வீடியோக்கள் யூட்யூபில் அதிகம் பார்வையாளர்களைக் கடந்தது. இன்றுவரை மன உளைச்சலில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரித்துக் கொள்வார்கள்.

இதனாலேயே லொள்ளு சபாவின் யூடியூப் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை கடந்து உள்ளது.

இருந்தும் அதில் ஹை குவாலிட்டி வீடியோக்கள் கிடைப்பதில்லை. இது விஜய் டிவில் மட்டுமே உள்ளது.

90களில் பிறந்தவர்கள் லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப மாட்டார்களா? என்ற ஏக்கமும் இன்றளவும் இருந்துவருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு இந்திய மக்கள் இருந்து வருகிறார்கள்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல் மகாபாரதம் ,சக்திமான் போன்ற தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டார்கள்.

தற்போது ரசிகர் ஒருவர் மகாபாரதம், சக்திமான் போன்ற தொடர்களை ஒளிபரப்பவது போல விஜய் டிவில் நீங்களும் லொள்ளு சபா நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை வைத்தார்.

இதை கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அதற்கு உடன்படுகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

மக்கள் இதை வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள் விஜய் டிவி இந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் உள்ள சுப நிகழ்ச்சியை ஒளிபரப்புமா?

90களில் பிறந்தவர்களின் இயக்கங்களை பூர்த்தி செய்யுமா

3

கபடி, தாயம், கிரிக்கெட் விளையாடாதீங்க: கிராமத்துக்காரனாக சூரி வேண்டுகோள்!

0
Soori Corona Virus Video

கபடி, தாயம், கிரிக்கெட் விளையாடாதீங்க: கிராமத்துக்காரனாக சூரி வேண்டுகோள்! கிராமத்தில் பலரும் வீட்டை விட்டு வெளியில் வரும் நிலையில், நடிகர் சூரி அவர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று நடிகர் சூரி வேண்டுகோள் வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, 32 பேர் பலியாகியுள்ளனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து காமெடி நடிகர் சூரி டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவரது மகன் மற்றும் மகளும் பேசியுள்ளனர்.

அப்போது பேசிய சூரியின் மகள் கூறுகையில், நாங்கள் சின்ன பசங்கதான் நாங்கள் சொல்வதையும் கேளுங்கள். கொரோனா வைரஸால் நிறைய பேர் பலியாகிறார்கள். இந்தியா, வெளிநாடு என்று கொரோனா உலகம் முழுவதும் பரவிவிட்டது.

டாக்டரும் போலீசும், உங்ககிட்ட வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தானே கேட்குறாங்க. ஆனால், அத கூட நீங்க பண்ண மாட்டீரீங்க. அவங்களுக்கும் பேமிலி இருக்கு. அவங்களையும் விட்டு விட்டு நமக்காக வந்து போராடுறாங்க.

அப்போ அவங்கதான் நமக்கு பெரிய கடவுள். மெயினா கிராமத்துக்காரங்களுக்குதான் நான் சொல்லுறேன். ஏனா, அவங்கதான் வீட்டை விட்டு வெளியில் வந்து கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் என்று விளையாடுறாங்க.

இத கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருங்க. அப்போதான் இந்தியாவ காப்பாத்த முடியும். உங்களையும் காப்பாத்தனும், எங்களையும் காப்பாத்தனும் அப்படின்னா அது உங்களது கையில்தான் இருக்கிறது. மற்றவர்களுடன் பழகக் கூடாது.

கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், தாங்கிக் கொண்டே தான் ஆகவேண்டும். எப்போதுமே சாப்பிடும் போதும், தூங்கும் போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருங்க, ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள் என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய சூரியின் மகன் கூறுகையில், கையெடுத்து கும்பிடுகிறேன் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள். போலீஸ், டாக்டர்ஸ்க்கு நன்றி என்றார்.

இறுதியாக பேசிய சூரி கூறுகையில், பச்ச குழந்தைங்களுக்கு தெரியுறது கூட உங்களுக்கு தெரிவதில்லை.

நான் குறிப்பாக கிராமத்தில் இருப்பவர்களுக்கு தான் சொல்கிறேன். ஒரு கிராமத்துக்காரனாக நான் சொல்கிறேன்…இவ்வளவு பாதிப்பு வந்த பிறகும் கூட நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாவடி, மண்டபம், வேப்ப மரத்துக்கு அடியில் உட்காந்து தாயம் விளையாடுறீங்க.

சின்னப் பசங்க கபடி விளையாடுறீங்க. வீட்டுக்கு ஒரு போலீஸ் என்று காவலுக்கு போட முடியாது. அவ்வளவு போலீஸ் நம்மிடம் இல்லை.

தம்பிங்களா, அண்ணன்களா, பெரியவங்க எல்லோருக்கும் சொல்றேன், லேடிசும் பக்கத்துல இருக்குர 10 வீட்டுக்கும் போய்ட்டு வந்துகிட்டு இருக்கீங்க.

தயவு செய்து வீட்டுக்குள்ளேயே உட்காருங்க. இந்த வியாதில இருந்து தப்பிக்கணுமென்றால், நம்ம கண்ட்ரோலாக இருந்தால் மட்டுமே முடியும்.

எவ்வளவு பேர் நமக்காக இரவு பகலாக பணியாற்றுகிறார்கள், கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் சொல்கிறேன் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வராதீர்கள் என்று மனவேதனையுடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

3